Kandeepanin Kanavu-35-final

                       காண்டீபனின் கனவு 35

 

   கிராமத்து வீட்டை விட்டு அனைவரும் தங்களின் நகரத்து வீட்டிற்குத் திரும்பினர். தாத்தாவின் பிரிவு அவர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தினாலும், பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு,

தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.

வீரா எப்போதும் போல தனது அறையில் இருந்துகொள்ள, சாமும் தன் அறையிலேயே முடங்கினாள்.

வேதா இதை கவனித்து, இருவருக்கும் முறையே நடக்க வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை ஏற்பாடு செய்ய சுஜாதாவுடன் சேர்ந்து திட்டம் போட்டார்.

தாத்தா இறந்ததை விட, அந்த சமயத்தில் தான் காண்டீப வில்லின் பின்னால் சென்றது வீராவின் மனதை பெரிதும் பாதித்து இருந்தது. அந்த நேரத்தில் தன் போக்கை நினைத்து வெட்கிக் கொண்டிருந்தான்.

அதற்கும் மேல் தன் மீது அன்பு வைத்து தன்னிடம் மன்றாடிய சாமை, அன்று தான் தாலி கட்டிய தன் மனைவியை,  இறக்கமில்லாமல் தள்ளி விட, அது அவளின் கன்னத்தில் அடியாக விழுந்து அவள் மயங்கிச் சரிந்தது அவனை ஒவ்வொரு நிமிடமும் கூறு போட்டுக் கொண்டிருந்தது.

அவளை இனி எப்படிப் பார்ப்பது என்று வெளியே வருவதையே தவிர்த்தான்.

அவள் இல்லாத நேரம் வந்து உணவு உண்டான். மற்றபடி அறைக்குள்ளேயே சிறை இருந்தான்.

சம்ரக்ஷாவோ வேறு மாதிரி கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

தன்னை அடித்தது கூட அவளுக்குப் பெரிதாகப் படவில்லை. ஆனால் அதன் பிறகு ஒருமுறை கூட தன்னிடம் அவன் வந்து பேசவில்லையே. ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்று வருந்தினாள்.

அவனுக்குள் அர்ஜுனன் என்ற உணர்வு வந்த பிறகு தான் காதல் வந்தது. அது போனதும் தன் மீதிருந்த காதலும் போய்விட்டதோ என்று கவலைப்பட்டாள்.

அவனுக்குப் பிடித்தது போல புடவையும் பூவும் தினமும் வைத்துக் கொண்டாள். ஆனால் பார்ப்பதற்குத் தான் அவன் வெளியே வருவதே இல்லையே என்று எப்போதும் போல ட்ராக் பேன்ட் டிஷர்ட் அணிந்து தன் அறைக்குள் அவளும் முடங்கினாள்.

இதைக் கவனித்த பெற்றவர்கள் எப்படி சும்மா இருப்பது. அதனால் திட்டத்தைப் போட்டனர்.

வீரா சாப்பிட வரும் போது,

“இன்னிக்கு சயந்திரம் குளிச்சுட்டு பட்டு வேஷ்டி கட்டிட்டு உன் பொண்டாட்டிய கூட்டிட்டு கோயிலுக்குப் போயிட்டு வா வீரா. வேண்டுதல் இருக்கு. ரெண்டு பேரும் போய் அர்ச்சனை பண்ணிட்டு நான் குடுக்கற பிரசாதத்த அங்கேயே இருந்து வரவங்களுக்கு குடுத்துட்டு வாங்க. புரியுதா..?” கட்டளையிட்டார் வேதா.

“அம்மா நீங்களே போங்க. நான் எங்கயும் போகல.” கைகழுவ எழுந்தான்.

“இத நீங்க தான் செய்யணும்னு தாத்தா என்கிட்ட சொன்னாரு. அப்பறம் உன் இஷ்டம்.” தாத்தாவை இழுத்துவிட்டால், தன்னால் வழிக்கு வருவான் என்று உணர்ந்தே கூறினார்.

“தாத்தா வா.. சரி நான் போறேன்.” உடனே சம்மதிக்க,

“நீ மட்டும் இல்ல. நீயும் உன் பொண்டாட்டியும்.” அவன் கண்ணைப் பார்த்துக் கூற,

“ம்ம்..” ஒருவாறு ஒத்துக்கொண்டான்.

சுஜாதா தன் மகளை சம்மதிக்க வைக்கச் சென்றார்.

“அம்மா என்ன விட்ருங்க. எனக்கு வெளிய போற மூட் இல்ல.” அவர் மடியிலேயே தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

“என்ன நீ..? எப்பவும் கல கல ன்னு இருப்ப..இப்போ என்ன வந்துச்சு.?” அவளின் தலையை வருடியபடி கேட்க,

“அம்மா, உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப்போறேன். வீரா என்கிட்டே பேசக் கூட மாட்டேங்கறான். என்னை வேணும்னே அவாய்ட் பண்றான். இங்க வந்த பிறகு அவன நான் ஒரு முறை கூட பார்க்கல. அவனும் என்னைப் பார்க்கனும்னு நினைக்கல. இப்போ மட்டும் நான் எப்படி அவன் கூட கோயிலுக்குப் போவேன். நோ. முடியாது.” முறுக்கிக் கொண்டாள்.

“அவனே உன்கூட வர ஒத்துக்கிட்டான். நீ இப்போ அடம் புடிச்சா என்ன பண்றது. உனக்காக அவன் எவ்வளவோ விட்டுக் குடுத்திருக்கான் சின்ன வயசுலேந்து. இப்போ அவனுக்காக நீ கொஞ்சம் இறங்கிப் போனா என்ன? அவனுக்குத் தாத்தா விட்டுப் போனது மனச உருத்தது. அதை நீ தான சரி பண்ணனும். அடம் புடிக்காம குளிச்சுட்டு கிளம்பற வழியப் பாரு.” என தேற்றி விட்டுச் சென்றார்.

தன் அறைக்குள்ளேயே கிடந்து யோசித்தவள், அவனுடன் தான் முதல் முறையாக மனைவி என்ற உரிமையுடன் செல்லப் போகும் முதல் வாய்ப்பைத் தவற விட சிறிதும் மனமின்றி, குளித்து அழகான பட்டுப் புடவை கட்டித் தயாரானாள்.

புடவை அணிய அவனுக்காகப் பழகிக் கொண்டாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று அணிவது அவளுக்கு மகிழ்ச்சியைத் தர, அவனுக்குப் பிடிக்குமா என்று பார்த்துப் பார்த்து அலங்கரித்துக் கொண்டாள்.

தங்க ரதம் போல அழகாக வந்தவளின் தலையில் வேதா மல்லிகைச் சரத்தை சூட்டினார்.

“என் கண்ணே பட்டுடும்.” அவளின் கன்னம் வழித்து தன் கண்ணிலிருந்த மையை எடுத்து அவளது காதின் கீழ் வைத்தார்.

“அத்தை.. வீரா…” என சாம் நிறுத்த,

“அவன் அப்போவே கிளம்பி வந்து உனக்காகத் தான் காத்திருக்கான்.” அழித்துச் சென்றார்.

வீராவை பட்டு வேட்டியில் கண்டவள், ‘பீலிங்க்ஸ்ல இருந்தாலும் இவனுக்கு கிளாமர் மட்டும் குறையல.எப்படி என்னை ரசிக்க வைக்கறான். ராஸ்கல். இரு டா உன்னை வச்சுக்கறேன்’ மனதிற்குள்  கருவிக் கொண்டு அவன் எதிரே வந்து நின்றாள்.

அவனோ அவளை ஏறிட்டும் பார்க்காமல், “அம்மா பிரசாதம் தரேன்னு சொன்னீங்களே..!” என எழுந்து நின்றான்.

சாமிற்கு எரிச்சலாக வந்தது. அவன் தன்னை நிமிர்ந்தும் பாராமல் நடந்து கொண்டதற்குப் பழிவாங்க,

“அத்தை நான் கார்ல இருக்கேன்.” விறுவிறுவென நடந்து சென்று காரில் அமர்ந்து கொண்டாள்.

வேதா பிரசாதம் எடுத்து வரச் சென்றதும், கோபமாகச் செல்லும் தன்னவளின் அழகை பின்னால் இருந்து ரசித்தவன்,

‘என் மேல இன்னும் உனக்குக் கோபம் குறையலையா..!’ ஏக்கப் பெருமூச்சில் தெரிவித்தான்.

வீரா அவளைப் பார்ப்பதைக் கண்டு கொண்டு கொண்டார் வேதா. இருவரின் மனதையும் எளிதில் படித்தவர், அவர்களைச் சேர்த்து வைத்து ஆனந்தப் பட விரும்பினார்.

“வீரா, கோயில்ல பூசாரி குங்குமம் குடுப்பாரு. அதை சாம்ரக்ஷாவுக்கு நீ தான் வெச்சு விடனும். முதல் முறை கோயில் போறீங்க. அதுனால, மறக்காம இதை பண்ணனும். ஞாபகம் வெச்சுக்கோ. அவளை தாலில குங்குமம்  வெச்சுக்க சொல்லு. ரெண்டு பேரும் சேர்ந்து பிரசாதம் குடுத்துட்டு கொஞ்ச நேரம் கோயில்ல உக்காந்துட்டு வாங்க. அப்பறம் வீட்ல சில சடங்கு இருக்கு. எட்டு மணிக்குள்ள வந்துடுங்க.” என அனுப்ப,

“ஆமா என் முகத்த கூட பாக்காம போய் கார்ல உட்காந்துட்டா, எங்க அவளுக்கு குங்குமம் வைக்க,” முனங்கிக் கொண்டே காருக்குச் சென்றான்.

வழக்கம் போல முன் சீட்டிலேயே அமர்ந்திருந்தவளைக் கண்டதில் மனதில் சிறு புன்னகை தோன்றவே செய்தது. முன் சீட்டில் அமர்ந்து கொண்டு அவள் முன்பு செய்யும் சேட்டைகள் அனைத்தும் நினைவிற்கு வர, மனம் சற்று லேசானது.

பிரசாதத்தை டிக்கியில் வைத்து விட்டு வந்து காரை எடுத்தவன், மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை. அவளுமே வெளியில் பார்வையை செலுத்திக் கொண்டு அமர்ந்திருக்க,

அவள் எப்போதும் தொனதொனப்பது போல இன்று எதுவும் பேசாமல் வந்தது உறுத்தியது. அவளது மல்லிகையின் மனம் வேறு அவன் இதயத்தைத் தீண்டியது. அதை சுவாசித்தபடி காரை ஓட்டினான்.

கோவில் வரும் வரை இருவரும் பேசவில்லை. வண்டியை நிறுத்திவிட்டு இறங்க, அவளிடம் பிரசாத்தை கொடுத்து,

“உள்ளே எடுத்துட்டு போ. நான் அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வரேன்.” என்றான்.

பதில் ஏதும் சொல்லாமல், அவள் அதை வாங்கிக் கொண்டு சென்றாள்.

அப்போது தான் அவளை முழுதாகப் பார்த்தான். தனக்குப் பிடித்தார்ப் போல புடவை கட்டி, சரம் சரமாக மல்லிகை வைத்து அவளது வட்ட முகத்திற்கு ஏற்றார் போல சிறிய திலகமிட்டுக் கொண்டு, துரு துரு கண்களும் சிடு சிடு முகமும் அவனை வெகுவாகக் கவர்ந்தது.

‘முகத்தைப் பார்த்தா கோவமா இருக்கற மாதிரி தெரியலையே..’ சிந்தித்துக் கொண்டே அர்ச்சனைக் கூடை வாங்கிக் கொண்டு வர,

அவனுக்காக உள்ளே செல்லாமல் வாயிலிலேயே நின்றாள்.

அது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. பிடிவாதத்தை விட்டு “போலாமா?” அவளிடம் நின்று கேட்க,

“ம்ம்” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள். இருவரும் சேர்ந்து கோவில் படியைத் தாண்ட, சரியாக மணியடித்தது.

“நல்ல சகுனம்” எதிரில் வந்த ஒருவர் சொல்லிக் கொண்டு போக இருவரின் மனமும் நிறைந்தது. நேராக சென்று அர்ச்சகரிடம் தட்டை நீட்ட, அவரோ

“ராசி நட்சத்திரம் சொல்லுங்க..” என்றார்.

வீரா தெரியாமல் அவளைப் பார்க்க, அவளுக்கும் இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்,

“இருங்க அம்மாகிட்ட கேட்கறேன்…” தன் பையிலிருந்த கைபேசியை எடுக்க, அதற்குள் சம்ரக்ஷா

“வீரேந்திரன் ..”ஆரம்பித்தது ராசி நட்சத்திரம் பின் தன்னுடைய ராசி நட்சத்திரம் கூற, பிரமித்துப் போனான் வீரா.

‘இவ எப்படி இப்படி மாறினா..’ இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவளுக்கு அருகில் நின்று மனமுருகி கடவுளை வேண்டிக் கொண்டான்.

‘என் தாத்தாவுக்கு நான் கடசியா செஞ்சது துரோகம். ஆனா அப்போ நான் சுயநினைவோட இல்லன்னு தான் சொல்லுவேன். இருந்தாலும் என்னை மன்னிச்சிடுங்க. என் சாமுக்கு நான் பண்ண தப்பையும் அவ மன்னிக்கணும். அதுக்கும் நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.’ கண்ணை மூடிக் கொண்டு பலமாக வேண்டிக் கொள்ள,

சம்ரக்ஷாவோ, ‘கடவுளே! என்னோட வீர் எனக்கு வேணும். அவன் முன்ன மாதிரி என்கூட சகஜமா இருக்கணும். எங்க வாழ்க்கை சிறப்பா இருக்க நீங்க தான் உதவனும். ’ வேண்டுதல் வைத்தாள்.

இருவரும் மனதில் தங்களுக்காக வேண்டிக் கொண்டாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். அர்ச்சனை செய்த பிறகு அவர் பூக்கூடையைக் கொடுத்து, குங்குமத்தைக் கையில் கொடுக்க,

அவள் அதை எடுத்து வைத்துக் கொள்ளும் முன்னர்.

“ஹ்ம்ம் ஹூம்..” தொண்டையைச் செரும, என்னவோ எனத் திரும்பினாள் சாம்.

அதை அவன் பயன்படுத்திக் கொண்டு, குங்குமத்தை அவளது வகுட்டில் வைத்தான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனது தொடுகை அவளை ஏதோ செய்ய, கண்ணை மூடி அதை உள்வாங்கிய படி நின்றாள்.

தன்னைக் கண்டு உருகுபவளைஅவன் நன்றாகவே உணர்ந்தான். அவளை உணராதவனா அவன்! அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்படி.

“இதெல்லாம் வீட்ல வெச்சுக்கலாம். இப்போ தாலில குங்குமத்தை வை!” கண்மூடி நின்றவளின் காதில் கிசுகிசுத்து அவளை நடப்பிற்கு கொண்டு வந்தான்.

பட்டெனக் கண்ணைத் திறந்து சுற்றம் பார்த்தவள், தான் நின்ற நிலையை நினைத்து வெட்கினாள்.

“ஹ்ம்ம்..” என அவனுக்கு அழகு காட்டி மறுபக்கம் திரும்பி தாலிக்குப் பொட்டு வைத்துக் கொண்டாள்.

அவளின் அந்தச் சிறு செய்கை அவனது இதழோரம் புன்னகையை வர வைக்க, இருவரும் சேர்ந்து சென்று பிரசாதம் விநியோகம் செய்தனர்.

அதைப் பெற்றுக் கொண்ட சில முதியவர்கள், சாமின் புதுத் தாலியை கவனித்து புதிதாகத் திருமணமானவர்கள் எனத் தெரிந்துகொண்டு,

“சீக்கிரமே புத்திர பாக்கியம் கிடைக்கட்டும்.”

“சந்தோஷமா வாழுங்க”

“கொழந்த குட்டியோட ரொம்ப காலம் வாழனும்”

வகை வகையான வாழ்த்துக்களை வழங்கிச் சென்றனர்.

அது இருவருக்குமான வாழ்த்து. அவர்களது வாழ்வைப் பற்றியது. எதிர்காலத்தைப் பற்றியது. அவர்கள் சேர்ந்து நடத்தப் போகும் இல்லற வாழ்வின் சுகத்தைப் பற்றியது. அந்த வாழ்த்துகளை இருவரும் சேர்ந்து பெரும்போது மீண்டும் பழைய நினைவுகள் வந்து மோதியது.

இருவருக்கும் மனதில் இருந்த சிறு சிறு பிணக்கங்கள் இப்போது லேசாக மறையத் தொடங்கி இருந்தது.

கடைசியாக, அனைவர்க்கும் விநியோகம் செய்தது போக, மீதம் ஒரே ஒரு கரண்டி பிரசாதம் மீதி இருக்க,

“அதை நீங்க பகிர்ந்து எடுத்துக்கோங்க” என அந்தக் கோயில் பூசாரி கூறினார்.

அதை எடுத்தவள் வீராவின் கையில் பாதி கொடுத்து மீதியைத் தான் உண்டாள்.

இருவரும் லேசான மனதோடு மீண்டும் வீடு வந்து சேர்ந்தனர்.

அவரவர் அறைக்குச் செல்ல இருந்தவர்களைத் தடுத்தார் சுஜாதா.

“சடங்கு இருக்குன்னு சொன்னோமில்ல. உங்க இஷ்டத்துக்கு போனா எப்படி.?” ஹாலிலேயே மடக்க,

“ராத்திரில என்னம்மா சடங்கு?”அலுத்துக்கொண்டாள்.

“ம்ம்ம்.. இது ராத்திரி சடங்கு தான்.” சுஜாதா அவளை சோபாவில் அமர வைத்தார்.

வீராவிற்கு விஷயம் புரிந்துவிட்டது.

இருவரையும் அருகே அமர வைத்து பால் பழம் கொடுத்து, சந்தனக் குங்குமம் வைத்து விட்டார் வேதா.

“ரெண்டு பேரும் மேல இருக்கற ரூம்க்கு போங்க.”

“என்ன.. ரெண்டு பேருமா?” சாம் அதிர்ச்சியாக,

எதுவும் சொல்லாமல் முதலில் எழுந்து சென்றான் வீரா.

“இப்படி என்னைப் பிடிக்காம கழட்டி விட்டுட்டு போறான். அவன் கூட என்னைப் போக சொல்றீங்க..” சிறு பிள்ளை போல அங்கேயே பஞ்சாயத்து வைத்தாள்.

“அவன் முதல்ல போகட்டும். நீ இத எடுத்துட்டு இப்போ போ” கையில் ஸ்வீட் மற்றும் பழங்களும், கூடவே பால்செம்பும் கொடுத்து அனுப்ப,

சாமுக்கு அப்போது தான் அது முதல் இரவு என உரைத்தது.

“நான் மாட்டேன்.” அங்கேயே அமர்ந்தாள்.

“ நீ இப்படி சொன்னா கேட்க மாட்ட. இரு அவனையே வந்து தூக்கிட்டுப் போகச் சொல்றேன்.” சுஜாதா ஒரே போடாக போட,

“மிரட்டுறீங்களா…! நானே போறேன்.” என எழுந்து சென்றாள்.

அவனுடைய அரை தான் அது. மிகவும் எளிமையாக அலங்கரித்து இருந்தனர்.  நான்கு பக்கமும் பூவைத் தொங்க விட்டு, ரூம் ஸ்ப்ரே மட்டும் அடித்து, ஏசி ஆண் செய்து மிகவும் ரம்யமாக இருந்தது.

மேலே சென்றவன், அவளுக்காகவே காத்திருந்தான்.

அவள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர, கதவின் அருகில் நின்றவன்,

“கதவ தட்டிட்டு வர மாட்டியா..”என்றான்.

அவனைத் திரும்பிப் பார்த்தவள், ஒரு நொடி உள்ளூர நடுகித் தான் போனாள். ஏனெனில் அவன் வேட்டி மட்டும் அணிந்து பட்டு சட்டையை கழட்டி வைத்திருந்தான்.

“உன் ரூம்க்கு நான் ஏன் தட்டிட்டு வரணும்.” மிடுக்காகவே பதில் சொல்ல,

“அப்போ இது நம்ம ரூம்ம்னு சொல்லு.” அவளை நெருங்கி நின்றான்.

தட்டை கையிலேயே வைத்திருந்தவள், அதைப் போட்டு விடுவோமோ என்ற பயத்தில் இருக்க,

சட்டென அருகில் இருந்த டேபிளில் அதை வைக்க முயன்றாள்.

அதை அவளிடமிருந்து வாங்கி அவனே வைத்துவிட்டு, அவளை இருக்க அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பு , சம்ரக்ஷாவிற்கு அவனின் மனநிலையை நன்றாகவே உணர்த்தியது.

அவனுக்கு அது இத்தனை நாள் பிரிவற்கு மிகவும் தேவையாகவே இருந்தது. அவளுக்கும் அப்படித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவளை விடுவித்தவன்,

“என்னை மன்னிப்பியா பொண்டாட்டி…” அவளின் கன்னம் தாங்க,

அவன் கையைப் பற்றிக் கொண்டு,

“எதுக்கு மன்னிப்பு..?” என்றாள்.

“நான் உன்னை அடிச்சுட்டேன்ல..” அவனது வாயை தன் கையால் மூடியவள்,

“அது உனக்கே தெரியாம நடந்த ஒன்னு. அதுக்கு ஏன் நான் கோச்சுக்கணும்.” தோளைக்குலுக்கினாள்.

“இல்ல டா. அது தான் ரொம்ப உறுத்தின விஷயம். தாத்தாவைக் கண்டுக்காம நான் போனது வேற ஒரு பக்கம் குத்திட்டே இருக்கு. அடுத்து உன்னை அடிச்சது.

என்னை மன்னிச்சிடு டா.” கண்கள் பணிக்க அவள் முன் நின்றான்.

இத்தனை நாள் அவன் மேல் இருந்த சிறு கோபமும் காணமல் போனது.

“ஹே.. என்ன இது. என் வீராவா இது? எனக்கு உன் மேல கோபம் இருந்துச்சு. ஆனா அது நீ என்னை அடிச்சதுக்காக இல்ல. அதுக்குப் பிறகு என்னை நீ ஏறெடுத்தும் பார்க்கல. அதுக்குத் தான்.” சிணுங்கினாள்.

“அதுனால தான் டா உன்னை ஃபேஸ் பண்ண முடியாம இருந்தேன். இல்லனா… இந்நேரம்” என நிறுத்த

“இந்நேரம்…?!” அவளும் அவன் வாயிலிருந்து வருமென எதிர்ப்பார்க்க,

வார்த்தைகளால் அல்லாமல் அவனது உதடுகளால் பதில் தந்தான்.

அவளது நெற்றி, கண் , கன்னம் என சர மாறியாக முத்த மழை பொழிய,

அவள் திண்டாடிப் போனாள்.

“போதும் போதும்…” அவனுக்கு ப்ரேக் போட்டு,

“நான் உனக்காக எத்தனை நாள் புடவை கட்டி பூ வெச்சு இருந்தேன் தெரியுமா. ஆனா நீ நான் இல்லாதப்ப வரதும் போறதுமா இருந்த அதான் நான் மறுபடியும் என் டிஷர்ட் க்கு மாறினேன்.” என்றாள்.

“அஜ்ஜிஜோ..செல்லம் எனக்காக புடவை கட்டினாளா… மிஸ் பண்ணிட்டேனே. ஆனா இன்னிக்கு மொத்தமா செத்து வெச்சு உன்ன ரசிச்சேன் டி. கார்ல வரப்ப மல்லிகை வாசன என்னை பாடா படுத்திடுச்சு. அப்போவே நான் பாதி காலி. எப்படியும் உன்ன இன்னிக்கு சமாதனம் பண்ணிடனும்னு இருந்தேன். ஆனா என் செல்லத்துக்கு கோபமே இல்லையே. தேங்க்ஸ் டி பொண்டாட்டி” அவளது கழுத்தில் ஒரு முத்தம் வைத்தான்.

அவனது வெற்று மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“நான் மட்டும் என்ன, உன்னை இன்னிக்கு பட்டு வேட்டில பாத்து  எப்படி சைட் அடிச்சேன் தெரியுமா.” அவன் மார்பில் பதில் முத்தம் வைத்தாள்.

“ஹ்ம்ம் ஹ்ம்ம்…”

“அப்போ நம்ம ப்ராப்ளெம் சால்வ்ட்” என அவளது முந்தானையை தன் வசமாக்கி தூர எறிந்தான்.

திடீர் தாக்குதலில் கதிகலங்கியவள், மீண்டும் அவன் மார்பிலேயே தஞ்சம் புக,

அவளது பூ முகத்தை தாங்கி அவளது இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான்.

அவளும் அவனுக்கு வாரி வழங்க, நீண்ட நேர தேன் எடுப்பிற்குப் பிறகு அவளைத் தூக்கிக் கொண்டு மஞ்சத்தை அடைந்தான்.

அவள் முகத்தை மூடிக்கொள்ள, பாதி தெரிந்த அவளது சிவந்த உடலை கைகளால் அளந்து, இதழ்களால் சுவைத்தான்.

அவளது கூந்தலின் மல்லிகை அவனை மேலும் அழைக்க, நேரம் பார்த்து அவளது ஒவ்வொரு உடைக்கும் இடைவெளி விட்டு விடுதலை அளித்து, ரசித்துச் சுவைத்தான்.

“இனி நீ எனக்கு மட்டுமே சொந்தம்” என அவளின் மனதிற்கு புரியவைத்தான்.

அவளும் அவனை தணங்கு தடையின்றி காதலுடன் ஏற்றுக்கொள்ள, அங்கே அவர்களது கனவு வாழ்வு சுகமாக தொடங்கியது.

அவர்களது அந்த இனிய வாழ்வின் அடையாளமாக அடுத்த மாதமே அவள் கருவுற்றாள்.

அந்தச் செய்தியை அறிந்த குடும்பம் அனைத்தும் மகிழ்ச்சியில் திளைக்க, வீரா ஆனந்தக் கூத்தாடினான்.

தாத்தாவே தனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென எண்ணியிருந்தான். அதற்கு ஏற்றார் போல அன்று இரவு அவனது கனவில் தாத்தா வந்தார்.

அவன் செய்தது அவருக்கு எந்த மனவருத்தம் இல்லையெனவும், கண்டீபத்தை ஒப்படைத்ததே நிம்மதி என்று கூற, அவன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த சிறு சஞ்சலமும் தீர்ந்தது.

அடுத்த பத்தாவது மாதத்தில் அவன் நினைத்தது போல ஆண் குழந்தை பிறந்தது.

வீராவும் சாமும் ஆனந்த்தமாக தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் ரசித்து சிரித்து போட்டி போட்டு அன்பைக் காட்டி இன்பம் பெற்றனர்.

 

*******************முற்றும்**************************

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!