Kandharva loga – 25
Kandharva loga – 25
லோகா இப்போது அவள் வசமில்லை. அதீந்த்ரியனின் மாயா வலைக்குள் சிக்கி அவனது மோக தாகத்திற்கு சிறிது சிறுதாக நீர் வார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனும் அவளை ஆரத் தழுவி தனது இத்தனை நாள் காத்திருப்பையும் அவள் மேல் கொண்ட காமக் காதலையும் அப்பொழுதே தீர்த்துக் கொள்ளும் ஆவலில் இருந்தான்.
அவனது கைகள் அவளது இடையைப் பற்றி இருக்க, அவளோ கனவுலகில் எப்படி இருக்கிறோம் என்பதையும் மறந்த நிலையில் இருந்தாள். அவன் அவளை தனது மன்மத ஜாலத்தின் மூலம் வீழ்த்திக் கொண்டிருந்தான்.
அவளுக்கு விஷ்வாவின் எண்ணம் சிறிதும் எழாதவாரு பார்த்துக் கொண்டான். ஒரு வேளை அவள் விஷ்வாவை நினைத்து விட்டால், அதன் பிறகு அவளுடன் தன் காதல் லீலைகளைத் தொடர முடியாமல் போய்விடும் என்பதையும் உணர்ந்தே இருந்தான்.
தான் வடித்த சிலையை விட மென்மையான தேகம் கொண்ட அந்த மலரை கசக்கி விடாமல் பூப்போல கையாண்டான். அவளை மொத்தமாக தன் மடியில் கிடத்தி, தன் ஒற்றை விரல் கொண்டு அவளது தலை, நெற்றி, புருவம் , கண்கள் என ஒவ்வொன்றாய் தீண்டினான் .
மூடிய கண்களை திறக்கவும் முடியாமல் லயித்து விட்டாள் அவள். அவனது தொடுகை அவளை இதுவரை காணாத இன்ப லோகத்திற்கு இழுத்துச் சென்றது.
அவனிடமிருந்து வீசும் மனமும் அவனது ஆண்மை பொருந்திய வலிய கரங்களின் ஸ்பரிசமும் அவளின் பெண்மையைத் தூண்டுவதாக இருந்தது.
எங்கிருந்தோ வந்த மதுரமான இசை அவர்களின் ஆலிங்கனத்திற்கு மேலும் வலுவூட்ட அவள் அதில் கிறங்கினாள். ‘அவன் யார்? எதற்காக இப்படி இருக்கிறோம்?’ எனும் நினைப்பே அவளுக்கு வரவில்லை. அந்த நொடி , அந்த இனிமையை மட்டும் ரசித்தபடி இருந்துவிட்டாள்.
அவன் அப்படி அவளை இருக்கச் செய்து கொண்டிருந்தான்.
அவளது மூடிய கண்களில் தெரிந்த இமைகளை, அவனது செதுக்கிய உதடுகளைக் குவித்து ஊதினான். அவள் லேசாகக் கண்களைத் திறந்து அவனை நோக்க, அவன் விழிகள் காதலைப் பொழிந்தது.
அந்த மன்மத பானத்தை தாங்க முடியாமல் அவள் விழிகள் சொக்கின. அவனோ தனது தீண்டலை விட்ட இடத்திலிருந்து தொடங்கினான்.
அவளது நாசியையும் உதடுகளையும் ரசனையுடன் தன் விரலால் வரைந்தான். அவளது அந்த செவ்விதழ்களை சுவைக்கும் எண்ணத்தை கட்டுப் படுத்த முடியாமல் அவள் இதழ் நோக்கிக் குனிய,
அவளுக்கு ஏதோ உள்ளுணர்வு மெல்ல எழுவது போலத் தோன்றியது.
‘நாம கனவு கான்றோமா? ஏன் இப்படி ஒரு கனவு? யாரிவன்? ஐயோ! இது நல்லதுக்கு இல்லையே!’ அவள் மூளை எதுவோ சொல்ல வருவது போல இருக்க,
அவளது இடையை தன் கையால் வளைத்திருந்தவனுக்கு புரிந்தது, இவளுக்கு ஆழ் மனம் சொல்ல வரும் செய்தி என்னவென்பது. அது அடுத்த கட்டமாக விஷ்வாவை நினைக்கும் முன், சட்டென அவளது கனவைக் கலைத்து அங்கிருந்து விலகினான்.
அப்படி அவள் நினைக்கும் முன்பே அவன் விலகியதால் , மீண்டும் அவளை இதே போன்று சந்திக்கும் வாய்பிருக்கிறது. அவளாக மனதில் ஒருவனை நினைத்தால் தான் அவளை மீண்டும் நெருங்க முடியாது.
அதற்கு அவனே இப்போது விலகி நிற்பது சாலச்சிறந்தது. அவன் இப்படியே இன்னும் எத்தனை முறை பாதியில் விட்டுச் செல்வது?!
அவளுக்காக அவனது நாடி நரம்பெல்லாம் ஏங்க ஆரம்பித்த தருணம்! முகத்தை விரலால் அளந்தாகி விட்டது , இதழால் வருட நினைத்த போது அவளது எண்ணம் எங்கோ செல்லத் தொடங்க, இவன் விலக வேண்டியதாகி விட்டது.
அவனுக்கு எரிச்சல் மிகுந்தது. எவ்வளவு சீக்கிரம் அவளை முழுதாக தனதாக்கிக் கொள்ள முடியுமோ அதை சீக்கிரம் செய்ய எண்ணினான்.
லோகா தனது படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து நடந்த வற்றை யோசிக்கத் தொண்டன்கினாள். அவளுக்கு மீண்டும் அந்த முகம் மறந்து விட்டது. ஆனால் அவனைக் கட்டிக் கொண்டு தான் இருந்தது மட்டும் நினைவில் நிற்க,
‘ ச்சே! நான் எப்படி கனவுல வேற ஒருத்தனை நினச்சேன்! இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா விஷ்வா மேல ஒரு பிணைப்பு ஏற்பட்டுட்டு இருக்கு, இந்த நேரத்துல இன்னொருத்தனை கனவுல ரொமான்ஸ் பண்ணற மாதிரி யோசிச்சு இருக்கேனே! என்ன புத்தி எனக்கு! இன்னொரு தடவை பழைய கனவை நினச்சு படுக்கவே கூடாது.’ தன்னையே திட்டிக் கொண்டாள்.
தன் கைபேசியை எடுத்தவள் அவளும் விஷ்வாவும் சேர்ந்து சமீபத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபி படத்தைப் பார்த்து,
“ சாரி விஷ்வா! இனிமே உன்னை நெனச்சுட்டே தூங்கறேன் சரியா! நீயும் என்ன நினச்சுட்டே படு, நாம கனவுல மீட் பண்ணுவோம்! “ அப்படத்தில் அவளோ நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு ஒரு கண்ணை மடக்கிக் கொண்டு நிற்க , அவள் அருகில் கை கட்டிக் கொண்டு நின்றவனைப் பார்த்து சொன்னாள்.
அவன் முகம் அவளுக்கு ஏனோ மதியம் நடந்ததை நினைவு படுத்த, மீண்டும் அந்தப் புகைப் படத்தை இரு விரல்களால் என்லார்ஜ் செய்து அவனது மீசையை தொட்டாள்.
சிரித்து விட்டு, “ இப்போ கை வெச்சு மூடிக்கோ பாக்கலாம்! சீன் பார்ட்டி! பாத்துப் பாத்து எல்லாம் செய்ய வேண்டியது ஆனா எப்போ பாரு ஒரு கெத்தோடயே சுத்த வேண்டியது! சீக்கிரம் லவ் பண்றேன்னு சொல்லித் தொலை ! குட் நைட் டா ராஸ்கல்!” , கைப்பேசியை தன் நெஞ்சின் மீதே வைத்துக் கொண்டு உறங்கினாள்.
சட்டென விழித்துக் கொண்டான் விஷ்வா. தன்னுடைய சிறு வயதில் அவன் வரைந்த அவளது விழிகளை ஃபிரேம் செய்து அதே இதய வடிவ சிறிய தலையணைக்குள் வைத்திருந்தான். அதை வெளியே எடுத்தவன்,
“ ஹே! என்னடி என்ன தூங்க விடாம படுத்தற. காலைல என்னடா னா மீசைய தொடற, போன்ல ஃபீன்லிங் ஸ்பெஷல்னு சொல்ற, முடியல டி என்னால! அரைகுறையா வந்து வேற கொல்ற, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! ரொம்ப சோதிக்காத, ‘ விஷ்வா என்ன கல்யாணம் பண்ணிக்கோனு’ சொல்லு டி, உன்னை அப்டியே தூக்கிட்டு வந்துடுவேன். சின்ன வயசுல இருந்து உனக்காகவே வெயிட் பண்ணிட்டு இருக்கேன்! சீக்கிரம் என்கிட்ட வந்துடு! என் நெஞ்சுக்குள்ள வெச்சு பூட்டிகறேன். வெளில விடவே மாட்டேன்! நீ எனக்கு மட்டும் தான் வேணும். யாருக்கும் தர மாட்டேன்!
ஐயோ பொலம்ப வெச்சுட்டாளே! சண்டாளி! குட் நைட் டி குட்டி பிசாசே” அவனும் அந்தப் படத்தைக் கட்டிக் கொண்டு உறங்கினான்.
ஒருவரின் உணர்வு மற்றவரை எழுப்பத் தான் செய்தது. ஆனால் இருவரும் அதை சரியான நேரத்தில் விழிக்க வைக்க வேண்டும்.
அதீந்த்ரியனோ, தன் விடா முயற்சியைத் தொடர்ந்தான் அடுத்து வந்த நாட்களிலும், சிறுது நேரம் மட்டும் லோகாவைக் கட்டிக் கொண்டும், அவளது உணர்வுகளைத் தூண்டி விட்டும் சென்று விடுவான். இன்னும் முத்தம் என்று அவளுக்கு ஒன்று கூட கொடுக்கவில்லை. அதற்குள் அவளது மூளை எதையோ நினைக்க, அப்படியே சென்று விடுவான்.
அந்த வார இருதியில் விஷ்வா வும் லோகாவும் ஆசிரமம் செல்ல, குருஜி அங்கே அமர்ந்திருந்தார்.
இப்போது விஷ்வா மற்றவரின் மனதைப் படிக்கக் கற்றுக் கொண்டான் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதுவும் குறிப்பாக லோகாவை நன்கு அறிந்து வைத்திருந்தான்.
ஆனால் லோகா ஏதோ சற்று குழப்பமாகவே இருந்தாள்.
அவளது மனம் குருஜிக்கு புரிந்தே இருந்தது. அவளைத் தனியே அழைத்தார்.
“ லோகா! ஒரு குருவா உங்கிட்ட ஒரு விஷயத்தை தெளிவு படுத்தறேன். நாம நம்ம உணர்வுகளையும் சிந்தனைகளையும் ஒருமுகப் படுத்தறோம். அதுனால வெளில இருந்து வர தேவையற்ற உணர்வுகளை மனசுல இருந்து தூக்கி எறிஞ்சுடு! உனக்கு கடைசி வரை எது தேவையோ அதைப் பத்தி மட்டும் யோசி!”
அவர் சொல்ல வருவது அவளுக்கும் புரிந்தது.
“ நானே இதைப் பத்தி உங்க கிட்ட பேசணும்னு இருந்தேன் குருஜி. எனக்கு ரெண்டு மூணு நாளா சில கனவு வருது. அதுல…” அவள் சொல்லமுடியாமல் நிற்க,
“ எல்லாம் எனக்குத் தெரியும் லோகா. நானும் அதைத் தான் சொல்றேன். அதை கனவாவே விட்டுட்டு மேலும் அதைப் பத்தி யோசிக்காம இருக்கறது நல்லது. எப்போலாம் அப்படி ஒரு கனவு வருதோ, நீ தான் முயற்சி பண்ணி உன் மனசுக்கு பிடிச்ச விஷயத்தைப் பத்தி யோசிக்கணும். “
மேலும் அந்த கந்தர்வனைப் பற்றிச் சொன்னால், இவள் ‘எங்கே அவனைப் பார்க்கிறேன்’ என்று கிளம்பி அவனிடம் ஒரு பற்றுதல் வந்துவிடுமோ என்று மேலோட்டமாக சொன்னார்.
அவள் ஓரளவு தான் சொன்னதைப் புரிந்து கொண்டாள் என்பதை அவரும் உணர, அங்கிருந்து விலகிச் சென்று விஷ்வா வை அழைத்தார்.
அவனுக்கும் லோகா மேல் ஆர்வம் இருப்பதை உணர்ந்தவராயிற்றே!
அவன் மெளனமாக அவர் முன் வந்து நிற்க, குருவின் மனதில் இருப்பதையே படிக்கத் தொடங்கினான்.
ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் அவரே பேச ஆரம்பித்தார்.
“விஷ்வா! எதையுமே காலாகாலத்துல செஞ்சுடறது நல்லது! காலம் கடந்து போன பிறகு, இருதியில் மனக் கசப்பு மட்டுமே மிஞ்சும்.” ‘உன் மனதை அவளிடம் சீக்கிரம் சொல்’ , என்று சொல்லாமல் சொல்ல,
அவனுக்கு அது நன்றாகவே புரிந்தது. கூடவே சிறு வெட்கமும் உண்டாக, அவன் அவளிடம் ஆடும் கண்ணாமூச்சியை எப்படி அவரிடம் போய் சொல்வது!
“ சொல்லணும் குருஜி! இன்னும் அவ சின்ன பொண்ணு தானே! சீக்கிரம் சொல்லிடறேன்.” என்று அவரைப் பார்க்காமலேயே சொல்ல,
அவரோ ‘ இவன் விஷயம் புரியாமல் பேசுகிறானே ‘ என்று அவனை பரிதாபமாகப் பார்த்தார்.
எப்படியிருந்தாலும் அவனுக்கு ஒரு நாள் தெரிந்து தானே ஆகவேண்டும். அவனிடம் அதைச் சொல்லிவிட எண்ணினார்.
ஆனால் அது எந்தக் காரணத்தைக் கொண்டும் லோகாவிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளுடைய கற்பனை வளம் அவளை அதீந்த்ரியனிடமே கொண்டு சேர்த்து விடும், விஷ்வாவின் மேல் இருக்கும் சிறு பற்றை இப்போது வலுவாக்க எண்ணியே அவனை அவளிடம் காதலைச் சொல்லச் சொன்னார்.
விஷ்வாவோ அவளிடம் இப்போது சொல்லும் எண்ணமே இல்லாமல் இருக்கிறான். அவனிடம் அதீந்த்ரியனைப் பற்றி சொல்லி லோகாவைக் காக்கும் பொறுப்பு அவனுடையது என்பதை உணர்த்த நினைத்தார்.
“ விஷ்வா! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி சொல்லப் போறேன். அதிலிருக்கும் ஆபத்தும், அதற்காக நீ செய்ய வேண்டிய பொறுப்புகளையும் உனக்கு உணர்த்தும் நேரம் வந்துடுச்சு. முதல்ல நீ லோகா வை வீட்ல விட்டுட்டு, நீ மட்டும் தனியா வா” அவரது முகம் சாந்தத்தைக் கைவிட்டு ஏதோ கவலையை குடிவைத்திருந்தது.
அவரையே ஆழ்ந்து நோக்கி, அவர் மனதில் உள்ளதைப் படிக்க நினைத்தான். அவரோ எதையும் அவனிடம் இப்போது வெளிக்காட்டாமல் இருந்தார்.
அவர் மேலும் அவனை துரிதப் படுத்த, அவரின் மனதைப் படிப்பதைக் கைவிட்டு , அவளைக் கூட்டிக் கொண்டு வீட்டில் விட்டு திரும்பினான்.
வரும் வழியெல்லாம் என்னவாக இருக்கும் என்று மூளையைக் கசக்கிக் கொண்டே வந்து சேர்ந்தான்.