KVK-6
KVK-6
அன்று முதல் நாள் ஷூட்டிங். அனைவரும் வரும் முன்பே லோகேஷனுக்கு சென்று விட்டான் சித்தார்த். டைரக்டர் கூறிய கான்செப்ட் அவனுக்கு இப்பொழுது தான் முழு திருப்தி அளித்தது. இவனிடம் பாஸ் மார்க் வாங்க அவர் படாதபாடு பட்டார். இப்பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கேட்டுக்கொண்டான்
நடிகர்களும் வந்துவிட்டனர். அந்த ஹீரோயின் வழக்கத்தைவிட இன்று சற்று அதிகமான மேக்அப் போட்டு இருந்தாள். கண்ணைப் பறித்தது. சித்துவிற்கு அவளைப் பார்க்கத் தலைவலியே வந்துவிட்டது. டைரக்டர் ஷாட் சொல்கிற போதுகூட சித்துவைப் பார்த்தே நடித்துக்கொண்டிருந்தாள். அது அவனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. ஆகையால் எழுந்து வேறு இடத்திற்கு சென்று நின்று கொண்டான். அவளும் வேறு வழியின்றி ஒழுங்காக நடித்தாள்.
ஒரு நான்கு மணி நேரத்திற்குப் பிறகே அந்த ஐந்து நிமிட விளம்பரம் திருப்தி அளித்தது. எல்லாம் முடிந்த பின் சித்துவை நோக்கி வந்தாள் அந்த ஹீரோயின்.
“ஹாய் சித்து, எல்லாம் நல்லா வந்திருக்கு டோன்ட் வொரி. யுவர் ப்ராஜெக்ட் இஸ் சக்சஸ்” அவன் அருகில் வர , அவன் இரண்டு எட்டு பின்னடைந்த்தான்.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் வொர்க் ” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.
“நமக்குள்ள என்ன தேங்க்ஸ் சித்து, உங்களுக்காக எதுவேணா செய்வேன் ” , அவனைப் பார்த்துக் கள்ளத் தனமாகச் சிரித்தாள்.
அதைக் கண்ட அவனுக்குத் தலைவலி மேலும் அதிகமானது. தலையில் கைவைத்து பெருமூச்சு விட்டான். இந்த தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்தான்.
“என்ன ஆச்சு சித்து தலை வலிக்குதா” என அவன் கையைப் பிடிக்க , தீயைத் தொட்டவன் போலச் சட்டென விலகினான். அவளை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு,
“ஸ்டே அவே ஃபரம் மீ” பல்லைக் கடித்துத் கொண்டு உறுமினான்.
அவளுக்கும் கோபம் வந்தது. இருந்தாலும் ,
“ஏன் நான் உங்கள தொடக் கூடாதா, உங்களுக்கு நான் சொல்ல வரது புரியுதா ?” கோபத்தை மறைத்து வழிந்து கொண்டே கேட்டாள்.
அவனுக்கு அதற்கு மேல் பொறுமை இருக்கவில்லை.
“லுக், நீ நினைக்கற மாதிரி ஆள் நான் இல்லை. என்னோட மைன்ட் மனசு ரெண்டும் ஒருத்திக்கு மட்டும் தான். கெட் அவுட் ஆஃப் மை சைட்” எரிந்து விழுந்தான்.
அவனை அந்தக் கோபத்துடன் பார்த்ததும் அவள் சற்று பயந்து தான் போனாள். மனதில் கருவிக்கொண்டே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாள்.
அவள் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று தன் செல்போனில் யாருக்கோ போன் செய்தாள். அந்தபுறம் என்ன சொன்னார்களோ! , இவள் ” இனிமே அவன் கிட்ட என்ன போகச் சொல்லாதீங்க ” என்று வைத்துவிட்டாள்.
சித்துவிற்கோ தன் வேலையை முழுதாக முடித்த திருப்தி ஏற்படவில்லை. இருந்தாலும் அங்கு இருக்க முடியாமல் தன் கம்பனிக்கு சென்றான்.
மனோகர் அவரின் அறையில் அமர்ந்து தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். சித்து வேகமாக உள்ள நுழைந்ததும் அவர் அவனை குழப்பமாகப் பார்த்தார்.
“என்ன ஆச்சு சித்து? ஏன் ஒரு மாதிரியா இருக்க ?” அக்கறையுடன் கேட்க, அவனுக்கு அவரிடம் எதையும் காட்டிக்கொள்ள விருப்பம் இல்லை.
“கொஞ்சம் தலை வலியா இருக்குப்பா , வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சு அதான் உடனே கிளம்பி வந்துட்டேன். நாளைக்கு ப்ரீவியு பாத்துக்கலாம் அப்புறம் க்லைன்ட் கிட்ட காட்டிட்டு லான்ச் பண்ணிடலாம் அப்பா.” சித்து வேலையை பற்றிக் கூறினான்.
“வெரி குட் சித்து. க்லைன்ட் அப்ரூவல் குடுத்தாலே போதும் நம்ம ப்ராஜெக்ட் சக்சஸ் தான். வெல்டன் மை சன் “.
“தேங்க்ஸ் ப்பா . நான் கொஞ்சம் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கறேன் ” சொல்லிவிட்டு கிளம்பினான்.
வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு இடத்தில் சிக்னலில் வண்டி நின்றது. மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க அவனுக்கு இரண்டு வரிசை தாண்டி ஒரு காரில் அந்த நடிகை இருந்தாள். அவள் யாருடனோ சண்டை போடுவது போலப் பேசிக்கொண்டிருந்தாள். அவனுக்கு அப்போது இருந்த தலை வலியில் அது யார் என்பதை சரியாகக் கவனிக்கவில்லை. ஒரு வேளை கவனித்து இருந்தால் பின்னாளில் அது வசதியாக இருந்திருக்கும். அவளைக் கண்டதும் தன் பார்வையை வேறு புறம் செலுத்தி கவனத்தை மாற்றினான்.
சக்தி ஒரு புறம் சித்துவைக் காண தவித்துக்கொண்டிருந்தாள். அவனைச் சந்திப்பதா வேண்டாமா என யோசித்து பின் அவனிடம் பேச நினைத்தாள்.
எப்படி போன் செய்வது? வெட்கமா , தயக்கமா ? என்ன உணர்வு என்று பிரித்தறிய முடியவில்லை.
ஒரு வழியாக வீட்டில் அனைவரும் உறங்கியபின் தன் அறைக்கு வந்து தாழிட்டுக் கொண்டாள். அவனுக்கு ஒரு வெற்று மெசேஜ் அனுப்பி வைத்தாள். ‘அவன் எவ்வாறு அதை ஏற்றுகொள்வான்? கை தவறி அனுப்பிவிட்டேன் என்றா? அல்லது என் மனதை புரிந்துகொண்டு பதில் அனுப்புவானா?’ யோசித்துக் கொண்டே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.
சித்து அப்பொழுது தான் முகம் கழுவி படுக்க வந்தான், தன் செல்போனில் சத்தம் கேட்டு அதை இயக்கியவன் , சக்தியின் வெற்று மெசேஜெய் பார்த்துப் புன்னகைத்தான்.
“பேசணும்னா கால் பண்ண வேண்டியது தான , அது என்ன பிளான்க் மெசேஜ், சகி நீ பண்ற ஒவ்வொரு விஷயமும் ஸ்வீட். நோட் ல பேர் எழுதற , சுஜா கிட்ட நம்பர் வாங்கற, ஆனா என்கிட்ட பேசமட்டும் உனக்குத் தயக்கம் , இன்னும் நீ பேபி தான், தட்ஸ் வோய் ஐ லைக் யு ” தன் மொபைலைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தான்.
உடனே அவளுக்குப் போன் செய்தான், முதல் ரிங் போனதுமே போனை எடுத்தாள்.
“சகி ,சொல்லு ” அவன் குரலைக் கேட்கும் போதே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது,
“மீட் பண்ணும்ன்னு சொன்னீங்களே ” மெதுவாக அவள் கேட்க
” டிசைட் பண்ணிட்டியா ? எங்க பார்க்கலாம் ?” சித்து ஆர்வமானான்.
“நாளைக்கு எனக்கு லீவ் , சோ நாளைக்கு ஈவினிங் நாம ஃபர்ஸ்ட் மீட் பண்ண எடத்துக்கே வர முடியுமா?” தயங்கி தயங்கி கேட்க
“என்ன சகி ! வர முடியுமான்னு கேட்கற, ஐ அம்வெயிடிங் டு சி யு” என்றான்,
அதன் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தாள்.
“எதாவது பேசு , எல்லார்கிட்டயும் நல்லா பேசற என்கிட்ட மட்டும் பேசமாட்டியா ?”
“அப்படி இல்லை , கொஞ்சம் தயக்கம் ஆனா சீக்கரம் போய்டும் “
“குட் , தட்ஸ் மை கேர்ள் “
“நாளைக்கு பார்போம் ” போனை வைத்தாள்.
மறுநாள் அவன் கம்பனிக்கு சென்றபோது அங்கே அவன் மேனேஜர் போனில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். அவரைத் தன் அறைக்கு வருமாறு கூறிவிட்டு சென்றான்.
“என்ன நடக்குது , யாரை அப்படி திட்டிட்டு இருக்கீங்க ?” அவரது பெர்சனல் என்று நினைத்து அவன் கேட்டான்.
“எல்லாம் அந்த டைரக்டர் தான் சார் , நேத்து நம்ம எடுத்த கான்செப்ட் சரி இல்லை வேற எடுத்துத் தரேன்னு சொல்றான்” பயந்து கொண்டே அவர் கூற, கொதித்து எழுந்தான் சித்து. “நான் செலக்ட் பண்ண கான்செப்ட அவன் எப்படி மாத்தலாம்? என்ன நினச்சுட்டு இருக்கான் அவன் , அவனை உடனே இங்க வரச் சொல்லுங்க ” ஆத்திரத்தில் கத்திக்கொண்டிருந்தான்.
“அவன் இந்த ஊர்லையே இல்ல சார், நைட் ஏதோ வேற ஊருக்குக் கிளம்பி போய்ட்டான்”
தலையில் கைவைத்து அமர்ந்தது விட்டான். அவனுடைய முதல் ப்ராஜெக்ட் இப்படி ஆகும் என அவன் நினைக்கவில்லை. ஒரு நிமிடம் உடைந்தாலும் சித்து சற்று யோசித்தான். நாளைக்கு கிளைன்ட் கிட்ட சோர்ஸ் காட்டானும் , இவனைப் பற்றி யோசித்தால் அந்த வேலை முடியாது என்று உடனே தனக்கு தெரிந்த வேறொரு டைரக்டருக்கு போன் செய்து வர வைத்தான்.
அவரும் உடனே வந்துவிட தன் நிலைமையை அவருக்கு விளக்கினான்.
“டோன்ட் வொரி சித்தார்த் , என்கிட்ட இப்போ நியூ மாடல்ஸ் இருக்காங்க ,உனக்கு ஓகேன்னா அவங்கள வெச்சு இன்னிக்கு ஈவின்ங்குள்ள உனக்கு ப்ரிவியூ காட்டறேன்”
“உங்களுக்கு யார் கரெக்ட்டா இருப்பாங்கன்னு தோணுதோ அவங்கள வெச்சு எனக்கு முடிச்சு குடுங்க, ஆனா கான்செப்ட் நான் சொன்னது தான். அவுட்டோர் அர்ரெஞ் பண்ண முடியாது இன்டோர் தான் ” திட்டவட்டமாகக் கூறிவிட்டான்.
அவரும் ஒத்துக்கொண்டு உடனே வேலைகளை ஆரம்பித்தார். அவர்களது கம்பெனி கெஸ்ட் அவுசிலேயே ஷூட்டிங் செய்யப்பட்டது. உணவு உண்ணக் கூட நேரம் இல்லாமல் மாலைவரை வேலை இழுத்துவிட்டது. எல்லாம் முடித்துப் பிரிவியு செய்த பின்னரே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் சார், நீங்க இல்லனா என்னால கண்டிப்பா இன்னிக்கு இதை முடிச்சு இருக்க முடியாது” சித்து அவர் கையைப் பிடித்து மனமார கூறினான்.
“என்னோட வேலை தானே இது சித்து எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க. உங்க கான்செப்ட் தான் இதுல ஹிட் , ரொம்ப அருமையா வந்திருக்கு. நீங்களே சோர்ஸ் வெச்சுகோங்க. நான் கிளம்பறேன் மிஸ்டர் சித்தார்த் . ஆல் தி பெஸ்ட்.” அவரும் கிளம்பிவிட
நிம்மதிப் பெருமூச்சு விட்டான் சித்து. நேரம் ஆனதும் அவனுக்கு அப்பொழுது தான் சக்தி தனக்காகக் காத்திருப்பாள் என்ற நினைவு வர, அவசரமாக நாளைக்குத் தேவையான வேலைகளைச் செய்து முடித்தான்.
அவளுக்காக அந்த ரெஸ்டாரென்டில் காத்திருந்தான். காலையிலிருந்து வேலை செய்த களைப்பு இருந்தாலும் அவளைப் பார்க்கப் போகும் ஆவலில் உற்சாகம் தொற்றிக்கொண்டது. கோட் சூட்டுடன் அமர்ந்திருந்தவன் அவள் வரும்போது என்னென்ன சொல்ல வேண்டும் என்று யோசித்தான். தன் காதலை அவள் முழுதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
டிம் லைட்டால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது அந்த இடம். ஒவ்வொரு டேபிளும் ஒரு தனி கூடாரத்தில் இருந்தது. மெழுகுவர்த்திகளால் ஆங்காங்கே அலங்கரித்திருந்தார்கள். ஒரு ரம்யமான சூழ்நிலை. அதை ரசித்துக் கொண்டே அவள் வருகையை எதிர் பார்த்தான்.
வெளிர் பச்சை நிறத்தில் ஜார்ஜெட் சுடிதார் அணிந்து , எளிமையான மேக்அப்புடன் அவள் வந்தாள். அவள் முகத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தெவிட்டவில்லை. அவளை உரிமையுடன் தன் பக்கத்தில் நிறுத்திக்கொள்ள மனம் துடித்தது.
அவன் எதிரில் உள்ள சேரில் அமர்ந்தாள். அவளையே இமைக்கவும் மறந்து அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கோட் சூட் அணிந்து அவள் காண்பது இதுவே முதல் முறை.
‘என்ன ஒரு கம்பீரம் , ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன்’, அவனின் இந்தத் தோற்றம் அவளை மிகவும் ஈர்த்தது.
அவன் கன்னத்தில் கைவைத்து அவளைப் பார்த்து அமர்ந்திருந்தான். அந்தப் பார்வை அவளை ஏதோ செய்ய, மௌனத்தை கலைக்க நினைத்தாள்.
‘சிட்’ என மெதுவாக அழைக்க
அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்த்தது .
“கம் அகைன் ” ட்ரிம் செய்திருந்த அவன் தாடியை தடவிக்கொண்டே அவன் கேட்க ,
அப்பொழுது தான் தன் மனதில் அவனை அப்படி அழைத்தது இப்போதும் அப்படியே கூப்பிட்டு விட்டோம் என்பதை உணர்ந்தாள்.
நாக்கை கடித்துக் கொண்டு சாரி என்றாள்.
“இன்னும் ஒரு முறை சொல்லு சகி ப்ளீஸ்”
தயங்கி தயங்கி “சிட் ” என்றாள்
“ஹே ! ஐ லைக் தி வே யு கால் மீ. நீ என்னைக் கூப்பிடறது ஸ்பெஷலா இருக்கணும்னு நானும் நினைச்சேன் சகி ..தேங்க்ஸ் ” அவளை விழுங்கும் பார்வை பார்த்துச் சொல்ல , அந்தச் சமயம்
வெய்டர் வந்து ஆர்டர் கேட்டான்.
“என்ன சாப்டற சகி ?”
“நீங்களே சொல்லுங்க”
அவன் சிரித்துவிட்டு ” இரண்டு ஹாட் சாக்லேட் ” ஆர்டர் செய்தான். பின் அவனை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்லி அனுப்பினான்.
சிறிது நேரம் மௌனத்தின் பின் அவளை அழைத்தான். அவள் நிமிர்ந்து பார்க்க, சேரில் சாய்ந்து கொண்டு தன் கைகளைக் கட்டிக்கொண்டு பேசினான்.
“உன்கிட்ட நிறைய பேசனும்ன்னு வந்தேன், ஆனா என்ன சொல்றதுன்னு தெரியல, ஓபனா சொல்றேன். எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு , நான் இதை வேற ஒரு லோகேஷன் ல வேற ஒரு நாள் சொல்லனும்ன்னு நினச்சேன். பட் இப்போ இதைச் சொல்லாம இருக்க முடியல, உன்னை முதல் நாள் பார்த்தப்பவே என் மனசில நீ பதிஞ்சுட்ட.. இது காதல்ன்னு புரிஞ்சுக எனக்கு ரொம்ப நேரம் தேவைப்படல..
உன்னை என்னோட உயிரா நினைக்கறேன். கண்டிப்பா உன்னைத்தவிர என்னால வேற ஒருத்திய மனசால கூட நினைக்க முடியாது. இது டயலாக் மாதிரி உனக்குத் தெரியலாம் ஆனா இது தான் உண்மை. வாழ்க்கைல நமக்கான சோல்மேட்டை ஆண்டவன் ஒரு முறை தான் காட்டுவான். அப்போவே நாம அதைப் புரிஞ்சுக்கணும். லேட் பண்ணா பின்னாடி கஷ்டம் தான். நான் அதை மிஸ் பண்ண விரும்பலை. நான் சொல்ல வந்ததும் அது தான், ஐ கான்ட் மிஸ் யு இன் மை லைஃப். உனக்குப் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கறேன்” சொல்லி முடித்தான்.
அவன் கூறியதைக் கேட்டு இதயம் பூரிப்பில் இருந்தது அவளுக்கு. பேச வார்த்தை இல்லை. அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் காதில் தேனைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது . அவன் குரல்! அது இன்னும் அமுதமாக இருந்தது. இப்பொழுது நடந்தது கனவா இல்லை நனவா என்று யோசித்துக்கொண்டிருந்தாள். இந்த நிமிடம் அவள் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம். அவனையும் அந்த இடத்தையும் அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் தன் மனதில் பதிய வைத்தாள். உயிரில் உறைந்து விட்ட நேரம்! அவனும் அவளும் மட்டும் இருக்கும் அந்த நொடியோடு இந்த உலகம் நின்றுவிடக்கூடாதா என்று நினைத்தாள்.
அதற்குள்,
ஆர்டர் செய்த காஃபி வந்துவிட ஒன்றை அவள் பக்கம் நகர்த்தினான். அந்தக் கப்பில் உள்ள காஃபியில் ஒரு இதயம் வரையப்பட்டு அதன் பக்கத்தில் ஒரு கேள்விக்குறி போடப் பட்டு இருந்தது.
அதைப் பார்த்ததும் அவளுக்குத் தான் எழுதி வைத்தது நினைவுக்கு வந்தது. அவனுக்கும் தனக்கும் எத்தனை ஒற்றுமை என்று நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது,
“நீ இவ்ளோ நாள்ல என்னைப் பற்றி யோசிச்சு இருப்பன்னு நினைக்கறேன் , உன்னோட முடிவ சொல்லு சகி , உன்னை நான் எப்பவும் கம்பெல் பண்ண மாட்டேன், உனக்கு இன்னும் டைம் வேணும்னு தோனுச்சுன்னா தாராளமா எடுத்துக்கலாம். ஐ வில் வெயிட் பாஃர் யூ. என் வாழ்க்கை பூரா ” சொல்லிவிட்டு அவள் பதிலுக்காகக் காத்திருந்தான்.
அவள் அந்த காஃபி யில் ஸ்பூனை வைத்து ஏதோ கிளரிக்கொண்டிருந்தால்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அவளுக்கும் தன்னைப் பிடித்திருப்பதாக நினைத்தோமே! ஒரு வேளை அவசரப்பட்டுச் சொல்லிவிட்டோமோ என்று குழம்பினான்.
அவள் மனதில் ஏற்ப்பட்ட மகிழ்ச்சியை அவள் மட்டுமே அறிவாள். அதை அவள் வார்த்தையால் சொல்ல முடிய வில்லை. அந்த காஃபி கப்பை அவன் புறமே மீண்டும் நகர்த்தினாள். அவன் ஒன்றும் புரியாமல் அதைப் பார்க்க ,
அதில் எழுதப் பட்டிருந்த கேள்விக் குறியை அழித்து விட்டு வெறும் இதயம் மட்டும் இருந்தது, அதை அவன் புறம் நகர்த்தியதிலிருந்து அவள் இதயத்தை அவனுக்குக் கொடுத்து விட்டாள் என்று புரிந்துக்கொண்டான்.
அதைக்கண்ட மகிழ்ச்சியில் “ஊஊ…..” எனக் கத்திவிட்டான். அவள் வெட்கத்தால் முகத்தைத் திருப்பி அமர்ந்துகொண்டாள்.
“சகி.. ஐ லவ் யு டியர் ” என்று புன்னகைத்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்
” நானும் ….” மீதியை சொல்லாமல் விட்டாள்.
அந்த இடத்தில் இருந்த மெழுகுவர்த்தி உருகியதைப் போல அவர்களின் மனமும் ஆனந்ததில் உருகியது.
” தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால் …
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு .. இதழோரம் புது ராகம் எழுது ….
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்”
இதை தூரத்திலிருந்து ஒருவன் தன் செல்போனில் படம் எடுத்தான்.
மறுநாள் சித்துவின் ப்ராஜெக்ட்டும் முதல் பார்வையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவன் விவரித்ததை அனைவரும் பாராட்டினர். க்லைன்ட் அதை அப்பரூவ் செய்துவிட்டுத் தான் கிளம்பினார்கள். மனோகர் அவனை வெகுவாகப் பாராட்டினார்.
“இனிமே எனக்குக் கவலையே இல்லை சித்து. நீ பிரச்சனைகளை ஹாண்டில் செய்த விதம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு”
“அப்பா உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது ?” ஆச்சரியமாக அவரைப் பார்க்க
“எல்லாம் நம்ம மேனேஜர் சொன்னாரு சித்து “
“சாரி ப்பா , உங்க கிட்ட சொல்லாம விட்டதுக்கு” என வருந்தினான்.
“நோ வொரீஸ் சித்து , ஐ அம் ஹாப்பி நவ்”
மகனின் வெற்றியை கொண்டாடினார். அடுத்து வந்த ஒரு மாதம் சித்துவிற்கு மேலும் சில யுக்திகளை கற்றுக்கொடுத்தது. ஒரு புறம் சக்தியுடன் போனில் பேசிக்கொண்டும் மறுபுறம் கம்பெனி வேலைகளும் சிறப்பாக நடத்தினான். இதுவரையில் அவனுக்கு நடந்த அந்த முதல் சறுக்கல் நினைவிற்கு வரவில்லை. இனி அவன் அதைப் பற்றி வெகுவிரைவில் புரிந்து கொள்வான்.
——————————————————————————————————
யுவராஜ் இன்று இந்தியா வருகிறான். மலர்மொழி அன்பரசுவுடனும் கதிருடனும் ஏர்போர்டில் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். தன் மகனை வரவேற்க அவனுக்குப் பிடித்த வெல்லத்தால் செய்த பால்கோவாவை எடுத்து வந்திருந்தார். விமானம் தரை இறங்கி விட்டது, இன்னும் சற்று நேரத்தில் பயணிகள் வரத் தொடங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது. மலர்மொழி ஆவலுடன் எதிர்ப்பார்த்தார். அனைவரும் அவனைக் காண துடித்துக் கொண்டிருந்தனர்.
” அதோ! யுவா வரான் பாருங்க” கதிர் அவன் வரும் திசையைக் காட்ட , அனைவருடைய பார்வையும் அங்குத் திரும்பியது.
ஆறடியை விட மிக உயர்ந்து, கருப்பு நிற அர்மானி ஷர்டும் அதற்கு ஏற்றப் பேன்ட்டும், லூயி விட்டான் கண்ணாடி அணிந்து, வாயில் மௌத் பிஃரஷ்னர் மென்றுகொண்டு , தன் நீண்ட கைகளால் பெட்டிகள் நிறைந்த டிராலியை தள்ளிக் கொண்டு நெடிய கால்களால் பெரிய அடிகளை வைத்து நடந்து வந்துகொண்டிருந்தான்.
அவனின் ஆண்மை நிறைந்த தோற்றமும் கம்பீரமும் பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்தது. அவன் தன் குடும்பத்தைப் பார்த்ததும் சிரித்துவிட்டு கை அசைத்தான். மலரின் முகத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. அன்பரசு எழுந்து ஆடாத குறையாக நின்றிருந்தார்.கதிர் தன் நண்பனை எதிர்பார்த்திருந்தது அனைவருக்கும் தெரியும்.
வந்ததும் தன் தாயின் காலிலும் மாமாவின் காலிலும் விழுந்தெழுந்தான்.
“யுவா ” கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டார் மலர்.
“அம்மா என்ன இது ? நான் தான் வந்துட்டேனே நீங்க அழவே கூடாது ம்மா ” அவரைக் கட்டிக்கொண்டு தேற்றினான். மலர் கொண்டு வந்த பால்கோவாவை அவனுக்கு ஊட்டிவிட்டார்.
“வாவ் , ஐ ரீயலி மிஸ்ட் இட் மா” இன்னொரு வாய் வாங்கிக் கொண்டு அங்கிருந்து பேசிக்கொண்டே கிளம்பினார்கள். அவர்களின் வீட்டில் அவனுக்காக விருந்து சமைத்து வைத்திருந்தார். தாய் நாடு , சொந்த வீடு , தாயின் அரவணைப்பு , அனைத்தும் ஒருவரின் வாழ்வில் நிம்மதியைக் கொண்டுவருகிறது, யுவாவும் இப்பொழுது அந்தச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். இரண்டு நாட்கள் எந்த வேளையிலும் ஈடுபடாமல் குடும்பத்துடன் இருந்தான்.
அவன் வாங்கி வந்த பொருட்களை மாமாவிற்கும் கதிருக்கும் கொடுத்தான். தன் அம்மாவிற்கு பார்த்துப் பார்த்து வாங்கியிருந்தான். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
“யுவா இனிமே நீ அம்மாவ விட்டுட்டு எங்கேயும் போகக் கூடாது ” மலர் மிகுந்த வருத்தத்துடன் கூற
“அம்மா , உங்கள விட்டுட்டு நான் எங்க போவேன், இனிமே வாழ்நாள் முழுசும் உங்க கூடத் தான் ” அவர் மடியில் படுத்துக்கொண்டு சற்று நேரம் உறங்கினான்.
அவன் தலையை இதமாக வருடினார். இத்தனை நாள் இருவரும் இப்படியொரு சுகத்தை இழந்துவிட்டோம் என்று எண்ணி வருந்தினர். யுவா ஒரு திடமான மனஉறுதி உடையவன் என்றாலும் தன் தாய் என்று வந்துவிட்டால், அவன் சிறுபிள்ளையாக மாறிவிடுவான்.
அடுத்து வந்த நாட்களில் அவன் தன் வேலையை பார்க்கத் துவங்கினான்.முதல் வேலையாகத் தன் புது கம்பெனிக்குச் சென்றான். அனைவரும் அவனைப் பூங்கொத்துடன் வரவேற்றனர்.
தன்னுடைய கம்பெனி தான் நினைத்ததைப் போலவே இருந்ததைப் பார்த்துக் கதிருக்கு நன்றி சொன்னான். பின் தன்னுடைய அறைக்குச் சென்றான். அங்கே ‘வெல்கம் மிஸ்டர் யுவராஜ்’ என்று எழுதி நூறு சிகப்பு ரோஜாக்களுள்ள பெரிய பூக் கூடை பொக்கே ஒன்று அவன் டேபிளில் வைக்கப் பட்டிருந்தது.
அதைப் பார்த்ததும் ஒன்றும் பெரிதாக அவன் ஆச்சரியப் படவில்லை.
“என்ன கதிர் இது உன்னோட வேலையா?” பின்னால் வந்தவனைப் பார்த்துக் கேட்க
“நான் எதுக்கு உனக்கு இங்க தரனும்?. இது உன் பி ஏ அனுப்பினது” அலட்டிக் கொள்ளாமல் அவன் கூற
“நான்சென்ஸ் . இது என்ன தனியா பொக்கே . எல்லார் கூடையும் சேர்ந்து தரமாட்டாங்களோ ?”
“இந்தக் கூடைய தூக்க ரெண்டு பேர் வேணும் அதான் சார் உங்க டேபிள்ள வைக்கச் சொன்னேன் “, திறந்திருந்த கதவு வழியாக உள்ளே நுழைந்த ஆராதனா!
திரும்பி அவளைப் பார்த்த யுவராஜ் ஸ்தம்பித்து விட்டான்.
“ஆராதனா ?!” முகத்தை சுருக்கி அவளைப் பார்த்துக் கேட்க
“எஸ் சார் ” எதையும் காட்டிக்கொள்ளாமலே அவளும் விறைப்பாக ஒரு பி ஏ வின் தோரணையுடன் நின்றாள்.
“வாட் இஸ் திஸ் கதிர் ? இவள எதுக்கு அப்பாயின்ட் பண்ண ?” பல்லைக் கடித்துக் கொண்டே கேட்க
“நான் வேணும்ன்னு பண்ணல , அவங்க அப்ளை பண்ணி இருந்தாங்க . எல்லா குவாலிடீசும் மேட்ச் ஆச்சு அதான் அப்பாயின்ட் பண்ணேன் . அப்பறம் தான் தெரியும் இது நம்ம ஆராதனான்னு ” சிரித்துக்கொண்டே அவன் சொல்ல
“திஸ் இஸ் நாட் அ ஜோக் , அவள அனுப்பிடு ” சட்டெனச் சொல்லிவிட
கதிருக்குக் கதி கலங்கி விட்டது.
“என்னடா சொல்ற ஷி இஸ் வெரி மச் பிஃட் பார் தி ஜாப்” சமாளித்தான்.
சற்றும் மனம் தளராத ஆராதனா “என் மனசில நீங்க என்னோட பாஸ் அண்ட் நான் உங்க பி ஏ அவ்ளோதான். பெர்சனல் அண்ட் வொர்க் ரெண்டையும் நீங்க மிக்ஸ் பண்ணமாட்டீங்கன்னு நினைக்கறேன் ” அவனின் ஈகோ வை தூண்டிவிட நினைத்தாள்.
அதுவும் சரியாக வேலை செய்ய, “ஐ டோன்ட் ஹவ் எனி பீலிங்க்ஸ் ஈவன் பெர்சனலி , பட் யு கான்ட் கண்டினியு ஹீயர்” அதிராகமாகச் சொன்னான்.
“பீலிங்க்ஸ் இல்லனா அப்புறம் ஏன் போகச் சொல்லணும். உங்களுக்கு உங்க மேல கான்ஃபிடென்ட் இல்லையா ?” என எங்கோ பார்த்துக் கேட்க
அது அவன் ஈகோ வை தட்டிப்பார்த்தது.
“நீ என் கண் முன்னாடியே இருந்தாலும் ஐ அம் வெரி ரிஜிட், யு கான்ட் டூ எனிதிங் ” என வசனம் பேசினான்.
“தென்?”
“தென் வாட் ? யு கேன் பீ ஹியர், நான் குடுக்கற வேலைல நீயே ரெண்டு நாள் ல போய்டுவ.. பெட்டெர் சர்ச் அனதர் ஜாப் டூ ” நக்கலாகச் சொல்ல
“லெட்ஸ் சீ சார் ” தைரியமாகவே பதில் சொன்னாள்.
முறைத்துக் கொண்டு இருவரும் சென்றுவிட
என்ன நடக்குமோ என்று கதிர் தலையில் கை வைத்துக் கொண்டான். ‘ஆரம்பமே மோதிக்கராங்களே !’ மனதில் சலித்துக் கொண்டான்.பொருத்திருந்து பார்ப்போம்!
அதிகாலையில் எழுந்து ஜாகிங் செய்யப் பீச் ரோடு சென்றான் யுவராஜ். சூரிய உதயத்திற்கு முன் அந்த இடத்தின் குளிர்ந்த காற்றும், கடல் அலைகளின் சப்தமும் அமைதியான சூழலும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் வெளிநாடு செல்லும் முன்பு பீச் ரோட்டில் ஜாகிங் செய்வது வழக்கம் .
இன்று தன் காரை பார்க் செய்துவிட்டு காதில் புளுடூத் மாட்டிக்கொண்டு ஜாகிங் செய்ய ஆரம்பித்தான். வயதானவர்கள் சிலரும் இளைஞர்கள் சிலரும் வாக்கிங் செய்துகொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தார்கள். அவன் சென்றுகொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் டிராக்ஸ் பேண்ட்டும் டிஷர்டும் அணிந்து ஆராதனா வந்துகொண்டிருந்தாள். அவள் தன் அருகே வருவதை யுவராஜ் கவனித்தான். அவளைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு நொடி நினைத்தான். பின் ‘அவளைக் கண்டு நாம ஏன் போகணும், இங்க வர ஆயிரம் பேர்ல அவளும் ஒருத்தி ‘ என்று தன்னுடைய நிமிர்வான ஓட்டத்தையும் நேர்கொண்ட பார்வையையும் தொடர்ந்தான்.
அவளோ அவனைக் காணத்தானே வந்தது. கதிர் அவளுக்கு யுவராஜின் வழக்கங்களைச் சொல்ல அவள் அவனை வழிக்குக் கொண்டு வர அதைப் பயன் படுத்திக்கொண்டாள். அவன் அருகே வந்ததும் ” குட் மார்னிங் பாஸ்” என்று புன்னகையுடன் சொல்ல
“கம்பெனில தான் நான் பாஸ் இங்க இல்லை ” எரிந்து விழுந்தான்.
“அதெப்படி? இப்போ ஸ்கூல் படிக்கறப்ப வெளில நம்ம டீச்சர பாத்தா குட் மார்னிங் டீச்சர் ன்னு சொல்லமாட்டோமா, அது மாதிரி தான்.” இடுப்பில் கை வைத்துக் கொண்டு சொல்ல
அவளின் பதிலில் எரிச்சல் அடைந்தவன் , தன் தலையை அழுந்தக் கோதி, ” இப்போ உனக்கு என்ன வேணும்?”
“நான் சொன்ன குட் மார்னிஙக்கு பதில் வேணும் “
“குட் மார்னிங் ” கத்திவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவள், ‘இன்னும் எவ்ளோவோ இருக்கு யுவி, இதுக்கே இப்படி அலுத்துக்கற ‘ மனதில் சிரித்துக்கொண்டே அவளும் அங்கிருந்து சென்றாள்.