kadhal7

kadhal7

காதல் – 7
என்னவனின் கண்ணுக்கு
நான் அழகாய் தெரியவேண்டும் என நினைக்கவில்லை…
என் புன்னகையை அவன் ரசித்தாலே போதும் என்று எண்ணுகிறேன்…
ரசிப்பாயா என்னவனே?
திருவாரூரில், அந்த மண்டபம் மிகவும் பரப்பரப்புடன் இயங்கிக்
கொண்டிருந்தது.
ஐயர் மேடையில் அமர்ந்திருந்து திருமணதிற்கான வேலையைப் பார்த்துக்
கொண்டிருக்க, சத்தியநாதனோ மிகவும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சுற்றிக்
கொண்டிருந்தார். அவரின் ஒரே ஒரு செல்ல மகளின் திருமணம் அல்லவா?
மனிதர் முகம் புன்னகையில் விரிந்திருந்தது.
மணப்பெண் அலங்காரத்தில் ஜொலித்த தன் தேவதையை ரசித்துப்
பார்த்திருந்தான் இந்தர்.
நேற்று வரை இருந்த இருப்பென்ன, இப்பொழுது இருப்பதென்ன அவளைப்
பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் அவன்.
“ஏன்டா எரும சிரிக்கிற?”
“நேத்து புல்லா அழுத புள்ள இங்க நிற்குதான்னு பார்த்துச் சிரிக்கேன்
மதிக்குட்டி, கிழவி நீ பார்த்தியா?”
“என்னை ஏன்டா உங்களுக்கு இடையில் இழுக்கிற?” முகத்தை ஏழு
முழத்துக்கு நீட்டியவர் அறையை விட்டு வெளியேறினார்.
அதே நேரம் வெட்கத்துடன் தலையைக் குனிந்துக் கொண்டவள் மனதோ
நேற்றைய நாளுக்குத் தாவியது.

 

அவளுக்குப் பார்த்திருக்கும் மணாளன் ஜெய்கிருஷ்ணா பற்றித் தீவிர
யோசனையில் அமர்ந்திருந்தாள் சபர்மதி.
“என்ன புதுப் பொண்ணு, என்ன யோசனை?” கேட்டபடியே அவள் அருகில்
வந்து அமர்ந்தான் இந்தர்.
“ஒன்னும் இல்லைடா உன்னோட பாஸ் பேசவே இல்லையே அது தான்
யோசனை”
“ஒஹ் மச்சானை சொல்லுறியா? அங்க வேலை அதிகம்டா, உனக்கே
தெரியும் தானே. அங்கே எல்லா வேலையையும் அவர் முடித்தால் தான்
கல்யாணத்தைத் தொடர்ந்து லீவ் போட முடியும். அதுக்குப் பிறகு முழுசா நீ
பேச போற, மச்சான் கேட்கத்தான் போகிறார்” சிரிப்புடன் கூறினான்.
“இல்லைடா… இருந்தாலும் மனசு ஒரு மாதிரியாவே இருக்கு இந்தர்,
அவருக்கு என்னைப் பிடிக்கலியா?”
“ஏன் உனக்கு அவரைப் பிடிக்கலியா மதி?”
“எனக்கு என்று தனிப்பட்ட ஆசை இல்லை இந்தர், அப்பாக்கு எது
சந்தோசமோ அது தான் எனக்கும். இந்தக் கல்யாணத்துல அப்பாக்கு ரொம்பச்
சந்தோசம், அப்பா சந்தோஷமே என் சந்தோசம், ஆனாலும் ஒரு டவுட்
அவரைக் கல்யாணத்துக்குக் கட்டாயபடுத்துறாங்களோ?”
“யாரையும் கல்யாணத்துக்குக் கட்டாயபடுத்த முடியாதுடா, என்னோட
மதிக்குட்டியை யாருக்காவது பிடிக்காமல் போகுமா, நீ தேவதைடா. உன்னை
ஒருத்தன் பிடிக்கலை என்று சொன்னால் அவன் முட்டாள்டா, எதைப்
பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமா இருப்பியாம், அதை இந்த அத்தான்
பார்த்து ரசிப்பேனாம்” கன்னத்தைத் தட்டி பாசமாகக் கூறினான் இந்தர்.
“நீ என்னை ரசித்தது இருக்கட்டும், எங்கே உன் ஆள்?”
“நாளைக்குக் காலையில் வந்துவிடுவாள். கிளம்பிட்டேன்னு இப்போ தான்
சொன்னா”

 

அதன் பிறகு இந்தரை கேலி செய்ய என்று நேரம் இறக்கை கட்டிப் பறந்தது.
இதை எல்லாம் நினைத்தவள் முகம் புன்னகையில் விரிந்தது.
“என்ன ரகசியமா சிரிக்கிற?”
“எல்லாம் உன் ஆளை பற்றித் தான் இந்தர்”
“என் ஆளை பற்றி நீ ஏன் நினைக்கிற?”
“சரி சொல்லு, எங்கே இன்னும் அவளைக் காணும்?” யோசனையாக
வினவினாள்.
“இப்போ வந்திடுவேன்னு சொன்னாடா வருவா? ஆமா நீ என்ன அத்தனை
ஆர்வமா இருக்க?”
“இல்லையா பின்ன என்னோட இந்தர் மனைவியை நான் தானே முதலில்
நேரில் பார்க்கணும்” மெல்லிய சிரிப்புடன் கூறினாள்.
அதே நேரம் இந்தர் மனது, அவளை முதல் நாள் பார்த்த நிகழ்வுக்குச்
சென்றது.
இந்தர் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட் அருகில் இருந்த ஹாஸ்டலில் தான்
ரதி தேவி தனது மேல் படிப்பை தொடர்ந்தாள்.
அந்த வழியாகத் தினமும் ஆபிஸ் செல்வான் இந்தர். அப்படிதான் ஒரு நாள்
தனியாக நின்றிருந்தாள் தேவி.
“ஏனுங்க என்னாச்சி?” அவள் முன் பைக் நிறுத்தியவன் அவளைப் பார்த்து
கேட்டான்.
அவனைத் தினமும் அந்த வழியாகப் பார்த்திருக்கிறாள். அதிலும் ஒரு முறை
அவளுக்குப் பஸ் டிக்கெட் எடுத்து உதவியும் செய்திருக்கிறான். அதில் அவன்
மேல் கொஞ்சம் நல்லெண்ணம் உண்டு.
“பஸ் மிஸ் பண்ணிட்டேன், எக்ஸ்சாம் வேற இருக்கு” மெதுவாகக் கூறினாள்.

 

“நான் அந்த வழியாகத் தான் போகிறேன், வாருங்களேன் டிராப்
பண்ணிடுறேன்?”
“அது.. வந்து” மெதுவாக இழுத்தாள்.
“அட பயப்படாதீங்க, ஏறுங்க?”
………….
“உங்க அண்ணன் மாதிரி நினைச்சு ஏறிக்கோங்க என்று எல்லாம்
சொல்லமாட்டேன், என் மேல நம்பிக்கை இருந்தா ஏறுங்க?” பைக் ஸ்டார்ட்
செய்ய, பின்னால் ஏறி அமர்ந்தாள் தேவி.
இருவருக்கும் இடையில் அவளின் பை அரணாக இருந்தது. முகத்தில்
கொஞ்சமே கொஞ்சம் புன்னகை தோன்ற அவளைக் காலேஜில் விட்டுச்
சென்றான்.
அப்படியே அவர்களின் நட்பு வளர்ந்து காதலாக மாறியது. அவன் துபாய்
சென்ற பின்னும் அவர்கள் காதல் மேலும் வளர்ந்து, மதி திருமணம் முடிந்த
பின் முறையாக அவள் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறான் இந்தர்.
‘இன்னும் கௌதமை காணுமே?’ யோசனையோடு வாசலையே
பார்த்திருந்தான் இந்தர்.
“இந்தர் யாரை எதிர் பார்த்து இருக்கிறாய்?” அவன் முன் வந்து நின்றபடி
கேட்டார் சத்தியநாதன்.
“இல்ல மாமா நண்பன் கெளதம் வரேன்னு சொன்னான், அவனுக்குத் தான்
வெயிட்டிங்” வாசலையே மீண்டும் பார்த்தபடிக் கூறினான் இந்தர்.
“மாப்பிள்ளை வரும் நேரம் ஆச்சு, அந்த வேலையைக் கவனி இந்தர்”
“சரிங்க மாமா” கூறியவனோ அங்கிருந்த சேர்களை ஒழுங்காக அடுக்கியபடி
அவர்களை எதிர்பார்த்திருந்தான்.

 

“மாப்பிள்ளை வீட்டார் வந்துட்டாங்க” யாரோ குரல் கொடுக்க, வேகமாக
வாசலை நோக்கி சென்றனர் மணமகள் வீட்டார்.
அவள் கூடப்பிறந்தவன் என்று யாரும் இல்லாததால், அண்ணன்
ஸ்தானத்தில் இருந்து, இந்தர் தான் மாப்பிள்ளைக்கு மைனர் செயின்
அணிவித்து மண்டபத்தின் உள்ளே அழைத்து வந்தான்.
மதிக்கான புடவையை அவள் கையில் கொடுத்து அணிந்து வர கூற, தன்
அறையை நோக்கி சென்றாள் மதி. ஹோம குண்டத்தின் முன் அமர்ந்திருந்த
ஜெய் கிருஷ்ணா அவனுக்குக் கூறப்பட்ட மந்திரத்தைக் கூறிக் கொண்டே
வாசலையே பார்த்திருந்தான்.
‘ரதி, கெளதம் இருவரையும் இன்னும் காணுமே’ யோசனையாக அருகில்
நின்றிருந்த இந்தர் வாசலையே பார்த்திருந்தான்.
அடுத்தக் கொஞ்ச நேரத்தில் கெளதம் வர, அவனை நோக்கி ஓடி வந்த இந்தர்
“எங்கடா ரதி” என்க,
“அவ ப்ரண்ட்ஸ் கூட வருவேன்னு சொல்லிட்டா டா”
“சரி வா உட்கார்” என்றவன் ஒரு நாற்காலியில் அவனை அமரவைத்து
மாப்பிள்ளை அருகில் நின்று கொண்டான்.
ஐயர் மணப்பெண்ணை அழைத்துவரக் கூற தோழிகள் புடைசூழ நடந்து
வந்தாள் மதி. நடந்து வரும் அவளையே பார்த்திருந்தான் ஜெய். மனதில்
பலவிதமான உணர்வுக் குவியல். இன்னொரு மனமோ அவளிடம்
மன்னிப்பையே யாசித்தது.
தன் அருகில் வந்து அமர்ந்தவளை கண்கள் பார்க்க, அதே நேரம் அவள்
கண்களும் அவனை நோக்கியது. கண்களில் மன்னிப்பை யாசித்தவன்
தலையைக் குனிந்து கொண்டான். அவனையே யோசனையாகப்
பார்த்திருந்தாள் மதி.

 

ஐயர், ஜெய் கையில் தாலியை எடுத்துக் கொடுக்க, அதைத் தயக்கத்துடன்
வாங்கியவன் அவள் முகத்தையும், அந்தத் தாலியையும் மாறி மாறி
பார்த்தான்.
அடுத்த நிமிடம் யாரும் எதிர்பார்க்காதவண்ணம் தாலியுடன் எழுந்து நின்றான்
ஜெய்.
“என்னாச்சு மாப்பிள்ளை” பயத்துடன் அவன் அருகில் வந்து கேட்டான் இந்தர்.
“என்னை நல்லா ஏமாத்திட்டீங்க அப்படித் தானே இந்தர்”
“என்னாச்சு மாப்பிள்ளை, யார் என்ன சொன்னா?” வேகமாக அவர் அருகில்
வந்தபடி கேட்டார் சத்தியநாதன்.
“இதைப் பாருங்க” என்றபடி கையில் இருந்த திருமண அழைப்பிதழை
அவர்கள் கையில் திணித்தான்.
அதைப் பார்த்தவர் அதிர்ச்சியில் நிற்க, அவர் கையில் இருந்து வேகமாகப்
பறித்த இந்தர் அதைப் பார்க்க அதிர்ந்து விழித்தான்.
“எப்படி… இப்படி” அவனிடமே கேட்க,
“அது தான் உன் கூடவே சுத்துறானே கெளதம். அவன் தான் இதோ
இருக்கிறாளே இவளோட லவ்வராம்” கூறியவன் மறந்தும் கூட மதியை
எட்டிப் பார்க்கவில்லை. அவள் இவனையே தான் பார்த்திருந்தாள் கண்களில்
நீர் வழிய,
அவளின் குழந்தை முகத்தைப் பார்த்து இப்படி அபாண்டமாகக் கூற ஜெய்க்கு
மனது வரவில்லை அதனால் தான் முகத்தை வெறுப்பாகத் திருப்பியது போல்
கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான்.
கெளதம் எப்படியும் அவளைத் திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையில்
தான் ஜெய் இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய முடிவெடுத்தான்.
காரணம் கெளதம் தங்கையான ரதி – இந்தர் இடையில் இருக்கும் காதல்!

 

இந்தர் கோபமாகக் கௌதமை பார்க்க, அப்பொழுது தான் ரதி மண்டபத்தில்
தன் தோழிகளுடன் நுழைந்துக் கொண்டிருந்தாள்.
ஆளாளுக்கு ஏதேதோ பேச, எல்லாரையும் பார்த்துக் கொண்டே இந்தர்
அருகில் வந்து, அவன் கையைப் பிடிக்க,
அவளை முறைத்து கையை வேகமாக உதறியவன், கெளதம் முன் நின்று
அவனின் சட்டையைப் பிடித்து நின்றான்.
“இப்படிப் பண்ணிட்டியேடா? என் தேவதை வாழ்கையை அழிக்கத் தான்
போலியா இன்விடேஷன் அடிச்சியா?”
“என்ன பேசுற இந்தர், நான் எதுக்கு அடிச்சேன்னு நீ பார்த்துட்டு தான இருந்த?
நீயே போலின்னு சொல்லும்போது எப்படிடா”
“ஆனா, மாப்பிள்ளை நம்பலியேடா? ஒரு காதல் கதையே
சொல்லுறாங்களேடா? இங்க பார் எல்லாரும் என் தேவதையே எப்படிப்
பாக்குறாங்கன்னு, இதுக்கெல்லாம் காரணம் நீ தானே” கோபமாகக் கேட்டவன்
அவனை அறைந்து விட்டிருந்தான்.
“இந்தர்” என்றபடி சத்தியநாதன் அவனை பிடிக்க வர, இத்தனை நேரம் நாகு
தோளில் சாய்திருந்து அழுதவள், முகத்தை நிமிர்த்தி “இந்தர்” என
அழைத்தாள். அப்பொழுது கூட அவன் முகத்தை அவள் பார்க்க
விரும்பவில்லை.
“நீ எதுக்கும் கவலைப்படாதேடா, உன் கல்யாணம் எப்படியும் நடக்கும்,
கெளதம் மாப்பிள்ளை கிட்ட எல்லாம் எடுத்து சொல்லுவார், அழாம இருடா”
அவளின் கண்ணைத் துடைத்து விட்டவன், அவள் அறியாமல் தன்
கண்களைத் துடைத்துக் கொண்டான்.
“சார் நீங்க ரொம்பத் தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க, இதோ நிக்குறாங்க
பாருங்க, இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது, முன்ன பின்ன பார்த்தது
கூடக் கிடையாது, லீவ் வேணும் என்று அடிச்ச இன்விடேஷன் அவங்க பேர்
போட்டு வந்திருக்கு, ரெண்டு பேரும் ஒரே இடத்தில் குடுத்தது தான்
பிரச்சனையே அதுக்காக நீங்க இப்படிப் பண்ணுறது ரொம்பத் தப்பு சார்”

தன் காதலை சேர்க்க கடவுள் கொடுத்த ஒரு வாய்ப்பாக எண்ணிய ஜெய்,
கூட்டத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்தவன் “ஹாசினி” என அழைக்க,
பட்டுபுடவை உடுத்தி மணப்பெண் போல் ஒருவள் அவனை நோக்கி வந்தாள்.
“இதோ இருக்கிறாளே ஹாசினி, இவளை தான் ஐந்து வருஷமா லவ்
பண்ணுறேன், ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்ததால் இவளை வீட்டில்
ஏற்க மறுத்துட்டாங்க, எனக்கு வேற வழி தெரியல, அப்போ தான் கெளதம்
அவன் காதல் கதையைக் கூறினான், அவங்களைப் பிரிக்க முடியாமல் தான்
இப்படிப் பண்ணினேன்” என்றவன் யாரையும் பார்க்காமல் அவளின் கை
பிடித்து அழைத்துச் சென்றான்.
ஜெய்யின் அப்பா, அவனை அழைத்ததைக் கவனிக்காமலே அவன் சென்று
விட, அவனின் பெற்றோர் சத்தியநாதனிடம் மன்னிப்பை வேண்டி வெளியில்
சென்றனர்.
அதன் பிறகு எத்தனையோ வாக்கு வாதம் நடக்க, வேண்டா வெறுப்பாக
மதியை நோக்கி வந்தான் கெளதம். மதி அவனை ஏறெடுத்துக் கூடப்
பார்க்கவில்லை.
இந்தர் முகத்துக்காக அவளுக்குத் தாலியை கட்ட, அப்படியே மயங்கி
சரிந்தாள் மதி. மீண்டும் வெறுப்பாக எல்லாரையும் பார்த்தவன் அப்படியே
வெளியே சென்றான். மனமோ ‘சாரி நிலா’ என விடாமல் ஜெபித்தது. ‘அவள்
உடனே வேண்டும்’ என அடம்பிடித்தது.
“அண்ணா… அண்ணா” பின்னால் ரதி அழைத்துக் கொண்டே செல்ல எதையும்
கவனிக்கும் நிலையில் இல்லை அவன்.
“டேய்… டேய்…” என இந்தர் அழைத்தது எதையும் கவனிக்காமல் கால் போன
போக்கில் வெளியே சென்றான் கெளதம்.
ரதி யார் பின்னே செல்வது எனத் தெரியாமல் நின்றிருந்தாள். அதன் பிறகு
எல்லாமே மாறியது. இந்தர் ரதியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை… எல்லாம்
கையை மீறி நடந்தது…

 

இப்படியே ஒரு வாரம் கழிய தங்கையின் முகத்துக்காய் மீண்டும் மதியை
தேடி சென்றான் கௌதம். ஆனால் மதி இவனை, இவன் முகத்தைப் பார்க்க
விரும்பவில்லை. ‘தன் வாழ்க்கையை அழித்தவனுடன் வாழ்வதா?’ அந்த
எண்ணமே கசந்தது.
“நான் இந்த வீட்டில் இருக்கவா வேண்டாமா?” இந்த ஒரு வார்த்தை மட்டும்
கௌதம் காதில் கேட்டது.
வெளியில் வந்த இந்தர் “இனி மதியை தேடி வராதே, அவளை நான் பார்த்துக்
கொள்வேன்” எனக் கூறி கதவடைத்துக் கொண்டான்.
அதன் பிறகு கௌதம் யாரையும் பார்க்கவும் இல்லை, அந்த துபாய்
வேலையைத் தொடரவும் இல்லை… அவனையே அவன் மாற்றிக்
கொண்டான்.
ரதி மூலமாக எல்லாம் அறிந்து கொண்டார் மீசைக்காரர்… அவளின் திடீர்
வெளிநாட்டுப் படிப்பு அவரை யோசிக்க வைக்க, மகளிடம் விசாரித்ததில்,
தான் காதல் கதையைக் கூறியவள், அண்ணனின் திருமணக் கதையையும்
கூறினாள்.
தன் மகளின் காதல் கைக்கூட, மதியை, கௌதமிடம் சேர்க்க எண்ணித்தான்
தன் மகனிடம் திருமணப் பேச்சை எடுத்தார். இப்பொழுது அவனின் காதல்
கேட்டு தான் எல்லா உண்மையையும் கமலா முன்னால் உடைக்க
வேண்டியதாக இருந்தது.
இப்பொழுது எல்லார் முகமும் ஒரு சேர கௌதமையே நோக்கியது. ‘மதிக்கு
என்ன பதில் கூற போகிறாய்?’ என்னும் விதமாக.
‘அட பாவி, நான் இல்லாத நேரம் கல்யாணத்தையே முடிச்சுட்டு கமுக்கமாய்
இருந்துட்டியே?’ மனதில் கருவி கொண்டான் அஷோக்.
எல்லார் முகத்தையும் ஒரு நொடி பார்த்தவன் “நான் காதலிக்கும் மதி, தாலி
கட்டிய மதி, இருவரும் ஒருவர் தான்” எனக் கூறியவன், அவளைக் கண்டு
பிடித்ததைக் கூறி “இந்தர்க்கும், அவளுக்கும்…” சொல்ல வந்ததைப் பாதியில்
நிறுத்திக் கொண்டான். அப்படி ஒன்றை அவன் மனம் விரும்பவில்லை.

 

“கொஞ்ச நாள் கழிச்சு, அவள் வீடு செல்வோம், அது வரை யாரும், எதுவும்
அவளைப் பற்றிப் பேசக்கூடாது” என்றவன் அந்தப் போட்டோவை எடுத்துக்
கொண்டு வெளியில் சென்றான்.
கருத்தபாண்டிக்கோ, ‘மதி இப்பொழுது எங்கிருக்கிறாள்?’ என யோசித்துக்
கொண்டிருந்தார். ரதி கூறிய அட்ரஸ் படி முன்னமே தேடி விட்டார்…
ஆனால் அவர்கள் ஊரை காலி செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது எனச்
செய்தி வந்திருந்தது. அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நாளுக்காய்க்
காத்திருக்க ஆரம்பித்தனர்.
அவனோ தன் நிலாவுக்கு, அவளின் கிச்சாவை நியாபகபடுத்த முதல் அடி
எடுத்து வைத்தான்..

error: Content is protected !!