Kandeepanin Kanavu-17

Kandeepanin Kanavu-17

                                         காண்டீபனின் கனவு 17

 

சாம் வீரா மேல் இருந்த கோபத்தில் முதலில் ஊருக்கு சொல்லாமல் கிளம்பி விடவேண்டும் என முடிவெடுத்து தன் பேக்கிங்கை செய்து கொண்டிருந்தாள். ஊருக்குச் சென்றுவிட்டால், பிறகு அவன் வருத்தப் படுகிறானா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வது என யோசிக்க, தன் மனதை மாற்றிக் கொண்டு,

“கில், எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணணும்.” என்றாள்.

“நீ இங்கிருந்து தனியா போகாம இருந்தா என்ன ஹெல்ப் வேணா நான் செய்யறேன்.” கில் உத்திரவாதம் கொடுக்க,

“நான் எங்கயும் போகல. ஆனா வீரா வரப்ப நான் ஊருக்குக் கிளம்பிப் போயிட்டேன்னு நீங்க சொல்லணும். அபோ அவன் எப்படி ரியாக்ட் பண்றான்னு பாத்து தான் நான் இங்கயே இருக்கறதா இல்லையான்னு டிசைட் பண்ணுவேன். ஓகேவா?” அவளின் அந்த டீலிங் கில்பர்ட்டுக்கு சிரிப்பை வரவைக்க,

“ஓகே..கேரியான்.. நான் சொல்ல மாட்டேன். பட் கண்டிப்பா வீர் வருத்தப் படுவான். ஹி இஸ் சோ கேரிங். உனக்காக நெறையா பாத்து பாத்து செய்யறான். நான் பாத்திருக்கேன்.” வீருக்காக வக்காலத்து வாங்கினார்.

“அந்த ராஸ்க்கல் கேரிங் தான். இல்லன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா என்னை இன்னிக்கு விட்டுட்டு போனதுக்கு கண்டிப்பா அவன கொஞ்சம் கலங்க வைக்கணும். அவன் வர டைம்ல நான் அந்த கல்லுக்குப் பின்னாடி மறந்சுக்கறேன். அப்பறம் நீங்க உங்க டயலாக்க ஆரம்பிங்க.” ஐடியா கொடுத்தாள்.

“வீர் நீ பாவம்.!” கில் பரிதாபப்பட்டார்.

“நீங்க இரக்கப் படற அளவுக்கு அவன் வொர்த் இல்ல..சரி நீங்க வாங்க நாம ஸ்பெஷலா ஏதாவது செஞ்சு சாப்பிடலாம். உங்க கால் இப்போ எப்படி இருக்கு?” சகஜமானாள்.

கில் அவளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

இருவரும் சேர்ந்து மேகி செய்து சாப்பிட, கில் அவளிடம்,

“சாம். ஒரு விஷயம் சொல்லு.”

“என்ன?” என்றாள்.

“மொதல்ல கோவமா கிளம்பறேன்னு சொன்ன.. அப்புறம் இங்கயே ஒளிஞ்சு நின்னு பாக்கறேன்னு சொன்ன.. வீர் உன்ன விட்டு போயிட்டான்னு கோவம் இருந்தாலும், உனக்கு அவன விட்டுப் போக மனசு வரல இல்ல?” கில் பேச்சுவாக்கில் ஏதோ கேட்டு விட,

சம்ரக்க்ஷாவிற்கு இத்தனை நேரம் அப்படித் தோன்றவில்லை. ஆனால் கில் கேட்ட பிறகு தான், ஒருவேளை தன் மனது அவனை விட்டுப் போக விரும்பாமல் தான் உடனே அப்படி ஒரு மாற்று முடிவை செய்ததோ என யோசிக்க வைத்தது.

“என்ன சாம் யோசிக்கற..?”

“ஒண்ணுமில்ல. வீர்-அ வருத்தப்பட வைக்கணும்னு கோவத்துல யோசிச்சேன் தான். ஆனா, ஏன் அவன விட்டு போகமா இங்கயே இருக்கணும்னு நெனச்சேன்னு எனக்கே தெரியல.” மனதில் இருந்ததைக் கூற,

“மே பீ யூ லவ் ஹிம்!” கில் கூற,

“ச்ச ச்ச..அப்படி எல்லாம் இல்ல” மறுத்தாள்.

“ம்ம்… அப்ப ஓகே. பட் நீங்க ரெண்டுபேரும் நல்ல பேர்.” என்றார்.

சிரித்து சமாளித்தவள், வீருக்கும் தனக்குமான உறவை சிந்தித்துப் பார்க்கலானாள்.

அவன் இல்லாமல் ஒரு நாள் கூட அவள் வாழ்வில் சென்றதில்லை என்று சொல்லும் அளவு, அவனோடு சண்டை போட்டாலும், அவன் இல்லாமல் அவனைக் காணாமல் அவள் உறங்கியதில்லை.

மனம் என்னென்னவோ சிந்திக்க ஆரம்பிக்க, ‘நோ நோ… எதையும் தப்பா யோசிக்கக் கூடாது’ என உணவில் கவனம் செலுத்தினாள்.

கில்லுடன் சேர்ந்து அங்கே மீன் பிடித்து பொழுதைக் கழித்தாள். ஆனாலும் வீர் என்ன செய்து கொண்டிருப்பான் என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

வீர் அங்கே செய்வதறியாது குழம்பிக் கொண்டிருந்தான்.

தாத்தா ஊரில் தன் பேரனை நினைத்து அவனைக் காக்க வேண்டும் என இரவில் பூஜை செய்து கொண்டிருந்தார்.

கோடாங்கிக்கு எந்த வழியில் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பது என புரியவில்லை. அவர் சோழியை உருட்டி பலன் தேடிக் கொண்டிருந்தார். சட்டென அவர் மனதில் ஒரு யோசனை பிறக்க,

வீரின் பிறப்புக் கணக்கையும், சம்ரக்க்ஷாவின் பிறப்புக் கணக்கையும் எடுத்துப் பார்த்து சற்று தெளிந்தார்.

தாத்தாவிடம் மெதுவாக, “ஐயா, உங்க பேத்திக்கும் பேரனுக்கும் கல்யாணம் செய்து வைக்கிற எண்ணம் எதாவது இருக்கா?” என்றார்.

“என்ன சொல்ல வர வல்லா?” தாத்தா சிரிக்க,

“சொல்லுங்க ஐயா, அப்படி எதாவது யோசனை இருக்கா?” வல்லையா விடாமல் கேட்க,

“இது வரை அப்படி எந்த யோசனையும் இல்ல. அவங்க மனசுக்குப் பிடிச்சு போச்சுனா அதுக்கும் எந்தத் தடையுமில்ல. ஏன் கேட்கற?”

“வீர் ஆயுள உங்க பேத்தியால தான் நீட்டிக்க முடியும். அவளோட பிறப்பு கணக்கு, தன் புருஷனை எமன் கிட்ட இருந்து கூட மீட்டு வர கூடியது. இப்படி பட்ட ஒரு பொருத்தம் தான் இப்போதிக்கு வீராவுக்கு தேவை. உங்க குடும்பத்துக்கு வீரா தேவை. ஆக, வீராவை எத்தனை சீக்கிரம் உங்க பேத்திய கல்யாணம் பண்ணிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செஞ்சுக்க சொல்லுங்க. யோசிக்காதீங்க.” வல்லய்யா தன் கணக்கைக் சொன்னார்.

“அவங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்க வேண்டாமா?” தாத்தா ஒரு நொடி சிந்திக்க,

“கூடவே ஒன்னா வளந்தாங்கன்னு யோசிக்காதீங்க. சரியான நேரம் வந்தா ரெண்டு பேருக்கும் ஈர்ப்பு தன்னால ஏற்படும். உங்க வீட்டுல இதைப் பத்தி உடனே பேசுங்க.” வல்லய்யா உறுதியாகக் கூறிவிட, மறுநாள் அனைவரிடமும் இது பற்றிப் பேசிவிட முடிவு செய்தார்.

“நான் பேசறேன் வல்லய்யா. வீர் இப்போ போயிருக்க மலைல அவனுக்கு தெரிஞ்சுக்க வேண்டியது எல்லாம் தெரிஞ்சிருமா? அதைத் பத்தி கேட்டியா? இத மறந்தே போயிட்டேன்!” தாத்தா வருத்தப்பட,

“ஐயா, கவலையே படாதீங்க. அவனுக்கான நேரம் இது தான். கண்டிப்பா அவன் பாதி கரைய தாண்டித் தான் இங்க வருவான்.” எதிர்ப்பார்த்த பதிலைக் கூறினார்.

வீரா, அங்கே தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். வருணும் சேர்ந்து அவனுக்காக யோசிக்க,

“வருண் எனக்கு ஒரு யோசனை தோணுது?”

“என்ன வீரா?”

“என்னோட கனவுல தான அவங்க ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொன்னாங்க?!” வீரா சந்தோஷமாகக் கேட்க,

“ஆமா!”

“அப்போ நான் தூங்கினா கனவுல இதுக்கான சொல்யூஷன் கிடைக்கலாம் இல்ல!”

“வெரி குட் ஐடியா!” பாராட்டினான் வருண்.

“சரி நானும் கொஞ்சம் அப்படியே தூங்கறேன்” என்றான்.

வீராவும் வருணும் அந்தக் குளத்தின் அருகிலேயே உறங்கினர். மலை ஏறி வந்த களைப்பும் சேர்ந்து கொள்ள, அதிக நேரம் பிடிக்காமல் தூக்கம் வந்தது.

வீரா நினைத்து போல கனவும் வந்தது.

நிறங்கள் என்பவை உண்மையில் மனித மூளை தனக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் ஒன்று. எல்லா மிருகங்களுக்கும் எல்லா நிறங்களும் ஒரே மாதிரி தெரிவது இல்லை. அது போலத் தான் இப்போது வீராவிற்கும் தெரிந்த நிறங்கள்.

சிறு வயதில் வீரா தன் வீட்டில் அமர்ந்து படங்களுக்கு வண்ணம் அடித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் பச்சை நிறம் தீர்ந்து விட, அவன் மஞ்சளையும் நீலத்தையும் சேர்த்துக் கலக்க அது பச்சையாக மாறியது.

அது போல பச்சையும் நீளமும் சேர்ந்ததால் மஞ்சள் வரும். மஞ்சளும் பச்சையும் சேர்ந்தால் நீலம். இதை அவன் கனவில் கண்டான்.

கனவுகள் பின்பு தொடர்ச்சியாக இல்லாமல் மாறி மாறி வர ஆரம்பித்தது.

சூரிய ஒளி, மற்றும் மண் என குழப்பாமாக இருந்தது.

சிறிது நேரத்திலேயே விழித்துக் கொண்டான். வருண் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க அவனையும் எழுப்பலானான்.

இப்போது நண்பகல் , இன்னும் சிறிது நேரத்தில் அவன் இவற்றைக் கண்டு பிடித்தே ஆகவேண்டும். இல்லையெனில் மலையில் இருந்து இறங்குவது சிரமம்.

“வருண், நாம சின்ன வயசுல பண்ண கலர் மிக்ஸ் அண்ட் மேட்ச் தான் வந்துச்சு கனவுல. மே பீ அதையே செஞ்சு பார்க்கலாம்.” என்றான்.

“எதாவது லிக்விட்-ஆ இருந்தா மிக்ஸ் பண்ணலாம். இந்த பூக்கள எப்படி டா மிக்ஸ் பண்றது.” வருண் குழம்ப,

“ம்ம்..நம்ம வேதிக் முறை தான். ஒரு பூவோட ஒரு இதழ மட்டும் எடுத்து, கசக்கி அதோட சாரை எடுத்து அடுத்த பூவோட சாரோட கலந்து பார்ப்போம்.

ஒன்னு, சப்போஸ் கலந்த கலவை நீலமா மாரிச்சுன்னா, அந்த ரெண்டு பூவும் நீலத்தாமரை இல்ல. ஏன்னா பச்சையும் மஞ்சளும் கலந்தா தான் நீலம் வரும்.

ரெண்டு, ஒருவேளை அது பச்சையாவோ, இல்ல மஞ்சளாவோ  மாரிச்சுன்னா, ரெண்டு பூவுல ஏதோ ஒன்னு நீலம்னு அர்த்தம்.

அப்போ நாம மறுபடியும் அந்த பூவவோட சாரை அடுத்த சாரோட கலந்து பார்க்கணும். சோ, கடைசில எந்த பூக்களோட சாறு நீலமாவே இருக்கோ அது தான் உண்மையான நீலத் தாமரை.

இது வொர்க்அவுட் ஆகும்னு நினைக்கறேன்.” வீரா அழகாக விளக்கம் தந்தான்.

“சரி இது கூட நாம லேப்ல வொர்க் பண்ற மாதிரி கண்டு பிடிக்கலாம். ஆனா நீலக் கல் எப்படி கண்டு பிடிக்கறது?” வருண் அடுத்த கவலைக்குப் போக,

“மொதல்ல இத பார்ப்போம். அடுத்து அதைப் பற்றி யோசிப்போம்.” என்றவன், முதலில் நீலத் தாமரைகளை தனித் தனியே எடுத்து வந்து பிரித்து வைத்துக் கொண்டான்.

வருணும் அவனுக்கு உதவ, இருவரும் அனைத்துப் பூக்களிளுமிருந்து ஒரு இதழை மட்டும் எடுத்துக்கொண்டனர். வீரா சொன்னது போல அந்த இதழில் சிறிது நீரை விட்டு கலந்து பார்க்க, முதல் இரண்டும் நீல நிறத்தில் வந்தது அந்த நான்கையும் ஒதுக்கி விட்டனர்.

பிறகு மற்ற பூக்களையும் அதே போல செய்து பார்க்க, கடைசியில் ஒரே ஒரு பூ மட்டுமே நீலத் தாமரை என்பது தெளிவாக உறுதியானது.

“இங்க இருந்த பூக்கள் எல்லாம் நீல நிறமா இருந்தும், இது ஒன்னு தான் உண்மையான நீலத் தாமரை. ஆச்சரியமா இருக்குல” வருண் கேட்க,

“ஆமா வருண். இந்த கொஞ்ச நாளாவே என் வாழ்க்கைல ஆச்சரியப் படர விஷயங்கள் தான் நடக்குது. சீக்கிரம் அடுத்த வேலையைப் பார்ப்போம்.” காரியத்திலேயே கண்ணாக இருந்தான் வீரா.

அந்தக் குளத்தின் நீரையெல்லாம் அங்கிருந்த ஒரு பெரிய கல்லை வைத்து ஒரு பக்கம் மட்டும் மண்ணை சரித்துவிட்டு, குளத்து நீரை வடித்தனர்.

நீர் வடிந்ததும் குளத்தின் அடியில் பல விதமான நிறங்களில் கற்கள் தெரிந்தது.

“அங்க பாரு! நீலக் கல் இருக்கு” வருண் கூற,

“நோ. கலரை மட்டும் வச்சு எதையும் நம்பாத, நாம இந்த தாமரை விஷயத்துல ஏமாந்த மாதிரி இதுவும் ஒரு ட்ரிக்கா கூட இருக்கலாம்.” வீரா சரியாகச் சொன்னான்.

“அது என்னவோ சரி தான். உன் கனவுல இதைப் பத்தி எதுவும் வரலையா?” வருனின் கேள்வி வீரா வை யோசிக்க வைத்தது.

“இல்ல வருண். சூரிய வெளிச்சம் அப்பறம் மண் , இது தான் வந்துச்சு.” என்றான்.

“இதுவே பெரிய க்ளூ தான்.” வருண் தெளிந்தான்.

“எப்படிச் சொல்ற?” வீராவிற்கு இன்னும் குழப்பமாக இருந்தது.

“பொதுவா இந்த விலையுயர்ந்த கல்லை எல்லாம் பாலிஷ் போட, ஒரு ப்ரைட் லைட் வெச்சு அதை சமன் படுத்துவாங்க. அதுக்கு பிறகு பாலிஷ் போடுவாங்க. அது மாதிரி இதையும் நாம இங்கிருக்கற ஒளில காட்டி, அப்புறம் ஓரிஜினல் கலர்க்கு கொண்டு வரலாம்.” வருண் விளக்கினான்.

“வாவ். சூப்பரா சொல்லிட்ட. அப்படியே செஞ்சு பார்ப்போம்” அங்கிருந்த கற்கள் அனைத்தையும் எடுத்து வெய்யிலில் வைத்துச் சுட்டான். பிறகு அதன் மேல் மணலைக் கொட்டி நன்றாகத் தேய்க்க, அதன் உண்மையான நிறம் வெளிவந்தது.

மற்ற கற்கள் எல்லாம் பச்சை வெள்ளை என நிறம் மாற, ஒரு கல் மட்டுமே நீலமாக மாறியிருந்தது.

“சூப்பர் வீர். நாம சாதிச்சுட்டோம்.” வீராவும் வருணும் மகிழ்ச்சியில்  அணைத்துக் கொண்டனர்.

“பாதி கிணறை தாண்டிட்டோம்” வருண் சொல்ல,

மற்ற கற்களைக் குளத்தில் போட்டுவிட்டு ஒரு மலர், ஒரு கல்லுடன் கீழே இறங்கினான் வீரா.

அவன் வரவிற்காக, இல்லை இல்லை! அவனைக் கலங்க வைக்கக் காத்திருந்தாள் சம்ரக்க்ஷா.

தாத்தா அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை ஊருக்கு அழைத்துப் பேச முடிவு செய்து, போன் செய்து உடனே வருமாறு கூற, அனைவரும் கிளம்பினர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!