உன்னோடு தான்… என் ஜீவன்…
பகுதி 34
கௌதம், A.G. என்பதை தன்னையும், காயத்ரியையும் சேர்த்து நினைத்துக் கொண்டதை சொன்னதும், ‘அச்சோ இதுவுமா..!’ என்ற எண்ணத்தோடு, அவர்களின் மீது சிறு கடுப்பும் தோன்ற… “ஏன்டா, உங்க ஊகத்துக்கும், கற்பனைக்கும் எல்லையே இல்லையா..?! ஏன்டா.. ஏ.. இப்படி.. முடியல..!” என்று வடிவேல் பாணியில் சொல்லி கட்டிலில் அமர்ந்தவன்,
“லூசு பக்கிங்களா.. ஏன்டா, அது எங்க ரெண்டு பேரோட பேரா தான் இருக்கணுமா…?! பெத்து வச்சிருக்கியே பொண்ணு, அவ பேரா இருக்க கூடாதா?!” என்றதும்,
“என்னதூ…!!” என்ற படி அதிர்ந்து எழுந்தவர்களுக்கு, அப்போது தான் உரைத்தது, இதுவரையிலும் ஆரன் பேச்சில், ‘பட்டு’ என்ற பெயர் மட்டுமே இருந்ததை….
அதிர்ச்சி விலகி யோசனையையும், தாண்டி இப்போது தன் மகளின் பெயரை அறிந்து கொள்ளும் ஆர்வமும், தான் இருந்து செய்ய வேண்டிய செயலை, கடமையை செய்ய தவறிய குற்றஉணர்வும் போட்டி போட, ஆரனிடம் எப்படி கேட்க, கேட்காமல் எப்படி விட.. என இருகொல்லி எறும்பாய் தவித்தவனின் பாசமும், ஆர்வமும் வெற்றி பெற…
“ஆரா, என் பொண்ணோட பேர் என்னடா…?!” என்று கரகரத்த தொண்டையோடு கேட்க, தான் சொன்னதும், கௌதம் முகத்தில் தோன்றி மறைந்த அனைத்து உணர்வையும் பார்த்திருந்தவன், அவனின் கேள்வியை எதிர்பார்த்திருந்தாலும், உடனே பதில் சொல்லாமல், அந்த அறையிலிருந்த கடிகாரத்தை பார்த்தவன் மர்ம சிரிப்பை உதிர்த்தவாறு…
“நீங்க தான், அதிமேதாவிங்க ஆச்சே.. நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க! ரெண்டு எழுத்த வச்சி, தலையெழுத்தையே மாத்த தெரிஞ்சவங்களுக்கு, இத கண்டுபிடிக்கவா முடியாது? நல்ல யோசிச்சு கண்டுபிடிங்க. நா, ரொம்ப டையர்டா இருக்கேன். கண்டுபிடிச்சிட்டு எழுப்பி விடுங்க” என தனது ஆதங்கத்தை நக்கலாய் சொல்லி, மெத்தையில் சென்று படுத்தவனிடம், வந்த கௌதம்,
“ஆரா, என் செல்லமில்ல, நா உன்னோட கௌதம் தானே. பட்டுக்குட்டி பேர் மட்டும் சொல்லிட்டு தூங்குடா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!” என அவனின் தாடையை பிடித்து கொஞ்சலாக, கெஞ்சியவனின் மீது பரிவு தோன்றினாலும்,
“போடா, டேய் செம டையர்டு. காலைல இங்க வந்தே ஆகணுமின்னு, ட்ராவல் பண்ணி வந்தது.. அசதியா இருக்கு… சோ..!” என்றபடி பெரிய கொட்டாவியை விட்டபடி, ஒய்யாரமாக படுத்தவனை பார்த்த, கௌதமின் பொறுமை, கொஞ்சம் கொஞ்சமாய் விரையமாகி கொண்டிருந்தது ஆரனின் அலட்சியமான செயலில்….
“ஆரா, இப்ப மட்டும் நீ சொல்லல.. மகனே நீ காலி…!” என்றபடி அவன் மீது பாய.. அவனின் செயலை அனுமானித்தவன் போல, அவன் மேலே விழுமுன் புரண்டு மறுபுரம் வந்தவன், அதிலிருந்து எழுந்து அங்கிருந்து ஓட,
“அமுதா, அவன பிடிடா..” என்றபடி கௌதமும், அமுதனும் துரத்த, ஆரன் அவர்கள் இருவருக்கும் போக்கு காட்டியபடி, அந்த வீட்டைலேயே ஓட்டம் பிடிக்க, “டேய் ஆரா, நீ மட்டும் சிக்கினா அவ்வளவு தான்.. இப்ப நீயா சொல்ல போறையா, இல்லையா..?” என்றபடியே துரத்தியவன், ஆரனின் பின்னாலேயே தோட்டத்திற்குள் வரவும்,
ஆரனின் போன் அலறவும் சரியாக இருக்க, சட்டென அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்த ஆரன், அவனின் போனை கையிலெடுக்க, துரத்தி வந்த இருவரும் அவனை நெருங்கும் நேரம், அவன் போனிலிருந்து வெளிவந்த, “டாடி..!!!” என்ற சத்தத்தில், ப்ரேக் போட்டது போல நிற்க, கௌதமின் உடலோ, தன் செல்ல மகளின் குரலில் சிலிர்த்து அடங்கியது.
“டாடி…! டாடீ…!!!” என்று பலமுறை கத்திய பட்டுவிற்கு, எந்த பதிலும் சொல்லாமல், அந்த போனின் ஸ்பீக்கர் சவுண்டை மட்டும் அதிகப்படுத்தி வைத்து அமர்ந்திருந்த ஆரனிடம், கௌதமின் கண்கள், ‘பட்டு தானே!’ என்ற கேள்வியை தொடுக்க, ‘ஆம்!’ என்று கண் சிமிட்டியவனான்.
இவர்கள் செயல் தெரியாது.. தனது டாடியின் குரல் வராது போன வருத்தமும், விட்டு சென்றிருக்கும் நிலையும் அழுகையை கொடுக்க, அதுவரை கத்தி அழைத்த, மகளின் அழுகை குரலின், “டா..டி….!” என்ற வார்த்தையில், இங்கு கௌதமின் கண்களும் கண்ணிரை பொழிய, அவசரமாக ஆரனை ஒரு அடி போட்டவன், ‘பேசுடா…’ என்று ஜாடை காட்ட, கௌதமின் தவிப்பும், பட்டுவின் அழுகையும் ஆரனை கரைக்க,
“பட்டூ.. சாரிடா..!” என்றதும், அவனின் குரலை கேட்டதும், அதுவரை இருந்த அழுகை மாறி கோபம் வர, “பட்டு, இனி பேச மாட்டா.. டாடி, கூட டூ விட்டா… எப்ப பாரு, டாடி பட்டுவ விட்டு போயிட்டே இக்காதூ….!” என சொல்லிட,
“அச்சோ, பட்டு டாடி பாவமில்லையா..?! அதான், டாடி சாரி சொன்னேனே…?” என்றிட,
“நோ சாதி…! சாதி, கேட்டா பட்டு கோபம் போகாது..!” என முறுக்கிக்கொண்ட, குட்டி இளவரசியின் கோபத்தை போக்கும் மார்க்கம் அறியாதவனா ஆரன்,
“பட்டுக்கு, டாடி சூப்பர் கிப்ட் வாங்க வந்தேன். ஆனா, பட்டு இப்ப கோவமா என்கூட டூ விட்டுட்டாளே! இந்த கிப்ட்டா அப்ப யாருக்கு கொடுக்க?!” என்று யோசிப்பது போல பேசிட,
“டாடீ, பட்டுக்கு கிப்ட் வாங்க போனீயா..?! அச்சோ, காயும்மா சொல்லவே இல்ல. பட்டு நோ டூ.. ஒன்லி பழம்.. ஓகே. என்ன கிப்ட் டாடி..?!” என நிமிடத்தில் மாற்றி பேசி, ஆர்வத்தோடு கேட்ட கேள்விக்கு பதிலாய், கௌதமை மேலிருந்து கீழாக பார்த்த ஆரன்,
“பட்டுக்கு கொடுக்கற கிப்ட், சாதாரணமா இருக்குமா…?! ரொம்ப பெரிய கிப்ட்..!” என்றதும்…
“பெஸ்சா..? என்னோட பெய்ய டெடிய விடவா… டாடி…!” என தன்னிடமிருக்கும், பெரிய டெடிபியரோடு ஒப்பிட்டு கேட்ட, மகளின் குரலில் கரைந்திருந்த கௌதமை, “ஆமாம்டா, பட்டு பெருசு தான், ஆறு அடிக்கும் மேலையே இருக்கும்!” என்று சொன்ன, ஆரனின் குரல் யோசனைக்கு தள்ள, ‘ஆறு அடியில என்ன கிப்ட்?!’ என்பது போல சந்தேகத்தோடு ஆரனை பார்க்க, அவனின் பார்வையே, சொல்லாமல் சொன்னது.. ‘நீ தான் அவளுக்கான கிப்ட்!’ என்பதை…
கௌதம் புரிந்து கொண்டதை அறிந்த ஆரன், பட்டுவின் கேள்விக்கு, “ஆமாம்.. பட்டு, அதவிட பெருசு தான்..! ஆனா, அந்த கிப்ட் பட்டுக்கு, டாடி கொடுக்கணுமின்னா பட்டு, நா கேட்கற கேள்விக்கு டான்னு பதில் சொல்லணுமே…! பட்டு சொல்லிடுவாளா..?!” என்று சந்தேகப்படுவது போல கேட்க,
“பட்டு, குட் கேள், பதில் சொல்லுவா..!” என்று பெரியமனுஷி போல, கெத்தாய் சொன்னவளிடம்,
“வாட் ஈஸ் யூவர் நேம்…?” என்றதும்,
கௌதமின் செவிகள் இரண்டும், தனது மகளின் வாய் மொழிக்காக தவமிருக்க,
“மை நேம் ஈஸ் ஆதாதனா கௌதம் சக்தவதித்தி..!” என்றதும், முதலில் புரியது யோசித்தவன், சட்டென அவள் சொன்னது, “ஆராதனா” என்பதை உணர்ந்தவன், அதோடு தன் பெயரையும் சேர்த்து சொல்வது கண்டு திகைத்து ஆரனை பார்க்க,
ஆரனோ கௌதமின் செய்கை புரிந்தாலும், தனது கடமையே கண் போல, “பட்டு குட், நெக்ஸ்ட், வாட் ஈஸ் யூவர் பாதர்ஸ் நேம்?” என்றதும், “மை பாதர்’ஸ் நேம் ஈஸ், கௌதம் சக்தவதித்தி” என்ற நொடி, கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிய ஆரனை நன்றி பெருக்கோடு பார்த்தவன், கண்களின் கண்ணீருக்கு நேர் எதிராய் இதழ்களோ, புன்னகையை தத்தெடுத்தது..
“பரவாயில்லையே, பட்டு குட் கேர்ள்ன்னு ப்ரூப் பண்ணிட்டாளே…! உன்னோட கிப்ட்டோட, நா வீட்டுக்கு வர்றேன். ஓகே வா பட்டு…!” என்றதும்,
“சதி டாடி… எப்ப வதுவ நீ..?” என்று கேட்டிட.. கௌதமை கேள்வியாய் ஆரன் பார்க்க,
இந்த நொடியே, தன் மகள் முன்பு சென்று நிற்க, தவிக்கும் அவனின் தவிப்பு முகத்தில் தெரிய, “சீக்கிரம் வந்திடுறேன் பட்டு..! உன் அம்மாவ கஷ்டப்படுத்தாம சமத்தா விளையாடு.. பாய்!” என்று போனை கட் செய்த நொடி, ஆரனை அணைத்துக்கொண்ட கௌதம், “தேங்க்ஸ் ஆரா, தேங்க்ஸ் ஏ லாட்… தேங்க்ஸ்..!” என்று ஓயாமல் புலம்ப,
“அடச்சீ, தள்ளுடா முதல்ல, ஏற்கனவே டையர்டா இருந்தவன, தூங்க விடாம துரத்திட்டு, இப்ப மேல வேற விழுந்து, உன் வெயிட்ட போட்டு அழுத்தி.. என் பாடிய டேமேஜ் பண்றையே.. சரியா?!” என அவன் சொன்னதை காதிலேயே போட்டு கொள்ளதவன் போல, பேசி அவனை விலக்கி சென்றவனை, பார்க்கும் போது அமுதனுக்கு, ‘என்னய்யா மனுஷன் இவர்!’ என்ற எண்ணமே உதித்தது.
ஆரன் செயலில், மெல்லிய சிரிப்போடு மற்றவர்களும் அவனை தொடர, ஹாலுக்கு வந்த ஆரன், கௌதமை ‘எப்போது கிளம்பலாம்?!’ என்பதாய் பார்க்க, கௌதம் சில நொடி யோசனைக்கு பின், “அமுதா! நா சொன்னது என்ன ஆச்சு..?!” என்று கேட்க,
“அண்ணா, எல்லா ஏற்பாடும் பக்கா.. நீங்க, இப்ப ஓகே சொன்னாலும் பார்க்கலாம்” என்றதும்,
“ஆரா, நம்ம பெங்களூர் போறதுக்கு முன்னாடி, பார்க்க வேண்டிய வேலை ஒன்னு பாக்கி இருக்கு! அத முடுச்சிட்டு போலாம்” என்றதும், என்ன விசயம் என்பது புரியாத போதும், கௌதம் முகத்தில் இருந்த இறுக்கமும், அவன் குரலில் வெளிப்பட்ட அழுத்தமும், விசயம் மிக முக்கியமானது என்பதை உணர்த்த, “ஓகே டா, நீ முடுச்சிட்டு வா, போலாம்!” என்றதும்,
“நா முடிக்கறது இல்ல, ஆரா! நம்ம முடிக்க வேண்டியது!” என்ற கௌதமின் பதிலில், குழம்பி போய் பார்த்த ஆரனிடம்,
“D.S. கம்பெனி M.D. ய மீட் பண்ண போறோம். அவங்க தானே, உன் கம்பெனிக்கு எதிரா எல்லாத்தையும் செஞ்சிருக்காங்க..!” என்றதும்..
“அடேய், இப்ப அதுவாடா முக்கியம்.?!” என்ற ஆரனிடம், “இது தான்டா, ரொம்ப முக்கியம்.. ஏன்னு, நீ நேருல வந்து தெரிஞ்சிக்கோ! போய் ப்ரஷ்ஷாகிட்டு வா.
அமுதா, ப்ரேக் பாஸ்ட் க்கு ஏற்பாடு பண்ணிடு.. நானும் வந்திடுறேன்!” என்று கட்டளையிட்டவன், இதுவரை பாசத்தாலும், குற்ற உணர்வாலும் நெகிழ்ந்து நின்ற கௌதம் அல்ல, தொழிலில் எதிரியை வேரோடு அறுத்தெரியும், கௌதம் சக்கரவர்த்தி என்பது ஆரனுக்கு தெளிவாக, கௌதமின் சொல்லுக்கு இணங்கி, தன்னை தயார்படுத்த சென்றான், தனக்கென எப்போதும் தான் பயன்படுத்தும் அறைக்கு…
*****
பெங்களூரை நோக்கி விரைந்து கொண்டிருந்த அந்த வாகனத்தில், எந்த பேச்சும் இன்றி, அமைதியே ஆக்கிரமித்திருந்தது.
கௌதம் சொன்னது போல, அவர்கள் நோக்கத்தை அறிந்து கொள்வது சரி தானே, என்பதை மட்டுமே எண்ணமாய் கொண்டு அங்கே சென்றவன், அப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்பதை நிச்சயமாய் எதிர்பார்க்கவே இல்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து, இன்னும் மீழாமல் இருந்ததால், ஆரன் அமைதியில் ஆழ்ந்துவிட்டிருந்தான்.
தனக்கு ஏற்கனவே இருந்த சந்தேகம், நிவர்த்தி ஆனது குறித்த நிம்மதியோடு, அனைத்தையும் செய்தவர்களுக்கு அளிக்க வேண்டிய தண்டனை குறித்த சிந்தனையோடு, தன் செல்லம்மாவையும், தனது குட்டி இளவரசியை பார்க்க போகும் சந்தோஷமும் கலந்திருக்க, கௌதமும் அமைதியாகவே, பயணத்தை அனுபவித்து கொண்டிருந்தான்.
அமுதன் வாகனத்தை நேர்த்தியாக செலுத்திக்கொண்டிருந்தாலும், மனமோ சில மணி நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை மனதுள் திரும்ப திரும்ப உலா வர வைத்து கொண்டிருந்தது.
அனைவரும் கிளம்பி, D.S கம்பெனிஸ் செல்லும் போதே ஆரனிடம், “ஆரா, போனதும் உன் கார்ட கொடுத்து, மீட் பண்ண ஏற்பாடு செய், நா பின்னாடி வந்து ஜாயின் ஆகிடுறேன்..” என்ற கௌதமை குழப்பத்தோடு பார்க்க,
“சொன்னத செய்டா! எதுக்குன்னு போனா தெரிஞ்சுக்குவ…” என்றதும், கௌதமிடம், இதற்கு மேல் கேட்டாலும் பதில் வராது என்பதால், வேறு வழியில்லாது, அங்கே சென்றவன், தனது கார்டை கொடுத்து, அனுமதி கேட்க,
சில நிமிட நேரத்தில், அனுமதிக்கான அழைப்பு வர, ஆரனை முன் போக வைத்தவிட்டு, கௌதமும், அமுதனும் மெதுவாக பின்தொடர்ந்தனர்.
M.D.. என்ற போர்ட் இருந்த அறையை நாசுக்காக தட்டி, அனுமதி கேட்டு சென்ற ஆரனுக்கு, அங்கே இருந்தவனை முன் பின் பார்த்தாகவே தெரியவில்லை. ‘இவன் யாருன்னே தெரியல! எதுக்கு கௌதம் இவ்வளவு பில்டப் பண்ணி வரவச்சான்?!’ என்று சிந்தித்தபடி, சிறு புன்னகையோடு உள்ளே வந்தவனை ,
“ஆரன், வா வா.. ! நீ இங்க எப்படியும் வருவேன்னு எதிர்பார்த்தேன். ஆனா, இவ்வளவு சீக்கிரம் வருவேன்னு எதிர்பார்க்கவே இல்ல. எப்படி போகுது லைப்?! நல்லா போகுதா…? அப்படி நல்லா போகுதுன்னா, இனி அப்படி போகாது..
வாழ்க்கையில, நீ இதுவரை சந்திச்சத விட, பலமான அடிய.. நீ சந்திக்க போறதும், அதுல இருந்து மீள முடியாம, நீ தவிக்க போறதும் உறுதி. அத நா, ஆசை தீர பார்க்க போறேன்!” என்றதும், சிரிப்பு மறைந்து, அவனின் வார்த்தையை கிரகிக்கவே பல நிமிட நேரம் ஆனது ஆரனுக்கு.
‘யாரிவன், இவனுக்கும், எனக்கும் என்ன தொடர்பு?! தன் மீது இவ்வளவு வஞ்சத்தை வைத்திருப்பதற்கு, காரணம் என்ன?!” என்ற, ஓராயிரம் கேள்விகள் மனதை குடைந்தாலும், இதுவரை தொழிலை திறம்பட நடத்திய தொழில் அதிபன் ஆரன், விழிப்போடு இருக்க, தனது குழப்பத்தை, வெளியே காட்டிடாமல் அமைதியாய், அவனின் அடுத்த வார்த்தைகளை கவனிக்க துவங்க,
ஆரனின் அமைதியே, அந்த எதிரியை பலமாய் தாக்கியதோ, அல்லது ஆரனிடம் தான் எதிர்பார்த்த, எந்த உணர்வும் வராமல் போனதால் வந்த கோபமோ.. தனது கட்டுப்பாட்டை இழந்தவன் போல,
“ஏன்டா, நீயும், அவனும் சேர்ந்தா உங்கள எதுவுமே செய்ய முடியாதாமே..! எப்படி திட்டம் போட்டு பிரிச்சோம் பார்த்தியா…?!” என்று விகாரமாய் சிரித்தவனை பார்த்த ஆரன்,
“வாட்! பிரிச்சியா, யார பிரிச்ச?! என்ன சொல்ற..?!” என்று எதுவுமே தெரியாதது போல, சகலத்தையும் அறிந்து கொள்ளவென கேட்க,
“எஸ். அந்த கௌதம், இருக்கானே அவனால தான் எல்லாமே… அதனால தான் அவனுக்காக தான்… என்றவனை எந்த மாற்றத்தையும் முகத்தில் காட்டாது பார்த்த ஆரனிடம் வந்தவன்,
“அது எப்படிடா, அந்த மாமி மேல கை வைக்க வந்தா, ரெண்டு பேரும் பாஞ்சிட்டு வர்றீங்க, அவள காப்பாத்த…?! அதனால தான், முதல்ல உங்க ரெண்டு பேரையும் பிரிக்க தேவையானத செஞ்சோம்!” என்றவன் நிறுத்தி, மீண்டும், “செஞ்சோமின்னு சொல்றேனே, யார் யார் ன்னு, யோசிக்கறையா?! நானும், என்னோட தங்கை ஸ்வேதாவும்..” என்றதுமே, புரிந்து போனது சகலமும் ஆரனுக்கு..
கௌதம், தன்னை முதலில் உள்ளே போக சொன்னதன் நோக்கம் தெளிவாக, அதற்கு தகுந்த படி, “அந்த காயத்ரி மேல, உனக்கும், ஸ்வேதாவுக்கும் எதுக்கு இவ்வளவு துவேஷம்..?” என்றிட…
“ஏன்னா, என் தங்கை ஆசைபட்ட வாழ்க்கையை, அவ வாழ நினைக்கலாமா..?! எஸ், சி லவ்ஸ் கௌதம்..! ஆனா, அவன் அவள, அந்த மாமிக்காக, அத்தன பேர் முன்னாடியும், கை நீட்டி அடிச்சான். அவன் மட்டுமா, நீயும்..! அதனால தான் உன்னை, ஏக்க்ஷிடெண்ட்ல மாட்ட வச்சு, கை, கால் ஒடையற மாதிரி செஞ்சோம்!” என்றதும்,
“இது கௌதமிற்கு தெரியுமோ?!” என்ற ஆரனின் எண்ணத்திற்கு விடையாய், “அவன் எப்படியோ, அத கண்டுபிடிச்சிட்டு எங்க முக்கியமான ப்ராப்பர்ட்டி மேலேயே கை வச்சான். அதோட, அந்த மாமியோட சேர்ந்துட்டு, என் தங்கச்சி முன்னாடியே அவன் அடுச்ச கூத்து…! அவள, எப்படி ஏங்க வச்சுது தெரியுமா…?! ஒவ்வொரு நாளும், அவ வாழ வேண்டிய வாழ்க்கைய, வேற ஒருத்தி வாழ்றத பார்க்கற கொடுமை…! அதனால தான், அவள போட்டு தள்ள ப்ளான் போட்டோம்!” என்றிட, ‘அடப்பாவிங்களா….!!!’ என்று மனதில் சொல்லிக்கொண்டாலும், வெளியே, ‘அடுத்து என்ன பூகம்பம் வரபோகிறது, என்று பார்க்கலாம்!’ என்பது போல, அமர்ந்திருந்தான் ஆரன்.
“அன்னைக்கி ஸ்டேஜ்ல, கௌதம் மட்டும் வராம இருந்திருந்தா, நாங்க நினச்சது நடந்திருக்கும். ஆனா, சரியா அவன் வந்து அவள காப்பாத்திட்டான். ப்ளட்டீ..***
அதுல ஒரே சந்தோஷம், அவ குரல் போய் ஊமையா சுத்தினது தான்!” என்றவன் தொடர்ந்து,
“அப்பவாவது, அடங்கி இருந்தீங்களா நீங்க. என்னவோ, இந்த தேசத்து ராணி மாதிரி, அவள கையில வச்சு தாங்கறீங்க?! அதனால தான், உங்கள பின் தொடர ஆள் வச்சோம், சரியான சந்தர்ப்பத்த தேடி….!” என்றதும், ‘எப்படியெல்லாம் ப்ளான் போட்டுட்டிருக்குங்க…!’ என்று எண்ணிய படி இருந்தவனுக்கு, அந்த மீடியா விசயத்தில், இவர்கள் பங்கு இருப்பது சொல்லாமலே புரிந்து போனது. அதை மெய்ப்பிக்கும் வண்ணம்,
“அப்போ தான், அப்படியே லட்டு மாதிரி ச்சான்ஸ் கிடச்சது, அந்த ஹோட்டல்ல.. நீ அங்க இருக்க, கௌதம் பாரின்ல , சோ, எப்படியாவது அங்க அவள வரவைக்க, என்ன செய்யலாமின்னு யோசிக்கும் போதே, நீ போன்ல அவள வர சொன்னது தெரிஞ்சதும், பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி ஆகிடுச்சு எங்களுக்கு…
அந்த விசயம் எனக்கு தெரிஞ்சதும், நானும் அங்க வந்தேன்.. அப்ப தான், அவ ஏதோ அழுதிட்டு வந்து, உனக்கு கால் பண்ணா.. அன்னைக்கி, எங்க பக்கம் அதிஷ்ட்ட காத்து ஓவரா வீசிடுச்சு போல, நீ, செஞ்சது பூராவும் எங்களுக்கு சாதகமாவே ஆகிடுச்சு. காயத்ரி சாப்பிட்டதுல, நீ சாப்பிட்டதுல எல்லாத்துலையும், போதை மருந்தை கலந்துவிட்டு கொடுத்தோம். அதோட, ப்ரஸ், எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டு, போலீஸையும் வர வச்சேன்.
நீ வேற, இருந்த போதையில, கதவ லாக் கூட பண்ணாம போயிட்ட…ரொம்பவும் சுலபமா, எல்லாரையும் உள்ள போக வச்சு, உங்க பேரை ஊரறிய நாரச்சேன்!” என்று தான் செய்த கீழ்தரமான செயல்களை, கின்னஸ் சாதனை போல சொல்லிக்கொண்டிருக்கும், துஷ்யந்தின் மீது கொலைவெறி வந்தாலும், மீதமிருப்பதையும், அறிந்திட வேண்டி அமைதியாய் பல்லை கடித்தபடி முகத்தில் எந்த மாற்றமும் இல்லாது ஆரன் அமர்ந்திருக்க,
அவனின் அமைதி மேலும் தூண்ட, “உன்னையும், அவனோட காதலியையும் அந்த நிலைமையில பார்த்தா, நிச்சயமா அவன் உங்கள விட்டு விலகி போயிடுவான், நா என்னோட தங்கச்சிக்கு அவன முடிக்கலாமின்னு காத்திருந்தா… அந்த ப***** இத தெரிஞ்சதும் பாரின்ல இருந்து வரவே இல்ல..!” என்று கத்தியவன்,
“அந்த கடுப்புல சுத்திட்டு இருந்த போது தான், நீ அந்த மாமிய கூட்டிட்டு ஹாஸ்பிடல் போனத பார்த்த ஸ்வேதா, என்கிட்ட சொல்ல, நா விசாரிச்சதுல, நீயும் அவளும் ஒன்னா.. ஒரே வீட்டுல, அதுவும் உன் பெத்தவங்க கூட சந்தோஷமா வாழ்றது தெரிஞ்சுது. எவளால, என் தங்கை ஆசை நிராசையா ஆச்சோ, அவ சந்தோஷமா புள்ளகுட்டின்னு வாழணும். என் தங்கச்சி மட்டும், வராத ஒருத்தனுக்காக காத்திருக்கணுமா..?! அப்படிங்கற ஆதங்கத்துல.. எங்க அப்பாவும், நானும் சேர்ந்து அவளுக்கு ஒரு மாப்பிள்ளைய பார்த்தோம்.
எப்படியும் அவ, அந்த ப*** க்காக வேணாமின்னு தான் சொல்வான்னு தெரியும். இருந்தாலும், அவளுக்கு நல்லது தானே செய்ய போறோம், அப்படின்னு நிச்சயதார்த்தம் அன்னைக்கி வரை, அவகிட்ட நாங்க சொல்லவே இல்ல. ஆனா அவ.. அவ…” என்றவன், குரலில் வந்த கரகரப்பு, ஆரனுக்கு நிச்சயமாய் அதிர்ச்சியாகவும், ஆர்ச்சயத்தை கொடுக்கவும் செய்தது.
ஏனெனில், இதுவரை அவன் செய்த செயல் அனைத்தையும் வைத்து பார்த்தால், மனித தன்மையே இல்லாதவன் போல தெரிய, தன் தங்கையை பற்றி பேசும் போது மட்டும், அவன் கண்கள் காட்டிய கனிவும், குரலும் அவனின் பாசத்தை காட்டிட, ‘எந்த மாதிரி மனிதன் இவன்?!’ என்ற சிந்தனையே எழுந்தது.
தனக்கு முன்பு இருந்த தண்ணிரை எடுத்து ஆவேசமாய் அருந்தி முடித்தவன், இதுவரை இருந்த மென்மைக்கு நேர் எதிராய், கடுமையான குரலுடன், “அவள மண்டபத்திற்கு கூட்டிட்டு போய் தான், விசயத்த சொல்லி, மாப்பிள்ளை போட்டோவ காட்டினோம். கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவ, சரி, நீங்க போங்க நா கிளம்பறேன்னு சொன்னதும், எவ்வளவு சந்தோஷ பட்டோம் தெரியுமா…?!”
“ஆனா அவ, அங்க இருந்து யாருக்கும் தெரியாம, வெளி வந்து அவளோட காரை எடுத்துட்டு கிளம்பிட்டா. கொஞ்ச நேரம் போய், அவள பார்க்க போன போது தான் தெரிஞ்சது அவ இல்லன்னு. நா அவளுக்கு போன் பண்ணி எங்க இருக்கேன்னு கேட்டப்ப தான், அவ கௌதம் மேல எவ்வளவு காதல வச்சிருந்தான்னு புரிஞ்சுது…” என்றவன் அன்று ஸ்வேதா தன்னிடம் சொன்னதை ஆரனுடன் பகிர்ந்தான்.
———
“டேய் அண்ணா, நா உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன். எனக்கு, அந்த கௌதம் தான் வேணுமின்னு..! ஆனா அவன விட்டுட்டு, வேற எவனையோ கட்டிக்க ஏற்பாடு செய்யற இல்ல நீ.. !” என்க,
“குட்டிம்மா, அப்படி இல்லடா, அவன் தான் எங்கன்னே தெரியலையே! எத்தன நாள் இப்படியே இருப்ப.. ?!” என கேட்டவனிடம்,
“அவனா போகல, நீயா, திட்டம் போட்டு அந்த பெக்கரை, அவனோட ப்ரண்ட் கூட கோர்த்து விட்ட. அப்போ, எப்படியும் அவன் தனியாகிடுவான், உனக்கே கட்டி வைக்கறேன்னு சொன்ன.. ஆனா, அவன் எங்க போனான்னு தெரியல.. காரணம், நீ செஞ்ச வேலையால, அவன் இங்க இருந்திருந்தா கூட, என் மனச புரிய வச்சிருப்பேன். ஆனா இப்போ.. விடு. எப்ப நீயே, என் மனச புரிஞ்சுக்காம, வேற மாப்பிள்ளை பார்த்தியோ, இதோட என் வாழ்க்கையில, எதுவுமே இல்ல.. நா போறேன்!”
————
“அப்படின்னு சொல்லிட்டு இருக்கும் போதே, அவளோட அலரல் சத்தம் தான் கேட்டுச்சு. அவள தேடி, கண்டுபிடிச்சு பார்க்கும் போது, அவ எங்க எல்லாரையும் விட்டு போயிட்டா. அவளோட இழப்பை தாங்க முடியாம, எங்க அப்பாக்கு பக்கவாதம் வந்திடுச்சு!”
“அந்த ஹாஸ்பிட்டலுக்கு, வந்த பின்னாடி தான் தெரிஞ்சிது, ஸ்வே கார் மோதினது உன் கார்லன்னு.. அப்ப தான் உன்னோட பேரன்ட்ஸ் இறந்ததும் அந்த மாமிக்கு குழந்தை பிறந்ததும்.. அப்ப என்னால வேற எதுவும் யோசிக்க முடியல..” என்றவன் சிறிய அமைதிக்கு பின்,
“எனக்கும், ஆரம்பத்துல அவ இழப்பு, அப்பாவோட உடல்நிலைன்னு எதையும் யோசிக்க முடியல. அதோட, நீ இருக்க இடமும் சரியா தெரியல. எப்ப நீ, பிஸ்னஸ்ஸ டெவல்ப் பண்ணி, பெரிய ஆளா தெரிய ஆரம்பிச்சையோ, அப்ப தான் உன்ன அழிக்க முடிவு செஞ்சேன். என் தங்கச்சி வாழாத வாழ்க்கைய வாழற அந்த பெக்கர அழிக்க, பலதடவ முயற்சி செஞ்சேன். பட், அவ தப்பிச்சிட்டா. நீயும் உசாராகிட்ட…
யாரோ, முகம் தெரியா எதிரியா உன்னை எதிர்க்க போர் அடுச்சிது.. அதான், உன் கம்பெனியோட நேரடியா, மோத முடிவு பண்ணி, எல்லாத்தையும் செஞ்சேன். உன் பிஏ ஹரிணியோட போன்ல, எங்க ஆள வச்சு ஹாக் பண்ணினோம்.
அவ தான், அங்க உனக்கு அடுத்து எல்லாமே தெரிஞ்ச ஆள். அதோட, அவ தான் டென்டர் அமவுண்ட் கால்குலேட் பண்ணி, உனக்கு சொல்வான்னு தெரியும். நாங்க நினச்ச மாதிரியே மேடமும், எல்லா டீட்டெயிலும், அவளோ மெயில்ல வைக்க, அத நாங்க அவளுக்கே தெரியாம எடுத்திட்டோம்..எப்படி..?!” என்று பெருமையாய், சொல்லி தனது இருக்கையில் சாந்து திமிராய் அமர்ந்தவன்,
“சபாஷ்..! செம…! அருமை..!!!” என் வார்த்தையோடு, கை தட்டியபடி, உள்ளே வந்த கௌதமை, சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது, அவன் அதிர்ந்து எழுந்து நின்ற விதத்திலேயே தெரிந்தது.
அதிர்ச்சியில் வார்த்தை தடுமாற, “நீ.. இவன்.. எப்படி…?!” என்றிட,
“கூல்.. கூல்.. துஷ்யந்த்! நா, எப்படி ஆரன் கூட ன்னு தானே யோசிக்கற?! அட மடையா, நா எப்படா, என் ஆரனையும், செல்லம்மாவையும் சந்தேகப்பட்டேன். அவங்கள விட்டு விலகி, நிற்க வேற காரணம் இருந்துச்சு.. ஆனா அதுலையும் உன் திருவிளையாடல் இருந்திருக்கு… ஹும், சரி விடு…
நா, ஆரம்பத்துலையே சொன்னேன், அவங்க தொடணுமின்னா, என்னைய தாண்டி தான் தொடணுமின்னு.. நா, முழுசா இருக்கும் போதே, அவங்கள தொட்ட உன்னை, என்ன செய்யலாம்?!” என்றபடி, அவன் எதிரே அமர்ந்து, தனது தாடையை தடவியபடி கேட்வனின் குரலிலேயே, அவன் நிச்சயம் பெரிதாக எதையோ செய்ய போகிறான் என்பது விளங்க,
இதுவரையிலும் ஆரனிடம் காட்டிய கெத்தும், திமிரும் போய், அந்த இடத்தை பயமும், பதட்டமும் ஆட்கொள்ள, வேர்வை வடிய, உடலோ குளிர்காய்ச்சல் கண்டது போல நடுக்கம் கொண்டது.
அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், “அமுதா..!” என்ற நொடி ஒரு ஃபைலையும், பென்ட்ரைவையும் அமுதன் கொடுக்க,
“இது என்ன தெரியுமா, துஷ்யந்த்?! நீ, உங்க அப்பா மாதிரி பினாமி வேலை செஞ்சாலும், கூடவே பார்த்தியே, ‘மாமா வேலை’ அது பத்தின டீட்டெயில்ஸ்.. அதோட, போதை மருந்தை வெளி நாட்டுல இருந்து கொண்டு வந்து, அதை காலேஜ், ஸ்கூல் ன்னு சாக்லெட்ல கலந்து கொடுக்க செட் பண்ண ஏஜெண்ட் லிஸ்ட்..
இது மட்டுமில்ல, உன்னோட அந்தரங்க லீலைகள், முதல் பெரிய ஆளுங்க கூட சேர்ந்து, நீ செஞ்ச கொலை வரை எல்லாமே இருக்கு…
இதெல்லாம், என்கிட்ட ஆதாரமா இருக்குன்னு தெரிஞ்சாலே, உன்னைய வச்சு ஜாலியா இருந்த ஆளுங்களே போட்டு தள்ளிடுவாங்க. உனக்கு ரெண்டு நாள் டைம். அதுக்குள்ள, நீயா போய் நடந்த எல்லாத்தையும் சொல்லி சரண்டர் ஆகிட்டா உயிர் மிஞ்சும், இல்லையா.. அவங்க கையால போட வச்சிட்டு போயிட்டே இருப்பேன்!” என்று குரலை உயர்த்தாமல், மெல்லிய புன்னகையை இதழில் தேக்கி சொன்னவனை பார்த்த துஷ்யந்த்,
“கௌதம், ப்ளீஸ்! இந்த ஒரு தடவை மன்னிச்சிடு. இனி உங்க யார் பக்கமும் திரும்ப கூட மாட்டேன்..!” என கெஞ்சிட,
“துஷ்யந்த், நீ என்னை மட்டும் கஷ்டப்படுத்தியிருந்தா நிச்சயமா உன்னை மன்னிச்சு விட்டுறுப்பேன். ஏன்னா, என்ன இருந்தாலும், உங்க வீட்டு பொண்ணை கை நீட்டி அடுச்சது பெரிய தப்பு. ஆனா, என்னை விட்டுட்டு, எனக்கு உயிரா இருந்தவங்கள, நீ பழிவாங்க செஞ்சத மறக்கவோ, மன்னிக்கவோ, எந்த காலத்திலையும் தயாராகவே நா இல்ல.
உன்னோட கவுண்ட் டவுன் ஸ்டார்ஸ் நைவ்.. வரட்டா… !” என்ற படி எழுந்து கௌதம் முன்னே செல்ல, ஆரனும், அமுதனும் பின் தொடர்ந்தனர், கௌதமின் பரிமாணத்தில், ‘இனி எல்லாம் சுகமே!’ எனும் நிம்மதியோடு….