kathambavanam-3

kathambavanam-3

கதம்பவனம் -3

சூரியன் உச்சியில் நின்று கூர்ந்து பார்த்தாலும் அவனது பார்வை சற்று இதமாகத் தான் விழுந்தது அந்தத் தோட்டத்தில்,சிறு சிறு மலர்கள்,பழங்கள், காய்கள் கொண்ட அழகிய தோட்டம்,வெயிலின் வெப்பமும்,ஈரம் பதம் பொருந்திய மண்ணின் காற்றும் சேர்ந்து இதமாக வீச,அதில் சுந்தரம் வீட்டு சுந்தரிகளின் மாநாடு பார்க்கவே ரம்மியமாக இருந்தது,அமுதா காய் நறுக்க,தாமரை பூ தொடுக்க,சற்று தள்ளி சீதா(சீதை) கீரை ஆய்ந்து கொண்டு இருந்தாள்.

 

ஓரகத்திகள் ஒன்றாக உட்காந்து செய்யும் காட்சி அழகாக இருந்தது,சீதாவும்,அமுதாவும் கண்களால் ஜாடை பேசி கொண்டு இருந்தனர் பின் மெதுவாக,”நீ கேளு”,”நீங்க கேளுங்க” இருவரும் ஒருவரை ஒருவர் சொல்லி கொள்ள,தாமரையே என்ன அக்கா என்று கேட்டாள்.

 

சீதா கோபமாக அவளிடம் “என்ன என்னக்கா?,நேத்து மாமா சீட்டை கேட்கும் போது ஏன் எனக்கு ஒன்னும் வேண்டாம் சொன்ன,எதுவுமே தேவையில்லையா உனக்கு”,தலையைக் குனிந்து கொண்டாள் தாமரை என்ன சொல்லுவது இதற்கு.

 

அமுதா,”ஏய் தாமரை என்ன பாரு”அவளது தாடையைப் பற்றித் தூக்க,”கண்ணீர் துளிர்க்க பார்த்தாள்,”அழுத கொன்னுடுவேன் போன தீவாளிக்கு கொடுத்த ரவிக்கை இன்னும் வாங்கல புருசனும் ,பொண்டாட்டியும் என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க,ஏன் செல்வம் தம்பி இரண்டு நாளா வீட்டுக்கு வரல”.

 

அதற்கும் தாமரை தலையைக் குனிந்து கொண்டு இருக்க,சீதா ஆவேசமாக “எங்கள உன் அக்காவை நெனச்சா சொல்லுவா, அமுதா இனிமே நமக்கு மரியாதை இல்ல,இனி கேக்காத”, போலியாக அவர் செல்ல பார்க்க, அழுது கொண்டே அவரைப் பார்த்த தாமரை “ஏன் அக்கா ?என்ன சொல்ல சொல்லுறீங்க என்ன?அவர் ஓவர் டைம் பாக்குறாரு,அவர்கிட்ட என் தேவைகளைச் சொல்ல கஷ்டமா இருக்கு மாடு மாதிரி உழைக்குறாரு அக்கா,அவர் கொடுக்குற காசு வீட்டு செலவுக்கே சரியாய் இருக்கும் அதான்,மாமாகிட்ட எங்களுக்கு வேண்டாம் சொல்லிட்டேன்”.

 

அவர் என்கூட பேசியே ஒரு வாரம் ஆகுது,சரியா பேசி ஒரு வருஷம் ஆகுது,அதாவது எனக்கு கல்யாண ஆனா நாளுல இருந்து இப்புடி தான் இருக்காரு,அவர்கிட்ட பேசவே பயமா இருக்கு,இதுல அது வேணும் இது வேணும் எப்படி கேக்குறது”,துக்கம் தொண்டையை அடைக்க அவள் பேசியதை கேட்ட அமுதாவும்,சீதாவும் அதிரிச்சியாக பார்த்து கொண்டனர்.

 

என்னடி சொல்லுற”அமுதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது இவள் உண்டாகவில்லை என்று மாதங்கி அவ்வ போது குத்தி கிழிக்கப் பார்க்க,தாமரை சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை,செல்வம் நல்ல குணமுடையவன் தான் ஆனால் கண்ணன்,ராமன்,ரங்கனை போல் அமைதி கிடையாது,ராஜனும்,செல்வமும் கொஞ்சம் முரட்டுக் குணமுடையவர்கள்,அதிலும் ஓர் அன்பு இருக்கும்.

 

தாமரை அவனிடம் பேசவே பயம் கொள்வாள், இந்த ஒரு வருடத்தில் அவர்கள் பேசிய வார்த்தையைக் கை கொண்டு எண்ணி விடலாம்.

 

அவர்கள் பேச்சில் அதிர்ந்து நின்றது பங்கஜமும் தான்,கோபமாகத் தாமரையை நெருங்கியவரை கலவரமாகப் பார்த்தனர்,அமுதாவும்,கீதாவும்,பின்ன மாமியார் போலவா அவர் பார்த்தார்,பெற்ற தாய்க்கு நிகராகத் தாங்குபவரிடம் மறைக்கலாமா என்ன.

 

அத்தை என்று தாமரை மென்று முழுங்க,”பேசாத உங்கிட்ட எனக்குப் பேச்சே இல்ல,அமுதா நீ சமையலை பாரு,சீதா மாமா காப்பிக் கேட்டாரு கொண்டு போமா”,

 

சரிங்க அத்தை”,இருவரும் தாமரையை  திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர்,அவர்கள் சென்றவுடன் தாமரையை  நெருங்கி “அவன்கிட்ட அவுங்க அப்பாவ பேச சொல்லட்டுமா”,வேகமாகத் தலையை ஆட்டி தன் மறுப்பைத் தெருவித்தவள்,அவரது கைகளைப் பற்றி,”அத்தை இன்னும் கொஞ்சம் நாள் அவர்  வேலைல முன்னுக்கு வரட்டும்,அது வரைக்கும் பேச வேண்டாம்”.

 

இன்னும் நன்றாகத் தாமரை முறைத்து விட்டு சென்றார்,அவர் மனநிலை புரிந்தாலும் தாமரைக்குத் தனது கணவனை விட்டு கொடுக்க மனமில்லை,செல்வமாகப் பிறந்த வீட்டில் வளர்ந்த தாமரை செல்வத்திற்காக அத்தனையும் தூக்கி எறிந்தாள்,தாமரையின் தந்தை செல்வத்திற்குச் சொற்ப சம்பளமாக இருந்தாலும்,அவனது குணத்திற்காகவே அவளைத் திருமணம் செய்து வைத்தார்,பிற்காலத்தில் செல்வம் நல்ல நிலைமையில் இருப்பான் என்பது திண்ணம்,எனவே தனது செல்ல மகளை மனப்பூர்வமாகவே தாரை வார்த்தார், இதனை அறிந்து தான் செல்வம் உழைக்கின்றானோ?

 

திண்ணையில் அமர்ந்து இருந்தாலும் வீட்டில் உள்ள அனைத்தும் சுந்தரத்திற்கு அத்துபடி, செல்வத்தைப் பற்றித் தெரியாமல் போகுமா என்ன,எது வரை இருவரும் செல்கிறார்கள் என்று தான் பார்த்தார்,அதிலும் அமுதாவும்,சீதாவும்,தாமரையை உரிமையாய்த் தீட்டியது அவர்க்கு அத்தனை நிம்மதி,இந்த ஒற்றுமைக்காகத் தானே தவிக்கிறார்,மாதங்கியும் ஒன்றிப் போனால் தங்களைப் போல் சொர்கம் கொண்ட வாழ்கை யாருக்கும் கிட்டாது,ஒரு பெருமூச்சுடன் நகர்வலம் கிளம்பினார்.

 

இன்று வீடே அமைதியாக இருந்தது மாதங்கியும் கண்ணனும் திருமண நாளை கொண்டாட சென்று விட்டனர் தங்கள் பிள்ளைகளுடன்,மீதி இருக்கும் சுட்டிகளைப் பள்ளிக்கு அனுப்பி ஆயிற்று எஞ்சி இருப்பது மாமியாரும்,மருமகள் மட்டுமே,இன்னும் சிறுது நேரத்தில் கடை குட்டிகள் இருவரும் வந்துவிடுவார்கள்,என்று எண்ணியவாறே சென்றார் சுந்தரம்.

 

அவர் எண்ணியது போலே விஜியும்,ராஜாவும் வந்தார்கள், இன்று ராஜாவிற்கு இறுதி தேர்வு இனி வேலை தான் முகத்தில் அத்தனை நிறைவு,இதோ குடும்பத்தின் சுகமான பாரத்தைச் சுமக்க நானும் தயார் என்பது போல இருந்தது அவனது செய்கை,வந்தவன் பங்கஜத்தின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் கண்கள் தானாக முடியாது,சொர்கத்தின் தலை வாசலில் இருக்கும் எண்ணம் கண் மூடி அதனை அனுபவித்தான்.

 

தலையைக் கோதிய வாறே “என்ன ராஜா எப்போ அப்பா சொன்ன வேளைக்குப் போகப் போற”

 

இன்னைக்குத் தானேம்மா தேர்வு எழுதி இருக்கேன் இன்னும் ஒரு வாரம் சென்று தான் போவேன்”,அவனுக்கு உள்ளுக்குள் அத்தனை கோபம் தனது முயற்சி கொண்டு வேலை தேடி கொள்ள வேண்டும் என்று எண்ணினால்,அதற்கு முன்பே மாதங்கியின் தந்தை சுந்தரத்திடம் அந்த வேலையை வாங்கிக் கொடுத்தார்,அதனால் தான் ராஜாவிற்குக் கோபம்.

 

என் திறமையின் மீதும் என் மீதும் நம்பிக்கை இல்லாதவர் எதற்கு பெண் தர வேண்டும்?கோபத்தை கட்டு படுத்த முடியாமல் தாயிடம் முறையிட்டான்,”ஏன்ம்மா,அப்பா இப்புடி இருக்கார்,எனக்கு அந்த பொண்ண பார்த்தா கோபமா வருது,எனக்கு புடிக்கல நீங்களாவது சொல்லுங்க அப்பாகிட்ட”,அவனை கலக்கமாக பார்த்தவர்.

 

அப்புடியெல்லாம் சொல்லக்கூடாது ராஜா,பாவம்! உங்க அப்பா வாக்கு கொடுத்த நாளுல இருந்து அந்த பொண்ணு ஆசையா இருக்கும்,அப்பாகும் தலை குனிவு, நீ அந்த பொண்ண புரிஞ்சுக்க முயற்சி பண்ணு கண்ணு”,தாடையை பிடித்து கொஞ்சியவர் கைகளை தட்டிவிட்டு எழுந்து சென்றான்.

 

வீட்டில் உள்ள அத்தனை பெண்களும் கலங்கி போய் இருந்தனர்,ஏற்கனவே ஒருவன் திருமணம் ஆகியும்பற்று  இல்லாமல் இருக்கிறான்,இதில் பிடிக்காத பெண்ணை  ராஜன்  திருமணம் செய்தால்,பங்கஜம் வெகு நாள்  சென்று அழுகிறார்,இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர்  கண்கலங்கியது இல்லை,அந்த அளவிற்கு சுந்தரம் தாங்கினார்,ஆனால் இன்று தான் பெற்ற பிள்ளைகளால் அழுது தீர்த்தார்,சும்மாவா சொன்னார்கள் “தென்னையை பெற்றால் இளநீர்,பிள்ளைகளை பெற்றால் கண்ணீர்” என்று.

 

அங்கு மாதங்கி தனது அம்மாவிடம் செல்லம் கொஞ்சி கொண்டு இருந்தாள்,கூடவே விமலாவின் திருமணம் பற்றியும் பேசி கொண்டு இருக்க,அவளது தங்கை  விமலாவிற்குக் கோபமாக வந்தது,அவளுக்கு ராஜாவை பற்றித் தெரியும்,தனது அக்காவை பார்த்தாலே அவனது முகம் பாறையாக மாறும்,அவனைப் போய் நான்…………..

 

அவனை நினைத்தாலே கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்தது,அக்காவின் மேலும் கோபம் வந்தது, மாதங்கிக்கு சிறு வயதில் இருந்தே பொறுமை என்பதே கிடையாது,இதில் தாய்க்குத் தலைச்சம் பெண் மேல் கண்மூடி தனமான பாசம் வேறு,எதோ அந்தக் குடும்பம் என்பதனால் அவள் வண்டி ஓடுகிறது,அதிலும் கண்ணன் போல் ஒரு கணவன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும், அவள் செய்கையால் தன் குடும்பத்தையே வெறுக்கும் ராஜனுடன் நான்………

 

தந்தை முடிவெடுத்து விட்டார் இனி என்ன சொன்னாலும் தனது பேச்சுச் சபையில் எடு படாது,திருமணத்திற்குத் தன்னை வெகுவாகத் தயார் செய்து கொள்ள வேண்டும் எண்ணம் இன்னும் வலுப்பெற்றது.

 

கலக்கத்தோடும்,பயத்தோடும் தனது திருமணத்தை எதிர் நோக்கினாள் விமலா,அதாவது ராஜனின் ராணி.

 

 

 

 

 

 

 

error: Content is protected !!