KVK-10

அவளுக்காக அவள் அறை வாயிலில் காத்திருந்தான். அவள் பைஜாமாவும் டிஷர்டுமாகத் தன் இரவு உடையுடனே வெளியே வந்தாள். அவள் அதை உணரவில்லை.அவளை அந்தக் கோலத்தில் முதல் முதலில் பார்க்கிறான். அந்த இரவு நேரத்தில் அங்கங்கே எரிந்துகொண்டிருந்த சிறு விளக்குகளின் வெளிச்சத்தில் அவள் அழகு மேலும் கூடியது. அவளின் வரிவடிவத்தை அந்த உடை எடுத்துக்காட்ட அவளை மேலிருந்து கீழ் வரை கண்களாலே அளந்தான்.

அந்த இருட்டில் அவனை சரியாகப் பார்க்க முடியாமல் அவள் கண்ணைக் கசக்க , அதற்கு மேலும் பொருக்க முடியாமல் அவள் கையைப் பிடித்து தன் அருகே இழுத்தான். அவனின் அந்தச் செய்கையால் அவளின் தூக்கம் முழுதும் தொலைந்தே போக, மிகவும் அருகாமையில் அவனைக் கண்டு விக்கித்து நின்றாள்.
அவள் இடையைப் பற்றி சுற்றி வளைத்து அவள் முதுகுப் புறமாக அனைத்து நின்றான். அவள் உடலெங்கும் ஒரு மின்சாரம் பாய அதிலிருந்து மீள முடியாமல் திணறினாள்.
அவளின் விரிந்த கூந்தலை ஒதுக்கி அன்று அவன் பார்த்த அந்தக் கழுத்தில் தன் முகம் புதைத்தான்.
அவன் மீசையும் தாடியும் அவளுக்குக் குறுகுறுப்பை ஏற்படுத்த நிற்க முடியாமல் நெளிந்தாள். அவளை அசைய விடாமல் தன் கைகளால் அவள் இடையை இறுகப் பற்றியிருந்தான். அவனோ அவளிடமிருந்து தன்னை மீட்க முடியாமல் அவள் தோள்களில் முகத்தை உரச , அவனின் வெப்பத்தை உணர்ந்து வேகமாக அவன் கையை விலக்கி தன்னை விடுவித்துக் கொண்டாள்.
இருவரும் நீண்ட மூச்செடுத்து தங்களை சமன்படுத்திக்கொண்டனர்.
“சாரி சகி! உன்னைப் பக்கத்துல வெச்சுகிட்டு என்னைக் கண்ட்ரோல் பண்ண என்னாலையே முடியல, வெரி சாரி டா. ஹர்ட் பண்ணிட்டேனா ?” மிகவும் வருந்திக் கேட்க,
“அதெல்லாம் இல்லை சித், பரவால்ல”
வெட்கப் பட்டு அவள் சொன்னாள்.
அவள் அருகில் வந்து அவள் கன்னங்களை மிகவும் மெதுவாகத் தன் கையில் ஏந்தினான். அவள் கண்களை மூடி அதை உணர , ” இந்தக் கன்னம் இப்படி சிவந்தா நான் எப்படி சும்மா இருக்கறது சகி ” அவள் புன்னகைக்க அதை மேலும் ரசித்தான்.
“நான் ஒரு வழியாகறத்துக்குள்ள என்கூட வா ” அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்றான். இருவரும் மொட்டை மாடிக்குச் சென்றனர். அந்த இடத்தைப் பார்த்ததும் பிரமிப்பில் ஆழ்ந்தாள் சக்தி.
பௌர்ணமி நிலவு , அந்த வீட்டைச் சுற்றி அமைந்த தென்னை மர கீற்றுகள் அந்த மாடியின் விளிம்புகளில் படர சில்லென்ற காற்றை பரப்பியது. அந்த இடத்தில் ஒரு வட்ட வடிவத்தில் ஆனா வெள்ளை நிற சோஃபா போடப்பட்டிருந்தது. அது ஒரு மெல்லிய துணியால் நாற்புறமும் தோரணம் போலக் கட்டியிருந்தது. அவன் பூக்கடையில் வாங்கிய பூக்களால் அந்த சோஃபாவில் ஒரு சிவப்பு இதயம்போல அமைத்திருந்தான். சுற்றிலும் கண்ணாடி குடுவையில் ஏற்றி வைத்த விளக்குகள் ஒளிர்விட அந்த இடம் ஒரு மாயாஜால உலகின் தோற்றத்தைத் தந்தது.
அவள் கனவுலகில் இருப்பதைப் போல உணர்ந்தாள். சித்து அவளை நோக்கி கையை நீட்ட அவள் தன் கைகளைக் கொடுத்தாள். அவளை அழைத்துக் கொண்டு அந்த சோஃபாவில் அமரவைத்தான். சரியாக மணி பண்ணிரண்டை தொட , அவள் முன் ஒரு காலை மடக்கி மண்டியிட்டு “ஹாப்பி பெர்த்டே மை ஸ்வீட் லவ் ” என்று ஒரு சிறிய பெட்டியைத் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து கண்களில் காதலுடன் அவளிடம் நீட்டினான்.

“தேங்க் யூ சோ மச் சித் இப்படியொரு அழகான சர்பரைஸ நான் எதிர்பார்க்கல” அவளின் கண்களும் அவனுக்குச் சளைக்காமல் உள்ளத்தின் காதலை சொல்ல , அவனிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.
அதைப் பிரித்ததும் அதில் அழகிய இரண்டு பிளாட்டினம் மோதிரம் மின்னியது. அதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அதைக் கையில் எடுத்துப் பார்க்க அதன் உட்பகுதியில் ஏதோ இருப்பதை கவனித்தாள். சற்று உற்றுப்பார்க்க அதில் அவன் சட்டையில் அன்று இருந்ததைப் போல ‘எஸ் எஸ் ‘ என்று இரு இதயங்களுக்கு நடுவில் எழுதப்பட்டிருந்தது.
அவள் கண்கள் ஆனந்ததில் விரிய , அதில் ஒன்றை எடுத்தவன், அவள் கையைக் கேட்க, மறுக்காமல் அவனிடம் தந்தாள். அதில் மோதிரத்தை அணிவித்தான். அவன் கையை இப்போது நீட்ட சிறிதும் யோசிக்காமல் அவனுக்கு அணிவித்தாள்.
இருவரும் தங்கள் கைகளைக் கோர்த்து தங்கள் காதலின் அடையாளமான அந்த மோதிரத்தை ரசித்தனர். பேச வார்த்தைகளின்றி தவித்தாள் சக்தி.
அந்த ரம்மியமான இடமும், மெல்லிய காற்றும் காற்றில் கலந்து வந்த பூக்களின் நறுமணமும் , தன் மனம் கவர்ந்தவனின் அருகாமையும் அவளைத் திக்குமுக்காடச் செய்தது. அவன் மார்பில் தன்னையும் மறந்து சாய்ந்தாள். ” ஐ லவ் யூ சித்” உணர்ச்சிப் பெருக்கில் சொல்ல , அவளைக் குனிந்து நோக்கினான்.

“ஒன்ஸ் மோர் பேபி ” என்று சிரித்துக்கொண்டே கேட்க , வெட்கம் தாங்காமல் மீண்டும் அவன் சட்டையைப் பற்றி அவன் மார்பிலேயே அழுந்திக்கொண்டாள். பூவினும் மென்மையாக அவளை அணைத்தான்.
அந்த சோஃபாவில் இருவரும் அமர்ந்தனர். “உனக்காக என்னுடைய இன்னொரு பரிசு”. அவன் பாட ஆரம்பித்தான்.

” மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது”

அவன் காதலை அந்தப் பாடல் வெளிப்படுத்த அவள் மனமுருகிப்போனாள். அவன் குரல் அவள் மனதின் ஆழத்தில் பதிந்தது. கண்களில் நீர் துளிர்க்க நின்றாள். அதைக் கண்டவன் ,
“என்னடா ஆச்சு ?” எனப் பதறினான்.
“ஒண்ணுமில்ல சித், நம்ம காதல் சீக்கிரம் வளர்ந்த மாதிரி தோணிச்சு ஆனா இது நமக்குள்ள பல ஜென்மங்களா இருக்கற உறவுன்னு நான் ஃபீல் பண்றேன். உங்களுக்காகவே இத்தனை நாள் காத்திருந்தேன்னு தோணுது. யூ ஆர் மை டெஸ்டினி சித்” மனதில் உள்ளதை வார்த்தைகளாக வெளிப்படுத்தினாள்.
அவளின் வார்த்தைகளால் தூண்டப்பட்டு “உன்னை எப்பொழுதும் பிரியாத வரம் வேண்டும் சகி. நீ எனக்கு மட்டுமே சொந்தமான என்னோட சகி ” என்றவன் எதையும் யோசிக்காமல் அவள் இதழ்களை நாடினான். அவளும் தன்னை மறந்து அவனது முத்தத்தில் ஐக்கியமானாள். இருவரும் தங்களுக்குள்ள காதலை அந்த முத்தத்தில் உணர்ந்துகொண்டிருந்தனர்.
சுந்தரும் சுஜாவும் மறுநாள் காலை எழுந்து ஹாலுக்கு வந்தனர். அங்கிருந்த புத்தகம் ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தான் சுந்தர். சுஜா வருவதைக் கண்டு “சுஜா, சக்தி எழுந்தாச்சா ? கூப்பிடு அவளுக்கு விஷ் பண்ணனும். ”
வித்தியாசமாகச் சுந்தரைப் பார்த்தாள் அவள். “அவ ரூம் ல இல்லையே !”
சற்று பதட்டம் அடைந்த சுந்தர், “என்ன சொல்ற, நைட் சித்து தனியா விஷ் பண்ணனும்ன்னு சொன்னதினால தான தூங்க போனோம். பண்ணிரண்டு மணிக்கு விஷ் பண்ண போனத நான் பாத்தேனே! அப்புறம் அவன் வந்து படுப்பான்னு நினைச்சு நான் தூங்கிட்டேன். என்ன ஆச்சு அவங்களுக்கு?!”
கலக்கம் அடைந்தாள் சுஜா. ” கடவுளே அவங்க அம்மா கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வேற போன் பண்ணுவாங்களே விஷ் பண்ண. இப்போ என்ன செய்யறது.”
“ஹே ! பதறாத , அவங்க எங்கன்னு கண்டுபுடிக்கணும். கண்டிப்பா இங்க தான் இருப்பாங்க. வா தேடலாம்.” நிதானமாகச் சுந்தர் கூற இருவரும் வீடு முழுதும் தேடினர். கடைசியில் மாடியின் கதவு வழியாக வெளிச்சம் வரக் கண்டு மாடிக்கு விரைந்தனர்.
பார்த்ததும் இருவரும் வாயடைத்துப் போய் நின்றனர். காரணம், அவர்கள் இருவரும் அங்கேயே உறங்கிப் போயிருந்தனர்.
அந்த சோஃபாவில் சக்தியும் , அந்த சோஃபாவில் தலை வைத்து கீழ அமர்ந்தபடி சித்துவும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். பூக்கள் எல்லாம் சிதறிக்கிடக்க அவர்கள் ஒரு மலர்ப்போரினை நடத்தியிருக்கிரார்கள் என்பது தெரிந்தது. தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்வையை பரிமாறிக்கொண்டனர் சுஜாவும் சுந்தரும். வெட்கப் பட்டு முகத்தை மூடிக்கொண்டு சுந்தரின் முதுகில் சாய்ந்தாள் சுஜா. “நம்மளையே வெட்கப்பட வெச்சுட்டானே!” என்று சுந்தர் அவர்களை எழுப்ப அருகில் இருந்த டேங்க் நீரை அங்கிருந்த பூன்தொட்டிகளுக்கு நீர் ஊற்றும் சல்லடை வைத்த வாளியில் எடுத்துகொண்டு இருவர் மீதும் அள்ளித்தெளித்தான்.

பதறிக்கொண்டு இருவரும் எழுந்துநிற்க, தாங்கள் அங்கேயே உறங்கியது அவர்களுக்குப் புரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வழிய நின்றனர். அவர்களின் நிலைமையைப் பார்த்து சுந்தரும் சுஜாவும் விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்கள் சிரிப்பில் கடுப்பான சித்து அதே நீரை எடுத்து அவர்கள் மேலும் தெளிக்க , மாட்டிக்கொள்ளாமல் சுஜா ஒடினாள். அவளைப் பிடித்து நடுவிலே தள்ள, தண்ணீர் வாளியை சக்தி வாங்கி அவள் மேலும் கொட்டினாள். இப்படியே நால்வரும் நீரில் நனைந்து சிறிது நேரம் விளையாடி களைத்தனர். பின் சுஜா சக்தியைக் கட்டிக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாள். சுந்தரும் கை குலுக்கி வாழ்த்த அனைவரும் கீழே இறங்கிச் சென்று உடைகளை மாற்றச் சென்றனர். சித்து சக்தியை அழைத்தான். அவன் கையில் ஒரு கவர் இருக்க அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“இன்னிக்கு நீ இந்த ட்ரெஸ் தான் போடணும் . குளிச்சிட்டு இதைப் போட்டுட்டு வா ” அவளிடம் அந்தக் கவரை நீட்டினான். அதை ஆவலோடு பிரித்துப் பார்த்தாள். அதில் ஒரு அழகிய பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் ஸாஃப்ட் சில்க் புடவை இருந்தது. அதைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தாள் சக்தி. ஆனால் உடனே முகம் வாடியது. அதை உடனே கவனித்தவன்
“என்ன ஆச்சு சகி ? உனக்குப் புடவை பிடிக்காதா ? இல்லை புடவையே கட்டத் தெரியாதா ? நான் வேணும்ன்னா ஹெல்ப் பண்ணட்டா ?” அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கேட்க
தன் இதழைச் சுழித்து முறைத்தவள், ” அதெல்லாம் எனக்குத் தெரியும், எங்க அம்மா சொல்லிக்குடுத்திருக்காங்க .”
ஏமாற்றமாக அவளைப் பார்த்தவன், “அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு ?”
“இதுக்கு ப்ளவுஸ் இல்லையே சித்! எப்படி கட்டிக்க முடியும்?” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்க
“அடடா! மிசஸ். சித்தார்த்துக்கு எவ்வளவு அறிவு ?” அவள் தலையைப் பிடித்து ஆட்ட,
அதைக் கேட்டு அவள் முறைத்தாள்.
“எல்லாம் ரெடியா இருக்கு , போ! இப்படி ஈரத்தோட இருந்தா காய்ச்சல் வரும்.” சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றான்.

‘எப்படி அளவு தெரியாமல் ரெடி பண்ண முடியும் ?’ குழம்பியபடியே உள்ளே சென்றாள்.
அனைவரும் ஹாலில் அவளுக்காகக் காத்திருக்க, சித்து அப்போது தான் சமயல் அறையில் பூரி மசாலாவும் சேமியா பாயசமும் செய்து அதை டேபிளில் எடுத்து வைத்தான்.
கதைவைத் திறந்து அவள் வெளியே வர , சுஜா அவளைப் பார்த்து “வாவ் ” என்று சொல்லி அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“பெர்பெக்ட்டா இருக்கு உனக்கு. நான் தான் உனக்குத் தெரியாம உன்னோட அளவ சித்து அண்ணாக்கு குடுத்தேன். பட் டிசைன்ஸ் எல்லாம் அவர் செலக்ஷன் ” என்று சொல்லி பின் சக்திக்கு ஒரு அழகிய கை கடிகாரத்தை பரிசாக அளித்தாள்.
சுந்தரும் அவளுக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக அளித்தான். அதைப் பார்த்து சுஜா , “ப்ரோஃபசர்ன்னு ப்ரூவ் பண்றீங்களா?” கிண்டல் செய்தாள். அவள் தலையில் கொட்டி தன் பக்கம் அவளை இழுக்க,
அப்போது தான் சித்து இமை கொட்டாமல் தன்னையே பார்ப்பதைக் கண்டாள் சக்தி. அவன் கண்களில் தோன்றிய காதல் அவளைச் செம்மையுறச் செய்தது. அவளைத் தலை முதல் கால்வரை அங்குலம் அங்குலமாக அளந்துகொண்டிருந்தான். அழகாகத் தலை வாரி அவன் அவளுக்காக வாங்கி வைத்திருந்த மல்லிகை சரத்தைச் சூடியிருந்தாள். கண்களில் மையிட்டு , நெற்றியில் வட்டப் பொட்டிட்டு அந்தப் பட்டு புடவையில் பேரேழிலாகக் காட்சி தந்தாள்.
அவனுக்கு அந்த அழகை காணக் காணத் தெவிட்டவில்லை. அவன் அருகில் சென்று நின்றாள்.
“தேங்க்ஸ் ஃபார் எவரிதிங் சித்” அவனுக்கு மட்டும் கேட்குமாறு அவள் சொல்ல ,
கண்களைச் சிமிட்டி அவளுக்காகச் செய்த பாயசத்தை ஊட்டினான்.
சுஜாவும் சுந்தரும் அதைக் கண்டு மனமகிழ்ந்தனர். மதியமும் அவனே உணவு சமைத்து அவளுக்குப் பரிமாறினான். மாலையில் கேக்கை வெட்டி அவள் பிறந்தநாளை மிகவும் குதூகலமாகக் கழித்தனர். அன்று முழுதும் அவளை மிகவும் ஆனந்தமாக வைத்திருந்தான்.
அவள் வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்ததும் இருவரது மனமும் கனத்தது. அவள் முழுக்க முழுக்க அவனது அருகாமையில் இருந்துவிட்டு இப்பொழுது தன் வீட்டிற்கு செல்வதற்குக் கூட மனம் வரவில்லை. அந்த அளவு அவனுடன் ஒன்றியிருந்தாள். அவனுக்கும் அவளை அனுப்பி வைக்க மனம் இல்லை.
“சகி நீ என்கூடவே இருக்கற காலம் எப்போ வரும். உன்னை அனுப்ப எனக்கு மனசு வரல டா. நீ என்னோட சகி என்கூட தான் இருக்கனும்.” சொல்லும்போதே அவன் குரல் தழுதழுக்க, அவள் அருகில் யாரும் இல்லை என்பதை உணர்ந்து அவன் தோளில் சாய்ந்தாள். அவளை இறுக்கி அணைத்து தன்னுள் அடக்கிக் கொண்டான்.
“சகி” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழைத்தான்.
“ம்ம்ம்” அவன் அணைப்பை கண்மூடி ரசித்தவாறே கேட்டாள்.

“உங்க அப்பா கிட்ட சீக்கிரம் பேசனும்ன்னு நினைக்கறேன். நீ என்ன நினைக்கற?” அவளைக் குனிந்து நோக்க ,
” நான் உங்க வீட்டுக்கு உங்க மனைவியா வரப்போற நாளுக்காக ஒவ்வொரு நிமிஷமும் ஏங்கிகிட்டு இருக்கேன் சித்.” அவனை மேலும் அனைத்துக் கூற
அவள் கூறிய மனைவி என்ற சொல் அவனை மிகவும் இனிமையாக வாட்டியது.
அவளது உச்சியில் முத்தமிட்டு அவளை வழியனுப்பினான்.

**************************************************************

அன்பரசு எவ்வளவோ தடுத்தும் யுவாராஜ் கேட்பதாக இல்லை. அவனின் ஒரே நோக்கம் மனோகர் வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு இது தான் சரியான நேரமாக நினைத்தான்.
“மாமா இப்போ தான ஊர்ல திருவிழா நடக்கப் போகுது, அம்மாவும் நீங்களும் ஒவ்வொரு வருஷமும் போகமுடியலன்னு வருத்தப் படுவீங்க. அதான் இந்த வருஷம் போயிட்டு வரலாம்.” யுவா கண்டிப்புடன் சொல்ல
அவனைத் தனியாக அழைத்து சென்றார். “யுவா, இப்போ நீ திடீர்ன்னு அங்க போகலாம்ன்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்குன்னு தெரியும். அந்த மனோகர் குடும்பம் எப்படியோ போகட்டும். உங்க அம்மா நினைச்சிருந்தா அன்னிக்கே அவனோட இந்த வாழ்க்கைல நுழைஞ்சிருக்க முடியும். அவளுக்கு அது புடிக்கல. அடுத்தவங்க சந்தோஷத்துல நாம எப்பவும் குறுக்க வரக் கூடாது. அவங்க நல்லா இருக்கட்டும் விடு. பிசினஸ்ல கூட நீ அவங்களுக்கு குடுக்கற கஷ்டத்தை நிறுத்திக்கோ. இப்போ ஊருக்குப் போய் அவங்கள சங்கடப் படுத்த வேண்டாம்” பொறுமையாக எடுத்துச் சொன்னார்.
“மாமா! என்னோட நிலமைய நினைச்சு பாருங்க. சின்ன வயசுல என்னை ஏமாத்துநீங்க. இப்போவும் ஏமாற நான் தயாரா இல்லை. அவரே செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டு அவங்க ஊர் முன்னாடியும் குடும்பம் முன்னாடியும் என் அம்மாவுக்கு ஒரு பதில் சொல்லட்டும். அதுக்கப்றம் அவங்க யாரும் எனக்கு வேண்டாம். அவங்க இருக்கற திசை பக்கம் கூட நான் போகமாட்டேன்.” அவரைப் பார்க்காமலே திரும்பி நின்று பேசினான்.
“உங்க அம்மாவ நினைச்சு பாரு யுவா. எத்தனை முறை அவள சங்கடப் பட வைக்கறது.” வருத்தத்துடன் அவர் சொல்ல,
சிறிது நேரம் யோசனைக்குப் பிறகு , “சரி நீங்க யாரும் வர வேண்டாம். நானே போறேன்” சொல்லிவிட்டு நிற்காமல் கிளம்பிச் சென்றான்.
அன்பரசுவிற்கும் அதுவும் சரி என்றே பட்டது. அவனாகப் போய் தன் தாய்க்கு ஒரு வழி செய்தால் அவருக்கும் நிம்மதி தான்.

**

ஆராதனாவிற்கு அவன் சொன்ன படி வேலையைக் கொடுத்து அவளைக் களைப்படைய வைத்துக்கொண்டிருந்தான். அவளுக்கு உணவு உண்ணும் நேரத்தைத் தவிர சிறிது நேரம் கூட ஓய்வு இல்லை. அவளைத் தன் அறையிலிருந்து கொண்டே சி சி டிவி கேமரா மூலமாக அவளையும் அவள் செய்யும் வேலையையும் பார்த்துக் கொண்டிருப்பான். எல்லாவற்றையும் அவள் சமாளிப்பதால் அவளை மேலும் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
அவளைக் கேமெராவில் பார்த்துக்கொண்டே இண்டர்காமில் அழைத்தான். ஆராதனா அப்போதுதான் அவன் தந்த புதிய கான்ட்ராக்ட் பேப்பர் வொர்க்கை முடித்துவிட்டு தனக்குப் பிடித்த ஒரு உடையை வரைந்து கொண்டிருந்தாள்.. அவன் அழைப்பது தெரிந்ததும், சத்தமாகவே அவனைத் திட்டினாள்.
“வரேன் டா வரேன். உனக்கு நான் கொஞ்சம் ப்ரீ யா இருந்தா பொறுக்காதே. ராட்ஷசன் ” அந்த டெலிபோனைப் பார்த்து கை நீட்டித் திட்ட , யுவா அவளின் செய்கையைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.
தன்னை சரி செய்து கொண்டு ரிசீவரை எடுத்துப் பேசினாள்.
குரலில் கடுமையைக் கொண்டு வந்து “ஐ நீட் அ காஃபி அண்ட் நீ ஏதோ வரைஞ்சிட்டு இருந்தியே அந்தப் பேப்பர் ரெண்டும் கொண்டு வா ” என்றான்.
“எஸ் சார்” அழகு காட்டிக்கொண்டே எழுந்து சென்றாள்.’நான் வரஞ்சத எப்போ பார்த்தான். பின் அங்கிருந்த கேமராவைப் பார்த்தாள். ‘ தன்னையே நொந்து கொண்டாள்’.
‘இன்னும் என்னவெல்லாம் பார்த்தானோ! கடவுளே! அந்தச் சிடுமூஞ்சி இன்னிக்கு என்னைத் திட்டாம காப்பாத்து. நான் உனக்குக் கோயிலுக்கு வந்து விளக்கு போடறேன்.’ மனதில் வேண்டுதலை வைத்துக் கொண்டே அவன் அறைக்குச் சென்றாள்.
அவள் வரும்வரை அவன் அறையில் உள்ள கண்ணடித் திரை வழியாகச் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள். காஃபியையும் அவள் வரைந்த பேப்பர் இரண்டும் தட்டில் வைத்து நீட்ட அவன் முதலில் அவள் வரைந்த்ததைப் பார்த்தான். ஆச்சரியத்தில் அவன் புருவங்கள் உயர்ந்தது.
மிகவும் நேர்த்தியாக ஒரு நீளமான மேற்கத்திய ஆடையை அவள் வரைந்த்திருந்தாள்.
“உனக்கு இதெல்லாம் கூடத் தெரியுமா” அவளைப் பார்க்காமல் காஃபியை எடுத்துப் பருகியபடி கேட்டான்.
“எனக்கு டிசைனிங்ல இன்டரஸ்ட் உண்டு. அப்பப்ப இது மாதிரி வரைவேன். ” அவனைப் பார்த்து சொல்ல
“குட். அப்புறம் நமக்கு நாளைக்கு க்ளைன்ட் ரிவியு முடிஞ்சதும் ரெண்டு நாள் சிங்கப்பூர் ட்ரிப் இருக்கு.நாளைக்கு நைட் கிளம்பனும். சோ பீ ரெடி.”
“என்ன ட்ரிப் சார்?” கண்கள் பளிச்சிட கேட்டாள்.
“நியூ அட் (Ad) சைன் பண்ணிட்டு ஒரு சின்ன மீட்டிங் முடிக்கணும். அதுக்கு டாகுமென்ட்ஸ் முடிக்க சொன்னேனே! முடிக்கலையா!?” அவளைக் கேள்வியாப் பார்த்தான்,
“அது எப்பவோ ரெடி. ட்ரிப்க்கு யார் எல்லாம் வராங்க சார் ” அவள் எதற்காகக் கேட்கிறாள் என்பதை புரிந்தது கொண்டவன் மனதிற்குள் சிரித்துவிட்டு
“கதிர் வரல. அவனுக்கு இங்க முக்கியமான வேலை இருக்கு . இந்த ட்ரிப்ல நான் கேக்கற பைஃல்ஸ் அண்ட் டிடைல்ஸ் ரொம்ப முக்கியம்… ”
“எவரிதிங் ஐ வில் டேக்கேர்.” அவன் சொல்லிமுடிக்கும் முன்பே அவள் இடையில் புகுந்து சொல்ல, அவளை நோக்கி ஒரு பார்வையை வீசிவிட்டு
“அப்புறம் ஃப்ளைட் டிக்கெட்ஸ் … ”
“இன்னும் ஆஃப் அன் ஹவர் ல உங்க டேபிள்க்கு வரும் சார்” அவனை முடிக்கவிடாமல் அவள் சொல்லிமுடித்தாள். சற்றே எரிச்சலுற்றான் யுவா.
அவன் தன்னை விரட்ட முடியாத அளவு அவள் நடந்துகொண்டதால் விளைந்த எரிச்சல் என்பதை புரிந்து கொண்டாள். உள்ளுக்குள் குதித்து ஆட வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
“நீ உன்னோட டேப்லெட்ஸ் எடுத்துக்க மறந்துடாத” அவளை நக்கல் பார்வை பார்த்துக் கூற
அவள் அவன் சொல்வதை குழப்பத்துடன் பார்த்தாள். “என்னோட டேப்லெட்ஸா!?” புரியாமல் அவனிடமே கேட்க
“ம்ம்ம்..! அப்படி எதுவும் இல்லையா..? இப்படி தொடர்ந்து பேசிகிட்டே இருக்க ஸ்பெஷலா டேப்லெட்ஸ் யூஸ்பண்றியோன்னு நெனச்சேன்.” அவன் ஒற்றை புருவத்தை ஏற்றிப் பார்க்க
அவன் இத்தனை நேரம் தான் பதில் பேசியதற்குத் தன்னை மடக்கி விட்டான் என்பதை உணர்ந்தாள்.
பின்பு எதையும் கண்டுகொள்ளதவள் போல் தோளைக் குலுக்கிவிட்டு சென்றாள். அதைக் கண்டு லேசாகப் புன்னகைத்தவன், உடனே கதிருக்குப் போன் செய்தான்.
“கதிர்! என்ன ஆச்சு?”
“சக்சஸ் யுவா! நம்ம வொர்க்க செலக்ட் செஞ்சுட்டாங்க அண்ட் சேம் டைம் மனோ அட்ஸ் கான்ட்ராக்ட் கான்செல் பண்ணிடாங்க, ரெண்டு கம்பெனி க்ளைன்ட்ஸ் கிட்டயும் சைன் பண்ணி வாங்கிட்டேன்” கதிர் சொல்ல
வெற்றிப் புன்னைகையுடன் களிப்பில் இருந்தான் யுவராஜ்.

*********

சித்து அங்கே நடப்பது ஒன்றும் புரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.