காதல் எக்ஸ்பிரஸ்♥️ – டீசர்
சோகமே உருவாய் அமர்ந்திருந்தவளின் கேசத்தை கோதியவாரே, “ஏன்டா.. பேசாம என் பையனை கல்யாணம் செஞ்சுக்கோயேன்.. அண்ணாக்கிட்ட இதை பற்றி நான் பேசுறேன்.. உன்னையும் நான் நல்லா பார்த்துப்பேன் டா” என்றவரை இறுக்கி அணைத்தவள்,
“நீ என்னை நல்லா பார்த்துப்பனு எனக்கு தெரியும் மகேஸ்.. அதுக்காக எல்லாம் அந்த ரூல்ஸ் ராகவேந்திரனை கல்யாணம் செஞ்சுக்க முடியாது.. எனக்கு இந்த உலகத்துல சுதந்திரமா வாழனும்.. நின்னாலும் குத்தம்.. நடந்தாலும் குத்தம்னு சொல்றவன் எனக்கு வேண்டாம்.. பழைய பஞ்சாங்கம்” என்று உதட்டை சுளித்தாள் கமலினி.
அவளின் பேச்சை கேட்ட மகேஸ்வரிக்கோ அனிச்சையாக மகனிடம் பேசிய உரையாடல் மனதில் நிழலாடியது..
“வாட் அந்த வால் இல்லா குரங்கை நான் கல்யாணம் செஞ்சுக்கனுமா.. நோ வே மா.. எனக்கு அமைதியா வாழ்க்கை வாழனும்.. நான் எது சொன்னாலும் தைய தக்கனு குதிக்கிற பொன்னு எனக்கு வேண்டாம்.. அதுக்காக எனக்கு வர போகிற மனைவிக்கு ரைட்ஸ் கொடுக்க மாட்டேனு நினைக்காதிங்க..”
“என் வேலை பற்றி உங்களுக்கு நல்லவே தெரியும்.. வெளியிலும் சண்டை வீட்டிலும் சண்டைனா என்னால் முடியாது மா.. ஐ வான்ட் பீஸ்புல் லைஃப் (I want peaceful life) மா” என்றவன் தன் கோட் சூட்டை சரி செய்தவாரே வெளியில் கிளம்பி சென்றான் ராகவேந்திரன்.
____________________
வாழ்க்கையை ரசித்து வாழ நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையை அமைதியாக வாழ நினைக்கும் ஒருவன்.. இவர்களின் இடையில் காதல் தன் தடத்தை பதித்து அவர்களை காதலில் பயணிக்க செய்யுமா? காண்போம் காதல் எக்ஸ்பிரஸ் பயணத்தில்!!
(ரெடியா இருங்க டியரிஸ்.. செவ்வாய் கிழமை எக்ஸ்பிரஸ் வரப்போகுது.. எல்லோரும் டிக்கெட் வாங்கிக்கோங்க..😜)