KVI – 19

KVI – 19

 

கஞ்சி வித் கடைசி சந்திப்பு

ஊடலின் பிடியில், காதலர்கள்.

“சயனா, எதாவது பேசு?” – வீட்டுக்குள் வந்த சக்தி.

“?????”

“சரி, வீட்டையாவது சுத்திக்காட்டு ”

“…..”

“ஓகே, நானே பார்த்துகிறேன்.”

சயனா ஒரு சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு, சுவிங்கம் சுவைக்க ஆரம்பித்தாள்.

வரவேற்பறை, சமையலறை என்று சுற்றிக் கொண்டே வந்தான்.

ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் முன்பு கூட பேசினாளே! இப்போது என்னவாயிற்று!!

நேற்றைய ஊடல் பிரச்சனை இல்லை போல, இது வேறு ஏதோ ஒன்று என்ற முடிவுக்கு வந்தான்.

அறைகளில் அங்கங்கே நின்று, அசட்டுச் சிரிப்புகள் வேறு சிரித்து வைத்தான், காதலன்.

அலட்சியங்கள் மட்டுமே பதிலாய் தந்தாள், காதலி.

சயனா தூங்கும் அறைக்குள் நுழைய யத்தனித்தான், பின் சற்று நாகரிகம் கருதி ‘போலாமா?’ என்பது போல் சைகை செய்து வினவினான்.

எத்தனை பிரத்தியேக கேள்வியாக இருந்தாலும், மௌனம்தான் பிரதான பதிலாக இருந்தது.

‘மௌனம் சம்மதம்’ என்று சக்தி எடுத்துக் கொண்டான்.

அவ்வளவு பெரிய தவறையே மன்னித்து, மறந்தவள். இந்த விடயத்தில் ஏன் இப்படி இருக்கிறாள்?
முதலில் தன்னை மன்னித்தாளா?

இவ்வாறு எண்ணிக் கொண்டே…

சயனா அறையில், கண்களைச் சுழல விட்டான்.
பார்வையில் தெரிந்தது.

காய்ந்த நிலையில், பிறந்தநாளன்று தந்துவிட்டுச் சென்ற பூச்செண்டு…

அன்றைய இரவில், பிறந்தநாள் பரிசாகத் தந்த அட்டைப் பெட்டி… அதனிலிருந்து வெளியே எடுத்து வைக்கப் பட்டிருந்த சுவிங்கங்கள்…

தனக்காக, இத்தனைக் காதலைச் சுமக்கிறாளா? என்று எண்ணம் சக்தியைச் சன்னமாக வாட்டியது.

ஆம்!! அன்றைய இரவின் பிறந்தநாள் பரிசாக தந்தது, ஒரு அட்டைப்பெட்டி நிறைய சுவிங்கங்கள்…

சக்திக்கு நிரம்ப சந்தேகங்கள் வர ஆரம்பித்தது. ‘அப்படி என்ன கோபம்?’ நினைத்துக் கொண்டே வெளியே வந்தான்.

“என்ன ட்டேபீ? இது பெட்ரூமா? இல்ல ஜிம்மா?”

எதுவும் பதில் செல்லவில்லை! குப்பைத் தொட்டி இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள். சுவிங்கத்தைத் துப்பிவிட்டுத் திரும்பவும், அதே இடத்தில் வந்து நின்றாள்.

அடுத்ததாக இருந்தது, சயனாவின் அம்மா அறை .

“இது ட்டேபீ” என்று, அவள் அம்மாவின் அறையைக் காட்டினான்.

அந்த அறையைத் திறந்து விட்டு, சயனா, அறைக் கதவில் சாய்ந்து கொண்டாள்.

“நீயும் வா, சயனா” என்று கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

மறுக்கவில்லை சயனா.
உள்ளே நுழைந்தனர்.

அன்னையின் அறையில் நிற்கும் பொழுது, எக்கச்சக்கமாய் ஏக்கங்கள் வந்து மோதியது, சயனாவிற்கு.

சக்தி அறையைப் பார்வையிட்டான். அறையின் ஓரத்தில் வைக்கப்பட்ட அலமாரியில், சயனாவின் பரிசுப் பொருட்களை, எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.

அம்மாவின் மறைவிற்கு முந்தைய நாள் பேச்சுக்கள், நியாபகம் வந்தது, சயனாவிற்கு.

சயனாவின் சிறுவயது நியாபகங்கள் கூறும் பொருட்களைக் கண்டு, ஏனைய விடயங்கள் மறந்து போயின, சக்திக்கு.

தாயார் அனுபவித்த சோதனைகள், கடந்து வந்த வேதனைகள் கண் முன்னே வந்து கலங்கச் செய்தது.

சயனாவின் சாதனைகளைக் கண்டு, சிலாகிக்கித்து கொண்டிருந்தான், சக்தி.

சிறுவயதிகிருந்து தனக்காகவே வாழ்ந்த தாயின் நினைவுகளில் சிக்கிக்கொண்டாள், சயனா.

திரும்பிப் பார்த்தாள்.
சக்தி நின்று கொண்டிருந்தான்.
முதல் நாள், கைப்பேசி உரையாடல் நியாபகம் வந்தது, ‘பீல் பண்ணா போஃன் பண்ணுங்கன்னு’ சொன்னானே!!

மெதுவாக அவனை நோக்கி சென்று கொண்டே, “சக்தி” என்று அழைத்தாள், சயனா.

சக்தியின் முழுக்கவனமும், சயனா வாங்கிக் குமித்திருந்த பரிசுப் பொருட்கள மேல் இருந்தது.

“சக்தி”

“ஒரு நிமிஷம் சயனா. இத மட்டும் பார்த்துக்கிறேன்” – அவன் நினைப்பு, அவள், தன்னை வெளியே போகச் சொல்லுகிறாள் என்று!

சக்தியின் அருகில் வந்த சயனா, அவன் கைகளில் வைத்திருந்த பரிசுப் பொருட்களை வாங்கி, கீழே வைத்தாள்.

“ப்ச் ட்டேபீ”

“சக்தி” என்று தழுதழுக் குரலில் சொன்னவள்…
அவள் வாழும் இதயத்தில், வாககாக தலை சாய்த்துக் கொண்டாள்.
வலிமையிழந்து கீழே சரிந்து விடுவோமோ? என்ற எண்ணத்தில், சக்தியின் சட்டையைப் பற்றிக் கொண்டாள்.
அழ ஆரம்பித்தாள்.

“என்னாச்சி சயனா??” என்று பதட்டம் கொண்டு கேட்டவாறு, அவளை விளக்கி நிறுத்தப் பார்த்தான்.

“‘அது’ வேணும் சக்தி” என்று, இல்லாத தாயின் இருப்பை வேண்டி, இழந்த தாயினால் உணரும் இன்னலைக் கூறி அழுதாள்.

அவனுக்குப் புரிந்தது.
ஆறுதலாக அணைத்தான்.
இதமாக, முதுகில் தேய்த்துவிட்டான். மெதுவாக கண்ணீர் துடைத்தான்.

“ச..ய ..னா …”

உன் கண்ணில் நீர்வழிந்தால் – என்நெஞ்சில்
உதிரங் கொட்டுதடீ !!
– கண்ணீருடன் சக்தியும் சயானாவும்.

“சக்தி, ரொம்பக் கஷ்டமா இருக்கு.” – கதறல்களுக்கு இடையே கந்தலாக வந்தது வார்த்தை.

தேற்று மொழியின்று தேங்கி நின்றான்.
அவன் சொல்லியதுதான், ‘நான் இருக்கிறேன்! நீ தோள் சாய்ந்து அழுதிட’ என்று.
ஆனால், அப்படி அவள் அழும் போது, அந்தப் பாரத்தைத் தாங்க, தன் தோள்களுக்கு வலு கிடையாது என்று தெரிந்திருக்கவில்லை.

“சயனா, அழாத ட்டேபீ”

சக்தி இதயத்தை இடித்துக்கொண்டு, உள்ளே புகுந்து விடுவாள் போல! அவ்வாறு மோதி மோதி அழுதாள், சயனா.

“அம்மா நியாபகம் வந்திடுச்சா? நீ இப்படி அழுவேனு தெரியாதே ட்டேபீ”

சயனா, இப்படி அழுவாள் என்று அந்த வீட்டின் சுவர்களுக்கே தெரியாதே!!

“சொல்லு ட்டேபீ… நேத்து அம்மா நியாபகம் வந்திச்சா? அதான் அப்படி பேசினியா??”

“எப்படி சக்தி? தெரியலையே!!” என்று, சக்தியின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள், கண்ணீருடன் சயனா.

இதற்குமேல், அவன் நினைத்ததை விளக்கிச் சொல்வதெல்லாம், தேவையில்லாத வேலை.

“ப்ளீஸ் சயனா, அழாத” – சக்தியின் குரலும் உடைய ஆரம்பித்தது.

“இல்ல சக்தி. எனக்கு அது வேணும். அது மட்டும்தான் வேணும்” – சோர்ந்த குரலில் சொல்லி, அவனைச் சார்ந்து நின்று கொண்டாள்.

“ஏற்கனவே சொல்லியிருக்கேன், அம்மான்னு சொல்லு” – உடைய ஆரம்பித்தக் குரல், உரிமையுடன் கூறியது.

“எனக்கு அப்படியே பழகிருச்சி சக்தி” – கொஞ்சமே கொஞ்சம் குரலில் தெளிவு வந்ததிருந்தது.

“ஏன்?”

“சின்ன வயசிலருந்து அப்படியே கேட்டு வளந்திட்டேன் சக்தி”

“புரியல” என்று சொல்லி, லேசாக அவளைத் தள்ளி நிறுத்தினான்.

“தெருவுல விளையாடிட்டு இருக்கிறப்போ, கேட்பாங்க சக்தி … அது வேலைக்கு வந்திருச்சா??… அத வரச்சொல்லு… அது எந்த வீட்ல வேல பார்க்குது? அதைப் போய் கூட்டிட்டு வா..இப்படியே”

“ப்ப்ச்” என்று சொல்லி, இறுக கட்டிக் கொண்டான்

“இதக் கேட்டே வளந்ததால, எனக்கும் மத்தவங்ககிட்ட சொல்றப்போ, இப்படித்தான் வருது சக்தி”

“ரொம்பத் தப்பு சயனா. மாத்திக்கோ. அவ்ளோதான் சொல்ல முடியும்” என்று சொல்லி தள்ளி நிறுத்தினான்.

“சரி, நீ சொல்லிட்டேல. இனிமே சொல்லாம இருக்க ட்ரை பண்றேன்”

சக்தி நம்பாமல் பார்த்தான்.

“நம்பு சக்தி” – கண்ணீர் கோடுகளைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.

அவனும் சேர்ந்து கொண்டு, அவள் முகத்தைத் துடைத்து விட்டான். ஆனால் பார்வையில் நம்பகத்தன்மை இல்லை.

“ப்ராமிஸ் சக்திவேல்”

நம்பினானோ? இல்லையோ? ஆனால் சிரித்துக் கொண்டே, அவளைத் தன் மேல் சரித்துக் கொண்டான்.

கண்ணீரும் கவலைகளும் ஓய்வு எடுத்துக்கொண்டன.

சற்று நேரத்திற்கு பின், அணைப்பில் இருந்து, அவளை விடுவித்தான்.

“என்ன சக்தி? திடீர்னு ஹக் பண்ற, திடீர்னு தள்ளி நிக்க சொல்ற”

“குழப்பமா இருக்கு ட்டேபீ”

“என்ன குழப்பம்?” – மூக்கை உறிஞ்சிக் கொண்டே, மூளைக்கு கொண்டு போனாள், அவனின் கேள்வியை.

“அது, நேத்து ஒரு சாதாரண விஷயத்துக்கே அவ்ளோ கோபப்பட்ட இல்லையா?. ”

“ஹலோ, கோபப்பட்டது நீ… நான் இல்ல”

“சரி.. பட்… நீ மூட் அப்செட்”

“நாட் லைக் தட் ”

“அப்புறம் எதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசாம இருந்த”

‘அந்தக் குற்ற உணர்வை, எப்படிச் சொல்ல?” என யோசித்தாள்.

“சரி கோபம், மூட் அப்செட் ஒத்துக்கிறேன். உன் குழப்பம் என்னன்னு சொல்லு?”

“இதுக்கே இப்படி ரியாக்ட் பண்ணற. நான் உன்னைய ஏமாத்திருக்கேன். அதுக்கு என்மேல, உனக்கு எந்த கோபமும் இல்லையா??”

கணித்து விட்டான்! சரியாக கணித்து விட்டான்!!

“சொல்லு ட்டேபீ, இதான் என்னோட குழப்பம்”

“அது… அது… எப்படி சொல்லன்னு தெரியல சக்தி?பட், நான் சொல்லியே ஆகணும்.”

” ம்ம்ம் ”

“நீ எப்படி எடுத்துக்குவியோ தெரியல”

“வாட்எவெர், சொல்லிரு”

“ய்யா… அன்னைக்கு நைட்… உனக்கு கால்ல … நைட் …புல்லட்”

“டக்குன்னு சொல்லு”

“உன்னைய நான்தான் சூட் பண்ணேன்”

“வாட்”

“எனக்குத் தெரியாது சக்தி. அது நீதானு. பின்னாடி இருந்து வர்றதும், அமைச்சர் செட் பண்ண ஆளோன்னு நினைச்சி…”

‘இது தன் தவறு’ என்று உணர்ந்தான்.

“ஸ்பாட்க்கு வரக்கூடாது சக்தி. அது நீ செஞ்ச தப்பு. இருந்தாலும் எனக்கு, கில்ட்டியா பீல் ஆகுது”

‘நீ கில்டியா பீல் பண்ண, இதில் என்ன இருக்கு?’ என்று நினைத்தான்.

“யாருக்கும் சொல்லிராத. இது பீட்டர் அண்ணனுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். நியூஸ் அப்படித்தான் வந்திருக்கு”

‘தன்னால், இவளுக்கு எவ்வளவு கஷ்டம்’ என்று உள்ளம் அழுதது.

“சக்தி, எதுவும் சொல்லமாட்டிக்க?”

“நான் என்ன கேட்டேன்? நீ என்ன சொல்ற?”

போதும், இந்தத் துறை சார்ந்த தொல்லைகள் என்று, காதலைக் கையில் எடுத்துக் கொண்டான்!

“கரெக்டாதான சொல்றேன்”

“நான் உன்னைய ஏமாத்தினத்துக்கு, என் மேல உனக்கு கோபம் இருக்கா?? இல்லையா?”

“இருக்கே!! எக்கச்சக்கமா இருக்கு”

“அப்போ எதுக்கு என்மேல காட்டல ”

“அது, நான் ஒரு விஷயத்தை மறைக்கிறேன்னா?? நீயும் ஒரு பொய் சொல்லிருக்கயா. ஸோ, அதுக்கும் இதுக்கும் சரியாடிச்சி”

சாத்திரம் பேசுகிறாய் – கண்ணம்மா!
சாத்திரம் ஏதுக்கடீ!!

“ஸோ, நீ என்னய மன்னிக்கல”

“மே பீ”

“இதுக்கு என்னய சட்டையை பிடிச்சி, ஏன்டா இப்படிப் பண்ணேன்னு கேட்டிருக்கலாம்??”

“ஓ”

“என்ன ஓ ??”

‘திரும்பவும் ஊடல் கொள்ளப் போகிறார்களா??’ – வலியுடன் காதல் குரல்.

“சயனா, நல்லா கேட்டுக்கோ”

“ம்ம்ம்”

“உன்னால என்னய மன்னிக்க முடியலைன்னா, நோ இஸ்ஸுயு”

‘சொல்லிமுடி’ என்பது போல் பார்த்தாள், சக்தியின் ட்டேபீ.

“இந்த ரிலேஷன்ஷிப், மேரேஜ்லதான் முடியனும்னு அவசியமில்லை”

‘ஓ!! அவ்ளோ விவரமா. நீ’ என்று எண்ணிக் கொண்டாள்.

“அதேதான் சக்தி, உனக்கும்”

” ம்ம்ம் ”

“உன்னால என்னய மன்னிக்க முடியலைன்னா, நோ இஸ்ஸுயு”

‘சொல்லிடாதே சகியே’ என்பது போல் பார்த்தான், சயனாவின் கூஃபி.

“இந்த ரிலேஷன்ஷிப், மேரேஜ்லதான் முடியனும்னு அவசியமில்லை”

சொல்லியேவிட்டாள்.

இருவரும் கை கட்டிக்கொண்டு, ஒருவரை ஒருவர் ‘நமக்குள் காதல் இல்லை’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘ஏய்! ஏனிந்த முடிவு? நானல்லவா உங்களைக் காதலிக்கிறேன். என்னைக் கேளாமல் எப்படி, இப்படி ஒரு முடிவு எடுக்கலாம்?’ – கவலையுடன் காதலின் குரல்.

அறையின் வாயிலில் நின்று கொண்டு, அவர்களை எட்டிப் பார்த்தது காதல்.
இன்னும் அப்படியே நின்றார்கள்.
பாவம் !!!

அநியாயத்தால் காயங்கள் பெற்று…
நியாயத்திற்காக குற்றங்கள் புரிந்து…
காதலைக் கையாளத் தெரியாமல் நிற்கிறார்கள்.

காதலுக்கு அழுகை வந்தது.

ஒட்டிக் கொண்டவர்கள், இப்படி ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று!!

‘அன்றாடப் பயன்பாடு, இல்லாமல் போய்… அகரமுதலி அட்டவணையில் மட்டும் இருக்கும் தமிழ் சொற்களுக்கு நிகரான வலி’ – நிகழ் பொழுதில் அவர்களின் காதல் வலி.

அறையின் வெளிப்புறச் சுவரில், சாய்ந்து, வாய்மூடிக் காதல் அழ ஆரம்பித்தது.

சற்று நேர அழுகையின் பின், எட்டிப் பார்க்கலாம் …
கடிந்து கொண்டவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று!!

‘அய்யககோ!!! கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்’ – இவர்களை நம்பி காதலிக்கத்தான் முடியாது என்றால், கன்னத்தில் கை வைத்து, கவல் கூட கொள்ள முடியாது போலயே!!

என்ன பேசுகிறார்கள்?? – காதலின் செவிகள்.

“சயனா.. ”

“சொல்லு சக்தி”

“கல்யாணம் பண்ணிக்கலாமா?? ”

நீயே மனையாட்டி, நீயே யரசானி
நீயே துணை!
– சயனா சக்திவேல்.

“கண்டிப்பா சக்தி”

‘அட! நீங்கள், இன்னும் என்னையே முழுமையாகப் படிக்கவில்லையே?? அதற்குள் கல்யாணச் சான்றிதழ் எதற்கு?’ – காதலின் ஏக்க அதிர்ச்சி.

‘காதலே! அவர்கள் கல்யாணம் செய்து கொள்ளட்டும்.’ – ஒரு குரல்.

‘யார்? ஓ, கல்யாணமா?’ – காதல்.

‘ஆம்! உன்னைப் படித்து முடித்துச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால், நடக்கின்ற விஷயமா?? ‘ – கல்யாணம்.

‘ ஏன்?’ – காதல்

‘நீ! வாழ்க்கை முழுவதும், அவர்கள் படிக்க வேண்டிய பாடம் அல்லவா?’ – கல்யாணத்தின் அறிவுரைக் குரல்.

‘அதுவும் சரிதான்’ – காதல்.

“சக்தி, இனிமே இந்த விஷயத்தைப் பத்தி பேசவே கூடாது”

“கரெக்ட் சயனா. இதனால நமக்குள்ள சண்டை வரும் போல. லீவ் இட் ட்டேபீ”

‘இதையே இப்பொழுதான் உணர்கிறார்களா?’ – தலையைச் சொரிந்தபடியே காதல்.

“கஞ்சி வித் கடைசி சந்திப்பு, என்னாச்சி சக்தி??”

“ட்டேபீ, வாட் அபௌட் சன்லைட் பிரேக்பாஸ்ட் வித் சயனா”

“வாவ், சூப்பர். பட் எனக்கு சமைக்க தெரியாதே சக்தி”

“இப்பவும் கஞ்சியே போதும்”

“ஸோ கைன்ட் ஆப் யூ கூஃபி”

இருவரும் வெளியே வந்தார்கள். காதல் அவர்களுக்குள் சென்று ஒளிந்து கொண்டது.

சன்லைட் பிரேக்பாஸ்ட் வித் சயனா

“சக்தி ஒர்க்கவுட் முடிச்சுட்டு வந்தேன். குளிச்சுட்டு வரேன்”

“ம்ம்ம் ட்டேபீ, இன்னைக்காவது வேற கலர்ல ட்ரெஸ். ப்ளீஸ்.”

“ஐயோ சக்தி!! என்கிட்ட வேற கலர் இல்ல. நீ வேணா வாங்கிக்கொடு” –

சாதாரணமாக சொல்லிச் சென்றாள். ஆனால் சக்திதான், அவளிடம் சரணாகதி ஆனான்.

சாப்பிட்டு மேஜையை, சன்லைட் பிரேக்பாஸ்டிற்காக அலங்கரிக்க ஆரம்பித்தான்.

குளித்து முடித்து வெளியே வந்தாள். தன் சட்டையினை மடித்துவிட்டுக் கொண்டே, சமயலைறை நோக்கிச் சென்றாள்.

‘கஞ்சி போடப்போகிறாளா? இல்லை கபடி விளையாடப் போகிறாளா?? இத்தனை மடிப்பு வைக்கிறாள்’ – சக்தியின் மனக்குரல்.

அவனும் சமயலறைக்குள் வந்தான்.

“ஏன் டெபி?? இதத் தவிர வேற எதுவும் செய்யத் தெரியாதா?”

“அன்னைக்கு நீதான், குட் பார் கிச்சன்னு சொன்ன. இன்னைக்கு இப்படி கேட்கிற”

தன்னையும் காதல் கிரக குரலையும் ஒன்றாகப் பார்க்கிறாள் என்ற பேரின்பம், சக்திக்கு.

“கூஃபி, இனிமே இப்படி கேக்காத”

“ஓகே” என்று சமயலறையை விட்டு வெளியேறினான்.

சற்று நேரத்திற்குப் பின்…

சாப்பாட்டு மேஜையில் சயனாவும் சக்தியும் …

“சக்திகிட்ட ஒன்னு கேட்கலாமா?”

“ம்ம்ம்ம், கேளு”

“சக்திக்கு ஏன் என்னய பிடிக்கும்?”

“ம்ம்ம், நீ சொன்னதுதான்.”

“நான் என்ன சொன்னேன் சக்தி?”

“ரிப்ளை பண்றதைவிட ரியாக்ட் பண்றதுதான் பிடிக்கும்னு”

“ஓ”

“உன்னைய காஃபீ ஷாப்ல வச்சிப் பார்த்தேன்”

“அதான் பர்ஸ்ட் டைம்மா?. ”

“ம்கூம். அமைச்சர் பங்களாலதான் பர்ஸ்ட் டைம் பார்த்தேன்.”

புரியாமல் பார்த்தாள் .

“லீஸன். அமைச்சர் சைடுல இருந்து, எதாவது ஆக்சன் எடுப்பாங்கன்னு தெரியும்”

“ம்ம்ம்”

“ஸோ, அமைச்சர, போலீஸ பாலோவ் பண்ணேன்.”

“ஓ! ஓகே. ”

“அதனால, அவரோட பங்களோவ்ல உன்னைய பார்த்தேன்.”

“ஓ! அப்ப இருந்தேவா?? ”

“இல்ல. அந்த டைம்ல நோ பீலிங் பார் யூ ”

“ம்ம்ம்”

“பட், அன்னைக்கு நைட்டு நியூஸ் வேற மாதிரி வந்தது”

“ம்ம். அப்போ நான், அவங்கள சேவ் பண்ணனும்ல”

“அதுக்கப்புறமா, உன்னய பாலோவ் பண்ணேன்.”

“ஸோ, காஃபி ஷாப் வந்திருக்க. பட் அதுக்கு முன்னாடியே கொரியர் அனுப்பிட்டேல”

“பிகாஸ், மீடியால சொல்வீங்கன்னு நான் நினைக்கல. ஸோ, உங்க பிளான் என்னன்னு தெரியல. அதான் கொரியர் அனுப்பி உன்னைய ரிடேரைக்ட் பண்ண நினைச்சேன்”

“சக்தி, பிளானே உன்கிட்ட இருந்து எதாவது மெசேஜ் வரும்னுதான்” – கர்வம் கொண்டு சிரித்தாள்.

காதல் கொண்டு பார்த்தான்.

“ஓ! அந்த ரெண்டு வரியை வச்சி, நீங்க கொஞ்சம் டைவர்ட் ஆவீங்கன்னு நினைச்சேன்”

“ஓகே, காஃபி ஷாப்ல நான் அந்த வெயிட்டர் கிட்ட ரியாக்ட் பண்ணது உனக்கு பிடிச்சது. கரெக்டா? ”

“ம்ம்ம், அப்புறம் ஒன்னு சொன்னியே, ஹேக்கர் மைண்டோட கனைக்ட் ஆயிருச்சுனு”

“ம்ம்ம், ஜஸ்ட் இன்வெஸ்டிகஷன் பிலோல வந்தது. நோ பீலிங்க்ஸ் பார் யூ”

“அது ஒரு மாதிரி என்னய பாதிச்சது. ஸோ, நான் அந்தப் பேர.. ” – அவன் குரலில் ஏதோ ஒன்று இருந்தது. அது, அவளைப் பாதித்தது.

நிமிர்ந்து சக்தியைப் பார்க்கும் சக்தி, சயனாவிற்கு இல்லை.

“தென் இன்வெஸ்டிகேஷன்ல, நான் உன்னைய கண்டுபிடிச்சிட்டேன்” – சயனா.

“பட், அதுக்கு முன்னாடியே நான் உன்கிட்ட தொலைஞ்சி போய்ட்டேன் ”

‘உன்னைத் தேடி வந்து, என்னைத் தொலைத்து நின்றேன்’ – சயனா மனக் குரல்.

“அப்புறம் ஏன்?? செகண்ட் கொரியர் அனுப்பின. அதுவும் அப்படி?. ”

“தெரியனும்னு நினைச்சேன்.”

“என்ன தெரியனும்?”

“உனக்கு என் மேல பயம் இருக்கா?”

“எக்ஸ்க்யூஸ் மீ… கம் அகைன்”

“ஸாரி, கோபம் இருக்கான்னு தெரிஞ்சிக்க. ஏன்னா? நான் செஞ்ச விஷயம் அப்படி”

“நெக்ஸ்ட்”

“நீ என்னோட ஆபீஸ்ல வந்து கேட்டது … சந்திரா ஆன்ட்டிகிட்ட பேசினது… இதெல்லாம், உன் மனச எனக்குப் புரிய வச்சது. இருந்தாலும்.. ”

“ஏன்? போஃன்ல பேசிறப்போ தெரியலையா? இல்ல அத சொல்ல வேண்டாம்னு மறைக்கிறயா?”

“ஓகே அதுவும்தான்”

“அதான்… அது மட்டும்தான்”

“சரிம்மா”

“அடுத்து”

“என்ன அடுத்து?”

“அமைச்சர பழி வாங்க நினைச்சேல. பட், அதுக்கப்புறம் நீ எதுவுமே பண்ணலேயே”

“அதான், நீ பண்ண ஆரம்பிச்சியே”

“புரியல”

“உண்மை என்னன்னு தெரிஞ்சா?, அவங்கள நீ சும்மா விட மாட்டேன்னு நினைச்சேன் ”

“ஸோ”

“என்ன ஸோ? நான் நினைக்கிறத, நீ பண்ணுவன்னு நம்பினேன்”

“ம்ம்ம்”

“நீயே சொன்னேன்ல கேஸ் டிலே பண்ணப் போறேன்னு”

“ய்யா.. ய்யா”

“இட் சவுன்ட்ஸ் குட். நான் நினைச்சத, எனக்குப் பிடிச்ச பொண்ணு பண்றப்போ… அதை ரசிச்சிப் பார்க்க ஆரம்பிச்சேன்”

“இவ்வளவு தெளிவா இருக்கிறவன், எதுக்கு அன்னைக்கு நைட் வந்த? அதனால எவ்வளவு கஷ்டம். அப்போ நம்பிக்கை இல்லையா?”

“சக்திவேலா, சயனா மேல நிறைய நம்பிக்கை இருக்கு”

சயனாவின் மீது, சக்தி கொண்ட நம்பிக்கை, சயனாவைப் பெருமை கொள்ளச் செய்தது.
அந்தப் பெருமை,
அவளைக் கர்வம் கொள்ளச் செய்தது

“பெருமையா இருக்கு. இன்னைக்கு அமைச்சர் கட்சியில அவருக்கு எதிரா, அத்தனை பேரு போராட்டம் பண்றாங்க. போலீஸ் ஜெயில்ல இருக்கு. நான் நினைச்சத, நீ நடத்திக் காட்டிட்ட”

‘சக்தி, தன்னை நினைத்துப் பெருமை கொள்கிறான்’ என்று நினைக்கையில் சந்தோஷமாக இருந்தது,சயனாவிற்கு.
அந்தச் சந்தோஷம்,
அவளைக் கர்வம் கொள்ளச் செய்தது.

“உன்னோட தெளிவு, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது”

அவளது தெளிவு பிடிச்சிருக்கு என்று சொல்லி, அவளைப் பித்தம் கொள்ளச் செய்தான்.
அந்தப் பித்தம்,
அவளைக் கர்வம் கொள்ளச் செய்தது.

“இன்னும் பதில் சொல்லல சக்தி. அன்னைக்கு நைட் எதுக்கு வந்த? ”

“சக்திவேலா சயனா மேல நம்பிக்கை இருந்து, சும்மா இருக்க முடிஞ்சது. ஆனா, சயனாவோட சக்திவேலா அப்படி இருக்க முடியலையே?! என் ட்டேபீக்கு என்ன ஆகுமோன்னு நினைச்சா ..” – கலங்கினான் சக்தி.

என் கண்ணில் பாவையன்றோ? – கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ?
– சக்தியின் உயிராய் சயனா.

கலங்கிய கண்கள் …
மெல்லிய கீற்றாய் முறுவல் …
சக்தியின் காதல் முகம் …
சயனா பார்க்கிறாள்…

கர்வம் அழிந்ததடா!!
என் கர்வம் அழிந்ததடா!!!

சயனா, இமைக்க மறந்து இடைவெளி இல்லாமல், சக்தியைப் பார்த்தாள்.

சயனா முகத்தின் முன் ஒரு சொடுக்குப் போட்டான், சக்தி.

“சக்தி, இனிமே இப்படி ..”

“உன் வேலைக்கு இடைஞ்சலா வர மாட்டேன்”

“குட் டெசிஷன்.”

அமைதியானது அறை.

“சக்தி, ஏன் பர்த்டே அன்னைக்கு என்னயப் பார்க்க வரல? ”

“வந்தேன்”

“சரி, வந்த. ஏன் பார்க்காம போன?”

“ரேவ் சொன்னத கேட்டு…”

“வெயிட். நீ என்ன நினைச்சேன்னு சொல்லு?”

“நான், உனக்கு பொருத்தமா…. ” என்று சக்தி முடிக்கும் முன்பே…

“நீ மட்டும்தான்” என்றாள்.

மறுமுறை அமைதியானது அறை.

சற்று நேரம் காலை உணவாய் கஞ்சி உள்ளே சென்றது.

“சக்தி அப்புறம்… ”

“கொஞ்சம் கேசுவலா பேசுவவோமா?”

“புரியல சக்தி”

“எனக்கு ஒரு சிஐடி ஆஃபீசர்கிட்ட என்கொயரி வந்த மாதிரியே இருக்கு”

சக்தி சொன்ன விதம், நகைப்புக்கு உரியதாக இருந்தது. ஆதலால் எழுந்து நின்று, செல்லமாய் அடிக்கத் தொடங்கிவிட்டாள்.

சற்று நேரம் பொறுத்தவன், ‘போதும்’ என்பது போல், அவளது கரங்களைப் பிடித்தான்.

அதீத காதல் கொண்டு, கரங்களால் அவனது கழுத்தைச் சிறை செய்தாள்.

சக்தியும்
மெல்லமாய்
செல்லமாய்
வெல்லமாய்ப் பார்த்தான்.

இடையிடையே, ‘லவ் யூ’ களும், ‘ஆலிவ்’ களும் வந்து போயின.

“ட்டேபீ, உன்னால ஒரு சன்லைட் பிரேக்பாஸ்ட் என்கொயரி செஷனா மாறிடுச்சி”

“ஓ அதுக்கு இப்ப என்ன?”

“காம்பென்சேஷன் வேனும்”

விலகிக் கொண்டாள்.
ஏதோ விபரீதமான வேண்டுகோளாக இருக்குமோ? என்ற காதல் கணிப்பு.

“என்ன காம்பென்சேஷன்?”

“ரொமான்டிக் டான்ஸ் வித் சயனா”

“முடியாது” என்று சொல்லி, அவனை விட்டு அகன்று செல்ல யத்தனித்தாள்.

“சயனா…” – குரலே சொல்லியது, அகலாதே காதலியே! அதை இவன் அகம் அனுமதிக்காது என்று!!

“எனக்கு டான்ஸ் ஆடத் தெரியாது சக்தி.”

“அய்யோ ட்டேபீ ரொமான்டிக் டான்ஸ் ஆடறதுக்கு டான்ஸ் தெரியனும்னு அவசியம் இல்ல”

“அப்புறம்”

“ரொமான்ஸ் தெரிஞ்சா போதும்”

இது புதிதாய் இருக்கிறதே!! காதல் கிரகத்திற்கு மட்டுமான, புதிய காதல் தத்துவம் போல!!

“எனக்கு அதுவும் தெரியாது.”

“நம்பவே முடியல”

“நம்பு சக்தி. எனக்குத் தெரியாது”

“நம்புறேன் சயனா. புரூவ் பண்ணிக் காட்டு நம்புறேன்”

“எப்படி புரூவ் பண்ண?”

வாலன்டியராகச் சென்று, வம்பை வாங்குகிறாளோ?? – கல்யாணத்தின் குரல்.

“என்கூட டான்ஸ் பண்ணு”

“ம்ம்ம்”

“தெரியுதா?? தெரியலையான்னு?? நீ ஆடறதப் பார்த்துச் சொல்றேன்”

“வாவ்.!! நைஸ் ஐடியா” – இவள் தெரிந்து சொல்கிறாளா? இல்லை, தெரியாமல் சொல்கிறாளா??

“கம் ஆன் மை ட்டேபீ” என்று எழுந்து கொண்டான்.

ரொமான்டிக் டான்ஸ் வித் சயனா

எதிரெதிரே நின்ற நிலையில் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து, ஒருகணம் சிரித்துக்கொண்டனர்.

காதலியின் ஐவிரலும்,, காதலன் ஐவிரல்களுடன் சேர்ந்தது.
இடக்கரம் கொண்டு இடைதனை இழுத்தணைத்தான்.
வலக்கரம் கொண்டு வருடலாய் தோள் தொட்டு அழுத்தினாள்.

காற்று நுழையவே இடம் தராத நெருக்கம், காதல் மட்டுமே நுழைந்து தவிக்க விருப்பம்.

ஓசையில்லா பாடலுக்கு, காதலனுக்கு காதல் ஒத்துழைப்பு தந்து ஆட ஆரம்பித்தாள், காதலி.

காதலர்கள் ஆடல் அசைவுகளினால், அறை முழுவதிலும் வடிக்காத கவிதைகள் வடிந்து வழிந்தன.

இருவரின் கண்களில் தெரிந்த காதலைக் கண்டு, இரண்டு இளமை ததும்பும் மனதும், கொக்கரித்துக் கொண்டது.

அத்தனை அருகாமையில் சக்திக்காக இயங்கும், சயனாவின் இதயத்தின் சத்தம் சங்கீதமாக ஒலித்தது.

ஆனந்தம் முழுவதும் சயனா உருவில் தனது வாழ்வில் வந்தது போல் உணர்ந்தான், சக்தி.

ஆடத் தெரியாதவள், தனக்காக ஆடும் அன்பு அதியசத்தை காண்கையில் ரகசியமாய் புதுவித மகிழ்ச்சி கிடைத்தது, சக்திக்கு.

மிகுந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் காதலன் விழி ஓரத்தில் ஒரு துளி விழிநீர்!

“சக்தி போதும்” என்று சொல்லி, ஒரு அன்பு மேலோங்கிய அணைப்பைத் தந்து விட்டு, விலகி நின்று, ஆடுவதை நிறுத்திக் கொண்டாள்.

சக்திக்கு நிறுத்த மனமில்லை.
ஓடிவிட்டான்…
கைப்பேசியில் ஓர் ஆங்கிலப் பாடல்!

Perfect by Ed Sheeran…
பாடல் ஆரம்பமானது…

♥️♥️♥️

I found a love for me
Daring just dive right in!!

மிதக்கும் வாடைகாற்றுப் போல் சக்தி ஆடுகையில், மீள வழியில்லாமல், மீண்டெழ முடியாமல் காதல் கடலில் மூழ்கிப் போனாள், சயனா.

கட்டியமுதே! கண்ணம்மா!

♥️♥️♥️

Oh! I never knew you were the someone waiting for me!!

தூரத்தில் ஆடியவன், தொடும் தூரம் வந்து, தொடாமல் செல்கையில், தித்திக்கும் தொல்லையாக இருந்தது, சயனாவிற்கு.

ஊறுசுவையே! கண்ணம்மா!!

♥️♥️♥️

And in your eyes you’re holding mine!

நடனத்தின் ஊடே மந்திரம் போன்ற மையல் பார்வைகள் கொண்டு, சயனாவின் மனமென்னும் மைதானத்தில் காதல் விளையாட்டு ஆடிவந்தான், சக்தி.

நல்ல உயிரே, கண்ணம்மா!!

♥️♥️♥️

Well, I found a woman, stronger than
Anyone I know!!

மனைக்கிழத்தி ஆகப் போகிறவள் பார்க்கையில், மந்தாட்சம் கொண்டு ஓடி வந்து, அவளை மார்பிறுக தழுவிக் கொண்டான். மனம் மகிழ்ந்து போனாள், சயனா.

வாழ்வு நிலையே! கண்ணம்மா!

♥️♥️♥️

Darling just hold my hand,
Be my girl I’ll be your man
I see my future in your eyes!!

பொங்கி வரும் தீஞ்சுவை தரும் தித்திப்பினைப் போல் ஆடுகின்ற சக்தியைப் பார்த்து, பிரியம் மிகுந்து போனாள், சயனா.

ஆசைமதுவே, கனியே, அள்ளு சுவையே! கண்ணம்மா!!

♥️♥️♥️

And she looks perfect
I don’t deserve this!!

காதலி கண் இமைக்க மறந்து நிற்கையில், ஆடியபடி அருகில் வந்து ‘காதலடி நீ எனக்கு! சகியே சயனா’ என்பதுபோல் மண்டியிட்டு நின்றான், சக்தி.

அவனே காதலன்!
காதலன்தான் சக்தி!!
அவனே காதல்!
காதல்தான் சக்தி!!

முழுவதுமாக அறுபது நொடிகள், முகங்கள் பார்த்துக் கொண்டு, காதல் பரிமாறிக் கொண்டனர்.

சயனா, சக்தி எழுந்து கொள்ள கரம் நீட்டினாள்.
கரம் பிடித்து எழுந்த காதலன், ஆரத் தழுவிக்கொண்டான், காதலியை.

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!

நின்னைச் சரணடைந்தேன்!! 

சயனாவிற்கான காதலுடன் சக்தி.

சற்று நேரம் காதல் இளைப்பாறியது.

‘எப்படி இருக்கு??’ என்று, தனது இருகைகளையும் விரித்து நின்றபடி கேட்டான்.

“இம்ப்ரெஸ்ஸட்” – ஒற்றை வார்த்தையில், ஒத்தடம் தந்தாள், ஆடிய கால்களின் வலிகளுக்கு.

“ஹே, என்ன அவ்ளோதானா?”

“ஓ” என்று சொன்னவள், அவனை இழுத்து அணைத்துக் கொண்டு “ஐ அம் ப்ளாட். லவ் யூ மை மேன்” என்று சொல்லி விடுவித்தாள், சயனா.

“போதாது சயனா”

“வேறென்ன வேணும் சக்தி.”

பேசிக்கொண்டே, காலை உணவுக் கிண்ணங்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

வழி மறித்து வந்து நின்றான். சற்றும், இதை எதிர்பாரதவள் பின்னோக்கிச் சென்று ஒரு அதிர்ச்சிப் பார்வைப் பார்த்தாள்.

பின், சலிப்புடன் ‘என்ன வேணும்?’ என்பது போல் சயனாவின் பார்வை.

“வாட் அபௌட் கபுல் கோல்ஸ்?”

‘ஏய், சக்தி! காதல் கேடி!! கஞ்சியில் ஆரம்பித்தவன், கபுள் கோல்ஸில் வந்து நிற்கிறாயே?’ – கல்யாணத்தின் குரல்.

“என்னடா? இத்தனை நாள் இந்தப் பையன் பேசினானே, இன்னும் ஒரு தடவகூட இதப்பத்தி பேசலையேன்னு நினைச்சேன். ”

“பார்த்தியா ட்டேபீ, நீ நினைச்ச… நான் பேசிட்டேன்…”

“ப்ச்” என்று ஓசை மட்டும் செய்து, அவனிடமிருந்து ஒதுங்கிக் கொண்டு, சமயலறைக்குள் சென்றாள்.

ஒதுங்கிச் சென்றவள், எப்படி ஒத்துக் கொள்ள வைக்க என்று எண்ணம் கொண்டு, சயனாவின் பின்னேயே சென்றான், சக்தி.

Couple Goals

கிண்ணங்களை வைத்துவிட்டு, திரும்பியவளின் கன்னங்களை, இருகைகளாலும் ஏந்திக்கொண்டான்.

அவன் நெருக்கமோ, தொடுகையோ புதிதல்ல, அவளுக்கு. இருந்தும் புதிதாய் உணர்ந்தாள். புறக்கணிக்க நினைக்காதப் புதிராய் நின்றாள்.

“சயனா” – உதிர்த்தது பெயரல்ல, உன்மத்தமாய் உணர்ந்த காதல்.

“சக்தி ” – உதட்டிலிருந்து வந்த குரல் அல்ல இது! உயிரிலிருந்து வந்த குரல்!!

எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவது ஆற்றகிலேன்
இப்பொழுது, நின்னைமுத்த மிட்டுக் களியுறுவேன்.
– காதலின் முதல் முத்தம்… சக்தியின் இதழ் முத்தம்.

மெதுவாக… சற்றே மெத்தனமாக, காதலி முகத்தை தன் முகமருகில் கொண்டு வந்து நிறுத்தினான்.

இருவரின் இதழ்களும், இன்னும் ஒரு நொடி முன்னேறி வந்தால், இடித்துக் கொள்ளும் என்ற தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சமையலறைச் சிம்னியின், சிறிய விளக்கொளியில் சிக்கிக் கொண்ட சிட்டுகளாக, சயனவும் சக்தியும்.

கரை புரண்டு வரும் கடல் அலைகள் போல சக்தியின் கண்களில் காதல்….
அதில், கால் நனைத்து விளையாட ஆசைப்படும் சிறுபிள்ளையாக, சயனாவின் கண்கள்…

“கன்சிடர் பண்றியா ட்டேபீ?”

“நான் உன்னைக் காதலிக்கிறேன் சக்திவேல்.”

“ஆலிவ் கூப்பி”

“எனக்கு ஒன்னு கேட்கனும், சக்தி”

“ம்ம்ம் கேளு”

“கனலை விழுங்கும் இரும்புன்னா என்ன சக்தி?”

“உனக்குத் தெரியாதா சயனா?”

மறுப்பாக தலையசைக்க முடியாத பிடியில் இருத்தி வைக்கப்பட்டிருந்த தலையை, தன் வலிமை கொண்டு பிடி தளர்த்தி, ‘தெரியாது’ என்று ஆட்டினாள்.

“இந்தக் கனலை, இந்த இரும்பு விழுங்கிருச்சி… அதோட கடினத் தன்மையால இல்ல… காதலால”

சயனாவின் இதழ் அருகே சென்று, இதயத்திற்குக் கேட்க வேண்டும் என்பதற்காகப் பேசினான், சக்தி.

இருவரது விழிகளும், அடுத்தவரின் இதழ்கள் இருக்கின்ற இடத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன.

“நீ லிப்ஸ்டிக் போடுவியா, சயனா?”

“இல்லையே சக்தி, ஏன் கேட்கிற?”

சக்தி புரிந்து சிரித்தான்.
சயனா புரியாமல் விழித்தாள்.

‘உரியவளின் உதடுகளில் விருந்து உண்பவனுக்கு, உதட்டுச் சாயம் என்னும் ஊறுகாய் எதற்கு?’ – வெட்கக் குரலில் கல்யாணம்.

அந்த ஒரு நொடி தூரத்தைக் கடந்து விட்டார்கள். இருவரது இதழ்களும் இடித்துக்கொண்டன.

அது எப்படியிருந்தது என்றால்…

காதல் கிரகத்தின் இரண்டு கண்டங்கள், காதலில் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தன.

அமைதியான முறையில் அழகாக ஆரம்பமானது…
முதலில்,
நேற்றய ஊடலுக்கான வருத்தம் தெரிவிக்கப்பட்டது …
நிகழும் நாழிகைக்கான மகிழ்ச்சிகள் பரிமாற்றம் நடந்தது…
நாளைய பொழுதுகளின் காதல்கள் உணர வைக்கப்பட்டது…

காதலில் முதல் முத்தமே அழகானது! அதிலும் முதல் முத்தம் இதழ் முத்தம் என்கையில், இரட்டிப்பு அழகாக இருந்தது!!

கைப்பேசியில் பேசிக் கொண்டு, கண்முன்னே பேசாமல் நின்று… தன் காதலியை ஏமாற்றி, ஏக்க காதல் கொள்ளச் செய்ததிற்காக, எக்கச்சக்க மன்னிப்பு கடிதங்கள் எழுதினான், காதலன்!!

பூங்காற்றும் புயலுக்குச் சமமாய் சுழட்டி அடிக்கும்!! புயலும் பூங்காற்றுப் போல மென்மை கொடுக்கும், என்று அவளை உணர வைத்தான்.

ஏக்கர் கணக்கில் சயனாவின் மனதில் விதைக்கப்பட்ட, காதல் ஏக்க விதை, ஓரே நாளில் வளர்ந்து விருட்சமாக வளர்ந்திட, காதலை வாரி வழங்கினான்.

பிரமாண்ட இதழ் முத்தத்தால், தன் ஆழ்மனதின் பிரியங்களை எல்லாம், பிரியமானவளுக்கு எடுத்து உரைத்தான்.

இதழ்களில் மட்டும் கவிபாடும், சக்தி என்னும் ப்ரத்யேக கவிஞன் உருவாகிக் கொண்டிருந்ததான்.

இதுவரையும் இதயத் திருடன் என்று உணரப்பட்டவன், இன்று! இந்த நொடி ‘இதழ் திருடன்’ என்று, அவளை உணரவைத்தான்.

எக்கணமும் சயனாவிற்கு…

இதழ்கள் திட்டித் தீர்க்கும், இதயம் தித்திக்கும். ஆனால் இன்றோ இதழ்கள் தித்தித்தது. இதயம் திக் திக் என்று சக்தி பெயரைச் சொல்லி துடித்தது.

பேச்சுவார்த்தை நீள்ள்ள்ள்கிறது…

ஒரு தரமான வாய் பூட்டிடும் முத்தம்…

♥️♥️♥️♥️♥️முற்றும் ♥️♥️♥️♥️♥️

 

error: Content is protected !!