Kse-4

Kse-4

                   அத்தியாயம் – 4
மாடி ஏறியவன் திரும்பி அவளைப் பார்த்தான். வேண்டும் என்றே முகத்தை அந்த பக்கம் திருப்பிக் கொண்டாள் மிது. ‘நயவஞ்சகன் இவனை பார்ப்பதே பாவம்’ எண்ணிக் கொண்டாள்.
ஆனால் அவனோ அவளை பார்த்துக் கொண்டே மீண்டும் கீழிறங்கி வந்தவன், அவள் முகத்தை உற்று பார்த்து விட்டு “உன் வீணா போன யோசனையை எல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டு, நாளைக்கு பாட்டியை பார்க்க கிளம்பு, மறக்காம அந்த தாலியை கழுத்தில் அணிந்துக் கொள்” கூறியவன் வேகமாக மாடி ஏறி அறைக்குள் சென்று மறைந்தான்.
‘இவன் என்ன சொல்கிறான். இவனுக்கு பாட்டி இருக்கிறார்களா? இல்லை என்றுக் கூறினானே?’ யோசனையாக நின்றிருந்தாள்.
 “அம்மா…ஐயா உங்களை சாப்பிட கூப்பிடுறாங்க?”
“வரமுடியாது, உன் கொய்யா கிட்ட போய் சொல்லு” கடுப்பாக வந்தது அவளுக்கு.
‘எத்தனை தைரியம் இருந்தால், என்னை இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்திருப்பான், ராஸ்கல் வரட்டும் நான் யாருன்னு காட்டுறேன்’ கடுப்பாக அவனை மனதில் வறுத்துக் கொண்டிருந்தாள்.
வேலையாள் அவளை விட்டு விலகவும், வேகமாக அவளை நோக்கி வந்தான் அரவிந்த்.
“ஏய்… உன் திமிரை எல்லாம் என்கிட்ட காட்டாதே?” அவள் முன் கோபத்துடன் வந்து நின்றான்.
அவனை கண்டுக் கொள்ளாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். அவளின் முகத்தை வலு  கட்டாயமாக தன்னை நோக்கி திருப்பியவன் “நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க தெரியுமா? உன்னோட எம் டி… உன் முதலாளியில் மகன்… ஒரு லட்சாதிபதி கிட்ட பேசிகிட்டு இருக்க?” கடுமையாக கூறினான்.
“லட்சாதிபதியா நீயா?” ஏளனமாக கேட்டவள் “இப்படி தான் ஒரு பொண்ணை கையை, காலை கட்டி தூக்கிட்டு வருவீங்களா?” கோபமாக கேட்டாள்.
இந்த முறை அவளின் கோபம் அவனுக்கு ரசிக்க வில்லை போலும் “ஷ்… நான் பேசும் போது குறுக்க பேசாதே” மிரட்டினான்.
“நான் உன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்”
“இல்லை… நீ பயப்படத்தான் போகிறாய். உனக்கு வேறு வழியில்லை”
அவனையே முறைத்துப் பார்த்தாள் மிது. ‘உண்மையும் அது தானே, அவன் தானே பணம் தந்திருக்கிறான், அவன் நினைத்ததால் தானே? தன் தாய் இன்னும் உயிருடன் இருக்கிறார்…’ அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அறைக்குச் சென்றாள்.
அடுத்த கொஞ்ச நேரத்தில் அவன் முன் வந்து நின்றாள் மிது.
மெதுவாக அவளை நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.
கண்கள் அப்படியே ரசனையில் விரிந்தது. “இப்பொழுது தான் நீ சங்க கால அழகிகள் போல் ஜொலிக்கிறாய்” ரசனையாக கூறியவன், அவளின் கையைப் பிடித்து சாப்பிட அழைத்து சென்றான்.
மெல்லிய லைன் டிசைன் போட்ட புடவை உடலை தழுவியிருக்க, அவன் கொடுத்த கருகுமணி கழுத்தை அலங்கரிக்க அவளை மிகவும் அழகியாக காட்டியது.
வேலையாள் உணவை டேபிள் மேல் வைத்து செல்ல, அவனே அவளுக்கு பரிமாறினான்.
சாப்பிடாமல் அமர்ந்திருந்தவளை பார்வையால் அடக்க, அமைதியாக உணவை வாயில் எடுத்து வைத்தாள் அவள்.
அவனின் இதழோ ரகசிய புன்னகையில் விரிந்தது.
அவள் உண்டு முடிக்கும் வரை அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான் அரவிந்த்.
அவளை அழைத்துக் கொண்டு வீட்டை இல்லை, இல்லை அந்த பங்களாவை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றான்.
பலவித அலங்கார பொருட்கள், வித விதமான இருக்கைகள், வண்ண வண்ண விளக்குகள், தொடர்ந்து கொண்டே போகும் விசாலமான அறைகள், எல்லாவற்றையும் பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரம் ஆத்திரமாகவும் வந்தது.
‘படுபாவி பணத்தை இப்படி வாரியிறைத்திருக்கிறான். இதற்கு மட்டும் எத்தனை லட்சங்கள் செலவளித்தானோ? கேவலம் இரண்டு லட்சதிற்க்காய் என்னை சிறையெடுத்து வைத்திருக்கிறான்’ ஆத்திரமாக வந்தது.
முன்னால் நடந்தவன் ஒரு அறையின் வாசலில் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்.
“இது உன்னுடைய அறை மிது. உன்னுடனான, என்னுடைய பல இனிய கனவு நனவாகும் அறை. காத்திரு உன்னுடன் பேச வேண்டும்” குறும்பாக கூறியபடி அப்படியே விலகி சென்றான் அவன்.
செல்லும் அவனையே பார்த்திருந்தாள் அவள். ‘பாவி படு பாவி, எனக்கே செக் வைக்கிறாயா?’ கடுப்பானவள் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக் கொண்டாள்.
கட்டிலில் அமர்ந்தவள், அப்படியே தலையை பிடித்து அமர்ந்து விட்டாள்.
‘என்ன செய்வது? ஏது செய்வது?’ யோசிக்க… யோசிக்க தலையை வலித்தது.
 ‘சரியாக வலையில் விழவைத்திருக்கிறான், டிரைனிலோ, சென்னையிலோ வைத்துக் கூறாமல் பாட்னா வந்திறங்கவும் விஷயத்தைக் கூறுகிறான்?
நான் சொல்வதை நிதானமாக யோசி என்கிறான், அவசரமில்லை என்கிறான். ஆனால், உனக்கு இதை தவிர வேறு வழியில்லை என்றும் சொல்கிறான், இவனை’ பல்லை நறநறவென கடித்துக் கொண்டாள்.
ஆனால், கொஞ்சம் கூட அவனை நினைத்து அவளுக்கு பயமில்லை… அது தான் ஆச்சரியமாக இருந்தது.
எந்த ஆணிடமும் தேவை இல்லாமல் பேசியது கிடையாது. ஆனால் இவனிடம் மட்டும் சரிக்கு சமமாக வாதிடுகிறாள். எதிர்த்து பேசுகிறாள். சில நேரம் அதை அவன் ரசிக்கிறான், சில நேரம் கொதிக்கிறான்.
அவனின் மனநிலை, அவனின் திட்டம் என்ன என்று இது வரை அவளுக்கு புரியவில்லை… தெரியவில்லை…
‘யோசி மிது யோசி… அவனின் வீக் பாயிண்ட் யோசி… அவனை எப்படியாது வீழ்த்த வேண்டும், இந்த இக்கட்டில் இருந்து மீள வேண்டும்’ பலமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.
‘ஏதோ கூறினானே? ஆங்… அவனின் இரவு கனவு… இவன் முழியை பார்த்தாலே தெரிகிறது. திருட்டு தனம் செய்கிறான் என்று, அமைதியாக அவனிடம் பேச வேண்டும்… மிது அவனை வார்த்தையால் மட்டுமே வெல்ல முடியும் நிதானமாக யோசி மிது’ மூளைக்கு கட்டளையிட்டவள். அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். மூளையோ பலமாக சிந்தித்துக் கொண்டிருந்தது.
கதவு மெலிதாக தட்டபட, சிந்தனையை விட்டு கலைந்தவள் மணியை பார்க்க அது இரவு ஏழு மணியைக் காட்டியது. ‘இத்தனை நேரமாகவா சிந்தித்திருக்கிறோம்’ எண்ணியவள் எழுந்து கதவை திறந்தாள்.
எதிரே ஒரு பெண் நின்று கொண்டிருத்தாள். “சின்னம்மா உங்களை, சின்னய்யா சாப்பிட வர சொன்னாங்க” கூறியவள் நிற்காமல் விலகி சென்றாள்.
‘பெரிய கொய்யா… மரியாதையை பாரு’ முணங்கலுடன் அங்கு சென்றாள் அவள்.
டைனிங் டேபிளில் அவளுக்காய் காத்திருந்தான் அவன். இப்பொழுது மஞ்சள் நிற பைஜாமாவும், வேட்டியும்  கட்டியிருந்தான். இதில் நேரு மாமாவை போல் இதயத்தில் ஒரு சிகப்பு ரோஸ் வேறு…
‘பெரிய காதல் மன்னன் என்ற நினைப்பு’ கருவியபடியே அவனின் முன் அமர்ந்தாள்.
இப்பொழுது அவனின் பார்வை அவளை ரசனையாக வருடியது. இவள் பார்வை அவனை குக்கரில் உள்ள சோளத்தை போல் பொசுக்க, இவனோ பாப்கான் போல் துள்ளி குதித்தான்.
“இந்த இரவு நேரம் உன் புடவை உன் அழகை இன்னும் தூக்கி காட்டுகிறது” என்ற புகழாரம் வேறு.
அவள் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தாள்.
“உனக்காக நிறைய டிஷ் செய்திருக்காங்க, எல்லாம் டேஸ்ட் பண்ணிப் பாரு… இதெல்லாம் நீ சாப்டிருக்கவே மாட்ட” என்ற குத்திக் காட்டல் வேறு,
அவனை முறைத்தவள் “நான் சாப்பாட்டு விசயத்தில் என்றும் ஆசைப்படமாட்டேன். எப்பொழுதும் அளவோடு தான் இருப்பேன், எனக்கு இந்த பிரட் மட்டுமே போதும்” என்றவள் பிரட் மட்டும் எடுத்து ஜாமுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.
“ம்ம்… நான் சாப்பாட்டை கண்ணில் காணாதது போல் சாப்பிடுவேன் என்று உன் பாஷையில் கூறுகிறாய் அப்படி தானே?” அவளை கூர்மையாக பார்த்தபடி வினவினான்.
“வீண் கற்பனைகளுக்கு நான் எப்பொழுதும் பலியாகமாட்டேன்”
“ம்ம்..” அவளை பார்த்தபடியே முன்னால் இருந்த பெரிய லெக் பீசை எடுத்து சுவைக்க ஆரம்பித்தான் அவன்.
இதில் இடையிடையே, அவளையும், அந்த பீசையும் மாறி மாறி பார்த்து விட்டு எச்சில் ஊற சுவைத்தல் வேறு.
‘அடேய் ராஸ்கல்… என்னை இந்த வீணா போன பீசுடன் ஒப்பிடுகிறாயா?’ கடுப்பாக எண்ணியடி அவனை முறைத்தாள்.
அவளின் முறைப்பு, அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது போலும், இதழ் சுழித்து சிரித்தான்.
அந்த நேரம் வீட்டின் அலைப்பேசி அழைக்க, அவளைப் பார்த்திருந்தான் அவன்.
“உனக்கு தான் அழைப்பு போய் பேசு”
கந்து மாமா தான் அழைத்திருந்தார். மிது ஆவலாக பேசினாள். அம்மாவின் மருத்துவத்தை பற்றி பேசினாள். அத்தை, தம்பி, தங்கச்சி என்று எல்லாரிடமும் நன்றாக பேசினாள்.
ஆனாலும், மனம் தவித்துக் கொண்டிருந்தது. இங்கிருக்கும் இக்கட்டான நிலையை கூறிவிடலாமா? அப்படி கூறினால் அவள் சொல்வது போல் தன் தாயை காப்பாற்ற முடியாதா?
எதுவும் கூறாமல், சாதாரணமாக பேசி அழைப்பை நிறுத்தினாள் மிது.
அரவிந்த் அவளையே ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அம்மாவுக்கு எப்படி இருக்கிறதாம்?”
“பரவாயில்லையாம்” மெதுவாக கூறினாள்.
“மருத்துவ வசதிகள் போதுமா? ஏதாவது பணம் தேவையா?” மிகவும் கரிசனமாக வினவினான்.
‘அடடா என்னா கரிசனம்!’ ஏளனமாக எண்ணியவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அவனின் முகத்தில் இருந்த கனிவும், அவன் குரலில் உள்ள கனிவும் அவளை சிந்திக்க வைத்தது.
“உன்னிடம் தான் கேட்கிறேன், அங்கு எல்லாம் சரியாக இருகிறதா? பணம் போதுமா? இன்னும் தேவைப்படுகிறதா?”
“போதும்” என்றாள் மிகவும் மெல்லிய குரலில். அவளின் முகத்தில் என்ன கண்டானோ,
“சரி” என தோளை குலுக்கியவன், “சரி கிளம்பு” என்றான் அதே வேகத்தோடு.
“கிளம்பவா? எங்கே” புரியாமல் விழித்தாள்.
“எவ்வளவு நேரம் தான் அந்த அறைக்குள்ளையே அடைந்து கிடப்பாய். வெளியே நீ பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன, இந்த இரவில் பாட்னாவை பார் வா, அத்தனை அழகாக இருக்கும்” அழைத்தவன் அவள் முன்னால் எழுந்து நடந்தான்.
‘அவள் வருவாள்; என்ற நம்பிக்கை போலும்,
மிதுவுக்கும் அவள் இருந்த மனநிலைக்கு மாற்றம் தேவையாய் இருக்க, அவன் பின்னே அமைதியாக சென்றாள்.
டிரைவரை அனுப்பி விட்டு அவனே ஜீப்பை கிளப்பினான். அவனின் ஃபேவரைட்  போலும், அவன் கையில் அழகாக சென்றது.
அவன் அடிக்கடி இங்கு வருவான் போலும், அத்தனை குறுக்கு பாதையிலும் நுழைந்து சென்றது அவனின் ஜீப்.
அவனை போலவே குறுக்கு புத்தி உள்ளது போலும், குறுக்காக பாய்ந்து ஓடியது.
‘அவனிடம் பேச்சு கொடுத்தால் என்ன. இவனை பற்றி அறிந்துக் கொள்ளலாமே’ எண்ணியவள் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.
“அடிக்கடி இங்கு வருவீர்களா?”
“அடிக்கடி இல்ல… ஆறு மாதத்திற்கு ஒரு முறை வருவேன்” என்றான் முகத்தில் ஒரு வித சுவாரசியத்தோடு.
அதோடு அவன் நிறுத்தியிருந்தால் போதும். இல்லை அவள் இவனோடு பேச்சு கொடுக்காமல் இருந்திருக்கலாம். இவன் தான் அவளை கடுப்பாக்கவே பிறந்திருக்கிறானே? எனவே தொடர்ந்தான் அவனின் வீர தீர செயல்களை.
“ஒவ்வொரு முறை வரும்பொழுதும் ஒவ்வொரு பெண்ணோடு வருவேன்” என்றான் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே.
இப்பொழுது அவள் முகம் வெளிப்படையாகவே கோபத்தில் சிவந்தது. அதை ரசித்து பார்த்திருந்தான்.
“உன்னுடைய இந்த சிவந்த முகம் கூட இலக்கியத்தில் சுட்டி காட்டியிருப்பார்கள். உனக்கு சொல்லவா?”
“தலைவன், தலைவியை காதலாக நோக்கும் பொழுது, தலைவியின் முகம் காதலில் கசிந்துருகி செங்கொழுந்தாக மாறிப் போகுமாம். அப்பொழுது, தலைவன், தலைவியை இறுக்க கட்டியணைத்து, அவளின் சிவந்த மேனியை…”
“நீ இப்போ உன் வாயை மூடல, நான் அப்படியே கீழே குதிச்சிருவேன்” கத்தியே விட்டிருந்தாள் மிது.
இப்பொழுது அவள் முகத்தை ஆச்சரியமாக பார்த்தவன் தன் வாயை இருக்க மூடிக் கொண்டான். மிதுவை இத்தனை கோபக்காரியாய் அவன் எண்ணவே இல்லை.
தன்னிடம் சரிக்கு சமமாக வாதிடுவாளே தவிர அவனிடம் இத்தனை கோபத்தை அவள் காட்டியதில்லை. அவளையே பார்த்தபடி மெதுவாக ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தான்.
அவ்வபோது, அவனின் கண்கள், அவள் முகத்தையே நோக்கின. அந்த மஞ்சள் முகம் சிவந்து காணப்பட்டு, அவளின் கோபத்தின் அளவை அவனுக்கு எடுத்துக் கூறியது.
ஆனாலும், அந்த முகம் அவனுக்கு மீண்டும் அந்த சங்க கால இலக்கியத்தை நினைவூட்டியது.
சிறிது தூரம் சென்ற அரவிந்த் ஜீப்பை நிறுத்தி விட்டிருந்தான். மிது புரியாமல் அவனை பார்க்க, இறங்கும் படி சைகை செய்தான் அவன்.
‘துரை வாயை திறந்து பேசமாட்டாராமா?’ எண்ணியவள் இறங்க,
“துரை இப்போ வாயை திறந்தா, துரையம்மா அடிப்பாங்களே” பயந்த மாதிரி அவளுக்கு பதிலடிக் கொடுத்தான்.
அவனை முறைத்து விட்டு முன்னே நடக்க, வேக எட்டுகள் எடுத்து வைத்து அவளுடன் நடந்தான் அவன்.
அப்பொழுது அவனுக்கு தெரிந்த பெண் ஒருத்தி  அவனை நோக்கி ஓடி வந்தாள்.
அருகில் வந்து அவனை பார்த்து புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.
மிதுவை காட்டி ஏதோ அவள் ஹிந்தியில் கேட்க,
“ஷி இஸ் மை ஃவைப்… இப்போ தான் அவள் அம்மா வீட்டில் இருந்து வருகிறாள்” ஹிந்தியில் கூறியபடி மிதுவை தோளோடு அணைத்துக் கொண்டான்.
“வாவ்… உன் மனைவி ரொம்ப அழகு அரவிந்த். அது தான் அவளை இத்தனை நாளா, மறைத்து வைத்திருந்தாயா?” அவள் வினவ,
சிரித்துக் கொண்டே மழுப்பினான் அவன்.
இருவரின் பேச்சை, பாதி புரிந்தும், புரியாமலும் பார்த்திருந்தாள் மிதுனா.
error: Content is protected !!