Kaadhal Express💘🚉 – 1(2)

“மனு நீ ரூம்க்குள்ள போ” என்றவர் கமலினியை நெருங்கி, “என்னடா வீட்டுக்கு வரேனு சொல்லவே இல்லை” என்றிட, “அவளுக்கு எப்படி மா தெரியும்.. இந்த நேரத்துக்கு கிளப்புக்கு போய் ஊரை சுத்திட்டு இருக்கா.. எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான்” என்றிட,

“ப்ச்.. அத்தை.. உங்க மகனை அமைதியா இருக்க சொல்லுங்க. நான் யாரையும் என்னை வந்து கூட்டிட்டு போக சொல்லல, அதே மாதிரி, அவங்க ஒன்னும் என்னை கூட்டிட்டு வருவதற்கு அங்கே வரல, அவங்க தொங்கச்சியை கூட்டிட்டு வர தானே வந்தாங்க” என்றவளின் குரலில் ஏகத்திற்கும் கேலி நிரம்பி இருக்க,

“அம்மா.. இப்போ அது பிரச்சினை இல்லை.. இந்த அன்டைமில் என்ன பழக்கம் வெளியே சுத்துறது, அதுவும் அவ போட்டு இருக்கிற டிரஸை பார்த்திங்களா..  “I am a girl” அப்படினு பெருசா போஸ்டர் அடிச்சு ஒட்டின மாதிரி.. ஏன் பார்க்குற யாருக்கும் தெரியாத இவ கேர்ள் தானு..” என்றவன் அவளை முறைத்து விட்டு மீண்டும் தொடர்ந்தவனாக,

“உங்க அண்ணன் வீட்டுல இருந்தா கூட வாலை சுருட்டிட்டு இருப்பா.. அதுக்கு தானே, யாரையும் மதிக்காம சென்னைக்கு வேலைக்கு வந்து, ரூம் எடுத்து தங்கி ஆட்டம் போடுறது” என்று விளாசி தள்ள, அவளோ நீ என்ன வேண்டும் என்றாலும் பேசிக் கொள் என்ற பாவனையில் அமைதியாக நின்றுக் கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து, ‘என்ன டா இது எந்த சத்ததையும் காணோம்’ என்று நிமிர்ந்து பார்க்க அவன் இல்லை.‌ விழிகளை சுழற்றிக் கொண்டு பார்க்க, கையில் சாப்பாடு தட்டுடன் வந்தார் மகேஸ்வரி‌. அதை கண்டவள் முகமோ பளிச்சேன மின்ன, ” அத்தை னா அத்தை தான்.. ஆமா எங்க இரண்டு மாமாவும், சின்ன அத்தையும் காணோம்” என்று சாப்பிட்டபடியே கேட்க,

“ஏய் பொறுமையா சாப்பிடுடி அடைச்சுக்க போகுது.. நீ கேட்ட எல்லாரும் வேலை விஷயமா வெளியே போய் இருக்காங்க.. ராகவனும் போனான்.. ஏன்னு தெரியல சீக்கிரம் வந்துட்டான்” என்றிட,

“ஓ.. ஓ.. நான் கூட என்னடா உங்க கிட்ட கேட்டு தானே கிளபுக்கு போனேன் உங்க புள்ளை அப்படியே பெரிய ஹீரோவாட்டும் வந்து நிக்குறாரு.. ஒரு நிமிஷம் பக்குனு ஆகிடுச்சு.. இவருக்கு எங்க வீட்டு ஹிட்லரே பரவாயில்லை.. ரூல்ஸ் ராமணுஜம்.. ச்சே.. ச்சே அப்படி சொல்லக் கூடாது.. ரூல்ஸ் ராகவேந்திரன்” என்று படபடவென்று பட்டாசாய் பொறிய, அவள் பேசுவதையே ஆசையோடு பார்த்திருந்தார் மகேஸ்வரி. ஏனோ அவரின் கண்கள் கலங்கி போனது!

••••••••••••••••

 

வென்பஞ்சு மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வானை அலங்கரித்துக் கொண்டிருக்க, அதன் பின் இருந்து மெது மெதுவாக எட்டி பார்த்துக் கொண்டு இருந்தான் கதிரோன்.

சென்னையின் பிரதான இடத்தில் அமைந்திருந்த அந்த பெரிய வீட்டின் அமைப்பே அனைவரையும் வாயடைக்க செய்திடும்.. அதிலும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருக்கு கார்களே சொல்லாது சொல்லியது அவர்களின் செல்வ நிலையை!

கலகலவென சிரிப்பு சத்தம் அந்த பெரிய வீட்டினுள் இருந்து ஒலித்தபடி இருக்க, உணவு மேஜையில் அமர்ந்து கொட்டம் அடித்து கொண்டு இருந்தனர் அந்த வீட்டின் இளசுகள்.

“ஏய் மனு.. ஆமா நேற்று உன்க்கிட்ட ஒரு பையன் வந்து பிரோபஸல் கொடுத்தானே என்னாச்சு, அக்சப்ட் செஞ்சிட்டியா என்ன” என்று கண்ணடித்து ஜீவிதா கேட்க, அவளையே கண்கள் சுருக்கி முறைத்து பார்த்தாள் மானஸ்வி.

“ஏன் மனு ஒத்துகலனா நீ அவன் பிரோபஸல் ஓத்துக்கிட்டு வாழ்க்கை முழுக்க ஜீவனாம்சம் கொடுக்க போறியா ஜூஜூ”  என்று கேட்டபடியே வாயில் பூரியை அதக்கி கொண்டு இருந்தான் நிகிலன்.

அவனின் ஜூஜூ என்றழைப்பில் கொதி நிலைக்கு சென்றவள், “போடா என் பேரு ஜூஜூ இல்லை.. நீ தான் நிக்கி பக்கி எல்லாம்.. இனிமே என்னை ஜூஜூ கூப்பிடு மண்டையை உடைச்சு மாவிளக்கு போடுறேன்”  என்றவள் முறைத்து பார்த்தவாறே பூரியை உள்ளே தள்ள, அவர்கள் பேச்சை எல்லாம் கேட்டபடி உணவு மேஜையில் வந்து அமர்ந்தாள் கமலினி.

அவளை கண்டதும் ஓர் நொடி அமைதியானவர்கள் பின் மீண்டும் கொட்டம் அடிக்க ஆரம்பித்தனர்.. “மனு நேத்து  அண்ணாக்கு நீ கிளப் போனது தெரிஞ்சு எனக்கு போன் போட்டு உன்னை கிளப் விட்டு வெளியே வரச் சொன்னாங்க பாரு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. சரி சொல்லு நேத்து என்னாச்சு” என்ற நிகிலுக்கு அவள் பதில் சொல்லும் முன்னே,

ஆர்வம் தாங்காது கமலினியே “நிகில் அதை அப்படி கேட்க கூடாது, இப்போ நான் கேட்குறேன் பாரு, ‘நேத்து ராத்திரி எம்மா.. திட்டு விழுந்துச்சா எம்மா..’  என்று ராகம் கூட்டி பாடவும், அதை கேட்டு வெடித்து சிரித்தாள் ஜிவிதா.. ஆனால் மற்ற இருவரின் முகத்திலும் மருந்துக்கும் சிரிப்பில்லை..

“உன்னை யாராச்சும் கேட்டாங்களா.. வீட்டுக்கு வந்திங்களா அமைதியா சாப்பிட்டு கிளம்புங்க” என்று பட்டென்று நிகில் சொல்லிவிட, அதன் பின் அங்கு கனத்த மௌனம் மட்டுமே நிலவி இருந்தது.

அவனின் வார்த்தை கேட்டு கமலினி கலங்கியது எல்லாம் ஓர் நொடி தான், ‘போடா டேய் போடா..’ என்று மனதில் நினைத்தபடி சாப்பிட அமர,

“பாப்பா சாப்பிட வந்தாச்சா எங்க தூங்கிட்டியே இருப்பியோனு பயந்துட்டேன், நல்ல வேலை வந்துட்ட இல்லைன்னா அதுக்கும் பெரியவன் கிட்ட பேச்சு வாங்கி இருக்கனும்” என்று பேசியபடி மகேஸ்வரி அவளின் தட்டில் இரண்டு பூரியை அடுக்கி கொண்டிருக்க, படியில் இருந்து இறங்கி வந்தான் ராகவ்.

“ராகவா சாப்பிடுறியாபா, பூரி வைக்கட்டுமா” என்றதும் தலையாட்டியபடி அமர்ந்துக் கொள்ள, அதன் பின் அங்கு அனைவரும் கப்சிப்பென்று அமர்ந்தபடி பூரியை விழுங்கி கொண்டு இருந்தனர்.

குண்டு ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் படி இருக்க,, கமலினியின் முகத்திலோ மெல்லிய சிரிப்பு வீற்றிருந்தது. அதை கண்ட நிகில் தான் ‘இப்போ எதுக்கு இந்த சிரிப்பு’ என்று யோசனையாய் அவள் முகத்தை சந்தேகமாக பார்த்துக் கொண்டு  இருக்க,

” ஏ கும்பலாக சுத்துவோம்🎶
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்🎶

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம் எங்கள பார்த்த தமன்னா மயங்கி விழுந்துரும்🎶

ஆம் 🎶
உண்மையிங்க நயன்தாராவும் கூட விழுந்துரும்🎶

இப்போ புது நடிகை
கீர்த்தி சுரேஷ்சும்
சேர்ந்து உளுந்துரும்🎶 “

என்றபடி நிகிலின் போன் பெரிதும் அலற, ‘ஆத்தாடி..’ என்ற படி வாய்க்கு கொண்டு போன பூரியை தவற விட்டு, உணவு கையோடே போனை அணைத்தவன் மனமோ தன் அண்ணனை நினைத்து தான் பெரிதும் அலறியது!!

“செத்தானடா நிகிலு” என்றபடி மனுவும், ஜீவியும் அவனை பாவமாக பார்க்க, ‘யாரை அமைதியா இருக்க சொன்ன இந்த கமலினி கிட்டேவா’ என்று நினைத்தபடி அமைதியாக பூரியை விழுங்கி கொண்டு இருக்க, ராகவ்வின் பார்வையோ நிகலையும் அவளையும் சேர்த்தே துளைத்தது.

சிறியவர்களின் கலாட்டாக்களை சிரித்தபடி பார்த்திருந்த மகேஸ்வரியோ, வாயிலில் நிழலாட திரும்ப, அங்கே நின்று இருந்தவரை கண்டு, “அண்ணா..” என்று கூப்பிட்டபடி அவரை ஆவலாக வரவேற்க சென்றார்.

சட்டென்று அதை கேட்ட ராகவ்வின் உடலில் ஓர் இறுக்கம் வந்தடைய, அவனின் கண்களோ செந்தனலாக மாறிக் கொண்டிருந்தது. தன் தந்தை வருவதை கண்ட கமலியின் இதழ்களோ, அவளையும் மீறி ‘ஹிட்லர் வந்துட்டாரு டோய்’ என்று தான் முனுமுனுத்தது.

தொடரும்..💘🚊

 

(ஹாய் டியரிஸ்.. family intro அடுத்த பதவில் வரும்..🤗)