Kavithai

Kavithai

மழைத்தூரல் நனைக்காத மரத்தடி

பூமிப் பரப்பின்

ஏக்கம்….

 

கடைசிப் பந்தியில் அமர்ந்திடும்

கல்யாண வீட்டாரின்

எதிர்பார்ப்பு….

 

மேற்கே உதிரும், அந்திமாலை

சூரியப் பூவின்

வாட்டம்….

 

கரையில் நின்று, கடலின் அழகை ரசித்திடத் துடிக்கும் அலையின்

தவிப்பு…

 

வெறுச்சோடித் தெரிகின்ற

திருவிழா முடிந்த கோவில் தெருவின்

வெறுமை….

 

இவையாவும்

உணர்கிறேன்,

உன்மத்தம் உணர்த்திடும்

உன் முத்தம் – கிடைக்காத

உன்னவள்!!

 

உத்தரவுகள் ஏதுமின்றி – இவள்

நித்திரைக்குள் புகுந்து

யாத்திரை செய்திடும்

யவ்வனக் காதலனே…

 

ஆர்ப்பரிக்கும் அன்பால் – இவள்

ஆருயிர் கலந்து

அக்களிப்பு தந்திடும்

அன்புக் காதலனே…

 

உரசாது நின்றுகொண்டு – இவள்

உள்மனது  சென்று

உற்சாக ஊஞ்சலாட்டிடும்

உன்னதக் காதலனே…

 

கண்ணியப் பேச்சால் – இவள்

காதிற்குள் நுழைந்து

கரகோஷம் எழுப்பிடும்

கருவக் காதலனே…

 

நாழிகை பாராமல் – இவள்

நயனங்கள் நோக்கி

நேசங்கள் நவின்றிடும்

நேயக் காதலனே…

 

மந்தகாச மொழியால் – இவள்

முன்பு மண்டியிட்டு

மறுமொழிக்கு  மன்றாடிடும்

மாயக் காதலனே…

 

இத்தகைய,

பிரியக் காதலனைக் கண்டு

வெளிப்படையாக வெட்கப்பட்டு

பிரமாண்டக் காதலைப்

பிரகடனப் படுத்திடும்

இவள்!

***

 

மேகத்தைக் கிழித்திடும் – இவள்

மோனத்தைக் களைத்திடும்

காதலன்

மத்தளம் அடித்திடும்

 

அகர்பத்தி புகையாய் – இவள்

அணைத்திடும் பாசத்தால்

 

*****

விழிப்புமணி ஓசை கேட்டும்

விழிக்காமல் கண் மூடிடுவது

விழுமிய தூக்கம்…

 

சன்னலோர இருக்கை கிட்டியதும்

சங்கடங்கள் மறந்து வந்திடுவது

சடுதி தூக்கம்…

 

காதலன் தோள் கண்டதும்

களிப்புடன் காதலி சாய்ந்திடுவது

காதல் தூக்கம்…

 

மத்தியான உணவுக்குப் பின்

மனிதர்களைக் கட்டிப் போட்டிடுவது

மந்த தூக்கம்…

 

நம்பிக்கை கொண்ட வாழ்க்கையில்

நாளை பயமின்றி கிடைத்திடுவது

நல்ல தூக்கம்…

 

அலுவலக வேலைக்கு இடையில்

அக்கம்பக்கம் பாராமல் வந்திடுவது

அசதி தூக்கம்…

 

கைக்குழந்தை கண் அயர்ந்ததும் களைப்புடன் தாய் எடுத்திடுவது

குட்டித் தூக்கம்…

இத்தனையையும்,

விஞ்சியது

மிஞ்சியது

அனைத்துப் பாடப் புத்தகத்தையும் அணைக்கும் போது வரும் தூக்கம்…

அதுவே

ஆகச்சிறந்த தூக்கம்!!!

error: Content is protected !!