கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…
அத்தியாயம் 25(1)
சொல்லியது போலவே ஓரிரு நாட்களில், இளா, தனது லாஹிருஷ் லான்சிங்கை முன்னெடுத்து செல்ல கிளம்பிவிட்டான்.
ஆரா வழக்கம் போல் திருச்சி ஆசிர்வாத், ஆராஸ் செல்ல, அங்கே அவளுக்காக , டெம்பொரரி பீ ஏ வாக நியமிக்கப்பட்டிருந்த மாலினி காத்திருந்தாள். இந்த ஒரு வருடத்தில் மாலினியும் இன்னும் கொஞ்சம் மனமுதிர்ச்சி அடைந்திருந்தாள். ஆசீர்வாத் நிறுவனம் அதன் செயல்பாடுகளை பற்றிய புரிதல் அதிகமாக இருந்தது.
அதனாலேயே இன்று ஆராவின் காரியதரிசியாக நியமனம்.
அவளுக்கு லைட்டாக உள்ளுக்குள்ள உதறல், ‘அன்னைக்கு இளமாறன் சாரையே, அவ்வளோ துவம்சம் செஞ்சுச்சு, இந்த பொண்ணு. நாம வேற கேட்டை போட்டு, கடுப்பேத்தினோம்.’
‘கடவுளே என்னை எப்படியாவது காப்பாத்தி உட்டிரு. அந்த புள்ளைக்கிட்ட இருந்து,’
“நீங்க உள்ள போகலாம் மிஸ். மாலினி.” சிவகுரு சொல்லிவிட்டு செல்ல,
‘கோவிந்தா, கோவிந்தா…’ மனதிற்குள் ஜெபித்து உள்ளே சென்றாள்.
ஆரா , ஆசிர்வாத்தின் எம் டி ரூமில் ,
மாலினி, உள்ளே பெர்மிஷன் கேட்டு நுழைந்து விட்டு,
“குட் மார்னிங் மேடம் , ஐ ஆம் மாலினி. யூவர் நியுலி அப்பாயிண்ட்டெட் பெர்சனல் அசிஸ்டென்ட்.”
ஆரா, “வெரி குட்மார்னிங் மாலினி,” நிமிர்ந்தவள், “பிளீஸ்..” சீட்டை காட்டி உட்கார சொன்னாள்.
“மாலினி , நாம இதுக்கு முன்ன பார்த்துருக்கோமா..? இந்த ஃபிஸிக்கை, நான் எங்கயோ பார்த்திருக்கேன்னே..?” யோசனையாய் கேட்க,
“எஸ், மேம். நியர்லி ஒன் யேர் பிஃபோர் எம்டி சாரை பார்க்க, நீங்க ஆசிர்வாத் ஹெட் ஆஃபிஸ் வந்துருந்தீங்க, அப்போ நான் சார்க்கிட்ட தான் டெம்பொரரி அசிஸ்டன்ட்டா இருந்தேன். சாரி மேடம் அன்னைக்கு, உங்களை பத்தி தெரியாம உள்ளே விடமாட்டேன்னு சொல்லிட்டேன்.”
“எக்ஸ்டிரீம்லி சாரி மேடம். மனசுல எதுவும் வச்சுக்காதிங்க.”
மாலினியின் விளக்கத்தில் , கொஞ்சம் யோசித்து,
“ஓ … யா…ஐ காட் இட். தட் ஆமை வடையா நீங்க.”
ஆரா, குதூகல குரலில் கூறவும்,
‘இன்னும், அதையெல்லாம் நியாபகம் வச்சுருக்கியாமா நீயி. விளங்கிடும்.’ மனதிற்குள் மாலினி.
“டோன் மிஸ்டேக் மீ யார். நீங்க சாரி கேட்கற அளவு எதுவும் இல்லை. தப்பு என்னதும் தான். இளா மேல இருந்த கோபத்தை, உங்க மேல காட்டிட்டேன். நீங்க உங்க வேலையைத்தான் பார்த்தீங்க, ஆக்சுவலா நான் என்னை இன்றோடியூஸ் பண்ணியிருக்கணும் உங்ககிட்ட. நான்தான் தப்பு, வெரி சாரி.” ஆரா,
ஏனோ, ஆராவை ரொம்ப பிடித்து போய்விட்டது மாலினிக்கு. அன்றைக்கு அவள் பேசிய விதத்தை மனதில் கொண்டு , எப்படியெல்லாம் படுத்தி எடுக்க போகிறாளோ, என்று பயந்து வந்தவளுக்கு, ஆராவின் பிரண்ட்லி அப்ரோச் மனதிற்கு இதமாய் இருந்தது.
“மாலினி நீங்க என்கிட்ட ப்ரீயா இருக்கலாம் , பேசலாம். எனக்கு ஆசிர்வாத் அட்மினிஸ்டிரேஷன் தெரியும், ஆனா ரொம்ப பழக்கம் இல்லை. லாஸ்ட் டூ மந்த்ஸ்ஸா இந்த பிரான்ச் மட்டும் என் கண்ட்ரோல்ல இருந்துச்சு, இப்போதான் எல்லா பிரான்ச்சஸ்யும் பார்க்க போறேன்.”
“பாஸ் சொன்னாங்க மேடம்.”
“டோன் கால் மீ மேடம், கால் மீ ஆரா. நான் ஜஸ்ட் டூ மந்த்ஸ் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு, திரும்ப இளா வந்ததும் கையில கொடுத்துட்டு எஸ்ஸாகிடுவேன். எனக்கு இப்படி அதட்டி உருட்டி வேலை வாங்குறது, ஒரே இடத்தில் உட்க்கார்ந்து ஃபைல் நோண்டுறதுலாம் ரொம்ப அலர்ஜி ஆம்ஸ்.”
“ஆம்ஸ்…?!!!”
“மாமா காலிங் மாம்ஸ்.
ஆமைவடை காலிங் ஆம்ஸ்.” கையை சுருக்கி வசூல் ராஜா போல, காட்டி, ஆரா கிளுக்கி சொல்ல,
‘அடிக் கிராதகி. நல்ல விதமா பேசுறியே நாசுக்கா நடந்துப்பன்னு பார்த்தா , பொசுக்குன்னு ஆமை வடைக்கும் ஒரு நிக் நேம் வச்சு ஆம்ஸ்ஸா..?’ மைண்ட் வாய்ஸ் மாலினி.
“எனக்கு ஒர்க் பிளேஸ், கட்டுக் கோப்பா இருந்தா, ஒர்க் பண்ற மூடு வராது. சோ ஐ நீட் அ கொலக்கா மலக்காம் பிளேஸ் டூ ஒர்க்.”
“கொலக்கா, மலாக்காம்…?!!!??” ‘அய்யோ புரியாத பாஷையா பேசிக் கொல்றாளே.’
“அப்படின்னா, எல்லாம் கலைஞ்சு போயி….,”
சிறிது யோசித்து,
“எக்ஸ்ஸாக்ட்டா சொல்லனும்னா, கிலம்சி. ஆஃபிஸ்ஸை கிலம்சி ஆக்கினா , இளா அடிச்சு , துவைச்சு கிழிச்சு தொங்கவிட்டுருவான், என்னை. சோ,
நாம கிலம்சியா இருந்துப்போம், ஆம்ஸ். என்ன சொல்றீங்க நீங்க?”
ஆரா தந்த அதிர்ச்சியில் , மாலினி கண்களை விரிக்க,
“ஆராஸ்ல, நான் ரொம்ப ஜாலியா இருப்பேன். டிசைனிங் யூனிட் எப்பவும் கல கலன்னு சிரிச்சுட்டு கலாய்ச்சுட்டு என்ஜாய் பண்ணி ஒர்க் பண்ணுவோம். சோ, மைண்ட் ரெஃபிரஷ் ஆகி, நிறைய இன்னோவேட்டிவ் ஐடியாஸ் அருவியாய் கொட்டும். இனிமே இங்க உன்கிட்ட நான் பிரண்ட்லியா, ஃபிரீக்கி ஆராவா தான் இருப்பேன். ஆனா இதை நீ இளாகிட்ட போட்டு கொடுக்ககூடாது. டீலா…?”
‘மாலினி, யப்பா, இப்பவே கண்ணை கட்ட வைக்குறாளே , இந்த ரெண்டு மாசத்தில் இன்னும் என்னென்ன பார்க்கணுமோ.’
தலையை குனிந்தபடி யோசிக்க,
“ஹேய், ஆமை வடை, இதுக்கே டயர்ட் ஆனா எப்படி…?
எனக்கும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேணாமா வேலைல,”
‘அதுக்கு..?’ மைண்ட் வாய்ஸ் மாலினி.
“அந்த என்டர்டெயின்மெண்ட்டே நீதான்மா எனக்கு.”
“மாலினி நான் சொல்லணும்னு நினைச்சேன். இனிமே ஸ்கின் கரக்ஷன் பிரைமர் யூஸ் பண்ணிட்டு அதுக்கப்புறம் பவுண்டேஷன் போடுங்க. உங்களோட ஃபவுண்டேஷன் ரொம்ப அன் ஈவனா இருக்கு. உங்க பிக்மெண்ட்டேஷன்லாம், தனியா காட்டுது. பேசாம , நீங்க லிக்விட் பவுண்டேஷன்க்குன்னு ஸ்பெசிபிக்கா இருக்கிற சோனிக் ஏர் பிரஷ், யூஸ் பண்ணுங்க. ரொம்ப ஈவனா இருக்கும். இந்த பவுண்டேஷன் வச்சுத்தான் ரிமெம்பர் பண்ண முடிஞ்சது உங்கள.”
திடீரென ஆராவிடம் இருந்து வந்த பியூட்டி டிப்ஸில் , அதிர்ந்து,
“இதெல்லாமா…? எப்படிங்க..?”
“அன்னைக்கு கோட்டிங் மேல கோட்டிங் கொடுத்து ரொம்ப கொடூரமா இருந்தீங்க, ப்பா…யாருடா இந்த பொண்ணுன்னு நினைச்சேன். கோபமா இருந்ததுல சொல்ல மறந்துட்டேன்.”
ஆரா சொல்லவும், தேங்க்ஸ் சொன்னாள் மாலினி.
“இட்ஸ் ஓகே ஆம்ஸ். நாம ஒரு விஷயம் பண்ணினா பர்பெக்டா பண்ணனும். இல்லைனா பண்ணாம விட்டுடணும். பண்ணித்தான் ஆகணும்ன்னு கட்டாயம் வந்தா, கத்துக்கிட்டு பர்பேக்ட்டா பண்ணுங்க. அவ்ளோதான். உங்கள மாதிரி ஒர்க்கர்ஸ்தான் நம்ம ஆசிர்வாத் குரூப்ஸ் ஓட முகம், கிளைன்ட்ஸ் எங்களை பார்க்கிறதுக்கு முன்னால உங்களைத்தான் பார்ப்பாங்க. அப்போ அந்த முகம் அழகா இருக்கணும்ல்ல. நான் ஸ்கின் கலர், ஃபீச்சர்ஸ்,லாம் சொல்லல. நம்மளை பிரஸ்சன் செய்யுற விதம் அழகா இருக்கணும். அழகு இஸ் ஆல் அபவுட் ஆட்டிட்டியூட் அண்ட் பெர்பெக்ஷன். ”
அவள் இன்னும் அதிர்ச்சி விலகாமல் அயர்ந்து பார்த்திருக்கவும்,
“புரியலையா ஆம்ஸ், நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும். நாம எது செஞ்சாலும், இந்த உலகம் நம்மள ஒரு நொடி உத்துப் பாக்கணும்.”
ஆரா சொல்லிவிட்டு சிரிக்க,, குபீர்ன்னு சிரிச்சுட்டா மாலினி. இந்த ஆராவை ரொம்ப ரொம்பவே பிடித்தது மாலினிக்கு.
“எனக்கு மல்டி டாஸ்கிங் வராது ஆம்ஸ். சோ நீங்க ஹெல்ப் பண்ணுங்க. ஆராஸ்தான் எனக்கான பிளேஸ். ஆசிர்வாத் ரொம்ப சொதப்பும். ஆனா இப்போ வேற வழி இல்ல. இளா எங்கிட்ட செய்ய சொல்லி எதுவும் பெருசா கேட்டதில்லை. ஃபர்ஸ்ட் டைமா, இதை கேட்டான். மறுக்க முடியல ஒத்துக்கிட்டேன்.”
மிக நேர்மையாய் தன் குறையை கூறிவிட்டு,
“இப்படி சொல்ல கூடாதுதான். ஆனா நீங்களே கண்டுபிடிச்சுடுவீங்க, நான் வேலைக்காக மாட்டேன்னு. பெட்டர் நானே சொல்லிட்டேன். எந்த ஒரு வேலையும் சரி, ஃபைலும் சரி, என் டேபிளுக்கு வர முன்னாடி, நீங்க ஒன்னுக்கு ரெண்டு முறை கவனிச்சு பார்த்து எடுத்துட்டு வாங்க, இன்கேஸ் தப்பா இருந்தா, உடனே எனக்கு சொல்லிடனும் நீங்க.”
இப்போது ஆராவின் அப்பாவி முகம் வெளியே தெரிந்தது.
“ஷூர் மேம். என்னை நீங்க ஹன்றட் பேர்செண்ட் நம்பலாம். வில் டூ மை பெஸ்ட்.” மாலினி.
ஆரா, தோளை குலுக்கி ஏற்றுக்கொள்ள, அதன்பின் இருவரும் இணைந்து அலுவல்களில் செயல்பட்டனர்.
ஆராவின் குணத்தில் இருந்த குழந்தை தனம், வேலையில் இல்லாததை, மாலினி கவனித்தாள். நிறைய நேரம் அவளே மாலினி துணையில்லாமல் ஒவ்வொரு வேலையும் செய்ய, இதுதான் ஆரா சொன்ன பெர்பெக்சன் எனப் புரிந்தது மாலினிக்கு.
புரியாத விஷயம், புரியும் வரை சம்பந்தப் பட்டவர்களை துளைத்தெடுத்து கற்றுக் கொண்டாள் ஆரா. மாலினி, அவளது யூஸ்ஸ்வல் வேலைகளையே பெரும்பாலும் பார்க்க நேர்ந்தது. சில நேரங்களில் அந்த வேலைக்காக யாரை தொடர்பு கொள்வது, இதற்கு முன் தொடர்பு கொண்டபோது இளா பேசியவை , போன்ற விஷயங்களே அதிகமாக இருந்தது.
இப்படித்தான் ஒரு நாள், ஆசிர்வாத்திற்கு, சங்கனெரி கைத்தறிப் புடவைகள், இன்னும் ராஜஸ்தான் குஜராத் , சுற்றிலும்மிருந்து கிடைக்கும் பட்டோலா , பாந்தினி புடவைகள் போன்றவற்றை கொள்முதலில் தரும் நிறுவனத்துக்கு, பெரும் தொகை அட்வான்ஸ்ஸாக தரப்பட்டு இன்னும் சரக்கு வந்து சேராமல் நிலுவையில் இருந்தது. ஆர்டர் தந்து அனுப்பி வைக்கக் கூடிய இரண்டு மாத கால அவகாசம் முடிந்து , பதினைந்து நாள் ஆகி இருக்க ஆரா இந்த விஷயத்தை கையாள வேண்டியதாக இருந்தது.
“ஆம்ஸ், அந்த தாஸ் குரூப்பில் இருந்து எதுவும் இது ரிகார்டடா எக்ஸ்பிளனேஷன் கொடுத்தாங்களா..?”
“இல்ல மேம். அவங்க லாஸ்ட் டூ ஆர்டர்ஸ் க்கும் இப்படித்தான் லேட் பண்ணிருக்காங்க. இளமாறன் சார் இல்லாதப்போ, செஞ்சிருக்காங்க. கிருஷ்ணா சார் ஒரு வார்நிங்க் கொடுத்திருக்காங்க அந்த டைம்ல.”
“ஓகே, அவங்க ரெப்பிரசன்டெட்டிவ்க்கு கால் பண்ணி என்னன்னு கேட்டு சொல்லுங்க.”
ஃபோன் செய்துவிட்டு வந்த மாலினி,
“மேடம் , சரியான ரெஸ்பான்ஸ் இல்ல. மழுப்புறாங்க.”
“சரி, அவங்க எம்டிக்கு ரிங் பண்ணிட்டு கொடுங்க,”
மாலினி , கால் செய்து ஆசிர்வாத் எம்டி ஆராதனா பேசுவதாக முகமன் வழங்கிவிட்டு, ஆராவிடம் தர,
……
“வணக்கம் மிஸ்டர், ராஜ் மோகன் தாஸ். எனக்கும் இனிய காலை வணக்கம் தான் சொல்லணும்னு ஆசை. ஆனா , வாழ்த்துல இருக்கிற இனிப்பு வாழ்க்கைல இல்லையே…?”
……
“சுத்தி பிசினஸ் நடத்துறவங்க பூரா, அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுகாரங்களா இருந்தா, எப்படி சார், ஒழுங்கா போகும். சலிப்பு தான் தட்டும்.”
……
“இப்ப உங்களுக்கு இளா ஏன் எம்டியா இல்லன்னு தெரியனுமா..? இல்ல, நான் ஏன் எம்டியா வந்து உங்களை கேள்வி கேக்குறேன்னு தெரியனுமா..? ஃபர்ஸ்ட் கொஸ்டீன்க்கு , உங்களுக்கு ஆண்சர் சொல்ல தேவையில்லைன்னு நினைக்கிறேன். ரெண்டாவது கொஸ்டீன், இப்படியே உங்களை போல ,காசை வாங்கிட்டு சரக்கு அனுப்பாம இருந்தா, கூடிய சீக்கிரம் எம்ட்டியாகிடும் கம்பெனின்னு சொல்லத் தான் கூப்பிட்டேன்.”
…….
“லாஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ்சா நீங்க, சரியான டைம்க்கு டெலிவரி தரல, வித் இன் அ வீக், நீங்க ஆர்டர்ஸ்சை டெலிவரி பண்ணலைன்னா, லீகளா நாங்க மூவ் பண்ணுவோம்.”
…….
“அந்த ரெண்டு வருஷ பிசினஸ் ரிலேஷன்ஷிப்க்காக பாவம் பார்த்துதான், உங்களோட லாஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ்கான , பிராப்பர் எக்ஸ்பிளனேஷன் இல்லாத, லேட் டெலிவரீஸ்ஸை அக்செப்ட் பண்ணிருக்கு ஆசிர்வாத்.”
……
“தட்ஸ் குட். மிஸ்டர். ராஜ்மோகன் தாஸ்.”
போனை வைத்து விட்டாள்.
“எதனால இவங்களை இளா விட்டு வச்சான்.?” ஆராவின் கேள்விக்கு,
தெரியாது சொன்ன மாலினியிடம் ,
“ஆம்ஸ் இமீடியட்டா ,ஹெட் ஆஃபிஸ்ல, இளா செகரெட்டரி ஷோபி கிட்ட கேட்டு சொல்லுங்க.”
அவள் ஷோபனாவிடம் கேட்டுவிட்டு,
“மேம். இவர் அப்பா, ஆசிர்வாத் பவுண்டர்ஸ்சோட பிரெண்ட்ஸ் ஃபேமிலியாம். அவங்க இறந்ததுக்கு அப்புறம் நம்ம கூட பிசினஸ் டச்சில் இல்ல, சோ, அவங்கப்பா திரும்ப இளமாறன் சார்க்க்கிட்ட, தாஸ் சார்காக பேசி ரெக்கமெண்ட் பண்ணினாராம். அதான் சார், கொஞ்ச நாள் விட்டு பிடிப்போம்ன்னு சொல்லிட்டாராம்.”
“ஓ, இதுல பழைய கணக்கு புது கணக்குன்னு நிறைய இருக்கே. கூட்டிக் கழிச்சு பார்த்தா வேற என்னவோ வருதே , ஒரு வேளை நான் தப்பான மூவ் எடுத்துட்டனோ…?”
இளா விற்கு தன் ஐ ஃபோனில் இருந்து ஃபேஸ் டைம், வீடியோ கால் செய்தாள்.