கதம்பவனம் – 6
ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்த செல்வம்,முதலில் தேடியது தனது மனைவியைத் தான் அனைவரும் அவன் கண்கள் அலைபாய்வதைப் பார்த்தாலும்,அவனைக் கண்டுகொள்ளவில்லை,சுந்தரம் அவன் அடிக்கும் கூத்தை பார்த்து தான் இருந்தார்,வீட்டை சுற்றி சுற்றி வந்தவன் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல் தனது தாயிடம் போய் நின்றான்.
மூன்று அண்ணிகளும் இருப்பதைப் பார்த்து சற்று தயங்கியவன்,பின்பு “அம்மா ,தாமரை எங்க கடைக்கு எதுவும் போயிருக்கலா”,அவன் கேட்கவே கோபமாக அவனைப் பார்த்தவர் பதில் சொல்லாமல் தனது வேலையைப் பார்க்க ஆரமித்து விட்டார்.
அதில் கடுப்பான செல்வம் திண்ணையில் போய் அமர்ந்து கொண்டான்,தந்தையின் முகத்தைப் பார்ப்பதும்,பின்பு வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தவனை,பார்த்தும் பார்க்காதது போல் இருந்து கொண்டார் ,”காதுல எதையுமே வாங்காத மாதிரி உட்காந்து இருக்கார் பாரு,இவ எங்க போய்த் தொலைஞ்சா”,செல்வம் சற்று சத்தமாவே புலம்ப,பொங்கிவிட்டார் சுந்தரம் நெடு நாள் கோபத்தைச் சேர்த்து வைத்து கொட்டி விட்டார்.
“ஓ….ஐயாவுக்கு இப்போ தான் பொண்டாட்டிய கண்ணனுக்குத் தெரியுதோ,அந்த புள்ள இருக்கா,இல்லையா,எதாவது அதுக்கு வேணுமா,உடம்பு எதுவும் சரியில்லையா,மூணு வேலையும் ஒழுங்கா சாப்புடுதா இது எல்லாம் தெரியுமாடா உனக்கு,நீ ஆடிக்கு ஒரு தரம் அம்மாவாசைக்கு ஒரு தரம் வருவ,அந்த புள்ள உனக்குப் பணிவிடை பண்ணனுமா,எதுக்கு இப்புடி ஒரு வாழ்க்கை அதான் அவுங்க அப்பா வீட்டுக்கு அனுப்பிட்டேன்”.
அலுங்காமல் குண்டை தூக்கி போட,”யாரைக்கேட்டு என் பொண்டாட்டிய அனுப்புனீங்க”,வரிந்து கட்டி கொண்டு வந்த மகனை,ஏறிட்டவர்.
“யாரை கேட்கணும்,இல்ல அவளுக்குனு பேச இங்க யாரு இருக்கா?”.
“நீ அவ புருஷன்னு எனக்கு அப்போ அப்போ மறந்துடுது செல்வம்”,இதை விட அவனது தப்பை சுட்டி காட்ட முடியுமா என்ன துடித்துப் போனான் செல்வம்.
அப்பா………….அவனது அழைப்பை புறக்கணித்தவர்,”நேத்து என்ன நடந்தது தெரியுமா”,என்று அனைத்தையும் சொல்லி முடித்தவர்,”அசிங்கமா இருக்குடா இத்தனை தடி பசங்க இருந்தும்,இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணோட நிலமையைப் பார்த்தியா,ஆமா…..நீ ஓடி ஓடி யாருக்கு உழைக்குற?வேற ஏதும்……………..,
அவர் முடி பதற்குள் அப்பா… என்று அலறியவன்,அவளை தவிர்த்து எனக்கு எதுவுமில்லை,மாதங்கி அண்ணி என்ன ரொம்பப் பேசிட்டாங்க,என் பொண்டாட்டிக்கும் இந்த வீட்டுல மரியாதை இருக்கணும்,அதுக்கு நான் நிறையச் சம்பாரிக்கணும் அதான் ஓடுறேன்,ஆனா அவளைத் தொலைச்சுட்டு தான் இந்தக் காசு சம்பாரிக்கணும் இருந்தா,எனக்கு அந்தக் காசே வேணாம்ப்பா….
தனது வளர்ப்புச் சோடை போகுமா என்ன பெருமையாக மீசையை நீவிவிட்ட சுந்தரம்,”அப்போ நீயே போய்க் கூட்டிடுவா,அந்த பொண்ண பத்திரமா பாத்துக்க முடியுமான மட்டும் அங்க போ”,என்று சொல்லியவர் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு நடந்தார்,பின்பு மீண்டும் வந்து,”அந்த புள்ள உன்கிட்ட சொல்லிக்காம போகமாட்டேனு அடம் புடுச்சுது,நாந்தான் தீட்டி அனுப்பி வச்சேன்,அவளை திட்டி புடாத பாவம் புள்ள உன்ன மேல பயந்து கெடக்கு”,
அவனுக்கு அவள் சொல்லாமல் போனது கோபத்தைக் கொடுத்தது, அவளை பார்த்தவுடன் சண்டை பிடிக்க தான் எண்ணினான் , ஆனால் தன்னை அறிந்து கொண்டு பேசிய தந்தையை எண்ணி சிரிப்பு தான் வந்தது,அது சரி இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் எத்தனை விதமான சம்பவங்களைச் சந்தித்திருப்பார்,அது கற்று கொடுத்த பாடம்,தனது குடும்பம் என்று வாழ்பவர் அல்லவா அதான் எல்லோர் மனதையும் படித்து வைத்திருந்தார்.
சிறிதும் தாமதிக்காமல் குளித்துக் கெளம்பி விட்டான் உணவு கூட உண்ணவில்லை அவனது வேகத்தைப் பார்த்து அமுதாவும்,சீதாவும் சிரித்துக் கொண்டனர்,மாதங்கி தான் ஓர் உதட்டு சுளிப்போடு நகர்ந்து கொண்டாள்,பங்கஜத்திற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது,தனது கணவனின் கணிப்பை எண்ணி அவர்க்கு அத்தனைக் காதல் அவர் மேல்,தனது கணவன் எப்போதுடா நகர்வலம் முடிந்து வருவார் என்று காத்துக் கிடந்தார்.
அந்தி சாயும் வேளையில் தான் செல்வம் தாமரையின் பிறந்தகம் வந்தான்,அவனைத் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டார் தாமரையின் அப்பா,தனது வயதையும் மீறி ஓடி வந்து வரவேற்றார்,அவருக்கும் தனது மாப்பிள்ளையின் மேல் தனிப் பிரியம்.
அவர் அழைக்கவே இரவு உணவை தயார் செய்து கொண்டு இருந்த தாமரை அடித்துப் பிடித்து ஓடி வந்தாள்,அவளது வரவை உணர்ந்து அவன் அவளைப் பார்க்க ,அந்தப் பார்வையில் பயந்து தான் போனால்,அந்த முரட்டு காளை காதலாகப் பார்க்க,மென்மையான தாமரையோ கண்ணில் நீருடன் தன்னை மறைத்து கொண்டது,அவளது செய்கை சிரிப்பை தான் கொடுத்தது,திருமணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆனாலும் தன்னைப் பார்த்து பயந்து கொள்ளும் மனைவி மீது மயக்கம் அதிகம் அந்தக் கள்வனுக்கு.
“பாப்பா ,மாப்பிள்ளை வந்து இருக்காரு பாரு “,தனது தந்தையின் குரலை கேட்டு வெளியில் வந்தவள்,”வாங்க “,என்று அழைத்துத் தண்ணீர் கொடுத்தாள்,அதனை கையை இறுக்கப் பற்றி வாங்கிவயன் நிதானமாகக் குடித்தான்.
பின்பு அவளது தந்தை கூடப் பேச ஆரமித்து விட்டான்,அவள் தான் குழம்பி போனால் ,”இவரு பேசுறது பார்த்தா இன்னக்கி ஊருக்கு போறமாதிரி தெரியலையே,செம கோபமா இருக்காரு போல,போச்சுடி தாமரை மாமா சொன்னதைக் கேட்டு வந்ததுக்கு நல்ல வாங்கப்போற,இதுவரைக்கும் கை நீட்டுனது இல்ல,அதுவும் இன்னைக்கு நடந்துடும் போல”,தனக்குள் பேசுவதாக எண்ணி சத்தமாகவே புலம்பி கொண்டு சமையலை முடித்தாள்.
இரவு உணவை தந்தைக்கும்,கணவனுக்கும் பருமறியவள்,அவளும் உண்டு திண்ணையில் தனது தந்தைக்குப் பாய் விரித்து,உள் அறைக்குள் வந்தவள்,பயந்து கொண்டே வெளியில் நின்றாள்,திட்டினாலும் தாங்க முடியாது,அடித்தாலும் தாங்க முடியாது,வெளியில் படுத்தால் தனது தந்தைக்குப் பதில் சொல்ல வேண்டும்,சுந்தரம் வெறும் ஓய்வுக்கு மட்டுமே தன்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்று தான் தாமரையின் தந்தையின் நினைப்பு,அதை வெளிக்காட்டாது நடந்து கொள்ள வேண்டும்.
ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டி கொண்டு உள்ளே சென்றாள்,அவளை பார்த்த வாறே கட்டிலில் படுத்தவன்,ஒரு கையை நீட்டி வா என்று அழைக்க,முழித்துக் கொண்டே வந்தாள்,வந்தவளை அன்று போல் இன்றும் வலிக்க அனைத்து அவன் காதில் இவன் சொல்ல,அதிரிச்சியில் கை கால்கள் எல்லாம் சில்லிட்டது,புரியாத மொழி பேசியது போல் முழித்த மாணவியை ஆசையாக அனைத்து உறங்கி போனான் செல்வம்.
அவள் தூக்கத்தை பறித்து விட்டு சுகமாக அவளது மார்பில் துயில் கொண்டான் அந்த தூயவன்.
மறுநாளே அவளது தந்தையிடம் விடை பெற்று அவளை அழைத்துச் சென்று விட்டான்,அவளுக்குத் தான் பயமாக இருந்தது,இன்னும் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை,வீட்டிக்கு வரும் வரை ஒரு வார்த்தை அவளிடம் பேசவில்லை,திண்ணையில் வழக்கம் போல் கால் நீட்டி தினசரி படித்துக் கொண்டு இருக்கும் மாமனாரை பார்த்தவள்,அவரிடம் வந்து நின்றாள்,செல்வம் உள்ளே சென்றுவிட்டான்.
முதல் முதலில் தன்னை நேர் கொண்டு பார்த்து முறைக்கும் மருமகளைப் பார்த்துச் சுந்தரத்திற்கு ஏக குஷி “என்னம்மா ஒரு நாள் தானே என்ன பார்க்கல,அதுக்கு இப்புடிய பார்ப்ப”,அவரது கேலியில் இன்னும் கோபம் ஆனவள்,”விளையாடாதீங்க மாமா,நான் அப்பவே சொன்னேன் போக மாட்டேன்னு,பாருங்க அவரு கோபமா இருக்காரு”,
“கோபமா இருந்தா அதுக்கெல்லாம் என்னால பயந்துக்க முடியுமா போமா”,அசால்ட்டாக அவர் திரும்பப் பேப்பர் படிக்க,அவள் அவரைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே சென்றாள்,அவள் பார்ப்பதை உணர்ந்தாலும் அவர் பார்க்கவில்லை,இனி செல்வம் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை அவர்க்கு வலுத்தது,அதில் நிம்மதி பெருமூச்சை விட,
அவரது மனசாட்சியோ அடேய் சுந்தரா,இன்னும் இளைய காளை ஒன்று உள்ளது நினைவில் கொள்,செல்வமாவது யோசிப்பான்,ராஜன் ஹ்ம்ம்………………ஆனால் என் மருமகள் சமாளித்து விடுவாள் விமலாவின் மேல் அத்தனை நம்பிக்கை.
பார்ப்போம் நம்பிக்கை பொய்க்குமா,வலுக்குமா என்று……