KE 💘🚆 – 2(2)

தட்டில் வைத்து இருந்த பூரியை ராகவ் விழுங்கிக் கொண்டு‌ இருக்க, அவனின் ஐபோனும் இசைத்து தன் இருப்பை காட்டியது.

“ஹலோ சொல்லு சிவா…” என்றதும் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அவனின் கோபம் பன்மடங்கு ஏற,

“ஐ டோன்ட்‌ வான்ட் எனி எக்ஸ்பிளனேசன்ஸ்( I don’t want any explanations). உன்கிட்ட என்ன வேலையை சொன்னேனோ அதை சரியா முடி. கொடுத்த பணம் கொடுத்த நேரத்துல வந்தே ஆகனும்… காட் இட்” என்றவன் அழைப்பேசியை துண்டிக்க சரியாக அங்கே சாப்பிட வந்தார் தேவராஜ். 

அவன் பேசியதை எல்லாம் கேட்டபடி வந்தவரோ, “இதுக்கு தான் சொன்னேன் இருக்கிற நம்ம ஹோட்டல் பிஸ்னஸை பாருனு. அதை விட்டுட்டு தேவை இல்லாமல் ரியல் எஸ்டேட் பண்றேன் அடிதடி பண்றேனு ச்சே” என்று சலிப்பாக சொல்ல, அவனோ தெனவட்டாக அமர்ந்து இருந்தான்.

“டேய் உனக்கிட்ட தான் சொல்றேன் நீ என்னமோ திமிரா உட்கார்ந்திட்டு இருக்க, உன்னை எல்லாம் சுயமா சம்பாரிக்க வைச்சு இருந்தா… வேலையுடைய கஷ்டம் தெரியும்” என்றவர் நாற்காலி விழும் சத்ததில் தன் பேச்சை நிறுத்தினார் தேவராஜ்.

தன்‌ தந்தையையே கூர்மையாக பார்த்தவன், “என்னவோ உங்க காசை எடுத்து நான் கம்பெனி ஸ்டார்ட் செஞ்ச மாதிரி பேசிட்டு இருக்கிங்க.‌ தாத்தா சொத்து பேரனுக்கு சொந்தம். அதுல என்னுடைய சேர் மட்டும் தான் நான் எடுத்து இருக்கேன். இதுல உங்ககிட்டே இருந்து ஒரு ரூபாய் கூட நான் வாங்குனது கிடையாது…” என்றவன் தொடர்ந்து,

“எடுத்த காசை நான் என்ன ஊதாரி தனமவா செலவு செஞ்சென்… இல்லையே நான் எவ்ளோ எடுத்தேனோ அதை விட இப்போ பலமடாங்க தானே மாத்தி இருக்கேன். காசு தாத்தவுடையதா இருக்கலாம்… ஆனா உழைப்பு என்னுடையது. இன்னொரு முறை இந்த ராகவேந்திரன் கிட்ட இப்படி பேசுனிங்க…” என்றவன் பேச்சை நிறுத்தியபடி அவரை அழுத்தமாக பார்த்தவன்,

“பேச மாட்டிங்கனு நினைக்குறேன்” என்றவன், விறுவிறுவென்று மாடி படியேறி தன் அறைக்கு சென்று விட்டான்.

“என்ன புள்ளயை பெத்து வைச்சிருக்க… வீட்டுல, வெளியில எல்லாரும் என்க்கிட்ட பேசவே நடுங்குவாங்க. ஆனா உன் பையன் மட்டும் இந்த ஆட்டம் ஆடிட்டு போறான். எல்லாம் திமிரு…” என்று மகன் மேல் காட்ட முடியாத கோபத்தை மனைவி மீது காட்டியவர்,

“ப்ச் இப்போ எதுக்கு நீ என்‌ மூஞ்சையே பார்த்திட்டு இருக்க, பூரியை எடுத்து வை… டேய் சசி நீயும் வந்து சாப்பிடு வா” என்றதும் சசிதரனும் அமர்ந்துவிட, தம் தம் கணவன்மார்களுக்கு பரிமாறினர் மகேஸ்வரியும்… சுசீலாவும்.

சாப்பிட்ட பின் கணவன் தலை மறைந்ததும், தன் மகன் அறைக்கு வேகமாக சென்றார் மகேஸ்வரி.  தன்‌ தாயை கண்டதும் அவர் வந்த காரணம் புரிந்தவன் புன்னகை முகமாக நிற்க, அவனின் முகத்திற்கு நெட்டி முறித்தபடி,

“டேய்‌ ராகவா இன்னைக்கு தான்டா உருப்படியா ஒரு காரியம் செஞ்சு இருக்க. நீ பேசுன பேச்சுக்கு வாயை தொறக்க முடியாமா உங்க அப்பா கப்சிப்னு அமைதியா இருந்தாரு பாரு அப்படியே குளுகுளுனு இருந்துச்சு டா. என் அண்ணன் வந்த போது எப்படி பார்த்தாரு… ஆனா புள்ளைக்கிட்ட பம்மிட்டு நிக்குறாரு… ஹா…‌ ஹா… அந்த கண் கொள்ளா காட்சியை காணவே சூப்பரா இருந்துச்சு டா… அப்பப்பா இப்படி உன் அப்பாக்கு டோஸ் கொடுடா” என்று கேட்டவரை கண்டு இப்போது வாய்விட்டே சிரித்தவன்

“ம்மா சத்தியமா நீ செம பீஸ் மா. அப்பா இருக்கும் போது அப்பாவியா இருக்கிறது. அவரு தலை மறைஞ்சதும் அவரையே கலாய்க்கிறது. எனக்கு தெரிஞ்சு உன்க்கிட்ட இருந்து தான் இந்த பழக்கம் உன் மருமகளுக்கு வந்து இருக்கும்னு நினைக்கிறேன்” என்றவன் தாயின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு தன் அலுவலகம் நோக்கி சென்றான் ராகவ்.

•••••••••••••••

ராகவ் சொல்லியபடி தான் தந்தையிடம் அவர் சொல்லியதற்கு எல்லாம் மண்டையை மண்டையை ஆட்டிய கமலினி, தற்போது தன் அண்ணனிடம் தனியாக சண்டைக்கு நின்றுக் கொண்டு ‌‌‌‌‌‌‌‌இருந்தாள்.

“இங்க பாரு ணா, இப்போ அவருக்கு என்னை பிரச்சனையாம். இத்தனை நாள்‌ நான் என் பிரெண்ட்ஸ் கூட தானே தங்கிட்டு இருந்தேன். இப்போ என்னவாம்..”

“இது உன்னுடைய ஜாப்பாக உனக்கு கொடுத்த குவாட்டர்ஸ்…  அதுனால நீ இந்த வீட்டுல தங்கு. என்னால இங்கே தங்க முடியாது. அவரு இஷ்டத்துக்கு எல்லாம் என்னால் ஆட முடியாது. போய் அவருக்கிட்ட நீயே சொல்லிடு” என்றிட,

“ஏன் இனிமா நான் உன்னை கன்ட்ரோல் பண்ணுவேன்னு நினைக்குறியா” என்று ஆதுரமாக கேட்க,

“வாட் நீ என்னை கன்ட்ரோல் பண்ணுவியா. இந்த கமலினியை யாராலும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அம்மாவுக்காக மட்டும் தான் அவரை எதிர்த்து பேசாம இருக்கேன். இல்லைனா இப்படி உன்க்கிட்ட நான் கேட்டுக்கிட்டு இருக்கனும்னு அவசியமில்ல” என்றவளை முறைத்து பார்த்த விக்ரமனும் தங்கையின் குணம் அறிந்ததால் அமைதியாகி விட்டான்.

“சரி டா நான் அப்பாக்கிட்ட பேசிக்கிறேன்… ஆமா நீ எதுக்கு அந்த வீட்டுக்கு போன… அப்பாக்கிட்ட சொன்ன கதையை என்கிட்டேயும் சொல்லாத. அதை நம்பவும் நான்‌ தயாரா இல்லை” என்று கேட்க அப்போதும் அவளிடம் மௌனம் மட்டுமே.

“சரி நீ சொல்ல மாட்டேன்னு நினைக்குறேன். ஆனா மாரியாதை கிடைக்காதுனு தெரிஞ்சும் அங்கே போறது எனக்கு ‌‌‌பிடிக்கல”

“எனக்கு பிடிச்சா போதும். உனக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை இல்லை” என்று பட்டென்று கூறியவள்,

“நான் அங்கே போறது என் மேல உயிரையே வைச்சு இருக்கிற அத்தைகாக மட்டும் தான். அதுனால மத்தவங்க எப்படி நடந்துக்கிட்டாலும் எனக்கு கவலை இல்லை” என்றதும் விக்ரமனிடம் இருந்து பெருமூச்சு ஒன்று கிளம்ப, ஹாலில் இருந்து தந்தை அழைக்கும் சத்தம் கேட்க, இருவரும் வெளியே வந்தனர்.

தன் மகளை கண்ட சந்தனபாண்டியோ “பாப்பா இந்த போட்டோ பாரு, பையன் எப்படி ‌‌‌‌‌‌‌‌‌இருக்கான். உனக்கு பிடிச்சு இருக்கா. எனக்கு தெரிஞ்சு உனக்கு பொருத்தமா இருப்பான்” என்று பேசிக் கொண்டே சென்றவரை கண்டு சிலையாகி நின்றாள் கமலினி.

♥️தொடரும்…♥️

(அடுத்த யூடி வியாழன் அன்று பதிவிடப்படும் டியரிஸ்)