Kannan Rathai – 26

Kannan Rathai – 26

அத்தியாயம் – 26

தான் குரலை மட்டும் கேட்டு காதலித்த பாலாவும் அவனே. தன் காதலை உதறிவிட்டு கரம்பிடித்த கிருஷ்ணாவும் அவனே என்று நினைக்கும் நினைவே தித்திப்பாக இருந்தது அவளுக்கு. இத்தனை நாளாக மனதில் இருந்த பாரம் குறைந்துவிட அவனுடன் இழைய தொடங்கினாள்.

அவள் கண்களில் கண்ணீரோடு நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க கணவனுக்கு மனம் உருகிவிட்டது. அவளின் பளிங்கு முகத்தை இரு கரங்களில் ஏந்தியவன் நிறுத்தி நிதானமாக முத்தமிட அவள் மெல்ல மெல்ல அவளின் கைகளில் குழைய தொடங்கினாள்.

அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் வந்தபோதும் தன்னுடைய பாலா என்ற எண்ணத்தில் அவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைக்க அவளிடமிருந்து சட்டென்று விலகியவன் அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

அவனின் பொறுமை எல்லாம் பறந்துவிட இப்போதே இந்த நிமிடமே அவள் தனக்கு வேண்டும் என்று கேட்டது அவனின் மனம். அவள் அவனின் பின்னோடு செல்ல தன்னறைக்குள் நுழைந்ததும் அவளின் முகத்தைப் பார்த்தான்.

அவளும் நிமிர்ந்து அவனின் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க அவளின் பார்வையில் வழிந்த காதலை உணர்ந்தவன் அவளை இருகரங்களில் ஏந்தி தட்டலமாலையாக சுற்றிவிட்டு, “மது எனக்கு இப்போவே நீ வேணும்” என்றான் கொஞ்சும் குரலில்.

அவள் அமைதியாக இருக்கவே, “ஏய் பிளீஸ் மது. மனுஷனை இதுக்குமேல் சோதிக்காதே. என்னால முடியலடி” என்றவன் அவளிடம் கெஞ்சிட அப்போதும் தன் விழிகளில் சம்மதம் தெரிவிக்காமல் அவனையே பார்த்தது.

அவளின் விழிகள் உணர்ச்சி மிகுந்த விழிகள். அதில் வந்து செல்லும் மாற்றம் அனைத்தும் அவன் அறிந்ததே. சொல்ல போனால் மனப்பாடம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவளின் விழிகளின் மொழி அவனுக்கு பரிச்சியம்.

அவன் அவளை இமைக்காமல் நோக்கிட ஒரு நொடி ஒரே நொடி அவளின் கண்களில் மின்னல் மின்னி மறைந்தது. அதைக் கண்டுவிட்ட கிருஷ்ணாவை அதன்பிறகு தடை சொல்ல அவளால் முடியாமல் போனது. ஒவ்வொரு நொடியும் அவனின் விரல்கள் செய்த மாயத்தில் மங்கை அவள் சிவந்த தாமரை மலரென்று மலர்ந்தாள்.

அவளோடு கூடிய கூடலில் தெரிந்தது அவனின் காதல். அவளை பூப்போல கையாண்ட போதும் அதிலும் ஒரு அசுர வேகம் உணர்ந்து கொண்டாள் பெண்ணவள். நிமிடங்கள் கரைந்து செல்ல அவளோடு கரைந்து கலந்துவிட்ட கிருஷ்ணா அவளைவிட்டு விலகும்போது அவள் வாடிய கொடியாக மாறியிருந்தாள்.

ஆனால் அவளின் முகம் அதற்கு நேர் மாறாக அவ்வளவு சோர்விலும் ஒருவிதமான பளபளப்புடன் மிளிர்ந்தது. அவளின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தவன், “ஸாரிடி! ரொம்ப கஷ்டபடுத்திடேனா?’ என்று அவளின் கூந்தலை காதோரம் ஒதிக்கி அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவள் மறுப்பாக தலையசைத்துவிட்டு, ‘அன்னைக்கு ஏன் என்னை நீ அங்கே சந்திக்கல’ என்று கேட்க, “இதோ இப்போ இருக்கும் நெருக்கம் அங்கே கிடைக்குமாடி? அதன் நான் உன்னை பார்க்காமல் அனுப்பிட்டேன்” குறும்புடன் அவன் கண்சிமிட்ட அவளோ கோபத்தில் அவனின் மார்பில் குத்தினாள்.

அவளிடம் அடியும் வாங்கிவிட்டு கலகலவென்று சிரித்தவன், “மது சும்மா அடிக்காதே வலிக்குது” என்று சிணுங்க அவனைவிட்டு விலகிய மது குளியலறைக்குள் சென்று மறைந்தாள். அவள் குளித்துவிட்டு வரும்போது காலிங்பெல் அலற அப்போதுதான் மணியைப் பார்த்தவளுக்கு வெக்கத்தில் முகம் சிவந்தது.

நடுஜாமம் வரை அவனோடு கூடி கழித்து பேய்கள் உலவ செல்லும் நேரத்தில் குளித்த தன்னை நினைத்து அவள் சிலையென நின்றிருக்க, “மது பாவம்டி உங்க அண்ணா. நம்மள நம்பி வந்திருக்கான் அவனை நடுத்தெருவில் போய் படுக்க வைத்துவிடாதே” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

அவனின் பேச்சில் நடப்பிற்கு வந்தவள் ஓடிசென்று கதவைத் திறக்க அங்கே நின்றவனோ, “நைட் நான் வெளியே சாப்பிட்டுட்டேன் மது. என்னை ராகவ் ரூமிற்கு கூப்பிடான் நான் அங்கே போறேன்மா. அதை சொல்லத்தான் வந்தேன்” சிரித்தபடி உணவுகளை அவளிடம் கொடுத்துவிட்டு செல்லும் அண்ணனை பார்த்து அவளுக்கு வெக்கம் இன்னும் அதிகமானது.

அவள் உணவு பொட்டலத்துடன் கதவடைத்துவிட்டு திரும்ப அவளை இமைக்காமல் நோக்கிய கிருஷ்ணாவைக் கண்டு அவளின் கால்கள் அசைய மறுத்தது. அவனின் பார்வையில் ஒரு இனம்புரியாத தேடல்.

இரண்டே எட்டில் அவனை அடைந்து அவனின் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள அவனின் கரங்களும் அவளை வளைத்து அரவணைத்துக் கொண்டது.

அவனின் இதயத்துடிப்பை உன்னிப்பாக கவனித்த மது அவன் எதிர்பாராத நேரத்தில் அவனின் நெஞ்சில் இதல்பதிக்க, “ஏய் என்னடி முத்தம் எல்லாம் கொடுக்கிற..” என்று அவன் அவளின் முகத்தை நிமிர்த்து பார்த்தான்.

அவளின் முகம் சிவந்து செங்கொன்றை மலர்களுடன் போட்டிபோட, “மது..” என்றவன் அவளை இரண்டு கரங்களில் அள்ளிக்கொண்டு தன்னுடைய அறையை நோக்கி நடக்க, ‘ணாஷ்ருகி யூ வ்ல ஐ..’ என்று இதழசைவுடன் அவனின் கரத்தில் மாலையாகக் கோர்த்துக் கொண்டாள்/

“தும டூ யூ வ்ல ஐ..” என்றவனும் குறும்புடன் கண்சிமிட்டினான். என்றும் இல்லாத ஒரு விதமான மௌனநிலை இருவரின் இதழ்களை மௌனமாக்கிவிட இதயங்கள் வேகமாகப் பேசிக்கொண்டது..

அவளின் மனதை அறிந்த தருணத்தில் அவளை தன்னவளாக மாற்றிவிடும் முயற்சியில் மீண்டும் இறங்கிய கிருஷ்ணாவிற்கு தடை சொல்லாமல் தன்னை அவனுக்கு மனதாரக் கொடுத்தாள் மது. மறுநாள் பொழுது விடியும் வரை அவர்களின் தேடல் தொடர்ந்தது.

மறுநாள் விடியலில் அவளிடம் தோற்று காதலில் வெற்றி அடைந்த கிருஷ்ணா அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டு விழிமூடினான். தங்களின் வாழ்க்கையை புரட்டிபோடும் நிகழ்வுகள் இனி நடக்க போகிறது என்று அறியாமல் அவனின் மார்பில் தலைசாய்த்து நிம்மதிக்காக உறங்கினாள் மது.

வழக்கத்திற்கு மாறாக அன்று சீக்கிரமே விழித்த விஷ்ணு சிந்தனையுடன் ஜன்னலோரம் நின்றிருக்க குளித்துவிட்டு வெளியே வந்த ராகவ், “என்னடா யோசனை” என்றான் தலையைத் துவட்டியபடி.

“இல்ல இன்னைக்கு ஊருக்குப் போகணும். மதுவை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாக இருக்கு” என்றான் விஷ்ணு கவலையுடன்.

“அவளைப்பற்றி உனக்கு என்னடா கவலை” என்றான் ராகவ் சலிப்புடன்.

“நேற்று இரவு பன்னிரண்டு மணிக்கு தலைக்கு குளிச்சிட்டு வந்து நிற்கிறா. நான் கொஞ்சம் பதறியே போயிட்டேன். அவளுக்கு ஆறு மணிக்கு மேல் குளித்தால் சேராது ராகவ்” என்றான்.

அவனின் குரலில் வருத்தத்தை உணர்ந்த ராகவ், “நேற்று ஏதாவது சண்டையா இருக்கும். அனேகமாக பாலா நான்னு உண்மையைச் சொல்லி இருவருக்கும் இடையே கைகலப்பு கூட ஆகியிருக்கலாம்” என்றான் அவன் ஏர்போர்ட் செல்ல தயாரான வண்ணம்.

அவனுக்கு அதுதான் தோன்ற, “சரிடா என்னன்னு நம்ம போய் பார்க்கலாம். நீ ரெடியாகு நான் குளிச்சிட்டு வரேன்” என்று குளியலறைக்குள் நுழைந்தான். கொஞ்ச நேரத்தில் இருவரும் தயாராகி வெளியே வந்தனர்.

பிரீத்தி உணவுகளை தயார் செய்துவிட்டு மதுவைத் தேடி செல்லும் முன்னே அங்கே வந்து சேர்ந்தான் விஷ்ணு.

“நீங்க இன்னைக்கே ஊருக்கு போகணுமா?” என்று பார்வையில் வருத்தத்துடன் அவனை இமைக்காமல் நோக்கிட விஷ்ணுவின் மனம் அவளுக்காக தவித்தது.

“பிரீத்தி இன்னும் ஒரு மாதம்தான் நான் மறுபடியும் இந்தியா வந்துவிடுவேன், அதுவரை நீ கொஞ்சம் பொறுமையாக காத்திரும்மா” என்று சொல்ல அவளும் கலங்கிய விழிகளோடு சரியென்று தலையசைக்க ராகவ் அறைக்குள் நுழைந்தான்.

“என்ன விஷ்ணு இன்னைக்கு ஊருக்கு போறதானே” என்றான் கேள்வியாக.

அப்போது நடப்பிற்கு திரும்பியவன், “ஆமா ராகவ். தங்கையின் பிரச்சனை எல்லாமே முடிந்தது. இனிமேல் கிருஷ்ணா அவளை பத்திரமாக பார்த்துக்குவான் அந்த நம்பிக்கை இருக்கு” என்றவனின் குரலில் மீண்டும் கலக்கமே.

அப்போதுதான் பிரீத்திக்கு மதுவின் நினைவு வர, “இந்த மது பாருங்க இன்னும் தூங்கறா. நான் போய் எழுப்பி சாப்பிட வர சொல்றேன்” என்று நகர்ந்தவளை கண்டு இரண்டு ஆண்களும் பதறினார்.

‘இந்த பயபுள்ள இந்நேரம் என்ன நிலையில் இருக்கோ’ என்ற எண்ணத்துடன் விஷ்ணுவை நோக்கிட அவனும் அதே சிந்தனையில் ராகவைப் பார்த்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்வையை பரிமாறிக்கொள்ளும் நேரத்தில் பிரீத்தி அவர்களின் வீட்டிற்கே சென்றிருந்தாள்.

அப்போதுதான் அவள் சென்றதை கவனித்துவிட்டு, “விஷ்ணு இப்போ போய் கதவைத் தட்டின கிருஷ்ணா என்ன கோபத்தில் எப்படி திட்டுவான்னு தெரியல.. நீ போய் பிரீத்தியை கூட்டிட்டு வாடா” என்றான் வேகமாகவே.

அவனின் பேச்சில் நடப்பை உணர்ந்து அவளின் பின்னோடு ஓடிய விஷ்ணு அவள் காலிங்பெல் அடிக்கும் முன்னரே அவளைத் தடுத்து நிறுத்தி, “ஏய் பிரீத்தி அவளே எழுந்து வருவா. நீ வா நம்ம சாப்பிடலாம்” என்று பிரீத்தியின் வழியை மறைத்து விஷ்ணு அவளை இழுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு செல்ல ராகவ் சிரிப்புடன்.

“ஏன் விஷ்ணு இப்படி பண்ற. கிருஷ்ணா அண்ட் மது இருவரும் இருந்தா இன்னும் நல்ல கலகலப்பா இருக்கும்” என்று பிரீத்தி வருத்தத்துடன் கூற,

“கலகலப்பா கைகலப்பு ஆகாமல் இருந்தா அதுவே போதும் சாமி” என்று ராகவ் கடுப்புடன் கூற விஷ்ணுவோ சிரிப்பை அடக்க முயன்றும் முடியாமல் சிரித்துவிட்டான்.

பிரீத்தி இரு ஆண்களும் எதற்காக சிரிக்கின்றனர் என்று புரியாமல் குழப்பத்துடன் இருவரையும் கேள்வியாக நோக்கிட, “ஏய் மக்கு மடசாம்பிராணி. நேற்று மாடியில் கிருஷ்ணா என்ன பேசினான் என்று தெரியும் இல்ல” என்றான் அவளின் மீது பார்வை பதித்தான் விஷ்ணு.

அவன் எதை சொல்கிறான் என்று புரியாமல், “அவன் தான் பாலா என்று எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சே. இன்னும் வேற என்ன தெரியனும்” என்றாள் அலட்சியமான பாவனையுடன்.

அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க என்று தெரியாமல் விஷ்ணு குழம்ப ராகவோ, “அது நமக்கு தெரியும். அவளுக்கு தெரியாது. இந்நேரம் சண்டை சும்மா சூப்பராக நடந்திட்டு இருக்கும்” என்றான் கிருஷ்ணா அடிவாங்குவதை மனக்கண்ணில் பார்த்தபடி.

அவனின் பேச்சைக் கவனிக்காத பிரீத்தி அவனின் கைபற்றி அமரவைத்து, “எங்கே போற ஒழுங்கா சாப்பிடு” என்று இருவருக்கும் பரிமாற அப்படியே பேச்சு திசைமாறிவிட நிம்மதியாக உணர்ந்தனர் ஆண்கள் இருவரும்.

அவர்கள் மூவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தபோது விஷ்ணுவின் செல் அடித்தது. அவன் திரையை நோக்கிட அதில் ஒளிர்ந்த இலக்கத்தை கண்டதும் இவனின் முகம் பிரகாசமானது.

“மச்சான் இன்னும் தூங்கிட்டா இருக்கிற. காலையிலேயே உன்னோட தங்கை எழுந்து சாப்பாடு செய்துட்ட. நீ ராகவை கூட்டிட்டு வீட்டுக்கு வா. உன்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணனும்” என்றான் இயல்பான குரலில்.

அந்த பேச்சில் இருந்த தெளிவைக் கண்டு வாயடைத்துப் போனான் விஷ்ணு. அதன்பிறகு மூவரும் வீட்டிற்குள் செல்ல வீடு வழக்கத்திற்கு மாறாக பரபரப்புடன் செயல்பட்டது. விஷ்ணுவின் உடைமைகள் அனைத்தையும் எடுத்து வைத்து தயார் நிலையில் இருப்பதை கண்டு திகைத்து நின்றான்.

பிரீத்திக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தபோதும் அதை வெளிக்காட்டாமல் மனதிற்குள் மறைத்தபடி நின்றிருக்க அப்போதுதான் அவர்களைக் கண்ட கிருஷ்ணா, “வா விஷ்ணு. உன்னோட திங்க்ஸ் எல்லாம் சரியாக இருக்கான்னு செக் பண்ணிக்கோ” என்றான்.

அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் இருப்பதைக் கவனித்த மூவரும் குழப்பத்துடன் நின்றிருந்தனர். ராகவ், விஷ்ணு இருவரின் கலக்கமும் இன்னும் அதிகமாகியது.

விஷ்ணுவின் கவலை நிஜமோ என்று எண்ணும் நிலையில் இருந்தனர் அவர்கள் இருவரும். இவன் ஹாலில் அவளோ சமையலறையில்.

அவன் எல்லாம் சரிபார்க்க, “ராகவ் நம்ம மூவரும் ஏர்போர்ட் போலாம்” என்றான்.

மது சமையலறையில் இருந்து வெளிப்பட, “டேய் உங்களுக்குள் எதுவுமே நடக்கலையா?” என்று மெல்லிய குரலில் கேட்டான் ராகவ்.

அவனின் கேள்வியில் சற்று தடுமாறிய போதும் உண்மையைச் சொல்ல மனம் இல்லாமல், “இல்லடா இன்னும் ஒண்ணும் நடக்கல. மேடம் நேற்று என்னோடு சரி சண்டை” என்றான் இருபொருள்பட மதுவைப் பார்த்தான்.

அவள் சென்ற திசை எங்கும் பயணித்தது இவனின் விழிகள். அவளும் அமைதியாக வலம்வர விஷ்ணு கிளம்பும் நேரம் வந்தது. அவன் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கொண்டு அவன் கிளம்ப நினைக்கும்போது ஊரில் இருந்து கிருஷ்ணாவிற்கு போன் வந்தது.

அவர்களை ஒரு பார்வை பார்த்தவனோ, “ஒரு நிமிஷம்” என்று பால்கனியை நோக்கி அவன் செல்ல மது தமையனின் அருகே வந்தாள். வழக்கத்திற்கு மாறாக அவளின் தோற்றத்தில் இருந்த பொலிவைக் கண்டு வாயடைத்துப் போனாள் பிரீத்தி.

அதைக் கண்டுகொண்ட அவளின் விழிகளோ, ‘அப்படியும் இருக்கோமோ’ என்ற சந்தேகத்தில் மதுவை இமைக்க மறந்து பார்க்க அவளின் அண்ணனோ தங்கைக்கு தேவையான அறிவுரைகளை கூறும்போது கிருஷ்ணா மீண்டும் ஹாலுக்கு வந்தான்.

“ராகவ் விஷ்ணுவைப் பார்க்க எங்க குடும்பத்தில் இருந்து எல்லோரும் வந்திருக்காங்க.. வா நம்ம போய் கூட்டிட்டு வரலாம்” என்றதும் மதுவின் முகம் மலர, ‘நிஜமாவா’ என்றாள் பிரம்மிப்புடன்.

அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவன், “ம்ம் உங்க வீட்டில் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம் இல்லையா? அதன் விஷ்ணுவிடம் பேச கிளம்பி வந்திருக்காங்க” என்றான் தெளிவான விளக்கத்துடன்.

“அப்போ வாடா சீக்கிரம் போய் அவங்களை கூட்டிட்டு வரலாம்” ராகவ் வேகமாக முன்னே செல்ல, மதுவிடம் பார்வையால் விடைபெற்று சென்றான் கிருஷ்ணா.

இருவரும் பஸ்நிலையம் செல்லும் வழியில் திடிரென்று ஏற்பட்ட விபத்தில்  கிருஷ்ணா பைக் சிக்கி சின்னாபின்னமாக கவலைக்கிடமான நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

error: Content is protected !!