கதம்பவனம் – 5

நான்கு,ஐந்து தெருக்கள் தள்ளி ,சுந்தரம் வீட்டுக்குப் பக்கத்தில் தான் குடி நீர் குழாய் உள்ளது,என்றுமே விமலாவின் அன்னை தான் தண்ணீர் எடுக்க வருவார்,இன்று உடல் உபாதை காரணமாக விமலா அந்தப் பணியைச் செய்ய,அவளை பார்த்த மாத்திரத்தில்,நமது கிழட்டு காளை தனது குசும்பை ஆரமித்து விட்டது.

 

பின்ன என்ன சிறு வயதில் இருந்தே விமலாவை சுந்தரத்திற்கு ரொம்பப் பிடிக்கும்,அவரை எதிர்த்து பாசமாகவும்,குறும்பாகவும்,வம்புக்கு இழுக்கும் ஒரே ஆள் அவள் தான்,என்று ‘தனது மருமகளாக வா’ என்று கேட்டாரோ அன்றில் இருந்து அவள் பேசுவதில்லை ஒரு முறைப்புடன் தான் சுற்றி திரிந்தாள்.

 

தன்னிடம் அவர் பேச வந்தாலும் நாசுக்காக நகர்ந்து விடுவாள்,அவளது ஒதுக்கம் அவருக்கு அத்தனைக் கவலையை அளித்தது,தன்னிடம் தள்ளி நிற்கும் மருமகள்கள் இடையில்,விமலா வந்தாள்,அவருக்கு அந்த நினைப்பே அத்தனை சந்தோசமாக இருந்தது,அவருக்கு என்றுமே வீடு உயரிப்புடன் இருக்க வேண்டும்,அது விமலா போன்ற பெண்ணால் தான் முடியும்,அதனால் தான் அவள் மறுக்க மறுக்க அவர் உறுதியாக இருந்து நிச்சயத்தை நடத்தியது.

 

தண்ணீர் குடம் நிரம்பி அவள் தூக்கும் தருவாயில் குடத்தைப் பிடித்து இழுத்தார் சுந்தரம் ,முதலில் திகைத்தவள் பின் தனது மாமன் தான் என்றவுடன் முறைத்துக் கொண்டு இருந்தாள்,முட்டை கண்ணை வைத்து முறைக்கும் மருமகளுடன் விளையாட எண்ணி அவர் பக்கம் குடத்தை இழுக்க,அவள் தன் பக்கம் இழுக்க என்று சில நொடிகள் கழிந்தது.

 

“மாமா,என்ன பண்ணுறீங்க வீட்டுக்கு போகணும் குடத்தை விடுங்க”,”அப்போ பேசு நான் விடுறேன் “,தலையில் அடித்துக் கொண்டவள்.

 

“உங்க பையன் பண்ண வேண்டியது எல்லாம்,நீங்க பண்ணிக்கிட்டு இருக்கீங்க”,அதில் கையில் இருந்து குடத்தை அவர் விட , இது தான் சாக்கென்று அவள் நகரப் பார்க்க,இப்போது கையைப் பிடித்துக் கொண்டார்.

“ஹலோ,மிஸ்டர் .சோமா சுந்தரம் என்ன லந்தா,அப்பாவுக்கும் மகனுக்கும் என்ன பார்த்த எப்புடி தெரியுது”.

“எங்க வீட்டு மஹாலக்ஷ்மி மாதிரி தெரியுது”.

அதில் அவள் கண்கள் பண்ணிக்க “போங்க மாமா “சிறு பிள்ளையாய் சீனுங்கிய அவளை வாஞ்சையோடு பார்த்தார் சுந்தரம்.

“விமலா பாப்பா”,பல வருடங்கள் கழித்து அவர் அழைத்து அழைப்பு அழுகை வரும் போல் இருந்தது.

அவளது கையைப் பற்றியவர் “நான் இருக்கேன், இந்த கல்யாணத்துல எந்தத் தப்பும் வராது,உன் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு,அந்த காளைக்கு ஏத்த மூக்கான கையறு நீ தான்,தாமரை மாதிரி பொண்ணு வந்தா இன்னும் இந்தப் பையல அடக்க முடியாது, தாமரை  விஷியத்துல நான் சரிகிட்டேன்,பாவம் அந்தப் பொண்ணு நீ வந்தா எல்லாம் சரியாய் போயிடும்,அதுவும் மாதங்கிக்கு ஈடுகுடுக்க உன்னால தான்மா முடியும்”.

 

அவர் கலங்குவதைப் பார்க்க முடியாமல் “என்ன மாமா” பதறியவள்,அவர் கவலையைப் போக்கும் பொருட்டு ,”சரி சரி உங்க வீட்டுக்கு நான் தான் வருமுன்னு உங்க தலைல எழுது இருக்கு நான் என்ன பண்ண முடியும்”,விளையாட்டு போல் சொல்லியவள்.

 

“இருந்தாலும் ராஜன் மாமனுக்குக் கொஞ்ச நஞ்ச திமிரு இல்லை,கல்யாணம் ஆகட்டும்”,நம்பியார் போல் கைகளைப் பிசைந்து கொண்டு அவள் கூற, மனம் நிறைந்தது அவருக்கு.

 

சிரித்துக் கொண்டே வாம்மா காப்புக் குடிக்கலாம் “ஐயோ அம்மாவுக்குத் தெரிஞ்சுது அவுளோதான் மாமா,நீங்க வேற “,”ஏன் நீ மருமக ஆகுறதுக்கு முன்னாடியே எங்க செல்ல பாப்பா”,அது உங்களுக்குத் தெரியுது,எங்க அக்காவுக்கும்,அம்மாக்கும் தெரியாதே”,பின்பு சிறுது நேரம் பேசிவிட்டு சென்றாள்.

 

தனது வருங்கால மருமகளுடன் பேசியது சற்று மகிழ்ச்சியைத் தர உற்சாகமாக வந்து தனது ஆஸ்தான இடத்தில் அமர்ந்தார் சுந்தரம்,அடுத்த நொடி மணக்க மணக்க காப்பி மனைவியின் கையால்,பங்கஜத்தை பார்த்தவரே ரசித்துக் குடித்தார்,அதில் வெட்கம் கொண்டவர் உள்ளே விரைவாகச் செல்ல,சின்ன சிரிப்பு அவரிடம்…….

 

அங்கே ராஜன் தனது அண்ணிகளிடம் குதித்துக் கொண்டு இருந்தான்,”அவ கிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க அண்ணி இல்ல அவுங்க அக்கா மாதிரி உங்கள தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்ருவா,எமகாதகி அவ”,அவனது பேச்சை ரசிக்காத சீதா.

 

“தம்பி அவ அவுங்க அக்கா மாதிரி இல்ல,சின்ன வயசுல இருந்து பாக்குறோம்,எங்களுக்குத் தெரியாதா,அவ இருக்குற இடம் எப்போதும் கல கலப் பா  இருக்கும்”,”ஆமா ஆமா கலக் கலப்பா இருக்கும்”,அவன் எதை நினைத்துச் சொல்லுகிறான் என்பதை அறிந்தவர்,அவனுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தவித்துப் போனார்.

 

தாமரையிடம் திரும்பியவன் “என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்காரு உங்க வீட்டுக்காரு,வீடுனு ஒன்னு இருக்குறது தெரியுமா தெரியாத,நீங்களும் ஒன்னு கேக்குறது இல்ல,என்னதான் நடக்குது இந்த வீட்டுல,வர வர வீட்டுக்கு வரவே புடிக்க மாட்டேங்குது”,அண்ணனை எண்ணி உள்ளம் குமுறியது,அதுவும் நேற்று நடந்ததை எண்ணி அவன் தடை இறுகியது.

 

“அண்ணி போய் உங்களுக்கு அவசிய தேவைகள் என்னவோ அதைச் சிட்டை போட்டுக் கொண்டு வாங்க”,தயங்கி நின்ற தாமரையை பார்த்து,”அண்ணிண அம்மாக்கு சமம்,அம்மாக்கு வாங்கிக் கொடுக்குறது மகனுடைய கடமை,நான் இப்போ உங்களுக்கு மகன்”,அவன் அழுத்தி சொன்ன விதத்தில் உதடுகள் துடிக்க அ அழுதுக் கொண்டே உள்ளே சென்றாள் தாமரை.

 

அமுதா பதறியவரே “என்ன ஆச்சு தம்பி,ஏன் தாமரை இப்புடி அழுகுறா”,என்ன கேளுங்க அண்ணி நீங்களும் வீட்டுல தானே இருக்கீங்க,அதுவும் எங்க அப்பா அம்மாவை நெனச்சா இன்னும் கோபம் வருது,வீட்டுல என்ன நடக்குதுன்னு பார்க்காம திண்ணையில உட்காந்து ஊர் வம்பு இழுக்குறது,எங்க அம்மாவும்,நீங்களும் சமையல் கட்டுலையே குடி இருங்க,அப்புறம் எப்புடி வீட்டுல நடக்குறது தெரியும்”,அவன் பேச்சில் சுந்தரமும்,பங்கஜமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

 

பின்பு மெல்லிய குரலில் “என்னடி உன் பையன் வேலைக்கி போறனுற மேதப்பா,இன்னும் அவனுக பின்னாடியே சுத்த முடியுமா,துரை ரொம்பத் துள்ளறாரு”,”அதை கொஞ்சம் சத்தமா பேசுறது”,பங்கஜம் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி சொல்ல,என்ன அதிசயம் சுந்தரம் வாய் பசை போட்டது போல ஒட்டி கொண்டது,வீரமெல்லாம் மூன்று மகன்களிடம் மட்டும் தான்,செல்வத்திடமும்,ராஜனிடத்திலும் செல்லாது,மனைவியை முறைத்தார்.

 

தாயிடம் அவர் குனிந்து பேசுவதைப் பார்த்தவன் கோபமாக ” இத்தனை ஆம்புளைங்க இருக்குற வீட்டுல ஒரு பொண்ணுக்கு தேவையான பொருளை வாங்கித் தர முடியல,ஒரு 20 காசு தலை வலி மாத்திரைக்கும்,மூன்றுவா சோப்புக்கு அண்ணி கடை வாசலை பார்த்துட்டு நிக்குறாங்க,கடன் கேட்க”,அவன் சொல்லவே சுந்தரம் அதிர்ந்து பார்க்க,பங்கஜம் கண் கலங்கினார்.

 

“என்னடா சொல்லுற”,தாயின் கலக்கத்தைப் பார்த்தவன் “ஆமா அம்மா நேத்து அண்ணிக்கு ரொம்பத் தலைவலி போல,நம்ம கிட்ட கேட்க சங்கட பட்டுக்கிட்டு,கடையில நின்னுட்டு இருந்துருக்காங்க,நம்ம விஜி பார்த்துட்டான்னு பயந்து வந்துட்டாங்க,என்ன வயசும்மா அவுங்களுக்கு எங்களை விட ஒரு வயசு தான் கூட,அண்ணா என்னதான் பண்ணுறான்”,கோபத்தில் தொடங்கிய உரையாடல் வருத்தத்தில் முடிந்தது.

 

யார் என்ன சொல்லுவது ,அனைவருக்குத் தரம சங்கடமான நிலை “அம்மா,பெரிய அண்ணி காசுல தானே வாங்க கூடாது,நான் சம்பாரிக்குறேன் நான் வாங்கித் தருவேன் அண்ணிக்கு,என்ன இருந்தாலும் அண்ணா செய்யுற மாதிரி வராது,நீங்க அண்ணாகிட்ட பேசுங்க”,சொல்லியவன் அவனது அறைக்கு விரைந்தான்.

 

“என்னடி நடக்குது இந்த வீட்டுல”சுந்தரம் எகிற “பங்கஜம் கலக்கமாக பார்த்தார் “தாமரை அப்பாவா போன் போட்டு வர சொல்லு அந்த புள்ள அவுங்க அப்பனோட போய் நிம்மதியா இருந்துட்டு வரட்டும்,உன் மகனுக்கு தெரிய வேண்டாம்”.

 

என்னங்க இது ” சொன்னதை செய் பங்கு ” அந்த நிலையிலும் மனைவியின் கலக்கத்தைப் பார்த்தவர் மென்மையாகச் சொல்ல அவரும் தலையை ஆட்டினார்.

 

செல்வத்திற்கு நடப்பது எதுவும் தெரியாது அவனது குறிக்கோள் எல்லாம் வருவாய் முன்னேற்றம் மட்டுமே,வாழ்க்கையில் வருவாய் என்பது ஒர்  அங்கம்,பசி தூக்கம் என்பது போல் ,அதுவே வாழ்க்கை இல்லையே அதனை அறியாது அவன் ஓடி கொண்டு இருந்தான், யாருக்காக இந்த ஓட்டமோ?.

 

ஆனால் யாரும் அறியாது ஒன்று என்றால் தாமரையின் மேல் இருக்கும் முரட்டு தனமான காதல் தான்,அதை அவளே அறியவில்லை,அவனும் அறியவிடவில்லை,அவன் இத்தனை வெறியாக உழைப்பதற்குக் காரணம் அதுவே.

 

சோர்ந்து போய்த் திண்ணையில் அமர்ந்தார் சுந்தரம் அவர் மனதில் அவர் அப்பா சொன்னது தான் நியாபகம் வந்தது,நான்கு கை தட்டினால் தான் ஓசை,குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அரவணைத்தால் தான் வாழ்க்கை,அது அறியாது பிள்ளைகள் அடிக்கும் கூத்தில் மனம் உடைந்து போனார்.

 

காலம் என்ன கோலம் செய்யும் என்பதைப் பார்ப்போம்….

 

 

 

 

error: Content is protected !!