Katre-15

Katre-15

“மதி என்ன பேசுற மா? கவி மலையில் இருந்து விழுந்தது பற்றி கேட்குறேனா உனக்கு பழைய விடயங்கள் எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா?” கண்கள் கலங்க கேட்ட சம்யுக்தாவை திரும்பி பார்த்த தேன்மதி

“பழைய விடய ஞாபகமா? என்னம்மா சொல்லுற?” எனக் குழப்பமாக கேட்டாள்.

“ஆன்ட்டி வெயிட் நான் டாக்டரை வரச் சொல்லுறேன் ஏதோ சரியில்லை” என்ற கவிகிருஷ்ணா அவசரமாக தன் போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

“மதி கொஞ்ச நேரம் இப்படி உட்கார்ந்துக்கோம்மா” என்றவாறு தேன்மதியின் கை பிடித்து அழைத்து சென்ற வேதவல்லி அவளை அங்கிருந்த கதிரையில் அமரச் செய்து விட்டு தண்ணீர் நிரம்பிய டம்ளர் ஒன்றை அவளிடம் கொடுத்தார்.

அவரிடமிருந்து தண்ணீரை வாங்கி குடித்தவளோ கவிகிருஷ்ணா சென்ற வழியையே பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறிது நேரத்தில் விருத்தாசலத்துடன் நடந்து வந்த கவிகிருஷ்ணாவைப் பார்த்ததும் வேகமாக அவனருகில் ஓடிச்சென்று
“கவி உனக்கு எதுவும் ஆகல தானே?” என்றவாறே அவனது முகத்தை தொட்டவள் ஒரு சில நேரம் அவன் கண்களைப் பார்த்து விட்டு உடனே தன் கையை விலக்கி கொண்டாள்.

அதிர்ச்சியாக அவனது முகத்தையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றவள் அந்த அதிர்ச்சி மாறாமலேயே பின்னோக்கி நகர்ந்தாள்.

“தேன்மதி என்ன ஆச்சு?” என்றவாறே அவளை நோக்கி நெருங்கி வரப் போன கவிகிருஷ்ணாவைப் பார்த்து வேண்டாம் என்று கை காட்டி தடுத்தவள்

“அப்போ எல்லோரும் சொன்ன மாதிரி நீங்க என் கவியரசன் இல்லையா?” என்று கேட்க அவனோ கையாலாகாத நிலையில் விருத்தாசலத்தை திரும்பி பார்த்தான்.

“தேன்மதி ப்ளீஸ் முதல்ல இப்படி உட்காருங்க எதுவாக இருந்தாலும் பேசி முடிவு எடுக்கலாம்” என்ற விருத்தாசலத்தின் புறம் திரும்பியவள்

“நீங்க முதல்ல நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்க இது என் கவியரசன் இல்லையா?” என்று கோபமாக கேட்கவும் அவரோ பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு இல்லை என்று தலை அசைத்தார்.

“அப்போ என் கவி? என் கவி எங்கே? சொல்லுங்க என் கவி எங்கே?” தன் காதுகளை இறுக மூடிக் கொண்டு வீடே அதிரும்படி சத்தமிட்டு கத்தியவளை நெருங்கி வந்து அணைத்துக் கொண்ட சம்யுக்தா

“மதி கோபப்பட்டு சத்தம் போடாதே டா கொஞ்சம் நிதானமாக இப்படி உட்காரு” என்றவாறே அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறு அழைத்து செல்ல விருத்தாசலமும், கவிகிருஷ்ணாவும் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்த தேன்மதியின் முன்னால் வந்து அமர்ந்த விருத்தாசலம்
“தேன்மதி என்னை நிமிர்ந்து பாருங்க” எனவும் கண்கள் கலங்க அவரை நிமிர்ந்து பார்த்தவள் அவரருகில் நின்ற கவிகிருஷ்ணாவை வெற்றுப் பார்வை பார்த்தாள்.

“தேன்மதி உங்களுக்கு திடீர்னு என்ன ஆச்சு? ஈவ்னிங் ஹாஸ்பிடல்ல இருந்து வரும் போது கூட நல்லா தானே இருந்தீங்க?” என விருத்தாசலம் கேட்கவும்

தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டே அவரை பார்த்தவள்
“ஆமா டாக்டர் ஈவ்னிங் இங்க வர்ற வரைக்கும் எந்த குழப்பமும் எனக்கு இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவங்க படியிறங்கி வரும் போது கால் தவறி விழப் போனாங்க அதை பார்த்து பதட்டம் ஆகி நான் அவங்க கிட்ட ஓடி போனேன் அப்போ திடீர்னு என் மைண்ட் பிளாக் ஆகி மலையில் இருந்து நானும், கவியும் கீழே விழுந்தது எனக்கு திடீர்னு ப்ளாஸ் ஆச்சு அன்னைக்கு ஹோட்டலில் அப்படி தான் நடந்தது அது தான் நான் இவர் கிட்ட உங்களுக்கு எதுவும் ஆகலயானு கேட்டேன் ஆனால் இவர் பதில் சொல்லாமல் என்னை அதிர்ச்சியாக பார்த்தாரு அப்போவே எனக்கு உள்ளுக்குள்ள ஒரு வித்தியாசமான பீலிங் வந்தது அன்னைக்கு கவி விழுந்தப்போ நான் அவனை பிடிக்க மலையில் இருந்து பாய்ந்தேன் ஆனா காற்று பலமாக வீசுனதால என்னால அவனைப் பிடிக்க முடியல அந்த நேரம் பார்த்து நான் ஒரு மரத்தில் சிக்கிட்டேன் ஆனா என் கவி…என் கவி கீழே ஒரு பாறையில் விழுந்து…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தேன்மதி தன் கைகளில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

சுற்றி நின்ற பெரியவர்களுக்கு கூட இந்த செய்தி புதியது.

மலையில் இருந்து இருவரும் கீழே விழுந்தது வரை தான் அவர்களுக்கு தெரியும் ஆனால் அதை தேன்மதி முழுமையாக கண்களால் பார்த்து இருக்க கூடும் என்று அவர்கள் யாருமே நினைத்து இருக்கவில்லை.

“இப்போ இது உங்க கவியரசன் இல்லைன்னு உங்களுக்கு எப்படி கன்பர்மா சொல்ல முடியும்?” தன்னருகில் நின்ற கவிகிருஷ்ணாவை தேன்மதி முன்னால் இழுத்து நிறுத்தியபடி விருத்தாசலம் கேட்கவும்

கண்களில் இருந்து வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டே நிமிர்ந்து அவர்களை பார்த்தவள்
“மலையில் இருந்து நாங்க இரண்டு பேரும் தான் விழுந்தோம் நான் இப்போ எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்கேன் அப்படினா கவிக்கும் எதுவும் ஆகி இருக்காதுனு ஒரு நம்பிக்கையில் தான் நான் இவரை நெருங்கி போனேன் ஆனா அவர் கிட்ட போனதுக்கு அப்புறம் தான் எனக்கு குழப்பம் வந்தது”

“என்ன குழப்பம்?”

“என் கவியரசன் எப்போதும் என்னை பார்க்கும் பார்வையில் ஒரு உரிமை இருக்கும் ஆனா இவங்க கிட்ட இப்போ நான் நிற்கும் போது வெறும் பரிதாபம் மட்டும் தான் தெரிந்தது நான் அவனை தொட முதலே அவன் கைகள் என்னை ஆதரவாக பிடிக்கும் ஆனா இவர் கைகள் என் கண்களை துடைக்க கூட உயரல இத்தனை நாளா ஹாஸ்பிடல்ல இருக்கும் போது இது எதுவும் எனக்கு தோணல ஆனா இப்போ இந்த ஒரு சம்பவத்திற்கு அப்புறம் தான் இதெல்லாம் எனக்கு தோணுது ஏன் டாக்டர் எனக்கு இப்படி ஒரு குழப்பம்? இது என் கவி இல்லைனே என் கவி எங்கே? இவர் எதற்காக என் கவி மாதிரி இருக்கணும்? என்னால யோசிக்க கூட முடியல டாக்டர் தலை வெடிச்சுடும் போல இருக்கு ப்ளீஸ் டாக்டர் ப்ளீஸ் எனக்கு ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்” கையெடுத்து கும்பிட்டு அழுதவள் கைகளை பற்றி வேண்டாம் என்று தலை அசைத்தவர்

கவிகிருஷ்ணாவின் புறம் திரும்பி
“கிருஷ்ணா பைனல் ட்ரீட்மெண்ட் இப்போவே பண்ணலாம் என் காரில் இருக்குற ப்ரீஃப் கேஸை எடுத்து வா” எனவும்

“சரி டாக்டர்” என்றவன் அவரது காரை நோக்கி சென்றான்.

“டாக்டர் என்ன டாக்டர் இதெல்லாம்? என் பொண்ணு இப்படி கஷ்டப்படுவதை பார்க்கவா நாங்க இத்தனை
நாளாக எங்க பொண்ணை தேடி அலைந்தோம்? இதற்கு என்ன தான் டாக்டர் தீர்வு?” கண்கள் கலங்க விருத்தாசலத்தை பார்த்து கேட்ட சுரேந்திரன் தோளில் ஆதரவாக கை வைத்தவர்

“கொஞ்சம் இப்படி வாங்க ஸார்” என்றவாறே சற்று தள்ளி அவரை அழைத்துச் சென்றார்.

“தேன்மதிக்கு பழைய விடயங்களும், புதிய விடயங்களும் சேர்ந்து ஒன்றாக குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கு அதை பற்றி அவங்களுக்கு விளக்கம் சொன்னாலே போதும் எல்லாப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும் இப்போ தேன்மதிக்கு நான் பைனலா ஒரு ட்ரீட்மெண்ட் பண்ண போறேன் முன்னாடி பல தடவை அவங்களுக்கு பண்ண ட்ரீட்மெண்ட் தான் பட் அந்த நேரம் அவங்களுக்கு பழைய விடயம் ஒண்ணு, இரண்டு தான் ஞாபகம் இருந்தது ஆனா இப்போ கொஞ்சம் நிறைய விஷயங்கள் ஞாபகம் இருக்கு அதற்காக தான் இப்போ இந்த ட்ரீட்மெண்ட் பண்ண போறேன் அவங்களை ஆழ்ந்த ஒரு அமைதியான நிலைக்கு கொண்டு போகப் போறேன் அது சரியாக நடந்ததுனா சீ வில் பீ பர்பெக்ட்லி ஆல்ரைட்” என்ற விருத்தாசலத்தின் கைகளை கண்கள் கலங்க பற்றி கொண்டார் சுரேந்திரன்.

சிறிது நேரத்தில் தேன்மதியை அமைதியான தனி அறை ஒன்றில் சாய்வான ஒரு இருக்கையில் அமரச் செய்த விருத்தாசலம் அவளை ஆழ்ந்த சயன நிலைக்கு போகச் செய்தார்.

கவிகிருஷ்ணா மாத்திரம் அவரோடு அந்த இடத்தில் நிற்க மற்ற அனைவரும் வெளியில் ஒரு கண்ணாடி தடுப்பின் ஊடாக உள்ளே நடப்பவற்றை பார்த்து கொண்டு இருந்தனர்.

“தேன்மதி! தேன்மதி!” விருத்தாசலத்தின் அழைப்பில் அவளது புருவங்கள் சுருங்கியது.

“உங்க பேரு தேன்மதி தானே?”

“ஆமா நான் தேன்மதி தான்”

“குட் உங்க அம்மா, அப்பா பேரு என்ன?”

“அம்மா பேர் சம்யுக்தா அப்பா பேரு சுரேந்திரன்”

“ஓகே தேன்மதி நீங்க என்ன பண்ணுறீங்க படிக்குறீங்களா? இல்லை வர்க் பண்ணுறீங்களா?”

“நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு கவியோட சேர்ந்து ஒரு கம்பெனி நடத்திட்டு வர்றேன்”

“ஓஹ்…கவி அப்படினா யார்? உங்க ரிலேடிவ்வா? இல்லை பிரண்டா?”

“ஹீ இஸ் மை ஹஸ்பண்ட் என்னோட மாமா பையன்”

“ஹஸ்பண்ட்?” ஆராய்ச்சியாக தேன்மதியின் முகம் பார்த்த விருத்தாசலம் புன்னகையோடு கவிகிருஷ்ணாவை நோக்கினார்.

அவனோ இறுகிய முகத்துடன் தேன்மதி சொல்பவற்றை எல்லாம் கேட்டு கொண்டு நின்றான்.

“உங்களுக்கு எப்போ கல்யாணம் நடந்தது மிஸ் ஸாரி மிஸஸ் தேன்மதி?”

“ஏப்ரல் 6”

“நீங்க எதற்காக ஊட்டி வந்தீங்க? அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“ஹ்ம்ம்ம் அம்மா, அப்பா, அத்தை, மாமாவை விட்டு நானும், கவியும் எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயும் போக விரும்பல ஆனா வீட்டில் இருந்த எல்லாரும் எங்களை கட்டாயப்படுத்தி ஊட்டி அனுப்பி வைத்தாங்க”

“ஹ்ம்ம் ஓகே ஊட்டியில் உங்களுக்கு ஏதாவது ஆக்ஸிடெண்ட் நடந்ததா? நீங்க ஊட்டியில் எங்கே தங்கி இருந்தீங்க?”

“ஹோட்டல் ப்ளூ ஹில்ஸ் அங்கே தான் நானும், கவியும் தங்கி இருந்தோம் ஜூன் மன்த்ல ஒரு டே சரியா ஞாபகம் இல்லை அன்னைக்கு காலையில் ஒரு ஐந்து மணி இருக்கும் எப்போவும் போல கவியும், நானும் பேசிட்டு இருந்தோம் அப்போ கவி என்னை சீண்டிப் பேச நான் பதில் பேசி இரண்டு பேரும் விளையாடிட்டு ஓடிட்டு இருந்தோம் அப்போ என் கவி…என் கவி…” கண்களை இறுக மூடிக் கொண்டு தலையை இடமும், வலமாக ஆட்டிக் கொண்டு இருந்தவள் தோளைப் பற்றி கொண்ட விருத்தாசலம்

“தேன்மதி ரிலாக்ஸ் ரிலாக்ஸ்” என்று அமைதிப்படுத்தினார்.

விருத்தாசலம் அவசரமாக ஒரு இன்ஜெக்ஷனை தேன்மதிக்கு செலுத்த சிறிது நேரம் அரற்றிக் கொண்டு இருந்தவள் அதன் பின் அமைதியாக உறங்கிப் போனாள்.

“கிருஷ்ணா அவங்க கொஞ்சம் தூங்கட்டும் சீ இஸ் ஆல்ரைட் காலையில் அவங்க கண் முழிக்கும் போது எல்லாம் நார்மலாக இருக்கும்” என்று விட்டு விருத்தாசலம் சென்று விட கவிகிருஷ்ணாவோ ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தேன்மதியையே பார்த்து கொண்டிருந்தான்.

“அவ ஆல்ரைட் தான் ஆனா நான் ஆல்ரைட் இல்லையே! எங்கே இருந்துடி வந்த?
இப்படி மொத்தமாக என்னை உன் பக்கமாக இழுத்து எடுத்துகிட்டு இப்போ ஒரேயடியாக என்னை நொறுங்கி போக வைத்துட்டியேடி! என் கண்ணில் நீ பரிதாபத்தை மட்டும் தானா பார்த்த? என் காதல் உனக்கு தெரியலயா?”
வாய் விட்டு சத்தம் போட்டு கேட்க முடியாமல் அவள் முகத்தை பார்த்து கொண்டு அவன் கேட்க அவளோ அது எதுவும் உணர முடியாத நிலையில் உறங்கிக்
கொண்டிருந்தாள்.

“தேனு! என்னை விட்டு போயிடாதே நீ நெருங்கி வரும் போது நான் விலகி போனேன் நான் உன்னை என் கூடவே வைத்து பார்க்க நினைக்கும் போது இப்படி நீ என்னை விட்டு மொத்தமாக போகப் பார்க்குறியே! ஏன் டீ ஏன்?” கோபத்தில் அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்தியவன் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி சென்றான்.

“கிருஷ்ணா! டேய் கிருஷ்ணா!” தன் அழைப்பைக் கூட பொருட்படுத்தாமல் வேகமாக வெளியேறி சென்றவனை குழப்பமாக பார்த்து கொண்டிருந்த வேதவல்லியின் தோள் மேல் கை வைத்த ஜானகி

“கிருஷ்ணா நிதர்சனத்தை எண்ணி கோபமாக போறான் கொஞ்ச நேரம் போனால் சரியாகிடுவான் நீங்க எதுவும் கவலை படாதீங்க” என்று கூறவும் புன்னகையோடு அவரை பார்த்து தலை அசைத்தவர் மற்றவர்களிடம் சொல்லி விட்டு காயத்ரி மற்றும் கௌசிக்கை அழைத்து கொண்டு தன் வீடு நோக்கி சென்றார்.

“தேன்மதி முழுமையாக சரி ஆகிட்டு வர்றாங்க அவங்களுக்கு என்ன நடந்ததுனு எல்லாம் புரிந்துடும் நீங்க கவலை படுற மாதிரி எந்த பிரச்சினையும் இல்லை காலையில் அவங்க எழுந்ததும் மறுபடியும் நான் வந்து அவங்களைப் பார்க்குறேன்” என்று விட்டு விருத்தாசலமும் சென்று விட சம்யுக்தாவோ தேன்மதியின் அருகில் அமர்ந்து கொண்டு கண்கள் கலங்க தன் மகளை பார்வையால் வருடிக் கொடுத்தார்.

தன் அறைக்குள் வந்து அடைந்து கொண்ட கவிகிருஷ்ணாவோ  ஜன்னலினூடாக கண்கள் கலங்க வானத்தை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றான்.

கண்களில் இருந்த விழுந்த ஒற்றை கண்ணீர் துளி தன் கையில் பட்டு தெறித்து விழுந்த பின்னரே தன் கண்களை தொட்டு பார்த்தவன் விரக்தியாக புன்னகத்து கொண்டான்.

“நான் இவ்வளவு பலவீனமான ஆளா? எனக்கே என்னை பார்த்து ஆச்சரியமாக இருக்கு  இப்படி என்னை மொத்தமாக மாற்றிட்டியேடி! எதற்காகவும் கலங்காதவன் உனக்காக கலங்கி போய் நிற்குறேன்டி தேனு!” அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் கவிகிருஷ்ணா மண்டியிட்டு அமர்ந்து கொள்ள தேன்மதியோ அவன் அழைப்பை அதை உணர்ந்தாற் போல மெல்ல கண் விழித்து சுற்றிலும் பார்த்தாள்.

சம்யுக்தா கதிரையில் அமர்ந்த நிலையிலேயே உறங்கி இருக்க அவரருகில் ஜானகியும் உறங்கிக் கொண்டிருந்தார்.

ஜானகியின் முகத்தைப் பார்த்ததும் அவளது கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.

“கவி எங்க எல்லாரையும் இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டியேடா!” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே மீண்டும் அவள் உறங்கிப் போக கவிகிருஷ்ணாவிற்கோ அந்த இரவு தூங்கா இரவாகிப் போனது…….

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!