Kandeepanin Kanavu-14

                 காண்டீபனின் கனவு 14

 

முனிவரின் சிலையைக் கண்டதும் மேலும் திகைத்தனர்.

“வீரா! ஒரு வேளை இந்த முனிவர் இவங்கள எல்லாம் கொன்னு இப்படி பண்ணி வெச்சிருக்காரா? இது ஏதோ ஹான்டட் பிளேஸ் மாதிரி இருக்கு.” ‘சாம்’மின் பயம் அதிகரித்துக் கொண்டே போனது.

“அப்படி எல்லாம் இருக்காது. அந்த சிலைல இருக்கறவர பாத்தா, சாந்தமா இருக்காரு. அவர் இப்படி எல்லாம் செஞ்சிருப்பாரா! ஒரு வேளை இங்க இறந்தவங்கள எல்லாம் மீண்டும் உயிரோட கொண்டு வர முயற்சி செஞ்சிருப்பாரா இருக்கும்.” வீரா தன் எண்ணத்தைக் கூற,

“பொதுவா மம்மீஸ் எல்லாமே அப்படி ஒரு கான்செப்ட் தான். அவங்க மறுபடியும் உயிரோட வருவாங்கன்னு தான் ஒரு துணில அவங்க உடலை சுத்தி வைக்கறாங்க. அவங்க ஆன்மா மீண்டும் அந்த உடலுக்குள்ள வரும்ன்னு அவங்க யோசிச்சு இப்படி சில முயர்ச்சிகள செஞ்சாங்க.” வருண் தன் பங்கிற்கு மேலும் கிலியூட்டினான்.

“அப்போ, இந்த மம்மீஸ் எல்லாம் எழுந்து வந்துருமா?” அவளின் கேள்வியில் இருவருமே சிரிக்க,

அவர்களின் சிரிப்பொலி அங்கே அலை அலையாய் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

“ம்ம்ம் ஹூம்.. எனக்கு ஒன்னும் சரியா படல. முருகா நான் பத்திரமா ஊர் போய் சேர்ந்துட்டேன்னா உனக்கு அபிஷேகம் செய்யறேன் டா..” என வாய் விட்டு வேண்டிக் கொண்டிருந்தாள்.

“அவரும் டா தானா?” வருண் கேட்டான்.

“அடப் போங்கப்பா. எப்போ என்ன நடக்கும்ன்னு திகிலா இருக்கேன். காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.” சலித்துக் கொண்டாள்.

சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தவர்கள், கடைசியில் அந்த முனிவரிடம் வந்து நின்றனர்.

அப்போது வருண் கால் இடறி விழப் பார்க்க, வீரா அவனை சட்டெனப் பிடித்தான். அப்போது அவன் கையில் இருந்த கேமிரா கீழே விழுந்தது.

அதை எடுக்கக் குனிந்தவன், அந்த முனிவரின் சிலை ஒரு வட்ட வடிவ கல்லின் மீது அமைந்திருந்ததைக் கண்டான்.

அந்தக் கல் தான் வருணின் காலை இடறியது. அந்த வட்ட வடிவக் கல் சுழன்றது. கூடவே முனிவரின் சிலையும் திரும்ப,

வீரா அவனது ஹெட்லைட்டை கல்லின் மீது காட்டினான். அந்த முனிவர் சிலை திரும்ப, கீழே சிறு குழி தெரிந்தது.

அதில் ஒரு பனை ஓலை கிடைத்தது. அதைக் கையில் எடுத்தான் வீரா.

அதில் இந்த முழு மலைப் பகுதியின் வரைபடம் இருந்தது. அதில் மூன்று மலை உச்சிக்கு மட்டும் பெருக்கல் குறி போட்டிருந்தது.

“இது இந்த கிராண்ட் கனியன் மலையோட மேப் தான்.” வருண் சொல்ல,

“இது என்ன மூணு பிளேஸ் மட்டும் மார்க் பண்ணிருக்கே! அங்கே எதாவது இருக்கும்னு நினைக்கறேன்.” வீரா எதிர்ப்பார்த்தான்.

“வேற எதாவது அந்த குழில இருக்கா பாரு!” வருண் அங்கு விளக்கடிக்க,

அங்கிருந்த மண்ணில் கையை விட்டுத் துழாவினான். ஒரு சிறு ஓலை கிடைத்தது.

இவை அனைத்தையும் கண்களில் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சம்ரக்க்ஷா.

“ஒரு ஓலை சுவடி இருக்கு!” என அதை வெளியே எடுத்தான்.

“சுவடியா?” வருண் சந்தேகமாகப் பார்க்க,

“ஆமா. கொஞ்சம் இது மேல லைட் அடி. என்ன எழுதிருக்குன்னு பார்ப்போம்.” எழுந்தான் வீரா.

“இதுவும் தமிழ் ல தான் எழுதிருக்கும்.” சாம் சொல்ல.

“ஓலைசுவடின்னாலே நம்ம நாட்டுக்காரங்க தான்.” வீரா சிரித்தான்.

“சரி படி!” அவசரப் படுத்தினான் வருண்.

“பாதியாகிய அரனும் அரியும் ப்ரம்மனை உருவகபடுத்த –

ஒன்றினைந்த சக்தி மார்பில் பதிந்தவன் – அரக்கனின் வழி திறக்க

பாதாள லோகத்திற்கு வந்து பரலோகத்தை அடையலாம்

முக்குறி வழி செல் – அடைந்திடுவாய் சாப விமோசனம்”

படித்து முடித்தான் வீரா.

 

ஒன்றும் விளங்கவில்லை யாருக்கும்.

“பொறுமயா படி வீரா. கண்டிப்பா புரியும்.” வருண் தூண்ட,

மீண்டும் வாசித்தான்.

“பாதியாகிய அரனும்    அரியும் ப்ரம்மனை உருவகபடுத்த … அப்படீனா பாதியா நாம பாத்தது..அந்த பாதி மனுஷன் ஓவியம், பாதி வட்டம்..ஒ!! இப்போ புரியுது. பாதி மனுஷன், அது ஒரு வேளை இந்த அரனா ?” வீரா சரியாக சிந்திக்க,

“கரெக்ட்.. அரன் அப்படீன்னு சிவன சொல்லுவாங்க, அரின்னு விஷ்ணுவ சொல்லுவாங்க” சாம் கூற,

“ஆமா..!! சிவனுக்கு பாதி உடல் தானே! சக்தி பாதி. அப்போ அந்த பாதி மனுஷன் ஓவியம் சிவன். அந்த பாதி வட்டம் நாம வரஞ்ச பிறகு விஷ்ணு கையில இருக்கற சக்கரம் மாதிரி இருந்துச்சு… அப்போ அது விஷ்ணு. அரியும் அரனும்..” வீரா முகத்தில் தெளிவு பிறந்தது.

“இப்போ நீ சரியா யோசிக்கற வீர். அடுத்தது படி.” வருணும் சேர்ந்து கொண்டான்.

மூவரும் அடுத்து விளக்கம் தெரிந்து கொள்ள, ஆர்வமாக அந்த சுவடியைப் படித்தனர்.

“அரனும் அரியும் ப்ரம்மனை உருவகப் படுத்த- அந்த ரெண்டு ஓவியம் சேர்ந்து தாமரைய தானே வரைய வெச்சது… தாமரைக்கும் பிரம்மனுக்கும்….” என யோசித்தவன், “பிரம்மா தாமரைல தானே இருப்பாரு. வாவ்…அப்படித் தான் மீனிங் வருது.” வீரா மகிழ்ந்தான்.

“அதே தான். அப்போ சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து ப்ரம்மனை உருவாக்கினாங்க..அடுத்த லைன் படி” வருண் சொல்ல,

“ஒன்றினைந்த சக்தி மார்பில் பதிந்தவன் – அரக்கனின் வழி திறக்க

பாதாள லோகத்திற்கு வந்து பரலோகத்தை அடையலாம்” வீரா படித்து,

“முக்கோணம் மாதிரி ஒரு லைட் வந்துச்சு ஒன்னு சேந்து, அப்போ அந்த வெளிச்சம் உன் மேல தான் பட்டுது…நேரா உன் நெஞ்சுல தான் அந்த வெளிச்சம் விழுந்துச்சு.. அப்போ நீ தான்.” சாம் பயந்தாள்.

“அவ சொல்றது சரி தான். அந்த சக்தி மார்பில் பதிந்தவன் நீ தான். அடுத்த வரிய பாரு…அரக்கனின் வழியும் திறந்துச்சு… அடுத்து பாதாள லோகத்திற்கு வந்து… இந்த பிளேஸ் தான் பாதாள லோகமா? படிக்கட்டுல நாம கீழ இறங்கி தான் வந்தோம்.. அப்போ இது வா தான் இருக்கும். பரலோகத்தை அடையலாம்..” வருண் ஒவ்வொன்றாகக் கூற,

“ஐயோ அப்போ நாம சாக போறோமா.. பரலோகத்தை அடையலானு போட்டிக்கு…கடவுளே வாழ்க்கைல எதுவுமே இன்னும் நான் பாக்கல..அதுக்குள்ள என்ன கூட்டிட்டு போறியே” புலம்ப ஆரம்பித்தாள் சாம்.

“ஷ்…ஷ்… நிறுத்து… பரலோகம் னா சாகறது இல்ல. கடவுள் இருக்கும் இடம்னு அர்த்தம்” வீரா அதட்டினான்.

“அடுத்து என்ன போட்டிருக்கு பாரு.. முக்குறி வழி செல் – அடைந்திடுவாய் சாப விமோசனம்… இந்த மேப்ல மூன்று குறி போட்டிருக்கு.. அந்த வழியா போன நமக்கு சாப விமோசனம் கிடைக்கும்னு போட்டிருக்கு.” வீராவே மீண்டும் கூற.

“அப்போ நாம அடுத்த் அங்க தான் போகணும்.” வருண் அடித்துக் கூறினான்.

“என்…னது!!? இந்த மேப் லயே எங்கயோ உயரமான இடத்துல இருக்கு. அங்க எப்படி போறது…!!?” சாம் மலைத்துப் போனாள்.

“மலை ஏற தான வந்த…வா…!!” வீரா தலையில் குட்டினான்.

“அப்போ இந்த மம்மீஸ்க்கு என்ன அர்த்தம்?” வருண் குழம்ப,

“ஒருவேளை நாம அந்த மூணு பிளேஸ்க்கும் போனா தெரியும்னு நெனைக்கறேன்.”

“சரி வீர்… நாம கண்டிப்பா போகணும். இப்போ இங்கிருந்து போகலாம்.”

“அப்பாடா.. காலைலேந்து ஒரு நல்ல வார்த்த வாய்ல வந்திருக்கு.. வாங்க வாங்க” முதலில் கிளம்பினாள் சம்ரக்க்ஷா.

மூவரும் கிளம்பி அந்த ராட்ஷசன் குகைக்கு மேலே ஏறி வந்தனர். அந்தக் கல் கதவை மூடிவிட்டு சிறிது தூரம் நடக்க,

“ஒரு நிமிஷம்” வருண் மட்டும் வந்து மீண்டும் அந்தக் கல் குகையைத் திறந்து பார்க்க, அவனால் அது முடியவில்லை.

“என்ன ஆச்சு வருண். எதாவது உள்ள விட்டுட்டியா?” வீரா அருகில் வர,

“இல்ல வீர். அந்த ஓலைல எழுதி இருந்த மாதிரி, உன்னால மட்டும் தான் இந்தக் கதவைத் திறக்க முடியுமான்னு செக் பண்ணேன். உண்மை தான் என்னால முடியல.”  தன் வலிமையால் முடிந்த வரை திறந்து பார்க்க, முடியாமல் நின்றான்.

“வீர் நீ ட்ரை பண்ணு.” சாம் சொல்ல,

சிரமமே இல்லாமல் சாதாரண பிளாஸ்டிக் கதவைத் திறப்பது போலத் திறந்தான்.

“பார்றா…” என அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

‘இங்கு நடப்பது எதுவும் சாதரனமில்ல!!’ வீரா எண்ணிக் கொண்டான்.

               ***

பொழுது விடியும் சமயம் அதிகாலை நான்கு மணியளவில் எழுந்து கிணற்றடியில் குளித்துவிட்டு வல்லய்யா பூஜையில் லயித்து விட்டார். அவருக்கு மனம் சமன்பட வில்லை.

‘ஒரு பிரம்ம ராட்ஷசன் இப்போது எப்படி திடீரென முளைத்தான்?! இத்தனை நாள் இவர்களுக்கும் அவனுக்கும் சம்மந்தம் இருப்பதாக ஒரு சமிக்கை கூட காட்டவில்லை. என் முன்னோர்களுக்கும் இது பற்றித் தெரியவில்லையே! இப்போது நான் இதில் என்ன செய்வது?!’

“பகவதி அம்மா!! எனக்கு வழிகாட்டு..” என கற்பூரத்தை உள்ளங்கையில் ஏற்றி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்படி கற்பூரம் ஏற்றி அவர் கேட்கும் கேள்விக்கு அவருக்கு எப்போதும் பதில் கிடைக்கும். ஆனால் இன்று கற்பூரம் ஏற்றியும் பதில் கிடைக்கவில்லை.

பலமுறை ஏற்றியும் பலனில்லை.

உடனே வேறு வழியில் முயற்சிக்க, “வருண் என்பவன் யார்?” என்ற கேள்வியை முன் வைக்க,

அதற்கான பதிலாக அந்த கற்பூர நெருப்பில் இரண்டு வெள்ளி மான்கள் தெரிந்தது.

“வெள்ளி மான்களுக்கும் வருனுக்கும் என்ன சம்மந்தம்?” பொறுமை இழக்காமல் மீண்டும் கேள்வியை கேட்க,

இம்முறை ஏற்றிய கற்பூரம் அணைந்தே போனது.

தன்னுடைய பூஜையின் பலன்களை உருவேற்றிய மந்திர மையை எடுத்து கண்களில் தீட்டிக் கொண்டார். தன் முகத்துக்கு நேரே இரு கைகளாலும் சூரிய முத்திரை சந்திர முத்திரை, வேத முத்திரை என பல கோணங்களில் முத்திரை காட்டி, கடவுளை அழைக்க,

அவருக்கு பதில் சொன்னது.

“குல தெய்வத்தை எடுத்துச் செல்பவன். ஆனால் அதனுடைய இப்போதைய அதிபதி காண்டீபன். வருணை பாதுகாக்கும் கவசம் வெள்ளி மான்கள். அவை வெறும் மான்கள் அல்ல.”

இப்படி பதில் வந்ததும் உள்ளுக்குள் கலக்கம் பிறக்கவே செய்தது வல்லய்யாவிற்கு.

“பிரம்ம ராட்ஷசனைப் பற்றி எப்படி அறிந்து கொள்வது?” அடுத்த கேள்வியையும் கேட்க,

“காண்டீபனை உண்மை அறிய வை. அப்போது விளங்கும் ராட்ஷசனின் ரகசியம்.”  இந்த பதில் ஓரளவு அவருக்கு தைரியத்தை வர வைத்தது.

நன்றி கூறி, இப்போது வீராவின் ஆபத்து எப்படி வரும், அவனுக்கு ஆயுள் பலம் கூட்டுவது பற்றி மனதில் நினைக்க.

“அவன் ராட்ஷசனின் கண்ணைத் திறந்து விட்டான். இனி அவனைக் காக்க யாராலும் முடியாது.” ஆவேசமாக பதில் கிடைத்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!