KYA – 7

KYA – 7

                          காலம் யாவும் அன்பே 7

 

வாகீசனும் ஸ்டெபனும்  இரவு முழுவதும் காத்திருந்தனர். வாகீசன் அவனது குறிப்புகளை நூறாவது முறையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை தமிழ் எழுத்துக்களுடன் ஒப்பிட்டவன், அவை அந்தப் பிரமிடுக்குள் இருந்த அமைப்பை வைத்து அதனை வரிசைப் படுத்தி மொழி பெயர்த்து ஒரு வாக்கியமாக உருவாக்கியிருந்தான்.

அந்த வாக்கியம் தான் அவனுக்கு இப்போது கதவைத் திறக்கும் சாவியாகத் தெரிந்தது.

“ மெய்யான உயிரும்  மெய்யும் இணைந்திட

    எஞ்சிய உயிரும் ஆய்தமும் கோடிட்ட பிறை காட்ட

   வாள் முனை வான் முட்டி   மதி ஒளி  தீட்ட

   வழி விட்ட வாசலே!”

மனதிற்குள் மனப்பாடம் செய்து வைத்திருந்தான். அதன் அர்த்தம் புரிந்தாலும் உள்ளே சென்றால் தான் அதை சோதனை செய்ய முடியும்.

‘ தமிழுக்கும் உலகத்தின் மற்றொரு மூலையில் இருக்கும் இந்தப் பிரமிடுக்கும் என்ன சம்மந்தம் இருக்கும்! நான் தமிழோடு இதை ஒப்பிட்டது சரி தானா? அல்லது இது வேறு ஏதனும் கிரேக்க மொழியுடன் சரி பார்க்க வேண்டுமா? தவறாகவே இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை’ அவனுக்குள் சிந்தனை ஓட,

“என்ன யோசிக்கற வாகீ?”

“ இது எப்படி எங்க மொழியோட ஒத்துப்போகும்னு தெரியல, நான் தவறா கூட யோசிச்சிருக்கலாம்னு தோணுது ப்ரோஃபசர்” மனதில் இருந்ததைக் கூறினான்.

“ நானும் கணிதத்தோட தொடர்பு படுத்தி தப்பா தான் இப்போ சோதனை செஞ்சேன் வாகீ. நம்ம எல்லா வழிலயும் முயற்சிக்கணும். அதுவும் இல்லாம இதை மொழி பெயர்த்தா ஒரு அர்த்தமுள்ள வாக்கியம் வருது. அதுனால இது கண்டிப்பா சரியா தான் இருக்கும்னு தோணுது.” அவனை மேலும் தெம்பூட்டினார்.

அவனும் மெல்லிய சிரிப்புடன் தலையாட்ட, நள்ளிரவு நெருங்கியது.

இரண்டாவது பிரமிட்டிலேயே காற்றுக்குத் தவிப்பதால், மூன்றாவது இன்னும் மோசமாக இருக்கலாம் என்று ஆக்சிஜென் மாஸ்க் எல்லாம் எடுத்து வந்திருந்தனர். சிறிய கத்தி கூட வைத்திருந்தான்.பல்லாயிரம் வருடங்களாகப் பூட்டிக் கிடப்பதால் உள்ளே என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். லேசான பயம் இருவருக்குள்ளும் இருந்தாலும், அதையும் தாண்டி உள்ளே சென்று பார்த்தே தீர வேண்டும் ஆந்திரா ஆவல் தான் அதிகமாக இருந்தது.

உலகில் யாரும் திறக்க முடியாத கதவு. அது மட்டும் திறந்து விட்டால், வாழ்வில் பெரிய சாதனை செய்து விடுவார்கள்.

“எனக்கு ஒரு சந்தேகம் வாகீ!?” ஸ்டெபன் கேட்க,

அவரை கேள்வியாக நோக்கிகான் வாகீ.

“ ஏன் நள்ளிரவை தேர்வு செஞ்ச, இங்க பகல்லயே வெளிச்சம் வராதே, இரவு இன்னும் ஆபத்தானதா தோணுது. அந்த சத்தம். அது வேற  இன்னும் அதிகமா கேட்க ஆரம்பிச்சுடுச்சு”

“ இந்தப் பாடலோட ஒரு வரில மதி ஒளி ன்னு வருது. மதி னா நிலா, அந்த ஒழு பிரகாசமா நள்ளிரவு தான் இருக்கும். அதுனால தான் அப்படி சொன்னேன். சோதிச்சு பார்ப்போம். இதுல என் உயிரே போனாலும் எனக்கு சந்தோஷம் தான் ப்ரோஃபசர்” அனைத்தையும் தயார் படுத்திக் கொண்டே அவன் சொல்ல, அவனது சொல்லின் அர்த்தம் அவரை பிரமிக்க வைத்தது.

“ நீ கண்டிப்பா சாதிப்ப வாகீ. என்னுடைய வாழ்த்துக்கள்” அவனைக் கட்டிக் கொண்டார் ஸ்டெபன்.

அவர்கள் காத்திருந்த நேரம் நெருங்கியது. வெளிய வெளிச்சத்திற்காக சில விளக்குகளை வைத்திருந்தனர். ஆக்சிஜென் மாஸ்கை இருவரும் அணிந்து கொண்டனர். அந்த நிலவொளியில் முதல் முறையாக அந்தப் பிரமிடின் அழகைக் கண்டான். அது புது விதமாகத் தோன்றியது. அதன் கற்கள் மின்னுவைதப் போன்ற மாயத் தோற்றம். ரசித்துக் கொண்டு மேலே அடியெடுத்து முன்னேறிச் சென்றான்.

முதல் பிரமிடில் ஏதும் மாற்றம் தெரியவில்லை.

 இரண்டாம் பிரமிட்ல் இருவரும் செல்ல, முன்பு போல் ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றினான்.

பாடலின் படி, 

மெய்யான உயிரும்  மெய்யும் இணைந்திட

மெய்யான உயிர் என்பது உயிர்மெய் எழுத்துக்கள்

மெய் என்பது மெய் எழுத்து என்று வைத்துக் கொண்டு 

தான் மொழி பெயர்த்த அந்த எழுத்துகளை நினைவு வைத்து

இரண்டையும்(மெய்,உயிர்மெய் ) கையில் இருந்த சிறு கத்தியினால் கீறல் போட்டு இணைத்தான். இடமும் வலமும் சேர்ந்து ஒரு முடிவிலி (infinity) யைப் போல இருக்க, அடுத்து

எஞ்சிய உயிரும் ஆய்தமும் கோடிட்ட பிறை காட்ட

மீதம் இருந்தது உயிர் எழுத்துக் களும் ஆய்த் எழுத்தும், அதைக் தேட , அவை அனைத்தும் பாதி வட்ட வடிவில் அந்த சுவற்றில் இருப்பது தெரிந்தது.

அந்தப் பாடலின் வரியில் இருந்ததும் அதே தான். “பிறை காட்ட”

ஆம்! அந்த எழுத்துக்கள் பிறை போல் இருந்தது, மனம் ஒரு புறம் பூரித்துப் போனது. அவனுக்கு அந்த இடம் அதிசயமாகத் தெரிந்தது.

நேரம் கடத்தாமல், அதே கத்தியைக் கொண்டு அந்த எழுத்துகளைப்  பிறை போல இணைத்தான்.  அது முடிந்த இடம் ஆய்த் எழுத்து. அதாவது அந்த மண்டையோட்டின் குறியீடு.

அதில் சற்று அழுத்தம் கொடுத்து முடிக்க, அந்த இடம் மென்மையாக மாறியாது.

மூன்றாவது வரி நினைவு வந்தது.

வாள் முனை வான் முட்டி   மதி ஒளி  தீட்ட

   வழி விட்ட வாசலே!

 

அந்தக் கத்தி முனையால் அந்த மென்மையான பகுதியை குத்த, அது சிறு ஓட்டை போல ஆனது. அந்த சிறிய துவாரத்தின் வழியாக பார்த்தான் வாகீ. வானம் தெரிந்தது.

அந்தப் பிரமிடிற்குள் இருந்து பார்க்க, அது விண்ணை முட்டியது போலவே தோன்றியது.

அனைத்தும் நடந்தாலும் , அடுத்து என்ன என்று புரியவில்லை,

“மதி ஒளி” அங்கே இல்லை.

அவன் ஸ்டெபனைப் பார்க்க, அவர் லேசாகத் தலையாட்டினார்.

அந்த மெழுகுவர்த்தி சிறிது சிறிதாக தான் இறப்பதை உணர்த்தியது. கேட்டுக் கொண்டிருந்த சத்தங்களும் அவர்கள் அங்கிருந்து செல்லப் போவதால் தன் ஓலத்தைக் குறைத்துக் கொண்டது.

ஒரு நொடிப் பொழுது சென்றது. தீபம் அணைந்து, இருள் சூழ்ந்தது. வாகீசனின்  மனம் மிகுந்த வருத்தம் கொண்டது. பாடலின் படி அணைத்தும் நடந்தாலும், இப்போது கடைசியில் தான் தோற்றதாகவே நினைத்தான்.

தன் ஆசிரியரின் முயற்சி போல இதுவும் ஒரு தவறான கணிப்பு என்று தன் மனதை சமன் செய்ய நினைத்து , இருவரும் அங்கிருந்து வெளியேற முனைந்தனர்.

அப்போது ஒரு சத்தம் மீண்டும் கேட்டது. முன்பு போல ஒரு ஓலமாக இல்லை! காற்றைக் குழலில் திணித்தது போல மெல்லிய இனிமையான இசை.

இருவரும் திடுக்கிட்டு அது வந்த திசையைப் பார்க்க, வாகீ அந்த ஆய்த எழுத்தின் மீது போட்ட ஓட்டையிலிருந்து வெளிக் காற்று உள்ளே புகுந்து அந்த சத்தத்தைக் கொடுத்தது.

‘இவ்வளவு தானா!’ இருவரும் ஒருவரையொருவர் பார்த்து மெலிதாக சிரிக்க, அந்த அதிசயம் நிகழத் தொடங்கியது.

காற்று வந்த இடத்தில் இப்போது சிறு புள்ளியாக ஒரு வெள்ளை நிற ஒளி! அது அந்த நிலவில் ஒளி. அந்த துவாரத்தின் வழியாக அந்தப் பிரமிடுக்குள் நுழைந்தது.

இருவரும் ஸ்தம்பித்து நின்று விட்டனர். அந்த ஒளி நேராக பிரமிடின் தரையில் பட்டது. அதாவது உச்சி வானில் நிலவு வந்துவிட்டது. தரையில் பட்டதும் அந்த இடம் கண்ணாடி போல ஆனது. உடனே வாகீ க்கு தெரிந்து விட்டது. கீழே இருப்பது கண்ணாடிக் கல். அதில் இந்த நிலவொளி பட்டதும் அது பிரகாசிக்கிறது.  சிறிது சிறிதாக அந்த ஒளி பலம் பெற்று அந்த சிறு பிரமிடின் உள்ளே வெளிச்சத்தைக் கொண்டு வந்தது.

இருவரும் வாய் பிளந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க, அந்தக் கண்ணாடிக் கல்லில் இருந்து ஒளி எதிர்புறம் இருந்த பிரமிடின் சுவற்றில் ஒரு நேர்க்கோட்டில் விழுந்தது.

அதுவே மதி ஒளி காட்டிய வழி!

இருவரும் கண் கலங்கி அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

உடனே அந்த ஒளி குறையத் தொடங்கியது. அதாவது நிலவு அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டிருந்தது.

உடனே செயல் பட்டனர் இருவரும். அந்த ஒளி படிந்த சுவற்றில் சென்று அந்தக் குறிப்பிட்ட கற்களை மட்டும் அகற்ற நினைத்து கை வைத்து தள்ள,

அதிக சிரமம் கொடுக்காமல் அது நகர்ந்து வழிவிட்டது. அங்கே இருந்த அந்த நிலவொளியே போதுமானதாக இருந்தது.

அந்த சிறு துவாரத்தின் வழியாக இருவரும் மூன்றாம் பிரமிடுக்குள் கால் வைத்தனர். முதலின் சென்றது ஸ்டெபன் தான். சாதாரணமாக இருந்தார்.

அடுத்து கால் வைத்தான் வாகீ. வைத்தவுடன் , ஷாக் அடித்தது போல கீழே விழுந்தான்.

“ என்ன ஆச்சு வாகீ” பதறி அவன் அருகில் வர ,

“ நத்திங் ப்ரோஃபசர் ஐ அம் ஆல்ரைட்” என்று மீண்டும் எழுந்தான்.

இரண்டாம் பிரமிடில் கண்ணாடிக் கல்லின் வழியே மூன்றாம் பிரமிடுக்குள்  அந்த நிலவொளி புகுந்தது.

மூன்றாம் பிரமிடில் பல இடங்களில் அங்கிருந்த கண்ணாடிக் கற்கள் பதிக்கப் பட்டிருந்தது. அந்த சிறு நிலவொளி ஒரு கண்ணாடியில் பட்டு அங்கிருந்த அனைத்து கல் கண்ணாடிகளிலும் பிரதிபலித்தது.

“ வி டிட் இட் , நாம சாதிச்சுட்டோம் வாகீ…. நாம ஜெயச்சுட்டோம்” ஸ்டெபன் அந்த இடமே அதிரக் கத்தினார்.

“ எஸ் ப்ரோஃபசர்… ஐ கான்ட் பிலீவ்… “ அவனும் உற்சாகமாக,

ஆனால் ஆப்படி என்ன இங்கே மறைந்திருக்கும் என்று சுற்றிப் பார்த்தான்.

அந்த சிறு அறை இப்போது மாயலோகம் போல இருந்தது. இருவருக்கும் அதைக் காணத் தெவிட்டவில்லை.

கண்ணைக் கூசும் அளவு ஒளி பிரசகமாக இருந்தது. ஒரே ஒரு இடம் மட்டும் பலவண்ணமாக ஜொலித்தது. அங்கே சென்றான் வாகீ.

பல வண்ணக் கற்கள் பதித்த ஒரு சிறு பெட்டி. அதை வாகீ கையில் எடுக்க, ஸ்டெபனும் அங்கே வந்தார்.

கையில் எடுத்த அடுத்த நொடி அங்கே ஒளி குன்றியது. எந்தக் கற்களை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்களோ அது மீண்டும் காந்த சக்தி இழுப்பதைப் போல அதன் இடத்திலேயே சென்று சேரத் தொடங்கியது. அந்த வழி அடைத்துக் கொண்டால் , அவர்கள் இங்கேயே சிறை இருக்க வேண்டியது தான் என்பதை உணர்ந்து, அவசரமாக வெளியேறினார்கள்.

வாகீ வெளியே வருவதற்குள் இரண்டு கற்கள் அங்கே சேர்ந்து விட, கீழே படுத்து உடலைக் குறுக்கி வெளியே வந்தான். மூடும் சமயம் அவன் அனாயசமாக உள்ளே பார்க்க, அவனது பிம்பமே அந்தக் கண்ணாடிக் கல்லில் தெரிந்தது!

சட்டென கண் சிமிட்டி மீண்டும் பார்க்க முயல, அதற்குள் அந்த மூன்றாம் பிரமிட் மூடிக் கொண்டது. 

“தேங்க் காட்” இருவரும் பெருமூச்சு விட்டனர். நிலவொளி முழுதும் அங்கிருந்து சென்று விட, மீண்டும் ஓலம் அதிகமாகியது. முன்பை விட ஆக்ரோஷமாக , பயமாக இருக்க, இருவரும் வெளியே ஓடத் தொடங்கினர். அதில் அந்த பிம்பத்தைப் பற்றி மறந்தே போனான்.

பிரமிடின் வெளியே வந்து புல் தரையில் விழுந்தனர்.

தங்களின் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். சென்ற நாளில் இருந்து அந்தப் பெட்டியத் தொடக் கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருவருக்கும் கடும் காய்ச்சல்.

அந்தக் காய்ச்சலில் படுக்கையில் விழுந்தார் ஸ்டெபன். இது சாதாரண விஷயமாக அவருக்குப் படவில்லை.  

வாகீ ஒரீரு வாரத்தில் சற்று தெளிய,

அவரது வீட்டில் தனியறையில் அவனிடம் பேசினார். அவனைக் காணவே புது மனிதன் போலத் தோன்றியது. ஏற்கனவே நேர்த்தியாக இருப்பவன், இன்னும் தேஜஸ் கூடியிருப்பதை அவரால் உணர் முடிந்தது.

அவனை அருகில் அழைத்தார்.

“வாகீ! நாம அங்க போனதை பெரிய விஷயமா எல்லார் கிட்டயும் சொல்ல நினச்சேன். ஆனா, வேண்டாம் வாகீ. யார் கிட்டயும் நீயும் சொல்லாத. இதுல ஏதோ மர்மம் இருக்கு, மொதல்ல அதைக் கண்டு பிடிக்கணும். அந்த சர்ச் பாதிரியார் சொன்ன மாதிரி , இது மனித சக்திக்கு அப்பாற்பட்ட  ஏதோ ஒன்னுன்னு எனக்கும் படுது. அதை நாம வெளியே பரப்பறது அவ்வளவு நல்லா இருக்காது. சில விஷயங்கள் சில பேரால மட்டும் தான் முடியும். அதுக்கும் கடவுள் தான் அவங்கள தேர்ந்தெடுக்கறார். எனக்கு என்னமோ நீ தான் இதுக்காக இங்க வந்தவன்னு தோணுது.

இதை நீ தான் செஞ்சு முடிக்கணும். நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு தெரியல, நான் இனி இதுல தலையிட மாட்டேன். அந்தப் பெட்டியை திறந்து அதில என்ன இருக்குன்னு கண்டுபிடி” அவனுக்கு அறிவுரைகளும் சில தெளிவுரைகளும் மேலும் சொன்னவர், அவனை மேலும் இதிலேயே ஆழ்த்தினார்.

அவர் சொல்வதைக் கேட்டவன் அன்றிலிருந்து மிகவும் தீவிரமாக அதில் இறங்கினான்.

தன் அறைக்குச் சென்று அந்தப் பெட்டியைத் திறந்தான்.

அந்தப் பெட்டியில் சிறு சிறு துண்டுகளாக சில பளிங்குக் கற்கள் மற்றும் அதனுள் ஒரு தகடு.

இவை அனைத்தையும் இமைக்கவும் மறந்து மூவரும் கேட்டுக் கொண்டிருக்க, வாகீசன் தன் பணியை அதாவது வண்டி ஓட்டுவதை தடையின்றி செய்து கொண்டிருந்தான்.

திருவாசகம்:

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 

விளக்கம் :

வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே ! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,
உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !
அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

error: Content is protected !!