KS 5

KS 5

அத்தியாயம் ஒன்பது

அதிகாலை பறவைகளின் கீச் கீச் சப்தம் கேட்க விழிப்பு தட்டியது அர்ஜுனுக்கு… மணியை பார்த்தான்… சுவற்றில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் மணி ஐந்தரை என்றது! சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தான்! இரவு உறங்க வெகு நேரமாகி விட்டபடியால் இப்போது அந்த சோம்பலை காட்டியது உடல்… ஆனால் பிடிவாதமாக எழுந்து விடும் தன்மையை விட்டு விட மனமில்லை! எழுந்து ஜன்னல் அருகே வந்து நின்று திரையை விலக்கினான்! காற்று முகத்தில் வந்து அறைந்தது சிலீரென்று… காலை நேர காற்றை சுவாசிப்பது போன்ற சுவாரசியம் வேறு இல்லை… அதிலும் மொட்டை மாடியில் ஆசனங்களை செய்து விட்டு அந்த நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வது என்பது அவன் மிகவும் விரும்புகிற ஒன்று! அன்று முழுவதும் சக்தியை வாரி வழங்கும் அற்புத ஆற்றல் அந்த நேரத்திற்கு இருப்பதால் அதை இழக்கமாட்டான்… அதிலும் மும்பை வந்தால் கண்டிப்பாக ஆசனங்களை செய்தே தீருவான், ஜனநெருக்கடி மிகுந்த ஊர் என்பதால் சுத்தமான காற்று கிடைக்கும் அவ்வேளையில்…

நேற்று இரவு முதல் அந்த சுறுசுறுப்பு மறைந்து செல்பேசியும் கையுமாகவே இருந்தான்! எடுப்பான்… அஞ்சலியின் நம்பரை அழுத்துவான்… ரிங் போகும் முன்னர் அணைத்து விடுவான்… அவனும் தான் அந்த செல்பேசியை பார்த்தான்… பார்க்கிறான்… பார்ப்பான்… பார்த்து கொண்டே இருப்பான் என்பது போல செயல்பட்டவனை யாராவது பார்த்து இருந்தால் சொல்லும் முதல் வார்த்தை என்னவாக இருக்கும் தெரியுமா?

“அட ச்சே லூசே…”

ஏன்? எதற்கு? எப்படி? என்று விதம் விதமாக கேள்வி கேட்போருக்கான ஒரே விடை “அஞ்சலி”

இந்த தன்மான சிங்கம் தான் அறிமுக கூட்டம் நடந்த பிறகும் கூட அவளை கண்டுகொள்ளாமல் வந்துவிட்டதே… என்ன செய்வது… பிறகெப்படி அவளிடம் பேசுவது? முகத்தை திருப்பி கொண்டு வந்தாலும் கைகள் என்னவோ பரபரவென்று இருக்க இரவு ஆரம்பித்த அந்த விளையாட்டை காலை வரை தொடர்ந்து கொண்டிருந்தான் அர்ஜுன்… அதுவும் கனகாரியமாக யோகாவில் பொழுதை ஆரம்பிப்பவன் இன்று அதை மறந்து தனது செல்பேசியை பார்த்து பார்த்தே அதை தேய்த்து கொண்டிருந்தான்! எத்தனை முறை தான் பார்த்தாலும் அஞ்சலி அழைத்தால் மட்டும் தான் அதில் அவளது நம்பர் டிஸ்ப்ளே ஆகும் அர்ஜுன்… அதை முதல்ல புரிஞ்சுக்கோ என்று மனசாட்சி எடுத்துரைப்பதையும் அண்ணல் கேட்பதாக இல்லையே…

பேசவே கூடாது என்று தீர்மானம் எடுத்து… பின்னர் அதையே அவன் திரும்பவும் வாங்கி கொண்டால் என்ன தவறு? என்று யோசித்து… ஒரு வழியாக குழம்பி… சின்ன பொண்ணு தெரியாம பேசினாலும் நாம் தானே அனுசரித்து போக வேண்டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை மீண்டும் வெற்றிகரமாக நிறைவேற்றி ஒரு வழியாக ஏழு மணிக்கு செல்பேசியில் அவளது எண்ணை தடவினான்.

ரிங் போனது… போனது… போனது… போய் கொண்டே இருந்தது… எடுக்கத்தான் ஆளில்லை… சரி பயணகளைப்பு போல தூங்கி கொண்டிருப்பாள்… என்று மனது எண்ணினாலும்…

“அட பிசாசு… இன்னும் எவ்ளோ நேரம் தூங்குவா கும்பகர்ணி… இப்போவே மணி ஏழு… இன்னிக்கு எழுப்பி விட்டே தீரனும்”என்று கொலைவெறியோடு இன்னொரு முறை இன்னொரு முறை என்று மூன்று முறை போன் செய்தான்… மூன்றாவது முறை ரிங் பாதியிலேயே கட் ஆகி the subscriber you have called is busy, please try after some time என்று அவனுக்கே ரிவீட் அடிக்க… அர்ஜுனின் கோபம் குபுக்கென்று தலைக்கு ஏறியது…

“என்ன நினைச்சுட்டு இருக்கா? திமிர் பிடிச்சவ? எவ்வளவு கொழுப்பு இருக்கும்? போன கட் பண்றா? உடம்பு முழுக்க திமிர் தான்… எருமை… எருமை… இப்போ அவளுக்கு விடற டோஸ்ல… மகளே… நீ காலிடி… இன்னைக்கு இவள விடவே கூடாது…” என்று மனதுக்குள் வித விதமாக திட்டியபடி அடுத்த முறை கால் செய்ய… ஐயோ அந்த போனுக்கு வாயிருந்தா அழுதுரும் ராசா…

முழு ரிங் போய் கட் ஆகும் முன்னர் பேசியை எடுத்தவள்

“என்ன?” என்றாள் எடுத்த எடுப்பில் கடுப்பாக… காதில் வந்து விழுந்தன அனலான வார்த்தைகள்!

“ஏய்… என்னன்னு நினைச்சுட்டு இருக்க? போன அட்டென்ட் பண்ண மாட்டேங்கற… கால கட் பண்ற… இப்போ நான் கத்த வேண்டியத நீ செய்யறியா?” என்று அவனது முறைக்கு எகிற

“ஆமா அப்படி த்தான் பண்ணுவேன்… என் கிட்ட பொய் பொய்யா சொல்லிட்டு இப்போ எதுக்கு போன் பண்றீங்க?”

இப்படி சொல்பவளிடம் உன்னோடு பேசாமல் இருக்கமுடியவில்லை என்று கூறுவதா? நோ… நெவர்… முடியாது… அது நடக்காது…

“ஆமாம்… நீ பெரிய மைசூர் மகாராஜா பேத்தி… உன் கூட பேசத்தான் அலையறாங்க?”

“தெரியுதில்ல… அப்புறம் எதுக்கு போன் பண்றீங்க?” விடாமல்

“இங்க பார் எலிக்குட்டி… இப்போ செவுனிலையே ரெண்டு வாங்க போற… ஒழுங்கா பேச தெரியாதா உனக்கு?”

“நீ… நீங்க அடிச்சா என் கை என்ன பூவா பறிக்கும்… இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் உங்க ஆபீசோட வெச்சுகோங்க…”

“இப்போ நீ என் முன்னாடி இருந்து பேசி இருக்கணும்… உன் கை என்ன பண்ணும்ன்னு நானும் தான் பார்த்து இருப்பேன்”என்று அவன் சொல்லவும் அன்றைய நினைவில் முகம் சிவக்க அந்த பேச்சை மேலும் வளர்க்க விரும்பாதவளாய்

“சரி என்ன விஷயம்… சொல்லிட்டு வைங்க…”

“தாயே அது என் போன்… என்னோட நம்பர்… பர்சனல் ப்ரைவேட் நம்பர்… அதனால யாருக்கும் தெரியாது… எதாச்சும் கால் வந்தா எடுக்காத ஆத்தா… அத தான் சொல்ல வந்தேன்… இப்போ போய் குப்புற அடிச்சு குறட்டை விடு… பிசாசு…”

“ம்ம்ம்… நான் குறட்டை விடுறேன்னு நீங்களா முடிவு பண்ணிட்டா நான் அதுக்கு பொறுப்பில்ல… அதோட யாரோட பொருளும் எனக்கு வேணாம்… ஆபீஸ் வரும் போது உங்க கிட்ட தந்துடறேன்…”

“ஒரு அடங்காபிடாரி மேல தானே ஆசை வச்சேன்

நான் அவளை அடக்கி ஒடுக்க தானே மீசை வெச்சேன்…

பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்

இந்த பெண்ணை அடக்க ஒரு வழி ஒன்னு காமி”

“எலி… நீ ஆபீஸ் தானே வருவ… அங்க இருக்குது உனக்கு…” என்று எண்ணி கொண்டு பதில் கூறாமல் வைத்தான் போனை…

அர்ஜுன் வைத்தவுடன் கண்களில் கண்ணீர் திரள போனையே பார்த்து கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் தாள முடியாமல் உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்…

*******

இரவின் இருள் மேகாவை திகில் கொள்ள செய்தது… தன்னுடைய விதியை எண்ணி நொந்து கொள்வதை தவிர அவளால் வேறு ஒன்றும் நினைக்க முடியவில்லை… ஏன் என்னை படைத்தாய் ஆண்டவா? என்ற கேள்வியே கேட்டு கொண்டிருந்தாள்! தன்னுடைய முட்டாள்தனம் புரியாமல் இல்லை… ஆனால் சசியை அவளால் தவறாக நினைக்கவே மனம் மறுத்தது! அவன் கண்களில் தெரியும் வெறுமையை தாண்டிய ஏதோ ஒரு உணர்வு மேகாவை அலைக்கழித்தது… அதிகாலையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த மேகாவுக்கு பேச்சு குரல் கேட்கவும் விரைத்தாள்!

“ரொம்ப சந்தோசம் விஷால்… உன்னோட வேலைய பக்காவா முடிச்சிட்டிட்ட… சுரேஷ் எப்படி ரெடியா?”

“…”

“காலைல பத்து மணிக்குள்ள பிளாஷ் ஆகிடனும்… அதோட அந்த சிடிய கமிஷனர் ஆபீஸ், பத்திரிக்கைகாரங்கன்னு ஒருத்தர விடாம கொண்டு போய் சேர்க்கணும்…”

“…”

“இல்ல விஷால்… ராகினியோட ஹைட் அவுட் யாருக்கும் தெரிய கூடாது… இது முடிஞ்சதுக்கு அப்புறம் அடுத்தத பத்தி சொல்றேன்… அதுவும் நானே போன் பண்றேன்…”

“…”

“ஓகே… டேக் கேர் டா… பை…”

இவர்கள் என்ன பேசி கொள்கிறார்கள்? யார் அந்த ராகினி? என்ன வேலை முடிந்தது? இப்போது என்ன வேலை நடக்க போகிறது? என்ன என்ன என்ன என்றே கேள்விகள் பல எழுந்தன… எதற்காக தன் தந்தையை குறி வைத்து செயல்படுகிறார்கள்? அவளது சத்தம் கேட்டு அவள் பக்கம் திரும்பினான் சசி…

“குட் மார்னிங் மேகி…” என்று சந்தோஷமான முகத்தோடு சொல்லவே… பார்த்த அவளுக்கு வியப்பாக இருந்தது!

“குட் மார்னிங்…”

“ஏன் இது குட் மார்னிங்ன்னு கேக்க மாட்டியா மேகி?”

அவனை ஒரு மார்கமாக பார்த்து விட்டு அவளது பிரஷ் எடுத்து பற்பசை தடவி வாயில் வைத்து கொண்டே

“ம்ம்ம்… சொல்லுங்க!”

“முதல் வெற்றி எங்களுக்கு…” என்று சொல்லி விட்டு சிரிக்க… அவள் புரியாமல் நின்றாள்!

“என்ன புரியலியா? உங்க அப்பா கடை… திநகர்லியே பெரிய்ய்ய்ய்ய்ய்ய கடை… கணபதி ஸ்டோர்ஸ் இப்போ இருக்கற இடம்… ஹஹஹா… சுவாஹா… அதான் இவ்வளவு சந்தோசம்…”

அவளது முகம் அதிர்ச்சியில் சொல்லமுடியாத துயரத்தையும் வேதனையும் வெளிபடுத்த

“என்ன உங்க கடை காலின்னு கவலையா இருக்கா?” ஏளனமாக அவன் கேட்க

“ஏன் சசி… அந்த கடை எங்க அப்பாவோட உழைப்பு மட்டும் இல்ல… எத்தனையோ பேரோட வாழ்க்கை… இப்படி எல்லாரோட வாழ்க்கைல ஒரே நாள்ல மண்ணை அள்ளி போட்டுட்டீங்களே… இது சரியா சசி?”

“உழைப்பா? ஹா… அது எத்தனை பேரோட ரத்தம்னு தெரியுமா? ரத்தத்த உறிஞ்சு குடிக்கற உன் அப்பன் மாதிரி ஆளுங்கள நினைக்கும் போது இதை பத்தி இப்போ நான் கேர் பண்ண முடியாது மேகா… அந்த ஆளை அழிக்கிற வேலைல இதெல்லாம் சகஜம்… அப்படீன்னு பார்த்தா மூணு பேர் இறந்து போய்ட்டாங்க அந்த விபத்துல… அத பத்தி கவலை படமுடியுமா?”

மிகுந்த அதிர்ச்சியோடு கண்களில் நீர் கோர்க்க விறைத்து நின்றாள்!

“உங்க மனசுல ஈரமே இல்லையா சசி? இப்போ நீங்க சொல்றது விபத்து இல்லை… திட்டமிட்ட படுகொலை… இறந்து போன அந்த மூணு பேருக்கு குடும்பம் இருக்கும் குழந்தை இருக்கும்… அதை பத்தி எல்லாம் நினைக்க மாட்டீங்களா? அப்படி ஈரமே இல்லாத இதயமா உங்க இதயம்?” என்று கண்களில் நீர் வழிய அவள் கேட்ட கேள்வி அவனை குதறியது… உள்ளே மனசாட்சி குத்தியது… உண்மைதானே!

“ஈரமே கிடையாதுன்னு கிடையாது மேகா… எமெர்ஜென்சி எக்சிட் ஓபன் பண்ணி வைக்கறதுக்கு ஆள் இருந்தாங்க உள்ள… ஆனா இந்த பசங்க… ப்ச்… எனக்கும் கஷ்டமா தான் இருக்கு… என்ன பண்றது? ஆனா உன் அப்பன் பண்ணத நினைக்கும் போது இதெல்லாம் எனக்கு பெருசா தெரியல…” உணர்ந்தே கூறினான்!

“ஆஹா… உங்களுக்கு கூட பீலிங்க்ஸ் இருக்கா சசி… மூணு அப்பாவி பசங்கள கொலை பண்ணிட்டு… என்ன பீலிங்க்ஸ்… என்ன பீலிங்க்ஸ்… சிவாஜி தோத்துடுவார் போங்க… இந்த நடிப்பை தானே நானும் நம்பினேன்…” என்று அவள் கோபத்தோடு ஏளனமாக கூறவும் அவளை அவன் பார்த்த பார்வையில் இருந்த வெறுமை மேகாவிடம் எதையோ யாசித்தது!

அவன் பேசாமல் அவனது வேலையை பார்க்க

“ஏன் சசி பேசமாட்டேங்றீங்க… அந்த மூணு பசங்களோட குடும்பத்துக்கு என்ன பதில் சொல்ல போறீங்க… எங்க அப்பா என்ன செய்தார்னு எனக்கு தெரியல… ஆனா இப்போ நீங்க அந்த பசங்களுக்கு பண்ண அநியாயத்த விடவா அதிகமா பண்ணி இருப்பார்?”

இப்பொழுதும் அவனது இந்த முகத்தை நம்ப முடியாமல் அவன் செய்வதை ஜீரணம் செய்யவும் முடியாமல் அரற்றி கொண்டிருந்தாள் மேகா… அவளது தவிப்பை பார்த்த சசிக்கோ வார்த்தைகள் வெகு தூரமாய்!

கண்களில் நீருடன் அருகில் வந்த மேகா,

“என்னால இன்னமும் உன்னை வெறுக்க முடியலை… உன்னை என்னோட உயிரா தானடா நினச்சேன்… ஏன்டா இப்படி பண்ண? ஏன் இப்படி பண்ணின?” அவனை பிடித்து உலுக்கி கொண்டிருக்கும் போதே செல்பேசி அழைக்க அவளது கைகளை விடுவித்து கொண்டு

“சொல்லு சுரேஷ்…”

“சசி… நீ காரியத்த முடிச்சிட்டியா?”

அவனால் பதில் பேச முடியவில்லை…

“என்ன சசி… ஒன்னும் சொல்ல மாட்டேங்ற?”

“சுரேஷ்… இது தேவையா?”

“என்ன சொல்ற நீ… அவன முழுசா அடிச்சு வீழ்த்த போற ஆயுதமே இந்த விஷயம் தான்னு நீ தானடா சொன்ன… இப்போ என்ன புதுசா பேசற… உன்னோட இந்த நிலைமைக்கான காரணத்த மறந்துட்டியா?”

“இல்லடா…” என்று தயங்க

“சசி… நீ முடிச்சிட்டு எனக்கு அதை என்க்ரிப்ட் செஞ்சு அனுப்பி விடு… நமக்கு நிறைய நேரம் கிடையாது… கரணம் தப்பினா மரணம்ன்னு தான் நாம இந்த வேலைல இறங்கி இருக்கோம்… அதை மறந்துட்டியா… இப்போ பிள்ளை பாசத்துல அழற ஆள் கொஞ்சம் சுதாரிச்சு நம்மள ஸ்மெல் பண்ணா அவ்வளவுதான் சசி… அதுக்குள்ளே வேலைய முடிக்கனும்ன்னு நீ தானே சொன்ன… இப்போ என்னடா இப்படி தயங்கற?”

“ஓகே டா… முடிச்சுடறேன்…” என்று மேகாவை பார்த்தவாறே கூறிமுடித்து வைத்தான்!

அப்போது அவனது முகம் அதீத குழப்பத்தை சுமந்து நின்றது! தன்னால் சுரேஷ் கூறியதை செய்ய முடியுமா? அதுவும் தன் மேல் இன்னமும் வெறுப்பை கொண்டு வர முடியவில்லை என்று கதறும் தன் இதயத்தை காயப்படுத்த தன்னால் இயலுமா? தன்னுயிரை பற்றி கவலை படாமல் தீயில் எனை தேடிய என் தேவதையே… உன் காதலை பெற எனக்கு தகுதி இல்லையே என்னுயிரே!

ஏன் மேகி என் மேல இவ்வளவு காதல வெச்ச? நீயும் மத்த பெரிய வீட்டு பொண்ணுங்க மாதிரி இருந்திருந்தா எனக்கு எவ்வளவோ நல்லா இருக்குமே… நீ வச்ச காதல் தானடி என்னை கொல்லுது… என்னை பழி முடிக்க விடாம தடுக்குது… ஆண்டவா எனக்கு மனசு திடத்த குடு…

அவன் ஒன்றும் பேசாமல் யோசித்து கொண்டிருப்பதை பார்த்த மேகா

“என்ன சசி? அடுத்து எத்தன பேர கொல்றதுக்கு யோசிக்கிறீங்க?”

ஒரு பெருமூச்சை பதிலாக குடுத்த சசி…

“ம்ம்ம்… கொலை இல்ல… ரேப்…”

அவன் கூறியதை கேட்ட மேகா உறைந்து விக்கித்து நின்றாள்!

********

ஓசோன் டவர்ஸ்

அனைவரும் தேனீ போல சுறுசுறுப்பாக வேலை தொடங்கிய காலை நேரம்! அனைவரின் காலை வாழ்த்தை ஏற்று கொண்டே வந்த அர்ஜுனின் கண்கள் அஞ்சலியை தேடியது… பயிற்சி பெறுபவர்களின் பகுதியில் அவளை காணாததை குறித்து கொண்டது மனது! டிஜிட்டல் அட்டன்டன்ஸ் ரிப்போர்டை திறத்து பார்த்தவன் அஞ்சலி இன்னும் வராததை உறுதி செய்து கொண்டான்! அருகில் இருந்த தன் உதவியாளர் கௌஷிக்கிடம்…

“கௌஷிக்… இனிமே வரவங்கள என்னை வந்து பார்த்துட்டு சீட்டுக்கு போக சொல்லுங்க…”

“ஓகே சார்…”

அவன் சொல்லி கொண்டிருந்த நேரம் அஞ்சலி உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள்!

அவசரமாக அட்டண்டர் வந்து ஜேஎம்டி அழைத்ததை கூறி அழைக்கவும்

அர்ஜுன் கேபினை அடைந்து

“மே ஐ கம் இன் சர்…”

“எஸ் கம்இன்…” கம்பீரமாக ஒலித்தது அர்ஜுன் குரல்!

உள்ளே சென்றவள் அங்கே அமர்ந்து இருந்த அர்ஜுனை நேராக பார்த்து

“சர்… நீங்க கூப்டீங்களாம்…”

நிமிர்ந்து பார்த்தவன் அஞ்சலியை பார்த்து அசந்தான்! தான் தேர்ந்தெடுத்த இளம்பச்சையும் பிங்க் நிறமும் சேர்த்த சல்வாரை அணிந்து புதிதாக பூத்த பூவாக வென்பளிங்கு மேனியில் எந்தவித ஒப்பனையும் இல்லாமல் வெறும் பொட்டு மட்டுமே வைத்து, இடையை தாண்டிய முடியை அலட்சியமாக பின்னல் பொட்டு, துப்பட்டாவை கூட ஏனோதானோவென்று போட்டிருந்தாலும் அழகோவியமாக வந்து நின்றவளை பார்க்கும் போதே அள்ளி அணைக்க கைகள் துடித்தது! நெற்றியில் விளையாடிய கற்றை குழலை ஒதுக்கி விட பரபரத்த மனதினை அடக்கி

“என்ன மேடம்… வந்த ரெண்டாவது நாளே லேட்? என்ன விஷயம்?” என்று நக்கலாக கேட்டான்!

“ஒரு லூசு நைட் முழுக்க மிஸ்ட் கால் விட்டுட்டே இருந்தது சர்… என்னால தூங்கவே முடில… காலைல வேற போன் பண்ணி பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்துச்சா… அதான் கொஞ்சம் லேட்…” அப்பாவித்தனமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல

அடிப்பாவி நான் உனக்கு லூசா… இவ வாய அடக்கவே முடியாது போல இருக்கே… ஆனா நைட் போன் ரிங் போகறதுக்குள்ள கட் பண்ணிட்டேனே… அப்புறம் எப்படி? என்று நினைத்து கொண்டே

“ஏய் பிசாசு… நான் தான் நைட் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு கட் பண்ணிட்டேனே…”

“என்ன… நாற்பத்தி மூணு தடவையுமா சர்…” மனதில் இருந்த வலியை மறைத்து எப்போதும் பேசுவது போல் காட்டிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டாள்!

அடபாவி இப்படி எண்ணி வெச்சு மானத்த வாங்குறாளே என்று நினைத்து கொண்டே

“ஆஹா… எனக்கு இவ்வளவு மரியாதையா… ஹய்யோ சந்தோஷமா இருக்கு… இதையே மெய்ன்டைன் பண்ணு?”

அவள் ஒன்றும் பேசாமல் அவனது செல்பேசியை அவன் முன் வைக்க… அதை பார்த்தவன் உணர்வுகளை நேரடியாக முகத்தில் காட்டாமல்

“சரி என்ன சாப்பிட்ட?” என்று கேட்டான்! எதற்காக இப்படி கேட்கிறான் என்று புரியாமல் குழப்பத்துடன் பார்த்து

“இது தான் அபீசியலா சர்…”

“ஒழுங்கா ஒன்ன கேளு அஞ்சு… அபீசியலோ இல்ல அன்பீசியலோ… கேக்கற கேள்விக்கு பதில் வரணும்… தெரியுதா?”

“நானும் ஒன்னு சொல்றேன் சர்… அபீசியலா இருந்தா மட்டும் தான் பதில் சொல்வேன்… வேற கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது…”

“அப்படியா… சொல்லாம கேபின விட்டு நீ போகவும் முடியாது…” என்று இலகுவாக சொல்லிவிட்டு அவன் வேலையை கவனிக்க அஞ்சலியால் ஒன்றும் பேச முடியாமல் போனது! அவன் அவளை கடிப்பது பதில் சொல்லாததிற்காக இல்லை என்பது அவளுக்கும் புரியாமல் இல்லை… ஆனாலும் அவளை பொறுத்தவரை

இது வேண்டாம்… ஒரு நிமிடம் அவனையே பார்த்து கொண்டிருந்தவள்,

“சர் எனக்கு வேலை இருக்கு…” என்றாள் கடுப்பான குரலில்

“சொல்லிட்டு போ…” ஒரே வார்த்தையில் முடித்து விட

“இதுக்கு தான் வர சொன்னீங்களா?” என்று கோபத்தோடு கேட்க

“சரி… வேற எதுக்கெல்லாம் உன்னை கூப்பிடனும்னு நினைக்கிற எலிக்குட்டி…” என்று சோம்பல் முறித்து கொண்டே அவன் அப்படி அழைத்த விதத்தில் மயங்கிய அஞ்சலியின் மனதில் துக்கம் பொங்கியது… அர்ஜுன் சாமானிய ஆளாக இருக்க கூடாதா? மனம் ஏங்கியது!

இன்டர்காம் அடிக்க… கௌஷிக், ரைனா சௌத்ரி வந்திருப்பதாக அறிவிக்கவே அஞ்சலி வெளியே செல்ல எத்தனித்தாள்!

“நீ எங்க போற… சொல்லிட்டு போன்னு சொன்னேன்… நான் சொல்ற வரை என் கேபின்ல தான் இருந்தாகணும் அஞ்சலி…” என்று கறாராக அவன் கூறவும் ஒன்றுமே செய்ய தோன்றாமல் அமர்ந்தாள்! ச்சே ஏன் தான் இப்படி படுத்தறானோ?

ரைனா சௌத்ரி ஒரு பிசினெஸ் கோஆர்டினேட்டர்… பல்வேறு தொழில்களில் இருப்பவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் பாலமாக இருப்பவர்… தொழில்களுக்கு இடையில் தூது செல்வதற்கும் அரசின் முக்கியமான ஆட்களிடம் பேசுவதற்கும் நடுவில் மத்தியஸ்தராக இருப்பவர்… இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் “ஹைடெக் மாமி” அனைத்து வேலைகளையும் செய்து காரியங்களை சாதித்து கொடுப்பவர்… இவரால் தமக்கு அரசாங்க தரப்பு காரியங்கள் பல ஆயின என்று அவர் வருவதற்குள் ஐந்து நிமிடங்களில் அர்ஜுன் அஞ்சலியிடம் கூறினான்…

ரைனா தனியே வராமல் இன்னொரு அழகான இளம்பெண்னுடன் வந்தார்!

“ஹாய் அர்ஜுன்… எப்படி இருக்க?

“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி… நீங்க எப்படி இருக்கீங்க… உங்க வேலை எப்படி போகுது…”

“நான் நல்லா தான் இருக்கேன் அர்ஜுன்… நீயும் சரி உங்க அப்பாவும் சரி… பணம் எவ்வளவு வேணும்னாலும் குடுப்பீங்க… ஆனா வீட்டு பக்கம் வரவே மாட்டேங்கிறீங்களே… பாரு இப்போ நேஹா உன்னை பார்த்தே ஆகணும்னு என் கூடவே வந்துட்டா…”

அப்போதுதான் உடன் வந்த பெண்ணை பார்த்த அர்ஜுன்…

“நேஹா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்காங்க ஆன்ட்டி…” என்று ஓரக்கண்ணில் அஞ்சலியை பார்த்து கொண்டே அவன் கூறியவுடன் அந்த நேஹாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போன்ற பிரகாசம்! அஞ்சலியின் முகமோ கடுகடுத்தது! (ஜொள்ளா விடற… மவனே நீ மாட்டுன )

“தேங்க்ஸ் அர்ஜுன்…” என்று இல்லாத வெட்கத்தை இருப்பதாக காட்டி கொண்டு அவள் கூற

“அர்ஜுன்… நீ இன்னைக்கு கண்டிப்பா பார்ட்டிக்கு வரணும்… சந்தோஷ் ராய் கிட்ட பேச்சு வார்த்தை நடத்தனும்… அப்புறம் டெலிகாம் மினிஸ்டர் கமலேஷுக்கு தாங்க் பண்ணனும்…”

“ஓகே ஆன்ட்டி… ஓகே… ஆனா சந்தோஷ் கிட்ட சொல்லிடுங்க… ரெண்டு பெர்சென்டேஜ் சேர்த்து குடுக்க அப்பா ஓகே சொல்லிட்டாங்க…”

“வாவ்… அப்படியா… அப்படீன்னா நம்ம பெர்சென்டேஜ் மறந்துடாத அர்ஜுன்… ஓகே வா… கண்டிப்பா பார்ட்டிக்கு வா…” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப உள்ளே வந்த கௌஷிக்கிடம் ரகசியமாக யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாம் என்று கூறி விட்டு கடுப்பில் அமர்ந்து இருந்த அஞ்சலியிடம்

“என்ன எலி… சீக்கிரம் சொல்லு…”

“ஏன் அந்த நேஹா மாதிரி எத்தன பேர் வர போறாங்க? என்னை சீக்கிரம் சொல்லுன்னு சொல்றீங்க…” கடுகாக பொறிந்தாள்!

“சரி சொல்லாத… இங்கயே உக்கார்ந்து என்னை சைட் அடிக்கனும்ன்னு ஆசை படுற… உன் ஆசைய நான் எதுக்கு தடுக்க போறேன்…” மீண்டும் அவளை வாரிவிட்டு அவன் வேலையை பார்க்க, அப்போதும் அவள் பதில் ஒன்றும் பேசாமல் அமர்ந்து இருக்கவே

“அஞ்சு… இப்போ அந்த அம்மா வந்தது எதுக்கு தெரியுமா?” என்று மெதுவாக ஆரம்பித்தான்

“ம்ம்ம்ம்… சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்…” என்றாள் கடுப்பாக… அந்த நேஹாவை நினைக்கும் போதே அவளுக்கு பற்றி கொண்டு வந்தது!

“ஆஹா மேடம் ரொம்ப சூடா இருக்காங்க டோய்”என்று நினைத்து கொண்டு

“முதல் விஷயம் அந்த நேஹாவுக்கு என் மேல ஒரு கண்…” என்று அவன் கூறி முடிப்பதற்குள்

“சர்… எனக்கு ரொம்ப முக்கியமா இது?” என்று கொந்தளித்து விட்டு வெளியேற எத்தனிக்க

“ஹேய்… உக்காரு… உக்காரு… கூல் மேன்… எதுக்கு இவ்வளவு டென்ஷன்… ரெண்டாவது நமக்கு அவங்க ஸ்பான்சர் பண்றது சம்பந்தமா… அதுல அந்த சந்தோஷ் ராய்க்கு ரெண்டு பெர்சென்ட் அதிகம் வேணுமாம்.”

“அவங்க உங்களுக்கு ஸ்பான்சர் பண்றாங்களா? எப்படி?” புரியாமல் கேட்டாள் அஞ்சலி

“புரியலியா… இது தலைய சுத்தி மூக்க தொடர விளையாட்டு அஞ்சலி… ஒரு சின்ன எக்ஸாம்பில் சொல்றேன் கேளு… இப்போ எல்லா சேனல்ஸ்லையும் எஸ்எம்எஸ் போட்டி வைக்கறாங்க இல்லையா… அது எதுக்கு?”

“எதுக்கு… எதாச்சும் கேள்வி கேப்பாங்க… சப்போஸ் நமக்கு பதில் தெரிஞ்சா நாம எஸ்எம்எஸ் அனுப்புவோம்… நமக்கு லக் இருந்தா ப்ரைஸ் விழும்… நானும் நிறைய அனுப்பி இருக்கேன்…” சிறுபிள்ளையாய் பதில் கூறிய அழகை ரசித்தவாறே,

“கிழிஞ்சுது… சரி KBC எடுத்துக்கோ… அந்த மாதிரி எஸ்எம்எஸ் போட்டில ப்ரைஸ் தொகை எவ்வளவு?”

“ம்ம்ம்… ரெண்டு லட்சம்… நானும் ஷாஷுவும் மிக்கியும் அதுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அனுப்பி கடுப்பாகிட்டோம்… ஒரு தடவ கூட கிளிக் ஆகல…” என்று மிக வருத்தத்துடன் கூற அவளை பார்த்து சிரித்த அர்ஜுன்,

“உன்னை மாதிரி லூசுங்க தான் அவங்க டார்கெட்… சரி முறைக்காத… கேக்கறதுக்கு பதில சொல்லு… மொத்தம் இந்தியால எத்தனை டவுன், சிட்டி இருக்குன்னு தெரியுமா?”

“ம்ஹூம்… தெரியாது…” என்று தலையை ஆட்ட

“. ஐம்பதாயிரத்துக்கும் மேல பாப்புலேஷன் இருக்கற ஊரு மொத்தம் 798… இதுல பத்து லட்சத்துக்கும் மேல பாப்புலேஷன் இருக்கற ஊர் மொத்தம் முப்பத்து அஞ்சு…”

அஞ்சலி முதல் முறையாக அவன் மேல் மரியாதையோடு நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்!

“ஆவரேஜா ஒரு ஊருக்கு ஆயிரம் எஸ்எம்எஸ் அந்த இருபது நிமிஷத்துல போகுதுன்னு வை… ஒரு எஸ்எம்எஸ்க்கு ஆறு ருபாய் சார்ஜ் பண்றோம் அப்போ வால்யு எவ்வளவு?”

அவள் கணக்கு போட்டு பார்த்து

“ஐயோ… நாற்பத்தி ஏழு லட்சத்தி எண்பத்து எட்டாயிராம்… உப்ப்…”

“இது சும்மா மேலோட்டமான கணக்கு அஞ்சு… அதுவும் வெறும் இருபது நிமிஷத்துக்கு… ஒரு சிட்டில இருந்து ஒரு லட்சம் எஸ்எம்எஸ் கூட வரும்… அப்போ நினைச்சு பாரு… ஒரு மணி நேரத்துக்கு… அப்புறம் எல்லா எபிசொட்க்கும் நினைச்சு பாரு… அந்த ரெண்டு லட்சம் ப்ரைஸ் எந்த மூலைக்கு… அந்த ரெண்டு கோடி தான் எந்த மூலைக்கு?”

“ஐயோ… அர்ஜுன்… இத்தன பணம் யாருக்கு?”

“ம்ம்ம்… ரோட்ல போறவனுக்கு… வேற யாருக்கு லூசு… நம்மள மாதிரி டெலிகாம் கம்பனிக்கு… அப்புறம் அந்த ஷோ நடத்தரவங்க… அப்புறம் சேனல் ஓனர்… அப்புறம் காம்பியர் பண்றவங்க…”

“ஐயோ… அவ்ளோவா?” அப்பாவியாக அஞ்சலி!

“இதுல ஒவ்வொரு சர்வீஸ் ப்ரோவைடரும் அவங்களுக்கு ஷேர் குடுக்கணும்… ஸ்பான்சர் பண்ணனும்… அந்த ஷேர் தான் ரெண்டு பெர்சென்ட் அதிகமா வேணும்னு ஒரு சேனல்ல கேக்கறாங்க… அத தான் அந்த அம்மா என் கிட்ட கன்வே பண்ணாங்க அஞ்சலி… புரிஞ்சுதா?”

“புரிஞ்சுதே…” என்று தலையை வேகமாக ஆட்டினாள் அஞ்சலி

“என்ன புரிஞ்சுது?” என்று அர்ஜுன் கேட்க

“இனிமே நான் எஸ்எம்எஸ் அனுப்பவே கூடாதுன்னு புரிஞ்சுது…” என்று முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சொல்லவும்…

“ஹேய்… லொள்ளுடி உனக்கு…” என்று சாதரணமாக சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டான்!

“என்னது டி யா? ஹலோ என்ன மரியாதை தேயுது…” என்று ஒரு மார்கமாக பார்த்து மிரட்ட ஆரம்பிக்க… அவனது பார்வை அவள் கொண்டு வந்து வைத்த செல்பேசியிலேயே இருக்க…

“ஏன் நான் சொல்ல கூடாதா? ” புருவத்தை மேலேற்றி அவளை பார்த்து கண்ணை சிமிட்டி கொண்டு கேட்டு அந்த செல்பேசியை எடுத்து கொண்டு மெதுவாக அவள் அருகில் வந்தான்!

பார்த்த அஞ்சலிக்கு ஜிவ்வென்று ரத்த ஓட்டம் மேலெழுந்தது… இதயம் துடிப்பதை நிறுத்தி பின் துடிக்க… சிவந்த முகத்தை மறைக்க வேறுபுறம் திரும்பி வெளியே செல்ல முயன்றாள்! சட்டென்று அவளது கையை பிடித்த அர்ஜுன் கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் அவளை கொணர்ந்தவன், சில்லிட்டிருந்த அவளது கைகளில் செல்பேசியை குடுத்து…

“ஹேய்… அஞ்சுகுட்டி… நான் எது குடுத்தாலும் திருப்பி குடுப்பியா? ம்ம்ம்ம்…”

அவளது நரம்புகளில் இசை மீட்டினான்! கைகளை விடுவித்து கொண்டு வெளியே செல்ல முயன்ற அவளின் முயற்சியை வெகு இயல்பாக முறியடித்தவனை விட்டு விலக முடியாமல் தவித்தது பெண்மை!

“அர்ஜுன்ன்ன்… வி… விடுங்க… இ… இதெல்லாம் சரி இல்ல…” குரல் நடுங்க

“எதல்லாம் சரி இல்லடா… நான் கேட்டதுக்கு பதில சொல்லு… நான் எது குடுத்தாலும் திருப்பி குடுப்பியா?”

ஒரு மாதிரியான குரலில் கேட்டு விட்டு அவளது இடுப்பை வளைத்து பிடித்து இன்னும் நெருங்கியவன்… அவளது உடல் நடுங்கியதை உணர்ந்தான்! தன்னோடு அவளை அவன் இறுக்க முயல… அவளோ விலகும் வழி தெரியாமல் தவிக்க… அவள் செய்த முயற்சி அனைத்தையும் முறியடித்து தன்னோடு அணைத்து கொண்டான் அர்ஜுன்…

“அர்ஜுன்… வேணாம் விடுங்க… எனக்கு இது பிடிக்கல…” கண்களில் அவளையும் அறியாமல் நீர் கோர்க்க…

“நிஜமா… என்னை பிடிக்கல…” அவளின் முகத்தை கைகளில் ஏந்தி அவனது மூச்சு காற்று அவள் மேல் படுமளவு நிறுத்தி அவன் கேட்ட போது என்ன சொல்ல? நேர்கொண்ட அவனது பார்வையை சந்திக்க முடியாமல் கண்களின் குடைகள் கீழ்சரிய… அதில் மயங்கிய அர்ஜுன் அவளின் அதரங்களை சிறையெடுக்க துணிந்த போது,

“ம்ம்ம்… ஆமா பிடிக்கல…” அவளிடம் இருந்து வந்து விழுந்தன சொல்லம்புகள்!

“காரணத்த சொல்லு…” அவன் கைகளை முகத்திலிருந்து விலக்கியவள்… அவன் புறம் திரும்பாமல் வேறு புறம் திரும்பி,

“இதுல என்ன காரணம் தேவை இருக்கு? நான் வந்தது வேலை செய்ய… உங்களோட இப்படி கூத்தடிக்க இல்ல… இதுக்கெல்லாம் வேற ஆள் இருப்பாங்க… அவங்கள வெச்சு கூத்தடிங்க…” கண்களில் நீரோடு அவனது முகத்தை பார்க்காமல் ஒரு வழியாக கோர்வையாக சொல்லி முடித்தாள்! எப்படியாவது அவன் பக்கமே ஓடும் தனது மனதை வென்று… அர்ஜுனை மறுக்கும் வேகத்தோடு…

அதை கேட்ட அர்ஜுனின் கோப சூடு ஏறியதில்… முறைத்து கொண்டே சட்டென்று அவன் அவளை விட அவள் தனியே நிற்க முடியாமல் தடுமாறினாள்!

“யாருடி கூத்தடிச்சது… என்னை பார்த்தா இப்படி சொல்ற நீ? சின்ன பொண்ணாச்சேன்னு பார்த்தா… ச்சே… ஏன் நீ தானே சொன்ன ரிச் அண்ட் ஹன்ட்சமா இருந்தா தான் லவ் பண்ணுவேன்னு… இப்போ தான் பார்த்துட்டியே… என் ஸ்டேடஸ் என்னன்னு… இப்போ கூட நான் வேணாமா?” கண்மண் தெரியாத கோபத்தில் வார்த்தைகளை கத்தியாக பாய்ச்சினான்!

அவள் பதில் பேசாமல் அவனை வெறுமையாக பார்த்துவிட்டு வெளியே போக முயல அவளது கைகளை பிடித்து நிறுத்தியவன்

“பதில் சொல்லிட்டு போ…”

“என்ன சொல்றது?”

“ஏன் என்னை விட பணக்காரனா தேடறியா… இல்ல…” கோபத்தில் தெறித்து விழுந்தன வார்த்தைகள்!

“அர்ஜுன்ன்ன்ன்ன்ன்…”

“ஏண்டி கத்துற… உண்மைய தான் சொல்லிடேன்… என் கிட்ட இருக்கற பணம் பத்தாதுன்னு… அதனால தானே கிளிபிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னேன்… ச்சே… எனக்கு என்னதான் பண்றதுன்னே புரியலடி… நீ என்னதான் எதிர்பார்க்குற அஞ்சலி…”

அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் லட்சம் முறை இறந்து கொண்டிருந்தாள் அஞ்சலி… பதில் பேச கூட சக்தி இல்லாமல் தொய்ந்து போய் கீழே சரிந்து அமர்ந்தாள்… அவள் கைகளின் நடுக்கம் குறையவில்லை… உடலின் சக்தி அனைத்தும் வடிந்து விட கைகளால் முகத்தை மூடி கொண்டு கதற ஆரம்பித்தாள்!

“அஞ்சலி… ஏய் அஞ்சலி…” அவளை அர்ஜுன் உலுக்க அதற்கு அஞ்சலியிடம் பதில் இல்லாமல் போனது… அவளது கதறல் நின்றபாடில்லை… அர்ஜுனோ பதட்டமாக,

“அஞ்சு… ப்ளீஸ் அழாதடா… இது ஆபீஸ் மா… ப்ளீஸ்… என்னால தாங்க முடில… ப்ளீஸ் அழாத…” என்று தழுதழுக்க அவன் கூறுவதை கேட்டவள் சற்றே முகத்தை உயர்த்தி அவனை பார்த்தாள்!

“எனக்கு எதுவுமே வேணாம்… வேலையும் வேணாம்… மும்பையும் வேணாம்… நான் சென்னைக்கே போறேன்… என்னை ரிலீவ் பண்ணிருங்க… ப்ளீஸ்… என்னால முடியாது…” அழுது கொண்டே கூற

“சாரிடா… கோபத்துல கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்… ப்ளீஸ்… இதுக்கெல்லாம் இப்படி நினைக்காதம்மா… என் தங்கம்ல… அழாதடா… ப்ளீஸ்…” எப்படியாவது சமாதான படுத்தி விடும் நோக்கத்தோடு அவளிடம் கெஞ்ச

“இங்க இருந்தா இப்படியே தான் பேசிட்டு இருப்பீங்க… என்னால தாங்க முடில…” அழுகை குறைந்து விசும்பலாக மாறி இருந்தது!

“சரி… ஓகே… பேசவே மாட்டேன் போதுமா?” என்று கூறி விட்டு அவளை சோபாவில் உட்கார வைத்து தண்ணீர் குடுக்கும் போதே செல்பேசி அழைக்க

“கெளதம் தான் அஞ்சு… நீ அழுது வைக்காத… என்னை வேற மாதிரி தப்பா நினைச்சுடுவான்…” ன்று கூறிவிட்டு

“ஹலோ… சொல்லுடா மச்சான்…”

“அர்ஜுன்… ஒரு ஷாக்கிங் நியூஸ்… மேகாவை… அந்த சசி கல்யாணம் பண்ண கூட்டிட்டு போகலடா…”

“பின்ன… எதுக்குடா…” அதிர்ச்சியில்…

“கடத்திட்டு போயிருக்கான்…”

“என்னடா சொல்ற? உனக்கு எப்படி தெரியும் கெளதம்?”

“இங்க அவங்க வீட்ல தான் இருக்கேன்… கணபதி ஸ்டோர்ஸ் ஓனர் பொண்ணுதான் மேகா… இங்க ஒரே களேபரமா இருக்கு அர்ஜுன்… என்ன பண்றதுன்னு தெரியல… அதான் உனக்கு போன் பண்ணினேன்…” குரலின் பதட்டத்தை அர்ஜுனால் உணர முடிந்தது!

“சரி நீ கிளம்பி உடனே மும்பை வா… அதுக்குள்ள யோசிக்கலாம்… கவலை படாத கெளதம்… கண்டிப்பா மேகாவ கண்டுபிடிச்சுறலாம்…”

பேசி கொண்டிருக்கும் போதே ஹாலில் இருந்த டிவி சேனலில் ஒரு பெண்ணின் பேட்டி ஒளிபரப்பாகியது…

“நடிகையை ஏமாற்றிய தொழிலதிபர்! பாருங்கள் கண்ணீர பேட்டியை!” என்று ஆரம்பித்த பேட்டியில் தோன்றியவள் கெளதம் ரயிலில் சசியுடன் பார்த்த பெண்… இவள் எப்படி இதில்? என்று யோசித்து கொண்டே

“அர்ஜுன் உடனே ***டிவிய போடு… சீக்கிரம்…”

அர்ஜுன் ஓடி சென்று அறையில் இருந்த டிவி யை ஆன் செய்து குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு தாவ

தன்னை பற்றியும் கணபதிக்கும் தனக்குமான உறவை பற்றியும் அவர் செய்து வந்த அநியாயங்களை பற்றியும் கடைசியாக தனக்கு அனைத்து உண்மையும் தெரிந்து இருந்ததால் விலக நினைப்பவளை கூட விலக விடாமல் கொன்று விடுவதாக மிரட்டுவதால் பயந்து இப்படி பேட்டி குடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானதாக கண்ணீருடன் கூறினாள்! தனக்கு ஏதாவது ஆனது என்றால் அதற்க்கு காரணம் கணபதி தான் என்பதையும் அறிவித்து இருந்தாள்!

கணபதி அதை பார்த்து அதிர்ச்சியில் கைகள் நடுங்க… கோபம் கொப்பளிக்க

“கோபாலா…” என்று கத்தினார்

அவர் அழைத்தது அவரது உதவியாளரை… உடன் ஓடி வந்த அந்த கோபாலன் கணபதி இருக்கும் கோபத்திற்கு என்ன நடக்குமோ என்று நடுங்கி கொண்டு

“என்னங்க அண்ணாச்சி…”

“இந்த ***** க்கு எப்படி இவ்வளவு தைர்யம் வந்தது… அவ மொதல்ல எங்கன்னு பாரு…” கிட்டத்தட்ட கத்தினார்…

அர்ஜுனிடம் பேசி கொண்டிருந்த கௌதமோ

“சார்… டென்ஷன் ஆகாதீங்க… இப்போ உங்களுக்கு உங்க மகள் வேணுமா வேணாமா?”

“என்ன தம்பி… இப்படி சொல்றீங்க?”

“அப்படீன்னா கேக்கறதுக்கு உண்மையான பதில சொல்லுங்க… உங்களுக்கு வேற யார் மேல சந்தேகம்? நிச்சயமா தனிபட்ட ஆளோட வேலை இல்ல இது…”

“யார் மேலன்னு தம்பி சந்தேகபடுறது… எங்க வியாபாரத்துல பகையாகறது சகஜமாச்சே… எனக்கு எல்லாமும் ஒண்ணா சேர்ந்தா வரணும்…”

அவர் இப்படி புலம்பவும் சட்டென்று தோன்றியது

“அப்படீன்னா கண்டிப்பா பழைய பகைதான்… யார்ன்னு யோசிங்க சார்… நான் இப்போ மும்பை கிளம்பறேன்… கண்டிப்பா உங்க பொண்ண கூட்டிகிட்டு தான் வருவேன்…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கணபதி வீட்டு தொலைபேசி சினுங்கியது… எடுத்து பேச சொல்லி கண்ணை அசைக்க…

“அவன் தான் அர்ஜுன் லைன்ல வெயிட் பண்ணு…” என்று அவனிடமும் கூறினான் கெளதம்…

“நம்பர் டிஸ்ப்ளே ஆகுதா கெளதம்…”

“ம்ம்ம்… ஆகுது மச்சான்… ஆனா அது ஏதோ ஸ்கைப் நம்பர் மாதிரி தெரியுது… ட்ரேஸ் பண்ண முடியுமா…”

“நம்பர் குடு… ஆனா ஸ்கைப் நம்பர்னா கொஞ்சம் கஷ்டம் கெளதம்… அவரை ஸ்பீக்கர் போட சொல்லு…” என்று அர்ஜுன் சொல்லவும் கெளதம் சைகையால் கணபதியிடம் கூறினான்!

“என்ன மிஸ்டர் கணபதி… ராகினி பேட்டி பார்த்தீங்களா… நல்லா இருந்துச்சா…”

“தம்பி… தயவு செஞ்சு என் பொண்ண விட்டுடுப்பா… கெஞ்சி கேக்கறேன்…” என்று குரல் நடுங்க கெஞ்சினார்!

“விட்டுடறேன் கணபதி சார்… ஆனா முழுசாவா இல்ல பாக் பண்ணியான்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லையே…”

“ஐயோ… கடவுளே… தம்பி… என்ன நான் பண்ணி இருந்தாலும் என்னை வெட்டி கூட போடுப்பா… என் பொண்ண விட்ரு… அது வாழ வேண்டிய பொண்ணு…”

“அப்படீன்னா நாங்க மட்டும் உங்களுக்காக சாக வேண்டியவங்களா கணபதி சார்?”

“தம்பி… தயவு செஞ்சு என் பொண்ணு கூட பேசவாச்சும் விடுப்பா அவ குரலையாவது கேக்கறேன்…”

“ம்ம்ம் கேக்கலாமே… இப்போ தான் உங்களுக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ண போறேனே… உங்க பொண்ண ரேப் பண்றத… அப்போ அவ குரலை நல்லா கேட்டுகோங்க கணபதி சார்…”

அதை கேட்ட கெளதம்?

அத்தியாயம் பத்து

“மேலும் மேலும் தப்பு செய்யாதுகிட்டே போறீங்க சசி…” கோபமாக கெளதம் கூறுவதை கேட்ட சசி சிரித்து

“கெளதம்… நீங்க அங்க தான் இருக்கீங்களா? பரவால்லையே… !” நக்கலாக சிரித்து கொண்டு மேகாவை பார்த்தான்! அவள் முகத்தில் ஒரு சிறு ஒளி கீற்று!

“சசி எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்… இப்போ மேகாவ விட்ரு…” முடிந்த அளவு பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு பேசினான்!

“எங்க விட சொல்றீங்க கெளதம்… காமாத்திபுரால தானே… கண்டிப்பா அவர் பொண்ண அங்க தான் தேடனும்…”

“சசி… மேகாவுக்கு எதாச்சும் ஒண்ணுன்னா நான் உன்னை சும்மா விட மாட்டேன்…” கோபத்தில் கொதித்தான் கெளதம்!

“அதையும் தான் பார்க்கலாம் கெளதம்… இனிமே தானே பார்க்க போறான் அந்த கணபதி என் விளையாட்ட…” என்று சொல்லி விட்டு போனை வைத்தான் சசிதரன்!

முகம் சிவக்க அந்த தொலைபெசியையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் முகத்தை மூடி கொண்டு அழுது கொண்டிருந்த கணபதியையும் அவரது மனைவியையும் பார்த்து

“நீங்க கவலை படாதீங்க சார்… மேகாவ பத்திரமா கூட்டிட்டு வரது என் பொறுப்பு…”

“எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல தம்பி…” என்று பேசிகொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தனர் சிலர்! அதிரடியாக உள்ளே நுழைந்த அவர்கள் போன் தொடர்பை துண்டித்து விட்டு

“நாங்க CBI ல இருந்து வர்றோம்… நீங்க டியூட்டி கட்டாம கடத்தல் தங்கம் கடத்தறதா எங்களுக்கு இன்பர்மேஷன் வந்து இருக்கு… நாங்க உங்க வீட்ட செக் பண்ண வந்துருக்கோம்… இதோ எங்க ஐடன்டி கார்டு…” என்று கணபதியிடம் ஒருவர் குடுத்து விட்டு தேட ஆரம்பிக்க… இன்னொருவர்

“யார் நீங்க? வீட்டு ஆளுங்க தவிர வேற யாரும் இருக்க கூடாது… ம்ம்ம் கிளம்புங்க…” அவசரபடுத்தினார்!

“ஓகே சார்… நான் பார்த்துக்கறேன்… இன்போர்ம் பண்றேன் சார்…” என்று கணபதியிடம் உறுதி மொழிந்து விட்டு கிளம்பினான்!

வெளியே வந்து லைனிலேயே இருந்த அர்ஜுனை அழைத்தான்!

“அர்ஜுன்… மேகா நம்பரும் அந்த சசி நம்பரும் இருக்கு… அதை வெச்சு இடத்த ட்ரேஸ் அவுட் பண்ண முடியுமா?”

“இத தான் நானும் நினைச்சுட்டு இருந்தேன் கெளதம்… அந்த சிம்ம வெளிய எடுத்து இருந்தா கண்டுபிடிக்கறது கஷ்டம்… ஆனா நீ நம்பர அனுப்பி விடு… வேற மெதட்ஸ்ல ட்ரை பண்ணலாம்… அப்புறம் கெளதம் அந்த சசி கிட்ட ஸ்மார்ட் போன் பார்த்த மாதிரி ஞாபகம்… கரெக்டா?”

“ஆமா அர்ஜுன்? ஓகே டா… இன்னும் பத்து நிமிஷத்துல பிளைட் ஒன்னு இருக்காம் மும்பைக்கு… அங்க வந்துட்டு பேசறேன்…”

“ஓகே சீக்கிரம்… கெளதம் ஒரு நிமிஷம்…”

“என்னடா மச்சான்?”

“சப்போஸ் மேகாவுக்கு எதுனா… இன் கேஸ்… ஆச்சுன்னா… உன்னோட ரியாக்ஷன் என்ன?”

“நான் அத பத்தி நினைக்க கூட இல்லை அர்ஜுன்… எப்படி இருந்தாலும் அவ மேகா தானே… ரோடு ல போகும் போது நமக்கு விபத்து நடக்கறது இல்லையா? அது மாதிரிதானே… ஓகே லேட் ஆச்சு டா… வந்துடறேன்…”

*********

சசி பேசியதை கேட்ட மேகா வார்த்தைகளை தேடி களைத்து போனாள்! ஒரு நாள் முன்பு வரை தன்னுடைய உயிராக இருந்தவன் இன்று தனது உயிரினும் மேலான கற்பை காவு கேட்பானா? கேட்கிறானே… அதையும் அவன் தன் வாய்மொழியாகவே கூறி விட்டானே!

வாழ்வின் கொடூரங்களில் ஒன்று… தன்னுடைய உயிரினும் மேலான உறவுகள் பொய்த்து போவதுதான்! அதற்கு தான் விவேகானந்தர் சொல்வார்… வாழ்க்கையில் நாம் தாமரை இலை தண்ணீர் போல இருக்க வேண்டும் என்று… அதாவது உறவுகளோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் நிலை! அப்படி இருக்கும் பட்சத்தில் நம்மால் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு சுலபமாக தீர்வு காண முடியும் என்பதோடு பின்னாளில் பிரிகின்ற நிலை வந்தால் மனம் கவலையுறாது என்பதற்காக சொல்லப்பட்டது இது…

இருண்ட பக்கத்தின் பால் இருந்த மேகா… அந்த நொடியில் முடிவு செய்தாள்! போராடித்தான் பார்ப்போமே! வென்றால் உயிர் தனக்கு மிச்சம்… தோற்றால் அவனுக்கு மிச்சம்…

“சசி விளையாடாதீங்க…” முயன்றவரை கடுமையாக முகத்தை வைத்து கொண்டு எச்சரித்தாள்! அதற்கு அவன் எதுவும் பேசாமல் பக்கத்தில் வரவும் அவளுக்கு கோபத்தோடு சேர்ந்து அழுகையும் வெடிக்க பார்த்தது…

“உன்னை என்னோட உயிரா நினைச்சேனேடா… இந்த மாதிரி நான் நாசமாகறதுக்காகவா?”

ஆனால் அவள் கேட்கும் எதற்கும் அவன் தான் பதில் கூறும் நிலையில் இல்லை! செய்வது மிக பெரிய தவறு என்பதை அவன் உணராமலும் இல்லை…

“சாரி மேகி… எனக்கு வேற வழி தெரியல…” என்றவனை வெறுமையாக பார்த்துவிட்டு ஆத்திரம் தாளாமல் கொத்தாக அவனது சட்டையை பிடித்தாள்!

“என்னடா சாரி… என்ன சாரி… நீ இப்படி செஞ்சு உன் பழிய தீர்க்க நினைக்கிறியே… நீயெல்லாம் மனுஷனா இல்ல மிருகமா… மிருகங்க கூட தன்னை நம்பி வந்த தன்னோட இனைக்கு இப்படி துரோகம் பண்ணாது, … நீ செய்றது மன்னிக்க முடியாத குற்றம்… வெட்கபடுறேன்… உன்னை காதலிச்சதுக்கு வெட்கபடுறேன்டா… உன் முகத்துல விழிக்கவே எனக்கு பிடிக்கல… வேணாம் நீ வேணாம்… எனக்கு நீ வேணாம்?” அதீத கோபத்தில் கத்தி விட்டு உடைந்து போய் கதற ஆரம்பித்தாள்! மெதுவாக அவளது கையை விடுவித்து கொண்டு விலக போனவன் ஒரு நிமிடம் கோபத்தில் கொதித்து கொண்டிருந்த அவளது முகத்தை கூர்ந்து பார்த்தான்!

“வேற எந்த வழிய வேணும்னாலும் யூஸ் பண்ணி இருக்கலாமே சசி… அதுக்கு என்னோட பாவப்பட்ட காதல் தான் கிடைச்சுதா… என்னால தாங்க முடியலையே… ஏன்டா என்கிட்டே பொய் சொன்ன? ஏன்டா என்கிட்டே பொய் சொன்ன?” என்று அவனை இழுத்து அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து சரிந்து உட்கார்ந்து கதற ஆரம்பித்தாள்!

வெளியே கல்லொன்று நிற்பது போல காட்டிகொன்டாலும் உள்ளே சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தான் சசி… அவனால் கணபதியிடம் எப்படி வேண்டுமாலும் பேச முடிந்தது… கெளதம்மிடமும் கூட பேச முடிந்த அவனால் அடிபட்டு தவிக்கும் புறாவாக கதறி கொண்டிருக்கும் மேகாவை பார்க்கும் போது மனம் தவித்தது! ஆனால் அவனது இந்த காதலுக்கு அர்த்தமே இல்லையே! தலையில் கை வைத்து முகத்தை மூடி கொண்டு சரிந்து அமர்ந்து யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து மேகாவை தொட்டான்…

அவன் தொட்டவுடன் துள்ளி எழுந்த மேகா…” நோ… வேணாம்… என்னை தொடாத…” கோபத்தில் அழுகையோடு கத்தினாள்.

அதை கேட்ட சசி மௌனத்தை மட்டுமே சுமந்து கொண்டு அவளது அருகினில் வந்தான்…

“வேணாம் சசி… இப்போ என்னைய எதாச்சும் நீ பண்ணிறலாம்… ஆனா அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன்… இது சத்தியம்…” என்று விசும்பி கொண்டே கூற… முழுவதுமாக உடைந்தான் சசி!

அவளை ஆற்ற முடியாத வலியோடு பார்த்தவன் அந்த அறையின் ஜன்னல் பக்கம் நின்று கொண்டு அவள் அறியாமல் கண்ணீர் விட்டான்! கண்களை துடைத்து கொண்டு அவள் புறம் திரும்பியவன்…

“என்னால முடியாது கண்ணம்மா… உன் கிட்ட பொய் சொல்ல இனிமேலும் என்னால முடியாது…” கண்கள் கலங்க கூறினான்.

“என்ன சொல்ற?” அழுகையோடு எரிச்சலாக அவள் கேட்க

“நானும் உன்னை என் உயிரா தான் நினைக்கிறேன்… ஆனா…”

வியப்பாக பார்த்து விட்டு

“இப்போ புதுசா இந்த கதை சொல்றியா? இந்த மாதிரி நீ சொன்னா ஒரு நாள் முன்னாடி எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பேன்னு உனக்கே தெரியும்… ஆனா இப்போ மனசே மரத்து போச்சு… இந்த ஒரு நாள் அனுபவத்துல…” வெறுமையாக கூறினாள்!

“கண்டிப்பா உன்னை ஏமாற்ற உன்கிட்ட இதை சொல்லல மேகி… உன்னோட விலைமதிப்பில்லாத காதலுக்கு முன்னாடி நான் தோற்று போய் ரொம்ப நேரமாகுது மேகி…”

கண்களில் வலியோடு அவன் கூற அதை முகத்தில் ஒரு உணர்சியுமில்லாமல் பார்த்து கொண்டிருந்தாள் மேகா!

“என்னடா இப்படி ஒரு திடீர் ஞானோதயம்னு நினைக்கிறியா? நீ ட்ரெயின்ல உன்னோட உயிரை பற்றி கவலை படாம என்னை பற்றி கவலை பட்ட பாரு அப்போவே உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிட்டேன்ம்மா…”

அவள் பதில் கூறாமல் அவனை பார்த்து கொண்டே இருக்க… ஆனால் கண்களில் எதிர்பார்ப்புடன்…

“அப்படி பார்க்காதே மேகி… என்னோட மனசை அறுக்குது… இப்போவும் உன்னை லவ் பண்றேன்னு சொல்றது உன்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணனும்னுங்கற எண்ணத்துல கிடையாதும்மா…”

சரேலென நிமிர்ந்து அவனை பார்த்தாள்!

“பின்ன எதுக்கு?”

“உன்னோட இந்த காதலுக்கு எனக்கு அருகதையும் இல்ல… அதோட எனக்கு குடுத்தும் வைக்கில மேகி…”

“ஏன்?”

ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு கூறினான்…

“ஏன்னா எனக்கு எய்ட்ஸ்…”

********

அர்ஜுன் பரபரப்பாக எழுந்து கௌசிக்கை அழைத்தான்… உள்ளே வந்தவனிடம் இரு செல்பேசி இணைப்பு எண்களையும் குடுத்து

“கௌஷிக்… இது எந்த ஏரியான்னு உடனே கண்டுபிடி… கம் ஆன் குயிக்…” பரபரப்பாக அவன் சொல்வதை பார்த்த கௌசிக், அவனும் பரபரப்பானான்! அதுவரை அர்ஜுனை இடைமறிக்காமல் அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த அஞ்சலி…

“அர்ஜுன் என்னாச்சு?”

அவளை கண்கள் இடுங்க பார்த்த அர்ஜுன்,

“உங்க வேலையே இதுதானே… நம்ப வேண்டியவன நம்புறது இல்ல… நம்ப கூடாதவன நம்பி எது வரைக்கும் வேணும்னாலும் போவீங்க… எப்படி… அவன மாதிரி அலங்காரமா எங்களுக்கு பேச தெரியாது… மயக்கி கூட்டிட்டு போய் வேலை பாக்க தெரியாது… எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் நேர்மையான காதல் தான்… ஆனா அதான் உங்களுக்கு எல்லாம் பிடிக்காதே… ஏமாத்தறவன் யாரோ அவன் கால்ல தானே விழுவீங்க…”

“ஏன் அர்ஜுன் இப்படி பேசுறீங்க… நீங்க அண்ணா கூட பேசுனத வெச்சு பார்க்கும் போது மேகாவுக்கு ஏதோ ஆபத்துன்னு புரியுது… ஆனா நீங்க பேசுறது எனக்கு சுத்தமா புரியல… ஏன் எதுக்கும் எதுக்குமோ முடிச்சு போடுறீங்க?”

“உன் கிட்ட இப்ப பேச நேரமில்ல அஞ்சலி… சசி மேகாவ கடத்தி இருக்கான்… மிரட்டிட்டு இருக்கானாம்… நான் இப்போ வேஸ்ட் பண்ற ஒவ்வொரு செகண்ட்டும் ஆபத்து… கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாத…” கடித்து விட்டு மொபைல் டிராபிக் மேப்பிங் ஏரியாவுக்கு விரைந்தான்… அவனுடனே விரைந்தாள் அஞ்சலி!

மொபைல் டிராபிக்கை ட்ராக் செய்யும் இந்த இடத்தை தாண்டி தான் அத்தனை கால்களும் end user ஐ சென்றடையும்… அதே போல காற்றில் பரவும் ஒவ்வொரு செல்பேசி கால்களும் பதிவு செய்யபடுவதும் இங்குதான்! குப்பன் சுப்பனிலிருந்து யாருடைய செல்பேசி பேச்சுக்களை வேண்டுமானாலும் அரசாங்கம் பதிவு செய்யும் இடம்… ஒவ்வொரு செல்பேசி சேவை நிறுவங்களின் முதுகெலும்பு!

“ரெண்டுல ஒரு நம்பர் ஓசோன் சார்… சென்னைல வாங்கி இருக்காங்க… ஆறு மாசத்துக்கு முன்னாடி… இன்னொரு நம்பர் வேற சர்விஸ்…”

“ஓகே நம்ம நம்பர ட்ரேஸ் பண்ணுங்க…”

“சார்… ரெண்டு நம்பருமே ஆப் ல இருக்கு… டிபால்ட் ட்ராக்கிங்ல அப்பியர் ஆகல…” என்று இன்னொருவர் பதிலளிக்க

“ஓகே யூஸ் அதர் மெதட்ஸ்… ஸ்பை மோட் போங்க…”

“ஓகே சார்…”

கணினி முன்னர் அனைவரும் அமர்ந்து நகத்தை கடித்து கொண்டு கணினி திரையையே பார்த்து கொண்டிருக்க

“சார்… சிம் வெளிய எடுத்துட்டாங்க…”

அர்ஜுன் ஒரு நிமிடம் ஒரு பெரும் மூச்சை வெளியே விட்டு

“ஓகே மேக் எ cloud call… மும்பைல இருக்கற எல்லா ஏரியாவுக்கும்… இங்க்லூடிங் நவி மும்பை… இந்த நம்பர் மட்டும் எந்த ஏரியாக்கு போகுதுன்னு கண்டுபிடிங்க…”

“ஓகே சார்…”

(நாம அப்போ அப்போ போன்ல கேக்கற பாட்டு இருக்கு இல்லையா… அதை கேட்டு டென்ஷன் ஆகி தூக்கி போடறதெல்லாம் கூட நடக்கும் தான்… அது இந்த மாதிரி call cloudingல ஒரு வகை… ஒரு நம்பர்ல இருந்து ஆயிரக்கணக்கான நம்பருக்கு ஒரே நேரத்துல அழைப்பு போகும்… இதுக்கு சட்டத்துல இடம் கிடையாது… ஆனா டெலி கம்யுனிகேஷன்ல எல்லாரும் உபயோக படுத்துறாங்க… சில பேர் நல்ல வழில… சில பேர் கெட்ட வழில… யுஎஸ்ல புதுசா ஒரு டூல் வந்து இருக்கு… அதை வைச்சு சிம் கார்ட எடுத்துட்ட போன ட்ராக் பண்ணி ஒரு பொண்ண கடத்துனவன கண்டுபிடிச்சு இருக்காங்க… இது கதையல்ல நிஜம் )

அழைப்புகள் சென்று கொண்டிருக்க அந்த குறிப்பிட்ட எண் முன்னால் பச்சை விளக்கு எரிய ஆரம்பித்தது…

“வாவ்… மேப் பண்ணுங்க ஆதர்ஷ்…” அந்த பகுதியில் இருந்தவனை பார்த்து துள்ளி குதிக்காத குறையாக சொல்ல

கணினி திரையின் முன் அந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக லோட் ஆனது…

முழுதாக லோட் ஆன போது…

“மை காட்…” என்று ஒரு நிமிடம் உறைந்தான்! சசி கூறியதை போல அந்த இடம்

“காமாத்திபுரா”மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி!

********

“என்ன சொல்றீங்க சசி? என்ன? எய்ட்ஸ் வெச்சுகிட்டு என்னைய எப்படி சசி…” அதிர்ச்சியில் கண்களில் நீர் பெருக அவனது சட்டையை பிடித்து உலுக்கி கேட்டாள் மேகா!

“அவ்வளவு மோசமானவரா நீங்க… இவ்வளவு கீழ்தரமானவரா நீங்க… ச்சே…” என்று அதீத வெறுப்போடு கூற…

“ஷட் அப் மேகா… உன் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறாதே… என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு…” கோபத்தில் அவன் கத்தியதில் மேகாவுக்கு உடல் உதறியது!

“என்ன தெரியணும்… ஒரே ஒரு வார்த்தை போதாதா… நீங்க எப்படி ஆள்ன்னு தெரிஞ்சுக்க…” என்று தன்னால் இயன்றவரை கத்தினாள்!

“என்ன தெரிஞ்சு போச்சு… இதுக்கு காரணம் யார் தெரியுமா? உன் அப்பன்… ஸ்கௌண்ட்ரல்… அவனால என் குடும்பம் போச்சு… என் சொத்து போச்சு… என் அக்கா தன்னை மறந்து இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கா… கடைசியா என்னோட ஒவ்வொரு நாளும் என்னப்படுது… அது தெரியுமாடி உனக்கு… அதுவும் என்ன காரனத்துனால… இந்த சமுதாயமே ஒதுக்கி வைக்கிற எய்ட்ஸால… இதுக்கு என்ன பதில் சொல்ற?” அவளின் தோளை பிடித்து உலுக்கி கேட்டான் சசி!

அவனது கோபத்தை இது வரை பார்த்திராதவள், இந்த முகம் கண்டு அதிர்ந்தாள்! அவளது காதலை கேடயமாக்கி தாக்கிய போது மௌனமானவனின் இந்த கோப வெடிப்பை அவளால் தாங்க இயலவில்லை! அவள் வலியால் முகம் சுளித்து தன்னை விடுவிக்க முயல

“சாரி… கோபத்துல உன்னை… என்னோட குணஇயல்பு உனக்கு தெரிய வாயிப்பு இல்ல மேகா… சின்ன வயசுல இருந்து ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாம வளர்த்தா எங்க அம்மா எங்களை… அதாவது என்னையும் என் அக்காவையும்… எங்க பூர்வீகம் கும்பகோணம்… பித்தளை பாத்திரம் செய்யறது எங்க குல தொழில்… அப்பா தொழில விஸ்தரிக்க சென்னை வந்தார்… தி நகர்ல உங்க கடைக்கு பக்கத்துல தான் எங்க கடையும்… அப்புறமா பித்தளை பாத்திரத்தோட எவர்சில்வர் மற்ற சாமான் எல்லாத்தையும் விற்க ஆரம்பிச்சார்… தொழில்ல நல்ல முன்னேற்றம்… உன் அப்பாவ என் அப்பா போட்டியாவே நினைக்கில… ஆனா உன் அப்பனோட எண்ணம் வேற மாதிரியா இருந்து இருக்கு…”

நிறுத்தி விட்டு விட்டத்தை பார்த்தான்… தன் கண்களில் தேங்கிய நீரை அவள் அறியாமல் சிமிட்டி மறைத்தான்!

“அது அழகான குடும்பம் மேகா… நான் என் அக்கா அப்பா அம்மா… இப்போ ஒண்ணுமே இல்லை… அதே மாதிரி தான் விஷால், சுரேஷ் ஒவ்வொரு வகைல உன் அப்பனால பாதிக்க பட்டவங்க…”

சிறு இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான் சசி!

“அப்போ நான் லண்டன்ல பிசினெஸ் ஸ்டடீஸ் பண்ணிட்டு இருந்தேன்… உன் அப்பா எங்க கடைய விலைக்கு கேட்டு இருக்கார்… எங்க கடை ரொம்ப லாபம் வர்ற கடையாச்சே… எங்க அப்பா குடுக்க முடியாதுன்னு சொல்லி இருக்காங்க… அதுக்கு உன் அப்பன்… ஸ்கௌண்ட்ரல் என்ன பண்ணி இருக்கான் தெரியுமா?” பல்லை கடித்து கொண்டு கோபத்தோடு கேட்க

மேகா பயத்துடன் தலையை ஆட்டினாள் தெரியாதென்று…

“என் அக்காவ கடத்தி அவன் கஸ்டடில வெச்சுட்டு… எங்க அப்பாவ மிரட்டி இருக்கான்… அப்பா போலீசுக்கு போகவும் அக்காவ… அக்காவ… கேங் ரேப் பண்ண வெச்சு வீட்ல கொண்டு போய் கடாசி இருக்கான்டி… இருக்கான்…” வெறி வந்தது போல அவளை உலுக்கி கொண்டு கத்தி பின் அந்த கத்தல் கதறலானது…

“சசி…” என்று ஹீனமாக அழைத்த மேகா முகத்தை மூடி கொண்டு அழுத அவனிடம் பதில் இல்லாமல் போகவும் தோளை தொட்டு எழுப்பினாள்!

“புரியுது சசி…” என்று கூறவும் அவளை பார்த்த அவனது கண்களில் தெரிந்த வலி… அவளை குத்தியது! அந்த நொடியில் அனைத்தையும் மறந்து அவனை அணைத்து முதுகை தடவி கொடுத்தாள்! அவனது கதறல் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டது!

“எங்க அப்பாவால இந்த விஷயத்த ஜீரணிக்க முடியல… அப்போவே ஹார்ட் அட்டாக்ல எங்களை விட்டுட்டு போயிட்டார்… இந்தியா வர்றதுக்குள்ள இத்தனையும் நடந்து நான் வரும் போது அப்பா ஒரே நாள்ல உயிரற்ற சடலமாவும் அம்மாவும் அக்காவும் உயிரோட இருக்கற சடலமாவும் தான் இருந்தாங்க…” அவன் சொல்ல சொல்ல மேகாவின் முகம் கல்லாகி கொண்டிருந்தது! தனது தந்தையா? இப்படி… ச்சே… என்ன பாவம் செய்தேன்… இப்படி ஒரு தந்தைக்கு மகளாக பிறக்க… பெற்றவர்கள் செய்த வினை பிள்ளைகளின் தலையிலே அல்லவா… எதை கொண்டு என் பிறப்பை சுத்தம் செய்ய? இறுகி போன முகமும் விறைத்த உடலுமாக மேகா…

“அதோட விடல அந்த நாய்… சொத்த பிடுங்கனுமே… கேங் ரேப் பண்ணத வீடியோ ஷூட் பண்ணி அதை வீட்டுக்கே அனுப்பி வெச்சான்… பில்டிங்க அவனுக்கு விற்கலைன்னா அந்த வீடியோவ நெட்ல குடுத்துடுவேன்னு மிரட்டுனான்… அதை பார்த்த அம்மா ரொம்ப மனசு உடைஞ்சு போய் அக்காவுக்கும் பாய்சன் குடுத்துட்டு அவங்களும் சாப்பிட்டுட்டாங்க…” தலையை அடித்து கொண்டு அவன் அழ, அவனை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டவள் கண்ணிலும் நீர்…

“அதுல அக்கா பிழைச்சுட்டா… ஆனா புத்தி பேதலிச்சு போச்சு… அவன் எனக்கு குடுத்த வெகுமதிதான் இந்த எய்ட்ஸ்… வலுக்கட்டாயமா என் உடம்புல ஏத்தினது… பாஸ்டர்ட்…” பக்கத்தில் இருந்த டீபாயில் கையை குத்தினான்… கோப கனல் மேகாவை சுட்டெரித்தது… சரிந்து உட்கார்ந்து தலையில் கை வைத்து கொண்டான்!

“ஏன் மேகா எனக்கு இப்படி ஒரு விதி? எல்லாரையும் போலத்தானே நானும்… லண்டன் போனப்போ கூட ஒரு பொண்ணு கிட்ட கூட பழகினது இல்லடா… மனசும் சரி உடம்பும் சரி ஒருத்திக்கு தான்னு ரொம்ப தீவிரமான தீர்மானத்துல இருந்தவன்டா நான்… காதல்ல உருகி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணனும்ன்னு நினச்சவன்… உன் அப்பன் பண்ணதுக்கு உன்னை பார்த்தப்போ கூட பழகி பழி வாங்க தான் நினச்சேன்… எனக்கு தான் உன்னால எய்ட்ஸ் இன்ஜெக்ட் பண்ண முடியுமா? உன் பொண்ணும் அதே எய்ட்ஸால சாக போறா பாருன்னு சொல்லி அவனோட தொழில் சாம்ராஜ்யத்த அழிச்சுட்டு அவனை நாக் அவுட் பண்ணனும்ன்னு நினைச்சுத்தான் உன் கிட்ட பழகினேன்”இடைவெளி விட்டு விட்டு அவளை பார்த்தான் சசி… அவளது முகம் உணர்வில்லா பாலைவனமாக இருந்தது!

“… ஆனா இப்போ உண்மையா உன்னை காதலிக்கிறேன் மேகா… இப்போ நீ வேணும்னு நினைக்கிறேன்… நீ வேணும்னு நினைக்கக்கிறேன்… ஆனா… என்னால…” தன்னுடைய நிலையை நினைத்து உடைந்து போனான்… அவனது ஆற்றாமையை பார்த்த மேகாவுக்கு வேறெதுவும் தோன்றவில்லை சசியை தவிர…

“இப்போ என்னாச்சு சசி… நான் உங்களுக்கு இருக்கேன் சசி… எவ்வளவோ சைன்ஸ் முன்னேறி இருக்குப்பா… எதா இருந்தாலும் சேர்ந்து பேஸ் பண்ணலாம் சசி… நான் இருக்கேன் சசி… நீங்க எதுக்குப்பா கவலைபடுறீங்க…” முகத்தை கையில் ஏந்தி அவள் கூறவும்… அவளை தள்ளி நிறுத்தி

“இல்ல மேகா… நீ போய்டு…”

“சசி…”

“ஆமா மேகா நீ போய்டு… அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா…” குரல் கமற…” நான் உன்னை வந்து கண்டிப்பா பார்ப்பேன் மேகா…”

*********

காமாத்திபுராவில் மேகா இருப்பதை அறிந்த அடுத்த நிமிடம் அவன் அழைத்தது ஆஷிஷ் குல்கர்னி… மும்பையின் கமிஷனர்… என்கௌன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்… அர்ஜுனின் நண்பர்! முகவரியை குடுத்து நிலவரத்தை சொல்லி உடனே அங்கு சென்று காப்பாற்றுமாறு வேண்ட… அதே ஏரியா பக்கம் சுற்றி கொண்டிருந்தவர் பரபரப்பாகி தன் குழுவோடு அங்கே சென்றார்…

அதை மட்டும் நம்பாமல் காமாத்திபுராவில் செக்யூரிட்டி சர்விஸ் மற்றும் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வரும் வாசுதேவன் நாயரையும் அழைத்து அந்த முகவரிக்கு உடனே போக சொல்லி விட்டு… போக்குவரத்து நெரிசலில் காரில் போவது தாமதபடுத்தும் என்பதால் பைக் சாவி ஒன்றை வாங்கி கொண்டான்!

அர்ஜுன் அவசரமாக அந்த இடத்துக்கு கிளம்ப… அஞ்சலி வந்து முன்னால் நின்றாள்!

“அர்ஜுன் நானும் வரேன்…” முகம் எல்லாம் கலவரமாக

“ஏன் உருப்படியா நான் போக வேண்டாமா? ஒழுங்கா வேலைய பாரு…”

“ப்ளீஸ் அர்ஜுன்… மேகாவ நினைச்சா எனக்கு வேலை ஓடாது… தயவு செஞ்சு என்னை கூட்டிட்டு போங்க…”

“முடியாது அஞ்சலி… லேட் ஆகுது… ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்… இப்போ போய் விளையாட்டா?” சுள்ளென்று கடிக்க

“அர்ஜுன்… ப்ளீஸ் அர்ஜுன்… நல்ல பிள்ளையா இருப்பேன் அர்ஜுன்… ப்ளீஸ்… அவ எப்பிடி இருப்பாளோ… நானும் வந்தா உபயோகமா இருக்கும்… ஆறுதலா இருக்கும்… ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போடா…”

கடைசியாக அவள் வைத்த பஞ்ச் அவனை இளக்க மொபைல் ட்ராபிக் மேப்பிங் ஏரியாவில் தமிழ் தெரிந்த மற்றவர்களின் புருவத்தை உயர்த்தியது!

********

“மேகா… பயப்படாதீங்க… நாங்க வந்துட்டோம்… கமிஷனர் ஆப் மும்பை அண்ட் டீம்…” எச்சரிக்கை ஹிந்தியில் வர சட்டென்று விறைத்து நிமிர்ந்தனர் மேகாவும் சசியும்!

மேகாவின் கண்களில் தெரிந்த தவிப்பை பார்த்து தவித்தான் சசி!

“தப்பிக்க ஒரு வழியும் இல்லையா சசி…” … தவிப்பாக கேட்டவள், ஒரே ஒரு கதவு மட்டுமே இருந்த வீட்டில் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள்!

மேகாவை ஆழ்ந்து பார்த்த சசி…

“மேகா… உனக்கு என் மேல கோபமே வரலியாடா?” குரல் வருந்தி தேய்ந்தது!

“இருந்துச்சு சசி… மூணு பேர் இறந்துட்டாங்கன்னு சொன்னப்போ இருந்துச்சு… அப்பா கிட்ட என்னை ஏதோ செய்ய போறதா சொன்னப்போ இருந்துச்சு… ஆனா இப்போ இல்ல…” குரலில் இருந்த உறுதி அவனை மலைக்க வைத்தது!

“என்னை எப்படி கண்ணம்மா இந்த அளவு நம்புகிறாய்?” மனதில் எழுந்த கேள்விக்கு பதில் அறியாமல் சிந்தனை வயப்பட்டான்!

“மேகா நீ போ…”

“முடியாது சசி…”

“ஏய்… நான் தானே உன்னை கடத்திட்டு வந்தேன்… இப்போ போலிஸ்ல உன்னை ஒப்படைக்க போறேன்… எழுந்திரு மேகா…”

“நோ சசி… முடியாது…”

“சொல்றத கேளு மேகா…” கோபத்தில் தவிப்போடு வந்து விழுந்தன வார்த்தைகள்!

“இல்ல சசி… போலிஸ் கிட்ட நானே போய் சொல்ல போறேன்… என்னோட இஷ்டத்தோட தான் வந்தேன்னு… நீங்க கடத்துலைன்னு சொல்ல போறேன்… நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்ல போறேன் சசி…” உறுதியோடு சொன்னவளை பார்த்து சசிக்கு உடல் அதிர்ந்தது! இந்த பெண்ணின் வாழ்க்கையில் நான் செய்த தவறுகள் போறதா? இன்னுமா… கணபதியுடன் போராடத்தான் வேண்டும்… ஆனால் மேகா இதில் வேண்டாம்… அவள் வாழ வேண்டியவள்… புரிந்து கொள் மேகா…

“பயப்படுறீங்களா சசி?” புருவத்தை நெரித்து கொண்டு கேட்க

“ச்சே… நான் இப்போ நினைக்கிறது உன்னை பத்தி மட்டும் தான் மேகா… நீ நல்லா இருக்கணும்…” என்று சொல்லி விட்டு செல்பேசியை எடுத்தவன்

“விஷால்… அங்க எப்படி இருக்கு?”

“நல்ல ரியாக்ஷன் சசி… புல் ப்ராபெர்டீஸ் இஸ் அண்டர் விஜிலென்ஸ்… கண்டிப்பா லாஸ் அதிகம்… அதோட நிறைய கேஸ தோண்ட ஆரம்பிச்சுட்டாங்க மீடியா… இனிமே அவங்க பார்த்துக்குவாங்க சசி…”

“ரொம்ப சந்தோஷம் விஷால்… இங்க ராகினி பத்திரமா இருக்காங்கடா… தேவைபட்டா அவங்கள யூஸ் பண்ணிக்கலாம்…”

“ஓகே சசி…”

“விஷால்…”

“சொல்லு சசி…”

“அக்காவ பார்த்துக்கடா… அக்காவ நினைச்சா தான்…” குரல் தழுதழுத்தது…

“கண்டிப்பா… நான் இருக்கேன் சசி…”

கனத்த மனதோடு செல்பேசியை வைத்த போதே வெளியில் இருந்து எச்சரிக்கை செய்வது காதில் விழுந்தது… மேகாவை ஒரு முறை அழுத்தமாக பார்த்த சசி, வெளியே போக எத்தனிக்க அவனை தன்னோடு இழுத்த மேகா, தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டாள்… உறுதியான பலம் வாய்ந்த சசியால் அவளை விட்டு விலக முடியவில்லை… அவளுடைய மென்மையில் தொலைந்தான்…

“மேகா… என்னம்மா இது… விடும்மா…”

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் சசி…” சொன்னவளை அதிர்ச்சியோடு இழுத்து நிறுத்தியவன்…

“உளறாத மேகா… அது எப்பிடி நடக்கும்… உனக்கென்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு…”

“ஒரு நாளாவது உங்களோட வாழ்ந்துட்டா போதும் சசி… அப்புறம் நான் செத்தாலும் கவலை இல்லை…”

அவள் கூறியதை கேட்ட சசிக்கு பதறியது! பிடித்து வைத்து இருந்த பொறுமை எல்லாம் பறந்தது… பளாரென்று அறைந்தவன்,

“அறிவோட பேசு மேகா… உன் கிட்ட நான் உண்மைய சொன்னது நீ இப்படி உளறுவதற்கு இல்ல… உன் அப்பாவ பத்தி தெரிஞ்சுக்க தான்…”

“அதுனால தான் சொல்றேன்… நான் சாகும் போது உங்க மனைவியா தான் சாக நினைக்கிறேன் சசி…”

“இது நடக்காத விஷயம் மேகா… வாழ்க்கைல மிகபெரிய தவற பண்ணிட்டேன்… உன்னை பார்த்தது… உன்னை வெச்சு பழி வாங்க நினைச்சது… சாரி மேகா… சாரி…” என்று சொல்லி விட்டு யோசனை படற சற்று தள்ளி தனியாக சென்றவன் செல்பேசியை தடவினான்!

“ஹலோ கெளதம்… நான் சசி…” கிசுகிசுப்பாக…

“சசியா… சசி… அவளை விட்டுடு சசி… நான் இப்போ அங்கதான் வந்துட்டு இருக்கேன்… எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சு போச்சு… உன்னால தப்பிக்க முடியாது…”

“நானே சரண்டர் ஆகத்தான் போறேன் கெளதம்… அதுக்கு முன்னால உங்க கிட்ட கடைசியா பேச நினச்சேன்…” இடைவெளி விட்டு”மேகாவ உங்க கிட்ட ஒப்படைக்கிறேன் கெளதம்… அவளை பார்த்துகோங்க…”

“சசி…”

“பார்த்து இருக்கேன்… உங்க கண்ல… எனக்கும் கொஞ்சம் தெரியும் கௌதம்… அவ பரிசுத்தமான தேவதை… வேற யாருக்காகவும் நான் இப்ப சரண்டர் ஆகல… அவளுக்காக தான்… நீங்க பார்த்துகோங்க… அவளுக்கு எந்த கஷ்டமும் வர கூடாது… செய்வீங்களா கெளதம்?”

“சசி நீங்க உணர்ச்சிவசப்பட்டு பேசறீங்க… நான் வந்துடறேன்ப்பா…”

“பை கெளதம்… உங்களை நம்பி போறேன்…”

என்று கூறி விட்டு வெளியே செல்ல எத்தனிக்க அதற்கு முன் வெளியே முன்னேறிய மேகா கதவை திறந்து கொண்டு போலீசிடம் பேச எத்தனிக்க… அந்த நேரத்தில்”திருமணம் செய்து கொள்ள போவதாக இந்த பெண் ஏதாவது உளறி விடுவாளோ”என்று பயந்த சசி பாய்ந்து வந்து அவளை தடுக்க… அவளை தான் கடத்தியதாக மட்டும் இருக்கட்டும் அது தான் அவளது எதிர்காலத்திற்கு நல்லது என்று நினைத்த சசி அவளை ஏதும் கூற விடாமல் தடுத்தான்! அவனது கையில் கத்தி…

“சசி… மேகாவ விட்டுடு…” போலீஸ் மத்தியில் இருந்த அர்ஜுன் அவனை பார்த்து மைக்கில் கத்தினான்!

மேகாவும் திமிறி கொண்டு பேச முயற்சிக்க

“மேகா சொல்றத கேளும்மா… நான் சரண்டர் ஆகறேன்…” அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல

“நோ சசி… நான் சொல்ற மாதிரி சொன்னா எந்த பிரச்சனையும் வராது… ப்ளீஸ் என்னை விடுங்க…” கண்ணீர் மல்க கெஞ்சினாள்!

“இல்லடா… நான் உனக்கு தகுதியானவன் இல்ல… சொல்றத கேளு…”

“நீங்க எனக்கு வேணும் சசி… ப்ளீஸ்… எனக்கு வேணும்…” அவளது அழுகை கதறலானது…

அந்த நேரத்தில் சட்டென்று அவனது பேண்டில் இருந்த பிஸ்டலை எடுத்தான்!

“சாரி மேகா எனக்கு வேற வழி தெரியல… நீ நல்லா இருக்கணும்… அக்கா… அக்காவ பார்த்துக்க… உன்னை மாதிரி ஒரு பொண்ணு எனக்கு குடுத்து வைக்கிலடா… எப்படியா இருந்தாலும்…” என்று கூறியவன் மற்றவர்கள் சுதாரிக்கும் முன் தன் நெற்றியில் வைத்து அழுத்தினான்!

“சசீஈஈஈ…”

மேகாவின் உலகம் நிசப்தமானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!