Kaliyuga kalki 13

கலியுக கல்கி -13

வழி நெடுக நடுங்கி கொண்டு வரும் முத்துவை பார்க்க பாவமாகத் தான் இருந்தது ,இருந்தாலும் அவளது அடாவடி வாய்க்கு இது தேவை தான் என்பது போல ராகவ் அமைதி காத்தான்.வண்டி தெலுங்கானா நோக்கி சீறி பாய்ந்தது.பொன்னியின் பெற்றோரும்,முத்துவின் பெற்றோரும் பயந்து போய் இருந்தனர்.பொன்னியோ அத்தனை பரவசமாக இருந்தாள்,அவளுக்குத் தான் தெரியுமே இதைச் செய்தது யார் என்று.

ஆனால் அவளது வாழ்க்கையை எண்ணி, அந்தக் குடும்பத்தை எண்ணி பயமாகத் தான் இருந்தது.அவர்கள் இருக்கும் உயரம் ,வாழ்க்கை முறை எல்லாம் சுத்தமாகத் தனக்கு ஒத்து வராது என்பது திண்ணம்.மூளைக்குப் புரியும் செய்தி மனதிற்குப் புரியவில்லை என்பதே அவளது கவலை.இனி கவலை கொண்டு ஒன்றும் செய்வதற்கில்லை.

அமைதியாக வரும் மகளைப் பார்த்துக் கலக்கம் கொண்டவராக “அம்மாடி பயப்புடாதடா அப்பா இருக்கேன்” என்றவரின் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.ஒரு வழியாக மதியம் தாண்டி பாலாக அடைந்தவர்கள் சென்றது ராஜலுவின் வீட்டுக்கு தான்.

வீட்டுக்குள் நுழைந்த மூன்று குடும்பத்தையும் வரவேற்ற ராஜலு. அவர்களை உணவு உண்ண சொல்ல பயத்துடனும்,குழப்பத்துடனும் உண்டனர்.அவர்களுக்குத் தனியாக அறைகளைக் கொடுத்து ஓய்வு எடுக்கச் சொன்னவர், நாளை காலை அனைவரும் இங்குக் கூடுமாறு சொல்லி விடை பெற்றார்.

அவரவருக்குக் கொடுத்த அறையில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தஞ்சம் அடைந்தவர்கள் அப்போதுதான் மூச்சை வெளியிட்டனர்.பொன்னியின் தாய் “ஏங்க இப்புடி கடத்திட்டு வந்து சாப்பாடு போடுறாங்க,பேசணும் சொல்லுறாங்க,நம்பக் கிட்ட என்ன இருக்கு,நம்பள கடத்த. எப்புடி பார்த்தாலும் உங்க அப்பனும் சொத்து சேர்கள,எங்க அப்பனும் ஒன்னும் சேர்த்து வைக்கல பிறகு என்ன முத்து அப்பா”.

அவருக்கும் சுத்தமாகப் புரியவில்லை தங்கள் சொந்தத்தில் கூட அத்தனை பின்புலம் உள்ள குடும்பங்கள் கிடையாது, அனைவரும் அன்றாடக் கூலிக்கு வேலை செய்பவர்கள் தான்.இதே போலத் தான் பொன்னியின் அப்பாவும் புலம்பி கொண்டு இருந்தார்.

பின்பு இந்த அறையில் இருந்தால் பைத்தியம் பிடிக்கும் என்று “வாம்மா பக்கத்துல முத்து இருக்குது, நமக்குத் தனி அறை வேணாம் அவுங்க கூட இருக்கலாம்” அவளுக்கும் அதுதான் சரியென்று தோன்ற அங்கே சென்றனர்.

அங்குச் சென்றவர்களை வரவேற்ற முத்துவின் தாய் “வாங்க பொன்னி அப்பா என்ன நடக்குது இங்க மீண்டும் புலம்ப”.

“அடியேய்! அவரும் நம்பக் கூடத் தானே இருந்தாரு அவரைக் கேட்டா.”இரு பெற்றோரும் தவிப்பதை காண பொறுக்காத பொன்னியும்,முத்துவும் ஒரே சமயம் பார்த்து கொண்டனர்.இருவர் பார்வையிலும் சொல்லிவிடலாம் என்னும் செய்து இருக்க.சிறிதும் தாமதமின்றி,

ஆதி முதல் அந்தம் வரை சொல்லிவிட்டனர்.சொல்லிவிட்டு தங்களது பெற்றவர்களைப் பார்க்க பேய் அடித்தது போல் இருந்தனர்.”அப்பா ” என்று பொன்னி உலுக்க தெளிந்தவர் “என்னம்மா சொல்லுற எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.ஐயோ! இது தெரியாம உனக்குக் கல்யாணம் பண்ண போரேன்னு நான் தான் தம்பிக்கு போன் போட்டான்,அவுங்க அப்பாரு எடுக்கவும் அவர்கிட்ட சொன்னேன்.

“கிழிஞ்சுது” என்ற முத்து தனது பெற்றோரை பார்க்க. அவர்களோ “ஏப்புள்ள அந்த ஐயர் தம்பியா உங்கிட்ட அப்புடி நடந்துக்கிச்சு தங்கமான புள்ளையாச்சே” அவர் சொல்லியது தான் தாமதம் “இந்த பாரும்மா இன்னொருக்க அந்தத் தடியன நல்லவன் சொன்ன நான் மனுஷியா இருக்க மாட்டேன்”.
“கொஞ்சம் பேசாம இருங்கம்மா” தாயையும், மகளையையும் அடங்கிய பொன்னியின் தந்தை “என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.உங்க முடிவு என்ன முத்து அப்பா”.

“யோசிக்கணும்:.

ஹ்ம்ம்… யோசிப்போம் காலைல வரைக்கும் நேரம் இருக்கு என்றவர்கள் சற்று ஓய்வு எடுக்கச் சென்றனர்.
—————————————————————————————

விதுரனுக்குத் தன்னவள் வந்துவிட்டாள் என்று தெரியும்,இருந்தும் தான் இருக்கும் மனநிலையில் அவளைப் பார்த்தால் சேதாரம் அவளுக்குச் சற்று அதிகமாகி போகுமென்றே அவளைப் பார்ப்பதை தவிர்த்தான்.

பாலாஜிக்கோ எப்போதுடா அலமேலுவை பார்ப்போமென்று இருந்தது,அவன் வந்தது கூடத் தெரியாமல் தனது அறையில் சுகமான தூக்கத்தில் இருந்தாள் பெண். ராகவ்வும் அறையில் தனது பெற்றோரிடம் பேசி கொண்டு இருந்தான் முத்துவை பற்றி.

இவ்வாறு இவர்கள் இருக்கக் கமலம்,வேணி,சீதா,ரெங்கன் மற்றும் மிருதுவை அழைத்துத் தங்கள் அறையில் பேசி கொண்டு இருந்தார் ராஜலு.சமீப காலமாக அவர் யார் கூடவும் பேசுவதில்லை,அவரது சிந்தனை முழுதும் முகம் தெரியா எதிரியிடமே.அதுமட்டுமே காரணம் என்றால் இல்லை.

அவருக்கு இன்னும் கோபம் குறையவில்லை,மிருதுவிடம் ரெங்கனை நெருங்க விடுவதில்லை,வேணியிடமும் ,கமலத்திடமும் பேசுவதில்லை,விதுரனிடம் முறைப்பு மட்டுமே,அலமேலுவிடம் அதுவுமில்லை,மனிதர் கோபமாகவே சுத்தி கொண்டு இருந்தார்.

—————————————————————————————————-முதலில் வேணியைப் பார்த்தவர் “உங்க பையன் அவருக்குப் பொண்ணு பார்த்துட்டார், உங்க வீட்டுல வேலை பார்த்த பொன்னி தான்.விஷயம் தெரிஞ்சு தான் பொண்ணு பயந்து போய் அவுங்க ஊருக்கு போய்டுச்சு.இப்போ நம்ப ஆள வச்சு கூட்டி வந்துருக்கேன்”பின்பு கமலாவிடம் திரும்பிவர்,

“உங்க பொண்ணு விரும்பின பையனும் இங்க தான் குடும்பத்தோட இருங்காங்க.நாளைக்கி அவுங்க கிட்ட பேசி ஒரு முடிவு எடுக்கலாம் அதுக்குத் தான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம் கூப்பிட்டேன்”
அவர் பேசியதில் கோபம் தான் வந்தது கமலத்திற்கு “அது என்ன உங்க பொண்ணு,உங்க பையன் அப்போ இவருக்கு யாராம் ரொம்பத் தான் லொள்ளு கூடி போச்சு என்று முணு முணுக்க. ‘என்ன’ என்றவரை பார்த்து இளித்து வைத்தார் கமலம்.

அவர் செய்கையில் சிரிப்பு வர பார்த்தது ராஜலுவிற்குக் கமலம் கொஞ்சம் சுட்டி தான்,வேணி போல அல்ல.அவர் வேணியைப் பார்க்க தலை குனிந்து வாறே கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் சொட்டியது,இருந்தும் அவர் கண்டு கொள்ளவில்லை ‘விலகி இருக்கத் தானே ஆசை பட்டாய் விலகியே இரு’ என்பது போல் இருந்து விட்டார்.

பேச்சு முடிந்ததும் அனைவரும் கிளம்பச் சற்றுப் பின் தங்கிய கமலம் எல்லாரும் சென்றதை உறுதி பண்ணி கொண்டு ராஜலுவிடம் நெருங்கினார் என்ன என்பது போல் பார்த்தவரிடம் நெருங்கி அவரது மீசையை வலிக்கப் பற்றித் திருகி “ரொம்பத் தான் கொழுப்பு கூடி போச்சு” என்றவர் மீண்டும் அவர் அலற அலற இழுத்து சற்று வலிக்கக் கன்னம் கிள்ளி முத்தமிட்டார்.

வலியில் துடித்தவர் ஆ…. ஆ…… ராட்சசி விடுடி வலிக்குது. அவரை விட்டவர் வெளியில் சென்றவரே “வலிக்கத்தான் பாவா கிள்ளுறது”

“வந்தேன்னு வை”
என்ன பண்ணுவீங்க என்றவர் நிற்காமல் சென்று விட்டார்.கொஞ்சமாவது பயம் இருக்கா இவளுக்கு.புலம்பியவரே எழுந்து செல்ல போனவர் அடுத்து வேணி வரவும் மீண்டும் அதே இடத்தில் உட்காந்து விட்டார்.

கண்டிப்பாக அழுக போகிறாள் என்று பதறியவரை அதிர்ச்சி கொள்ளும் வகையில் செய்து விட்டு நொடி நேரம் கூடத் தாமதிக்காமல் தனது அறை நோக்கி சென்றுவிட்டார் வேணி. “என்னடா பண்ணா” என்று கன்னம் தடவியவர் சிலையாகி தான் போனார்.ஆம் அவரது கன்னம் பற்றி மென்மையாக முத்தமிட்டு ஓடி சென்றார், இந்திய வரலாற்றில் முதல் முறையாக என்ற ரீதியில் ராஜலு.

கொக்கு மீனுக்காக ஒற்றைக் காலில் தவம் இருப்பது போல்.மிருதுவுக்காகக் காத்து இருந்தான் ரெங்கன்.இனியும் அவளை விட்டு வைத்தால் தனது தந்தை அவளுக்கு மறுமணம் பண்ணி வைப்பது உறுதி. உடனே சீதாவிடம் பேசி அவளுக்கு நம்பிக்கை கொடுத்த பிறகே அவன் பார்வை மிருதுவிடம் திரும்பியது.இது கொஞ்சம் நுணுக்கமான விடயம் தான்.

பார்த்து செயல் பட வேண்டும்.அதை தான் ரெங்கன் செய்தான் மிருது தனது அறைக்குச் செல்லும் வழியில் நின்ற ரெங்கனை பார்த்து முழித்தவளை, தனது ரகசிய அறைக்குத் தூக்கி சென்றான்.அங்கு அவனைத் தவிர யாரும் வர வாய்ப்புகள் இல்லை.அவனது கையில் மீனாகத் துள்ளிய மிருதுவை.

“என்ன தைரியம் மாமனாருக்கும்,மருமகளுக்கும்” என்று கேட்டவாறே படுக்கையில் தூக்கி போட்டான்.மருண்டு விழித்தவள் இமையில் முத்தமிட்டு “உன்ன ரொம்பப் புடிக்கும் மிரு அதான் அப்பாகிட்ட சொல்லி பொண்ணுக் கேட்டேன்” என்றவன் அவள் கழுத்தில் புதைந்து “சீதா நமக்கு முதல் குழந்தை,அவளையும் நீதான் பார்த்துக்கணும்.”

அவளைப் பத்தி தெரியுமா என்றவன் முகம் பார்க்க தலையை மென்மையாக அசைத்தாள் ‘தெரியும்’ என்பது போல.பின்பு அவளது கையைப் பார்த்தவன் அதை வருடி கொடுக்க.அவனது வருத்தம் கண்டு அவள் கலக்கம் கொண்டாள்.அவன் கன்னம் தாங்கி இப்போ வலி இல்ல பாவா என்றவளை.

கொஞ்ச நாள்……. அவனைக் கண்டு புடுச்சு இரண்டு கையும் உ டைகிறேன் என்றவனைப் பயந்து பார்த்தவள் அவனைத் தானாகக் கட்டி கொண்டாள்.அவளால் அவனைத் தவிர்க்க முடியவில்லை தாலி கோடி உறவு அவளையும் மாற்றி விட்டது போலும்.

பயம் நீங்கி உரிமையுடன் அவனைப் பார்க்க,அவளது கண்ணில் தன்னைக் கண்டவன் மதி மயங்கி கரைந்து போனான்.பெண்ணவளை கரை சேர்க்க போராடி, போராடி தோற்றவன் இறுதியில் கரை சேர்த்துச் சோர்வு கொண்டான்.அப்பாடா ஒரு ஜோடியின் வாழ்க்கையை இணைத்து வைத்த நிம்மதியில் இரவு குளுமையை அள்ளி வீசியது.

அடுத்த நாள் விடியல் அழகாக விடிந்தது மிருதுவின் அறையில் இருந்து வெளி வரும் மகனை பார்த்த வேணிக்குச் சந்தோசமாக இருந்தது.ஒரு கையை அசைக்க முடியாத நிலையில் கூடக் காலை சீக்கிரமாக எழுந்து பம்பரமாக வேலை செய்யும் மருமகள், விடிந்து வெகு நேரமாகியும் வரவில்லை என்ற பதட்டத்தில் வந்தவர்,

அவர்களது நிலையைப் பார்த்து மகிழ்ந்து போனார். வேணியையும் அவருக்குப் பின்னர் நின்று இருந்த ராஜலுவை பார்த்த ரெங்கன் கெத்தாக அவரைப் பார்த்துக் கண் அடிக்க.அடிங்க…….. கை ஓங்கினார் ராஜலு,அவருக்கும் மகிழ்ச்சியே, அவர் எதிர் பார்த்தது இதை தானே.

பின்பு வேணியைக் கண்டு கொள்ளாமல் செல்ல பார்க்க “பாவா… ஏமி பாவா” என்ற வேணி மீண்டும் கன்னம் தாங்க.அபாரமாக மின்னியது ராஜலுவின் கண்,அதனை கண்டு கொண்டவர் “பிராடு பாவா” என்று கோமட்டில் குத்தி விட்டு சென்றார்.

ஏய்… ஏய்…. நில்லுடி ஓக்க இச்சு .

“லேது பாவா” என் கூடப் பேசாம அழுக வச்சீங்களா கிடையாது,தனது வயதை மறந்து, சுற்றி இருக்கும் மக்களை மறந்து அவர் வேணியிடம் கெஞ்சி கொண்டு சென்றார் அவர் பின்னே. இதையெல்லாம் பார்த்த பொன்னி மற்றும் முத்துவின் பெற்றோர்கள்.
ஆ… என்று வாய் பிளந்தனர் முத்துவின் அம்மா “என்னடி இது கூத்து அப்பாக்கு இரண்டு பொண்டாட்டி,பையனுக்கும் இரண்டு பொண்டாட்டி அதுவும் ஒரே வீட்டுல” பொன்னியின் தந்தைக்கு வயிற்றில் புளியை கரைத்தது.ஏற்றுக் கொள்ள முடியாது என்ன செய்வது என்று தவித்துப் போனார்.

இது எங்களுக்குப் பழக்கம் என்பது போலப் பெண்கள் இருவரும் அமைதி காத்தனர்.