KNKfinal3

1437
இது அனைத்தையும் அவரின் கடிதத்தின் மூலம் படித்த விக்ரமாதித்யனால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை.ஏனெனில் மகேந்திரன் மிகவும் மென்மையான குணம் படைத்தவர் அவரா இப்படி ஒரு காரியம் செய்ய முன் வந்தார்.தாங்க முடியாத வலியுடன் கண்களை மெல்ல மூடித் திறந்தவர் ‘ஆம்’ என்பது போல தலை அசைக்க கொஞ்ச நேரம் ஆதித்யனுக்கு உலகம் தன்னுடைய சுழற்சியை நிறுத்தி விட்டது போல ஒரு பிரமை.ஹாஸ்பிடல் வாசலில் ஏன் போலிஸ் நின்றது என்ற கேள்விக்கும் அவனுக்கு இப்பொழுது பதில் தெரிந்து விட்டது.
சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டவன், “இதுக்காகவா நீங்க தற்கொலை முயற்சி செஞ்சீங்க?இது எதிர்பாராம நடந்த விபத்துன்னு சொல்லி என்னால உங்களுக்கு குறைந்த பட்ச தண்டனைல விடுதலை வாங்கித் தந்து இருக்க முடியும்.இப்படி அவசரப் பட்டுட்டீங்களே”
“இ…இல்லை தம்பி அதுக்காக மட்டும் இல்லை.அந்த ஜோசியர் சொன்ன மாதிரி என் மகளோடு வாழ்க்கையில் நடக்கிற எல்லா பிரச்சினைகளும் தீர்வு கிடைக்கணும்னா அதுக்கு அந்த குழந்தையை பலி கொடுக்கிறதை விட என்னோட உயிரை விடுறது தான் சரியா இருக்கும்னு தோணுச்சு அது தான்.”மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டே பேசியவர் மேலும் தொடர்ந்தார்.
“ஐயோ அந்த ஆளே சரியான பிராடு…அவன் சொன்னதை நம்பியா இப்படி செஞ்சீங்க?”ஆதங்கத்துடன் கேட்டான் விக்ரமாதித்யன்.ஒருவேளை தான் முன்கூட்டியே இதை பற்றி இவரிடம் பேசி இருக்க வேண்டுமோ என்ற குற்ற உணர்வு வேறு அவனை வாட்டி வதைத்தது.
“அந்த ஆள் எப்படியோ தம்பி…ஆனா மிச்சம் இருக்கிற நாள் பூரா என் காதில் அவர் சொன்ன வார்த்தை கேட்டுக்கிட்டே இருக்கும்.என்னால நிம்மதியா இருக்க முடியாது.”
மறுத்து பேச முயன்றவனை தடுத்து விட்டு மூச்சு வாங்க அவரே தொடர்ந்து பேசினார். “த…தம்பி  எனக்கு ஒரு உதவி…”
அவர் சொல்வதற்கு முன்னரே அது என்னவாக இருக்கும் என்று கணித்தவன் அவர் பேச சிரமப்படுவதை உணர்ந்து தானே முன் வந்து பேசினான்.
“பொழிலரசி இனி என் பொறுப்பு.வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இதை சொல்லலை.அவ தான் எனக்கு எல்லாமும்ன்னு நான் முடிவு பண்ணி ரொம்ப நாள் ஆச்சு.பொழில் குணமடைஞ்ச பிறகு உங்ககிட்டே சொல்லி அனுமதி வாங்கணும்னு நினைச்சேன்.ஆனா இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் என் மனசை பத்தி உங்களுக்கு சொல்ல வேண்டியதா போச்சு…”
“அ…அரசிக்கு… இந்த உண்மை எதுவும் தெரிய வேண்டாம்.”மூச்சுத் திணறல் மேலும் அதிகமானது.
“நான் அவகிட்டே இதைப்பத்தி எதுவும்  சொல்ல மாட்டேன்”
“தெ…தெரிஞ்சா அவ தா…தாங்க மாட்டா…”
“நிச்சயம் தெரிய விட மாட்டேன்.இது சத்தியம்”
“கடைசியா ஒரே ஒரு உதவி…”
“சொல்லுங்க…”அவனையும் அறியாமல் விக்ரமாதித்யனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
“அரசிக்கும் உங்களுக்கும் உடனடியா கல்யாணம் நடக்கணும்”
“சார் அது எப்படி? அரசி இன்னும்…”
“ப்ளீஸ்! தம்பி…நான் என்னோட வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள்ல இருக்கேன்.அதை என்னால உணர முடியுது.ப்ளீஸ் மறுக்காதீங்க”
“அப்படி எல்லாம் பேசாதீங்க…நீங்க நல்லபடியா உடம்பு தேறி வாங்க.அதுக்குள்ள அரசிக்கும் குணமாகிடும்.எங்க கல்யாணத்தை முன்னே இருந்து எடுத்து நடத்துங்க….அது தான் எனக்கும் சந்தோசம்.பொழிலுக்கும் சந்தோசம்.”
“இல்லை தம்பி.இது எனக்கு ஒரு வகையில் விடுதலை…நான் என் மனைவிகிட்டே போகப் போறேன்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த கல்யாணத்தை நடத்துங்க…முடிஞ்சா நாளைக்கு கூட நடத்துங்க”
“சார்…அரசி இன்னும் கண்ணு முழிக்கல…அதை மறந்துட்டீங்களா”தவிப்புடன் கேட்டவனை ஏறிட்டவர் லேசாக சிரிக்க முயன்றபடி பதில் சொன்னார்.அவருக்கு பொழிலரசிக்கு நினைவு திரும்பிய பின் தண்ணீர் தொட்டியில் குதித்த விவரம் எதுவும் இன்னும் தெரிந்து இருக்காது என்பதை எண்ணி வேறு கலக்கம் அடைந்தான்.வயதான இந்த மனிதர் அந்த செய்தியை நிச்சயம் இப்பொழுது இருக்கும் சூழலில் தாங்க மாட்டார் என்பதால் அதைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டான் விக்ரமாதித்யன்.
“அவளுக்கு எப்போ நினைவு திரும்புதோ திரும்பட்டும்.ஆனா நான் சாகுறதுக்கு முன்னாடி அவ உங்க மனைவியா இருக்கணும்.அப்போ தான் எனக்கு நிம்மதி.மறுக்காதீங்க.இல்லேன்னா என் ஆத்மாவுக்கு சாந்தி இல்லாம போய்டும்.”
“சரி சார்…நான் நாளைக்கே கல்யாணம் நடக்கிறதுக்கு ஏற்பாடு செய்றேன்”என்று சொன்னவன் அதே மாதிரி மறுநாள் பொழிலரசிக்கு நினைவு திரும்பியதும் போனில் மகேந்திரனை பேச வைத்து அவர் மூலமாகவே தன்னுடைய திருமணத்தை நடத்தியும் காட்டினான்.
நடந்த அனைத்தையும் சொல்லி விட்டு பொழிலரசியை பார்த்தான் விக்ரமாதித்யன்.அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.கல்லென இறுகிப் போய் இருந்தது.அவளுக்கு அருகில் சென்றால் எங்கே கத்தியால் தன்னைத்தானே காயப் படுத்திக் கொள்வாளோ என்ற எண்ணம் தோன்ற அவளுக்கு அருகில் செல்லவும் அவனுக்கு பயமாக இருந்தது.அரசியின் கையில் இருந்த கத்தி மெல்ல தளர்ந்து போய் தரையில் விழுந்த அடுத்த நொடி பாய்ந்து சென்று அவளைக் கட்டிக் கொண்டான் ஆதித்யன்.
அவளிடம் எந்த விதமான அசைவும் இல்லை.அவனுடைய அணைப்பை அவள் விலக்கவும் இல்லை.மாறாக அவன் கைகளில் அவள் உருகவும் இல்லை.மரக்கட்டை போல அப்படியே நின்றாள்.ஆதித்யனை பயம் பிடித்துக் கொண்டது.
“பொழில்…என்னைப் பாருடா…ஏதாவது பேசு பொழில்”அவளைப் பிடித்து உலுக்கினான்.
“…”
“பொழில் இப்படி எதுவுமே பேசாம இருக்காதே…எனக்கு பயமா இருக்கு”பலம் கொண்ட மட்டும் அவளைப் பிடித்து உலுக்கினான்.அரசியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழியத் தொடங்கியது.
“என்னால் தானே விக்கிரமா எங்க அப்பா உயிரை விட்டார்?”கண்களில் பயத்தை தேக்கியவாறு கேட்டவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அவளை இழுத்து தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான்.
“என்னோட அப்பா கொலைகாரர்னு நீயும் நம்பறியா விக்கிரமா?”
“என்ன பேச்சு இது பொழில்…உங்க அப்பாவைப் பத்தி எனக்கு தெரியாதா? அவரால் எப்படி ஒரு உயிரை கொல்ல முடியும்?”
“அவர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் விக்கிரமா? நீ சொன்ன மாதிரி அது ஒரு விபத்துன்னு கோர்ட்ல நிரூபிச்சு இருந்தா குறைந்தபட்ச தண்டனை தான் கிடைச்சு இருக்கும்.அப்புறமும் ஏன்? என்னால் தானே? எனக்காகத் தானே?”என்று விடாமல் அதையே பேசியபடி மறுகி நின்றவளை பார்க்கும் பொழுது அவனுக்கு இரக்கமாக இருந்தது.
“உங்க அப்பா மேல உனக்கு கோபமா பொழில்?”
“நிச்சயம் இல்லை விக்கிரமா…ஒருவேளை எனக்காக அந்தக் குழந்தையின் உயிரை அவர் எடுத்து இருந்தால் நிச்சயம் அவரை நான் மன்னித்து இருக்க மாட்டேன்.ஆனா இப்போ எனக்கு அவரை நினைச்சு பெருமையாத் தான் இருக்கு.ஆனா அதே சமயம் என்னை விட்டு அவர் போகுறதுக்கு நானே காரணம் ஆகிட்டேனேஅப்படிங்கிறத என்னால தாங்க முடியலை விக்கிரமா”
‘இப்படி நீ எதையாவது யோசித்து உன்னை நீயே வருத்திக் கொள்வாய் என்று தெரிந்து தானே இத்தனை நாள் உனக்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் பார்த்துக் கொண்டேன்.’ என்று எண்ணியவன் வெளியே எதுவும் சொல்லாமல் ஆறுதலாக அவளை தன்னுடைய மடியில் சாய்த்துக் கொண்டான்.
முதலில் லேசாக தொடங்கிய அவளின் அழுகை நேரம் ஆக ஆக பெருகியதே ஒழிய கொஞ்சமும் குறையவில்லை.அவளாகவே அழுது ஓயட்டும் என்று எண்ணியவன் அவளது அழுகையை தடுக்காமல் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தான்.அவள் அழுது தீர்த்து விடுவது தான் அவளுக்கு நல்லது என்று எண்ணியே அவன் மௌனமாக இருந்தான்.பொழிலரசி அழுதாள் என்று சொல்வதை விட கதறி தீர்த்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.கண்களில் இருந்த கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தாள்.அவளது தலையை மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்த ஆதித்யனோ,அவளது அழுகையை நிறுத்தவும் முடியாமல்,தடுக்கவும் விரும்பாமல் சிலையென மாறி இருந்தான். அவளின் கதறலை கண்  கொண்டு காண சகிக்காமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
ஒரு மாதத்திற்கு பிறகு….
“உன் மனசில என்ன தான்டி நினைச்சுக்கிட்டு இருக்க?ஏதோ கொஞ்சம் போனாப் போகுதுன்னு விட்டா…இப்படி உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னை ஆட வைக்கலாம்னு நினைப்பா உனக்கு?ஒழுங்கா சொல்றதைக் கேளு”
“…”
பிடிவாதம் பிடிக்காதே பொழில்.இது நல்லதுக்கு இல்லை.அப்புறம் நீ என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும் சொல்லிட்டேன்”
“…”
“ஏன்டி நான் இவ்வளவு தூரம் சொல்றேன் அப்படியும் கொஞ்சம் கூட புரிஞ்சுக்கலைனா என்னடி அர்த்தம்?”
“…”
“என் பொறுமையை சோதிக்காதே பொழில்…அப்புறம் ரொம்ப வருத்தப்படுவ”
“…”
“ம்ச்…இப்ப என்ன தான் வேணும் உனக்கு.சொல்லித் தொலை”
“அதை நான் ஏற்கனவே சொல்லிட்டேன்”
“ஆனாலும் இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி.இன்னைக்கு நமக்கு முதலிரவு அப்படிங்கிற எண்ணம் கொஞ்சமாவது உனக்கு இருக்கா”
“அதெல்லாம் எனக்கு தெரியாது நான் பாகுபலி இரண்டாவது பார்ட் பார்த்தே ஆகணும்.அதுவும் இப்பவே”
“அடியே! படம் பார்க்கிற நேரமாடி இது…சொன்னாக் கேளு நாளைக்கு காலையில் உன்னை நானே தியேட்டர் கூட்டிட்டு போறேன்.இரண்டு பேரும் சேர்ந்தே பார்க்கலாம்.இப்ப அடம் பிடிக்காதடி..ப்ளீஸ்!”
“அதெல்லாம் முடியாது…விஜி தம்பி கூட இன்னைக்கு சாயந்திரம் முதல் பாகம் பார்க்கும் பொழுது சொன்னார்.முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் தான் நல்லா இருக்கும்னு சொன்னார்.நான் பார்த்தே தான் ஆகணும்”
‘விஜி…துரோகி..சண்டாளா…உன்னை காலையில பேசிக்கிறேன்டா.’என்று மனதுக்குள் தம்பியை திட்டித் தீர்த்தான் விக்ரமாதித்யன்.
“ஹே…அவன் வேணும்னு என்னை பழி வாங்குறான்டி…புரிஞ்சுக்கோ…” அதட்டிப் பார்த்தவன் அவள் கொஞ்சமும் இறங்கி வராததால் கெஞ்சத் தொடங்கினான். ‘ரூம்குள்ளே வர்றதுக்கு முன்னாடி என்னைப் பார்த்து அவன் நமுட்டு சிரிப்பு சிரிச்சப்பவே நான் உஷாரா இருந்து இருக்கணும்.கடைசில இப்படி பர்ஸ்ட் நைட் ரூம்ல என்னை கெஞ்ச வச்சுட்டானே…’
“நான் எங்கே ஓடியாப் போகப் போறேன்…எனக்கு இப்பவே படத்தை பார்த்து ஆகணும்…உங்களுக்கு என்ன நீங்க எல்லாம் இந்த படத்தை முன்னாடியே பார்த்து இருப்பீங்க.எனக்கு இன்னைக்குத் தானே இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதே தெரியும்.பொண்டாட்டி ஆசையா கேட்கிறேன்.அதைக் கூட செய்யாமல் என்ன புருஷன் நீங்க?”
“அடியே…உனக்கு பர்ஸ்ட் நைட் ரூம்க்கு வந்த பிறகு இந்த மாதிரியா ஆசையெல்லாமா வரணும்.கிராதகி.அவன் தான் போட்டுக் கொடுத்துட்டுப் போனான்னா…இவளுக்காவது கொஞ்சமாவது புத்தி இருக்கா பாரு”
“சும்மா திட்டுற வேலை எல்லாம் வேண்டாம்…எனக்கு இப்பவே அந்த படம் பார்த்தாகணும்”முகத்தை திருப்பிக் கொண்டு மூலையில் போய் அமர்ந்து கொண்டாள் பொழிலரசி.
“அடிப்பாவி…இராட்சசி படம் பார்க்கிற நேரமாடி இது…” என்று தனக்குள் முணகியவன் மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ‘ஊஹும் இது ஆவறது இல்ல….இப்போதைக்கு இவ இறங்கி வர்ற மாதிரி தெரியலை…இதை இப்படியே விட்டா இந்த ஜென்மத்தில உனக்கு பர்ஸ்ட் நைட் நடக்காதுடா விக்கிரமா’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அழுத்தமான காலடிகளுடன் அவளிடம் வந்து நின்றான்.
பொழிலரசி அவனை திரும்பியும் பார்க்கவில்லை. “ஹீரோ வேஷம் எல்லாம் எனக்கு சரிப்படாது பொழில்…நான் வில்லனா இருக்கிறது தான் இப்போ சரிபட்டு வரும்” என்று சொன்னவன் அலேக்காக அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.சட்டென்று அவனிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்காத பொழிலரசியும் மிரண்டு போய் அவனைப் பார்க்க ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி குறும்பாக அவளைப் பார்த்து கண் சிமிட்டினான் ஆதித்யன்.
“டேய்! பிராடு…என்னை இறக்கி விடுடா”
“முடியாது போடி…உன்னை விட்டா ரொம்ப பேசற” என்று சொல்லியபடியே அவளை படுக்கையில் கிடத்தி விட்டு அவளுக்கு அருகில் சென்று அவளை நகர முடியாதபடி சிறைப் பிடித்தான் ஆதித்யன்.
“ஆமா விக்கிரமா…நீ ஹீரோவா? இல்லை வில்லனா?”
“நான் எப்பவும் ஹீரோ தான்டி.ஆனா இப்போ இந்த நிமிசம் நான் வில்லன் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
“ஏன் அப்படி?”
“ம் ஹீரோன்னா எப்பவும் நல்லவன் வேஷம் போடணும்.பொண்டாட்டியை பூ மாதிரி பாத்துக்கணும்…முக்கியமா கல்யாணம் ஆனதும் தனித்தனியா தான் தூங்கணும்னு ஹீரோயின் சொன்னா உடனே கேட்டுக்கணும்….இது எதையும் இப்போ செய்ற நிலைமையில் நான் இல்லை அதுதான்…ஏற்கனவே வருஷக்கணக்கா உனக்காக காத்திருந்தாச்சு.இனியும் முடியாது”என்று சொன்னவன் மென்மையாக அவளின் நெற்றியில் தன்னுடைய முதல் அச்சாரத்தை பதித்தான்.அவனை விலக்கித் தள்ளிவிட்டு சீரியசான முக பாவனையில் கேட்டாள் பொழிலரசி.
“விக்கிரமா எனக்கு ஒரு சந்தேகம்”
“என்ன வேணா கேளுடி மாமன் க்ளியர் பண்றேன்”சரசமாக பேசியபடியே அவளின் காதில் இருந்த ஜிமிக்கியோடு விளையாடிக் கொண்டு இருந்தது அவன் விரல்கள்.
“இந்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னார்?”சீரியசான தொனியில் கேட்டவளை கோபத்துடன் முறைத்தவன் அதே கோபத்துடன் அவளின் இதழில் வன்மையான கவி ஒன்றை எழுதினான்.
மூச்சு வாங்க அவள் நிமிர்ந்த பொழுது , “இப்படியே நீ பாகுபலியை பத்தி பேசிக்கிட்டு இருந்தா எனக்கு வர்ற ஆத்திரத்தில் நானே பாகுபலியை கொன்னாலும் கொன்னுடுவேன்.படத்தை பத்தி பேசுற நேரமாடி இது.கொஞ்சம் மாமனுக்கு ஒத்துழைப்பு கொடு மாமன் அதை விட பெருசா சூப்பர் படம் ஒண்ணு உனக்கு காட்டுறேன்”என்று பேசியபடியே அவளில் கழுத்தில் முகம் புதைத்தான்.
இப்பொழுது ஆதித்யனை முற்றிலுமாக தள்ளி விட்டு கட்டிலை விட்டு இறங்கியவள், “நீ எந்தப் படமும் எனக்கு காட்ட வேணாம்.ஒழுங்கா இப்பவே பாகுபலி படத்தை நான் பார்க்க ஏற்பாடு பண்ணு…”கைகளை இடையில் வைத்தபடி பேசிய மனைவியை என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென சில நிமிடங்கள் விழித்தான் ஆதித்யன்.
“உலகத்தில் எந்த ஆம்பிளைக்கும் இப்படி ஒரு நிலைமை வரக் கூடாதுடி.வருசக்கணக்கா உன்னை லவ் பண்ணி எத்தனையோ கஷ்டங்களுக்கு அப்புறம் உன்னை கல்யாணம் செஞ்சு,அதுக்கு அப்புறமும் கூட உன் மனசு மாற டைம் கொடுத்து…அதுக்கு அப்புறம் நீ கொடுத்த தொல்லை எல்லாம் சமாளிச்சு ,கடைசியில் எல்லா பிரச்சினையையும் முடிஞ்சதுக்கு அப்புறமும் கூட ஆடி மாசம்னு சொல்லி உன்னை பக்கத்தில் வச்சுக்கிட்டே தொடாம தள்ளி இருந்து ஒரு வழியா இப்போவாவது பர்ஸ்ட் நைட் நடக்க போகுதுன்னு நான் எவ்வளவு சந்தோசப் பட்டேன்.கடைசியில…”என்று சொன்னவன் முகம் வாட மேற்கொண்டு ஒன்றுமே பேசாமல் கட்டிலில் ஏறி அந்தப் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான்.
பொழிலரசிக்கு என்னவோ போல் ஆகி விட்டது. ‘சே!கொஞ்சம் விளையாடலாம்னு நினைச்சு ரொம்பவே சீண்டிட்டோம் போலயே என்று நினைத்தவள் மெல்ல ஆதித்யனுக்கு அருகில் படுத்தவள் பின்னே இருந்து அவனை லேசாக அணைத்துக் கொண்டாள்.
“கோபமா விக்கிரமா?”
“…”
“நான் சும்மா விளையாட்டுக்கு தான்…”
“…”
“பேச மாட்டியா என்கூட”
“…”
“நீயும் என் கூட பேசலைனா நான் என்ன செய்வேன் விக்கிரமா…உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா”குரலில் லேசான அழுகை எட்டிப் பார்க்க அதற்கு மேலும் தாமதிக்காமல் அவளை அள்ளி தன்னுடைய நெஞ்சில் போட்டுக் கொண்டான் ஆதித்யன்.
“ஹே…நானும் சும்மா தான் விளையாடினேன்…உண்மையை சொல்லணும்னா இப்ப தான் எனக்கு உன்னைப் பத்தி முழுசா தெரியுது…”
“என்ன தெரியுது?”
“நீ ஹீரோயிசத்துக்கும் மயங்க மாட்ட,வில்லனுக்கும் அடி பணிய மாட்டே.சென்டிமென்ட்டை கொஞ்சம் பிழிஞ்சா போதும் உடனே சரண்டர் ஆகிடுற..”என்றான் கிண்டலாக.
“அங்கே மட்டும் என்ன வாழுதாம்…பதிலுக்கு அவளும் அவனைத் தாக்க இருவருமே வாய் விட்டு சிரித்துக் கொண்டனர்.
லேசாக அவளை அணைத்தவாறே பேசினான் விக்ரமாதித்யன். “கடந்து போன இத்தனை வருடங்களில் எத்தனை முறை உன்னை இழந்துடுவேன்னு நான் பயந்து போய் இருக்கேன் தெரியுமா? என்னோட காதலை உனக்கு புரிய வைக்க முடியாமலே போயிடுமோனு உள்ளுர ரொம்ப கலங்கி இருக்கேன்.நல்லவேளை என்னுடைய காதல் கானலாகாம உன்னுடைய இதயத்தை போய் சேர்ந்துடுச்சு…(ஷ்..அப்பாடா..ஒரு வழியா டைட்டிலை சொல்லியாச்சு)
“இப்போ உங்க மாமாவை மனநிலை சிகிச்சைக்கு அனுப்பிக்கிட்டு இருக்கீங்களே…அது சரிப்பட்டு வருமா?”என்றாள் சட்டென நினைவு வந்தவளாக…
“இல்லை பொழில்…இது முன்னாடியே தீர்மானம் செய்த விஷயம் தான்.ஆனா நடுவில் நடந்த பிரச்சினைகளால் இது கொஞ்சம் தள்ளிப் போச்சு…இவரும் இப்படி அளவுக்கு அதிகமான மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறது நல்லது இல்லை.முதலில் முடியாது என்று மறுத்து பேசி எவ்வளவோ ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்து பார்த்தார்.கடைசியில் ஒட்டு மொத்த குடும்பமும் அதையே வலியுறுத்த வேற வழி இல்லாம போக ஆரம்பிச்சுட்டார்.இப்போ கவுன்சிலிங் போய் கொஞ்ச நாட்கள்லயே அவர்கிட்டே மாறுதல் தெரிய ஆரம்பிச்சு இருக்கு”
“ம் எப்படியோ எல்லாம் நல்லபடியா நடந்தால் சரி தான்”
“ஹுக்கும்…எங்கே நடக்கிறது? இங்கே தொடங்கிறதுக்கே வழியைக் காணோம்”சலித்துக் கொண்டே விரல்களால் அவனுடைய தேடலை தொடங்கினான்.இந்த முறை அவனைத் தடுக்காமல் பெண்ணவளும் அவனுக்கு வளைந்து கொடுக்க ஆதித்யனின் தாபம் கொம்பு சீவிய காளையென திமிற வேகத்துடன் தன்னவளை அணுகினான்.
ஏற்கனவே ஆதித்யன் அவளிடம் காட்டிய வேகத்தை அவள் அறிந்து வைத்து இருந்ததால் அவனிடம் இருந்து பொழிலரசியும் நிச்சயம் மென்மையை எதிர்பார்க்கவில்லை.காதல் எல்லை மீற கூடலின் படிகளில் இருவரும் ஒன்றாகவே பயணித்தனர்.அவன் காட்டிய பாதை புதிது…பயணம் புதிது…பேசிய பாஷையோ அதை விட புதிதாக இருந்தது.முகம் சிவக்க அவள் மறுக்க,சிறுபிள்ளை போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவன் கேட்டதை கொடுத்த பிறகே அவன் அவளை விட்டான்.சில நேரங்களில் ஒன்றுமே புரியாதவனாக அவன் கேட்ட கேள்விகளும்,சந்தேகங்களும் பெண்ணவளின் தேகத்தை கூசி சிலிர்க்க வைக்க சிவந்த முகத்தை அவனின் மார்பிலேயே புதைத்துக் கொண்டாள்.
மெல்லிடையாள் அவனுடைய வன்மையில் திணறித் திண்டாடிய பொழுதெல்லாம் கறாராக தனக்கு வேண்டியது எதையும் விடாமல் கேட்டு வாங்கிக் கொண்டான் அந்த கள்வன்.அங்கே ஒரு அழகிய காதல் பரிமாற்றம் நிகழ்ந்தது.ஒருவர் மட்டுமே வாங்கிக் கொள்ளாமல் இருவருமே ஒருவரை ஒருவர் மிஞ்சும் வேகத்தில் கொடுத்ததும் , வாங்கியும் தாம்பத்தியம் எனும் புதிய உலகினுள் பிரவேசித்தனர்.அங்கே அவர்கள் இருவரைத் தவிர அன்னியர்கள் யாருக்கும் இடமில்லை.நமக்கும் தான்.எனவே சத்தமில்லாமல் கிளம்பி விடுவோம்.அவர்களின் காதல் என்றும் இதே போல தொடரும் என்ற நம்பிக்கையோடு.
*****சுபம்****