KYA-36

KYA-36

                        காலம் யாவும் அன்பே 36

 

இயல் வெளியே வரும் வரை காத்திருந்தான் வாகீசன். தயங்கித் தயங்கி வெளியே வந்தவள், அவனை நிமிர்ந்தும் பாராது சுவரோடு ஒட்டியபடி வர,

அவளின் பயம் கூட அவனை ரசிக்க வைத்தது. லேப்டாப்பில் மூழ்கிய படியே மேல் கண்ணால் அவளைப் பார்த்தவன்,

‘ரொம்ப மிரண்டுட்டாளோ’ என்று அவள் செல்லும் வரை நிமிர்ந்தே பார்க்காமல் இருந்தான்.

அவளும் மெல்ல மெல்ல நகர்ந்து அறையின் கதவைத் திறந்து கொண்டு தப்பித்தால் போதுமே வெளியே ஓடிவிட்டாள்.

அவன் கீழே வரும் போது சமயலறைக்குள் புகுந்து கொண்டாள். சமயலறைக்கு வந்தாள் வெளியே தோட்டத்திற்கு சென்றாள்.

இப்படியே போக்குக் காட்டிக் கொண்டிருக்க, எப்படியும் உணவருந்த வந்து தானே ஆகவேண்டும் என விட்டுவிட்டான்.

தன் வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் வெளியே வந்த போது அவளை அங்கே காணவில்லை.

“ சாப்பாடு ரெடி ஹெட்.. வாங்க..” வந்தனா அழைக்க,

“ இயல் எங்க ?” என அவளைத் தேடினான்.

“ இங்க தான இருந்தா..இருங்க வெளில பாக்கறேன்!” தோட்டத்திற்கு சென்று பார்க்க, அங்கேயும் அவள் இல்லை.

வாகீக்கு  அவள் இங்கு இருப்பதாக தோன்றவில்லை. அவனும் வீடு முழுதும் தேட , அவள் எங்கும் கிடைக்கவில்லை.

“ எங்க போய்ட்டா..சொல்லாம..” வந்தனா புலம்ப…

ஆகாஷும் அவன் பங்கிற்குத் தேடினான்.

“ இருங்க ஹெட்..நான் பக்கத்துல எங்கயாவது போயிருக்காளான்னு பாக்கறேன்..” என அவன் கிளம்ப,

அதற்குள் பதறிப் போன வாகீசன் அவளைத் தேடுவதற்காக தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

“ இவரு ஏன் இவ்வளோ டென்ஷன் ஆகறாரு.. இங்க இருக்கறதே நாலு தெரு தான். அதுல எங்க போய்ட போறா…” வந்தனா சாவகாசமாச் சொல்ல,

“அவருக்கு இப்போ வேற மூட்..” எனச் சொல்லி முடிக்கும் முன்பு அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னால் இருந்து இயல் வெளியே வந்தாள்.

வந்தனா அவளைப் பார்க்க , “ஹே இயல்..இங்க என்ன பண்ற.. இப்போ தான் ஹெட் உன்ன தேட கிளம்பினாரு..”

கையை வீசிக் கொண்டு கூலாக வந்தவள், “ போகட்டும்..” என தோளைக் குலுக்கிக் கொண்டு சொல்ல,

“ ஹே! என்ன இயல் இப்படி சொல்ற…” ஆகாஷ் புரியாமல் விழிக்க,

“ நேத்து ஃபுல்லா அவர் சாபிட்டத என்னை சாப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணாருல.. இன்னிக்கு நான் முதல்ல சாப்டுட்டு வைக்கப் போறேன். அப்புறம் வந்து அவர் சாப்பிடட்டும்…” துடுக்காகச் சொல்லிக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

“ அடக் கடவுளே! என்ன டா இது சின்ன புள்ளைங்க ஐஸ் பாய்ஸ் விளையாடற மாதிரி நீ பஃர்ஸ்ட்டா நான் பஃர்ஸ்டா ன்னு ஆரம்பிக்கறீங்க… நாமல்லாம் யாருன்னு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க இயல் மேடம்..” ஆகாஷ் கிண்டல் செய்ய…

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. எத்தனை தடவை தான் நான் தோத்து போறது..” கிச்சனுக்குள் சென்றாள்.

“ஹே! இந்த கேம் நல்லா இருக்கு..” வந்தனா குதூகலித்தாள்.

ஆகாஷ் தலையில் அடித்துக் கொண்டான்.

சமையல் செய்யும் அம்மா, சமைத்துவிட்டு சென்றிருந்தார். சுடச் சுட தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு டேபிளுக்கு வந்தாள். அதற்குள் ஆகாஷ் வாகீசனின் மொபைலுக்கு போன் செய்ய..

அது முழுதாக அடித்து நின்றது. மீண்டும் தொடர்பு கொண்டான்.

பாதியில் வாகீசன் எடுக்க, தனியே வந்து பேசினான் ஆகாஷ்.

“ இயல் வந்துட்டாளா…” பரபரப்புக் குறையாமல் வாகீசன் கேட்க,

“ அவ இங்க தான் இருக்கா ஹெட்.. அவ இன்னிக்கு முதல்ல சாப்பிடனுமாம்.. அதுக்காக ப்ளான் பண்ணி உங்கள தேட வெச்சுட்டு , இப்போ உட்கார்ந்து சாபிட்டுட்டு இருக்கா…” விஷயத்தை சொன்னான்.

“ஓ!” அந்த ஓ வில் ஒரு நிம்மதி தெறிந்தது.

“ சரி நான் வரேன்.” என வைத்து விட்டு , அவளின் சிறு பிள்ளை தனத்தை நினைத்துச் சிரித்தான்.

“சில்லி… நீ சாப்பிட்டா என்ன நான் சாப்பிட்டா என்ன..! வந்து உன்ன வேற மாதிரி டீல் பண்றேன்.. காலைல குடுத்த ஷாக் பத்தல போல.. இன்னிக்கு நைட் நீ எங்க ஓடறன்னு பாக்கறேன்!” வேகமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

அவன் வருவதற்குள் இயல் சாப்பிட்டு விட்டு , அவர்களின் அறைக்குச் சென்றிருந்தாள்.

ஆகாஷும் வந்தனாவும் “ ஜஸ்ட் பார்  ஃபன்” என அவனை சமாதானப் படுத்த நினைக்க,

“ தட்ஸ் ஓகே கூல்.. ஆனா கொஞ்சம் ஜெர்க் குடுத்துட்டா.. ” என அவள் உண்டு விட்டு சென்ற மிச்சத்தை ரசித்து உண்டான்.

மற்ற இருவருக்குமே அவனது இந்த செயல் வியப்பை அளித்தது.

‘எத்தனை காதல் இருந்தால் சிறிதும் கோபம் இல்லாமல்  சாந்தமாக எடுத்துக் கொண்டு மிச்சத்தை உண்பான்..’ என்ற நினைப்பு தோன்றியது.

இப்போது வாகீசன் ஹாலிலேயே  இருந்தான். அறைக்குச் செல்ல வில்லை.

மூவரும் பேசிக்கொண்டிருக்க, இயல் தான் அதை மிகவும் மிஸ் செய்தாள்.

இப்போது தானாக இறங்கி கீழே செல்லவும் தன்மானம் இடம் தரவில்லை.

‘ அவன் எதுவுமே சொல்லாம சாபிட்டது மட்டுமில்லாம இப்போ சகஜமா வேற பேசிகிட்டு இருக்கனே! எதாவது கோவபட்டா அவன கொஞ்சம் டென்ஷன் ஆக்கினோம்னு இருக்கும்னு பாத்தா…  இதுலயும் அவன் என் நினைப்பை பொய்யாக்கி , அவன் உயர்ந்தவன்னு எல்லாரையும் நினைக்க வெச்சுட்டானே.. ச்சே!’ அவள் தன் நெற்றியை குத்திக் கொண்டு அமர்ந்திருக்க, வந்தனா வந்தாள்.

“ என்ன இயல் இங்கயே இருக்க.. வா கீழ கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்..” அருகில் வந்தமர்ந்தாள்.

“ இல்ல வந்தனா.. நான் வரல” முகத்தை தொங்க போட்டுக் கொண்டு சொல்ல,

“ ஹே! டெல் மீ ஒன்திங்.. நீ அவர லவ் பண்ற தான..”

“ம்ம்ம்…” சுரத்தே இல்லாமல் பதில் வந்தது.

“அப்பறம் எதுக்கு இந்த கண்ணாமூச்சி! அவருக்கும் உன் மேல இண்டரெஸ்ட் இருக்கற மாதிரி தான் தெரியுது.. ரெண்டு பேரும் பேசிகிட்டா எல்லாம் சரி ஆயிடும். அத பண்ணு..” ஒரு தோழியாக அறிவுரை சொல்ல,

“ஆமா! நான் சொல்ல வரப்ப என் டெம்ப்பர அதிகமாக்கி சொல்ல விடாம பண்ணிடறாரு.. எங்க சொல்றது..” அலுத்துக் கொண்டாள் இயல்.

“ ஹெட் ஆ…. அவரு அப்படி எல்லாம் பண்ண மாட்டாரே.. அவர் பேசறதே அதிகம்..” ஆச்சரியப் பட,

“ பேசறதா.. நீ வேற… வர்மா வ விட …” சட்டென சொல் வந்ததை நிறுத்திக் கொள்ள,

“ ஹே!!!!! என்ன சொல்ல வந்த…. ??வர்மா வ விட..??. வர்மா ஒரு காதல் மன்னன்… ஒரு வேளை நம்ம ஹெட் கூட ரொமான்ஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாரா.. !!?? எனக்கு நேத்து அவரு ஊட்டிவிடறப்பவே டவுட் தான்.. ஹே என்ன நடந்துச்சு சொல்லு…” ஆர்வமானாள் வந்தனா…

உடனே சொல்லமுடியாமல் இயல் தவிக்க…

“அதெல்லாம் இல்ல.. வர்மா வ விட நல்லாவே பேசறாருன்னு சொன்னேன்.. அவ்ளோ தான்…” மறைத்தாள்.

“ ஹ்ம்ம்.. அவ்ளோ தானா..! ஆனா ஹெட் கிட்ட இப்போலாம் ஒரு மாற்றம் தெரியுது.. முன்னாடி மாதிரி ஒரு ஸ்ட்ரிக்ட்நெஸ் இல்ல.. எல்லாம் உங்க பிறப்பு பத்தி தெரிஞ்ச பிறகு தான். கண்டிப்பா அவர் வர்மாவா மாறுகிற நாள் தூரத்துல இல்ல…” மனதில் பட்டதை சொன்னாள்.

‘ அவன் ஏற்கனவே வர்மா அவதாரம் எடுத்தாச்சு.. இனிமே வேற தனியா மாறனுமா!’ இயல் மனதில் நினைத்துச் சிரித்தாள்.

“ சரி! நீ இன்னிக்கு அவர் கிட்ட ஓபனா பேசு.. சால்வ் பண்ணுங்க… லவ் பண்ணிட்டு அதை சொல்லாம இருக்கறது ரொம்பக் கஷ்டம் பேபி..ரொம்ப நாள் தாங்காது.. சோ சீக்கிரம் சொல்லி என்ஜாய் யுவர் லைஃப்..” அனுபவத்தில் வந்தனா சொல்ல,

“ ட்ரை பண்றேன் வந்தூ…” சிரித்தபடி சொன்னாள்.

“சரி வா கீழ போகலாம்” என வலுக்கட்டாயமாக அவளை இழுத்துச் சென்றாள்.

கீழே புதிதாக ஒருவரின் குரல் கேட்க, இருவரும் வந்தனர்.

ஊர் பஞ்சாயத்துத் தலைவர் வாகீசனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“ இன்னும் ஒரு மாசம் இருப்போம் . அப்பறம் கிளம்பிடுவோம்” வாகீசன் அவர் முன் அமர்ந்து சொல்ல,

“ நீங்க இங்க தங்கரதுல எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல தம்பி.!  இன்னிக்கு ராத்திரி எங்க ஊர் கோயில்ல காப்பு கட்றோம். இன்னும் ரெண்டு வாரத்துல ஊர்ல தேர் திருவிழா. காப்பு கட்டி திருவிழா முடியற வரைக்கும் யாரும் வெளியூர் போகக் கூடாது.

அப்படியே போனாலும் இரவு தங்கக் கூடாது. சீக்கிரம் வந்துடனும். திருவிழா முடிஞ்ச பிறகு தான் நீங்க கிளம்பனும். அதுக்கு முன்ன கிளம்பிடப் போறீங்களோ ன்னு சொல்ல வந்தேன். ஒரு மாசம்னா நல்லது தம்பி.

நீங்க எல்லாரும் திருவிழால கண்டிப்பா கலந்துக்கனும்.” பொதுவாக அனைவரையும் பார்த்துக் கூறினார்.

“ நிச்சயம் கலந்துக்கறோம்…! எங்க ஊர் சாமி சக்தி வாய்ந்தது. கன்னிப் பொண்ணுங்க வேண்டிக்கிட்டு விரதம் இருந்து பூஜை செஞ்சா வரப் போற புருஷன் கண்ணுக்கு லட்சணமா , கடைசி வரை அன்போட இருப்பான்னு சொல்லுவாங்க.. நீங்களும் இருங்க பொண்ணுங்களா… அப்போ நான் வரேங்க! எதாவது உதவி வேணும்னா சௌகரியம் கொறச்சல்னா சொல்லி அனுப்புங்க.. செஞ்சு தரோம்! ” மனதார சொல்லிவிட்டுக் கிளம்ப,

“இல்லங்க… இதுவே நல்லா வசதியாத் தான் இருக்கு. ரொம்ப நன்றி!” அவரை வழி அனுப்பினான் வாகீசன்.

அவர் சென்றதும் இயலைப் பார்க்க, அவள் தலை குனிந்து கொண்டாள்.

இரவு உணவின் போதும், இயலைக் கட்டாயப் படுத்தி வரவைத்த வந்தனா முதலில் அவளுக்குப் பரிமாற , கேள்வியாகப் பார்த்தாள் இயல்.

வாகீசனும் அங்கு தான் இருந்தான்.

“ உன்ன முதல்ல சாப்பிட சொன்னாரு. அப்பறம் அவர் சாப்பிடறாராம்.” வந்தனா சொல்லவும், இயலுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

தான் யார் அவன் யார்? தான்  அவனிடம் வேலை பார்க்க வந்தவள், காலையில் அப்படி சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொண்டது அவளுக்கே உறுத்த…

“இல்ல அவரே சாப்பிடட்டும் …” என்றாள்.

இம்முறை மறுப்பேதும் சொல்லாமல் அவளுக்கு பதிலும் சொல்லாமல் அவன் உண்டுவிட்டு செல்ல,

நேற்று போல் இன்றும் அவன் ஊட்டுவானோ என எதிர்ப்பார்த்து ஏமாந்து போனாள்.

 அந்த ஏமாற்றம் அவள் முகத்தில் தெரிய, வந்தனா அவளைத் தேற்றினாள்.

“ நைட் அவர்கிட்ட பேசி சரி பண்ணு… அவருக்கு கோவம் எல்லாம் இருக்காது. மதியம் எதுவும் சொல்லாம தான சப்பிட்டார். இப்போ நீ சாப்புடு..” என்கவும்,

அவன் ஊட்டாவிட்டாலும் அவனது எச்சில் தட்டில் உண்டு வருத்தத்தில் பாதியை போக்கிக் கொண்டாள்.

பின் வந்தனாவுடன் சேர்ந்து  இடத்தை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் அந்த அறைக்குச் செல்ல அவளை தெம்பூட்டி அனுப்பினாள் வந்தனா.

கதவு திறந்தே இருக்க, அவளே உள்ளே சென்று அவனைத் தேட, அவன் அங்கே இல்லை.

தோட்டத்தில் ஆகாஷுடன் பேசும் சத்தம் கேட்க, அவன் வரும் வரை காத்திருந்தாள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வாகீசன் வந்தான்.

தனக்காக அவள் காத்திருப்பதை பார்த்தும் எதுவும் சொல்லாமல் , கதவை லேசாகச் சாத்திவிட்டு சற்று இடம் விட்டு கட்டிலில் படுத்துக் கொண்டான்.

பேச வாய் திறந்தவள் , அவன் படுத்ததும் ,

அவளும் அவளுக்கான இடத்தில் வந்து அமர்ந்தாள். அவன் கண்களை மூடியிருந்தான்.

பேசுவான் என்று எதிர்ப்பார்த்திருக்க இம்முறையும் அவளை ஏமாற்றினான்.

காலையில் அவன் முன் வர பயந்தது என்ன! இப்போது அவனிடம் பேச ஏங்குவதென்ன! விதி அவளிடம் சற்று அதிகமாகவே ஆட்டம் காட்டியது.

மெல்ல மனதை தயார் செய்து கொண்டு.. “ கொஞ்சம் பேசணும்..” எனவும்,

“ ம்ம்” கண்களை மூடிக்கொண்டே பதில் தந்தான்.

“ சாரி..” வருந்தியே கூறினாள்.

“ ம்ம்..”

“ நான் சின்னபுள்ள தனமா நடந்துகிட்டேன். எனக்கே தெறியுது. என்னவோ தெரியல நான் தோத்துகிட்டே இருக்கற மாதிரி தோணிடுச்சு.. அதுனால கிறுக்குத் தனமா இப்படி பண்ணிட்டேன். அப்புறம் தான் நான் இப்படி பண்ணதால , உங்களுக்கு ஆகாஷ் வந்தனா முன்னாடி அசிங்கமா இருந்திருக்கும்னு தோனுச்சு..

நான் ஒரு சாதாரண ஹெல்பர்.. நான் சாபிட்டதுல நீங்க சாப்பிடனும்னு நெனச்சது தப்பு தான்.

என்னை மன்னிச்சிடுங்க… ஆனா நீங்க அதை பெருசா எடுத்துக்காம சாப்பிட்டீங்க..எனக்கு அப்போ தான் உறைச்சுது.

உண்மையான நிலவரம். யார் யாருக்கு என்ன தகுதின்னு..” சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க… குரல் தழுதழுத்தது..

தான் செய்ததை விட அவனது இந்தப் பாராமுகம் அவளை இன்னும் வாட்டுவதாய் இருந்தது.

 

“சோ!” இன்னும் அவன் கண் திறக்கவில்லை.

“ சோ… சா…சா…ரிரி……” விம்மினாள்.

அவள் அழுவது தெரிந்ததும் பதறி எழுந்தவன்,

அவள் கண்களில் நீரைக் கண்டதும் … அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்…

“ஹேய்! என்னதிது … குட்டிமா…. எதுக்கு இப்போ அழற…”

அவனின் அணைப்பு அவளை மேலும் அழ வைத்தது… அவன் தோள்களில் கரைந்தாள்.

“ நான் தான் தப்பா நடந்துகிட்டேன்.. நான் ஒரு சாதாரண…”

“அடிச்சு மூஞ்சியெல்லாம் பேத்துடுவேன்… இன்னொரு தடவை அதையே சொன்னா.. யார் டி ஹெல்பர்… என் பொண்டாட்டி டி நீ.. என்கிட்டே நீ விளையாடாம வேற யார் விளையாடுவா…!

அவளைத் தன்னிடமிருந்து பிரித்துக் கோபத்தில்  கத்தினான்.

அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை வெளியே எடுத்தான்.

“ இது நான் கட்டினது. இதுக்கு என்ன அர்த்தம்! நான் உன் புருஷன்.

என்கிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு… அதே மாதிரி தான் எனக்கும்..

இந்த வர்மா ரதியைத் தாண்டி நமக்குள்ள நமக்கே நமக்கான காதல் இருக்கு. அதை நீ என்கிட்ட சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியது இல்ல…

அந்தக் காதலை நான் எப்பயோ உணர்ந்துட்டேன். உன் பார்வையே எனக்குப் போதும் டி. என்ன நினைக்கறன்னு சொல்லிடுவேன்! 

உன்னை ஒத்துக்க வைக்கத் தான் இவ்வளவு நான் செஞ்சேன்.

நீ என்னடானா ஹெல்பர் அது இதுன்னு… என்னை கோவப் படுத்தற…”

அவன் பேசப் பேச அவளின் அழுகை நின்று அவன் மனதை தெளிவாக உணர்ந்தாள்.

“ காலைல நான் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டது கூட உனக்கு என்மேல இருக்கற காதலை நீயே உணரனும்னு தான்.

என்னைப் பிடிக்கலனா நான் தொட்டது உனக்கு வெறுப்பா இருந்திருக்கும். நீ அப்படி இல்லையே… நீயே என்னைப் பார்த்து கரைஞ்சது எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்… அதுக்கு மேல அங்க நான் இருந்தா கண்டிப்பா என்னால கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு தான் டி வெளில வந்தேன்.”

அவன் மனதில் இருப்பதைக் கொட்டிக் கொண்டிருந்தான்.

 ‘எவ்வளவு தெளிவா நம்மள நோட் பண்ணிருக்கான்.’ தன்னை அவன் உணர்ந்துகொண்டத்தில் அவளுக்கு வெட்கம் பிடிங்கித் திண்றது. தலை குனிந்து கொண்டாள்.

“ நான் இப்படி எல்லாம் இருக்கற ஆளே இல்லை. நானே என்னை இப்போ புதுசா பீல் பண்றேன்..

என்னோட சுயத்தை உன்னால தான் தொலைச்சேன். இதை நான் ரெண்டு முறை உன்கிட்ட சொல்லியும் உனக்கு புரியல..

ஒத்துக்க உனக்கு மனசில்ல… இதுக்கு மேல நான் என்ன செய்யட்டும்!  என்னைப் பாரு டி!” அவள் முகத்தை கடுப்பில் நிமிர்த்தினான்.

“ ஒத்துகறேன்…!” முகம் நிமிர்ந்தாலும் கண்களை தாழ்ந்து அவனைப் பார்க்காமல் சொல்ல,

பிடித்திருந்த அவள் தாடையை விட்டான்…

“வாட்….” குறுகுறுப்புடன் அவளைப் பார்த்தான்.

அவள் மௌனம் கொள்ள,

“ ஹே! கம் அகைன்…சொல்லு… என்ன ஒத்துக்கற..??.” அவளது தோள்களைப் பற்றினான்.

அவனை விலக்கிக் கொண்டு எழுந்து திரும்பி நின்றுகொண்டாள்.  “ எனக்கும் உங்கள ரொம்ப பிடிச்சிருக்குன்னு ஒத்துகறேன்”.  அவனும் அவளின் முதுகை உரசி நிற்க,

“ யார சொல்ற .. அங்க யாருமே இல்லையே..!” காதோரத்தில் அவனது உதட்டை வைத்துப் பேச,

கூச்சத்தால் திரும்பி அவன் இதயத்தில் குடி கொண்டாள்.

“ ஐயோ… உங்களைத் தான் சொல்றேன். மிஸ்டர் வாகீஸ்வரனைத் தான் பிடிச்சிருக்குன்னு சொல்றேன். போதுமா!” அவன் முகம் பாராமல் அவன் நெஞ்சில் சிணுங்கினாள்.

“ ஹா ஹா ஹா…!” சத்தமாகச் சிரித்தான்.

“ ஹப்பா… இதுக்கு இத்தனை பாடா….!” அவளை இறுக்கி அணைத்தான்.

“ நான் அன்னிக்கே சொல்ல வந்தேன்.. நீங்க தான் என்னை உசுப்பேத்தி சொல்ல விடாம பண்ணிடீங்க…” செல்லமாக அவனை அடிக்க,…

“ அச்சிச்சோ…! பேபி அன்னிக்கே சொல்ல நினச்சீங்களோ.. நான் தான் ரெண்டு நாள் வேஸ்ட் பண்ணிட்டேனா! ம்ம்ம்…..” அவளை அள்ளிக்கொண்டு மெத்தையில் விழுந்தான்.

அவன் மேலேயே படுத்திருந்தாள். அவனது சட்டையின் பொத்தானை திருகிக் கொண்டு இருக்க, அவளது கையைப் பற்றி முத்தமிட்டான்.

அவள் வெட்கப் பட, “முதல் முத்தம்” என்றாள் சத்தமில்லாமல்…

“ நோ.. இது செகண்ட்…” அவளைது கையைப் பிடித்து விளையாடிய படியே சொல்ல,

“என்ன..!” அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க ,

“ ஆமா.. நேத்தே உன் நெத்தில கிஸ் பண்ணிட்டேன்… நீ தூங்கறப்ப…” அழகாகச் சிரித்தான்.

“ ஃபிராடு… இது போங்கு…” அவள் எழுந்து அமர,

“சரி ப்ரப்பரா இப்போ பண்ணிடலாம்…. இத ஃபர்ஸ்ட்டுன்னு டிக்லர் பண்ணிக்கலாம்… ரெடியா” அவள் கன்னங்களைப் பற்றினான்.

“ நோ…” என சொல்ல வந்தவளின் உதடுகளை மறுநொடியே சிறை செய்தான்.

அவனது முத்தத்தின் ஆழத்தை ரசித்து அதில் மூழ்கினாள். இருவரும் தன்னிலை மறந்து அந்த அமுதத்தில் திளைக்க, அவனின் வலிய தோள்களைப் பற்றிக் கொண்டாள்.

மூச்சுக்கு ஏங்கும் நேரம் கூட இடைவிடாமல் காதலைப் பரிமாறிக் கொண்டனர்…..

நீண்ட நேரத்திற்குப் பிறகு அவளை விலக்க, அவளே அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள். 

அனுபவித்தான் வாகீசன்… காதலில் கரைந்தான்.

இருவரின் மனமும் ஒன்று பட,

இருவரும் கண்ணியமாகவே உறங்கினர்.

 

 

 

 

 

 

 

error: Content is protected !!