KYA 11

KYA 11

                       காலம் யாவும் அன்பே 11

 

கோவிலை பல்வேறு வகையில் புகைப்படம் எடுத்து அதனை அவனது லேப்டாப்பில் இணைத்துப் பார்த்த ஆகாஷ் , அந்தக் கோவிலின் சுற்றுப்புறத்தை அங்குலம் அங்குலமாக மனதில் பதிய வைத்துக்கொண்டிருந்தான்.

வந்தனாவும் இயலும் உடைந்த தூண்களில் சில பொடிகளைத் தடவி அங்கிருந்த கல்வெட்டுக்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.

அவை பிராமி எழுத்துக்கள் என்பது தெரிந்துவிட, இந்தத் தூண்களின் காலம் அறிய ஆகாஷை  வரவைத்தனர்.

“ஹே ! ஹாட்.. சன் . நான் ஜாலியா வீட்ல இருந்தேன் . எதுக்கு இவ்வளவு அர்ஜன்டா வர சொன்ன?!” ஸ்டைலாக கண்ணாடி அணிந்து அப்போது தான் குளித்து ப்ரெஷ்ஷாக வந்திருந்தான்.

வந்தனாவோ காலையிலிருந்து அந்த வெய்யிலில் நின்று நெற்றியில் வியர்வை வழிய, முகத்தில் சூரிய ஒளி பட்டு, லேசாக கருத்து , காற்றில் கூந்தல் கலைந்து மிகவும் களைப்பாக இருந்தாள். அவன் கேட்ட போதே அவளுக்கு சற்று எரிச்சல் வர, அலுத்துக்கொண்டு

“ம்ம்ம், காலைலேந்து என்னோட ரோமியோவ பார்க்கலையா அதான் , கொஞ்ச நேரம் பாத்து ரசிக்கலாம்னு வர சொன்னேன்.” மீண்டும் அந்த தூண்களின் எழுத்துகளை அவள் துடைக்க, இயல் இவர்களை ரசித்துக் கொண்டே அவற்றை எழுதிக் கொண்டிருந்தாள்.

“ ஹே பேபி! அவ்ளோ மிஸ் பண்ணியா ?” என அவள் வார்த்தையில் மயங்கி அவன் வந்தனாவின் அருகில் வர, உடனே அவளது கையில் மறைத்து வைத்திருந்த அந்தப் பொடியை அவன் முகத்தில் தூவி அவனை அழுக்காக்கினாள்.

எதிர்ப்பாறாத அந்தத் தாக்குதலில் கண்களில் அந்தப் பொடி பட்டுவிட, அவன் திணறினான்.

“ ஹே! பேபி! என்ன இது , இப்படி அழுக்காக்கிட , ஆஆஆ… கண்ணு வேற திறக்க முடியல டி” கண்ணைத் தேய்த்துக் கொண்டே அவன் கத்தி கலாட்டா செய்ய ,

அவனது அந்த வலி வந்தனாவையும் இயலையும் தொற்றிக் கொண்டது.

“ என்ன வந்தனா இப்படி பண்ணிட்ட.. பாவம் எப்படி கத்தறான் பாரு!” இயல் கையில் இருந்த நோட்டை மூடி வைத்துவிட்டு ஆகாஷின் அருகில் வர,

“கண்ணை திற ஆகாஷ், நாங்க ஊதறோம், அப்பறம் சரி ஆயிடும்” எனவும்,

“இல்ல என்னால திறக்க முடியல, அந்த பவுடர் உள்ளே உருத்துது..ஆஆஆ… எரிச்சல் அதிகமாகுது.. கடவுளே எனக்கு இங்க வந்து கண்ணு போகனுமா!” வலியில் துடித்தான்.

அப்போதே வந்தனாவுக்கு லேசாக அழுகை வர,

“சாரி ஆகா ! ப்ளீஸ் டா.. உனக்கு ஒன்னும் ஆகாது, கொஞ்சம் ட்ரை பண்ணு, திறக்க முடியும்” கண்ணில் நீர் திரள அவன் கையைப் பற்றிக் கொண்டு நிற்க,

“முடியல ..!” மீண்டும் கத்தினான்.

“நீ போய் முதல்ல தண்ணி கொண்டு வா வந்தனா” இயல் கூறி , அவளது இளம் பச்சை நிற சுடிதாரின் துப்பட்டாவை வாயில் வைத்து ஊதி அவன் கண்ணில் வைத்தாள் இயல்.

அதைப் பார்த்து ,“ கண்ணுல படும்னு நான் நினைக்கவே இல்ல இயல், இரு நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன்” வந்தனா அழுது கொண்டே மனம் படபடக்க தண்ணீர் பாட்டிலை  எடுக்க ஓடினாள்.

அது வரை ‘ஆ..ஊ..’ என்று கத்தியவன் , அவள் சென்றதும் ஒரு கண்ணைத் திறந்து பார்க்க,

துப்பட்டாவை அவன் கண்ணில் வைக்கப் போன இயல் , அவன் விளையாடுவதைப் புரிந்து கொண்டாள்.

“அடப்பாவி! இதுவும் பிராடு வேலையா? பாவம் அவ, உனக்கு நிஜமாவே ஏதோ ஆயிடுச்சோனு பயந்து போயிருக்கா…”

“விடு இயல், சும்மா அப்பப்ப அவள சீண்டிப் பார்ப்பேன், ரெண்டு நாளா ரொம்ப சீரியசா வேலை பாக்கறோம். ஜஸ்ட் எ ப்ளே! கண்டுக்காத” கண்சிமிட்டி அவளிடம் சொல்ல,

“ உன்ன எல்லாம் சீரியஸா ஆக்கவே முடியாது. நீ ஒரு ஒரிஜினல் பீஸ்… நீ நடத்து உன் நாடகத்தை நான் வரேன்.” அங்கிருந்து கிளம்பினாள் இயல்.

“ ஹே! எங்க போற நீ இல்லனா அவ என்ன நம்பமாட்டா” அவளைத் தடுக்க,

“இருந்தா நானே உன்னை காட்டிக் குடுத்துடுவேன், யு கேரி ஆன். தலை கூப்டாருன்னு போய்ட்டா ன்னு சொல்லு”

“என்ன! தலையா?” இடுப்பில் கைவைத்து அவளைப் புரியாமல் பார்த்தவன்,

“ அட! நம்ம ஹெட் அ தான் தமிழ்ல சொன்னேன்” என்றுவிட்டு அங்கிருந்து அவள் செல்ல,

“ ஹெட்- தலை..ஹா ஹா” தனக்குள்ளேயே சொல்லிச் சிரித்துக் கொண்டான்.

வந்தனா ஓடி வருவது தெரிந்ததும், சட்டென கீழே முட்டி போட்டு அமர்ந்த வாக்கில் மீண்டும் நடிப்பைத் தொடர்ந்தான்.

அருகில் வந்தவள்,

“ஆகாஷ் இங்க பாரு,” என நீரை அவனது கண்களில் தெளித்தாள்.

அவனுக்கு சமமாக தானும் மண்டியிட்டு அவனது முகத்தையும் கண்களையும் நீரால் கழுவினாள்.

அப்போதும் அடங்காது கத்தியவன் முகத்தை, தன் கைகளில் ஏந்தி,

“சாரி டா! ப்ளீஸ்.. உனக்கு இப்படி ஆகும்னு நினைகல. கொஞ்சம் கண்ணைத் திற, கண்ணுக்குள்ள தண்ணி அடிச்சா டஸ்ட் எல்லாம் வெளியே வரும்..” அவனது முகத்தை தன்னருகில் இழுத்து அவனது இமைகளைப் பிரிக்க முயல,

அதுவரை கத்தி கலாட்ட செய்தவன், அவளது இந்தச் செயலில் அமைதியாகி, அவள் பிரித்தவுடன் சிரமம் கொடுக்காமல் கண்களைத் திறந்து, அருகில் அவளது முகம் பார்க்க,

அவளோ அவன் கண்ணுக்கு எதவாது ஆகிவிட்டதா என அந்தக் கண்களையே கண்ணீருடன் பார்த்திருந்தாள்.

இது தான் சமயம் என ஈர முகத்துடன் நீர் வழிய இருந்தவன் , அவளை தன்னோடு அணைத்து இதழ்களில் முத்தமிட்டான்.

அப்போது தான் அவனது விளையாட்டு புரிய, கோபம் வந்தாலும் அவனை விட்டு விலகாமல் அந்த முத்தத்தை அனுபவித்து அவனது அணைப்பை மேலும் இறுக்கிக் கொண்டாள். இத்தனை நேரம் பட்ட மன உளைச்சலுக்கு அவளுக்கு அது தேவையாகவே இருந்தது.

அவனுக்கு ஒன்றும் இல்லை என்பதே அவளுக்கு பெரும் நிம்மதியளிக்க, சில நொடிகளில் அவனிடமிருந்து இதழ்களைப் பிரித்தாள்.

தன் முத்தத்தை அவளும் ரசித்து ஏற்றதால் அவளைக் குறும்புடன் பார்த்தான் அந்தக் கள்ளன். அவள் மேலும் அவனை நெருங்கி மீண்டும் அவனது கன்னத்தில் முத்தமிட,

“வாவ்” என கண்மூடி அவளுக்கு மறு கன்னத்தைக் காட்ட,

அவன் அசந்த நேரம் என்பதால், பளாரென ஒரு அரை விட்டாள்.

கண்ணை மூடியிருந்தவன் ஒரு நொடி தடுமாறினாலும் அவள் ஏமாற்றத்தின் வலியைப் புரிந்து சிரித்துக் கொண்டே அதை ஏற்றான்.

“ ராஸ்கல். ஒரு நிமிஷம் என்னோட இதயமே நின்னு போச்சு. கண்ணு போயிடுச்சுன்னா என்ன ஆகும்னு நெனச்சு கலங்கி போயிருக்கேன், நீ உன்னோட சில்லி விளையாட்ட காட்றியா…இடியட், ஃபூல்” சரமாரியாக திட்டிக் கொண்டே போக,

கையைக் கட்டிக் கொண்டு பொம்மை போல தலையாட்டி அனைத்தையும் வாங்கிக் கொண்டான்.

அவனது செயல் சற்று அவள் கோபத்தைக் குறைத்தாலும் , அந்த நொடி அவள் பயந்து போனதை மறக்கமுடியவில்லை.

“இன்னும் ஒன் வீக் என்கிட்ட பேசாத.. போடா” என்றுவிட்டு நடையைக் கட்ட,

“ ஹே! நில்லு டி, அதான் இவ்வளவு திட்டு வாங்கிட்டேனே அதுக்காகவாச்சும் தண்டனையை குறைக்கலாம்ல.. நான் உன்ன பயப்பட வெச்சாலும் அதுக்கப்பறம்  கூல் பண்ணிட்டேனே!” புருவத்தை உயர்த்தி சின்ன சிரிப்புடன் அவன் கேட்க,

“ போடா.. பேசாத..ஒன் வீக் ஸ்டார்ட்ஸ் நவ்…”  அங்கிருந்து சென்றாள்.

உடனே அவளது செல் சிணுங்க, ஆகாஷ் தான் அவளுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான். அதைத் திறந்து பார்க்க,

‘தேங்க்ஸ் ஃபார் தி ஹாட் அண்ட் ஸ்வீவீ….வீட்  டச் டார்லிங்’ என அவனது அடித்துச் சிவந்த கன்னமும் அவள் முத்தமிட்ட மறுகன்னமும் செல்ஃபி எடுத்து அனுப்பி இருந்தான்.

அதைப் பார்த்தும் பதிலேதும் சொல்லாமல் திரும்பி அவனை முறைத்து விட்டுச் சென்றாள்.

அங்கு நடந்தவைகளை கோவிலுக்குள் இருந்த வாகீ பார்த்துவிட்டு வெளியே வர, அவனை அங்கே கண்ட ஆகாஷோ ,

“ஒ காட்… சாரி ஹெட்… உங்கள பாக்கல” என முகத்தை அந்தப் பக்கம் திரும்பி அடித்துக் கொள்ள

“ஹே! இட்ஸ் ஓகே… யு எஸ் ல இது சகஜம், இது இந்தியா அதுவும் கிராமம். சோ பெட்டெர் கீப் யுவர் சீக்ரெட்ஸ் இன் ரூம்” சாதாரண மாகக் கூற,

 வழிந்து கொண்டே , “ கண்டிப்பா ஹெட்” என்றான்.

“ இயல் எங்க?” என அவளைத் தேட ,

“ பேக் சைடு போனாங்க” கைகாட்டினான் ஆகாஷ்.

வாகீ அவன் கை காட்டிய திசையில் செல்ல, இன்னும் அந்தப் பகுதி சீர் செய்யப்படாமல் சற்று மணல் மேடுகளும் கற்களுமாக இருந்தது.

இது கற்பக்கிரகத்தின் பின் புறம். கல்சுவர்கள் தான் . ஆனாலும் இன்னும் அது சுத்தப் படுத்தாமல் மண் அப்பியே படியே இருந்தது.

முக்கியமான சன்னிதிகள்,மற்றும் முன் பக்கத் தூண்கள் என்று அவற்றை சுத்தம் செய்து வைத்தவர்கள் இந்தப் பகுதியை அப்படியே விட்டுவிட்டனர்.

இயல் அந்தச் சுவற்றின் முன் நின்று கொண்டு எதையோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் துடைக்கும் ப்ரெஷ் இல்லாததால் தனது துப்பட்டாவை வைத்துத் துடைக்க,

“எல்லாத்துக்கும் துப்பட்டாவை யூஸ் பண்ற!” கணீர் குரலுடன் அவள் முன்னே வந்து நிற்க,

அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“சாரி சடனா வந்து பயமுறுத்திடேன்” கருப்பு நிற சட்டையும் காக்கி நிற பேண்டும், ஸ்டைலாக ஒரு ரே பான் கண்ணாடியும் அணிந்து எதிரே வந்து நிற்பவனைப் பார்த்ததும் அவள் மனதும் சற்று எம்பி குதிக்கவே செய்தது.

“ இல்ல பரவால்ல.. ப்ரெஷ் கொண்டு வரல, அதான் என்ன இருக்குன்னு பார்க்க துப்பட்டாவை யூஸ் பண்ணேன்..வேற எதுக்கு நான்….” சொல்லும்போதே ஆகாஷின் கண்களைத் துடைத்தது நினைவிற்கு வர,

‘பார்த்துட்டு தான் கேட்கராரோ! ஆனா இதுல என்ன தப்பிருக்கு, ஹெல்ப் பண்றது தப்பா’

“ வேற எதுக்கும் …?!” அவள் விட்ட இடத்திலேயே அவன் நிற்க,

“ அது ஹெல்ப் பண்ண தான் …” ஏனோ அவனிடம் நேராகப் பார்த்துச் சொல்ல தயங்கினாள்.

“ ஒன்னு தெரிஞ்சுக்கோ , அவன் எப்பவுமே ரொம்ப கேர்ஃபுல்லா இருப்பான் அவன் விஷயத்துல.. அதுனால அவனப் பத்தி கவலைப் பட வேண்டாம்” சற்று குரலில் காட்டம் இருந்ததோ!

‘ஆகாஷ் விளையாட்டுக்கு செய்தது அவளுக்கும் சற்று எரிச்சல் தான்’ “ம்ம் சரி” அவனை எதிர்த்துப் பேசாமல் தலையாட்டினாள்.

“ இங்க என்ன பாத்துட்டு இருக்க..” அவள் அருகில் நெருங்கி வந்து நிற்க,

அவளே அங்கு நிலம் சீராக இல்லாமல் தடுமாறி நின்றுகொண்டிருந்தாள். இவன் வேறு அருகில் வந்து நின்று மேலும் தடுமாற வைத்தான்.

“ இங்க ஒரு சிற்பம் செதுக்கி இருக்காங்க, ஆனா எங்கயும் இப்படி ஒரு வடிவத்தை நான் பார்த்ததில்ல …” அவள் கூறவும், அந்தச் சுவரைப் பார்த்துக் கொண்டே அவளது கையில் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ப்ரெஷைக் கொடுத்தான்.

அவளும் அதை வாங்கி அந்தச் சிற்ப்பத்தை துடைத்தாள்.

அவள் துடைத்ததில் தெரிய ஆரம்பித்த சிற்பம் வாகீசனின் மண்டைக்குள் குடைய ஆரம்பித்தது.

ஒரு செவ்வக வடிவம் அருகில் இரண்டு ராட்சச உருவம், ஆனால் அந்த செவ்வகத்தின் கீழே பெரிய பாம்பைப் போன்ற அமைப்பு.

இயல் மேலும் கீழ்ப் பகுதியைத் துடைக்க, அங்கே புனல் போன்ற அமைப்பு , அதற்கும் கீழே மண் னை முட்டியது அந்தச் சுவர்.

“ இந்த சுவர இன்னும் கீழ தோண்ட சொல்லணும், என்ன இருக்குனு தெரியலையே!” அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் இயல்.

“கண்டிப்பா, இது நமக்கு ஒரு க்ளு தான்.. சூப்பர் . தேங்க்ஸ்  இயல் , இப்பவே ஆளுங்கள வர சொல்லி இன்னும் கீழ இருக்கற மணலை அப்புறப் படுத்தச் சொல்றேன்” அவளது தோளை மீண்டும் தட்டி யாருக்கோ போன் செய்தான்.

அவன் முகத்தில் ஏதோ கண்டுபிடித்த உணர்வு வர, முதல் முறையாக தன்னைப் பாராட்டிவிட்டான் என்று இயலும் மனதிற்குள் ஆட்டம் போட்டாள்.

பஞ்சாயத்துத் தலைவர் சொன்னதாச் சொல்லி கையில் கடப்பாரை மண்வெட்டியோடு ஆட்கள் வந்தனர். அவர்களுக்கு வாகீசன் இடத்தைக் காட்ட,

அவர்களும் அந்த சுவரின் கீழே உள்ள இடத்தில்  மணலை தோண்டி எடுக்க, சில நேரத்திலேயே அந்த இடம் சற்று சமதளமாகியது. ஆனால் இருட்டியும் விட்டது.

ஆகாஷும் வந்தனாவும் கூட வந்துவிட, ஆகாஷ் டார்ச் அடித்துக் காட்ட, இயல் அந்த சுவரை சுத்தம் செய்தாள்.

அதைக் கண்ட வாகீசன் ,

“வேண்டாம் இதை காலைல வந்து பார்க்கலாம். எல்லாரும் மதியம் கூட சாப்பிடல, போலாம் வாங்க” ஆனை போட்டுவிட்டு முன்னே நடந்தான்.

சாப்பிட்டு உறக்கம் வராமல் தவித்தான் வாகீ. ‘நாம ஏன் அவ கிட்ட அப்படி பேசணும். ஹெல்ப் தான பண்ணா , ஆகாஷும் நல்ல பையன் . ச்சே!’ என தன்னையே நொந்து கொண்டான்.

அதே போன்ற சிந்தனையில் இருந்தாள் இயல். ‘நாம ஆகாஷோட விளையாட்டு தனம் தெரியாம வேலை நேரத்துல இப்படி பண்ணதுனால அவருக்குக் கோபம் வந்துடுச்சோ.’ இவள் இவ்வாறு யோசிக்க,

இருவரும் தங்கள் அறையை விட்டு ஒரே வெளியே வந்தனர். மேல் அறையிலிருந்து வாகீசனும் கீழே நின்ற இயலும் ஒரு சேரப் பார்த்துக் கொண்டனர்.

சாரி என்ற ஒற்றை வார்த்தையைக் கேட்க, இருவருக்கும் தோன்றினாலும் வார்த்தை வெளி வரவில்லை.

“ தூங்கலையா..?” வாகீ கேட்க,

என்ன சொல்வதென்று தடுமாறி, பின் , “அந்த சிற்பம் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்!” என்றாள்.

‘நம்மள விட ரொம்ப ஆர்வமா இருக்கா’ மனதில் கொஞ்சியவன்,  

“ காலைல போய் பார்க்கலாம். இப்போ தூங்கு” கையைக் கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து நிற்க, அந்த இரவு வெளிச்சத்தில் அவன் உருவத்தை  மனதில் பதித்து உறங்கச் சென்றாள்.

திருவாசகம்: 

வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

பொருள்:
கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை
மறைத்து மூடிய மாயையாகிய இருளினை
செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி,
மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும்,
அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,
மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு
மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற

 

error: Content is protected !!