Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-17

Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-17

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…

                                                                        

 

அத்தியாயம் – 17

 

 

இளா தான், வைத்தியின் குடும்பத்தை  நிறுத்தியிருந்தான்.

 

“ச்சை….! எவ்வளவு கீழ்த்தரமான வேலை பார்த்துருக்கா பாருங்க உங்க அருமை பொண்ணு.  வர்ற ஆத்திரத்துக்கு அவளை அடிச்சு கொல்லனும்னு வெறி வருது.”

பற்களை கடித்தபடி இளா கூற, சீமா தலையை தொங்கப் போட்டுக் கொண்டாள்.

 

விக்ரமிடம் சென்று, “டேய்.. அரை மண்டை, உனக்கு என் ஆரா கேட்குதா…? உன்னை இனிமே எங்கயாவது பார்த்தேன்.., அங்கேயே மண்ணைத் தோண்டி புதைச்சிடுவேன் ராஸ்கல்..”

சட்டையை பிடித்து கேட்டுவிட்டு விக்கியை உதறி தள்ளினான்.

“இப்ப சொல்றேன், நல்லா கேட்டுக்கோங்க.

ஆமாம், ஆராவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்… அவ என் முறைப்பொண்ணு… அவளை கட்டிக்க நான் யாரைக் கேட்கணும்… அவ படிப்பு முடிஞ்சு மூணு மாசத்துல எங்களுக்கு கல்யாணம், எங்க பழைய கார்டியனுங்கிற முறையில் கூட தயவு செஞ்சு நீங்க வர வேண்டாம்.., உங்க மூஞ்சில முழிச்சிட்டு ,நாங்க வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பல…” இளா முடித்து வைக்க,

 

அதற்கு மேல் அங்கு யாரும் இருக்கவில்லை. அனைவரும் கலைந்து சென்றனர். வேதா கட்டியிருந்த குருவிக் கூட்டில் சிறு அதிர்வு. ஆரா தன்னைச் சுற்றி ஒரு மெளன வளையத்தை போட்டிருந்தாள்.

 

வைத்தியின் கைகளில் அவரது சான்டஃபே கார் பறந்து கொண்டிருந்தது…அவர் வந்த காரை விக்கியிடம் எடுத்து வர சொல்லியிருந்தார்… 

சீமா முகம் அழுது அழுது பெங்களூர் தக்காளியாக மாறி இருந்தது என்றால் கற்புவின் முகம் கோபத்தில் சிவந்து தந்தூரி அடுப்பாய் கனன்று கொண்டிருந்தது…

ஆக்ச்சுவலி ,இங்க கொதிக்க வேண்டிய வைத்தி ,ஒன்றும் செய்ய முடியாமல் ஆக்சிலேட்டரை வைத்து செய்து கொண்டிருந்தார்…

ஃபிரண்ட் மிரரில் கற்பகத்தையும் , சீமாவையும் மாறி மாறி பார்த்து கொண்டே வந்தார்… ஒன்னு ரொம்ப கவலைப்பட்டு சோகமா வந்தது… இன்னொன்னு யாருக்கும் சோகத்தை கொடுக்காம , மூக்கறுப்பட்டு அவசர அவசரமா கிளம்பிட்டோமேன்னு  கவலையில வந்தது…

 

வீடு வந்ததும், சீமாவிடம்… “என்னம்மா நீ இப்படி பண்ணிட்ட..?பெரிய வில்லி மாதிரி, இப்படி எல்லாம் திட்டம் போட்டு, பிடிச்சதெல்லாம் அபகரிக்கறத்துக்கு வாழ்க்கை  ஒன்னும் டிவி சீரியல் கிடையாது இங்கே நாம எவ்வளவு அடுத்தவங்களுக்கு காயம் ஏற்படுத்த  நினைக்கிறோமோ அவ்வளவு வலியை தாங்கிக்க நாமளும் தயாரா இருக்கணும்…”

 

“இளா மேல நீ ஆசைப்பட்டது தப்பு இல்ல ஆனா அவனை கல்யாணம் பண்ணிக்க நீ போட்ட திட்டம்தான் தப்பு. எனக்கு அவங்க நீ பேசுனத போட்டு காட்டினப்ப ரொம்ப வேதனையா இருந்துச்சு… என் பெண்ணை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து, ஒரு அப்பாவா இப்படி வாழ்கையில் தோத்து போயிட்டேன்னு…”

 

கற்பகம் அதற்குள், “இப்ப எதுக்கு சீமா கிட்ட தேவையில்லாத விஷயத்த எல்லாம் பேசிட்டு இருக்கீங்க , சும்மா இருங்க நான் பாத்துக்குறேன்.”

 

“சீமா ஒன்னும் உனக்கு மட்டும் பொண்ணு கிடையாது எனக்கும் தான் (அப்பாடா…. ஒரு வழியா வைத்திக்கு அறிவுகண் ஒப்பென் ஆயுடுத்து..) உனக்கு புடிச்சதை என்னவோ அதை நீ பண்ணிக்கோ… எதுக்கு நம்ம பொண்ணு வாழ்க்கையை கெடுக்கிற. அட்லீஸ்ட் அவளுக்கு நல்லது சொல்லிக்கொடுக்கலனாலும், கெட்டதையாவது சொல்லிக் கொடுக்காமல் இரு. அவ ஒழுங்கா இருப்பா.”

 

“என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க…அப்பா நான் செஞ்சது தப்புதான். இனிமே இளா பத்தியோ இல்ல ஆரா பத்தியோ  நான் எதுவும் யோசிக்கிறதா இல்லை…” சீமா அழுதுகிட்டே உள்ளே போயிட்டா.

 

“பாத்தீங்களா என் பொண்ண…  இதைத்தான பார்க்க ஆசைப்பட்டீங்க.. எப்படி அழுதுகிட்டு போறா பாருங்க.. இதுக்கு அப்புறமும் நான் எதுக்கு சும்மா இருக்கணும்…என்னென்ன பேச்சு பேசினான் அந்த பய.. கொலைப் பண்ணிடுவானா உங்களையும் என் பொண்ணையும். இதை நான் எப்படி மறப்பேன். அதோட என்ன சொன்னான்..? எனக்கு உரிமை இல்லை ஆரா பத்தி பேசன்னு….அப்ப உரிமை உள்ளவங்க ஆராவைப் பத்தி பேசினால் , அவன் கல்யாணம் நின்னு தானே ஆகணும்.. நிப்பாட்டுறேன் அவன் கல்யாணத்தை… நிப்பாட்டி காட்டுறேன்…என் பொண்ணு கட்டலயில்ல , அவன் வேற யாரையும் கட்ட முடியாது.. முக்கியமாக அவன் ஆசைப்படுற அந்த ஆராவை…”, கற்பகம்.

 

“ச்சே….! என்ன ஜென்மம் டி நீ…? இவ்வளவு நடந்தும் திருந்த மாட்டியா…? எக்கேடு கெட்டோ போய் தொலை… ஆனா ஒன்னு,  உனக்கு அவன பத்தி தெரியாது…. அவன் நெனச்சா முடிச்சுட்டு தான் உட்காருவான். அவன் கூட இத்தனை வருஷமா பழகிட்டு வரேன் …அவன் பிசினஸ் பண்ற  பக்குவத்தை வச்சி சொல்றேண்டி… இதோட விட்டுடு இந்த பிரச்சினையை…”

 

“நான் உங்ககிட்ட எந்த ஐடியாவும் கேட்கல. எனக்கு பெரிய அய்யவோட நம்பர் குடுங்க.” 

 

“பெரிய ஐயாவா …?? யார சொல்ற..?”

 

“அதான் உடையார்குடிகாடு கண்டர் ஐயாவை சொல்றேன்.”

 

“கண்டர் சார் நம்பர் உனக்கு எதுக்குடி…? இப்ப அவரு கிட்ட நீ என்ன பேசப் போற..?”

 

“எனக்கு தானே உரிமை இல்லை ஆராவோட கல்யாணத்தைய நிப்பாட்ட, உங்க கண்டர் சாருக்கு உரிமை இருக்கே…”

 

“வேணாம்டி…. அவர் ரொம்ப பெரிய இடம்…தேவையில்லாத விஷயம் பண்ணாத… இதோட விட்டுடு இந்த பிரச்சினையை.. நீ பேசி அத்து விட்டதில் எனக்கு மாசம் எவ்வளவு நஷ்டம் தெரியுமா..? அவங்க ரெண்டு பேரும் தான் என்னோட பெரிய கிளயன்ட்ஸ்..பெரிய அளவுல வேலை செய்யாமலேயே மாசம் சில பல லட்சம் சம்பாதிச்சுட்டு இருந்தேன். அதுல மண்ணள்ளிப் போட்டுட்ட. இப்ப அடுத்து என்ன செய்யறதுக்கு கண்டர் சாருக்கு போன் பண்றேன்னு சொல்ற..? என்கிட்ட அவரு நம்பர்லாம் கிடையாது போய் வேலையை பாரு ….தேவை இல்லாம எதுவும் பேசி சீமா மனசு திரும்ப மாத்தாத.. .” இதுவே பெரிய சாதனை போல, உள்ளே நடையை கட்டிவிட்டார் வைத்தி.

 

“ஆன்டி…”. விக்ரம் உள்ளே நுழைந்து கொண்டே, “இந்தாங்க ஆன்ட்டி சாவி.. காரை பார்க்  பண்ணிட்டேன் சீமாவை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க நான் வரேன்..”

 

கிளம்ப திரும்பியவனிடம்..,

 

“விக்கி ஒரு நிமிஷம் நில்லப்பா… உங்க மாமா திருச்சி தானடா…?”

 

“ஆமா ஆன்ட்டி ஏன் கேக்குறீங்க…?”

 

“கண்டர் சார் நம்பர் இருக்கா உன்கிட்ட…?”

 

“எனக்கு அப்படி யாரையும் தெரியாது ஆன்டி.”

 

“உனக்கு தெரியாதுடா … உன் மாமாவை கேட்டுப்பாரு. அவரு திருச்சி சைடு ரொம்ப ஃபேமஸ் ஜமீன் வம்சம்…பெரிய பணக்காரர். பேரு கண்டர் ஐயா…எப்படியாவது உன் மாமா கிட்ட பேசி அவரோட நம்பர் வாங்கி கொடுடா..”

 

“இப்போ அவர் நம்பர் எதுக்கு ஆன்ட்டி…?”

 

“நம்ம சீமாவை கஷ்டப்படுத்தினவங்கள சும்மா விடமுடியுமா…? அதான் உடனே கேட்டு வாங்கி கொடு.”

 

“சரிங்க ஆன்ட்டி பத்து நிமிஷத்துல வாங்கித்தரேன்…”

 

உண்மையிலேயே விக்ரம் பத்து நிமிஷத்தில் கற்பகம் கேட்ட போன் நம்பரை தந்துவிட்டான்…

 

அவனோட வேகம் நமக்கு ரொம்ப சோகம்..

 

 அந்த நம்பருக்கு டயல் செய்த கற்பகம் மறுமுனையில் ஒரு பெண் குரல் கேட்டதும்,

 

“வணக்கம் அம்மா கண்டர் ஐயா இருக்காங்களா…?”

 

“எங்கம்மா போயிருக்காங்க…? ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லனும் ஐயா கிட்ட”

 

…..

 

“ஊர் பிரச்சினை பத்தி பேசறதுக்கு இல்லம்மா. உங்க வீட்டு பிரச்சனையை பத்தி சொல்லனும்..”

 

…..

 

“அவரோட பொண்ணுன்னு சொல்றீங்க உங்ககிட்ட சொல்லலைன்னா எப்படி…? நீங்க எல்லாம் இருந்தும் உங்க வீட்டு வாரிசை இப்படி அனாதையா தவிக்க விட்டுட்டீங்களே…? இது நியாயமா அம்மா.. ஆயிரம்தான் கோபம் இருந்தாலும் அந்த புள்ள உங்க ரத்தம் இல்லையா..?”

 

……..

 

“உங்க வீட்டு கடைசி பொண்ணு பொற்கொடியோட மக ஆராதனா வைத்தான் சொல்றேன். நல்ல கிளி மாதிரி இருப்பா பொண்ணு… இது வரை அனாதையாய் வளர்ந்தாள் சரி, இப்ப இன்னொரு அனாதையையே கல்யாணம் பண்ண போறா… நான் சொல்றதை சொல்லிட்டேன்… உங்க தகுதிக்கு உங்க வீட்டு வாரிசு வாழ வேண்டிய இடம் இது இல்ல…. மனசு கேட்கல சொல்லிட்டேன்…அக்கறை இருந்தா வந்து அழைச்சிட்டு போங்க… என் நம்பர் தரேன் எழுதிக்கோங்க..”

 

……..

 

நம்பரை சொல்லி முடித்த கற்பகம் மிகுந்த திருப்தியோடு போனை வைத்தார்…

 

 தூர இருந்து அனைத்தையும்  பார்த்துக்கொண்டிருந்த விக்ரமிற்கு பேரதிர்ச்சி… ‘அடங்கொக்கா மக்கா…, சீமாதான் கிரிமினலுன்னு நினைச்சா அவங்க அம்மா, கேடி பில்லா கில்லாடி ரங்கா இருக்கே… ஒரேயொரு நம்பர் வாங்கி அந்த இளா பயலுக்கு ஊதிட்டு சங்கு…. நாம சீக்கிரம் நடைய கட்டுவோம்…’

 

அன்றுடன்…..கற்பகத்தின் கல்லெறி சண்டை நடந்து முடிந்து முழுதாக மூன்று மாதங்களை கடந்து இருந்தது…

 

ஆரா சம்பவத்தன்று அமைதியானவள் தான்…. இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை…

 

அவளது படிப்பின் கடைசி மாதம் இது… பரிட்சை மட்டும் மிச்சமிருந்தது… ஃபேஷன் டிசைனிங்கான இன்டர்ன் ப்ராஜெக்ட் , செலிபிரிட்டி காஸ்டியூம்  டிசைனர் சப்ய சாச்சியிடம் வாங்கி தந்திருந்தான் இளா…சென்ற ஒரு மாதமும் இளா கூடவே இருந்து முடிக்க வைத்து அழைத்து வந்திருந்தான்…

 

கிருஷ் ,ரோஜா, வேதா என ஆசிர்வாத்திற்கு வந்து நேரடியாக அவளை பார்த்து சென்று கொண்டிருந்தனர். யாரிடமும் அவ்வளவாக பேசவே இல்லை.. எல்லார்க்கும் அவளை பற்றி தெரிந்து இருந்ததால் அவளிடம் இயல்பாகவே நடந்து கொண்டனர்…அவளோட எக்ஸாம் முடிஞ்சதும் மத்ததை பார்த்துக்கலாமின்னு வேதா அறிவுறுத்தியிருந்தார்.

 

எக்ஸாமிர்க்கும் இளா கூடவே இருந்து தயார் செய்திருந்தான் ஆராவை…

 

அவளது எல்லா தேவைகளுக்கும் இளாவாகவே தான் நேரடியாக பார்த்து பார்த்து செய்து  கொண்டிருந்தான்…

 

வைத்தியநாதனை முழுதாக செட்டில் செய்து அனுப்பியிருந்தான். இதுவரை தந்தையின் பழைய நண்பருக்காக என்று அவன் அளித்து வந்த நிறுவன லாப சதவீத அடிப்படை சம்பளம், போன்று செட்டில்மெண்ட் தொகை வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த வைத்திக்கு, ஆடிட்டருக்கான அடிப்படை செட்டில்மென்ட் தொகை மட்டும் தந்து, அனைத்து உறவையும் கிளியர் கட் செய்திருந்தான். 

 

கற்பகத்திற்கு தான் பெரும் இரத்த கொதிப்பு. பணத்திற்கு பணமும் போச்சு, போனில் பத்தவைத்த, ஆரா அம்மாவோட குடும்பத்தினர்களின் ஈகோவை தூண்டி விட்டு, இளா ஆராவின் பிணைப்பை பிரிக்க எண்ணிய திட்டமும் கிணத்தில் போட்ட கல்லாக போனதன் விளைவு.

 

 

ஆராவிற்கு அன்று கடைசி பரிட்சை முடிந்திருந்தது . இரவு உணவு நேரம். இளா எப்போதும் போல  அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தான்…

 

“என்னால உனக்கு ரொம்ப கஷ்டம் தான இளா…?”

இத்தனை மாதங்களில் அவளாக ஒரு கேள்வி கேட்டிருந்தாள்…

 

இளாவாக எதுவும் கேட்கவோ, சமாதானம் செய்யவோ முயற்சிக்கவில்லை. பரீட்சை, பிராஜக்ட் என்று வரிசைக் கட்டி நின்றுகொண்டிருந்ததால், இந்த நேரம் எது பேசினாலும், அது சரியாக முடியாவிட்டால் அது அவளது படிப்பை பாதிக்கும் என்று விட்டிருந்தான். 

 

அவனது பயத்துக்கு ஒரு காரணம் இருந்தது. அவர்களது பெற்றோர் மறைவிற்கு பின் மீண்டு வந்த ஆராவிற்கு , ஒன்றாம் வகுப்பை கடந்து வந்திருந்தபோதும், கற்ற மொத்தத்தையும் மறந்திருந்தாள். ‘அ’ன்னா கற்கவே இரண்டு வருடம் தாண்டியிருந்தது. ஏழு வயதில் மீண்டும் ஒன்றாம் வகுப்பில் இருந்து படிக்க வைத்தனர். அதற்கே இளா தலையால் தண்ணி குடித்தான். வீட்டோடு ஆசிரியரை அமர்த்தியும், இளாவிடம் மட்டுமே படிக்க அமருவாள்.

 

இப்போது அவளது இளங்கலை வெற்றிகரமாக முடிந்திருந்தும், இளாவிற்கு தயக்கம். மன நல மருத்துவரிடம் அழைத்து செல்ல ஆலோசனை சொல்லியிருந்தார் குடும்ப வைத்தியர். அதையும் கூட எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம் இருந்தது இளாவிற்கு. வேதாவிடம் கூட ஒதுக்கம் காட்டி ஒதுங்கியிருந்தாள் ஆரா.

 

“ஏன்டி இப்படி சொல்ற…? உன்னை பார்த்துக்கிறத  தவிர வேற என்ன வேலை எனக்கு..? பைத்தியம் மாதிரி பேசாம ஒழுங்கா சாப்பிடு..”

 

“ஆமா நான் பைத்தியம் தான்…. நீ கரெக்டா தான்  சொல்லுற. அன்னைக்கு  கற்பகம் ஆண்ட்டியும் அதான சொன்னாங்க.”

 

“ச்சீ… வாய மூடுடி பன்னி. ஏதாவது இதுபோல பேசிட்டு இருந்த….., உனக்கு அறைதான் விழும் பாத்துக்கோ…”

 

“என்னை நல்லா அடி… என்னால தான் அப்பா அம்மா, அத்தை மாமன்னு, எல்லாரும் செத்துப் போயிட்டாங்க… ஒரு வேளை அம்மாவோட வீட்டுல இது தெரிஞ்சுதான் என்னை வேணாம்னு சொல்லிட்டாங்களோ…? எல்லாரையும் இப்படி சாகடிச்சா யாருக்கு என்னை பிடிக்கும்…?”

 

“மத்தவங்க எல்லாம் உன்னால சாகலடி நான் தான் உன்னால சாகப் போறேன்…இத்தனை நாளா எதுவுமே பேசாமல் இருந்து படுத்தின…., இப்போ ஏடாகூடமா ஏதாவது கேள்வி கேட்டு படுத்துற…  படுத்து தூங்கு… நான் போய் தூங்க போறேன்.

அவனும் இத்தனை நாளாய் தேங்கியிருந்த மன உளைச்சலை , ஆரா வாயை திறக்கவும் கொட்டிவிட்டு வந்து அவன் ரூமில் படுத்து கொண்டான்…

 

கொஞ்ச நேரத்தில் இளாவுக்கு பக்கத்தில் ,ரசாயை நிமிண்டியபடி உள்ளே ஏதோ நுழைய…. ஆரா தான்… ‘பெருச்சாளி எப்படி வருது பாரு…’ இளாவிற்கு சிரிப்பாய் வந்தது.. ஆனால் பேசாமல் கண்ணை மூடிக் கொண்டே படுத்திருந்தான்…

பக்கத்துல வந்து படுத்து அஞ்சு நிமிஷம் ஆகியும் இளா கிட்ட இருந்து எந்த பதிலும் இல்ல…

“நீயும் என்னை வெறுத்துட்டியா இளா…? நான் செத்து போயிடட்டா…???”

 

“அப்படி எல்லாம் பொசுக்குன்னு நீயா செத்து போயிடாதடி …, நானே உன்னை கொலை பண்ணிடுறேன். அந்த அளவுக்கு  கொலையா கொல்றடி என்னை.”

 

“உனக்கு நான் வேணாம். சீமாவையே கல்யாணம் பண்ணிக்கோ…”

 

“சரி சிலுக்க நான் கல்யாணம் பண்ணிகிட்டா, மேடம் என்ன செய்யறதா இருக்கீங்க…?”

 

“யாரு நானா…?”

 

“இல்லடி உங்க ஆயா…?”

 

“போ…  எங்கேயாவது போய் சாகப் போறேன்…”

 

“போயித் தொலை. கண்ணு முன்னாடி பார்த்தேன் நானே உன்னை தொலைச்சுடுவென்…எருமை…”

 

உதைத்து கீழ தள்ளி விட்டுட்டான்…

 

இன்னும் ரெண்டு நிமிஷத்தில் ஏறிக்கிட்டு சண்டைக்கு வரும் காட்டெருமை… நினைத்தபடியே  பிரண்டு குப்புறப் படுத்துக் கொண்டான்.

அஞ்சு நிமிஷம் ஆகியும் பார்ட்டி வரல.. அச்சச்சோ எங்க போச்சு நம்ம பட்சி…? தேடி இறங்க…,

உதைபட்டு விழுந்த இடத்திலேயே உட்கார்ந்த படி அழுது கொண்டிருந்தாள்…

 

 

“இவ்வளவு நாளா, இப்ப பேசும் அப்ப பேசும்னு ஏங்க வச்சுட்டு, இப்ப வாயைத் திறந்தால், வாளா பாயுது வார்த்தை.”

 

பெருமூச்சுடன், இளா அவளை பார்த்தபடி நிற்க, அவன் நிற்பதைப் பார்த்ததும்… 

 

“ஏன் அப்படி பாக்குற…? எவ்வளவு வேணுமோ என்னை அடிச்சுக்கோ உதைச்சுக்கோ..” ஆரா.

 

“நீ பேசுற பேச்சுக்கு, வாயிலேயே ரெண்டு போடப் போறேன். அழறத நிப்பாட்டிட்டு எழுந்துருடி முதல்ல.”

 

ஆராவிடம் பதில் இல்லை. அந்த இடத்தை விட்டு எழவும் இல்லை.

 

குரலை உயர்த்தி கோபமாக,

“ இப்போ நீயா எழுந்து வந்து மாத்திரையை சாப்பிட்டு தூங்குறியா..? இல்லை அடிச்சு இழுத்துட்டு போகவா..?” இளா மிரட்டினான்.

 

“நான் நினைச்சது கரெக்ட்டு தான். உனக்கும் என்னை பிடிக்கல. கோவமா பேசற ,கோவமா பார்க்குற, திட்டுற , இப்போ அடிக்க வர்ற. எனக்கு என்ன அப்பா அம்மாவா இருக்காங்க…???, யாராவது திட்டினால் அடிச்சா கேக்குறதுக்கு, அதுனால தானே அன்னைக்கு கற்பகம் ஆன்ட்டி என்னை அப்படி திட்டினாங்க…” சொல்லி கொண்டே விசும்பியபடி அழ…,

 

“ மத்த எல்லார்க்கிட்டேயும் எப்படியோ, ஆனா என்னை  எங்க அடிச்சா எங்க வலிக்கும்ன்னு நல்லா தெரியுது.”

மண்டையில் கொட்டு வைத்து  அவளை கட்டிகொண்டான்… 

 

“தொடாத போ…” 

 

“தொடுவேன். இன்னும் இறுக்க பிடிச்சு முத்தமும் தருவேன். அதை கேட்க உனக்கே ரைட்ஸ் இல்ல. ஏன்னா நீ என் ஆரா.”

 

“உன் ஆரா இல்லை. அனாதை ஆரா. அதான் உன் பெட்ல கூட படுக்க விடாம உதைச்சு தள்ளி விட்ட,”

 

“ஏன்டி இப்படி எல்லாம் பேசுற…நான் உன்னை உதைச்சா திரும்ப உதைக்க வேண்டியதுதான என்னை. அதை விட்டுட்டு இப்படி எல்லாம் பேசினா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி.”

 

ஆராவின் அதீத தாழ்வு மனப்பான்மையை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தான் இளா.

 

“எனக்கும் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு… சாகவும் தோணுது…”

 

“போ…. செத்துத் தொலை அப்போ…” 

 

“நான் முன்னாடியே செத்து போக நினைச்சேன்… ஆனா நான் போயிட்டா உன்னை யாரு பார்த்துப்பாங்க…”

 

“ஆமா இப்ப மட்டும் இந்தம்மா தான் என்னைப் பார்த்துக்குறாங்க… ஓடு… இங்க இருந்து.” முதுகில் கை வைத்து தள்ளிவிட்டு 

எழுந்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான் இளா.

காலைக் கட்டிக்கொண்டாள். “போகாத.”

 

“தெரியுது தான… பின்ன ஏன் அப்படி பேசற…??”

 

“ரொம்ப கஷ்டமா இருக்கு இளா… என்னால மாத்தாஜி வைத்தி அங்கிள் கூட பேசறது இல்லை… நீ சீமா கூட பேசறது இல்லை.”

 

“ம்… ஏன் நிப்பாட்டிட்ட சொல்லு…, காக்கா கொக்கு கூட பேசறது இல்லை, நரி, நாய் கூட பேசறது இல்லை…”

 

“போ… என்னை ரொம்ப கிண்டல் பண்ற. இனிமே ஆரா , இளா கூட பேசறது இல்லை…”

 

“சரி பேசலாம் வேணாம்…, முத்தம் மட்டும் கொடு.”

தன் அரவணைப்பில் இருக்கும் காதலியை  ,அள்ளி கொஞ்ச ஆசை வந்தது இந்த காதலனுக்கு…

 

“சரி…”   ஜோசியனின்  பேச்சை கேட்டு கிளி சீட்டு எடுத்து கொடுத்த கணக்கா, 

“ம்ப்ஞ்ச்….”

கன்னத்திற்கும்  தாடைக்கும் இடையில் ஒரு பேபி கிஸ்…

 

எப்படி நீ… நிறைய காதலோட  முத்தம் தருவ… மனதிற்குள் இளா…,

அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…, என்ன…? பார்வையிலே கேட்க, 

எனக்கு…. ஆரா கன்னத்தை காட்ட,

நிதர்சனம் புரிந்தது இதுதான் ஆரா…..அவளுக்கு இப்போ தேவை அன்பு…அரவணைப்பு , மொத்த அன்பையும் உதட்டில் வைத்து நெற்றியில் தந்திருந்தான் அவன் முத்தத்தை.

 

“நாம டாக்டர் கிட்ட போவோமா…?” 

 

“ஏன் இளா…?”

 

“இவ்வளவு ரெஸ்ட் லெஸ் ஸா இருக்க…, வெயிட் லாஸ் ஆகி இருக்க., சரியா சாப்பிடறது இல்லை., யார்கிட்டேயும் சரியா பேசறது இல்லை… அதோட பேசினாலும், சாவு அது இதுன்னு ரொம்ப தப்பு தப்பா பேசற.”

 

உண்மையில் ஆராவின் தாழ்வு மனப்பான்மை அவளுள்ளே இவ்வளவு வேரூன்றி நிற்பதை சரி செய்ய வேண்டும் இளாவிற்கு.

 

“சரி போவோம்… எப்போ… யார்கிட்ட…?” ஆராவின் கேள்விக்கு, இளா,

 

“நாளைக்கே… சைக்கியாட்ரிஸ்ட் விசாகன்கிட்ட…,”

 

“நான் உண்மையிலேயே பைத்தியம் ஆகிட்டேனா…?”

 

“இல்லை, சுத்தி இருக்கிற எல்லாரையும் பைத்தியம் ஆக்கிட்டு இருக்க…”

 

“ஆங்…….!!!!” ஏறிட்டு அவனை பார்க்க…

 

“வேதா டாலி வீட்டுக்கு ஏன் வர மாட்டேங்குற….? உனக்காக கிருஷ் ,டாலி, ரோஸ்  எல்லாரும் எவ்வளோ கவலை படறாங்க தெரியுமா..?”

 

“என்கிட்ட எதுவும் சொல்லலயே…?”

 

“நம்மள பிடிச்சவங்களுக்கு, நம்மளால கஷ்டம் வந்தா வெளியில சொல்ல மாட்டாங்க லட்டு… ஆனா 

அவங்க உனக்காக எவ்வளவு அன்பு காட்டிருக்காங்க அதை மறக்கலாமா…?”

 

“நான் எப்படி மறப்பேன் அவங்கள… நான் இருந்தா மாதாஜியால அவங்க அண்ணன் கூட பேச முடியாது… என்னை ஆன்டி திட்டினதால, என்னை பார்க்குறப்ப லாம் திரும்ப திரும்ப அவங்க மேல கோபப்படதோணும்…”

“அதோட, நான் கூட இருந்தா, வீட்டு பெரியவங்க எல்லாரும் செத்து போயிடறாங்க, மாதாஜிக்கு எதுவும் ஆயிடுமா இளா..?. அவங்கன்னா எனக்கு உயிரு.”

 

“சொல்ல கூடாதுன்னு இருந்தேன்… சொல்ல வைக்கிறடி… என் செல்ல லூசு நீ…”

 

“அதான் எனக்கே தெரியுமே.” காம்பிளிமெண்ட்டாக எடுத்து கொண்டு கிளுக்கி சிரித்தாள்.

 

எதை எப்படி எடுத்து கொள்கிறாள் என்பதை கணிக்க முடியாத ஆரா நிரம்ப கவலையைத் தந்தாள். எப்படி மீட்டெடுக்க போகிறோம். ஆராவையே பார்த்தபடி இளா யோசித்திருக்க,

 

“என்னாச்சு.”

 

“நீ பேசாம…, எனக்கு அந்த சாப்பாடு வேணும் இந்த சாப்பாடு வேணும்னு தொல்லைப் பண்ணாம என் டாலி இளைச்சு போச்சு தெரியுமா..?.” ஆராவின் கேள்வியை சமாளித்தான்.

 

“தொல்லைதான, பண்ணிட்டா போச்சு.” 

 

 “சரி காலைல ஹாஸ்பிடல் போலாம்…டயமாச்சு. தூங்கு…”

 

என்னது இனிமேதான் தூங்கனுமா….?இவ்வளவு கதை நடந்தும் இன்னுமா விடியல…?

 

விடிந்ததும் எழுந்து , வேதாவிற்கு ஃபோன் செய்த, ஆரா…

 

“மாதாஜீ எனக்கும் இளாக்கும் ப்ரேக் ஃபாஸ்ட் செஞ்சு வச்சுட்டு ரெடியா இருங்க, நாம எல்லாரும் சாப்பிட்டிட்டு ஹாஸ்பிடல் போறோம்…” பிக்னிக் மோடில் கூறினாள் .

 

பூட்டி வச்சிருக்கிற வரை தான் துக்கம்…, மனசுல உள்ளத கொட்டிட்டா வரும் நல்ல தூக்கம்… அந்த தூக்கம் ஏற்படுத்தும் இனிய தாக்கம்… அந்த தாக்கம் தீர்த்து வைக்கும் பலரது ஏக்கம்…

 

இத்தனை மாதங்களில் இப்பதான் அதே செல்ல குரல்… சந்தோஷம் கண்ணீராய் கசிந்தது… வேதாவிற்கு..

 

“செய்யறேன்டி என் லட்டு குட்டி…”

 

தொடர்ந்து இளாவிடமும் பேசி அனைத்தும் தெரிந்து கொண்டார்…

 

ஃபோன் கட்டானதும் போயி விவரத்தை சொல்லி கிருஷையும் ரோஜாவையும் முடுக்கி விட்டார்…

“அந்த காட்டு பன்னி க்கு இன்னைக்கு தான் வீட்டுக்கு வர தோணுச்சா… வரட்டும் அவ…” கிருஷ் கடுப்பை காட்ட

 

“அவளே ரொம்ப நாள் கழிச்சு வர்றா, அவள வம்பு வளர்த்தா பிச்சுடுவேன் உன்னை…”, ரோஜா அதட்டினாள்.

 

நீண்ட நாட்களுக்கு பிறகு ,அந்த காலை உணவு நேரம்…, ஆனந்தம் விளையாடும் வீடு என களை கட்டியது வேதா இல்லம்…

 

அதுக்கப்புறம் மொத்த குடும்பமும் மேக் அப் சற்று தூக்கலா போட்டுக்கிட்டு வெளியில கிளம்பிட்டுங்க…

 

டிரீட்மெண்ட்டுக்கு போறப்பயும் ஒரு என்டர்டெய்மெண்ட்…

 

நடந்தது அனைத்தையும் போனிலேயே விளக்கி விட்டு,  ஆரா இப்போது இருக்கும் மனநிலையையும் கூறி…  சைக்கியாட்ரிஸ்ட்  விசாகன் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தான்…

 

அவளோட பழைய மெடிக்கல் ரிப்போர்ட்ஸ், மெயிலில் வந்திருக்க, எல்லாம் படித்திருந்தார்.., எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு…, ஆராவிடம் பேசி கொண்டிருந்தார்…

 

சிறிது நேரம் கழித்து ஆரா வெளியே வந்து.., டாக்டர் உங்களை வரச் சொல்கிறார். சொல்லிவிட்டு வெளியே அவள் அமர்ந்து கொண்டாள்…

 

ஆராகிட்ட பேசினது அஞ்சு நிமிஷம் தான்…. மத்த ஒவ்வொருத்தர் கிட்டயும் தனி தனியா அரைமணி நேரம் பேசிட்டு,ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்… ஆராவைத் தவிர மத்த எல்லாரையும் கூப்பிட்டார்…

 

“நான் சொல்றத நீங்க நாலு பேரும்  கேட்டு நடந்துக்கொங்க..”

 

 

“சொல்லுங்க டாக்டர், லட்டோட பிரச்சனையை எப்படி சரி செய்யறது….? நீங்க என்ன சொன்னாலும் செய்ய ரெடியா இருக்கோம்…” கோரஸ்…

 

“நீங்க நாலு பேரும் அவளை விட்டு தனியா போனாலே போதும்… அவங்க ஆட்டோமேட்டிக்கா நார்மல் லைஃப் க்கு வந்துடுவாங்க…” பழுத்த பழம் அந்த டாக்டர் சொல்லி முடிக்கல, அதுக்குள்ள 

 

ஒண்ணா அட்டெண்ஷன்ல எழுந்து நின்னுச்சுங்க நாலு பேரும்…

 

ஷாக்காமா….!!!!

 

நாலு பேரும் நல்லா இருந்த ஆராவும்..!!!!!

 

 

சாஷா….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!