KVK-11

KVK-11

சொந்த ஊரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது மனோகருக்கு. எப்பொழுதும் கம்பெனியைப் பற்றி சிந்திப்பவர் இப்பொழுது தான் தன் பேத்தியுடன் நேரத்தைச் செலவு செய்தார்.
அந்தக் குழந்தையைக் கூட்டிக்கொண்டு தன் வயல், பண்ணை வீடு, தோட்டம் என உலாவச் சென்றார். அவர் சென்ற அந்த இடங்கள் அவர் மனதை பிசைந்தது. ஒரு கட்டத்தில் அவர் அதற்கு மேல் நடக்க முடியாமல் தலை சுற்ற கீழே அமர்ந்தது விட்டார். அவர் அசைவற்றுக் கிடப்பதைக் கண்ட குழந்தை அழ ஆரம்பித்தாள்.
“தாத்தா , தாத்தா ” தேம்பி அழ
அங்கு வேலை செய்பவர்கள் ஓடி வந்தனர். ஒருவர் நீர் எடுத்து வந்து அவர் முகத்தில் தெளித்து எழுப்பினார்கள்.
“ஐயா , கண்னை திறந்து பாருங்க ” அவர் கன்னத்தைத் தட்டி உலுக்க
நினைவு வந்து அவர் எழுந்தார்.
“என்ன ஆச்சுங்க ஐயா ?! , இந்தத் தண்ணிய குடிங்க ” கையில் இருந்த செம்பை நீட்ட
அதை வாங்கிப் பருகினார். தன்னை நிதானப் படுத்திக்கொண்டு மெதுவாகப் பேசினார்.
“ஒன்னும் இல்லைப்பா லேசா தலை சுத்திடுச்சு. ரொம்ப நன்றி தண்ணி கொண்டு வந்ததுக்கு” அவர்களை நன்றியுடன் பார்த்தார்.
“பரவால்லங்க, வீட்டுக்குப் போறீங்களா , வண்டி கொண்டு வர சொல்லட்டாங்க ” அவரை கை கொடுத்து எழுப்பிவிட்டுக் கொண்டே கேட்டார் அங்கு வேலை செய்தவர்.
வேண்டாம் என்று சொல்ல வந்தவர், அப்போது தான் வர்ஷினி அழுதுகொண்டிருப்பதை கவனித்தார்.
அவளை அருகில் அழைத்து, “தாத்தாக்கு ஒன்னும் இல்லடா , தூக்கம் வந்துச்சா அதான் தூங்கிட்டேன் ” சமாதானம் செய்ய,
“நிஜமாவா தாத்தா ?!” அழுகையை நிறுத்திவிட்டு அவரையே பார்த்தாள் சிறியவள்.
“சரி வா வீட்டுக்குப் போகலாமா ?” அவளைத் தூக்கிக் கொண்டார்.
அங்கிருந்தவர்களிடம் நன்றி கூறிவிட்டு வீட்டிற்கு நடந்தார்.
தன்னுடைய மனதை அழுத்தும் விஷயமே மயக்கம் வரக் காரணம் என்றுணர்ந்தார். இத்தனை நாள் வேலை பார்த்துக்கொண்டு தன்னை வேறுபல விஷயங்களில் மூழ்கடித்துக் கொண்டதனால் அவரால் சமாளிக்க முடிந்தது. ஆனால் இனி அப்படி முடியாது. மனதில் உள்ள பாரத்தை இறக்கிவைத்தே ஆக வேண்டும்.

பார்வதிக்கு இதைப் பற்றி என்றோ தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் தன் அத்தைக்கு செய்து கொடுத்த சத்தியம் அவரைத் தடுத்தது.
தன்னையே நொந்துகொண்டு வீடு வந்து சேர்ந்தார். வர்ஷினி உடனே ஓடிச் சென்று பாட்டியிடமும் அம்மாவிடமும் நடந்ததைக் கூற, பார்வதி பதட்டமானார்.
மனோகரிடம் விசாரிக்க , அவரோ ஒன்றுமில்லை என்று தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
மனம் தாளாமல் உடனே அந்த ஊர் மருத்துவரை வீட்டிற்கே அழைத்து வந்தான் ராஜேஷ். அனைவரும் அவரது அறையில் சென்று மருத்துவர் சொல்லப் போவதை எதிர்ப்பார்த்தனர். அவரை பரிசோதித்து பின்
“உங்களுக்கு ஸ்ட்ரெஸ் தான் மயக்கத்தை கொடுத்திருக்கு. எதைப் பத்தியும் யோசிச்சு மனசில போட்டுக் குழப்பிக்காதீங்க. நல்லா வாய்விட்டு சிரிச்சு

சந்தோஷமா இருங்க ” சொல்லிவிட்டு ராஜேஷிடம் மருந்தை எழுதிக் கொடுத்தார்.
அனைவரும் அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு வெளியே சென்றனர். ராஜேஷ் மருந்தை வங்கி வந்து பார்வதியிடம் கொடுத்தான்.
“உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” தயங்கி நின்றான்.
“சொல்லுப்பா” புரியாமல் அவர் பார்க்க
“மாமா மனசுல ஏதோ நினைச்சு ரொம்ப கஷ்டப் படறாரு, அடிக்கடி தனியா வெளில போறாரு. உங்களுக்கு அத பத்தி எதாவது தெரியுமா?”
சற்று யோசித்து பிறகு அவர் பேசினார்.

“எனக்கும் என்ன விஷயம்ன்னு தெரியாது. ஆனா எங்களுக்குக் கல்யாணம் ஆன நாள்ல இருந்து அவர் இப்படித்தான் இருக்காரு. என் மாமா இறந்த பிறகு தான் நாங்க வாழ்க்கைய ஆரம்பிச்சோம்” ஏதோ யோசனையுடன் அவர் முடிக்க
“நீங்க அவர் கிட்ட அதைப் பற்றி எதுவும் கேட்டதில்லையா?” அவரை யோசனையுடன் பார்த்தான்.
“இல்லை. அவருக்கா சொல்லனும்ன்னு தோணுச்சுனா அவரே சொல்லிருப்பாரே!” கம்மிய குரலில் சொல்ல
“நீங்க அது என்னன்னு தெரிஞ்சுகனும்ன்னு நான் இதைச் சொல்லல அத்தை, அவரோட பாரத்தை குறைக்கவாவது நீங்க கேக்கலாமே?” அக்கறையுடன் சொன்னான்.
” நான் கேட்டு அவருக்கு அது மேலும் வேதனையை உண்டாக்கக் கூடாது. அவர் கடைசி வரை சொல்லாமல் இருந்தாலும் நான் அவரைத் தப்பா நினைக்கமாட்டேன். ” , சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இவை அனைத்தையும் தன்னுடைய அறையிலிருந்து மனம் கனக்க கேட்டுக்கொண்டிருந்த மனோகர். அவர் பார்வதியுடன் வாழ்ந்த வாழ்க்கை போலி அல்ல. இருப்பினும் இந்த ஒரு விஷயம் அவரை உறுத்தியது. தன்னை இவ்வளவு நம்பும் பார்வதிக்கு அந்த உண்மையைச் சொல்லிவிடுவது தான் அவளுக்குச் செய்யும் நன்றியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார்.
அந்த நேரம் மனோகரின் பேசிக்கு அழைத்து பலனில்லாமல் போகவே பார்வதிக்கு அழைத்தான் சித்து.
“என்னம்மா ஆச்சு? அப்பாவுக்குப் போன் பண்ணா எடுக்கல அதன் உங்களுக்குப் பண்றேன் “ அவன் கவலையுடன் கேட்க,
பதிலுக்கு அவரும்,  “ அப்பாவுக்குக் கொஞ்சம் தலை சுற்றல் சித்து, அதான் தூங்கறாரு. நீ அவருக்கு இப்போ பண்ணாத, என்ன விஷயம் சொல்லு நான் அவர் கிட்ட அப்பறமா சொல்லிடறேன்.”

அவன் பயந்துவிடக் கூடாது என்று மேலோட்டமாகவே சொன்னார்.
அவர் கூறிய செய்தி அவனை வாட்ட இந்த நிலையில் அவரைக் கம்பெனி விஷயங்களில் ஈடுபடுத்த விரும்பாமல்
“ஒன்னும் முக்கியமான விஷயம் இல்லம்மா , நீங்க அப்பாவ பாத்துக்கோங்க, எதாவது முடியலன்னா எனக்கும் போன் பண்ணுங்க நான் உடனே கிளம்பி வரேன்.” சொல்லிவிட்டு வைத்தான்.

ராஜேஷும் மைதிலியும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதனால் கம்பெனி பிரச்சனயில் தன் மூளையை செலுத்தினான்.
ஒரே நேரத்தில் இரண்டு கான்ட்ராக்ட் தன் கையை விட்டுப் போக காரணம் என்ன என்று யோசித்தான்.

உடனே அந்த ஆபீசில் வேலை செய்பவரிடம் தகவல் கேட்க நினைத்து அவரைத் தொடர்பு கொள்ள, அவர்களோ “உங்களைவிட விரைவாகவும் குறைந்த செலவிலும் அந்த விளம்பரங்களை முடித்துத்தர ‘மலர் அட்ஸ்’ சொல்லியதால் அவர்களுக்கு அது சென்று விட்டது” என்று இருவரும் கூறினர்.
மலர் அட்ஸ் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரே மாதத்தில் நிறைய அட்ஸ் செய்து அசத்திக் கொண்டிருப்பவர்கள்.
அதுவும் மனோகர் அன்று அந்த யுவராஜ் பற்றி சொல்லிய போது அலட்ச்சியமாக இருந்துவிட்டான். ‘ஆனால் அவன் எப்படி தன் கம்பெனி கான்ட்ராக்டில் கை வைக்க முடியும்.’
மேலும் குழப்பம் அதிகரிக்க தன் மேனேஜரை அழைத்தான்.
அவர் ஒரு வாரம் விடுமுறை கேட்டது அப்போது தான் நினைவிற்கு வந்தது. என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.

மற்றவர்களை அழைத்து விவரம் கேட்டான். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றே கூறினார்கள். ‘ நமக்கும் அந்த மலர் கம்பெனிக்கும் எந்தச் சமந்தமும் இல்லை ஆனால் அவர்களுக்கு நம் கான்ட்ராக்ட் விஷயம் எப்படி தெரிந்தது’ மூளையை கசக்கினான்.
தன்னுடைய முதல் ப்ராஜெக்டிலிருந்தே அவன் சந்தித்த பல தடைகளைப் பற்றி யோசித்தான். அவனுடைய மேனேஜெர் எந்த வகையிலும் இதில் அக்கரை காட்டாததும் குறித்துக்கொண்டான்.
அவருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று நினைத்தான். அனைவரும் சென்றபிறகு அவரின் கம்ப்யூட்டரை சோதித்தான்.
அதில் அவன் எதிர்ப்பார்த்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. மனம் நொந்தான். அதை மூடிவைக்கும் சமயம் ஒரு மின் அஞ்சல் அவன் கண்ணில் பட்டது.
அதில் ஒரு வார்த்தையில் “அனுப்பிவிட்டேன் “ என்று ஆங்கிலத்தில் இருந்தது. அது கதிர் என்பவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
தன்னிடம் வேலை செய்பவர்களில் யாரும் கதிர் என்ற பெயரில்  யாரும்  இல்லை என்பது அவனுக்குத் தெரியும். இது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அவர் டிலீட் செய்திருந்த மெயில்களை மறுபடியும் எடுத்தான். ஐ டி கம்பெனியில் வேலை செய்தது இப்பொழுது கை கொடுத்தது.
உடனே சுந்தருக்கு போன் செய்தான்.
“சொல்லு டா வீட்டுக்கு வந்துட்டியா?” சுந்தர் கேட்க
“ எனக்கு ஒரு இன்பர்மேஷன் வேணும். நான் ஒரு மெயில் ஐடியோட ஐ பி அட்ரஸ் சொல்றேன் அது எங்கிருந்து வந்தது , யாரோடதுன்னு கண்டுபுடிக்கணும்” சித்து சீரியசாகச் சொல்ல
“சொல்லு நண்பா , கண்டுபுடிச்சிடலாம்”
அந்த விவரத்தைச் சித்து சொல்ல, அவன் அரை மணி நேரத்தில் திரும்பவும் அழைத்தான்.

“இது கதிர் ன்னு ஒருத்தரோட மெயில் ஐ டி சித்து, மலர் அட்ஸ் கம்பெனி ஐ டியோட சர்வர்ல இருந்து தான் அந்த மெயில் வந்திருக்கு.
அதிர்ந்தான் சித்து. உடனே மற்ற மெயில்களையும் பார்த்தான். அதில் யுவராஜ் என்ற பெயரில் மெயில்கள் காணப்பட்டன.

அவனிடம் இவர் எப்படி விலைபோனார் என்பது புரியாத புதிராக இருந்தது. தன் தந்தைக்கு விசுவாசமாக வேலை செய்தவர் ஏன் இவ்வாறு செய்தார் என்பதே அவன் கேள்வி.
‘அந்த யுவராஜ் எதற்காக இப்படி செய்கிறான்? மற்றவர்களிடமும் அவன் இப்படித்தான் நடந்து கொள்கிறானா இல்லை நம் கம்பெனியை மட்டும் இவ்வாறு செய்கிறானா?!’ யோசிக்க யோசிக்க அவனுக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை.
இப்போதே நேருக்கு நேர் கேட்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அந்தக் கம்பனியின் நம்பரை தேடி போன் செய்தான் , யாரும் எடுக்கவில்லை.
அப்போதுதான் நேரம் இரவு பத்தாகிவிட்டதைப் பார்த்தான்.
எப்படியும் இதுபற்றி நாளைப் பேசியே ஆக வேண்டும் என்று நினைத்து கிளம்பினான்.
இரவு நீண்ட நேரம் யோசித்த பிறகே உறங்கினான். மறுநாள் காத்திருந்து அவனிடம் பேச நினைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் ஊரில் இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.

 

யுவராஜும் ஆராதனாவும் விமானத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். நான்கு  மணி நேரம் அவன் அருகில் இருக்கப்போகிறோம் என்பதே அவளுக்குள் புத்துணர்வை தர, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.
அதை அவனும் உணர்ந்தே இருந்தான். ஆனாலும் நாளை நடைபெற இருந்த மீட்டிங் பற்றி தன்னுடைய லேப்டாபில் எதையோ படித்துக்கொண்டு அதில் தன்னை மூழ்கவைத்திருந்தான். அதைக் கன்னடவள், ‘இங்கயும் வேலை தானா. ? ‘ சலித்துக்கொண்டு ஜன்னல் வழியே வெளியே பார்க்க,
அவள் மனதைப் படித்தவன் போன்று,
“நான் உன்னை வேலை வாங்கலையே ! நான் தான பாக்கறேன். “ லேப்டாபிலிருந்து கண்ணை எடுக்காமல் அவன் கூற,
சட்டெனத் திரும்பினால். பேசியது அவன் தானா இல்லை தனக்குத் தான் பிரம்மையா என்பதைப் போலப் பார்த்தாள்.

அப்போதுதான் அவன் படிப்பது என்னவென்று பார்க்க, அது நேற்று அவள் முழுதும் படித்து, அவனுக்கு முக்கிய குறிப்புகளை மட்டும் அனுப்பிய டாகுமென்ட். ‘இவனே இதைப் படிகும்போது, தன்னிடம் எதற்காகத் தர வேண்டும்.
எல்லாம் வேலை வாங்க தானே! நீ எவ்வளவு தான் எனக்கு வேலை கொடுத்தாலும் நான் அசர மாட்டேன் யுவா!’ முறைத்துக்கொண்டே அவனைப் பார்க்க
“நீ இத நேத்து படிச்சுட்டு எனக்கு அனுப்பினாலும் , என்மேல இருக்கற கோவத்துல ஒன்னு ரெண்டு பாயிண்ட்ஸ் மிஸ் பண்ணிட்டா என்ன பண்றது. அதுக்கு தான் ஒரு தடவை நானே செக் பண்ணிகிட்டேன். “ அவளையே பார்க்க
அவள் பேசாமல் இருந்தாள். அவனே தொடர்ந்தான்.
“ போன் கிட்டலாம் திட்ற ! இப்போ தான் நேர்லயே இருக்கேனே, இப்போ முகத்துக்கு நேர சொல்லு, ஏன் பயமா ?” லேப்டாபை மூடிவிட்டு தன இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கேட்டான்.

“எனக்கு என்ன பயம்! ஆமா ! நீ வேணும்ன்னே என்னை வேலை வாங்கறன்னு தோனுச்சு அதான் சொன்னேன். நான் நான் எனக்குள்ள பொலம்பிக்கிட்டேன். அதெல்லாம் நீ கேட்க முடியாது “, மிடுக்காகச சொல்லிவிட்டு அவளும் சாய்ந்து அமர,
“ வேனும்ன்னு வேலை வாங்கறேன்னு தெரியுதில்ல , அப்புறம் என்ன ரிசைன் பண்ணிட்டு போ “ கண்ணை மூடிக்கொண்டே சொன்னான்.
“ அவ்வளவு சீக்கிரம் இந்தத் தடவை நான் விட்டுக்கொடுக்கமாட்டேன் “, அவனைப் பார்க்காமல் தன் இருக்கையில் இருந்த அந்தச் சிறிய தொலைகாட்சியை இயக்கியபடியே சொல்ல
“ம்ம்ம் .. பார்ப்போம் “,  மெல்லிதாகச் சிரித்தான் அவள் துணிச்சலைக் கண்டு.
“ என்கிட்ட சாலேன்ஜ் பண்ணாத யுவா. ஏற்கனவே ஒரு சாலேன்ஜ்ல நான் ஜெயிச்சது உனக்கு ஞாபகம் இல்லையா” இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டாள்.

கண்ணை மூடிக்கொண்டே சிறிது நேரம் அவன் இருக்க, அவன் உறங்கிவிட்டான் என நினைத்து தானும் கண்ணை மூடிக்கொண்டாள்.
உண்மையில் அவன் தூங்கவில்லை. அவள் காலேஜில் செய்த அந்தச் செயலைத் தான் தூசி தட்டி நினைவுபடுத்திக்கொண்டிருந்தான்.

அன்று…..

ஆராதனா அவனை இம்ப்ரெஸ் செய்ய பல முயற்சிகள் செய்தும் அவன் அசைந்தபாடில்லை.
ஒரு நாள் யுவாவும் கதிரும் பாடம் சம்மந்தமாக எதையோ எழுத்திக்கொண்டிருக்க, ஆராதனா அங்கே வந்தாள்.
நிமிர்ந்து அவளைப் பார்த்து விட்டு மீண்டும் தன் வேலையைக் கவனித்தான். எரிச்சலுற்ற ஆராதனா அவன் பேனாவை கையிலிருந்து பிடுங்கினாள்.
“என்ன பண்ற, பைத்தியமா உனக்கு ?! “ கோபமாக அவளைப் பார்க்க, 
“ஆமா! உன் மேல பைத்தியம் தான். இன்னும் என்ன பண்ணா உனக்கு என்னைப் பிடிக்கும்.?” அவளும் நிறைய முயற்சிகள் செய்து தோற்றுப் போன விரக்தியில் கத்த,
தன் நெற்றியை அழுந்தப் பிடித்துக் கொண்டவன், கதிரைப் பார்க்க, அவன் அவளைப் பாவமாகப் பார்த்தான்.

அவனும் அவளைப் பற்றி யோசி என்று பல முறை கூறியிருந்தான். யுவராஜ் யோசனை செய்து சொல்லவதாகக் கூறியிருந்தான். அதற்குள் ஆராதனா இப்படி வந்து நிற்க அவனுக்குச் சற்று எரிச்சலாக இருந்தது.

“ இப்போ உனக்கு என்ன வேணும்? ”
“ ஏன் இவ்ளோ நாள் கரடியா கத்தினது உனக்குத் தெரியலையா ?” பல்லைக் கடித்துக்கொண்டே கேட்க , 
அவள் இப்படி சொன்னதே அவனுக்கு மேலும் கோபத்தைக் கிளறியது.

“ போய் காலேஜ் ல எல்லாருக்கும் கேக்கற மாதிரி சொல்லு அப்புறம் பார்க்கலாம், நீ வா கதிர். “,  ஆத்திரத்தில் அவன்  சொல்லிவிட்டு செல்ல
“யுவா ! இட்ஸ் எ சாலேன்ஜ்!  நாளைக்கு பாரு நான் என்ன பண்றேன்னு…….” ,  அவள் உரக்க அவன் காதுகளில் விழும்படி கத்திக் கொண்டே சென்றாள்.
மறுநாள் கல்லூரிக்கு வந்த யுவராஜ், தன்னை அனைவரும் வித்தியாசமாகப் பார்ப்பதாக உணர்ந்தான். ஆங்காங்கே மாணவர்கள் அவனைப் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். எதையும் கண்டுகொள்ளாமல் கதிரைக் காணச் சென்றான்.
கதிர் அவனுக்காகவே காத்திருந்தான்.
“என்ன டா ஆச்சு ? ஏன் எல்லாரும் என்னையே பார்க்கறாங்க? “ குழப்பமாகக் கேட்டான்.
“நீ வர விழியில ஸ்டூடென்ஸ் நோட்டீஸ் போர்டு பாக்கலையா?” சற்று தீவிரமான முக பாவனையுடன் கதிர் அவனைப் பார்க்க
அங்கிருந்து ஓடினான். ஆபீஸ் ரூம் வாசலில் இருந்த நோட்டீஸ் போர்டில் அனைவரும் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.

எல்லோரையும் விலக்கிவிட்டு அங்கிருந்த நோட்டிசைப் படித்தான். அதில் எழுதியிருந்த விஷயம் அவனை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையச் செய்தது.
‘ இந்தக் கல்லூரியில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு அறிவிப்பு.
நம் கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவன் யுவராஜை நான் காதலிக்கிறேன். நான் எந்த அளவு அவனைக் காதலிக்கிறேன் என்பதற்கு இந்த நோட்டீஸ் ஒரு சான்று.

அவனுக்காக எதையும் செய்ய தயங்கமாட்டேன், அதைக் காட்ட இது ஒரு சந்தர்ப்பம்.
புதிதாக வந்திருக்கும் மாணவிகள் யாரும் அவன் அழகைப் பார்த்து அப்பிளிகேஷன் போட வேண்டாம்
என்றும், அப்படியே அப்ரோச் செய்தாலும் அவனிடம் வேலைக்கு ஆகாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
யுவா சாலேன்ஜ்ல நான் ஜெயிச்சுட்டேன். வெயிடிங் ஃபார் யுவர் ரெஸ்பான்ஸ்.
இப்படிக்கு, ஆராதனா.’
அவள் இப்படி செய்யத் துணிவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
அவன் பின்னோடு கதிர் வந்திருந்தான். அதைப் படித்துவிட்டு அவன் அந்தக் கூட்டத்திலிரிந்து வெளியே வர கதிர் அவனை அழைத்துக் கொண்டு ஒரு தனியிடத்திற்குசச் சென்றான்.

அவன் பேசாமல் நிற்கவும்,  கதிர் அவனிடம்,
“என்ன யோசிக்கற யுவா? அவ ரொம்ப தைரியமான பொண்ணு. உனக்கு அப்படிப் பட்ட பொண்ணு தான் மேட்ச் ஆகும். இவ்ளோ தைரியம் எந்தப் பொண்ணுக்காவது வருமான்னு கொஞ்சம் தின்ங் பண்ணு.”
“எனக்கும் அவளோட தைரியம் புடிச்சிருக்கு கதிர். இதை, நாம அவள முதல் நாள் பார்த்தப்பவே நான் உங்கிட்ட சொன்னேன்.

ஆனா எனக்கு அந்த மாதிரி லவ் ஃபீலிங் எல்லாம் வரல.ஆனா இன்னிக்கு அவ பண்ணதப் பாத்து ஐ அம் இம்ப்ரஸ்ட்!” யுவா எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல, 
“அப்பறம் என்ன யோசனை, அவளைக் கூபிட்டு சொல்லு” உற்சாகமானான் கதிர்.
அதற்குள் ஒரு மாணவன் ஓடி வந்து ஆராதனாவை ப்ரின்சிபல் கூப்பிட்டு வார்னிங் கொடுத்ததாகச் சொல்ல, இருவரும் அங்கே விரைந்தனர்.
அவள் எந்த உணர்வையும் காட்டாமல் நின்றுக்கொண்டிருந்தாள். கதிர் அவள் அருகே சென்று அவளிடம் “ என்ன ஆயிற்று ? ” என்று கேட்க
“ நான் டிஸ்மிஸ் எதிர்ப்பார்த்தேன், வார்னிங்கோட விட்டுட்டாங்க “,  தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னாள்.
அவள் பேசுவதைப் பார்த்து ‘ என்னப் பொண்ணு இவ! ‘ என்று மனதில் நினைத்தான் யுவராஜ்.
“நாம நாளைக்குப் பேசுவோம் “ அவளைப் பார்க்காமலே சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
மனதில் மகிழ்ச்சியுடன் கதிரைப் பார்க்க, அவன் கட்டை விரலை உயர்த்திக் காட்டிச் சிரித்தான்.
மறுநாள் யுவா வரவும் இல்லை. அவள் காதலை ஏற்கவுமில்லை.

இன்று…

அதன் பின் நடந்தவற்றை நினைத்துப் பார்க்க முடியாதவனாய் கண்களைத் திறந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் அவனருகில் இருந்த ஆராதனாவைப் பார்க்க ‘ இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து பின் அந்த இடம் தெளிந்த வானத்துடன் அமைதியாக இருப்பைதப் போன்று உணர்ந்தான்.’
அவளிடம் தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதை அவன் மனம் உணரத் தவறவில்லை. இருப்பினும் தன்னுடைய பிரச்சனைகள் முடியும் வரை அதை வெளிக்காட்டவும் அவன் விரும்பவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் மிகப் பிரமாண்டமான சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அவர்களை வரவேற்றது.

ஹோடெல்லில் இரண்டு அறைகள் புக் செய்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்த அறைகள் கொடுக்கப்பட்டது. இருவரும் செல்கையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எப்பொழுதும் வளவளத்துக் கொண்டே வரும் ஆராதனா இன்று ஏனோ அமைதி காத்தாள்.
அவனுக்கு அவளிடம் சிறிதளவாவது இருக்கும் அன்பை இந்த ஊரிலிருந்து செல்வதற்குள் வெளிக்கொண்டு வர வேண்டும் என்று மனதினில் யோசித்துக் கொண்டிருந்தாள்.
எதையோ சிந்தித்துக்கொண்டே அவள் அறையைத் தாண்டி அவன் அறைவரை வந்துவிட்டாள். அவன் திடீரென நிற்கவும் அவளும் நின்றாள்.
“என்னோட ரூம்ல ஸ்டே பண்ணப் போறியா ?” அவளைப் பார்த்து ஏளனமாகக் கேட்க, 
அப்போது தான் தன் அறையைத் தாண்டி வந்ததை கவனித்தாள்.
“உன்னோட ரூம்ல எனக்கு இப்போதிக்கு எந்த வேலையும் இல்லை. ஹ்ம்ம் . “  ‘இப்போதிக்கு ‘ என்பதில் அழுத்தம் கொடுத்துச் சொல்லிவிட்டு ,   அவன் பதில் சொல்வதற்கு முன் அங்கிருந்து தன அறைக்குச் சென்றாள்.

‘ இப்போதிக்கு வேலை இல்லையாம். இவளுக்கு மட்டும் எவ்வளவு துணிச்சல் ‘ மனதில் நினைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான்.
அன்று மதியமே மீட்டிங் என்று முடிவு செய்திருந்தார்கள். அதனால் சிறிது நேரம் கூட ஓய்வின்றி உடனே கிளம்பினான். அவள் கிளம்பி விட்டாளா என்று அறிய அவள் தங்கி இருந்த அறைக்கு டெலிபோன் செய்தான். அவளிடமிருந்து பதில் இல்லாததால் அவனே சென்று அறைக்கதவைத் தட்ட, அப்போது தான் அவள் குளித்துவிட்டு வந்து சிகப்பு நிற சல்வாரின் டாப்பை மட்டும் அணிந்திருந்தாள்.

இவன் கதவைத் தட்டிக் கொண்டே இருக்க, இவள் அவசரமாக ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.
“ஏன் போன் எடுக்கல” கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவன்
அவள் நின்றிருந்த கோலம் கண்டு வாயடைத்துப் போனான்.

அவளை மேலிருந்து கீழ் வரை நோக்க, உடம்பை ஒட்டிய அந்தச் சிகப்பு உடை அவள் அழகை எடுத்துக்காட்டியது. கால் முட்டி வரை மட்டுமே இருந்த அந்த உடை அதன் கீழே இருந்த அவளின்  தந்தக் கால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அவன் கேட்டதற்கு பதில் சொன்னாள் அவள். “ நான் குளிச்சுட்டு இருந்தேன் அதான் எடுக்கல, அதுக்காக ஏன் கதவை இப்படி தட்ற “ கேட்டுக்கொண்டே அவன் பார்வை சென்ற இடத்தைக் கவனிக்க,
தான் அரைகுறையாக உள்ளோம் என்பதை அப்போது தான் உணர்ந்தாள். உடனே அங்கிருந்து ஓடிச் சென்று பாத்ரூமில் தஞ்சம் புகுந்தாள்.
உள்ளே சென்று தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
‘ அடடா! இவ்வளவு நாள் சேர்த்து வெச்சிருந்த தைரியமெல்லாம் அரை நொடில போய்டுச்சே! இவன் எதுக்கு இப்போ இங்க வரணும்’ . தன்னையே நொந்து கொண்டாள்.

அவனோ அவளைக் காணாத கோலத்தில் கண்ட அதிர்ச்சியில் இருந்தான். குளித்த ஈரம் காயாத அவளின் முகமும் , பளிங்கு போன்ற அவளது கால்களும் அவன் கண்ணை விட்டு அகலவில்லை. எந்த வித ஒப்பனையும் இல்லாமல் அவள் மிகவும் அழகாகத் தெரிந்தாள். ஒரு சில நொடிகளே அவன் அப்படி இருந்தது. தலையைச் சிலுப்பி தன்னை இயல்பு நிலைக்கு அவன் கொண்டுவந்து, 

“ மீடிங்க்கு டைம் ஆகுது , சீக்கிரம் கிளம்பு நான் ரிசெப்ஷன்ல வெயிட் பண்றேன் “ சொல்லிவிட்டு அவன் சென்றான். கதவைச் சாத்தும் சத்தம் கேட்டதும் அவள் வெளியே வந்து கண்ணாடி முன் நின்று தன் கோலத்தைக் காண அவளுக்கே வெட்கமாக இருந்தது.

‘ அவனை இம்ப்ரெஸ் பண்ண இப்படி பண்ணிட்டோம்ன்னு நினச்சு இருப்பானோ? கடவுளே! அப்படி மட்டும் இருக்கக் கூடாது. ‘ அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு தயாராகி கீழே வந்தாள். அவன் போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.

இவள் அருகில் சென்றதும், எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பிக்க, அவளும் வேறு வழியின்றி பின்தொடர்ந்தாள்.

ஒரு ஆடி கார் வந்து வாசலில் நிற்க, இருவரும் அதில் ஏறிக்கொண்டனர். அந்த ஊரின் அழகும் அங்கிருந்த தூய்மையையும் ரசிக்காமல் அவன் தனது லேப்டாப்பில் மூழ்கி இருக்க அவளும் அன்றைய மீடிங்கில் தர வேண்டிய டாகுமெண்ட்களை சரி பார்த்தாள். மனதில் அவனிடம் நடந்ததற்கு பின்பு விளக்கம் தர வேண்டும் என்று நினைத்துகொண்டாள்.

error: Content is protected !!