KYA – 4
KYA – 4
காலம் யாவும் அன்பே 4
வாகீசனிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னர், வெளியே வந்தவளை வந்தனாவும் ஆகாஷும் தேற்றினர். வாகீசனைப் பற்றி அவளிடம் சொல்ல, ஏதோ கொஞ்சம் அடிபட்ட நிலையிலிருந்து வெளியே வந்தாள்.
அதன் பிறகு வாகீசனும் அவளை அன்று அழைக்க வில்லை, ஆகாஷும் வந்தனாவுமே தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைகளைப் பற்றிக் கூறினர். அவர்கள் சொன்னதிலிருந்து வாகீசன் கொடுக்கும் வேலைகளை மட்டும் தெரிந்து கொண்டாளே தவிர, அந்த ஆராய்ச்சி எதைப் பற்றியது என்பது புரியாமல் நிற்க, அதைப் பற்றிக் கேட்டாள்.
“ அது எங்களுக்குமே தெரியாது. டாப் சீக்ரெட்” வந்தனா எச்சரிக்கை செய்தாள்.
“ ஏன்? அப்படி என்ன சீக்ரெட்? இது கவர்மென்ட் அப்ரூவ் பண்ணது தான? நாம பல்கலைக் கழகத்துல தான இருக்கோம். அப்போ இது கண்டிப்பா அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கணுமே !” இயலின் சந்தேகங்கள் அதீகமாயின.
“ ஒரு வகைல இது கவர்மன்ட் அங்கீகரிச்ச ப்ரோஜெக்ட் தான். ஆனா அதையும் தாண்டி இதுல , ஹெட் தனிப்பட்ட சில ரகசியத்தைத் தான் தேடறாரு. ஆனா அதைப் பத்தி அவர் எதுவும் சொல்லல. “ ஆகாஷ் பீடிகை போட , இயலுக்கு இதில் ஆர்வம் அதிகமானது.
“ நீங்க ரெண்டு பேருமே இதுல சம்மந்தப் பட்டிருக்கீங்க , உங்க கிட்ட கூடவா சொல்லல? அட்லீஸ்ட் நீங்க இப்போ எடுத்துக் குடுக்கற குறிப்புக்கள்ல இருந்து தெரிஞ்சுக்க முடியலையா?” சத்தமாகக் கேட்டுவிட்டாள். இயலுக்கு இப்போதே தெரிந்து கொள்ள ஆர்வம் பொங்கியது.
“ ஷ்ஷ்ஷ்… மெதுவா பேசு. நாம இந்த இடத்தை விட்டு ஆராய்ச்சிக்கு அந்த லொகேஷன் போன பிறகு ஹெட் சொல்லுவாரு. அதுவரைக்கும் இங்க யாருக்கும் அது லீக் ஆகக் கூடாது. அது ஒரு கோயில் ப்ராஜெக்ட்ன்னு மட்டும் தான் வெளிய தெரியும். ஆனா ‘ஹெட்’டோட ஆராய்ச்சில அதுக்கும் மேல ஏதோ இருக்கு. அதுனால தான் எங்க கிட்ட கூட அவர் சொல்லல. காட் இட் ?” தற்காலிகமாக அவளது வாயை மூடினான் ஆகாஷ்.
“ சரி , டைம் ஆச்சு ஹெட்க்கு காஃபி கொண்டு போய் குடு” வந்தனா அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, முகத்தை ‘உம்’ என்று வைத்துக் கொண்டு , ஆகாஷ் காலையில் சொன்னபடி கலந்து எடுத்துக் கொண்டு சென்றாள்.
இந்த முறை சரியாக அவனது இடது கையால் எடுக்கும்படி கப்பை வைத்தவள் , அவன் பாராட்டுவான் என்று அங்கேயே நின்றாள்.
அவனோ நிமிர்ந்தும் பாராமல் லென்சின் வழியாக ஒரு கிழிந்த பழைய பேப்பரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அப்படி என்ன தான் பார்க்கிறான்’ என ஆர்வத்தில் இவளும் அருகில் வந்து எட்டிப் பார்க்க, அந்த நேரம் அவனும் காஃபி எடுக்க நிமிர்ந்தான்.
இருவரும் இடித்துக் கொள்ள , “ ஆஆ..” என அவளது தாடையைப் பற்றிக் கொண்டு அலறினாள். வாகீசனோ தலையில் கை வைத்துக் கொண்டு அவளைப் பார்க்க ,
“ ஹே! ஆர் யூ ஓகே! வலிக்குதா?” சிறிது கரிசனமாக அவளுக்கு அடிபட்டு விட்டதா என்று முகத்தைப் பார்த்தபடி கேட்க, அவனின் அந்த மென்மையான வார்த்தைகள் , முகத்தில் இருந்த பரிவு, காலையில் அவன் காட்டிய கோப முகத்தை மறக்கச் செய்தது.
“ ம்ம் பரவால்ல ஹெட், சாரி , நான் தான் ரொம்ப க்ளோஸ்சா வந்துட்டேன்” தாடையைத் தேய்த்து விட்டுக் கொண்டாள். அந்த இடம் சிவந்து விட, அதைக் கண்ட வாகீசனுக்கோ அவளது தாடையில் மென்மையாக ஒத்தடம் கொடுக்க வேண்டும் போல தோன்றியது. உடனே காஃபி யை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
அவளும் பின்னால் செல்ல,
“ ஆகாஷ் , வந்தனா நீங்க இயல கூட்டிட்டு காட்டேஜ்க்கு போங்க, நான் வர கொஞ்சம் லேட் ஆகும், இன்னும் டூ டேஸ் ல கெளம்பனும். சோ பேக்கிங் பண்ணுங்க” காபியை அருந்தியவன் , இயலைப் பார்க்க, அவள் மற்றவர்களிடம் ஏதோ சைகை செய்வது போல இருந்தது.
“ வாட்ஸ் அப்” என்று அவன் புரியாமல் பார்க்க,
ஆகாஷைப் பார்த்து , அவனையே சொல்லும்படி கண்களால் கெஞ்சினாள் இயல்.
“ ஹெட் , இயல் கிட்ட பிரஷ்ஷர்ஸ் (fresher’s) பார்ட்டி கேட்டோம். நைட் வெளில போய் சாப்டலாம்னு சொன்னா.. அதான் உங்க பெர்மிஷன் காக …!! “ ஆகாஷும் ஒரு வழியாக சொல்லிவிட ,
அவளை ஏற இறங்கப் பார்த்தவன் , “ ஓகே கோ அண்ட் கம் சேப்லி” என்று சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் செல்ல முயல,
“ நீங்களும் வரணும் “ இயலின் வார்த்தையில் நின்றான்.
ஒரு ஓரத்தில் அவள் தன்னிடம் அனுமதி மட்டுமே கேட்கிறாள், தன்னை அழைக்கவில்லை என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் இப்போது அவளது அழைப்பைக் கேட்டு , “ ஐ வில் ட்ரை” என்றான்.
அவள் முகம் சுருங்குவதைக் கண்டவனுக்கு ஏனோ மனதில் சிறு சந்தோஷம்!
வாகீசன் வரவேண்டும் என அவள் எதிர்ப்பார்க்கிறாள் என்பதே அந்த முகச் சுருங்கலுக்கு பின்னால் இருந்த காரணம் என்பதால்!
அவனுக்கும் செல்ல வேண்டும் என்று தான் தோன்றியது. இது போன்ற பார்ட்டிகளை விரும்பாதவன் தான் என்றாலும் , இன்று போகத் தோன்றியது. அவனது சில வேலைகளை முடித்துவிட்டு பிறகு செல்லலாம் என முடிவெடுத்தான்.
இயலுடன் ஹோட்டலுக்குச் சென்று அவளது உடமைகளை எடுத்துக் கொண்டு திருக்குமரனை மூவரும் வழியனுப்பி வைத்தனர்.
மகளைப் பிரிய மனமில்லாமல் அவரும் செல்ல, இயலுக்கும் அழுகை வந்தது. அதைக் கண்ட வந்தனா, வேண்டுமென்றே அவளை வம்பிழுத்து மூடை மாற்ற நினைத்தாள்.
“ இயல் எனக்கு ஒரு டவுட்… ஹெட் கிட்ட பயமா இருக்குன்னு சொன்ன, அப்பறம் எப்படி அவரையும் டின்னர்க்கு கூப்பிட்ட?” அவளது இந்தக் கேள்வி தன்னை மாற்றத் தான் என்பதை நன்றாக உணர்ந்தாள் இயல்.
“ நான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன். அதுக்கு இப்படி ஒரு கேள்வி கேப்பியா?உன்ன…” அடிக்க வர, ரோட்டிலேயே ஓடிப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
காலையிலிருந்து மூவரும் நிறைய பேசி அவர்களுக்குள் ஒத்துப் போவதை உணர்ந்த பின்னர் நெருக்கம் தானாக வந்தது. ‘நீ, வா , போ’ அளவிற்கு!
“ சரி அவ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு “ ஆகாஷ் அங்கேயே நிற்க,
“ ம்ம்… நீயுமா! இருக்கறது நாம நாலு பேர் தான். அவர விட்டுட்டு நாம மட்டும் போறது அவ்வளோ நல்லா இருக்காதுல..அதுனால தான் கூப்பிட்டேன்” பதில் சொன்னபோது அவனது அந்த கூரிய கண்கள் மனதில் தோன்றி மறைந்தது.
ஒரு பெரிய வீடு போன்ற அமைப்பில் நான்கு ஐந்து தனித் தனி அறைகள் இருக்கும் இடமாக இருந்தது அவர்களது காட்டேஜ். எதிரெதிரே இரண்டிரண்டு அறைகளும் நடுவில் ஒரு பெரிய தனியறையும் இருந்தது.
வந்தனாவிற்குப் பக்கத்து அறையில் இயலை தங்க வைத்தனர். அனைவரும் சிறிது நேர ஓய்விற்குப் பிறகு கிளம்பி வெளியே வர , அப்போது தான் உள்ளே நுழைந்தான் வாகீசன்.
சிறு பெண்ணைப் போல ஸ்கர்ட்டும் டாப்சும் அணிந்திருந்தாள் இயல். எளிய மேக்கப்பில் இருந்தாலும் அவளை ஆசை தீரப் பார்க்க வேண்டும் என்று தோன்ற கஷ்டப்பட்டு அதை அடக்கினான்.
“ ஹெட் நீங்களும் வாங்க, சேந்து போய்டலாம் “ ஆகாஷ் அழைக்க,
அவனது குரலில் கலைந்தவன் “ கிவ் மீ டென் மினிட்ஸ்” ,அவனது அறைக்குள் புகுந்தான்.
அதற்குள் மூவரும் செல்பி எடுத்துக் கொண்டிருக்க, ‘ அவர் நியூ டீம்மேட்’ என வாட்சப்பில் ஸ்டேடஸ் போட்டான்.
“ எதுக்கு இந்த விளம்பரம் !?” இயல் ஆகாஷை வார,
“இவன் அப்படி தான் இயல். ஒரு தடவ நான் தூங்கறப்ப போட்டோ எடுத்து போட்டு என் மானத்த வாங்கிட்டான். நான் ஊற விட்டு வர வரைக்கும் என்னை ஓட்டுனாங்க !” சிறு கடுப்புடன் அவன் அன்று செய்ததைச் சொல்லி கோபம் கொண்டாள் வந்தனா.
“ உம்… உம்… பேபி… மை ஸ்வீட்டோ….” ஆகாஷ் அழகு காட்டிக் கொஞ்ச ,
“ போடா எரும ! கண்டிப்பா ‘டிட் ஃபார் டாட் ‘ பண்ணியே தீருவேன். வெய்டிங் ஃபார் யுவர் ஃபால்” அவனைத் தள்ளிவிட்டாள்.
இவர்களின் இந்தச் சின்ன சின்ன சீண்டல்கள் இயலுக்கு மிகவும் பிடித்தது. ‘நாவல்ல வர ஹீரோ ஹீரோயினா இவங்க ? அப்போ நான் என்ன சைடு கேரக்டரா!’
தன்னை மறந்து அவளின் சிந்தனை உலகத்தில் இருந்தவளின் பின்னால் வாகீசன் வந்து நின்றான்.
“மெயின் கேரக்டர் முன்னாடி போங்க ” – ஆகாஷ் சொல்ல,
“ என்ன ?!” ,தான் நினைத்தது இவர்களுக்கும் கேட்டு விட்டதா என பதறினாள்.
“ ஆமா நீ தான வாங்கித் தரப் போற , அப்போ நீ தான் மெயின்” வந்தனா சப்போர்ட் செய்யவும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டாள் இயல்.
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவ்வளவு நேரம் அவர்களது கிண்டல்களையும் கலாட்டாக்களையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஹெட் மெதுவாக ஆரம்பித்தான்.
“ நான் உங்க எல்லார்கிட்டயும் கொஞ்சம் பேசணும். நாம கிளம்பறத்துக்கு முன்னாடி சில விஷயங்களை தெளிவா சொல்லிடறேன். “ அனைவரையும் பார்க்க,
“ ஹெட், நீங்க பேசறதே பெரிய விஷயம். சொல்லுங்க “ ஆகாஷ் சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ டோன்ட் புல் மை லெக்ஸ் மேன். தேவை இல்லாம பேச மாட்டேன். தட்ஸ் ஆல் “ .
“ ஓகே லிசன். நம்ம ப்ராஜெக்ட்ல சில சிக்கல் இருக்கு. என்ன நடந்தாலும் கடைசி வரைக்கும் போய் பார்க்கணும் . அந்த ஸ்பிரிட் உங்க எல்லார் கிட்டயும் நான் எதிர்ப்பார்க்கறேன். இப்போதிக்கு நாம போற இடத்துல தங்க ஒரு வீடு கெடச்சிருக்கு. ஆனா வேற சில க்ளூஸ் கெடச்ச அந்த பிளேஸ் போறப்ப சில சமயம் டென்ட் போட்டுத் தங்க வேண்டி இருக்கும். ஆர்கியோலோஜி ல இதெல்லாம் தவிர்க்க முடியாது.
அப்புறம் பொண்ணுங்க நீங்க ரெண்டு பேருமே உங்களுக்குத் தேவையான திங்க்ஸ் என்னென்ன வேணுமோ எடுத்துக்கலாம். அவசியமான திங்க்ஸ் மட்டும். உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன்.
ஆகாஷ் , மெடிக்கல் கிட்ஸ் எப்பவும் இருக்கணும். அது உன் பொறுப்பு. நான் என்னோட கார் எடுத்துட்டு வரேன். சோ அதுலயே போய்டலாம். எனி அதர் டவுட்ஸ் ?” அனைவரையும் கேட்க,
ஆகாஷும் வந்தனாவும் அமைதியாக இருக்க, இயல் மட்டும் கை தூக்கினாள்.
அவளின் அந்தச் செயலால் உதட்டை மடகிக் கொண்டு கண்ணை மூடி நெற்றியைத் தேய்த்தவன், “ ஃபிரஷ்ஷர் ஃப்ரம் காலேஜ் , கேளு” எனவும்,
உடனே கையை இறக்கியவள், “ நாம கோவிலைத் தேடி போறோம்னு இவங்க சொன்னாங்க. ஆனா என்ன ஆராய்ச்சி பண்றோம், இதப் பத்தி நீங்க சொல்லவே இல்ல” தைரியத்தை வரவைத்துக் கொண்டு கேட்டு விட்டாள்.
அவளது கேள்வியில் மற்ற இருவரையும் பார்க்க, அவர்களுக்கும் அந்த கேள்வி இருப்பது அவனுக்குத் தெரிந்தது.
“ சரி, சொல்றேன். உங்களுக்கும் கண்டிப்பா தெரிஞ்சு தான் ஆகணும். ஆனா இந்த விஷயம் நம்ம நாலு பேர் தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது. அதுனால இங்க வேணாம். நாம கிளம்பிப் போறப்ப ட்ராவல்ல இதைப் பத்தி சொல்றேன்.
இட் இஸ் எ பிக் திங் ! நீங்க அதைப் பத்தி தெரிஞ்சுக்க உங்க மைன்ட தயார் பண்ணிக்கோங்க. இப்போ கெளம்பலாம்”
வாகீசன் பேசியதிலிருந்து காட்டேஜ் வந்து சேரும் வரை ஒருவரும் பேசவில்லை. என்னவாக இருக்கும் என்று அனைவரும் தலை குழம்பினர்.
அவர்கள் செல்லப் போவது ஒரு கோவிலைத் தேடி என்பது மட்டும் தான் கவர்ன்மென்ட் அவர்களுக்குக் கொடுத்த வேலை. வாகீசன் சொல்வதை வைத்து அவரவர்களின் கற்பனை எங்கோ சென்றது.
அடுத்த இரண்டாம் நாள் இரவு அனைவரும் கிளம்பினர். வாகீசன் அவனது ‘ஜீப்’பை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். அனைவரின் பெட்டிகளையும் தேவையான பொருட்களையும் ஆகாஷ் எடுத்து வைத்தான்.
வந்தனா கிளம்பி வெளியே வர, இயல் அவளது அறையில் இருந்தபடியே தன் ஊரில் இருக்கும் ப்ரகதீஸ்வரனை கண்மூடி பிரார்த்தனை செய்தாள். அவளது இந்த முதல் வேலை சிறப்பாக அமைய வேண்டும், வாகீசன் ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டும் என வேண்டினாள். அவளே அறியாமல் அந்தப் எண்ணம் அவள் மனதில் தோன்றியது. கண்ணைத் திறந்த பின்பே தான் ஏன் அப்படி வேண்டினோம் என்று குழம்பினாள்.
பயணம் தொடங்கியது..
திருவாசகம் :
மால் அறியா, நான்முகனும் காணா, மலையினை, “நாம்
போல் அறிவோம்,” என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய்ப் படிறீ! கடை திறவாய்.
ஞாலமே, விண்ணே, பிறவே, அறிவு அரியான்
கோலமும், நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி, “சிவனே! சிவனே!” என்று
ஓலம் இடினும், உணராய், உணராய் காண்!
ஏலக்குழலி பரிசு’ ஏல் ஓர் எம்பாவாய்!
விளக்கம் : ‘மாலறியா’ என்றும், ‘நான்முகனுங்காணா’ என்றும் கூறியவற்றால், இறைவனைத் தெளிவு இல்லாதவர்களும், ஒருமுகப்படாதவ வர்களும் காண இயலாது என்பது விளங்கு கின்றது. போல், அசை. எழுப்பப்பட்ட பெண்ணின் சொல் வேறாகவும், செயல் வேறாகவும் இருத்தலின், அவளைப் ‘படிறீ’ என்றனர். இறைவனிடம் அன்பு செலுத்துவோர், அவனது உருவத்திருமேனியை நினைந்து அவனது அருட்செயல்களைப் பாடுவர் என்பது ‘கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடி’ என்றதனால் தெரிகின்றது. ‘ஏலக்குழலி’ என்றதனால், கூந்தலை அலங்கரித்துக்கொள்பவள் என்பதைச் சுட்டினர்.
இதனால், இறைவனை ஊனக்கண்ணால் காண முடியாது என்பதும், அருட்கண்ணால் காணலாம் என்பதும் கூறப்பட்டன.