தேன்மதி போட்ட சத்தத்தில் சுற்றி நின்ற அனைவரும் அதிர்ச்சியாக அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தனர்.

ரிசப்ஷனில் இருந்த பெண்ணோ விருத்தாசலத்தின் அருகில் வந்து
“ஸார் ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க

அந்த பெண்ணைப் பார்த்து புன்னகையோடு மறுப்பாக தலை அசைத்தவர்
“நத்திங் மா ஒரு சின்ன டிஸ்கஸன் அவ்வளவு தான் கிருஷ்ணா வந்தால் என்னை என் ரூமில் வந்து மீட் பண்ண சொல்லுங்க” என்று விட்டு தேன்மதியின் கை பிடித்து தன் அறைக்குள் அழைத்து சென்றார்.

அங்கிருந்த இருக்கையில் அவளை அமரச் செய்தவர் ஒரு டம்ளர் முழுவதும் தண்ணீரை நிரப்பி அவள் முன்னால் நீட்ட எதுவும் பேசாமல் அதை வாங்கி கொண்டவள் ஒரே மிடறில் அதில் இருந்த தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்தாள்.

வெற்று டம்ளரையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவள் கண்களோ விடாமல் கண்ணீர் வடித்து கொண்டு இருந்தது.

“தேன்மதி இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழுதுகிட்டு இருக்கீங்க முதல்ல கண்ணைத் துடைங்க” தன் மேஜை மேல் இருந்த டிசு பாக்ஸை அவளின் புறமாக விருத்தாசலம் நகர்த்தி வைத்தார்.

வெற்று டம்ளரை மேஜை மேல் வைத்து விட்டு டிசு ஒன்றை எடுத்து தன் கண்களை துடைத்து கொண்டவள் அப்போதும் எதுவும் பேசவில்லை.

“தேன்மதி உங்க ஆழ் மனதில் என்ன இருக்குன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சுடுச்சு தானே? அதற்கு அப்புறமும் எதை நினைத்து பயப்படுறீங்க? இந்த சொஸைட்டியை நினைத்து தயங்குறீங்களா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க தேன்மதி!”

“நான் இந்த சமூகத்தைப் பார்த்தோ வேறு ஆட்களை பார்த்தோ பயப்படல டாக்டர்! என்னை பார்த்து தான் பயப்படுறேன்! எனக்கு என்னை பார்த்தே பயமாக இருக்கு!”

“வாட்? உங்களைப் பார்த்து பயமா? எதற்காக பயம்?”

“நீங்க இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்ட அதே கேள்வி கிருஷ்ணாவை மறுபடியும் இங்கே சென்னையில் பார்த்த நாளிலிருந்தே எனக்கு மனதிற்குள் ஓடிட்டு இருக்கு நானும் பலமுறை அதற்கு பதில் யோசித்து பார்த்தேன் கிடைக்கல ஆனா இன்னைக்கு அதற்கான பதில் கிடைச்சுடுச்சு ஆனா அதை தைரியமாக என்னால ஏற்றுக் கொள்ள முடியல டாக்டர்!”

“எதனால உங்களுக்கு அப்படி தோணுது தேன்மதி?”

“நான் கிருஷ்ணாவை ஏற்றுக்கிட்டு அவரோடு வாழ்ந்தாலும் எப்போதாவது என்னை அறியாமலே நான் கவியோடு அவரை ஒப்பிட்டு பார்த்து பேசிடுவேனோனு தான் டாக்டர் என் பயமே! ஒரு வேளை என்னை அறியாமல் நான் அப்படி பேசிட்டேன்னா கிருஷ்ணா மனசு அதை தாங்கிக்காது டாக்டர்! என் வாழ்க்கை தான் இப்படி ஆகிடுச்சு அதற்காக கிருஷ்ணா வாழ்க்கையும் இப்படி ஆகணுமா டாக்டர்? இதற்காக தான் நான் கிருஷ்ணாவை விட்டு விலகி விலகி போறேன் ஆனா யாரும் என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுறாங்க இல்லை டாக்டர்” கதறி அழுத தேன்மதியின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்த விருத்தாசலம் அவளது அழுகை முற்றாக நிற்கும் வரை அமைதியாக நின்றார்.

சிறிது நேரம் கழித்து தன் முகத்தை துடைத்து கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவள்
“இப்போ நான் சொன்ன விஷயம் மற்றவங்களுக்கு சாதாரணமாக இருக்கும் டாக்டர் ஆனா இந்த நிலைமையை தினமும் நான் தான் அனுபவிக்கணும் ப்ளீஸ் டாக்டர் நீங்களாவது கிருஷ்ணாவிற்கு இதை புரிய வைங்க” என்றவாறே எழுந்து கொள்ள போக

“எதை புரிய வைக்க தேன்மதி? அவன் வேண்டாம் வேண்டாம்னு விலகி போகும் போது நாங்க சொல்லுற எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நீயாக ஒரு முடிவெடுத்து அவன் பின்னாடியே சுற்றி வந்ததை புரிய வைக்கணுமா?” என்று விருத்தாசலம் கேட்க அவரது கேள்வியில் அதிர்ச்சியானவள் மீண்டும் அந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.

“இங்கே பாருங்க தேன்மதி! நான் உங்களை காயப்படுத்தி பார்க்கணும்னு இதெல்லாம் பேசல நீங்க ப்ராக்டிகலா கொஞ்சம் யோசிங்க! கிருஷ்ணா ஆரம்பத்தில் உண்மையான நிலவரத்தை சொன்னான் நீங்க புரிஞ்சுக்கல அவன் அதற்கு அப்புறமாக கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நேசிக்க ஆரம்பத்தான் அந்த நேரம் நீங்க திருமணம் ஆகி கணவனை இழந்த ஒரு பொண்ணாக அவனுக்கு தோணல தேன்மதி அப்படி என்கிற ஒரு பொண்ணாக தான் தெரிஞ்சீங்க அவன் தன் காதலை நீங்க அவன் கூட இருந்த நேரம் அவன் பயன்படுத்த நினைக்கல ஏன்னா அவன் கவிகிருஷ்ணாவா தான் உங்களை காதலித்தான் காதலித்துட்டு இருக்கான் உங்களுக்கு பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வந்த பிறகு தான் அவன் தன் காதலை சொன்னான் நீங்க வேண்டாம்னு சொன்னதும் விலகி நின்னானே தவிர உங்களை மறக்கல”

“இப்போதும் நான் வேண்டாம்னு தானே சொல்றேன் டாக்டர்”

“அப்போ சொன்ன போது உங்க மனதில் காதல் இல்லை தேன்மதி இப்போ உங்க மனதில் காதல் இருக்கு இங்கே நான் சாதாரண ஒரு மனிதன் என்கிற நிலையை தாண்டி ஒரு சைக்காட்ரிஸ்ட்!”

“……..”

“நீங்க மனதில் நினைத்து இருக்கும் விஷயம் கரெக்ட் தான் நான் அதை உங்களை அப்படியே மனதில் வைத்துக் கொள்ள சொல்லல அதை இல்லாமல் செய்யும் வழியும் இருக்கு அதை நீங்க ஏன் ட்ரை பண்ண கூடாதுனு தான் கேட்கிறேன் தேன்மதி?”

“என்ன? எனக்கு புரியல டாக்டர்! என்ன வழி?” குழப்பமாக கேட்ட தேன்மதியைப் பார்த்து

புன்னகத்து கொண்ட விருத்தாசலம்
“அந்த வழியை தெரிந்து கொள்ள நீங்க இவ்வளவு ஆர்வமாக இருக்குறீங்களே தேன்மதி!” என்று கூற அவளோ சட்டென்று தன் தலையை குனிந்து கொண்டாள்.

“ஓகே ஓகே ஜோக்ஸ் அபார்ட் உங்க மனதில் இருக்கும் குழப்பம் எல்லாம் போக ஒரு வழி காதல்!”

“வாட்? காதலா?”

“யெஸ் காதலே தான்!”

“நீங்க என்னை ரொம்ப குழப்புறீங்க டாக்டர்!”

“ஒரு குழப்பமும் இல்லை தேன்மதி ஆரம்பத்தில் இருந்தே உங்களை வேண்டாம்னு ஒதுக்கி வைத்து பேசிய கிருஷ்ணா அதற்கு அப்புறமாக நீங்க எந்த நிலையில் இருக்குறீங்க? உங்க பிரச்சனை என்ன? எதுவும் தெரிஞ்சுக்காமலேயே உங்களை நேசிக்க ஆரம்பித்தான் ஏன் அவன் காதல் மேல அவனுக்கு நம்பிக்கை இருந்தது தன்னோட மனதில் இருக்கும் எல்லா குழப்பங்களையும் அந்த காதல் இல்லாமல் செய்யும்னு அவன் நம்பினான் அப்படியே நடந்துச்சு அதே மாதிரி நீங்க கிருஷ்ணா மேல் வைக்க போகும் காதலும் நிச்சயமாக உங்க மனதில் இருக்கும் குழப்பங்களையும் இல்லாமல் செய்யும்”

“பட் டாக்டர்! கிருஷ்ணாவை நான் எப்படி?”

“என்ன? என்ன கிருஷ்ணாவை நான் எப்படி?”

“உங்க மனதில் கிருஷ்ணா இருக்கான் அது எல்லோருக்கும் தெரியும் உங்களுக்கு அதை வெளிப்படையாக சொல்ல தயக்கம் சரி சொல்ல வேண்டாம் அப்படியே இருக்கட்டும் உங்க மனதால் அந்த காதலை உணர்ந்து பாருங்க அப்போ உங்களுக்கு எல்லாம் புரியும்”

“…….”

“கடைசியில் என்னை லவ்வோலஜி கிளாஸ் எடுக்க வைத்துட்டானே இந்த கிருஷ்ணா!” சற்று சத்தமாகவே விருத்தாசலம் புலம்பிக் கொண்டு இருக்க அவர் புலம்பலை கேட்டு தேன்மதியின் இதழின் ஓரம் புன்னகை ஒன்று வந்து குடி கொண்டது.

“இது தான் தேன்மதிக்கு கரெக்ட்! லைப்ல கஷ்டம் வரும் போகும் அதற்காக கண்ணில் இருக்கும் கண்ணீரை வேஸ்ட் பண்ண கூடாது பிரச்சனையைக் கண்டு பிடித்த கடவுள் கண்டிப்பாக அதற்கு ஒரு தீர்வையும் கண்டு பிடித்து இருப்பாரு அதை நாம கண்டுபிடிக்குறதுல தான் நம்ம சமயோசிதம் தெரிய வரும் எப்போதும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே பிரச்சனையை பேஸ் பண்ண கத்துக்கோங்க தேன்மதி! அப்புறம் பாருங்க பிரச்சனையே நம்ம கிட்ட நெருங்க பயப்படும்”

“ஹா! ஹா! ஹா! டாக்டர்! நீங்க செம்ம ஸ்மார்ட்! யார் கிட்ட எப்படி பேசி அவங்களுக்கு எல்லாம் புரிய வைக்கணும்னு ரொம்ப நல்லா தெரிந்து வைத்து இருக்கீங்க”
பாராட்டாக கூறிய தேன்மதியைப் பார்த்து புன்னகத்து கொண்ட விருத்தாசலம்

“அது தானே ம்மா நம்ம தொழில்!” என்று கூறினார்.

“உங்க கிட்ட பேசுனதுக்கு அப்புறமாக ஒரு தெளிவு வந்த மாதிரி இருக்கு டாக்டர்! என் மனதில் இருந்த பெரும்பாலான குழப்பங்கள் எல்லாம் விலகின மாதிரி இருக்கு அதனால உங்க கருத்துகளை எல்லாம் பின்பற்றலாம்னு நினைக்குறேன்” தேன்மதி கூறியதை கேட்டு விருத்தாசலம் ஆச்சரியமாக அவளை பார்த்தார்.

“அப்படின்னா? தேன்மதி! நீ?” அதிர்ச்சியாக கேட்டவரைப் பார்த்து புன்னகத்து கொண்டவள்

“நீங்க நினைக்குறது கரெக்ட் தான் பட் நான் இதை வெளிப்படையாக இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் நான் சாதாரண மனுஷி தானே? மெஷின் இல்லையே? ஷோ எல்லாவற்றையும் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்க்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அதாவது உங்க பாஷையில் சொல்லப் போனால் மனதால் இந்த விஷயம் ஒவ்வொன்றையும் உணர்ந்து பார்க்க போறேன்” என்று கூற

“ஓஹ் மை காட்! ஐ யம் ஸோ ஹெப்பி தேன்மதி” என்றவாறே அவளது கை பற்றி குலுக்கினார் விருத்தாசலம்.

“டாக்டர்! வெயிட்! வெயிட்! இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது முக்கியமாக கிருஷ்ணாவிற்கு என் மனதில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் சரியான அப்புறமாக நானே எல்லார் கிட்டயும் சொல்லுவேன்”

“நிச்சயமாக நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் ம்மா நீ இந்தளவிற்கு மனம் மாறி இருக்குறதே எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு கிருஷ்ணா இஸ் ஷோ லக்கி!”

“இல்லை டாக்டர் நான் தான் லக்கி! என்னை சுற்றி எனக்காக யோசிக்க இத்தனை பேர் இருக்காங்களே! அந்த வகையில் நான் தான் லக்கி!” என்றவளது தலையை விருத்தாசலம் ஆதரவாக வருடிக் கொடுத்தார்.

“எக்ஸ்கியுஸ் மீ டாக்டர்! என்னை வரச் சொல்லி இருந்தீங்களாமே?” என்றவாறே அவர் அறைக் கதவை திறந்து கொண்டு வந்தவன் அங்கு இருந்த தேன்மதியைப் பார்த்து அதிர்ச்சியில் வாயைப் பிளந்து கொண்டு நின்றான்.

சிரித்துக்கொண்டே அவனருகில் வந்து நின்ற விருத்தாசலம் அவனது வாயை மூடி விட சமாளிப்பாக சிரித்துக் கொண்டே அவரை பார்த்து கண் சிமிட்டியவன்
“ஹலோ தேனு! எப்படி இருக்க?” என்றவாறே அவளருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

“டேய்! இங்கே நான் ஒருத்தன் இருக்கேன் டா! ரிசப்ஷனில் தேன்மதி வந்த விஷயத்தை உன் கிட்ட அவங்க சொல்லவே இல்லாத மாதிரி நல்லா நடிக்குறடா!” என்ற விருத்தாசலத்தை பார்த்தும் பார்க்காதது போல அமர்ந்திருந்தவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டாக்டர் நான் அப்போ கிளம்புறேன் டைம் ஆச்சு” என்றவாறே தேன்மதி எழுந்து கொள்ள

விருத்தாசலமோ அவளெதிரில் வந்து நின்று
“என்ன தேன்மதி!
கிருஷ்ணா கிட்ட ஏதோ சொல்லணும்னு சொல்லிட்டு வந்த இப்போ எதுவுமே
சொல்லாமல் போற?” என்று கேட்க அவளோ சற்று முன்னர் பேசிய விடயத்தை பற்றி தான் அவர் பேசுகிறார் என்றெண்ணி அதிர்ச்சியாக அவரையும், கவிகிருஷ்ணாவையும் மாறி மாறி பார்த்து கொண்டு நின்றாள்.

“என்ன? தேனு என் கூட பேச வந்தாளா? இட்ஸ் அ மெடிக்கல் மிராக்கல்! என்னால நம்பவே முடியல! ஒரு வாரம் பார்க்காமல் இருந்ததற்கே இந்த மாற்றம்னா இன்னும் ஒரு வாரம் பார்க்காமல் இருந்து இருந்தால் கல்யாணத்துக்கே ஓகே சொல்லி இருப்பா போலயே!” ஓரக் கண்ணால் தேன்மதியைப் பார்த்து கொண்டே தன் கன்னத்தில் தட்டிய வண்ணம் கவிகிருஷ்ணா யோசித்து கொண்டு நிற்க

அவன் முதுகில் மெதுவாக தட்டி விட்டபடி அவனருகில் வந்து நின்ற விருத்தாசலம்
“ரொம்ப எல்லாம் கற்பனை பண்ணாதே! தேன்மதி அவங்க அத்தை ஜானகியை பற்றி பேச வந்திருக்கா” என்று கூறவுமே அவள் சற்று நிம்மதியாக உணர்ந்தாள்.

கவிகிருஷ்ணாவோ விருத்தாசலத்தின் பதிலில் கவலையுடன் தேன்மதியைப் பார்த்து
“அப்படியா?” என்று கேட்க அவளும் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

“அய்யோ! வடை போச்சே!” என்று தன் தாடையை தடவி விட்டுக் கொண்டவன்

“பரவாயில்லை ஜானகி ம்மா பற்றி பேசனாலும் தேனு என் கிட்ட என்னை தேடி வந்து இருக்காளே! அதுவே எனக்கு ஒரு பெரிய வெற்றி தான்! இனி எல்லாம் சுபமே!” என்று கூறியவாறே விருத்தாசலத்தை பார்த்து புன்னகைக்க அவரோ தேன்மதியை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்தார்.

அவரது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட அவளோ சற்று நாணத்தோடு கவிகிருஷ்ணாவைப் பார்க்க அந்த மாற்றம் ஒன்றே விருத்தாசலத்தின் நம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்கச் செய்தது.

சிறிது நேரம் விருத்தாசலத்துடன் பேசி விட்டு அவரது அறையில் இருந்து வெளியேறி வந்த தேன்மதி மற்றும் கவிகிருஷ்ணா ஒருவரிடம் ஒருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

“சரி கிருஷ்ணா நான் கிளம்புறேன்” திரும்பி செல்ல போனவளின் கரங்களை அவனது கரங்கள் பற்றி இருந்தது.

“கிருஷ்ணா இது ஹாஸ்பிடல்!” தேன்மதி மெல்லிய குரலில் கவிகிருஷ்ணாவிற்கு மட்டும் கேட்கும் வகையில் கூறவும்

சற்று அவளை நெருங்கி வந்து நின்றவன்
“அப்போ நீ உண்மையாக ஜானகி ம்மா பற்றி பேச தான் வந்த இல்லையா?” என்று கேட்கவும்

அவனது கண்களை நிமிர்ந்து பார்த்தவள் தன் இதழின் ஓரம் தவழ்ந்த சிரிப்பை மறைத்து கொண்டே
“ஆமா டா கிருஷ்ணா!” என்று அவனது கையில் இருந்த தன் கையை உருவி எடுத்து கொண்டு அவனை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து வேகமாக நடந்து சென்று விட அவனோ அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் அவள் சென்ற வழியை புன்னகை முகமாக பார்த்து கொண்டு நின்றான்……

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!