KKE–EPI 16

KKE–EPI 16

அத்தியாயம் 16

தமிழ் சொற்களான திரு, அனந்த,புரம் ஆகிய பதங்களின் இணைப்பே திருவனந்தபுரமாகும். அனந்தன் என்ற பாம்பின் மீதே திருமால்(அரங்கநாதர்) படுத்திருப்பார். இவ்வூரிலுள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் திருக்கோயிலால் இப்பெயர் வந்தது இவ்வூருக்கு.

 

சுசிந்திரத்தில் இருந்த தாணுமாலயன் கோயிலில் தான் இவர்களுக்கு விடிந்தது. மெய் லிங் ஒவ்வொரு சந்நிதியிலும் மனமுருகி கண்ணீர் சிந்தி வேண்டிக் கொண்டாள். அவளையேப் பார்த்திருந்தாலும், அவள் அருகில் போகவில்லை ஜம்பு.

வாயால் பிரியலாம் என சொல்லிவிட்டாலும், அவள் மனம் துடிப்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. தூக்க வெறியில் கூட வோ ஐ நி சொல்லியவள் ஆயிற்றே அவள். இதற்கு மேல் அவளை அழ விட அவனுக்கு மனதில்லை. இன்று ஒரு நாளாவது அவளை சந்தோஷமாக வைத்திருக்க முடிவெடுத்தவன், தனது துக்கத்தை மறைத்து அவள் அருகி சிரித்த முகமாகப் போய் நின்றான். அந்த கோயிலின் வரலாறை சொல்லியபடியே, கைப்பிடித்து நடந்தான்.

நாளையோடு ட்ரீப் முடியப் போகிறது எனவும் மற்ற பெண்களும் அமைதியாகத்தான் இருந்தார்கள். மங்கி முடிந்த வரை அவர்கள் இருவருக்கும் தனிமைக் கொடுத்து மற்றவர்களைத் தானே கவனித்துக் கொண்டான்.

அங்கிருந்து கிளம்பி திருவனந்தபுரத்தில் இருந்த பத்மநாபஸ்வாமி கோயிலை அடைந்தார்கள். அங்கே வணங்கி விட்டு நாளை ஏர்போர்ட் போகும் வரை அவர்களுக்கு ரிலேக்ஸ் செய்து கொள்வதோடு, ஆயூர்வேத மசாஜ் செய்து கொள்ள ஏதுவாகவும் பூவர் ஹைலண்ட் போவதுதான் நிகழ்ச்சி நிரலில் இருந்தது. அங்கே ஒரு ரிசோர்ட்டில் இவர்களுக்காக அறைகள் புக் செய்யப்பட்டிருந்தன.

வேனைப் பார்க் செய்து விட்டு போட் வழியாக அந்த ரிசோர்ட்டை சென்றடைந்தார்கள். நீச்சல் குளமும், பச்சை பசேலென இயற்கையும், தீவை சுற்றிய நீருமாக மனதை அள்ளியது அந்த இடம். சோக கீதம் வாசித்த மெய் லிங் கூட அவ்விடம் கொடுத்த பொசிட்டிவ் வைப்ரேஷனில் முகம் மலர்ந்துப் போனாள். மறுநாள் செக் அவுட் செய்வது வரை அவர்களின் நேரம் அவர்கள் கையில்.

“ஏற்கனவே மசாஜ் புக் பண்ணியிருந்தவங்களுக்கு எல்லா அரேஞ்ச்மண்டும் செஞ்சிருக்கு. ரூம்ல பேக்கை வச்சிட்டு நீங்க ஸ்பா போகலாம். மத்தவங்க, உங்க இஸ்டப்படி சுத்திப் பார்க்கறதோ, குளிக்கப் போறதோ எதா இருந்தாலும் துணையோட போங்க. பாதுகாப்பான இடம்தான் இருந்தாலும் தனியா எங்கயும் போக வேணாம். நாளைக்கு கரேக்டா காலை பதினொரு மணிக்கு லாபிக்கு வந்திருங்க. இங்கிருந்து கிளம்பி, லாஸ்ட் மினிட் ஷாப்பீங் பண்ணிட்டு ஏர்போர்ட்டுக்கு ஏழு மணிக்கெல்லாம் போயிரனும்” என அறிவுறுத்தினான் ஜம்பு.

எல்லோரும் தலையாட்டியபடியே அவரவர் அறைக்குப் போனார்கள். மெய் லிங் ஜம்புவின் பக்கத்திலேயே நின்றிருந்தாள்.

“நீ போகலையா சமூ?”

“யூ கம் வித் மீ” என அவனையும் கூப்பிட்டாள். இவன் தர்மசங்கடமாக மங்கியைப் பார்க்க அவனோ,

“போங்கண்ணா! போய் பேசிட்டு இருங்க. நாளைக்கு கிளம்பிருவாங்க. நாம் எப்போதும் வர இடம்தானே. நம்மாளு ஒன்னு கிச்சனுல ஹெல்பரா இருக்கு. நான் போய் ஓசியில சாப்டுக்கிட்டே கடலைப் போட்டுகிட்டு இருக்கேன்” என கண்ணடித்தான்.

அவன் சொல்லிய விதத்தில் சிரிப்பு வந்தது ஜம்புவுக்கு.

“வா” என அவள் பேக்கைத் தூக்கிக் கொண்டு நடந்தான் ஜம்பு.

ரூமை திறந்து அவளை உள்ளே விட்டு இவன் பின்னே வந்தான். கடற்கரை வியூ உள்ள சூட் அது. பெரிய கட்டில், ஒற்றை சோபா, தொலைக்காட்சி பெட்டி. மினி ப்ரீட்ஜ் என அட்டகாசமாக இருந்தது.

மெய் லிங் பாத்ரூமை ஆராய இவனோ பால்கனியில் வந்து நின்று சுகமாய் தழுவும் காற்றை கண் மூடி ரசித்தான். சற்று நேரத்துக்கெல்லாம் அவன் பின்னால் காலடி ஓசைக் கேட்டது.

மெல்ல நடந்து வந்தவள், கண் மூடி சிலையென நின்றிருந்தவனைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள். கன்னத்தை அவன் முதுகில் பதித்து சுகமாக கண் மூடி நின்றாள் மெய் லிங். அப்படியே அசையாமல் நின்றிருந்தனர் இருவரும். மெல்ல தன் முதுகு அவள் கண்ணீரால் நனைவதை உணர்ந்ததும் அவளை முன்னே இழுத்து தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான் ஜம்பு.

“இன்னிக்கு முழுக்க நீ நோ க்ரை. வீ ஹேவ் டீமோரோ டூ க்ரை” என சொல்லி கண்ணீரைத் துடைத்து விட்டான்.

“போ, போய் அந்த குட்டி புள்ள ட்ரேஸ் போட்டுட்டு வா. பீச்சுக்குப் போலாம்”

“ஆர் யூ சுவர்? நீ ஷை ஆவீயே!” என கண்ணீரோடு சிரித்தாள்.

“அது வந்து, ஹ்ம்ம்.. ஷால் வச்சு ஹிப்ல டை பண்ணிக்க. சோ நான் ஷை ஆக மாட்டேன்” என சமாளித்தான் ஜம்பு.

அவள் ரெடி ஆகி வரவும், இருவரும் நடந்தே பீச்சுக்குப் போனார்கள். சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டு கூலர்ஸோடு அவன் கைப்பிடித்து நடந்தாள் மெய் லிங். ஏற்கனவே நெருப்பில் வெந்த கரிக்கொட்டை கலரில் தானே இருக்கிறோம், என அவள் லோஷனைக் கொடுத்தப் போது அவன் பூசிக்கொள்ள மறுத்துவிட்டான். பிடிவாதமாக பூசி விட்டுத்தான் கூட்டி வந்திருந்தாள் மெய் லிங்.

சின்னபிள்ளைகள் போல இருவரும் மணல் வீடு கட்டி மகிழ்ந்தார்கள். மணலில் ஹார்ட் வரைந்து அதில் தங்கள் பெயர் எழுதி போட்டோ எடுத்துக் கொண்டார்கள். பீச்சில் கால் நனைத்து, அலையோடு ஓடிப்பிடித்து விளையாடி, தண்ணீரில் உருண்டு பிரண்டு சந்தோஷமாக பொழுதைக் கழித்தனர்.

“ஜம்ப், ஸ்வீங்! என்னை ஆட்டு” என தென்னை மரங்களுக்கு நடுவே கட்டியிருந்த ஊஞ்சலைப் பார்த்து குதூகலித்தாள் அவள். அவள் ஆசைப்படியே அதில் அமர வைத்து ஆட்டி விட்டான் ஜம்பு.

“ஹை, ஹை, ஹை” என அவன் உயிரை வாங்கி விட்டாள் அவள்.

ஒருத்தரை ஒருத்தர் பிரியாமல் ஒட்டிக் கொண்டு ஹனிமூன் வந்த ஜோடி போல மகிழ்ந்திருந்தனர் இருவரும். இருட்டிக் கொண்டு வரவும்,

“லெட்ஸ் கோ” என அழைத்தான் ஜம்பு.

“இன் அ மினிட்” என்றவள் திரும்பி போகவே மனமில்லாதவள் போல அங்கேயே அமர்ந்துவிட்டாள். இவனும் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான். பேசிக் கொள்ளாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு, வானத்தையும், கடல் அலைகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். மீண்டும் அழைத்தான் ஜம்பு. அவள் பிடிவாதமாக அமர்ந்திருக்கவும், அப்படியே அலேக்காக தன் கைகளில் அள்ளிக் கொண்டான் அவளை.

“லோங் டைம் வேணான்டி! குளிரு நடுங்குது பாரு உனக்கு” என சொல்லியபடியே அப்படியே தூக்கிப் போனான். அவளும் அமைதியாக அவன் நெஞ்சில் காதை வைத்தப் படியே வந்தாள். ரிசார்ட் அருகே வந்ததும் இறக்கி விட்டான் ஜம்பு. ரூமை நெருங்கியதும், வெளியவே நின்றுக் கொண்டான்.

“சாப்பிடுட்டு, தூங்கு சமூ. சீ யூ டுமோரோ”

“ஜம்ப்”

“ஹ்ம்ம்”

“ஹேவ் டின்னர் வித் மீ ப்ளீஸ்”

முடியாது என தலையாட்டினான் ஜம்பு. உடனே கண்கள் இரண்டும் கலங்க, முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மெய் லிங்.

“ஏன்டி என்னைப் புரிஞ்சுக்க மாட்டற! ரொம்ப நேரம் என் கூட ஸ்பேன்ட் பண்ணா, வீட்டுக்குப் போனதும் இதெல்லாம் நினைச்சு நினைச்சு அழப் போறடி. அதுக்குத்தான் போதும்னு சொல்லுறேன்” தமிழில் புலம்பியவன்,

“சரி. ஓன் ஹவர் தான். ஒகேவா? அப்புறம் ஐ வில் கோ” என விட்டுக் கொடுத்தான்.

சட்டென முகம் பல்ப் போட்ட மாதிரி பிரகாசிக்க, கதவைத் திறந்து அவனை உள்ளே இழுத்துக் கொண்டாள். ரூம் சர்வீசில் உணவை ஆர்டர் கொடுத்தவள்,

“ஜம்ப், ஐ கோ குளி” என பாத்ரூமுக்கு சென்று விட்டாள். உணவு வருவதற்குள் குளித்து வாசமாக பாத் ரோபுடன் வந்தாள். முட்டி வரை இருந்த அந்த பிங்க் கலர் பாத் ரோப் கூட அவளுக்கு அழகை சேர்த்தது.

உணவு வந்ததும், இருவரும் கட்டிலின் கீழ் தரையிலேயே அமர்ந்துக் கொண்டனர். இருவருக்குமெ ப்ரைட் ரைஸ் தான் சொல்லி இருந்தாள் மெய் லிங்.

“ஜம்ப், ஃபீட் பண்ணி விடறியா?” என கேட்டாள் மெய் லிங்.

சரி என தலையாட்டியவன், கரண்டியில் உணவை அள்ளினான்.

“கையால ஃபீட் பண்ணு” என கேட்டவள் நெருங்கி அமர்ந்தாள்.

குருவி போல அவள் வாயைத் திறக்க, கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டினான் ஜம்பு. இவளும் அவனுக்கு ஊட்டினாள். இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர். கை கழுவியவன்,

“போகட்டா?” என கேட்டான்.

“வேய்ட்! இன்னும் ஃபைவ் மினிட் இருக்கு” என்றவள் மிஈண்டும் பாத்ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

“தடாஆஆ” என குரல் கொடுத்தப்படியே பாத்ரூமில் இருந்த வெளி வந்தாள். நிமிர்ந்துப் பார்த்த ஜம்புவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பட்டுப் பாவாடையின் ரவிக்கையை அணிந்து, அன்று காஞ்சிபுரத்தில் வாங்கிய கிளிப்பச்சை சேலையை உடம்பில் போர்த்தியபடி வன் முன் வந்து நின்றாள் மெய் லிங்.

“இதுக்குப் பேரு சேலை கட்டறதா, சேலைய போர்த்துறதா?” என சிரித்தவன் அவள் அருகில் போய் அந்த சேலையை கையில் எடுத்துக் கொண்டான். ஏதோ அவனுக்கு தெரிந்த அளவில் அதை அவள் உடம்பில் சுற்றி விட்டான் ஜம்பு.

பின் அவளை தன் புறம் திருப்பியவன்,

“மகாலெட்சுமி மாதிரி இருக்கடி சமூ” என சொல்லி நெற்றியில் முத்தமிட்டான்.

“லெட்ஸ் டேக் செல்பி” என இருவரும் அருகருகே நின்று ஒரு படம் எடுத்துக் கொண்டனர். கண்கள் வலியைக் காட்டினாலும் இருவர் முகமும் முயன்று புன்னகையைப் பூசி இருந்தது.

கடிகாரத்தைத் திரும்பி பார்த்தவன்,

“போகனும்டி” என்றான்.

“போடா!”

“பாய்”

“ஹ்ம்ம் பாய்”

அறைக்கதவின் குமிழியைத் திருகும் முன் ஓடி வந்து அவனைப் பின்னோடு அணைத்துக் கொண்டாள் மெய் லிங்.

அவளைத் திருப்பி முகம் முழுவதும் முத்தமிட்டவன், கடைசியாக உதட்டில் வந்து இளைப்பாறினான்.

“ஐ வில் மிஸ் யூ எவரிடே!” என்றான் ஜம்பு.

“மீ டூ ஜம்ப்”

“வோ ஐ நி டி சமூ”

“நான் உன்ன காதலிக்கறேன் ஜம்ப்”

பாசமாக அவள் உதட்டில் லேசாக முத்தமிட்டவன், வேகமாக கதவைத் திறந்து வெளியேறிவிட்டான்.

error: Content is protected !!