KYA – 5

KYA – 5

                     காலம் யாவும் அன்பே 5

 

அனைவரும் ஜீப்பின் அருகில் நின்றுக்க இயல் மட்டும் தான் அவனுக்காக வேண்டிக் கொண்டதை நினைத்துக் கொண்டே மெதுவாக வந்தாள்.

அவளும் வந்தனாவும் பின்னால் ஏறிக்கொள்ள, ஆகாஷும் வாகீஸ்வரணும் முன்னால் அமர்ந்திருந்தனர்.

“ டிரைவ் பண்றியா ஆகாஷ்” வாகீஸ் வாய்ப்புக் கொடுக்க,

“ நோ ஹெட், நான் ரிஸ்க் எடுக்க விரும்பல, என்னோடது ஃபுல்லா  அமெரிக்கா ட்ரிவிங். இங்க இந்தியா ல எல்லாரும் தாறுமாறா ஓட்றாங்க. என்னால சமாளிக்க முடியாதுன்னு நினைக்கறேன். அண்ட் நான் உங்க ட்ரிவிங் வேற பாத்ததே இல்ல, அதுனால நீங்களே ஓட்டுங்க, ஐ அம் தி டிஜே . நான் பாட்டு போட்டுகிட்டே வரேன். “ தனது பென்டிரைவ்வை காரில் கனெக்ட் செய்தான்.

“ ஐயோ நீயா! நீ போடற அந்த வாய்ல நுழையாத பாட்டை இங்க யார் கேட்கறது, நோ வே நான் தான் டிஜே, நான் பாட்டு போடறேன்” வந்தனா மல்லுக்கு நிக்க,

“ ஆமா உனக்கு மட்டும் தமிழ் படத்துல இருக்கற லேடஸ்ட் பாட்டெல்லாம் தெரியுமா “ திரும்பி அவளிடம் வாக்குவாதம் செய்தான்.

இவர்களின் இந்த தர்க்கம் இப்போது முற்றுப் பெறாது என்பதை அறிந்தவன், அவனது பென்டிரைவ்வை எடுத்துப் போட்டுவிட்டு ஜீப்பைக் கிளப்பினான்.

“ பார்த்த ஞாபகம் இல்லையோ….

பருவ நாடகம் தொல்லையோ……

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ….

மறந்ததே இந்த நெஞ்சமோ…..” பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

இருவரும் அமைதியாக , இயல் வாகீசனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் பழைய பாடல்கள் மேல் ஒரு பித்து. அந்தக் காலத்திற்கே சென்று விடுவாள்.

தான் அந்தக் காலத்தில் இருந்த அமைதியான சூழலில் வாழவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் வரும். இன்டர்நெட் , தொலைபேசி , டிவி போன்ற தொல்லைகள் இல்லாமல் மனிதர்களோடு மட்டுமே உறவாடும் அந்த இனிமையான காலங்கள் தனக்கு வாய்க்கவில்லையே என்பது அவளுக்கு ஒரு குறையாகவே இருக்கும். அதுனாலேயே பழையதின் மீது ஒரு மோகம். வாகீசனும் பழைய பாடலை போட்டவுடன், அவளுக்கு மனதில் ஒரு இனிமை பரவியது.

“ ஹெட்… என்னதிது… நீங்க உங்க வேலைல ரொம்ப நாளா பிசியா இருக்கீங்கன்னு தெரியும், புது பாட்டெல்லாம் காபி பண்ணி அப்டேட்டா இருக்க முடியாது தான், ஆனா இன்னும் உங்க அப்பா வாங்குன கேசட்டையே போட்டா எப்படி?! பாஸ்” ஆகாஷ் கிண்டலாகக் கேட்க,

“ இது எங்க அப்பா காலத்து பாட்டில்லை ஆகாஷ். எங்க தாத்தா காலத்துப் பாட்டு” பதிலடி கொடுத்து விட்டு கருமமே கண்ணாக வண்டி ஒட்டிக் கொண்டிருந்தான்.

“ சுத்தம்… “ ஆகாஷ் வந்தனா இருவரும் ஒரே நேரத்தில் சொல்லி, கன்னத்தில் கை வைத்துக் கொள்ள, இயலுக்கு சிரிப்பு வந்தது.

“ அட்லீஸ்ட் இதுலயாவது ரெண்டு பேரும் ஒத்துப்போரீங்களே!” எனவும் ,

வாகீசனுக்கும் இதழ்கடையில் சிரிப்பு வந்ததோ !

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, ஆகாஷ்க்கு தூக்கம் வருவது போல ஆனது.

“ இன்னும் கொஞ்ச நேரம் பாட்டு கேட்டா, நான் தூங்கிடுவேன் ஹெட். நம்ம ஆராய்ச்சி பத்தி சொல்லுங்க , அது தான் எல்லாருக்கும் இந்தப் பாட்டை விட இண்டரஸ்டிங்” சரியான நேரத்தில் கேட்க,

“ ம்ம் சொல்றேன். நானும் சிட்டி தாண்டினதும் சொல்லத் தான் காத்திருந்தேன். இந்த ஆராய்ச்சி என்னோட ப்ரொபசர் ஸ்டெஃபன்  ஆரம்பிச்சது…”

பாட்டை நிறுத்திவிட்டு, அனைவரும் அவன் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தனர்.

“ நான் செகண்ட் இயர் படிக்கும் போது ப்ராஜெக்ட் செலக்ட் பண்ண சொன்னாங்க. மத்த ஸ்டுடென்ட்ஸ் பண்ற மாதிரி இல்லாம புதுசா எதாவது செய்ய நெனச்சு , பென்சில்வேனியாவ ச்சூஸ் பண்ணேன். “

பென்சில்வேனியா என்றதும் ஆகாஷும் வந்தனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ ஹெட்.. அங்க போகவே எல்லாரும் தயங்குவாங்களே”  ஆகாஷின் முகத்தில் பீதி இருந்தது.

“ எஸ். அதுனால தான் எனக்கு அங்க போகணும்னு தோனுச்சு” அவன் குரலிலேயே தைரியம் தெரிய,

வந்தனா எச்சில் விழுங்கிக் கொண்டாள்.

“ ஏன் அப்படி என்ன இருக்கு பென்சில்வேனியால? “ எதுவும் புரியாமல் இயல் கேட்க,

ஜீப்பை ஒரு ஓரமாக நிறுத்தினான் வாகீசன். என்ன வென்று பார்க்க, ஒரு கடையும் பெட்ரோல் பங்கும் இருக்க,

“ நீ அவளுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணு நான் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வரேன்” கடைக்குள் வாகீசன் செல்ல, பின்னால் ஆகாஷும் சென்றான். வந்தனா அமைதியாக இருக்க,

“ என்ன வந்தனா சொல்லு “

“ அது கொஞ்சம் மர்மமான இடம். ‘ஹான்டட் பிளேஸ்’!” நடுங்கிய குரலுடன் சொல்ல,

“ ம்ம் இவ்ளோ தானா, எங்க ஊர்ல இது மாதிரி நிறையா இருக்கு” அவள் பயத்தைக் கண்ட இயல் சிரிக்க,

“ இல்ல இது அப்படி இல்ல, ஃபுல்லா கேளு…

அது ஒரு சர்ச் . அதுக்கு பின்னாடி ஒரு பெரிய கிரௌண்ட் இருக்கு. சர்ச் ல எப்பயாவது விசேஷம்னா அங்க தான் எல்லாரும் கூடுவாங்க. ஆனா அந்த இடத்துல ஒரு பக்கத்து மூலைல  மூணு பிரமிட் இருக்கு.

அது ஒன்னுக்குள்ள ஒன்னு இருக்கும். அதாவது முதல் பிரமிட் தான் வாசல் மாதிரி. அதுக்குள்ள போனா தான் ரெண்டாவது பிரமிட்ட அடைய முடியும்.

ஆனா சில பேரால மட்டும் தான் ரெண்டாவது பிரமிட் குள்ள போக முடியும். மூணாவது இது வரைக்கும் யாரும் போனதில்ல. ஏன்னா ரெண்டாவது பிரமிட் லையே மூச்சு முட்ட ஆரம்பிச்சுடும்.

சைன்டிபிக்கா சொன்னா அங்க ஆக்சிஜென் லெவல் ரொம்ப கம்மி. அந்த இடத்துல எந்த விதமான எலெக்ட்ரானிக் பொருளும் வேலை செய்யாது. லைட் கூட கிடையாது. மெழுவர்த்தி வெச்சு தான் அங்க என்ன இருக்குன்னு பார்க்க முடியுமாம்.

அதுவும் கொஞ்ச நேரத்துல ஆக்சிஜென் இல்லாம அணைஞ்சு போய்டும். அதையும் மிஞ்சி ஒருத்தர் பத்து நிமிஷத்துக்கு மேல இருந்தா , அவங்களுக்கு அமானுஷ்யமான சில சப்தம் எல்லாம் கேட்குமாம். அங்க நிறைய எலும்புக் கூடுகள் படம் வரையப் பட்டிருக்கு.

அந்த சத்தமும் இருட்டும் அந்தப் படங்களும் அதுக்கு மேல அங்க இருக்க முடியாம செய்யும். வெளிய வந்தபிறகும் அவங்க சுயநினைவோட இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அதுனால அந்த சர்ச் உரிமையாளர்கள் யாரயுமே அங்க போக அனுமதிக்கறதில்ல.

ஆனா அங்க இருக்கற விஷயங்கள் , மனித சக்திக்கு புலப்படாத சில விஷயங்களைப் பத்தி சொல்லுதுன்னு அங்க இருக்கறவங்க சொல்லுவாங்க. நம்ம ஹெட் இதுல எதுவரைக்கும் பாத்தாருன்னு தெரியல. “ மூச்சு விடாமல் அவளுக்குத் தெரிந்தவற்றைக் கூறி முடித்தாள் வந்தனா.

அவள் சொன்னது அனைத்தும் இயலுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. அங்கு என்ன இருக்கும் என்பதை தெறிந்து கொள்ளத் துடித்தாள். அவள் முகத்தில் சிறிதும் பயம் தெரியவில்லை.

“ உனக்குக் கொஞ்சம் கூட பயமா இல்லையா?” இயலின் முகத்தைப் பார்த்துக் கேட்க,

“ எனக்கு நான் அங்க இல்லாம போய்ட்டேனேன்னு இருக்கு, இருந்தா  கண்டிப்பா நான் எப்படியாவது அதைப் பார்த்திருப்பேன் வந்தனா, எதுக்கு பயம்!” அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்தான் வாகீசன்.

அவளின் இந்த ஆர்வம் அவனை மிகவும் கவர்ந்தது. ஒரு பெண்ணாக இருந்தும் தைரியமாக எதையும் சோதித்துப் பார்க்க நினைப்பவளைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தான் சரியான ஆளைத் தான் இந்த வேலைக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என மனதிற்குள் மெச்சினான்.

“ ஹெட் மிச்சத்தையும் சொல்லுங்க , நீங்க எது வரைக்கும் போனீங்க, ரெண்டாவது பிரமிட்டா?” வாங்கி வந்த பொருட்களை அடுக்கிய படியே ஆகாஷ் கேட்க,

“ இல்ல , மூணாவது!” அசால்ட்டாகச் சொல்லிவிட்டு வண்டிய எடுத்தான்.

“ வாவ்!” – இயல்

“ ஐயையோ” – ஆகாஷ் வந்தனா

மூவரும் ஒரே நேரத்தில் கத்த, கொஞ்சமாக கொஞ்சமே கொஞ்சமாகச்  சிரித்தான் வாகீ.

குருஞ்சிப் பூ மலர்வதைக் கூட பார்த்து விடலாம் , இவனது சிரிப்பை பார்ப்பது கடினம். ஆனால் இயல் அதை தவறவிடாமல் பார்த்துவிட்டாள்.

‘எத்தனை வசீகரமான சிரிப்பு. இதழ் பிரிக்காமல் சின்னதாக சிரித்ததர்க்கே இப்படி என்றால், இவன் எப்போதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருந்தால் , பார்வையை அவன் மீதிருந்து எடுக்கவே மாட்டோம். நிச்சாயமாக இவன் ஹீரோ தான். எல்லா வகையிலும் ! ’ அவளுக்குத் தோன்றவே செய்தது.

“ ஹெட்…. நீங்க உண்மையிலேயே கிரேட்! சூப்பர். ப்ரௌட் டு பீ யுவர் ஸ்டுடென்ட் “ ஆகாஷ் அமர்ந்தபடியே அவனைக் கட்டிக் கொள்ளப் பார்க்க,

“ டேய்! என்ன டா பண்ற … வண்டிய கவுத்துடாத…” வாகீ பிரேக் போட்டான்.

வந்தனாவும் இயலும் அங்கே நடந்த கூத்தைப் பார்த்து சிரிக்க மீண்டும் தொடர்ந்தது பயணம்.

“ எப்படி போனீங்க? அங்க என்ன இருந்துச்சு? எதைப் பத்தி க்ளூ கெடச்சுது” இயலின் கேள்விகள் அதிகமாக,

“  நான் ப்ராஜெக்டுக்கு அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து சொன்னப்ப என்னோட ஆசிரியரும் அதே முயற்சில தான் இருந்தாரு. நான் ஏற்கனவே நெட்லயும், சில பேர் இதைப் பத்தி எழுதி வச்சிருந்த புத்தகத்தையும் ஆராஞ்சு சில தகவல்கள் சேகரிச்சிருந்தேன்.

அதைப் பார்த்து அவரோட ஆராய்ச்சில என்னை சேத்துக்கிட்டாரு. ரெண்டு பேரும் அங்கே கிளம்பிப் போனோம்.”

நாமும் அங்கே சென்று பார்ப்போம்…

ஸ்டெபன் குடும்பம் பென்சில்வேனியாவைச் சேர்ந்தது. வழக்கமாக அந்த சர்ச்சுக்குத் தான் வருவார்கள். ஆகையால் அங்கிருந்த பாதிரியார் அவருக்கு மிகவும் நெருக்கம். அவரது ஆராய்ச்சி பற்றி நன்றாக அறிந்தவர். அவருக்காக மட்டுமே அந்த ஆராய்ச்சிக்கு சம்மதித்திருந்தார்.

வாகீசனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஸ்டெபன்.

வாகீசனுக்கு முதல் முறை அங்கே அடியெடுத்து வைத்ததும் உடலெங்கும் புது ரத்தம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எதனால் அந்த உணர்வு என்று இன்று வரை அவனால் அறிய முடியவில்லை.

அவர்கள் சென்றது வாரநாள் என்பதால் அங்கே ஆட்கள்  இல்லை.

அந்த நாளைத் தேர்ந்தெடுத்து தான் அவர்களும் சென்றனர். அங்கே வரிசையாக இருந்த பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் மூவரும் அந்த சர்ச்சின் பின் புறக் கதவைத் திறந்து கொண்டு மைதானத்திற்குச் சென்றனர். பெரிய விஸ்தாரமான இடம். பச்சைப் புற்கள் கம்பளம் போல விரிந்து கிடக்க, காம்பௌண்டைச் சுற்றி ஒரே சீராக மரங்கள் வளர்க்கப் பட்டு,  மைதானத்தின் நடுவில் குழந்தை இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்தது.

அதைத் தாண்டி வாகீசனின் பார்வை அந்த மூன்று பிரமிட் மீது படற, அவனை அங்கிருந்த  ஒரு சக்தி ஈர்த்தது. வேகமாக நடந்து சென்று அதன் முன்னால் நின்றான். ஒரு சிறு பௌன்டைன் (fountain) அதைத் தாண்டி  மூன்று பிரமிட்கள்.

மொத்தம் பத்தடி உயரம் தான் இருந்தது அந்த  பிரமிட்கள் .  அருகே செல்லாதே என்று ஆங்கிலத்தில் போர்டு வைக்கப் பட்டு அந்த இடத்தைச் சுற்றி மஞ்சள் நிற  கயிறு போன்றவற்றால் தடை போட்டிருந்தனர்.

அவனது ஆசிரியரும் அந்தப் பாதிரியாரும் பின்னால் வர, அவனது தயக்கத்தைப் பார்த்து

“ கோ அஹெட் மை சன்” என்றார் பாதிரியார்.

சிறு தலையசைப்புடன் முன்னேறினான். பாதிரியார் விடைப் பெற்றுக் கொள்ள, மற்ற இருவரும் முதல் பிரமிடின் வாசலில் நின்றனர்.

கற்களால் ஆனா பிரமிட் அது.ஏற்கனவே பல தொல்பொருள் ஆய்வாளர்கள் கணக்குப் படி அதன் காலம் ஐயாயிரம் வருடத்திற்கு முந்தையது என்பதை வாகீ அறிவான். அந்த பிரமிடை தனது கையால் முதலில் தொட்டுப் பார்த்தான். உடல் சிலிர்த்தது.

அதிலிருந்த சிறு வாசல் வழியாக உள்ளே நுழைந்தனர். வாசலின் மேலே நிமிர்ந்து பார்க்க, புத்தகங்களில் இருந்த படங்களைப் போன்றே பல வடிவங்கள் இருந்தது. அவற்றைக் நேரில் கண்டு பூரித்துப் போனான்.

முதலில் ஒரு கத்தியின் வடிவம் செதுக்கப்பட்டு , அருகிலேயே ஒரு அரிவாள் அதனருகில் வாய் பிளந்த ஒரு மண்டையோடு மூன்றும் அருகருகே இருந்தது. அதன் அர்த்தம், ‘தைரியம் இருந்தால் உள்ளே செல்’ என்பது தான்.

அதைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சி செய்த ஸ்டெபன் “தைரியம் நமக்கு இருக்கு. வா போகலாம்” என அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.

பகல் நேரம் என்பதால் போதுமான வெளிச்சம் முதல் பிரமிடில் இருந்தது. அதனால் அங்கே எழுதப்பட்டிருந்ததை நன்றாகப் பார்க்க முடிந்தது.

இந்த இடத்தைப் பற்றி போதுமான அளவு அனைவரும் ஆராய்ந்திருப்பதால் தனியாக அவர்கள் அறிய வேறு எதுவும் இல்லை. உள்ளே இருந்த சுற்றளவும் பத்துக்குப் பத்து அளவு தான் என்பதால் காலம் கடத்தாமல் அடுத்த பிரமிடுக்குள் செல்ல நினைத்தனர்.

இருவருமே யோகா பயிற்சி செய்தவர்கள். வாகீ முதலிலிருந்தே அதைச் செய்பவன், ஸ்டெபன் இந்த இடத்தில் ஆராய்ச்சி செய்யவே யோகா பயின்றிருந்தார்.

முதல் பிரமிடில் நின்று கொண்டு இரண்டாம் பிரமிடின் வாசலைப் பார்க்கையில் உள்ளே சிறிதும் வெளிச்சம் இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது.

கையில் எடுத்து வந்திருந்த சிறு டார்ச் , மெழுகுவர்த்தி என அனைத்தையும் ரெடியாக வைத்திருந்தான்.

டார்ச் வேலை செய்யாது என்பதை அறிந்தும், அவனே சோதித்துப் பார்க்க நினைத்தான். முதல் பிரமிடிக்கும் இரண்டாம் பிரமிடுக்கும் நடுவில் நின்று  டார்ச்சை எரியவிட்டான். எரிந்தது.

ஸ்டெபன் , “ ஒரு அடி முன்னால் எடுத்து வை” என்கவும் , அதே போல் செய்தான் , அடுத்த நொடி டார்ச்ச் அணைந்தது.

ஆச்சிர்யத்தின் உச்சத்தில் இருந்தான் வாகீசன். மீண்டும் பின்னால் வந்து டார்ச்சை உயிர்பிக்க , அது வேலை செய்யவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அடுத்த முயற்சி மெழுகுவர்த்தி. இரண்டாம் பிரமிடின் முதல் கல்லில் நின்று கொண்டனர் இருவரும் , மூச்சை இழுத்து ஒரு முறை சமன் செய்து கொண்டவன், “ போலாமா ப்ரொபசர்” என்றான்.

“ வெய்ட். பாரு வாகீ, நான் இங்க பல முறை வந்திருக்கேன். இந்த இடமும் பத்துக்குப் பத்து அளவு தான். நான் இது வரை வலது பக்க சுவர்ல இருக்கற குறிப்புகளை மட்டும் தான் எடுத்திருக்கேன். அதுனால இப்போ இடது பக்கம் நாம பாக்கணும். இந்த மெழுகுவத்தி சரியா ஒரு நிமிஷம் இருபத்தி ஐந்து விநாடி தான் எரியும். அதுவரைக்கும் உன்னால எவ்வளவு நோட் பண்ண முடியுமோ பண்ணு, நானும் பண்றேன்.

இடது பக்கம் முடிக்க நாம் இங்க ஐஞ்சு தடவ வரணும் . முதல்ல நான் மட்டும் வந்தேன் அதுனால கொஞ்சம் லேட் ஆச்சு. இப்போ ரெண்டுபேரும் சேர்ந்து பண்ணா சீக்கிரம் முடிக்கலாம். இதை எல்லாம் சேகரிச்சு அதில் இருக்கற குறிப்புகளை சால்வ் பண்ணா தான் அடுத்த பிரமிட் குள்ள போக முடியும். ஏன்னா மூணாவது பிரமிட்க்கு உள்ள போக இங்க வாசல் இல்லை” .

அதிர்ந்தான் வாகீசன்.

“என்ன…வாசலே இல்லையா !!!”அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆகாஷ் வந்தனா இயலும் அதிர்ந்தனர்.

திருவாசகம்: 

அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து,
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு,
இந்திர ஞாலம் போல வந்தருளி,
எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து,
தானே ஆகிய தயாபரன், எம் இறை,
சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி,
அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்;

 

விளக்கம்: 

ஜால வித்தை காட்டுபவன் மக்களை மயக்கும் பொருட்டு ஓர் உருவத்தைக் காட்டி மயக்கி, பின்னர் அவ்வுருவத்தை மறைத்து விடுகிறான். அது போன்று, இறைவன் உயிர்களுக்கு அருளும்பொருட்டு ஓர் உருவத்தைக் காட்டியருளிப் பின்னர் அவ்வுருவத்தை மறைத்துவிடுகிறான். இந்நிலையைக் காட்டுவார், “இந்திரஞாலம் போல வந்தருளி” என்றார். இங்கே, ‘ஒரு முதல் உருவு’ என்றது குரு வடிவம். அக்குரு வடிவம் அவனது இயற்கை வடிவத்தை மறைத்து வந்தது ஆகையால், ‘அந்தம் இல் பெருமை அழல் உருக்கரந்து’ என்றார்.

இனி, இறைவன் உயிர்தோறும் கலந்து அவற்றை இயங்கச் செய்ததும், அங்ஙனம் இயங்கும் போதும் அவை இறைவன் ஏவல் வழியன்றி இயங்க மாட்டா என்பதையும் விளக்க, “எவ்வெவர் தன்மையும் தன்வயிற்படுத்து” என்றார். அங்ஙனம் எல்லா உயிரோடும் கலந்து ஒன்றாய் இருந்தும், இறைவன் இயல்பு வேறாய் உள்ளது என்பதை விளக்குவார், “தானேயாகிய எம்மிறை” என்றார். திருக்கழிப்பாலை என்னும் தலம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ளது.

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!