KUKN6A

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

 அத்தியாயம் 6A

 

கிருஷுடன் உணவருந்த போனவன் ,வேலையை முடித்து விட்டு,சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட்டான் இளா. வீடுவெறுமையாய்.

இந்த எருமை இல்லாம எப்படி இத்தனை நாள் தனியா இருந்தோம்‘.  

ஒருவார பிரிவினை பலவருடங்களாக காட்டியது அவன் மனம்ஆராவை பார்க்க உந்துதல். இருக்கட்டும் நம்மவிட்டு அதான் அவளோட வளர்ச்சிக்கு நல்லது.

மனதை கட்டுபடுத்தி கொண்டவனாய், பிரைம், நெட்ஃப்லிக்ஸ் என்றுவலம் வந்தான்.

கடிகாரம் நகரவுமில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. வீட்டை சுற்றி ஓடினான். களைத்து வேர்த்ததும் மீண்டும் தூக்கம் வரமாட்டேன் என அடம்பிடிக்க,

மணிபத்து. ஃபேஸ்புக் ,டிவிட்டர், வேதா வின்டிக்டாக்பேஜ் என வலம் வந்தவனுக்கு நேரம் ஆகஆக தூக்கம் வராமல் துக்கம் பொங்கியது.

நேற்றைய டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்னும் நிற்காமல் ஆராவை விதவிதமாக காட்டிக் கொண்டிருந்தது. குரலையாவது கேட்போம்.

ப்ளூடூத் ஸ்பீக்கரில் கனெக்ட் செய்து ஆராவிற்க்கு ஃபோனில் அழைத்தான்அவள் குரல் ரூம் முழுவதுமாய் ஒலித்தால், அவளிருப்பதுபோல பிரம்மையில் தூங்கிவிடும் எண்ணத்தில் அழைக்க,

அட்டென்ட் ஆகியும் சத்தமில்லை.

ஹலோலைன்ல இருக்கியாடி .?” இளா

 “..ம் இருக்கேன் இருக்கேன்.” சுரத்தே இல்லாமல் ஆரா.

ஏன்பேசமாட்டியோ..?”

நான்தான் இம்சையாச்சே எல்லாருக்கும். அப்புறம் ஏன் பேசனும்.?” படபட்டாசாய் ஆரா.

 “பாருடா லட்டுக்கு இன்னும் கோபம் போகலையா..?”

 “நான் இந்தி பண்டிட் இப்போ…?” இப்போ அவள்வாய் ஏழு முழமா இருக்குமோ, இந்த இந்தி பண்டிட்டை சொல்லிகாட்டியே சாவடிக்குறா. சிரித்துகொண்டே, நேரில் பார்க்க ஆவல் அதிகரித்தது.

 “சரி வீடியோ கால் போடவா..?”

 வேணாம், நாலு நாளைக்கு யாரையும் தொல்லை பண்ணமாட்டேன். யார் மூஞ்சுலயும் முழிக்கமாட்டேன். இந்திபண்டிட் ஆரா இன்னும் வாயை தைக்கல.”

 அன்னைக்கு கிளம்பும்போது , தமாஷாக வேதாவிடம் சொன்னது, இன்னும் ஆரா அதைபிடித்து தொங்க,

 “சரியான ஒரிஜினல் பீஸுடி நீ.”, வாய்விட்டு சிரித்தான்.

 “இளா, என்னைய நீ நிஜம்மா தொல்லையா நினைக்குறியா.?” முன்னர் பேசிய தொனிக்கு எதிராக, குரல் முழுவதும் ஆதங்கம். குரல் இறங்கி அழரெடியா இருப்பதுபோல இருக்க,

இளாஇப்போதுகவலையாய்,.

எங்க இருக்க?”

 “என் ரூமில்தான்.” கிருஷ் வீட்டில் இருவருக்குமே ரூம் உள்ளது. அதுபோலதான் இளா வீட்டிலும்.

 “எல்லாரும் தூங்கிட்டாங்களா..?”

 “ஆமாம் ,அப்பவே.”

 “சரி வீடியோ கால் பன்றேன், அட்டென்ட் பண்ணனும் இப்போ.” கட்டளையிட்டான்.

மாட்டேன்.” முரண்டுபிடித்தாள்.

 “அப்போ இரு, நான் டாலிக்கு ஃபோன் பண்ணி, அழுவுறன்னு சொல்றேன்.”

 “வேணாம். வீடியோ கால்பண்ணு.”வழிக்கு வந்துவிட்டாள்.

 கட்செய்துவிட்டு வீடியோகால் பேசினான்.

 முகம்கூம்பி இருக்க,

 “ஓய் லட்டுகுட்டி.”

 நிமிராமல் ,“ம்.ம்..” சொன்னாள்.

 “நேத்து நான் விட்டுட்டு வந்ததுல இருந்து இப்படித்தான் இருக்கியா…?”

இல்லையேநல்ல ஜாலியாதான் பேசிட்டு இருந்தேன். நீ இப்போ பேசினதும் எனக்கு எல்லாம் ஞாபகம் வந்துச்சு. மூட்அவுட் ஆகிட்டேன்.”

மறைத்து பேசவோ, குத்தி பேசவோ தெரியாது, மனதில் உள்ளதை அப்பட்டமாக காட்டும் வெள்ளந்தி மனது ஆராவிற்க்கு,பொய்யும் சொல்லத் தெரியாது. சமாளிக்கவும் தெரியாது. அதனாலேயே அவள் விவரமாக இருந்தாலும் அவள்மேல் அன்பு கொண்டவர்களுக்கு இன்னும் குழந்தை.

மூட் சுவிங்ஸ் ஆராவுக்கு அவ்வப்போது வருவதுதான். இளாவின் ஒருவார புறக்கணிப்பு , இப்போது மீண்டும் அவளை கூட்டிற்குள் இழுத்து கொண்டது.

இளாவிற்கு இவளது நடவடிக்கைகள் அத்துபடிஅவள் மனதிலிருப்பதை கொட்டி, லகுவாகி விட்டால், மன அழுத்தத்தில் இருந்து சரியாகிவிடுவாள்.

என்னவாம் லட்டுக்கு…? இப்போ என்ன ஞாபகம் வந்துச்சு.?”

நான்தான் யாருக்கும் வேணாமே, அம்மா, அப்பா, அதோட ஆண்டாள் பாட்டி, அம்மாவோட வீட்டுல , என் மூஞ்சகூட பார்க்காத அந்த தாத்தா சொன்னாரே, அவருக்குபேத்தியே கிடையாது நான்னுநீயும் என்னை வேணாம்னுதானே வேற ஊருக்கு தனியா அனுப்பிட்டு கழட்டிவிட்ட, அதான்.”

யப்பா நாம என்ன நினைச்சு செஞ்சா இந்த மென்டல் என்ன நினைக்குது பாரு.’ நொந்துகொண்டே,இளா,

நான் எப்ப, லட்டுலூசு, லூசு.”

லூசா இருக்கேன்னுதான் யாருக்கும் என்னை பிடிக்கலையா இளாஇப்போ உனக்கும் பிடிக்கல

வேணாம் ஆரா, நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. நானே உன்கூட இல்லாமல் இருந்தாலும் , யார்துணையும் இல்லாம நீ வாழனும்னு நினைக்கிறேன் நான். அதுக்குதான் உன்னை மும்பைக்கு அனுப்பிட்டு கண்டுக்க கூடாதுன்னு நினைச்சேன்புரியுதா லட்டு, என்னை நிமிர்ந்து பாருபிளீஸ்.”

அவள் இன்னும் நிமிரவில்லை, அவன் முகத்தையும் பார்க்கவில்லை. குனிந்தபடியே, மூச்சை இழுத்து செருமல், கண்டுகொண்டான் அவள் அழுகையை.

ஆரா, ஆராஎன் மூஞ்சப்பாரு.” மீண்டும் இளா கெஞ்சினான்.

நான் ஒன்னு நினைச்சு செய்ய நீ ஒன்னை நினைச்சுக்கிட்ட லட்டு, என்னை பார்க்கமாட்டியா..?”

மாட்டேன்.” மண்டையை ஜிங்கு ஜிங்கென்று ஆட்டினாள்.

ஏன்?”

எனக்கு உன்மேல ரொம்ப கோபம்.”கண்ணை துடைத்து கொண்டு பதில் கூறினாள்.

வீடியோ காலைகட் செய்துவிட்டு, நார்மல் வாய்ஸ்காலில் போன் செய்தான்.

 எடுத்துவிட்டாள்,ஆரா.

 “ஏன் , இப்போ கட் பண்ணின..? என் மூஞ்சிபார்க்க பிடிக்கலையா உனக்கு. கோபமாக கேட்டாள்.

நீ உன் மூஞ்சிய காட்டினாத்தானே பார்க்க, உன் முசகுட்டி மண்டைதான் தெரிஞ்சது

நீயே தப்பு பண்ணிட்டு ,என்னையும் நீயே திட்டுற.?”

சரி என்ன தப்பு..?”

திரும்பவும் முதலில் இருந்து தொடர்ந்தாள், “எனக்குன்னு யாரும் இல்லை இந்த உலகத்தில் , யாருக்கும் நான் தேவைபடல.”

உச்சகட்ட தாழ்வு மனப்பான்மை அதீத மனஅழுத்தத்தில் வெளிப்பட்டு கொண்டிருந்தது.

ம்யும்ம் சொல்லு வேற..?”

அம்மாவோ அப்பாவோ இருந்திருந்தா, தனியா வெளில அனுப்பிட்டு, எனக்கு டெய்லி போன் பண்ணி சாப்பிட்டியா தூங்கினியா பத்திரமா இருக்கியா கேட்டுருப்பாங்கதான,

என்பிரெண்ட்ஸ் கிளாஸ்மெட்ஸ் எல்லாருக்கும் அவங்கவங்க வீட்டிலிருந்து ஃபோன் வந்துச்சுஆனா நான் மட்டும் தனியா இருந்தேன். என்ன பண்றன்னு கேட்க ஆள் இல்லாம, அனாதையா.”

கடைசி வார்த்தையில் கண்களை மூடிக்கொண்டான். நாம ஒன்னு நினைக்க, நடந்தது வேற ஒன்னு. தெளிவாக புரிந்தது.

இன்னும் என்னென்னவோ ஆரா பேசிக்கொண்டே போக,

ம்,” போட்டபடி இளா,

தனியா எல்லாம் செய்யணும்னுவிட்ட, சரி, மும்பையில் என்ன நடந்ததின்னு, வீட்டுக்கு வந்ததும் , கேட்டியா,”

ஆஃபிஸ் வந்தப்போ கேட்டேனே நான், மூஞ்சிய மூணு முழம் வச்சுக்கிட்ட,”

அப்போ எனக்கு நீ பிக்அப் பண்ணவராத கடுப்பு, எல்லார் பேரண்ட்சும் வந்திருந்தாங்க ஸ்டேஷனுக்கு, என்னை மட்டும் கூட்டிட்டுபோக சின்னு அங்கிள்,”

தப்புதான்

வீட்டுக்கு வந்தாவது கேட்டியா, உன்ட்ட, சொல்லத்தான், லிவிங் ரூம்லயே , உக்காந்திருந்தேன், எப்போ தூங்கினேன் தெரியல., அம்மா இருந்திருந்தா மடியில் படுத்துக்கிட்டு டூர்போன கதையெல்லாம் சொல்லியிருப்பேன். யாருமே இல்லையே கேட்க,”மீண்டும் உடைந்து அழ ஆரம்பித்தாள் ஆரா.

ஆரா, எல்லாரும் தூங்கிட்டாங்களா..?” இளா

ஆமாம்.”

லைட் ஆஃப்ல இருக்கா வெளில”,

ஆமாம். என் ரூமில் மட்டும் நைட்லாம்ப் போட்டிருக்கேன். “

ஓகே , மொபைல் டார்ச்சை ஆன் பண்ணி வெளிலவா வீட்டை விட்டு,”

நான் மாட்டேன். இருட்டா இருக்கு வெளில, பேய் இருக்கும். பயமாயிருக்கு.”

கதவைத் திறந்து வெளில வந்து , உனக்கு ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன் கார்ஷெட்டில் எடுத்துட்டு போ.”

கிஃப்ட்டா..? எப்போ வச்ச? என்னா வச்ச?” கேள்விமேல் கேள்வி கேட்டவளுக்கு,

வெளில வாட்ச்மேன் இருக்கார். அப்புறம் என்னபயம் கார்ஷெட்டுக்கு போ”, ஊக்கினான்.

பயந்தபடி மொபைல் டார்ச் அடித்து கார்ஷெடிற்கு வர,. கண்ணை விரித்தாள்வீட்டில் தூங்க போட்டிருந்த ஆர்ம்லெஸ் பனியனும் பர்முடாசுமாய்,அங்கு நின்றிருந்தான் இளா.

வா வீட்டுக்கு போலாம்.”

வேணாம், இளா, நான் பார்த்துக்கிறேன். இப்ப ஃபீல் பெட்டர்.” அவனைப் பார்த்ததும் சந்தோஷம் பொங்க இப்போது சிரித்த முகமாய் ஆரா.

ஆனா எனக்கு ஃபீல் பேட்டா இருக்கேஉனக்கு ஓகேதான,அப்போ நான் கிளம்புறேன். ,நான் நீயில்லாம, உன்னை இழந்துட்டு வாழ நினைச்சது இல்ல, இனியும் என் உயிர் இருக்கிறவரை அப்படி நினைக்கவும் மாட்டேன்என்னை நம்பு. பிளீஸ். அவள் இருகைகளையும் பிடித்து சொல்லி கொண்டிருந்தவன்,

சாரி உன்னை ஹர்ட் பண்ணத்துக்கு, ஆனா நான் தெரிஞ்சு பண்ணலஅவள் கழுத்தை சுற்றி கைகளை கோர்த்து அணைத்து கொண்டான்.

சொன்னவனுக்கும் தெரியாமல் ,கேட்டவளுக்கும் புரியாமல் ஒரு காதல் புரப்போசல் நிலவின் சாட்ச்சியோடு முடிந்திருந்தது.

அவளை விடுவித்துவிட்டு,

நீ வீட்டுக்குள்ள போ, நான் கிளம்புறேன்.” காருக்குள் ஏற சென்றவனை

ஓடி வந்து கைகளை கோர்த்து கொண்டாள்.

நீ போகாத, இன்னும் எனக்கு சரியாகுல, உன்மேல கோபம்தான். சமாதானப்படுத்திட்டு போ. பொய்கூட சொல்லத் தெரியாமல் ஆரா,

பரவாயில்ல, நான் போறேன். எனக்கு யார்மேலயும் அக்கறை இல்ல, கிளம்புறேன்..” முகம் மலர்ந்த புன்னகையோடு இளா.

 “எனக்கு தூக்கம் வரல , நான் தூங்கினதும் போயேன், இளா. பிளீஸ்.”

 கையைப் பிடித்து அவள் ரூமிற்க்கு அழைத்து சென்றவன்,

அவள்கட்டிலில்அமர,

இப்போ சொல்லு ,என்னைப் பார்த்து, நான் உன்னை வேணாம்னு ஒதுக்கிட்டனா, தொல்லைன்னு விட்டுருவேனா…”

இளாவின் கேள்விக்கு, இல்லைன்னு தலையாட்டினாள்.

பின்ன ஏன் அப்படி சொன்ன, நீ மட்டும் அனாதை, நான் என்ன பத்து பதினஞ்சு பேர் பார்த்துக்க பெரிய குடும்பமாவா இருக்கேன்.”

விழிகள் விரியபார்த்திருந்தாள்.

உனக்காவது , உன்னால் அழுதேன், என்னை தனியா விட்டுட்டன்னு கேட்க நான் இருக்கேன். எனக்கு யார் இருக்கா. யார்கிட்ட போயி என்னோட நிலைமைக்கு குற்றம் சொல்ல முடியும். எல்லாரையும் இழந்துட்டேன். எனக்கு நீ மட்டும்தான் லட்டு மிச்சம் . உன் கண்ணாடி நான். நீ சிரிச்சா நான் சிரிப்பேன். நீ அழுதா, உன்னைவிட அதிகமா அழுவேன். லட்டு. இன்னொரு முறை பிரிச்சு பேசாத, ரொம்ப கஷ்டமா இருக்கு.”

சாரி , வெரிவெரி சாரி,”

ஒன்டி கொண்டவளை ஒருகையணைவில் சாய வைத்துக் கொண்டு,

நான் கேட்கல உன் டூரைப்பத்தின்னு சொன்னியே, நீ அங்க என்ன பண்ணினன்னு எனக்கு எல்லாம் தெரியும்

அவன் மொபைலில் ஆராவின் லெக்சரர் சுரேகாவை பாடாய்ப்படுத்தி எடுத்து அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள்வரிசையாய்..

ஆராவுக்கு ஒரே குதூகலம்,

சுரேகா மேடம் அனுப்பினாங்களா, “கேட்டுவிட்டு,

எல்லாவற்றையும் பார்த்து பூரித்து, அனைத்து படங்களுக்கும் இடம்சுட்டி பொருள் விளக்கி,

இதற்குமேல் கண்ணை மூடலன்னா ஒரேடியாக கண்ணை மூடிடுவோம் என்ற நிலையில் இளாவை தூங்க வைத்துதான், வாய்க்கு ஓய்வு கொடுத்து தூங்க ஆரம்பித்தாள் ஆரா.

விடிந்ததும் முதலில் எழுந்து வந்து பார்த்தது, ரோஜா, அவள் காலை காப்பிக்கு கிச்சனை உருட்டி கொண்டிருந்த, வேதாவிடம், இளாவின் வருகையைகூறி அழைத்து வந்தகாட்ட, கீழே வந்த கிருஷ்,

எட்டிப்பார்த்து விட்டு,

கல்யாணம் பண்ணிக்கமாட்டான் ,தாலி கட்டமாட்டான்ஆனா மிச்ச வேலையெல்லாம் திவ்யமா நடக்குதுபோல,”

வேதா மண்டையில் கொட்டிவிட்டு செல்ல, ரோஜா அவனை முறைத்து கொண்டே கதவை மூடிவிட்டு சென்றாள்.

நான் என்னவோ பொண்ணுகூட தனியா இருந்த மாதிரி பண்ணுதுங்க, ப்ளடிபகார்ஸ்

 செய்தித்தாளுடன் எதிரில் இருந்த கவுச்சில் அமர்ந்து கொண்டான்.

 முதலில் எழுந்த இளா அசையவும் , ஆராவும் எழுந்தாள், புதிதாய் மனதினுள் இருந்த கள்ளம் அவன் ஆராவுடன் தனிமையில் இருந்ததை மறைக்க எண்ண,

லட்டு யார் கேட்டாலும், நான் எப்போ வந்தேன்னு தெரியாதுன்னு சொல்லு,”

 “ம், கூட சொல்லாமல் தூக்க கலக்கத்தில் வெளியே போய், திரும்ப கவுச்சில், உருள முயல,

 கிருஷ் , “எருமை தூங்கறது அங்கேயே தூங்க வேண்டியதுதானே, அவன் எழுந்துட்டானா

 “யாரு , இளாவா, அவனைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது, அவன் நேத்து நைட்டு வந்து என் ரூமில் தூங்கினத்தும் சுத்தமா தெரியாது.” சரியாக தப்பா உளறிவிட்டு இளாவை கிருஷிடம் கோர்த்து விட்டுதான் தூங்கினாள்.

இளா, வெளியே வந்தான்.“மச்சான், “ கிருஷை அழைக்க,

 “எனக்கு யார் வந்ததும் தெரியாது, கூடத் தூங்கின ஆராக்கு கூட யாரு நைட்டு வந்தாங்கன்னு தெரியாது

ஹிஹி இளா வழிய,

நீ போயி ஃப்ரெஷ்அப் பண்ணிட்டு வா இளா, டீ குடிக்கலாம் ,”

இயல்பாய் வேதா.

ஆறு புள்ளை ரெடியாச்சா..?” ரகசியமாய் கேள்விகேட்டு டீ குடிக்க ஃப்ரெஷ்அப் ஆகி வந்தவனை ,ரஸ்காக்கி நொறுக்கிவிட்டான்.

மீண்டும் அன்றைய நாளுக்காக தயாராக வீட்டிற்க்கு சென்று , தயாராகி உணவருந்தி எல்லா டெக்ஸ்டைலஸ் ஷாப்ஸ்க்கும் ஒருவிசிட் அடித்துவிட்டு ,மதிய உணவின்பின், மழை தூற ஆரம்பிக்க, மூணு மணியளவில் காரை கொண்டு போயி பீச்ரோட்டில் நிறுத்தியிருந்தான்.

மழை நேர மெரினா , ஆட்க்களில்லாமல் நிர்வாண அழகில்மிகமிக கவிதையாய். மண்வாசம் மழைச்சாரல் என அனுபவித்தவன் மழை நின்றதும் , கருமேகம் சூழ்ந்த குளுமைக்காக, காரின் பேனட்டில் கால்நீட்டி, காரின் முன்பக்க கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான் இளா.

ஆராவிடம் பேசிவிட்டு வந்ததிலிருந்து தடுமாற்றம் முடிவுக்கு வந்திருந்ததுஆராவை காதலிக்குறோமான்னு மனதுக்குள் தேடிப்பார்த்தால் இல்லை. அப்படி ஆராவை பார்த்ததும் இல்லை. மனதிற்குள் நாம் நினைப்பது இருக்கட்டும் , ஆரா நம்மைபற்றி என்ன நினைக்கிறாள்…? குழப்பமாக இருந்தது….

ரோஜாவுக்கு கால் செய்தான்காரை ஓரமாக நிப்பாட்டியபடி,

என்னம்மா ரோஸ்…? என்ன பண்ணிட்டு இருக்க..?”

சும்மாதான் அண்ணா இருக்கோம்எல்லோரும் லஞ்ச் சாப்பிட்டோம்.. லட்டு தூங்குறாஒரு ஃபைவ்ஓ கிளாக்குக்கு ஷாப்பிங் போகலாம்னு இருக்கோம்.” ரோஜாகூற,

எங்கம்மா போறீங்க…? நம்ம கடைக்கு வர்றீங்களா…?”

இல்ல….சௌகார்பெட் போறோம் ..”

எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்டா..”

சொல்லுங்க அண்ணா…”

லட்டுக்கு என்னை பிடிச்சிருக்காம்மா…?”

இது என்ன அண்ணா கேள்வி…?அவளுக்கு உங்களை மட்டும்தான் பிடிச்சிருக்கு…”

இல்லைடா..,.. அவளுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு பிடிச்சிருக்கா ரோஸ் ..?”

 “அடபோங்க அண்ணா, என்னை லவ் பன்றாளா ஆரான்னு டைரக்ட்டா கேட்க வேண்டியது தானே…?”

என்னால அப்படி கேட்க முடியலமா ..ஏன்னா அவளை லவ் பண்றேனான்னு எனக்கே தெரியல…?”

அதற்குள்அந்தபக்கம் சிறிது நேர நிசப்தம்.

இருங்க அண்ணா மீ எதோ சொல்லனுமாம்…” ரோஜா ஃபோனை வேதாவிடம் தர,

 ஃபோனில் பேசிய வேதா….

இளா நான் எல்லாத்தையும் கேட்டுகிட்டுதான்டா இருந்தேன். எனக்கு கிருஷ் வேற, நீ வேற இல்ல தெரியுமில்ல ..?”

 “ம்….. தெரியும் டாலி.. இத நீ சொல்லவே வேணாம்இவ்வளவு நாளாக நானும் ஆராவும் அனாதைங்கிற உணர்வு வராததுக்கு காரணமே நீயும் கிருஷ்ம்தான ….. நீ என்ன சொன்னாலும் கேட்பேன் டாலி. இப்ப எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிற…? சொல்லு நான் என்ன செய்யட்டும்…? எனக்கு ரொம்ப குழப்பமா இருக்குதுஎனக்கு ஆரா என்கூடவே இருக்கணும்.. ஆனா ஒய்ஃப்பா இருக்கணுமான்னு சொல்ல தெரியலஇவ்வளவு நாளாக அவளை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கணுமின்னு மட்டும்தான் நினைசிருக்கேன். நிறைய நேரம் என் குழந்தை அவன்னு கூட நினைச்சிருக்கென்ஆனா காதலியாக லட்ட நினைக்க முடியாம ஏதோ தடுக்குது டாலி…”

நான் ஒன்னு சொல்லட்டா இளாஅவளை நீ குழந்தையா நினைச்சாலும், உனக்கு அப்பாவாகுற வயசும் இல்லை, அவளுக்கு குழந்தையாகவே இருக்ககூடிய வயசும் இல்லை..அவளை பார்த்துக்கிற பொறுப்பை எப்ப நீ எடுத்துகிட்டியோ அதுல இருந்து, உன் குழந்தைதனம் காணப்போச்சு, உனக்காக நீச ந்தோஷமா இருந்து நாங்க பார்த்தது இல்லஉன்னைய சுத்தி நீயே, நான் ரொம்ப அழுத்தகாரன்னு ஒரு வேலியவும் போட்டுகிட்ட, .நீ இன்னும் குழந்தையா நடந்துகிறது என்கிட்டயும் ,கிருஷ்கிட்டயும்தான்.”

அப்படியா இருக்கிறோம் யோசித்தான் இளா.

 மேலும் தொடர்ந்தார் வேதா.

ஆனா நீ எதுக்காக கண்ணுக்குள்ள ஆராவ வச்சி பார்த்துகிட்டியோ, அதிலிருந்து முழுசா சரியாகிட்டாஅதையெல்லாம்விட நல்லபடியா முழு பெண்ணா மனசளவிலும் , உடலளவிலும் வளர்ந்திட்டா.. அவளை நீ குழந்தையா பார்த்தா, குழந்தையாதான் தெரிவா. அவளுக்கு கூடிய சீக்கிரம், அவமனசு புரியும்அதுக்கு முன்னாடி , நீயும் உன்னை சுத்தி போட்டிருக்கிற வேலியில இருந்து வெளியவா. உலகத்தை அனுபவிஉன் வயசுக்குறிய சந்தோஷங்களை அனுபவிஉன் வயசுதானே கிருஷ்ஷுக்கு, அவன் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழும்போது , நீ மட்டும் தனியா இருந்தால் எப்படி..? அதுவும் உன் துணை உன் பக்கத்திலேயே இருக்கும்போது..”

எனக்கு புரியுது டாலிஆனா அத்தை என்னை அவளை பார்த்துக்க சொல்லி ஒப்படைச்சாங்கஅவளை போயி நான் எப்படி கல்யாணம்…? ரொம்ப குற்ற உணர்வா இருக்குது..”

 “ஏண்டா உங்க அத்தையோட சொந்தமெல்லாம் இன்னும் உயிரோடு இருக்கும்போது உன்னை எதுக்கு அவங்க மகளை பார்த்துக்க சொன்னாங்க…? மகள்களைபெற்ற எல்லா அம்மாக்களுக்கும் தெரியும் மருமகன்தான் மகளை நல்லா பார்த்துக்க முடியுமின்னு , அதான் அவங்க மகளை மருமகங்கிட்ட ஒப்படைச்சிட்டு நிம்மதியா உயிரை விட்டாங்க…“

டாலிஇதை எங்கயோ கேட்டமாதிரி இருக்கு……ஓஹ்ஹ் இடையில ஆனந்தயாழை மீட்டிங்கா, சினிமா டயலாக்கைலாம் எடுத்துவிட்டு நல்லா கேன்வாஸ் பன்ற டாலிலகுவாகி இளா கலாய்க்க,

அடிவாங்க போற படவா, கேளு ஒழுங்கா

சொல்லு டாலி”..

உனக்கு அவமேல ஈர்ப்பு இருக்குங்கிரதை நீ இன்னும் உணராததிற்கு காரணம் , அவ உன்கூடவே வளர்ந்ததுதான். நம்ம பக்கத்திலேயே சிலவிஷயங்கள் இருக்கும்போது, அது எவ்வளவு முக்கியம்ன்னு பலரும் உணர்ரதில்லைடா.. எப்ப அது நமக்கு இல்லைன்னு ஆகுதோ அப்பதான் நாம அதுமேல எவ்வளவு பைத்தியமா இருக்கோம்னுதெரியும்.”

இப்பவே எனக்கு பைத்தியமா இருக்கிற மாதிரி தான் இருக்கு. இந்த விஷயத்தில் என்ன பண்றதுன்னு தெரியாம….”

கண்ணை மூடி யோசிச்சு பாருடா இளா. உன் மனசில் ஆரா இல்லாமலேயே போனாலும்,… உனக்கு இனிமேலா பொண்ணு பிறந்து வர்ற பொறா…? உனக்கு நெருக்கமான பொண்ணுங்கள வரிசையா வர வச்சிபாரு மனசுக்குள்ள….உன் மனசுக்கு பிடிச்சவள மட்டும்தான், உன் காதலியா,மனைவியா பார்க்க முடியும்…”

 “எனக்கு ,ஒகே உனக்கு ஒண்ணும் என்மேல வருத்தம் இல்லையே…?”

எதுக்குடா..?”

 “உன்னை விட்டுட்டு வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிரதிலே …?”

 “போக்கிரி கழுதைபோடா போய் வேலைய பாரு..உதை வாங்குவ ராஸ்கல்.”

வெட்கமாக போய்விட்டது வேதாஜிக்கு.