KYA 9

KYA 9

                           காலம் யாவும் அன்பே 9

 

இயலும் அதே இடத்தில் தடுக்கி விழுந்தாள். அதனைக் கண்டவுடன் வாகீசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருவர் மட்டுமே தடுக்கி விழ, ஒரு வேளை அவர்கள் கால் வைத்த இடத்தில் ஏதேனும் இருந்ததா என்பதில் சந்தேகம் வந்து,

அவனைத் தாங்கி இருந்த ஆகாஷை விலக்கிவிட்டு அந்தப் படிக்கட்டில் சென்ற பார்த்தான். ஆகாஷும் பின்னால் வர, மீண்டும் இருவரும் அந்தப் படிக்கட்டுகளிலன் ஒவ்வொரு அங்குலத்திலும் கால் வைத்துப் பார்க்க, இப்போது ஏதும் உணரவில்லை.

ஆனால் அவன் வைத்த முதல் அடி அவனை ஷாக் அடித்தது போல உணரவைத்தது என்பது உண்மை.

கீழே விழுந்த இயல் , வாகீசனின் அருகில் வர,

“ உனக்கு என்ன மாதிரி உணர்வு இருந்துச்சு இயல்?” அவன் குரலில் அங்கு நடந்ததை ஆராயும் எண்ணம் மட்டுமே இருந்தது. அவளும் அதை உணர்ந்து,

“ என் காலை யாரோ பிடிச்சு இழுத்த மாதிரி இருந்துச்சு. ஐ மீன் வேணும்னே காலை வாரி விட்ட மாதிரி.. ஒரு சடன் ஷாக்” எனவும் , அவனுக்கு ஏறப்பட்டது அவளுக்கும் ஏன் ஏற்பட வேண்டும் என்ற யோசனை அவனுக்குள் உதித்தது.

அந்தப் படிக்கட்டுகளை சோதித்துக் கொண்டிருந்த ஆகாஷ் , “ஹெட், நீங்க மூணாவது பிரமிடுக்குள்ள கால் வெச்சப்ப இப்படித் தான் இருந்துச்சா?” சந்தேகமாகக் கேட்க,

“ எக்சாக்ட்லி ஆகாஷ். யு ஆர் ரைட்” அவனது சந்தேகத்தை உறுதிப் படுத்தினான்.

“ஆனா ஏன் இயலுக்கும் இதே மாதிரி நடக்கணும்?” வந்தனாவும் அங்கே வர,

“ அது தான் எனக்கும் புரியல. ஐ திங்க் இங்கயும் சம்திங் இருக்கு. மே பீ அது இயல் கைல  கிடைக்கலாம். லெட்ஸ் பைஃன்ட் இட்” அவனது மூளையை எதற்கோ தயார் செய்து கொண்டான்.

இயலுக்கு அவன் சொன்னது போல தனக்கு இங்கு என்ன கிடைக்கும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.

அனைவரும் மீண்டும் அந்தப் படிகளிலிருந்து உள்ளே வர,  இடிந்த கோயிலை ஒரு முறை சுற்றிப் பார்த்தனர்.

அது பெரிதாக கட்டப் பட்டக் கோயில் போல இல்லை. அளவில் மிகவும் சிறியதாகவே இருந்தது. இரண்டு அல்லது மூன்று சந்நிதிகள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

பாதி உடைந்த சிலைகளும், சிதிலமடைந்த கல் தூண்களும் மட்டுமே இருந்தது. அந்தக் கோயிலின் மூலவர் இருக்கும் கற்பகிரகத்தை அடைந்தனர். அதற்கு மட்டுமே ஒரு அறை போன்ற அமைப்பு மாறாமல் இருந்தது.

ராட்சஸ துவாரபாலகர்கள் கை கால்கள் உடைந்த நிலையில் இரு பக்கமும் இருக்க, நடுவில் சென்ற இரண்டு மூன்று படிகளின் முடிவில்  இருள் அடைந்த இடத்தில், என்ன இருக்கிறது என்று தெரியாத வண்ணம் , மூலவர் இருந்தார்.

அதை பத்தடி தூரத்தில் இருந்தே பார்த்தனர். ஆகாஷ் எப்போதும் போல தனது காமெராவில் அந்த இடத்தைப் படம் பிடித்தான். வெளியில் இருந்து பார்த்தால், உள்ளே இருப்பது ஒன்றும் தெரியவில்லை. ஆகவே முதலில் அந்தப் படியில் ஏறிப் பார்க்கப் போனான் வாகீ. முதல் அடி வைக்கக் காலைத் தூக்க ,

அதைக் கண்ட ஆகாஷ் பதறி , “ஹெட், ஸ்டாப்!” நிறுத்தினான்.

அவனது கத்தலில் சிறிது அதிர்ந்தவன், தூக்கிய காலை அப்படியே பின்னே வைத்தான்.

“என்ன ஆச்சு !” , “என்ன?” என இரு பெண்களும் நெஞ்சு படபடக்க ஆகாஷைப் பார்க்க,

மூன்று திசையில் நின்ற மூவரையும் அசையாமல் நின்றபடி நோக்கினான் ஆகாஷ்,

அவன் அசையாமல் நிற்பதைப் பார்த்ததும் தாங்களும் இமைக்கவும் முடியாமல் நிற்க,

அனைவர் முகத்திலும் திக் என்ற உணர்வு இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

“என்ன டா ஆகாஷ், என்னனு சொல்லு, ஏற்கனவே கொஞ்சம் ஹான்டட் பிளேஸ்க்கு வந்த மாறி தான் இருக்கேன்.” வியர்வை முகத்தில் வழிய வந்தனா புலம்ப,

“ஹ்ம்ம் ஹ்ம்ம்” என தன்னை சரி செய்து கொண்டு நகர்ந்தவன்  , கீழ் கண்ணால் வாகீயைப் பார்த்து , பெரிய எட்டுக்களால் பின்னால் கால்களை எடுத்து வைத்து ஓட தயாரானான்.  

“ அது வேற ஒன்னுமில்ல, ஹெட் மறுபடியும் ஒரு ‘படில’ கால வைக்கப் போனாரா.. அதை ஸ்லோ மோஷன் ல கேமரால பார்த்ததும் , எங்க திருப்பி அவருக்கு ஷாக் அடிக்க போகுதோன்னு தான் அவர நிறுத்தினேன்…சாரி ஹெட் ஜஸ்ட் பார் ஃபன்…ஹீஹீஹீ…. ” வாகீ அவனைத் திட்டுவதற்கு முன்பு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

“ஓஓ!!! டேய் ஆகாஷ்”, அவனின் கலாட்டாவில் இருந்த களைப்புத் தீர , கையை நெட்டி முறித்து, தலையை அழுந்தக் கோதிக் கொண்டான் வாகீசன்.

“ஹே! இடியட், எரும, ஒரு செகண்ட் ஹார்டே நின்னு போச்சு பண்ணி” அவனைத் திட்டிக் கொண்டே பின்னால் ஓடினாள் வந்தனா.

இயல் அங்கு நடந்ததை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்து, பல் வரிசை தெரியுபடி அழகாகச் சிரித்தாள்.

அவளின் சிரிப்பைப் பின்னாலிருந்து கவனித்த வாகீ , ஒரு நொடி அந்தச் சிரிப்பை ரசித்து , பின்பு அவசரமாக , அவள் பார்ப்பதற்கு முன் திரும்பிக் கொண்டான்.

மீண்டும் அந்தக் கற்பகிரகம் அவனை அழைத்தது. ஆகாஷ் கிண்டலுக்குச் சொல்லியிருந்தாலும் , ஏனோ இங்கேயும் அவனுக்கு அந்த உணர்வு வருமோ என்று யோசிக்க வைத்தது. அப்படியே சிந்தித்து நின்றவனை இயலின் குரல் கலைத்தது.

காலையிலிருந்து .. ஏன் நேற்று இரவிலிருந்தே அவனிடம் ஒரு வார்த்தை கூட மறந்தும் பேசவில்லை. அதை அவனும் நன்கு அறிவான். வேண்டுமென்ற தவிர்த்த தருணங்கள் இருவருமே உணர்ந்த ஒன்று!

அப்படியிருக்க அவள் தன்னிடம் தான் பேசினாளா என்பதை அறிய அவள் புறம் திரும்பினான்.

“ உங்க கிட்ட இதை கேட்கனும்னு இருந்தேன், கேட்கலாமா?” லேசான குரலில் அழுத்தமாகக் கேட்க,

அவள் பேசியதே ஏனோ அவனுக்கு திருப்தியளிக்க,

வெறும் கண்ணசைவில் சம்மதத்தைத் தெரிவித்தான்.

“ அந்தப் பிரமிடுக்குள்ள ஏற்பட்ட உணர்வுக்கும் இங்க நடந்ததுக்கும் சம்மந்தம் இருக்கும்னு நினைக்கறீங்களா?” சற்று முன்னேறி நடந்து அவன் எதிரே வந்து நின்றாள்.

இருவரும் அந்தப் படியில் ஏறாமல் நின்றிருக்க,

“ இருக்கணும்னு தான் நான் எதிர்ப்பார்க்கறேன்” ஒரு பக்கம் தலையை சாய்த்து அவளுக்கு பதில் சொல்ல, அவனின் பார்வையோ அடுத்த கேள்வி என்பது போல் இருந்தது.

“ இங்க என்ன எதிர்ப்பார்த்து வந்திருக்கோம்..? அதை சொன்னா, அதுக்குத் தகுந்த மாதிரி எதாவது எனக்கு…. ஐ மீன் நமக்கு கிடைக்குதான்னு பார்க்கலாமே!” இயல் தயங்கித் தயங்கி கேட்க,

அவன் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்து, உண்மையிலேயே அவளது ஆர்வத்தைப் பாராட்ட நினைத்து வாய் திறக்க,

ஆனால் அவனுக்கு முன்பே அவள் வேறு அர்த்தம் பண்ணிக் கொண்டு, “நான் இப்போதிக்கு ஹெல்பர் தான் ஆனாலும் எல்லாத்துலையும் ஹெல்ப் பண்ண நினைக்கறேன்” வாகீ மீண்டும் அதையே சொல்லிக் காயப் படுத்தும் முன் முந்திக் கொண்டு , கையைப் பிசைந்த வாறே சொல்ல,

அவளை நேராகப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவளது அவசர கோரிக்கையைக் கேட்டவுடன், முகத்தில் அழகான புன்னகையைத் தவழவிட்டான்.

அதிசயமான நிகழ்வு நேரடிக் காட்சியாக இயலுக்குக் கிடைக்க, அப்படியே சிரித்த முகத்துடன் இருப்பவனை , தனக்குள் படமெடுத்துக் கொண்டாள். மெதுவாக கண்ணை சிமிட்டி ‘கடவுளே இவன் சிரிச்சா ஏன் இவ்ளோ அழகா இருக்கணும். என்ன காயப்படுத்தினவன நான் ரசிக்கறேன். அதுவும் ஒரு சின்ன , ரொம்பவே சின்ன சிரிப்புல’ நினைக்க,

“ நீ நினைக்கறது தப்பு!” குறும்பு கலந்த அவனது மயக்கும் குரலில்  கையக் கட்டிக் கொண்டு சொல்ல,

 “என்ன… !” தான் சத்தமாகப் பேசிவிட்டோமோ என்று பயந்து அவனையே உருத்து விழிக்க,

“ நான் நேத்து ஹெல்பர்ன்னு சொன்னதை நீ தப்பா புரிஞ்சுகிட்ட, அப்போவே சொல்ல நினச்சேன் ஆனா சரியான சந்தர்ப்பம் கிடைக்கல. உன்ன ஹர்ட் பண்ண நெனச்சு அப்படி பேசல,” சிறிது இடைவெளி விட்டு, அவளது தோளை சிநேகமாகத் தொட்டான்.

அவன் பேசியது கொஞ்சமே என்றாலும் அவனது வார்த்தைகள் நேற்று நடந்ததை மறக்க வைத்தது. அதற்கு மேல் அவனது இந்தத் தொடுகை..! அவனது உரமேறிய கரங்கள் அவளது தோளைப் பற்றியிருப்பது, ‘மனதிற்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது’,

“ காட் இட் ?” லேசாகத் தலையசைத்து வாகீ கேட்டகவும்,

அவளை மறந்து “ ம்ம்..பரவால்ல ஹெட்” என்றாள்.

அதற்குள் ஆகாஷ் வந்தனா அவர்கள் நின்றிருந்த நிலையைக் கண்டு ஒருவருக்கொருவர் கள்ளத் தனமாகச் சிரித்துக் கொள்ள, அவர்களின் நிழலை தன் பின்னால் உணர்ந்த வாகீ,

“இனிக்கு ராத்திரி, நான் அந்த பெட்டியில் கிடைச்சதும், இங்க வந்திருக்கற ரீசனும் சொல்றேன். இப்போ கிளம்பலாம்” என்றுவிட்டு முன்னே நடந்தான்.

நடந்த அனைத்தும் அந்தக் கற்பகிரகத்துக்கு முன் நடந்தது. அந்த இருட்டுக்குள் இருந்த விதி , அனைத்தையும் கண்டு அவர்களை அங்கே வரவேற்றது!

வாகீயும்  உள்ளே செல்லாமலேயே கிளம்பியிருந்தான். அந்தப் படியைக் கூட மிதிக்க வில்லை…

அன்று அவர்களுக்கு சமையல் செய்ய ஒரு மத்திம வயது பெண்மணி வந்திருந்தார். இவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே சாம்பார் மணம் பசியைத் தூண்டியது.

“ என்னை பஞ்சாயத்து தலைவர் நீங்க இங்க இருக்கற வரைக்கும் சமையல் செய்யச் சொல்லி அனுபிருக்காருங்க! காலைல வந்து வீட்டு வேலை செஞ்சிட்டு சமைச்சு வெச்சிட்டு போய்டுவேன். அப்புறம் நைட்டுக்கு வந்து செஞ்சு தரேங்க” பணிவுடன் வாகீசனைப் பார்த்து அந்தப் பெண்மணி சொல்ல,

தலையை மட்டும் அசைத்தான்.

அவளைக் கண்டத்தில் இயலுக்கு ஏக மகிழ்ச்சி. இனி சமையல் தொல்லை தனக்கில்லை என்று வந்தனாவைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டி மகிழ்ந்தாள்.

அனைவரையும் தரையில் அமரவைத்து, வாழை இலையில் சுடச் சுட உணவு பரிமாற, அதன் சுவை கூடியது. சற்று அதிகமாகவே உண்ட அனைவரும், பயணக் களைப்பும் தீர நன்றாக தூங்கி எழுந்தனர்.

இரவு வீட்டின் முன் இருந்த அந்த சிறு தோட்டத்தில் பூக்களின் நறுமணத்தை சுவாசித்த படி இயல் நின்று கொண்டிருக்க,

“ஹாய், இயல் இங்க எங்க பண்ற?” ஆகாஷும் சேர்ந்து கொண்டான்.

“ சும்மா தான் ஆகாஷ். இந்த முல்லை பூ ஜாதிப் பூவெல்லாம் மாலை நேரம் தான் மலரும். அந்த மொட்டு விரியும் சமயம், அதுல இருந்து வர வாசம் இருக்கே … ஹப்பா…. மயக்கும். நம்ம மனசும் புத்தியும் நம்மள அறியாமலேயே ரொம்ப ப்ரெஷ் ஆயிடும்.” உற்சாகமாக அவனுக்கு விளக்க,

“ எஸ். ரியலி இந்த ஸ்மெல் ரொம்ப நல்லா இருக்கு! ம்ம் லவ்லி.. எங்க என்னோட டார்லிங்க காணும் , வீடு புல்லா தேடிட்டு தான் இங்க வந்தேன்..” கண்களால் தேடினான்.

 அந்தப் பூக்கள் அவனது காதலியை அவனுக்கு நினைவு படுத்திவிட்டது என்று இயலின் நாவலில் ஊறிய  புத்தி சொல்ல,

“ அவ சைக்கிள்ல ரவுண்டு அடிச்சிகிட்டு இருக்கா, அதோ வரா பாரு!” கைகாட்ட,

நைட் பேண்ட்டும் டீ ஷர்டும் போட்டுக் கொண்டு அழகாக வந்திறங்கினாள் வந்தனா. இயலுக்கு  ஹை பைவ் கொடுத்தவளை ,

“என்ன விட்டுட்டு நீ மட்டும் ரவுண்டு போனியா! சரி பரவால்லா வா டபிள்ஸ் போலாமா ஒரு ரவுண்டு! ..

ரெக்க கட்டி பறக்குதடி ஆகாஷோட சைக்கிள்

ஆச பட்டு எரிக்கோ டீ ஐயாவோட பைக்கில்”,  அவளிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு ஆகாஷ் பாட்டுப் பாட,,

“உனக்கு இந்தப் பாட்டெல்லாம் தெரியுமா..” இயல் ஆச்சரியமானாள்.

“ எங்க அம்மா ரஜினி ஃபேன். சோ அவங்க கலக்ஷன் எல்லாம் கேட்ருக்கேன்” அவனது தலையை ரஜினி ஸ்டைல் பண்ண,

மீண்டும் ஒரு முறை குளித்து முடித்து , மசில் ஃபிட்(muscle fit) டீஷர்டும் ஷார்ட்ஸ்சோடும் , அழகாக கிரீம் போட்டு சீவிய தலையும் , கையில் ட்ராக் வாட்சும் அணிந்து கொண்டு அவர்கள் நின்றிந்த அந்த முன் வாசல் தோட்டத்திற்கு வந்தான் வாகீசன்.

அருகில் வந்து நின்ற அவனிடமிருந்து வந்த வாசமும் , அவனது தோற்றமும் நேர்த்தியான உடையும் , டிஷர்ட்டின் உதவியால் தெரிந்த புடைத்த அவனது கையின் வனப்பும் அந்தப் பூக்களைக் காட்டிலும் இயலை மயக்கியது.

இருந்தும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சகஜமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

“ஹெட் , நீங்க செம ஸ்மார்ட்” ஆகாஷ் பாராட்ட ,

“ஹ்ம்ம் ஹும்” தலையை நிமிர்த்தி வாகீ அவனைப் பார்க்க,

“ டேய் அவனா நீ !!” என்ற கிண்டலில் வந்தனா இறங்க..

“சீ போடி!” முகத்தை விளையாட்டாகத் திருப்பிக் கொண்டான் ஆகாஷ்.

“ லெட்ஸ் வாக் சம்டைம்” என்று வாகீ கிளம்ப,

“ஹெட் , எங்களுக்கு அந்த பாக்ஸ் பத்தி சொல்லுங்க, அப்பறம் வாக் போலாம் , தலையே வெடிச்சுடும் போல இருக்கு” அவனைத் தடுத்தான் ஆகாஷ்.

“ ஓகே” உடனே ஒத்துக் கொண்டு அங்கிருந்த மர பெஞ்சில் இரு பக்கமும் அவனது நீண்ட கைகளை பரப்பி அமர்ந்து கொண்டான்.

அவனது தோரணைகள் ஒவ்வொன்றும் இயலால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

இரு பெண்களும் அவனுக்கு எதிரே இருந்த சிறு கல்லில் அமர்ந்து கொள்ள, ஆகாஷ் ஸ்டாண்ட் போட்ட சைக்கிளை பெடல் செய்து கொண்டு அதன் மேல் அமர்ந்துகொண்டான்.

அன்று…

அந்த பெட்டியில் மொத்தம் சிறு சிறு துண்டுகளாக ஐந்து பளிங்குக் கற்கள், மற்றும் ஒரு தகடு இருந்தது.

சாதாரணமாகப் பார்த்தால் அந்தத் தகடில் எதுவும் தெரியாது. அதற்காக சில அமிலங்களை அதன் மேல் ஊற்றி சில பொடிகளை அதில் தடவி பின் துடைத்தால் அதில் இருக்கும் எழுத்துகள் தெளிவாகத் தெறியும். இது தான் பழைய தகடுகளை படிக்க அவர்கள் செய்யும் முறை.

அவ்வாறே வாகீ செய்தான். ஆனால் அதன் பின்னும் அவனுக்கு எதுவும் புலப்படாமல் போக , நம்பிக்கையைத் தளர விடாமல் அடுத்து அந்த சிறிய கற்களை கண்ணுக்கு அருகில் வைத்து ஊற்றுப் பார்த்தான்.

அதில் கூட எதுவும் தெறியவில்லை. இந்தப் பெட்டி தனக்குக் கிடைத்தும் அதை எப்படி ஆராய்வது என்று தெரியாமல் தவித்தான்.

சலித்துக் கொண்டு மீண்டும் அந்தக் கற்களை உற்றுப் பார்க்க, அந்தக் கல்லின் வழியே , கீழே டேபிளில் இருந்த தகடில் சில எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்தது.

அப்போது தான் விளங்கியது. அந்த தகடைப் படிக்க இந்தக் கற்கள் தான் உதவும் என்று!

உடனே ஒரு கல்லை வைத்து அந்தத் தகடின் எழுத்துக்களை, இல்லை இல்லை கிறுக்கல்களை ஒரு காகிதத்தில் எழுதினான்.

எழுதியவுடன் மீண்டும் அவனுக்குள் குழப்பம். இந்த ஒரு  கல்லை வைத்து உற்றுப் பார்த்து எழுதினால், எதற்கு மற்ற கற்கள் என்ற கேள்வி வந்தது.

அடுத்த கல்லை கையில் எடுத்து அதை வைத்து அந்த தகடைப் பார்க்க அதில் இப்போது வேறு மாதிரியான குறியீடுகள் தெரிந்தது.

அவனுக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம் ! எப்படி ஒரே தகடில் இரண்டு விதமான எழுத்துகள் தெரிய முடியும்!

அடுத்து மூன்றாவது கல். அதை வைத்துப் பார்க்கையில் வேறு ஒரு ஓவியம் தெரிந்தது. அதையும் வரைந்து வைத்துக் கொண்டான்.

நான்காவது ஐந்தாவது என்று அனைத்தையும் வைத்து அந்த தகடைப் பார்க்க, இப்போது அவனிடம் ஐந்து விதமான குறிப்புகள் இருந்தது.

 

இந்த அதிசயத்தை கிரகித்துக் கொள்ளவே அவனுக்கு சில மணி நேரங்கள் தேவைப்பட்டது.

 

திருவாசகம்: 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

பொருள்:
தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்,
(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்,
உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.
மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூச்க்ஷ்சுமமான) பொருளே !
வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !

error: Content is protected !!