KS2

KS2

அத்தியாயம் – 3
 சென்னைக்கு கிளம்ப சங்கீதா வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டு இருந்தனர், சங்கீதா மட்டும் நகத்தை கடித்துக் கொண்டு ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள். அவளை பார்த்த அவளின் தோழி பாண்டியம்மாள், அவளின் யோசனையை கலைக்கும் விதமாக அவளை உலுக்கி நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தாள்.
“ஏய் பிள்ளை சங்கீ, துணியை எடுத்து பெட்டியில் அடுக்கி வைக்க சொல்லி ஆத்தா உன்ற கிட்ட சொல்லிட்டு போய் ரெம்ப நேரமாகுது. எந்த கோட்டையை பிடிக்க, இப்படி யோசனையில் இருக்க” என்று அவளை கேட்டாள்.
“செத்த நேரம் சும்மா இருக்கியா, அதை அஞ்சு நிமிஷத்துல எல்லாம் அடுக்கி வச்சுபுடுவேன், இப்போ என்னை யோசனை செய்ய விடு நீ” என்று பதிலுக்கு சலித்தாள் சங்கீதா.
“என்னதேன் யோசிக்கிறாளோ, மாரி ஆத்தா இவ கூட மட்டும் என்னை சீமைக்கு அனுப்பி வச்சுபுடாதீங்க. அப்புறம் அங்க இருக்கிற ஒரு வாரமும் இந்த பிள்ளை, என்னைதேன் எதிலாவது கோர்த்து விடும் சாமி. நான் என்ற அப்பாரு கிட்ட சொல்லி, உன் கோவிலுக்கு வந்து கிடா வெட்டுறேன் ஆத்தா” என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் அவளின் தோழி.
 பாவம் அவளின் வேண்டுதல், அவளின் மாரி ஆத்தாவிற்கு கேட்கவில்லை போலும். அடுத்து சங்கீதா தன் செல்பேசியில், பாண்டியம்மாளின் பெற்றோருக்கு அழைத்து தன்னோடு அழைத்து செல்ல, எல்லா ஏற்பாடும் செய்து விட்டாள்.
“மாரி ஆத்தா, ஒரு வாரம் எப்படிதேன் சமாளிக்க போறேனோ. இந்த மகராசி கிட்ட இருந்து காப்பாத்த யாரையாவது அனுப்பு தாயி, உனக்கு புண்ணியமா போகும் “ என்று அடுத்த வேண்டுதலை தெய்வத்திடம் வைத்து விட்டு, அவளுடன் சென்னைக்கு பயணம் செய்தாள்.
 மறுநாள் ரயில் நிலையத்தில் இவர்களை வரவேற்க, அங்கே பிரத்யுஷின் மொத்த குடும்பமும் அங்கே நின்று இருந்தார்கள். இப்படி எல்லோரும் வந்து வரவேற்பார்கள் என்று, சங்கீதாவின் குடும்பத்தார் எண்ணவில்லை.
 சங்கீதா நல்ல குடும்பத்திற்கு தான் செல்கிறாள் என்று அங்கே அவளின் பெற்றோரும், உறவினர்களும் சந்தோஷமாக உணர்ந்தனர். ஆனால் சங்கீதாவோ, இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் தோழியோடு மும்முரமாக பேசிக் கொண்டு இருந்தாள்.
“வாங்க சம்பந்தி, பயணம் எல்லாம் சௌகரியமா இருந்ததா. எல்லோரும் வாங்க முதல நீங்க எல்லோரும் தங்க நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன், முதல நாம அங்க போகலாம் “ என்று எல்லோரையும் நலம் விசாரித்து விட்டு, சங்கீதாவிடம் நலம் விசாரித்தார்.
“என்ன மா நல்லா இருக்கியா, பயணம் எல்லாம் நல்லா இருந்ததா “ என்று அன்புடன் விசாரித்தார்.
 ஆரம்பத்தில் இருந்தே மூர்த்தியின் தன்மையான பேச்சு, அவளுக்கு பிடித்து இருந்தது மட்டும் இல்லாமல், மகள் போல் பிரியமாக பேசும் அவரிடம் அவள் முகத்தை திருப்ப முடியாமல் அவரிடம் தன்மையாக பேசினாள்.
“ரெம்ப நல்லா இருக்கேனுங்க மாமா, நீங்க எப்படி இருக்கீரு. பயணம் எல்லாம் நல்லா இருந்துச்சுங்க மாமா, இவ என்ற தோழி பாண்டியம்மா “ என்று சங்கீதா அவரையும் நலம் விசாரித்துவிட்டு, தன் தோழியை அவருக்கு அறிமுகப்படுத்தினாள்.
“அப்படியா மா, நீ நல்லா இருக்கியா மா. உங்களுக்கு எல்லாம் நம்ம விருந்தினர் மாளிகை ல, தான் மா தங்க ஏற்பாடு பண்ணி இருக்கேன். வாங்க முதல எல்லோரும் அங்கே போகலாம், அப்புறம் காலை உணவை முடிச்சிட்டு பேசலாம் “ என்று அவர்களை அழைத்துக் கொண்டு சென்றார்.
 அங்கே இவர்களுக்காக வெளியே ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட பஸ் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதில் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு, மூர்த்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றார்.
“ஏய் பிள்ளை சங்கீ, உன்னை வச்சு கண்ணு வாங்காம உன்ற மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்கார். நீ ஏன் பிள்ளை, அவர் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம வர “ என்று அவளின் தோழி கேட்டாள்.
“அந்த முகரை என்னை பார்க்குறான்னு தெரியுது, நீ செத்த உன் பார்வையை அங்கின திருப்பாம இரு பிள்ளை “ என்று சங்கீதா கூறவும், அவள் அதன் பிறகு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.
“நானும் இவளை தான் வந்ததில் இருந்து பார்க்கிறேன், இவளுக்காக என் bmw கார் ல கூட போகாம பஸ் ல வந்துகிட்டு இருக்கேன். கொஞ்சமாவது பார்வையை இங்க திருப்புராளா, ஏதோ அவ தோழி கிட்ட பேசுறது தான் முக்கியம் மாதிரியே வராளே “ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு இருந்தான் ப்ரத்யுஷ்.
 ஆம், இன்று இவர்கள் வருகிறார்கள் எனவும், மொத்த குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்தது இவன் தான். அவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்தது முதல், பஸ் ஏற்பாடு செய்தது வரை எல்லாம் அவன் தான்.
“டேய் என்ன டா உனக்கு தான் அவங்களை பிடிக்காது ல, அப்புறம் ஏன் இப்படி எல்லாம் செய்ற “ என்று அவன் தாய் கூர்மையாக அவனை பார்த்து கேட்கவும், அவனும் பதில் பார்வை பார்த்து பதில் கூற தொடங்கினான்.
“எனக்கு என் ஸ்டேடஸ் காட்டனும், அப்புறம் அவங்களுக்கும் அவங்க பொண்ணை இவ்வளவு பெரிய இடத்தில கொடுத்து இருக்கோம்ன்னு எண்ணம் இருக்கும் “ என்று அவன் கூறிய காரணத்தை கேட்டு வாயை பிளந்தார்.
 அவன் தாயிடம் சப்புக் கட்ட தான், அவன் இந்த வார்த்தைகளை கூறியது. ஆனால் அவன் அடி மனதிற்கு தான் தெரியும், அவனின் தேவதைக்காக அவன் பார்த்து பார்த்து செய்து இருக்கிறான் என்று.
 சங்கீதாவிற்கு அங்கே இருக்கையில் அமர்ந்து இருப்பது, ஏதோ ஒரு முள்ளின் மேல் அமர்ந்து இருப்பது போல் அவஸ்தையாக இருந்தது. பேருந்தில் ஏறியதில் இருந்து, ப்ரத்யுஷின் பார்வை அவளை தீண்டிக் கொண்டு இருந்தது.
 அவள் இயல்பாக இருக்க நினைத்தாலும், அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், திரும்பி அவனை பார்த்து முறைத்தாள். அவனோ பதிலுக்கு சிரித்துக் கொண்டே, அவளை பார்த்து கண்ணடித்தான்.
 அதில் அவள் தான் பார்வையை, அவனிடம் இருந்து திருப்ப வேண்டி இருந்தது.
“கடங்காரன், இப்படியா பார்த்து வைப்பான் . யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க, சொல்லி வைக்கணும் அவன் கிட்ட “ என்று மனதிற்குள் எண்ணினாலும், அவன் கண்ணடித்தது மனதிற்குள் நிழலாடி, அவள் இதயத்துடிப்பை அதிகரித்தது.
 பேருந்து அந்த விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தது, மூர்த்தி அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். கடைசியாக பேருந்தில் இருந்து இறங்க நினைத்த சங்கீதா, தோழியை முதலில் பெற்றோரோடு அனுப்பிவிட்டு, ப்ரத்யுஷிடம் பேச பின் தங்கினாள்.
 அதை புரிந்து கொண்ட ப்ரத்யுஷும், மனதிற்குள் குதுகலித்தான். அவளை தனியாக சீண்ட சந்தர்ப்பம் அமையும் பொழுது, அவன் சந்தோசம் அடையாமல் என்ன செய்வான்.
“யோவ் இங்கின பாரு, சும்மா இப்படி சீண்டி பார்க்க நினைச்ச, அப்புறம் பதிலுக்கு நானும் சீண்டிப் பார்ப்பேன். என் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே நில்லும், அதேன் உமக்கு நல்லது சொல்லிபுட்டேன் “ என்று எச்சரித்தாள்.
“முதல இந்த யோவ் போட்டு கூப்பிடாத என்னை, அழகா ப்ரத்யுஷ்ன்னு பேர் சொல்லி கூப்பிடு “ என்று முதல் கட்டளை அவன் பிறப்பிக்கவும், அவள் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
 அதற்குள் சங்கீதாவின் தாய் தங்கம் இவளை அழைக்கவும், தன் உடமைகளோடு கீழே இறங்கினாள். அவள் இறங்கிய பின்பு, அவனும் இறங்கி அவளின் பின்னே உள்ளே சென்றான்.
“சம்பந்தி இன்னைக்கு நாள் நல்லா இருக்கு, நீங்க இன்னைக்கு நம்ம கடைக்கு வந்து பொண்ணுக்கு முஹுர்த்த புடவை மட்டும் எடுத்துட்டா, மத்ததை அப்புறம் நாளைக்கு கூட பார்த்துக்கலாம் “ என்று மூர்த்தி சங்கீதாவின் தந்தையிடம் அபிப்ராயம் கேட்டார்.
“அதுக்கென சம்பந்தி, எங்க வூட்டுல எல்லோரும் அதுக்குதேன வந்து இருக்கோம். அலுப்பு போக குளிச்சிட்டு, நான், என் பொஞ்சாதி, என்ற மகளும் மட்டும் வரோம் இப்போ. நாளைக்கு மத்த புடவை எல்லாம் பார்க்க, எல்லோரும் வருவாங்க “.
“ஒரு சின்ன உதவி, இவிக எல்லாம் ஊரை சுத்தி பார்க்க ஆசையா வந்து இருக்காங்க. கொஞ்சம் அதுக்கு ஏற்பாடு பண்ண முடியுமா சம்பந்தி, நான் செலவை பார்த்துகிறேன் “ என்று தர்மதுரை அவரிடம் கேட்கவும், அவரும் அவர் மனம் கோணாமல் சரி என்று ஒப்புக் கொண்டார்.
 ப்ர்த்யுஷோ, அங்கே சங்கீதாவிடம் மட்டும் பார்வையை வைத்து இருந்தான். அவள் பார்க்காதே என்று சொல்லும் பொழுது தான், அவனுக்கு அவளை பார்க்க அதிகம் தோன்றுகிறது. அவள் விரல் நீட்டி எச்சரித்தால், பதிலுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்து, அவளை திணறடித்தான்.
 மொத்தத்தில் சங்கீதாவை சீண்டும் வேலையை, ப்ரத்யுஷ் கனகட்சிதமாக செய்துக் கொண்டு இருந்தான். அதற்குள் அவன் தந்தை, இவனிடம் அவர்களை கடைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை, இவனிடம் ஒப்படைத்து சென்று விட்டார்.
 அவர்கள் தயாரானவுடன், தன் டிரைவர் மூலம் அவனிற்கு பிடித்த வெள்ளை நிற மெர்செடெஸ் பென்ஸ் வண்டியை, இங்கு கொண்டு வந்து நிறுத்த கூறி இருந்தான். இப்பொழுது அந்த வண்டியில் தான் இவர்களை ஏற்றிக் கொண்டு, அவர்களின் கடைக்கு அழைத்து சென்றான்.
“ஏன் மாப்பிள்ளை, முஹுர்த்த புடவை எந்த விலையில் இருந்து இருக்கு. நீங்கதேன் எடுத்துக் கொடுக்கணும், இருந்தாலும் விவரம் தெரிஞ்சிக்கதேன் கேட்குதேன் உங்க கிட்ட “ என்று தர்மதுரை அவனிடம் கேட்டார்.
“பத்தாயிரத்துல இருந்து, பத்து லக்ஷம் வரை புடவை இருக்கு மாமா. உங்களுக்கு எந்த கலர் எந்த வகையில் புடவை எடுக்கணும் நினைக்குறீங்களோ, அதுலயே எடுத்துடலாம் “ என்று அவன் கூறியதை கேட்டுக் கொண்டனர், சங்கீதாவின் பெற்றோர்கள்.
“மாப்பிள்ளை, நாங்க பத்தாயிரத்துல இருந்து பார்க்கிறோம், எது பிடிச்சு இருக்கோ அதை எடுக்கிறோம். என்ற ஊர்ல என் பொண்ணுதேன், பெரிய படிப்பு படிச்சு இருக்கு. அதுக்கு நல்ல இடம் அமையணும்ன்னு வேண்டாத தெய்வம் இல்லை, நீங்கதேன் அவளுக்குன்னு அந்த கடவுள் நினைச்சுட்டார் “.
“எல்லாம் நல்ல படியா நடக்கணும், என்ற பொண்ணு உங்களை நல்லா பார்த்துக்குவாப்ல “ என்று சங்கீதாவின் புராணத்தை, ஒரு தந்தையாக பெருமையோடு அவனிடம் கூறிக் கொண்டு வந்தார்.
 அதை எல்லாம் கேட்டுக் கொண்டும், சங்கீதாவை அவ்வபொழுது பார்வையாலே சீண்டிக் கொண்டும் அவர்கள் கடையில் வண்டியை நிறுத்தினான். அவர்களை அழைத்துக் கொண்டு, கடையில் பட்டு புடவை எடுக்கும் பிரிவிற்குள் அழைத்து சென்றான்.
“இவங்களுக்கு இன்னைக்கு காலையில் வந்த புதிய டிசைன்ஸ் எல்லாம் எடுத்து காட்டுங்க, அப்புறம் குடிக்க ஜூஸ் சொல்லுங்க “ என்று பணியாளர்களிடம் அங்கே வேலை வாங்கினான்.
 சங்கீதாவிற்கு இவ்வளவு நேரம், தன்னை சீண்டியவனா இவன் என்று தோன்றும் அளவிற்கு, அங்கே அவன் கம்பீரமாக ஒரு பிசினஸ்மேன் போல் நின்று இருந்தான். அங்கே பணி புரிபவர்கள் கூட, அவனிடம் ஒரு பயபக்தியுடன் வேலை பார்ப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
“ஏய் பிள்ளை சங்கீ, இங்கின நீ பாரு. நாங்க நம்ம மாப்பிள்ளைக்கு வேஷ்டி சட்டை எடுக்க போறோம், மூன்றாம் மாடியில இருக்குன்னு சொன்னாங்க. நீ மாப்பிள்ளை கூட இரு, உனக்கு பிடிச்சதை சொல்லு எடுத்து கொடுப்பாங்க “ என்று அவள் தாய் தங்கம், இவளை விட்டுவிட்டு, அவர் கணவரோடு மேலே இருக்கும் ஆண்கள் பிரிவிற்கு சென்றனர்.
“மெரூன் கலர் ல இந்த புடவையை பாரு, இது உனக்கு நல்லா இருக்கும் “ என்று ஒரு புடவையை அவன் தேர்ந்தெடுத்து, அவளிடம் காட்டவும், அவளுக்கும் அந்த புடவை பிடித்து இருந்தது.
 ஆனால் காலையில் இருந்து தன்னை சீண்டிக் கொண்டு இருப்பவனை, பதிலுக்கு சீண்ட வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதை விட அவளுக்கு மனம் வரவில்லை.
“ஏலேய் ப்ரத்யுஷ் எனக்கு இந்த புடவை பிடிச்சு இருக்கு, அதுக்குன்னு ஒரு புடவையோட நிறுத்தனும்ன்னு நினைக்காத ல ப்ரத்யுஷ். இன்னும் எனக்கு இதே மாதிரி ஒரு நாலு புடவை எடுத்துக் கொடு, அப்புறம் அதுல ஒன்னு எனக்கு பஞ்சு மிட்டாய் கலர் ல வேணும் ல ப்ரத்யுஷ் “ என்று வார்த்தைக்கு வார்த்தை அவனை பேர் சொல்லி கூப்பிட்டு, அவனை கடுபடித்தாள்.
“நீ பேர் சொல்லியே கூப்பிட வேண்டாம் தாயி, உனக்கு பிடிச்சத எடு இங்க. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன், எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு “ என்று கூறிவிட்டு அங்கு இருந்து ஓடினான்.
 இன்னும் சிறிது நேரம் இருந்தால், அவள் வட்டார மொழியில் பேசி, தன்னை பேர் சொல்லி அழைக்கிறேன் என்று இன்னும் என்ன ரகளை செய்வாளோ என்று சிறிது பயம் கொண்டவனாக அங்கு இருந்து சென்று விட்டான்.
“அதான இந்த சங்கீதா யாரு, பயபிள்ளை என்னையே சீண்டி பார்த்துகிட்டு இருக்கான். இரு ல ஊருக்கு போற வரைக்கும், உன்னை பேர் சொல்லியே கூப்பிடுதேன் “ என்று மனதிற்குள் சந்தோஷமாக எண்ணிக் கொண்டாள்.
 அங்கே அவள் தன் தோழிக்காக இரண்டு புடவையை தேர்ந்து எடுத்துவிட்டு, அவளுக்கும் இரண்டு புடவையை எடுத்துக் கொண்டாள். அங்கு உள்ள பணியாளரிடம், இந்த நான்கு புடவைக்கும் தான் பணம் கொடுப்பதாக இருப்பதால், பில் போட கூறினாள்.
 அவர்களோ, ப்ரத்யுஷிடம் கேட்டுக் கொள்ளுமாறு கூறி அவன் அறையை அவளுக்கு காட்டினர். அவளும், அவனிடம் பேச அந்த அறை கதவை தட்டி, அனுமதி பெற்று உள்ளே நுழைந்தவள், அங்கு பார்த்த காட்சியில் கோவமாக நின்றாள்.
“மஹிமா வாட் இஸ் திஸ், இப்படி எல்லாம் இங்க வந்து நடந்துகாதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். ஏன் திரும்ப, திரும்ப வந்து என் உயிரை வாங்குற “ என்று அவன் தோளில் தொங்கிக் கொண்டு இருந்த மஹிமாவை, விலக்கிவிட்டு அவளிடம் கோவமாக இரைந்தான்.
“ம்ச்… இப்போ எல்லாம், நீங்க அங்க பப்க்கு வரதே இல்லையே டார்லிங். அதான் உங்களுக்கு என்னமோ ஏதோன்னு பார்க்க வந்தா, இப்படி விரட்டுரீங்களே “ என்று கொஞ்சி குலைந்தாள்.
 இதை பார்க்க சகிக்காமல் சங்கீதா வெளியேற நினைக்கையில், ப்ரத்யுஷ் அவளை பார்த்துவிட்டு, அவளை நிற்க கூறினான். அதற்குள் மஹிமா, தாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது குறுக்கே வந்த சங்கீதாவை பார்த்து ஆங்கிலம் கலந்த தமிழில் திட்ட தொடங்கினாள்.
“hey don’t u have any manners. இப்படி தான் நாங்க பேசிகிட்டு இருக்கும் பொழுது, கதவை கூட தட்டாம உள்ளே வருவியா. ஏன் ப்ரத்யுஷ் வேலை செய்றவங்களை, நீங்க எதுக்காக உங்க காபின்குள்ள எல்லாம் விடுறீங்க “ என்று மஹிமா பேசியதை கேட்டு, ப்ரத்யுஷிர்க்கு அடக்கமாட்டாமல் கோவம் வந்தது.
“hello, u don’t say me that I don’t know manners. I know what to do, and I am not labor here. I am prathyush fiance, we r engaged. ஆமா இப்படி ஒரு லூசை எங்க இருந்து பிடிச்சீங்க, முதல அவளை வெளியே துரத்துங்க “ என்று உரிமையாக ப்ரத்யுஷ் தோளில் சாய்ந்துக் கொண்டு கூறினாள் சங்கீதா.
 அவளின் ஆங்கில புலமையை நினைத்து, ஒரு பக்கம் ப்ரத்யுஷ் ஸ்லாகித்துக் கொண்டு இருந்தான். மறு பக்கம் மஹிமா, ப்ரத்யுஷ் fiance என்று சங்கீதா உரிமையாக அவனை ஒட்டிக் கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ந்து போனாள்.
“ப்ரத்யுஷ், இன்னும் அவ போகல பா “ என்று குலைந்து கொஞ்சி பேசிய சங்கீதா அவனுக்கு புதிது.
 அவளின் அந்த வார்த்தையை கேட்டு, இன்னும் அங்கே நிற்க மஹிமா என்ன முட்டாளா. ஆத்திரத்தில் காலை தரையில் உதைத்து விட்டு, இருவரையும் பார்த்து முறைத்து விட்டு சென்று விட்டாள்.
 அதுவரை அவனோடு ஒட்டி நின்றவள், அவள் சென்றதை உறுதி படுத்திக் கொண்டு, அவனிடம் இருந்து விலகினாள் சங்கீதா. அதுவரை ஒரு மோனநிலையில் இருந்தவன், அவளின் விலகலை உணர்ந்து அவளை பார்த்தான்.
“இந்த நாலு புடவை எடுத்து இருக்குதேன், நான்தேன் காசு கொடுப்பேன். என் தோழிக்கு நான் எடுத்து இருக்கேன், பில் போட்டு கொண்டு வர சொல்லுங்க “ என்று விட்டு, மனசுனக்கத்துடன் சென்றவளை பார்த்து வருத்தம் கொண்டான்.
“ஹையோ எல்லாம் இந்த மஹிமாவால வந்தது, அவளை யாரு வர சொன்னா. ஆனா அவ வந்ததுலயும் ஒரு நன்மை, இந்த பட்டிக்காடு நல்லா படிச்சு இருக்கா. இன்னொன்னு அவளுக்கு என்னை பிடிச்சு இருக்கு, அதுவும் வேற யாருக்கும் என்னை விட்டு கொடுக்க அவள் விரும்பல “.
“இப்போ அவளுக்கு, என்னை பத்தி முழுசா சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு. பேபி உன்னை எப்படி சரி செய்யணும்ன்னு எனக்கு தெரியும், மாமா வந்து கிட்டே இருக்கேன் டி என் கிளி “ என்று மனதில் அவளை கொஞ்சிக் கொண்டே அவளை தேடி சென்றான்.
 அங்கே அவள் சிரித்துக் கொண்டே அவள் பெற்றோரிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், அவள் கண்ணில் அந்த சிரிப்பு இல்லை என்பதை உணர்ந்து வருத்தம் கொண்டான் ப்ரத்யுஷ். அவளை சமாதனப்படுத்த, அவன் நினைக்கையில், அவனின் தாய் வேறு விதத்தில் அவள் மனதை நோக வைக்க காத்து இருந்தார்.
அத்தியாயம் – 4
 மாலை நேரம் எல்லோரும் சாந்தோம் பீச்சில், கடல் காற்றை சுவாசித்து, அங்கே விற்கும் சுண்டல், பாணி பூரி, ஐஸ்கிரீம் என்று வாங்கிக் கொண்டு உல்லாசமாக பொழுதை கழித்தனர் சங்கீதாவின் வீட்டினர். ஆனால் சங்கீதா மட்டும் சற்று யோசனையோடே, தன் தோழியோடு அமர்ந்து இருந்தாள்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல், அவள் மட்டும் இப்படி காலையில் கடைக்கு சென்று வந்ததில் இருந்தே, யோசனையோடு இருந்தவளை அவள் தோழி அவளை கவலையாக பார்த்தாள்.
“ஏய் பிள்ளை சங்கீ, என்ன ல காலையில கடைக்கு போயிட்டு வந்ததில் இருந்தே இப்படி யோசனையாவே இருக்க. ஆத்தா கூட உன்ற கிட்ட எத்தனை வாட்டி கேட்டுச்சு என்னனு, நீ ஏன் பிள்ளை ஒன்னும் பதில் சொல்லாம சிரிச்சே சமாளிக்குற “ என்று அவள் தோழி அவளிடம் சொல்லியாக வேண்டும், என்ற உறுதியுடன் கேட்டாள்.
“ஒன்னுமில்லை பிள்ளை, என்ற மனசு சரியில்லை. எல்லாம் அந்த லூசால வந்தது, ஏதோ என்னை புடிச்ச மாதிரியே சுத்தி வந்தான் காலையிலே. இப்போ வேற ஒருத்தி அவனை கட்டி புடிச்சிக்கிட்டு இருக்கா, இந்த லூசுக்கு அந்த மூஞ்சியை ஏற்கனவே தெரிந்து இருக்கும் போல ல “.
“அந்த மூஞ்சி எப்படி இவுகளை கட்டி புடிச்சிக்கிட்டா தெரியுமா பிள்ளை, அங்கேயே நாலு அரை கொடுக்கணும்ன்னு தோணுச்சு பிள்ளை. அப்புறம் ஏதும் பிரச்னையாகி, என்ற அப்பாரு காதுக்கு போச்சுன்னா வருத்தப்படுவாறேன்னுதேன் சும்மா விட்டேன் பிள்ளை “
“அப்படி இருந்தும் மனசு கேட்காம, அந்த மூஞ்சியை நாலு திட்டு திட்டிட்டுதேன் வந்தேன் பிள்ளை. ஆனாலும் என் மனசு சரியில்லை பிள்ளை, எனக்கே நான் எதனால இப்படி இருக்குதேன்னு புரியல பிள்ளை “ என்று வருத்தத்தோடும், சிறு குழப்பத்தோடும் கூறிய தோழியை பார்த்து, இப்பொழுது சிரித்தாள் பாண்டியம்மாள்.
“ஏய் பிள்ளை எதுனாலும் சொல்லிட்டு சிரி, சொல்லிட்டேன் ஆமா “ என்று மிரட்டினாள் சங்கீதா.
“ஒன்னும் இல்லை பிள்ளை, அப்பாருக்காகவும், ஆத்தாகாகவும்தேன் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் பிள்ளைன்னு நீ சொன்னியே. இப்போ நீ பேசுறதை பார்த்தா, உனக்கு பிடிச்சுதேன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட போல “.
“இல்லைனா எவளோ ஒருத்தி உன்ற மாப்பிளையை கட்டி பிடிசிகிட்டான்னு, நீ இவ்வளவு தூரம் விசனப்பட்டுகிட்டு உட்கார்ந்து இருப்பியா “ என்று சங்கீதாவிற்கு, ப்ரத்யுஷ் மீது உள்ள பிடித்தத்தை எடுத்துக் கூறினாள் தோழி.
 தோழி எடுத்துக் கூறியவுடன், சங்கீதாவிற்கு அப்பொழுது சகலமும் புரிந்தது. பத்து வயது வித்தியாசம் கூட, இப்பொழுது பெரிதாக அவளுக்கு தெரியவில்லை. அவளுக்கு இப்பொழுது புரிந்தது எல்லாம், அவனை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது என்று.
 வேறு ஒரு பெண் அவனிடம் நெருங்கி இருக்கும் பொழுது, அவளுக்கு வந்த கோவமும், வருத்தமும் அவளுக்கு அவனை பிடித்து இருப்பதாலும், அவன் தனக்கு மட்டும் தான் என்ற எண்ணத்திலும் மட்டுமே என்று இப்பொழுது நன்றாக விளங்கியது.
“ஆனாலும் பிள்ளை, அந்த பிள்ளை எப்படி அவுங்க கூட இப்படி ஒட்டி இருக்கலாம். எனக்கு அது தான் சுத்தமா பிடிக்கல பிள்ளை, ஏதோ பப்ன்னு வேற அந்த பிள்ளை சொல்லுச்சு. இவுங்க கிட்ட அது பத்தி கண்டிப்பா கேட்கணும், இனிமே எந்த பிள்ளையும் அவுங்க கிட்ட நெருங்க நான் விட மாட்டேன் ல “ என்று கோவமாக பேசிய தோழியை, நிதானமாக பார்த்தாள் பாண்டியம்மாள்.
“ஏய் பிள்ளை சங்கீ, கொஞ்சம் நிதானமா இரு பிள்ளை. ஆம்பளைங்க கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி, இப்படி இருந்து இருக்கலாம். ஆனா கல்யாணத்துக்கு பின்னாலதேன், அப்படி இருக்க கூடாது “.
“உன்ற மாப்பிள்ளை கூட அப்படித்தேன் இருந்து இருப்பாங்க போல, அதனால எடுத்த உடனே இப்படி கேட்டுறாத. அவிகளா உன்ற கிட்ட எல்லாம் சொல்லுவாக, நீ சொல்ல வைக்கணும் “ என்று தோழி கூறியதை கேட்டு அவளை முறைத்தாள், சங்கீதா.
“லூசா டி நீ, அவுகளா நான் இப்படி இருந்தேன், அப்படி இருந்தேன்னு எப்படி சொல்லுவாக. எந்த ஆம்பளையும், தான் செய்த தப்பை அவ்வளவு சீக்கிரம் சொல்லிட மாட்டாங்க, அதை மறைக்கதேன் பார்ப்பாங்க “ என்று வெடித்தாள் சங்கீதா.
“இவ ஒருத்தி, ஏய் பிள்ளை, சொல்லுறதை முதல முழுசா கேளு பிள்ளை. இப்போ நீ கோச்சிகிட்டு தான வந்து இருக்க, எப்படியும் நாளைக்கோ, இல்லை இன்னைக்கோ உன்னை தேடி வருவாக. உன் மேல ப்ரியம் இருந்தா நிச்சயம் வருவாக, அப்படி இல்லைனா நீ இனி வர வை “.
“கடவுளுக்கு சக்தி இருக்குற மாதிரி, இந்த காதலுக்கும் சக்தி உண்டு பிள்ளை. நான் என்ற மாமனை எப்படி மாத்தினேன் பிள்ளை, அவுகளை நேசிச்சேன் பிள்ளை, அதை அவுகளுக்கு தெரியப்படுத்தினேன். இப்போ எப்போபாரும் என்னை சுத்தி சுத்திதேன் வருவாப்ல, அதுக்கு காரணம் அவுக மேல நாம வச்சுக்கிற காதல் தான் பிள்ளை “.
“நீ உன் காதலை அவிகளுக்கு புரிய வச்சா போதும் பிள்ளை, அப்புறம் அவிகளே உன்னை சுத்தி சுத்தி வருவாக “ என்று தோழி கூறியவுடன் தான் சங்கீதா தெளிந்தாள்.
“நீ சொன்ன போலதேன் பிள்ளை நானும் யோசிச்சேன், என்ற வீட்டுல எல்லோருக்கும் என் கல்யாணத்துக்கு சந்தோஷமா இருக்கிறதை பார்த்து. அவிகளுக்கு என் கூட வம்பு சண்டை போட பிடிக்கும்லே, அதை வச்சே அவிக கூட நெருங்கி என்னை புரிய வைக்கணும் நினைச்சேன் பிள்ளை “.
“ஆனா நடுல வில்லி மாதிரி, இந்த புள்ளை இப்படி இவுகளை கட்டி பிடிக்கவும், என் மூளை வேலை செய்யல போல. இப்போ என்ன இனி, நான் பார்த்துக்குறேன் பிள்ளை. அவுகளை எப்படி சரி செய்யணும்ன்னு எனக்கு தெரியும் பிள்ளை “ என்று சந்தோஷமாக கூறியவளை பார்த்து, அவள் தோழியும் மகிழ்ச்சி அடைந்தாள்.
 அதன் பிறகு இருவரும், அனைவரோடும் பேசி, சிறிது மகிழ்ந்தனர். அந்த நாளின் இறுதியில், உற்சாகமாகவே எல்லோரும் உணர்ந்தனர். மகளின் முகத்தில் பழைய சந்தோஷத்தை கண்ட பின்னர் தான், அவளின் பெற்றோரும் நிம்மதியாக உணர்ந்தனர்.
 மறுநாள் காலையில் ப்ரத்யுஷ் இவளிடம், அவனை பற்றி கூற நினைத்து இவளை நெருங்க நினைக்கையில், அவள் இவனிடம் இருந்து விலகியே இருந்தாள்.
“ஆத்தா சீக்கிரம் மலை இறங்கு டி ஆத்தா, வேற புது பிரச்சனை புதுசா வரதுக்குள்ள நீ செத்த அவுக கிட்ட போய் பேசிடு டி “ என்று அவள் தோழி பாண்டியம்மாள், அவளுக்கு எடுத்து உரைத்தாள்.
“நீ செத்த நேரம் சும்மா இரு பிள்ளை, எனக்கு அப்போ எப்படி இருந்தது தெரியுமா ல. செத்த நேரம் சுத்தல் ல விடுறேன் பிள்ளை, என்ன செய்யுறாங்கன்னு பார்க்கலாம் “ என்று சங்கீதா கூறியதை கேட்டு, அவள் தோழி தலையில் அடித்துக் கொண்டாள்.
“இவ இன்னும் கோபமா இருக்கா போலையே, இவளை எப்படி மலையிறக்க. ம்ம்… எப்படியும் கடைக்கு அவ இன்னும் கொஞ்ச நேரத்துல, எல்லாரோடும் சேர்ந்து வருவா, அப்போ பார்த்துகிறேன் “ என்று எண்ணிக் கொண்டு அவன் இவர்களுக்கு முன்பாகவே கடைக்கு சென்றான்.
 அவன் சென்றதை பார்த்து, சங்கீதாவின் தோழி அவளை முறைக்க தொடங்கினாள். அதன் பிறகு சில அறிவுரைகளை கூறி, அங்கே கடையில் அவனிடம் பேசுமாறு கூறினாள்.
“சரி டி ஆத்தா, இப்போ நீ மலையேராத பிள்ளை. நாம கடைக்கு தான போறோம், அங்க வச்சு பேசுறேன் “ என்று அவளுக்கு உறுதி அளித்த பிறகு தான், பாண்டியம்மாள் அவளை விட்டாள்.
 அங்கே கடையில் மற்ற உறவினர்களோடு, வந்து இறங்கிய சங்கீதாவை, ப்ரத்யுஷ் மேலே அவன் அறையில் இருந்தே அவளை ரசித்துக் கொண்டு இருந்தான். சங்கீதாவிற்கோ, யாரோ தன்னை உற்று பார்ப்பது போல் உணரவும், சுற்றும் முற்றும் பார்த்தாள்.
 கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தென்படாததால், அவளுக்கு குழப்பமாக இருந்தது. தனக்கு தான் ஏதோ பிரமை என்றே நினைத்தாள், ஆனால் அவளுக்கு தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்றிக் கொண்டே இருக்கவும், சட்டென்று மேலே பார்த்தாள்.
 அவள் கண்கள் ப்ரத்யுஷை பார்த்தவுடன், மனதில் சந்தோஷ அலைகள் ஊற்று எடுத்தது. தன்னை தான், தன்னவன் பார்க்கிறான் என்ற உணர்வு அவளை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. அதற்குள் அவள் தந்தை, இவர்களை கடைக்குள் அழைத்து சென்றார்.
“உங்களுக்கு வேணும்கறதை பார்த்து எடுத்துட்டு இருங்க, நான் நம்ம மாப்பிளையை போய் பார்த்துட்டு செத்த நேரம் பேசிட்டு வரேன் “ என்று எல்லோரையும் அனுப்பிவிட்டு, சங்கீதாவின் தந்தை ப்ரத்யுஷை காண சென்றார்.
 அவரோடு செல்ல துடித்த கால்களை, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு தன் தாயுடனும், தோழியுடனும், மற்ற உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றாள். அங்கே பட்டு பிரிவில், மகிழ்ச்சியாக எல்லோரும் புடவையை தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, சங்கீதாவிற்கு மட்டும் இருப்பு கொள்ளவில்லை.
“ஏய் பிள்ளை அதேன், நான் உனக்கு சீலை எடுத்துட்டேன் ல. நீ என் கூட வா பிள்ளை, நாம ஒரு இடத்துக்கு போகலாம் “ என்று சங்கீதா, தோழியை அழைத்தாள்.
“ஏய் பிள்ளை, நான் என்ற அயித்தைக்கும், ஆத்தாளுக்கும் எடுக்கணும் பிள்ளை. நீ வேண்ணா உன்ற ஆத்தா கிட்ட சொல்லிட்டு போ ல, நீ எங்க போக போறன்னு தெரியும் பிள்ளை. அதேன் வந்தது ல இருந்து பார்த்துகிட்டே இருக்கேன் ல, அப்புறம் நந்தி மாதிரி நாந்தேன் அங்க நிக்கானும், எனக்கு இது தேவையா “ என்று அவள் நொடித்துக் கொண்டாள், இவளை பற்றி தெரிந்து கொண்டு.
 அவளும் அசடு வழிந்துகொண்டே, தன் தாயிடம் தந்தையை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு அங்கு இருந்து வெளியேறி, அவனின் அறைக்கு சென்றாள். கதவை தட்டிவிட்டு, உள்ளே சென்றவள் அங்கே யாரும் இல்லாததால், உள்ளே சென்று அவனின் வருகைக்காக காத்து இருக்க தொடங்கினாள்.
 ப்ரத்யுஷோ அவனின் மாமனாருக்கு தேவையானவற்றை, அவனே துணியை தேர்வு செய்து, எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தான். பின்னர் சிறிது நேரம் கழித்து, அவர் பட்டு அறையில் இருக்கும் மனைவி தேர்வு செய்ததை பார்க்க போவதாக கூறிவிட்டு சென்றார்.
“நம்ம ஆளும் அங்க தான இருப்பா, முதல நம்ம ரூம்க்கு போய் கௌதமை கூப்பிட்டு அவன் கிட்ட வேலையை பார்க்க சொல்லிட்டு, நாம நம்ம ஆளை பார்க்க போகலாம் “ என்று எண்ணிக் கொண்டே அங்கே சென்றவனுக்கு, அவள் தேவதை அங்கே அவனுக்காக, காத்துக் கொண்டு இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.
 அங்கே அவனின் மேஜையில் இருக்கும் அவனின் புகைப்படத்தை ரசித்துக் கொண்டு இருந்தவளை, அவளின் பின்னிருந்து அணைத்தான். யாரோ தன்னை அணைக்கவும், பயின்ற தற்காப்பு கலையை பயன்படுத்தி அவனை உதைத்து தள்ளினாள்.
 பின் யார் என்று பார்த்தவள், அங்கே ப்ரத்யுஷ் வலியோடு கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள்.
“ஹையோ என்னை மன்னிச்சிருங்க, நான் எந்த எடுவட்ட பையனோன்னு நினைச்சு இப்படி செய்துட்டேனுங்க. கையை கொடுங்க, நான் தூக்கி விடுறேன் “ என்று சங்கீதா அவனை நெருங்கி, உதவ முன்வரவும் அவன் தடுத்தான்.
“ஹையோ வேணாம் தாயி, நீ எப்போ என்ன செய்வனே தெரியல. ஷப்பா இப்படியா பலமா இடிப்ப, என் எலும்பு நொறுங்கி இருக்கும் நினைக்கிறேன். நீ போ மா நானே பார்த்துகிறேன், எதுனாலும் நாம பேசி தீர்த்துக்கலாம் சரியா “ என்று அவன் ஏற்ற இறக்கத்துடன் சொன்ன விதத்தில், சங்கீதாவிற்கு சிரிப்பு வந்தாலும், அவனை இப்படி அடித்து தள்ளி விட்டதில் அவள் மனம் வருத்தப்பட்டது.
 அதை அவள் முகத்தில் படித்தவன், அவளை தேற்றி அனுப்பிவிட்டு, தன் செல்லில் கெளதம் எண்ணை அழுத்திவிட்டு, மறுமுனையில் அவன் போன் எடுக்கவும், உடனே கிளம்பி வருமாறு கூறினான்.
“டேய் என்ன டா இது, யாருடா உன்னை இப்படி அடிச்சது “ என்று அங்கே வந்த கெளதம் அவனின் நிலையை பார்த்து, அதிர்ந்து போய் கேட்டான்.
“அதை உனக்கு அப்புறம் சொல்லுறேன் மாப்பிள்ளை, முதல என்னை உடனே ஹாஸ்பிடல் கூட்டு போ டா “ என்று வலியில் அவன் கூறவும், உடனே கெளதம் அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்தான்.
 அங்கே மருத்துவர் அவனை பரிசோதித்துவிட்டு, அவனுக்கு தேவையான சிகிச்சையை கொடுத்துவிட்டு ஒய்வு எடுக்குமாறு கூறிவிட்டு சென்றார்.
“டேய் மாப்பிள்ளை எப்படி டா இப்படி அடி வாங்கின, நீ தான் எப்போவும் எச்சரிக்கையோடவே இருப்பியே. அதுவும் கராத்தே ல ப்ளாக் பெல்ட், ஜூடோ, பாசிங் ல சாம்பியன்னு இருந்த உன்னை யார் டா இப்படி அடிச்சு போட்டது “ என்று கவலையுடன் விசாரித்தான்.
“சொன்னா சிரிக்க மாட்டியே, எல்லாம் என்னை கட்டிக்க போற மகாராசி தான் டா இப்படி அடிச்சது. அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு, பின்னாடி இருந்து கட்டி பிடிச்சேன் டா. எங்க இருந்து அவ்வளவு வெறி வந்ததுன்னு தெரியல டா, ஒரே உதை தான் டா, என்னனு சுதாரிக்கிறதுக்குள்ள அடுத்த அடி மாப்பிள்ளை “.
“நான் இவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கல டா, அவ தான் அடிகடி நிறைய சர்ப்ரைஸ் எனக்கு கொடுக்குறா. அன்னைக்கு என்னனா, நல்லா இங்கிலீஷ் பேசினா, இன்னைக்கு இப்படி தற்காப்பு கலை எல்லாம் நானும் படிச்சு இருக்கேன்னு நல்லா காட்டிட்டா “.
“இன்னும் என்ன அதிர்ச்சி எல்லாம் கொடுக்க போறாளோ தெரியல, இப்போவே கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு மாப்ளை “ என்று அவன் புலம்பியதை கேட்டு கெளதம் சிரித்தான்.
“ஹா ஹா மச்சான், நான் கூட அந்த ரவுடி தாமோதரன் திரும்ப பிரச்சனை பண்ண வந்துட்டான் நினைச்சேன் டா. ஆனா நீ இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுப்பன்னு நினைக்கல டா, ஆமா அங்க உன் ஆளு ரியாக்ஷன் என்ன மாப்பிள்ளை “ என்று கெளதம் கேட்டான்.
“அவ வேற யாரோன்னு நினைச்சு தான், இப்படி பண்ணா. அங்க விழுந்தது நான் தான்னு தெரியவும், துடிச்சு போயிட்டா. அவளுமே இதை எதிர்பார்கல டா, பாவம் இன்னும் பீல் பண்ணிக்கிட்டு இருப்பா “ என்று சங்கீதாவிற்க்காக, வருத்தப்படும் நண்பனை ஆச்சரியமாக பார்த்தான்.
 அதன் பின் சிறிது நேரம் ஒய்வு எடுத்தவுடன், கெளதம் அவனை அழைத்துக் கொண்டு ப்ரத்யுஷ் வீட்டிற்கு சென்றான். அங்கே அப்பொழுது தான், கிளப்பில் இருந்து வந்த அவனின் தாய் லலிதா, அவனின் நிலையை பார்த்து பதறினார்.
“ஹையோ கண்ணா என்ன டா ஆச்சு, இப்படி காலை ஊனிகிட்டே நடக்கிற. எல்லாம் நீ கல்யாணம் பண்ண போற மகராசியால வந்தது, எப்போ அவ கூட உனக்கு நிச்சயமானதோ அப்போ இருந்தே நேரம் சரியில்லை உனக்கு “ என்று மெதுவாக இந்த திருமணத்தை நிறுத்த, அப்படி பேசினார்.
“அம்மா உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே, இந்த கல்யாணம் பிடிக்காததால இப்படி அபாண்டமா ஒரு பொண்ணு மேல பழியை போடாதீங்க. இப்படி எல்லாம் பார்க்க கூட தெரியுமா மா உங்களுக்கு, இப்படி பேச கூட தெரியாத நீங்க இப்போ எப்படி பேசுறீங்க “ என்று பதிலுக்கு ப்ரத்யுஷ், அவரை கூர்மையாக பார்த்துக் கொண்டே கேட்டான்.
 அந்த பார்வையில் அவர் சிறிது பயம் கொண்டார், மகனை பற்றி நன்றாக தெரியுமாதலால் அதன் பிறகு ஒன்றும் பேசாமல் சென்றார் அந்த இடத்தை விட்டு. அதன் பின் கௌதமின் உதவியோடு, அவனின் அறைக்கு சென்று படுத்துக் கொண்டான்.
“டேய் மாப்பிள்ளை, உனக்கு உதவியா ஒரு நர்சை ஏற்பாடு பண்ணட்டுமா “ என்று கேட்ட நண்பனை பார்த்து முறைத்தான்.
“ஏன் டா உனக்கு இந்த கொலைவெறி, திரும்ப அவ என்னை அடி பின்னி எடுக்கவா. நீ வேலு அண்ணனை மட்டும் என்னை அப்போ அப்போ பார்த்துக்க சொல்லு, அவருக்கு காலையில் செடியை பராமரிக்கிற வேலை மட்டும் தான், அதனால அவரை வச்சே நான் பார்த்துகிறேன் “ என்று ப்ரத்யுஷ் சிரித்துக் கொண்டே கூறவும், அவனும் சிரித்தான்.
 அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே சென்ற கௌதமை தொடர்ந்து, உள்ளே வந்த நபரை பார்த்து அதிர்ந்தான்.
“மன்னிச்சிருங்க மாப்பிள்ளை, என் பொண்ணுக்கு கொஞ்சம் கூரு கம்மி. இப்படி யார் என்னனு பார்க்காம இப்படி பண்ணிபுட்டா, உங்களுக்கு துணையா இனி என் பையன் ராஜா இங்கன உங்க கூடவே இருப்பானுங்க. அப்புறம் கல்யாணம் முடியும் முன்னே, பொன்னை பையன் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம் “.
“ஆனா என்ற பொண்ணு உங்களை பார்த்தே ஆகணும்ன்னு ஒத்த காலில் நிக்குது. அதேன் கூட்டிட்டு வந்தேனுங்க, உங்க அப்பாரு கூட கீழே பேசிகிட்டு இருக்கேனுங்க, உடம்பை பார்த்துக்கோங்க “ என்று கூறிவிட்டு கீழே சென்றார்.
 தந்தை இருக்கும் பொழுது, அவனின் அருகே செல்லாமல், ஓரமாக இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தவள், அவர் சென்றவுடன் ஓடி சென்று அவனின் மார்பில் சரண் புகுந்து அழுது கரைந்தாள். அவளின் அழுகையை காண சகியாமல், அவளை சமாதானப்படுத்தினான்.
 அவளோ அவனின் சமாதானத்தை கூட ஏற்காமல், தன்னால் தான் அவனுக்கு இந்த நிலை என்று மனதிற்குள் வருந்திக் கொண்டே இருந்தாள். அவன் உடனே, அவளை சீண்ட எண்ணினான், சீண்டினால் சிலிர்த்து எழுவாள் என்று அறிந்து வைத்து இருந்ததால், அவன் அடுத்து அந்த வேலையை செய்தான்.
“ஹே இப்போ இந்த சீன் இல்லை மா, இப்போ நீ அடிச்சதுக்கு சாரி சொன்னதோட எனக்கு நீ கிஸ்சும் கொடுக்கணும் “ என்று அவளை சீண்டவும், அவன் எண்ணியது போல் அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
“ஹி ஹி எவ்வளவு நேரம் தான் அழுவ, நானும் இந்த அழுமூஞ்சியை எவ்வளவு நேரம் தான் பார்க்கிறது. போதும் அழுதது, இதுக்கு மேல அழுது நம்ம ரூமில் தண்ணியை நிரப்பிராத “ என்று அவன் நம் ரூமில் என்று அழுத்தி கூறியதை கேட்டு, அவள் வெட்கம் அடைந்தாள் முதல் முதலாக.
“ஹையோ இப்போ நீ என்னமா பண்ணுற, வெட்கப்படுறியா பார்த்து இந்த பூமி தாங்குமோ என்னமோ “ என்று மேலும் அவளை வம்பு இழுக்கவும், இப்பொழுது அவன் முதுகில் ஒரு அடி அடித்தாள்.
“இப்போ தான் நீ formக்கு வந்து இருக்க “ என்று அவன் கூறியதை கேட்டு சிரித்தாள்.
“அது சரி நீங்க பேசுறதை பார்த்தா என்னை நீங்க ரவுடினே, முடிவு பண்ணிட்டாப்ல இருக்கு “ என்று சங்கீதா கேட்கவும், அவன் சிரித்தான்.
“அப்படி சந்தேகமா எல்லாம் கேட்க கூடாது, கன்பார்மா நீ என் ரவுடி கீத்ஸ் தான் “ என்று அவன் கூறவும், அவனின் பெயர் சுருக்கமும், அவனின் கீதா என்ற அழுத்தமும், மீண்டும் அவளை வெட்கப்பட வைத்தது.
 என்னதான் அவளை வம்பு இழுத்தாலும், அவளின் வெட்கம் அவனை அசைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். தன் அருகில் வெட்கத்தோடு குனிந்து அமர்ந்து இருக்கும் தேவதைக்கு, அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் இதழில் தன் முத்திரையை பதித்தான்.
 அதில் அதிர்ந்து விழித்த சங்கீதா, நிமிர்ந்து அவனை பார்த்தாள். கண்களில் காதல் வழிய அவளை பார்த்தவனை பார்த்து, அதில் கட்டுண்டாள். அங்கே மெளனமாக காதல் கீதம் அரங்கேறிக் கொண்டு இருந்த நேரத்தில், கீழே அவனின் தாய் லலிதா இத்திருமணத்தை நிறுத்த, தன் தோழியோடு சதி ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!