கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…
அத்தியாயம் 26(1)
சொல்லியது போலவே இரண்டாவது நாள் இளா வந்துவிட்டான்.
டூ த கியூட்டி டேக் கில், தங்க அரைங்ஞான் கயிறு, கிருஷ்ஷின் மகளுக்கு, குழந்தைக்கு உறுத்தாத வகையில் நளினமான வேலைபாட்டுட்டன் இருந்தது.
“புண்ணியதானம் செஞ்சிட்டு போட்டுப்போம்டா, லட்டு போட்ட, செயினையே கழட்டி வச்சுருக்கேன்.
வசம்பு,கருகமணிலாம் ஃபர்ஸ்ட் போட்டுட்டு, அதுக்கப்புறம் தான், தங்கம் ,வெள்ளி போடணும்”, சொல்லி வாங்கிக்கொண்டார். வேதா.
இளா, மற்றவர்களுக்கும் கிஃப்ட் வாங்கி கொண்டு வந்திருக்க, ஒவ்வொருவருக்கும் வாழ்த்து சொல்லி தந்தான்,
டூ த மாம் அண்ட் டாட் டேக் கோடு இருந்த கிஃப்ட் பாக்ஸ் ரோஜாவுக்கும் கிருஷ்க்கும், ஒரே டிசைனில், கப்பில்ஸ், பிரேஸ்லெட்.
டூ த கிரான்னி டேக் கோடு இருந்த கிஃப்ட் பாக்ஸ் வேதாவிற்கு,
ஒரு வைரத் தோடு.
அனைவரும் வாங்கி அவரவரதை பார்த்து கொண்டிருக்க,
“டூ த அத்தைமாவிற்கு ஒன்னும் கிஃப்ட் இல்லையா?”, இளாவின், பேண்ட் ஷர்ட் பாக்கெட்டுகளில் கையை விட்டு தேடிக் கொண்டிருந்தாள். ஆரா.
இளா, மையமாய் அவளைப் பார்த்து சிரித்தபடி ,கையை விரித்து அவள் ஆராய வழி விட்டபடி நின்றிருக்க,
ஒன்றும் கிடைக்காமல் போகவே,
“டூ த அத்தைமாக்கு ஏதாவது வேணும் இப்போவே.”
“அத்தமாவுக்கு கொஞ்சம் தோசமாவு இருக்கும் பிரிஜ்ஜில, அதை வேணும்னா கட்டி கொண்டு வந்து கொடுடா.” கிரிஷ்.
“டேய் ,அண்ணா, உன் ஃப்ரெண்ட் எனக்கு இப்பவே கிஃப்ட் கொடுத்தாகனும், இல்லைன்னா ,
அந்த பிரேஸ்லெட் உனக்கு இல்லடி.”
தன் கையை தூக்கி ஆர்ம்ஸ்ஸை தட்டி, ஆரா சண்டைக்கு ரெடி ஆக,
“சங்கிலி போடலைன்னு அந்த பக்கம் மனித சங்கிலி போராட்டம் நடத்துறாங்க போலயே… இருந்தாலும் இந்த எருமையை கட்ட, ஒரு இரும்பு சங்கிலியவாவது உன் மாமன் வாங்கிட்டு வந்திருக்கலாம்.” கிருஷ் மகளிடம் பேச,
ஆரா புருவத்தை உயர்த்தி முறைக்கவும்,
“கலவர பூமியில நமக்கு என்ன வேலை, குட்டிமா வாடா, நாம உள்ள போயிடுவோம்,”
குழந்தையை தூக்கி அதனிடம் பேசியபடியே எஸ்ஸாகி விட்டான்.
“டூ த அத்தமாவிற்கு எதுவும் இல்லைல, உன் பேச்சு கா,”
எட்டி அவன் காலிலேயே ஒரு மிதி மிதித்து விட்டு ரூமுக்கு போய்விட்டாள்.
ரோஜா, “அண்ணா, லட்டுக்கு ஒன்னுமே வாங்கலையா” சைகையில் கேட்க,
“இரு உள்ள போயிட்டு வந்து சொல்றேன் “,
சொல்லிவிட்டு , ஆரா ரூமுக்குள் நுழைந்தான் இளா.
“ஓய் லட்டு,”
“ஒரே ஒரு லட்டு வாங்கிட்டு வந்து திங்க கொடுக்க கூட துப்பில்ல, அப்புறம் என்ன ஓ லட்டு ,ஏ லட்டுன்னு கூப்பிட்டுக்கிட்டு,”
நொடித்தாள்.
“ஏன் கோபமா, என் லட்டுக்கு,?”
“இல்ல மிக்க மகிழ்ச்சி… ஈ…”
சொல்லியபடி தலையை சீப்பால் வாரி, வாட்சை கட்டி தயாராக,
“இத்தனை நாள் கழிச்சு வந்துருக்கேன், என்னை விட்டு எங்கடி கிளம்புற..?”
“அதான் எனக்கு ஒரு கிஃப்ட் கூட இல்லையே. அப்புறம் என்ன..? நான் கோவமா கிளம்புறேன் ஆராஸ்க்கு.”
“யார் சொன்னா உனக்கு கிஃப்ட் இல்லைன்னு.”
“அதான் பாக்கெட் பாக்கேட்டா துழாவினனே , தரை தட்டுச்சே.”
“அங்கெல்லாம் தேடினா எப்படி கிடைக்கும். நீ கேட்க்குற விதத்தில் கேட்டிருந்தா கிடைச்சிருக்கும்.”
“ஓ.. அப்படி வர்றியா..? இளா சார். பட்டு குட்டியோட செல்ல அத்தகுட்டிக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்துருக்கீங்கன்னு காட்டுங்க சார். பிளீஸ்.” அவள் ஆயிரம் சார் போட்டு பணிவாய், மரியாதையாய் கேட்க,
“அயம் வெரி சாரிடா லட்டுக்குட்டி,
டூ த அத்தமாவுக்கு எதுவும் வாங்கிட்டு வரலை.”
“க்கும்..இதை சொல்லத்தான் இவ்வளோ பில்ட் அப்பா. போடா.” சொல்லி விட்டு நகர,
“எங்க போற, குட்டி பொண்ணு, அத்தைக்கு தான் கிஃப்ட் இல்ல.
ஆனா டூ மை கண்மணிக்கு கிஃப்ட் இருக்கு. அது உன் கண்ணை மூடினா உனக்கு கிடைக்கும்.” சொல்லி மந்தகாசமாய் இளா புன்னகைக்க,
“அடேய், கிஃப்ட்டுங்கிற பேர்ல எதுவும் கில்ஃபான்ஸ் வேலை செய்ய பிளான் போடுறியா. நடக்காதுடா.”
சொல்லி , கைகளால் கண்களோடு உதட்டையும் இறுக மூடிக் கொள்ள,
“ரொம்பத்தான் உஷார்டி நீயி,” சொல்லி,
அவளைப் பார்த்து சிரித்தபடி,
“என் கண்மணிக்கு. சின்ன மின்மினி.”
கிசு கிசுத்துவிட்டு,
தன் கழுத்தில் இருந்து கழட்டி,
ஆராவின் கழுத்தில் அந்த பிளாட்டினம் செயினை போட்டு விட்டான். அதன் ஹார்ட் வடிவ பெண்டன்ட் , கண்ணை உறுத்தாத இளம் பச்சை நிறத்தில் நிஜமாகவே ஒளிர்ந்து மின்மினி போல இருந்தது.
“இதை அங்கேயே ஹாலில் , தந்திருக்கலாம்ல, ரூமுக்கு வந்து தனியா தந்து . ரொம்ப பிகு பண்றடா நீயி. ஆனாலும் அழகா இருக்கு, ஐ லவ் இட். தாங்க்ஸ் இளா.” ஆரா
“இதை ஹாலில் தந்தா, கண்மணியோட மின்மினி ஒர்க் அவுட் ஆகுதா இல்லையான்னு கண்டு பிடிக்க முடியாதே. பேசியவாரே, அவள் புறம் பூனையாய் இளா நகர,”
“என்னடா சொல்ற?, மறுபடியும்,..”
மீண்டும் கைகளால் வாயைப் பொத்திக்கொண்டு,
“டேய், நீ கிளம்பு. இப்பல்லாம் நீ சரி இல்ல,”
“என்ன சரி இல்ல,” இளா
“நீ தான் , ஒரு மாதிரி பாக்குற, பேசுற,”
“எது மாதிரி..?”
“ஆஹா , சாருக்கு ஒன்னும் தெரியாது பாரு. ரொம்ப பன்ற நீயி.”
“வாயில இருந்து கைய எடுடி.”
“முடியாது.”
“எனக்கு டெஸ்ட் பண்ணனும்.”
“என்னத்தடா. நான் வரல இந்த விளையாட்டுக்கு, நீ தனியா டெஸ்டிங்கை போட்டுக்க,”
விலகி ஓடப் பார்க்க,
இழுத்து பின்பக்கத்தில் இருந்து ஒரு கையால் கட்டி, இறுக்கி நிறுத்தி கொண்டவன்.
அவள் முடியை கோதி ஒதுக்கி விட்டு, காதுக்கும் தோளிற்கும் இருந்த இடைவெளியில் அவன் மூச்சுக் காற்றோடு கலந்து, அவளை சிலிர்த்தெழ செய்யும் ஒரு முத்தமிட்டான்.
ஆராவிற்க்கு அடி வயிற்றிலிருந்து மேல் நோக்கி ஆயிரம் பட்டாம்பூச்சிகள் உயிர்த்தெழுந்து பறக்க, இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
அவன் அணிவித்த செயின் பெண்டன்ட்டில் இருந்து பிங்க் நிறத்தில் ஒளி வீச , அவன் கையில் அணிந்திருந்த, பிரேஸ்லெட் பெண்டன்ட்டும் அதே நிறத்தில் இதய வடிவில் ஒளிர்ந்து மின்னியது.
அவள் தன் பெண்டன்ட்டை பிடித்து கொண்டு,
“என்னடா மேஜிக் பண்ற? என்ன நடந்துச்சு இப்போ.?”
கண்களை விரித்தாள்.
“உனக்கும் எனக்கும் டிச்கான் இருக்கா இல்லையான்னு உனக்கு தெரிய வேண்டாமா, அதுக்குத்தான்.
இது அட்ரினலின் ரஷ் மானிட்டர். ஹார்ட் பேஷண்ட்ஸ்க்கு, அட்ரினலின் ரஷ் ஆகி, ஹார்ட் வேகமா துடிச்சு, எதுவும் பிராப்ளம் ஆக போகிற மாதிரி இருந்தா, அவங்க டியர் ஒன்ஸ் இந்த பிரேஸ்லெட் மூலம் கம்யூனிகேட் பண்ண இந்த மானிட்டர்ரை தயாரிச்சு இருக்காங்க.”
“அதை ஏன்டா எனக்கு போட்டு விட்ட, ஹார்ட் பேஷன்ட்டாடா நான். பாவி.”
“நான் தான் லவ் பேஷண்ட்டா உன்கிட்ட மாட்டி சிக்கி சின்னாபின்னமாகுறேனே. அதை தடுத்து என் உசுரை காப்பாத்திக்கதான் இந்த மானிட்டர். இது எப்போலாம் லவ் சிம்டம்ஸ் அதிகமாகி, உன் ஹார்ட் வேகமா துடிக்குதோ, அப்போலாம் என் பிரேஸ்லெட்டில இந்த பிங்க் ஹார்ட் துடிக்கும். சிம்பிள்.” சொல்லி தோளைக் குலுக்க,
“ரைட்டு, காரியக்காரனா உனக்கு மட்டும் வேலை நடக்குற மாதிரி வாங்கிட்டு வந்திருக்க, போ, நான் கழட்டி போடுறேன். எனக்கு இந்த செயின் வேணாம். உளவு பார்க்குறியா ஆராவை.” அவள் கழட்ட போக,
“வேணாம் லட்டு, உனக்கு ஏதாவது பிரச்சனை ஆகி, பயம் வந்து அட்ரினலின் ரஷ் அதிகமானா, ரெட் கலர்ல அலார்ம் அடிக்கும். மொபைல் மாதிரி எந்த ஊர்ல இருந்தாலும் எனக்கு கனெக்ட் ஆகும். உடனே தெரிஞ்சுடும். அவசரப்பட்டு கழட்டிடாதடி. பிளீஸ்.”
ஏறக்குறைய கத்தினான்.
“அதான பார்த்தேன். விஷயம் இல்லாம ஒரு வேலையும் செய்ய மாட்டியே. என் மேல இளாவுக்கு அக்கறை இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாதா. பயந்துட்டியா..? கழட்டமாட்டேன் , சும்மாடா.” ஆரா சிரித்தாள்.
“என்னம்மா அல்லு விட வைக்கிற மனுஷனை. ரொம்ப தேறிட்ட நீ கேடி.”
“ஆசிர்வாத் எம்டி, ஆராஸ் பிராப்பிரைட்டர். சோ பிராப்பர் ஹிந்தி பண்டிட்டா மாறிட்டா இந்த ஆரா. இப்போ ஆல் ஏரியாவிலும், மேடம் குயினுமா. இருக்காதா பின்ன.” இல்லாத காலரை தூக்கி ஆரா கெத்து காட்ட,
“ஓஹோ, அந்த அளவுக்கு ஆயிடுச்சா. அப்ப அடுத்த டெஸ்டிங்கை போட்டு, மேடம் மேரேஜ்ஜுக்கு ரெடியான்னு பார்த்திர வேண்டியதுதான்.”
சொல்லிவிட்டு அவள் உதடுகளை வெறித்தபடி அவள் அருகில் செல்ல,
அவனை தள்ளி விட்டு , விலகி ஓடியபடியே,
“போங்கடா கொங்காங்கோ. நான் வரலப்பா இந்த ஆட்டத்துக்கு.” சொல்லியபடி சிரித்து கொண்டே, வெளியே ஓடினாள் ஆரா,
இளா அவளைப் பார்த்து புன்னகைத்தபடி,
“எத்தனை நாளைக்குன்னு பாக்குறேண்டி.”
சொல்லியபடி வெளியே செல்ல, அவன் பிரேஸ்லெட்டில், பிங்க் நிற, ஹார்ட் அழகாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
ஆரா வெளியே ஓடி வர மோதிக் கொண்டது ரோஜாவின் மேல். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கையில் ஏந்தியபடி, ரோஜா.
“ஏன் இங்க நிக்குறீங்க அண்ணி.” ஆரா கேட்க,
“ஷூ… அங்க பாரு, சத்தம் போடாமல் இரு,” சைகை காட்டினாள்.
அங்கே வேதா கிருஷ்ஷிடம் சீரியஸாக எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். கிருஷ் கோபமாக முறைத்து கொண்டிருந்தான்.
ஆரா பார்த்ததும், “மாதாஜி என்ன பிரச்சனை? என்ன ஓடிட்டு இருக்கு? ஏன் இப்படி அண்ணா ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மூஞ்சி வச்சிருக்கான்?”. கேள்வி எழுப்பினாள்.
வேதா, “அவனையே கேளு. இஞ்சிய தின்ன குரங்கே பரவாயில்ல. இப்படி கழுதைப்புலி மாதிரி, உன் அண்ணன் எல்லாத்துக்கும் என்னையே முறைச்சா ஆச்சா.?” அவர் நியாயம் வைக்க.
“என்னாச்சு டாலி எதுவும் பிரச்சனையா? இவன் என்னா சொல்றான். ஒரே ஒரு வார்த்தை ம்னு சொல்லு, ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுருவோம்.” இளா
“சீக்கிரம் சேர்த்து விடுங்கண்ணா, இம்சை பண்றார். மீ என்ன சொல்ல வர்றாங்கன்னு தெரிஞ்சுக்காம லப்போ திப்பொன்னு கத்துறாரு.” ரோஜா நியாயம் சொல்ல,
“அப்போ, எனக்கு இந்த வீட்டில மரியாதை இல்லை. யாருக்கும் நான் வேணாம். நான் சொன்னா கத்துறேனா.?
கொடுடி என் பொண்ணை, நாங்க எங்கயாச்சும் போயி ஆனந்த யாழை மீட்டிக்கிறோம். நான் கோவமா வீட்டை விட்டு கிளம்புறேன்.”
சொல்லியபடி தன் பெண்ணை வாங்க,
அம்மா கையில் தூங்கி கொண்டிருந்த சுகம் பறி போனதில் வீல் என்று கத்தியது.
“உனக்கும் நான் வேனாம்ல,”
“கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி.
குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி…”
கிருஷ் பாட,
“பெரிய அண்ணாமலை ரஜினிகாந்த் இவரு , பெண் புறா பாட்டு பாடிட்டு உக்காந்துருக்கார்.
தூங்குற பிள்ளையைத் தூக்கி எழுப்பிவிட்டு கத்த வச்சுட்டு, அது என்னவோ உன் கூட வர மாட்டேன்னு சொன்ன மாதிரி, ஏன்டா இப்படி பில்டப் கொடுத்துட்டூ திரியுர. உன்னயலாம் ஹாஸ்டல்ல சேர்க்க வேண்டாம், இப்படியெ இன்னும் கொஞ்ச நாள் பாடிக்கிட்டே திரி, நான் பீப்பீ ஏறி ஹாஸ்பிடல்ல சேர்ந்திடறேன்.” வேதா,
“நீ ஹாஸ்டலுக்கு போ, ஹாஸ்பிடலுக்கு போ,
அதுலாம் எனக்கு தெரியாது
என்னைய நல்ல அம்மா, பொண்டாட்டி, புள்ளை இருக்கிற வீடா பார்த்து தத்து கொடுத்துட்டு போ.”
மீண்டும்
“ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே”
தன் மகளைப் பார்த்து பாட்டை தொடர,
குழந்தை இன்னும் அதிகம் பயந்து அழ ஆரம்பித்தது.
“புள்ளைய ஏன்டா இப்படி பயமுறுத்துற?” கேட்டு அவன் வாயைப் பொத்திக்கொண்டு, வேதாவிடம், இளா,
“அப்படி என்னதான் நடந்துச்சு டாலி, இவன் இப்படி பாடி உசுர எடுக்கிற அளவுக்கு..?”
“வைத்தி மாமா பார்க்க வரேன்னு சொல்லி போன் பண்ணிட்டு இருக்காருடா? ரெண்டு மூணு தடவை அவர் கூப்பிட்டும் நான் சரியா பேசல. இப்போ சீமாக்கு கல்யாணத் தடங்கல் இருக்குன்னு திருமணஞ்சேரி கோவிலுக்கு கூட்டிட்டு வராறாம். அப்படியே இங்க வந்து குழந்தையை பாக்குறேன்னு கேட்டார். நான் பதில் சொல்லாம வச்சுட்டேன். அதுக்கு தான் இவ்வளவு ரவுஸ் பண்றான், இந்த வீணாப் போனவன்.” முதுகில் ரெண்டு அடி வைத்தார்.
“அதுலாம் அவுங்க வந்து கிழிச்சது போதும். அவர் பொண்ணுக்காக திருமணஞ்சேரி, கோவிலுக்கு வந்தார்ன்னா அப்படியே சாமியை கும்பிட்டோமா சக்கரை பொங்கலை வாங்கி நக்கினோமான்னு கிளம்பி வந்த வழியே போக வேண்டியது தானே. இடையில் என் பொண்ணை எதுக்கு பார்க்க வர்றாராம். அதெல்லாம் எல்லா சீனையும் ஆல்ரெடி பார்த்தாச்சு. என்ன அண்ணனும் தங்கச்சியும் அடுத்த பாசமலர் பார்ட் டூ க்கு ஒத்திகை பார்க்குறீங்களா..? பின்னுடுவேன் பின்னி.” மீசையை முறுக்கியபடி, கிருஷ் குதறினான்.
“ஒரு லூசு பயலை பெத்து வச்சுக்கிட்டு, நான் படுற பாடு இருக்கே.”
தலையில் அடித்து கொண்டு,
“ஏன்டா புரிஞ்சுதான் பேசுறியா இல்ல புரியாம பேசுறியா..? நான் என் அண்ணனை பாக்கனும்னு நினைச்சுட்டா எந்த கொம்பன்டயும் பர்மிஷன் கேட்டு நிக்க வேண்டிய அவசியம் இல்லை. வந்துட்டான் மிரட்டுறதுக்கு. இதுல மீசை வேற, பெரிய இருபத்து மூணாம் புலிகேசியாட்டம்.”
“நீயே கேளுடா இளா,”
இளாவிடம் நியாயம் கேட்டவர்,
“இவன் நான் என்னமோ அவருக்கு ஃபோனை போட்டு வர சொன்னது மாதிரி என்கிட்ட சண்டை பொட்டுகிட்டு இருக்கான்.
அவரு அந்த சீம சித்திராங்கிக்கு வேண்டுதல் வைக்க, மத்த கோவிலுக்கு போறதுக்கு முன்ன , இங்க பேராவூரணியில இருக்கிற குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வச்சு மாவிளக்கு போட்டுட்டு போறாராம். அப்படியே இங்க வந்துட்டு சேர்ந்து குல தெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு சொல்றார். எனக்கு பொறந்த வீட்டு குல தெய்வம், வரமாட்டேன்னு எப்படி சொல்றது..? அவரை வரக்கூடாதின்னு எப்படி தடுக்கிறதுன்னு யோசனையா இருக்கு, இதுல இது வேற என் கிட்ட மல்லுக்கு நிக்குது.”
அவர் பாட்டுக்கு புலம்ப,
“இதுல யோசிக்க என்ன இருக்கு மாதாஜி. அங்கிள்ள உடனே வர சொல்லுங்க.” ஆரா மீண்டும் சப்போர்ட்டினாள்.
“ஏன் வாங்கினது மறந்து போச்சாடி அதுக்குள்ள. வர சொல்லுன்னு அசால்ட்டா சொல்லுற. எங்கத்தை வந்துச்சுன்னா இந்த தாய்க்கிழவிக்கு பொங்கல் வச்சு, உன் மண்டையை உடைச்சுத்தான் முதல்ல மாவிளக்கு போடும். அதை முன்னாடி எல்லாரும் புரிஞ்சுக்கங்க.”
கிருஷ் ஆராவிடம் ஆதங்கத்தை காட்ட,
இளா கிருஷ்ஷிடம் திரும்பி,
“இங்க பாருடா மச்சான் இப்படியெல்லாம் பயந்துகிட்டு இருக்க முடியாது. நம்ம டாலியோடு அண்ணா அவரு . அவருக்கும் அவர் தங்கச்சி கூட பேசணும் பழகணும்னு ஆசை இருக்குமில்ல. அவர் வந்து பார்த்துட்டு போறதுனால இங்க ஒன்னும் குடி முழுகிப் போய்டாது. உன் வாய்க்கு முன்னாடி உங்கத்தைலாம் தூசி. ஃப்ரீயா விடு. சமாளிச்சுக்கலாம். அவரு பாட்டுக்கு எப்போதும்போல வரப்போக இருக்கட்டும்டா. உறவுகளுக்குள்ள இதெல்லாம் சகஜம். இப்படியே இருந்தா நம்மளை சொந்தம்ன்னு சொல்ல சுத்தி யாரும் இருக்க மாட்டாங்க.”
“அப்படி உறவுக்குள்ள எதுவும் விரிசல் ஏற்பட கூடாதுன்னு நினைச்சா ஆண்டாள் பாட்டிய, ஏன் சார் நீங்க, மன்னிக்கல..?” கிருஷ் கேட்க,
“ஆண்டாள் பாட்டியும் வைத்தியநாதன் அங்கிளும் ஒன்னாடா ? ஏன்டா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடற..?
நம்ம லட்டுவை இவ்வளவு ஹர்ட் பண்ணிணதுக்கு, வேற யாராவதா இருந்திருந்தா என் டீலிங்கே வேறையா இருந்திருந்திர்க்கும். அப்பாவோட அம்மாங்கிறதால் தான் அவங்களை அத்தோட விட்டேன்னு சந்தோஷப்படு.” இளா விளக்கத்தை தர,
“மாதாஜி அங்கிள்க்கு போன் பண்ணி, வர சொல்லுங்க .என்னால தான் நீங்க உங்க அண்ணா ஃபேமிலி கூட பேச முடியல, பழக முடியலன்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்க கிட்ட பேசுங்க. எப்போதும்போல அவங்க கிட்ட அன்பா இருங்க. என்னால நீங்க பிரிஞ்ச மாதிரி இருக்கக்கூடாது. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு. பிளீஸ் எனக்காக பேசுங்க.”
ஆரா கெஞ்ச,
“யோசிங்க டாலி. மத்தவங்களை விடுங்க, அவருக்கும் உங்களை விட்டா வேற யார் இருக்கா. ? உங்களுக்குன்னு இருக்கிற ஒரே பொறந்த வீட்டு சொந்தம்.” இளா மீண்டும் வலியுறுத்தினான் வேதாவிடம்.
இத்தனை மாத பிரிவு வேதாவின் கோபத்தை முடிந்த அளவு முழுங்கியிருக்க, ஆனாலும்
வேதா, சம்மதத்திற்கு, கிருஷ்ஷையே பார்த்திருக்க,
சரி கண்ணசைவில் சம்மதம் சொன்னான் கிருஷ்.
அடுத்த இரண்டாவது நாளே வைத்தியநாதன் வந்து சேர்ந்தார், தன் குடும்பத்தோடு.
கற்பகம் இயல்பாய் காட்டிக்கொள்ள, பெரும் பிரயத்தனங்கள் செய்ய, சீமாவிற்கு கடந்த ஒரு ஆண்டு ஓரளவு பக்குவத்தை தந்திருந்ததில் இயல்பாகவே அலட்டல் இல்லாமல் பழகினாள்.
கற்பகம் தோட்டத்திற்கு பின்னே செல்ல, அந்த நேரத்தில்,
ஆராவிடமும் இளாவிடமும் சீமா மன்னிப்பு கேட்டாள்,
“அத்தை கண்டிச்சப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு, வலுக்கட்டாயமா நமக்கு பிடிச்சத மத்தவங்க மேல திணிக்க கூடாதுன்னு, இந்த ஒன் இயரா ஒரு கிளோத்திங் கண்சர்ன்ல ஒர்க் பண்றேன். ஓரளவு, வாழ்கைன்னா என்னன்னு கத்துட்டு வரேன். எது முக்கியம்னு தெரியுது. சோ ஐயம் சாரி.” எல்லார்க்கிட்டேயும் மன்னிப்பு கேட்க,
எல்லாருக்கும் தாங்க முடியாத ஆச்சர்யம்.