kuyili 3

kuyili 3

தூங்கிக்கொண்டிருந்த மங்கைக்கு ஏதோ உருட்டும் சத்தம் கேட்க கண்விழித்தாள்.எழுந்தவள் சமையல் அறையில் சத்தம் கேட்கவும் அங்கே சென்று பார்த்தாள்.அங்கே அவள் அன்னை முறுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்.

“ம்மா..தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க “நாளைக்கு நம்ம குயிலி மேடம் வீட்டுக்கு போறப்ப எப்படி வெறும் கையோட போறது?அதனால தான் கொஞ்சம் லட்டு செஞ்ச இப்ப முறுக்கு சுடற…” என்று முறுக்கை பிழிந்து கொண்டே சொன்னார்.

“ம்மா..அவங்க இந்த ஊரோட கலெக்டர்..அவங்களே ரொம்ப பெரிய மனசு பண்ணி அவங்க வீட்டு விருந்துக்கு நம்மள கூப்டிருக்காங்க…நாளைக்கு காலைல போகும் போது ஏதாச்சு பெரிய கடைல ஸ்வீட் வாங்கிட்டு போகலாம்..நாம வீட்ல செஞ்சது எல்லாம் கொண்டு போனா அவ்வளவு மரியாதையா இருக்காது” என்றாள்.

“பெரிய கடைல போய் வாங்குன குறைஞ்சது 500 ரூபாய் இல்லாம வாங்க வாங்க முடியாது..500 ரூபாய்க்கு வாங்குனாலும் கொஞ்சம் தான் வரும்..நான் காசுக்காக மட்டும் சொல்லல..கடைல என்ன எண்ணெய் பயன்படுத்திருப்பாங்க..எப்படி செய்யறாங்க…அது எல்லாம் நமக்கு தெரியாது..ஆனா நாம செஞ்சதுனா ஆரோக்கியமா இருக்கும்…” என்றவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “ம்மா” என்ற சத்தம் கேட்கவும் இருவரும் பதறி அடித்து ஹாலிற்கு வந்தனர்.

அங்கே பாதி தூக்கத்தில் எழுந்து அமர்ந்து இருந்தாள் சுகன்யா..அவர்கள் வீட்டின் கடைக்குட்டி.”ஏன் டி கத்துன?” என்றவள் அம்மா கேட்டதற்கு “ஒரு மனுசன நிம்மதியா தூங்க விடாம சும்மா தொன தொனனு ஏதாச்சும் பேசிட்டே இருக்கீங்க..கொஞ்சம் ஆச்சும் பொறுப்பு வேண்டாம்?ஒரு சின்ன பொண்ணு தூங்கறாலே அவள நாம டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு யாருக்கும் தெரியறது இல்ல…ரெண்டு பேருக்கும் பேச வேற நேரமே கிடைக்கலையா? நடுராத்திரில உக்காந்து ரத்த காட்டேறி மாறி பேசிக்கிட்டு..கொஞ்சமாச்சு பொறுப்பு வேண்டாம்?இந்த வீட்ல என்ன தவற வேற யாருக்கும் பொறுப்பு இல்ல..” என்று பொரிந்து தள்ள “வீட்ல இருக்கறது ரெண்டு ரூம்மு..அதுல எவ்வளவு மெதுவா பேசுனாலும் இப்படி தான் கேட்கும்” என்று மங்கை சொல்ல உதட்டை சுளித்த சுகன்யா “மண்ணெண்ன வேப்பெண்ண விளக்கெண்ண நீ குடுத்த விளக்கம் எனக்கு தேவை இல்லை” என்றவள் சொல்ல மண்டையில் செல்லமாக ஒரு குட்டு குட்டினார் செல்வி (மங்கையின் தாய்).

“ஆ அம்மா என்ன அடிச்சுட்டாங்களே…அக்கா இந்த கொடுமையை என்னனு நீ கேக்க மாட்டிய?” என்று சுகன்யா மங்கையிடம் பஞ்சாயத்திற்கு வர அவள் தலையை நீவிவிட்ட மங்கை “ம்மா..ஏன் ம்மா என் தங்கச்சிய அடிக்குற?என் தங்கச்சி பாவம்…பாரு புள்ள முகம் எப்படி சோர்ந்து போச்சுன்னு…” என்று தங்கைக்கு சப்போர்ட்டுக்கு வர “போங்க டி லூசு புள்ளைங்களா..எனக்கு அடுப்புல நிறைய வேலை இருக்கு..திடிர்னு கூப்படறாலேனு பயந்துட்டு ஓடி வந்த பாரு என்ன சொல்லணும்” என்றவர் மீண்டும் அடுக்களைக்குள் செல்ல “என்னது முறுக்கா?என்கிட்ட சொல்லவே இல்ல..” என்று மங்கையிடம் கேட்க “எனக்கும் இப்ப தான் தெரியும்..நாளைக்கு குயிலி அக்கா வீட்டுக்கு போறதுக்காக அம்மா செய்யறாங்க” என்றவள் “சரி நீ தூங்கு…காலைல எந்திருச்சு கிளம்பனும்..” என்ற மங்கையிடம் “அக்கா அம்மா முறுக்கு சுடுறாங்கனு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் தூங்குனாஅம்மா செஞ்ச முருக்கோட சாபம் என்ன சும்மா விடாது..அதானால் அம்மா சுட்டதுல கொஞ்சம் முறுக்கு எடுத்துட்டு வந்து குடுத்தினா நைசா சாப்டிட்டு மல்லாக்க படுத்து தூங்கிருவ…” என்றவள் சொல்ல சிரித்துக்கொண்டே மங்கை அவளுக்கு முறுக்கை எடுத்து வந்து கொடுத்தாள்.

மங்கை முறுக்கு பிழிந்து கொடுக்க செல்வி அதை அடுப்பில் போட்டு எடுத்தார்.இருவரும் முறுக்கு சுட்டு முடித்துவிட்டு படுக்க இரவு 1 மணி ஆகிவிட்டது.

காலை 6 மணிக்கு எழுந்த செல்வி மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டை சுற்றிக் கூட்டி வாசல் தெளித்து விட்டு காலை உணவை தயார் செய்தார்.மணி 8 ஆனதும் மங்கையை எழுப்ப மணியைப் பார்த்தவள் “ம்மா..ஏன் ம்மா இவ்வளவு நேரம் என்ன தூங்கவிட்ட..எழுப்பி விட்டுருக்கலாமுல…எல்லா நாளும் நீ தான் எல்லா வேலையும் செய்யற..இன்னிக்காச்சு நான் கொஞ்சம் உனக்கு ஹெல்ப் பண்ணிருப்பன்ல…” என்று வருத்தமுற “இது என்ன பெரிய வேலையா?எப்பவும் செய்யறது தான..நீ போய் ரெடி ஆகு” என்று அவளை சமாதானப்படுத்தினார்.

குயிலி குளித்து விட்டு வந்ததும் செல்வி “16 வயசாச்சு இன்னும் கொஞ்சம் ஆச்சு பொறுப்பு வந்துருக்கா பாரு..எப்பவும் காலைல நான் எழுப்பி விடுற வரைக்கும் எழுந்திரிக்கறதே இல்ல…” என்றவர் போர்வையை விலக்கி அவளை எழுப்ப “காலையில் எழுந்ததும் கண் விழித்தாள் நான் கை தொழும் தேவதை அம்மா..அன்பென்றாலே அம்மா..என் தாய் போல் ஆகிடுமா..” என்று அவரை அணைத்துக் கொண்டு பாட”ச்சி..ச்சி..போடி போ முதல பல் விளக்கிட்டு குளி” என்றவர் அவளை விளக்க “என் மேல உனக்கு பாசமே இல்ல போ…நான் அக்கா கிட்ட போற…அவ தான் என்ன நல்லா பாத்துப்பா…” என்றவள் மங்கையிடம் நடக்க “நீ யார்கிட்ட போய் கொஞ்சுனாலும் பல் விளக்குனதுக்கு அப்புறம் தான் காபி” என்று செல்வி கண்டிப்புடன் சொல்லிவிட “ஆ..கண்டுபிடிச்சுட்டாங்கையா கண்டு பிடிச்சுட்டாங்க..” என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் நினைத்தவள் குளிக்கச் சென்றாள்.

 

ஒருவழியாக மூவரும் 11 மணி அளவில் ரெடி ஆகி விட குயிலிக்கு அழைத்த மங்கை “அக்கா நாங்க ரெடி ஆகிட்டோம்…” என்று சொல்ல “சரி நான் முருகவேல் அண்ணாவ வர சொல்லற” என்றாள் குயிலி.

 அன்று வழக்கு முடிந்தவுடன் குயிலி மங்கையின் குடும்பத்தை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாள்.ஒரு மாவட்டத்தின் கலெக்டர் தன் குடும்பத்தை விருந்துக்கு அழைப்பதை மங்கையால் நம்ப முடியவில்லை.”மேம் நாங்க எப்படி?” என்று மங்கை தயங்க “நீங்க கண்டிப்பா வரணும்..வர்ற சண்டே..நீங்க ரெடி ஆகிட்டு கூப்பிடுங்க..நான் முருகவேல் அண்ணாவ வந்து உங்கள கூட்டிட்டு வர சொல்லற” என்று அவள் கட்டளையிட அதை அவர்களால் மீற முடியவில்லை.

முருகவேலும் காருடன் வந்துவிட மூவரும் குயிலியின் வீட்டிற்குச் சென்றனர்.குயிலி இவர்கள் மூவரையும் வரவேற்க வாசலுக்கே வந்துவிட்டாள்.

காரில் இருந்து இவர்கள் மூவரும் இறங்கியவுடன் ஓர் ஓரத்தில்  சுகன்யாவின் உயரத்திற்கு இணையாய் கட்டிவைக்கப் பட்ட  மூன்று  நாய்கள்  “லொள் லொள்” என்று கத்த பயந்த சுகன்யா மங்கையின் பின்பு ஒளிந்து கொண்டாள்.மங்கைக்கே அந்த நாய்களைப் பார்க்கும் பொழுது பயமாக தான் இருந்தது.

நாய்களின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த குயிலி :”வாங்க” என்று மூவரையும் உள்ளே அழைத்து உட்காரச் சொன்னவள் கண்ணமாவிடம் அவர்களுக்கு குடிக்க காபி கொண்டு வரச் சொன்னாள்.உள்ளே சென்று அமர்ந்ததும் தான் சுகன்யாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது.

செல்வி தான் செய்து கொண்டு வந்த பலகாரத்தை குயிலியிடம் கொடுக்க “எதுக்கு மா இந்த பார்மேலிட்ஸ் எல்லாம்?” என்றவள் கேட்க “முதல் முதலா வரோம்..அதனால தான் நானே செஞ்சு எடுத்துட்டு வந்த” என்றார்.”நீங்களே செஞ்சிங்களா?” என்று குயிலி கேட்டதற்கு “ஆமாங்க” என்று செல்வி சொல்ல “அம்மா நானும் உங்களுக்கு பொண்ணு மாறி தான் என்ன குயிலினு பேர் சொல்லியே கூப்பிடுங்க..” என்றாள்.அவரும் “சரி மா..” என்றார்.

பின்பு சுகன்யாவிடம் “என்ன படிக்குற?எங்க படிக்குற” போன்ற பொதுவான விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தாள்.சுகன்யாவும் அவள் கேட்டதிற்கு மட்டும் அமைதியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மங்கைக்கே அவ்வளவு பவ்யமாக உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருப்பது தன் தங்கை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது.

ஏனென்றால் செல்வி வீட்டில் அவ்வளவு அறிவுரைகள் சொல்லி சுகன்யாவை அழைத்து வந்திருந்தார்.இங்கே வந்து  ஏதாவது அதிகப்பிரசிங்கித்தனமாக  பேசி விட்டாள் வீட்டிற்கு சென்றவுடன் அவள் அம்மா அடி வெளுத்து விடுவார்கள் என்று தெரியும்.அதனால் தான் அவள் தன் வாலை சுருட்டிக் கொண்டு குயிலி கேட்டதற்கு மட்டும் பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

.கண்ணம்மா காபி கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தவுடன் குயிலி “செல்லாவ வர சொல்லுங்க” என்றாள்.செல்வியும், சுகன்யாவும் “யார் அந்த செல்லாவா இருக்கும்?” என்று யோசித்துக் கொண்டிருக்க மங்கை செல்லாவை பார்க்க ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தாள்.

ஒருகையில் கம்பை ஊன்றிக்கொண்டு காலை எக்கி எக்கி வந்த செல்லாவை மங்கை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.அவர்கள் அருகில் செல்லா வந்ததும் “இவ என்னோட தங்கை செல்லா என்கிற செல்லம்மா” என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்.

மங்கை “ஹாய்!நான் மங்கை” என்று செல்லாவிற்கு கை கொடுக்க “ஹாய் மங்கை! நைஸ் டூ மீட் யூ” என்றாள்.”இட்ஸ் மை பிளசர்” என்ற மங்கை செல்வியையும் சுகன்யாவையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்.செல்வியிடம் மரியாதைக்காக “நல்லா இருக்கீங்களா ம்மா?” என்று கேட்டாள்.பின்பு சுகன்யாவிடம் “ஹாய்” என்று சொல்ல அவளும் பவ்யமாக “ஹாய் அக்கா” என்று அவளிடம் கை நீட்டினாள்.

கண்ணம்மா வந்து சாப்பிட அழைக்க சாப்பிடச் சென்றனர்.சாப்பிடும் பொழுது செல்வி செய்த பலகாரத்தை குயிலி அனைவருக்கும் வைத்துவிட்டு செல்லாவிடம் “இது செல்வி அம்மாவே நமக்காக ஸ்பெஷல்லா செஞ்சது” என்று சொல்ல அதை சுவைத்த செல்லா “ செம டேஸ்டா இருக்கு ம்மா..” என்றவள் மீண்டும் ஒரு லட்டை எடுத்து சுவைத்தாள்.

செல்வியும் குயிலியும் அமைதியாக உண்ண மங்கையும் செல்லாவும் பேசியபடியே உண்டனர்.சுகன்யா இவர்கள் இருவர் பேசுவதைப் பார்ப்பதும் தன் அன்னையை பார்ப்பதுமாக உண்டாள்.அவள் பார்வையின் பொருள் “நானும் அவங்க கூட பேசட்டுமா” என்பது.ஆனால் செல்வி அமைதியாக சாப்பிட  சுகன்யா கோபமுற்றாள். சுகன்யா அமைதியாக இருப்பதே பெரிய விஷயம்.அதிலும் மற்றவர்கள் பேசும்பொழுது அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பது அவளின் அகராதியிலையே இல்லாத ஒன்று.

சுகன்யா ஒரு வாய் சாப்பிடுவதும் தன் அன்னையை முறைத்துப் பார்ப்பதும் மீண்டும் சாப்பிடுவதையும் பார்த்த செல்லா “என்ன ஆச்சு சுகன்யா?ஏதாச்சு வேணுமா? ஏன் அம்மாவவே பாக்கற?” என்று கேட்டதற்கு “இல்ல க்கா..சும்மா தான்” தான் என்று மழுப்ப “ அப்புறம் ஏன் சாப்பிடாம அம்மாவவே பாக்குற?” என்று கேட்க உண்மையை உளறிவிட்டாள் சுகன்யா.

அவள் சொன்னதைக் கேட்ட செல்லா “இது உங்க வீடு மாறி நினச்சுக்கோ..உனக்கு எப்படி தோணுதோ அதே மாறி நீ இங்க இருந்துக்கலாம்…அம்மா உன்ன ஒன்னும் சொல்லமாட்டாங்க..” என்றவள் செல்வியிடம் திரும்பி “அப்படித் தான மா” என்று கேட்க அவரும் தலையசைத்தார்.

பின்பு மூவரும் அரட்டை அடித்துக்கொண்டே உண்டனர்.குயிலியும் செல்வியும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு சாப்பிட்டனர்.செல்வியின் மனதில் குயிலியைப் பற்றி மங்கை சொன்ன வார்த்தைகள் தான் ஓடிக்கொண்டிருந்தன.

வழக்கு முடிந்து வந்த அன்று இரவு செல்வி குயிலியின் குடும்பத்தைப்பற்றி மங்கையிடம் கேட்க “அவங்க அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாங்க..அவங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க..அந்தப் பொண்ணும் என்னை மாறி தான்..” என்றவள் அதற்கு மேல் செல்வி கேட்க வந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தலை வலிப்பதாகக் கூறி படுத்துக் கொண்டாள்.மங்கை தன்னிடம் அதைப் பற்றி பேச விரும்பாததைப் புரிந்து கொண்ட செல்வி அதற்குமேல் அவளிடம் அதைப் பற்றி பேசவில்லை.

“எவ்வளவு அழகான பொண்ணு..இந்த பெரிய கண்ணாடி கொண்டை எல்லாம்  போட்டு பாக்குற அப்பவே இவ்வளவு லட்சணமா அழகா இருக்கா…இன்னும் கண்ணாடி கழட்டி இந்த காலத்து புள்ளைங்க மாறி டிரஸ் பண்ணா எவ்வளவு அழகா இருப்பா..ஆனா ஏன் இந்த வயசுலையே சிரிப்ப துளைச்ச இறுகிப் போன முகத்தோட இருக்கா…” என்று யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது யாரோ தன் கையை தட்டுவதைப் போல் தோன்ற தன் எண்ணங்களில் இருந்து மீண்டவர் சுகன்யாவிடம் “என்ன டி?” என்று கேட்க “இலைய பாத்துட்டே இருக்க சாப்பிடாம…அதனால தான் ஏதாச்சு வேணுமானு  கேட்க கூப்ட” என்று சொல்ல ஒன்றுமில்லை என்று தலை அசைத்தவர் உண்ணத் தொடங்கினார்.

 

நால்வரும் சாப்பிட்டு முடித்து விட்டு ஹாலிற்கு வந்து அமர்ந்தனர்.செல்லா செல்வியிடம் “ம்மா..நீங்க செஞ்ச லட்டு ரொம்ப டேஸ்டா இருக்கு..இவ்வளவு சூப்பரான லட்டுவ நான் சாப்பிட்டதே இல்லை..” என்றவள் சொல்ல செல்வி “இதெல்லாம் பெரிய விஷயமா மா..ஒரு 10 டைம் செஞ்சினா நீயும் நல்லா செஞ்சு பழகிறலாம்…” என்றார்.

குயிலி “நாம இப்ப ஒரு இடத்துக்கு போறோம்” என்று சொல்ல “எங்கே?” என்று சுகன்யா ஆவலாய்க் கேட்க “சர்ப்ரைஸ்…அங்கே போய் தெரிஞ்சுகோ..” என்ற குயிலி அனைவரையும் கூட்டிக்கொண்டு முருகவேலுடன் அந்த இடத்திற்குச் சென்றாள்.  

  

error: Content is protected !!