logicIllaMagicEpilogue

மேஜிக் எபிலாக்

 

ஐந்து வருடங்களுக்குப் பிறகு,

நிரஞ்சனின் ட்ரஸ்ட் பெரிய அளவில் வளர்ந்திருந்தது, ஜெகநாதன் இப்பொழுது தன் பொறுப்புக்களை நிரஞ்சனிடம் முழுமையாக ஒப்படைத்து குறைந்தளவு கன்சல்டேஷன்களை மட்டும் பார்த்துக்கொள்ளத் துவங்கியிருந்தார்.

நந்தனா தன் மேற்படிப்பை முடித்துவிட்டு, இப்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாள்.

அன்று காஞ்சனாவின் இரண்டாவது குழந்தைக்குப் பெயர்வைக்கும் வைபவம் என்பதால் நந்தனா ஜெகந்நாதன் மைதிலியுடன் சற்று தாமதமாக காஞ்சனா கிரிதர் இல்லத்தை அடைய, அவர்களுக்கு முன்பே மருத்துவமனையிலிருந்து அங்கு வந்து காத்திருந்த நிரஞ்சன்,

மனைவியை முறைத்தபடி அவள் காதருகே குனிந்து, “ஏன் பேபி லேட்? எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க”

‘பூனைக்குப் பேன் பார்த்துக் கிட்டு இருந்தேன்’

“…”

“கேக்கறேன்ல”

அவளும் அதே ரகசிய குரலில், “நான் என்ன பண்றது?அப்புறம் சொல்றேன்”

“வாங்க ஏன் இங்கேயே நிக்குறீங்க, வாங்க மேடம்” கிரிதர் கிண்டலாக நந்தனாவை வரவேற்க,

நந்தனாவோ “ஏன் இப்படி பண்றீங்க மாமா? கொஞ்சம் லேட் ஆகிப்போச்சு அதுக்கு இந்த அக்கப்போர் தேவையா?” சிரித்தபடி புடவையைச் சற்று உயர்த்தியபடி படியேறி கிரிதரன் பின்னே செல்ல

அவசரமாக நந்தனாவின் கையைப் பிடித்து இழுத்த நிரஞ்சன்,
“புடவை கட்டிக்க வேண்டாம்ன்னு சொன்னேன் கேட்டியா? எதுக்குடி வரிஞ்சுக்கட்டிக்கிட்டு கிளம்பர? இப்படி கொஞ்சமா உயர்த்தி பிடிச்சுக்கணும்” அவளுக்குப் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்தபடி உள்ளே அழைத்துச்சென்றான்.

காஞ்சனாவின் குழந்தையை ஆசையாகக் கொஞ்சிக்கொண்டிருந்தாள் நிவேதா, மேடிட்ட வயிற்றுடன்.

“அடுத்தது நீ தான் செல்லம்” அவள் கன்னத்தைப் பிடித்து நந்தனா கொஞ்ச வெட்கத்துடன், தலைகவிழ்ந்த நிவேதா.

“நந்து கொஞ்சம் வாயேன்” நந்தனாவை தனியாக அழைத்துச் சென்றாள்.

“என்ன டா? என்ன விஷயம் சொல்லு” நந்தனா நிவேதா வயிற்றை வருடியபடி,

“பாபா நகுறும்போது சொல்லுடா தொட்டுபாக்கணும் போல இருக்கு” ஆசையாய் கேட்க

“கண்டிப்பா சொல்றேன். சரி எனக்கு ஒரு ஹெல்ப்…முடியுமா ?” நிவேதா கேட்க

“ம்ம் என்ன வேணும்?”

“அம்மா எனக்கு பிரசவம் பாக்கமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க. காஞ்சனாக்கு அம்மாதான பாத்தாங்க? ப்ளீஸ் நீ கொஞ்சம் பேசேன்” நிவேதா கெஞ்ச

“இவ்வளவுதானே? நான் பேசுகிறேன். நீ எதுவும் யோசிக்காம ஹேப்பியா இரு”

காஞ்சனாவின் குழந்தையைக் கிளம்பும்வரை ஒரு நொடிகூட விடாமல் கையிலேயே வைத்துக்கொண்டு திரிந்தாள் நந்தனா, காஞ்சனாவோ, சரஸ்வதியோ கேட்டுக் கூட கொடுக்க வில்லை,

நிரஞ்சன் வெகுநேரம் போராடி குழந்தையை காஞ்சனாவிடம் கொடுக்கவேண்டி இருந்தது.

***
இரவு அன்று காலை மைதிலி ஜெகந்நாதன் இருவருக்கிடையில் நடந்த ஊடலை நிரஞ்சனிடம் சொன்ன நந்தனா,

“முதல் வேலையா அவங்கள எங்கேயாவது பிடிச்ச இடத்துக்கு ஹனிமூன் அனுப்புறீங்க. நான் சில இடமெல்லாம் லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன்.” ஆர்வமாய் கைப்பேசியை எடுக்க, அதைப் பிடுங்கி தூரமாக வைத்த நிரஞ்சன்,

“மொதல்ல எனக்கு ஒருவிஷயம் சொல்லு. எதுக்கு அங்க அப்படி வம்பு பண்ண?”

“எங்க?”

“காஞ்சுபாப்பாவை அவகிட்ட கூட கொடுக்காம?”

“அந்த பாப்பா எவளோ சாஃப்ட் தெரியுமா? அவளோ ம்ருதுவா இருந்தது. நிஷாந்த் பிறக்கும் போது நான் ஆஸ்திரேலியா போயிட்டேன். எவளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? அதான் ஆசையா வச்சுக்கிட்டேன்” உதட்டை பிதுக்கியவள்

“உண்ட கேட்டா நீ என்ன சொல்றே? நீயே குழந்தை உனக்கு எதுக்கு இப்போ குழந்தைன்னு” முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“பார் பேபி நீ சின்ன வலியக்கூடத் தாங்க முடியாம இருக்க, கைல கத்தி பட்டத்துக்கே ஊறக்கூட்டி ரகளை பண்ணே. பிரசவ வலிலாம் எப்படித் தாங்குவ?” அவன் பயத்தை ஒரு வழியாகச் சொல்ல

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்டா. ப்ளீஸ் எனக்குன்னு ஒரு பாப்பா குடுடா…நான் அத வச்சு கொஞ்சிகிட்டு, மோந்து பார்த்துகிட்டு இருப்பேன்ல?” அவள் கொஞ்சி கெஞ்சிக் கேட்க

“ஏண்டி மோந்துபாக்க குழந்தை பெத்துப்பாங்களா? ஹாஸ்பிடலுக்கு வா நிறைய நியூபார்ன் இருக்கு பாரு,கொஞ்சு” அவன் கிண்டல் செய்ய

“நீ சரி வர மாட்ட. நான் நியாயம் கேட்க போறேன்!” கட்டிலை விட்டு இறங்கி கதவை நோக்கி அவள் செல்ல, அவள் விளையாடுகிறாள் என்று அமைதியாய் இருந்த நிரஞ்சன் கீழே அவள் கதவைத் தட்டும் ஓசைகேட்டு
“பைத்தியம் பைத்தியம்’ என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடினான்.

“அம்மா அம்மா…” கத்தியபடி மாமியார் மாமனார் அறைக்கதவை அவள் தட்ட, இரவு நேரங்களில் நந்தனா இப்படி பஞ்சாயத்துக்கு வருவது வழமையென்றாலும், கதவைத் திறந்து வெளியே வந்தவர்களுக்குப் பதற்றம் இருக்கத்தான் செய்தது.

பெற்றோர்களைக் கண்டவன், பின்னோக்கி நடக்க, மகனைக் கவனித்த ஜெகந்நாதன்,

“நில்லுடா” என்று மிரட்ட நந்தனாவை வாய்க்குள்ளே திட்டியபடி நெருங்கினான் நிரஞ்சன்.

“என்னமா என்னாச்சு?” மைதிலிக்கு பதற்றம் குறையவில்லை

நந்தனா “அது…”

நிரஞ்சன் “நீங்க ஹனிமூன் போறதை பத்தி…”

“அவர் பொய் சொல்றார்மா…”

“பேபி ப்ளீஸ்” கண்களால் மனைவியைக் கெஞ்சினான்

அவனை அதற்குமேல் கெஞ்சவைக்கப் பிடிக்காதவள், “நிவேதா ரொம்ப வருத்தமா இருக்கா. வாயும் வயிறுமா இருக்க பொண்ணு மனசு கஷ்டப் பட விடலாமா? “

“அவளுக்கென்ன?” குழம்பினான் நிரஞ்சன்

“அவ அம்மாதான் பிரசவம் பாக்கணும்னு ஆசை பட்றா” நந்தனா சொல்லவும்

“வேணும்னே மாட்டேன்னு சொல்லலமா, என்னதான் டாக்டர்னாலும், நிவேதா நான் பெத்த பொண்ணு, அவ பிரசவ வலில …முடியாதுடா எனக்குத் தைரியம் இல்ல” கண்கலங்கினார் மைதிலி

“உங்களுக்கு இருக்க அனுபவம் மத்தவங்களுக்கு இல்ல. உங்க பேரக்குழந்தையை உங்களைவிட யார் ஜாக்கர்த்தாயா கையாள முடியும்? நிவேதாக்கே இந்த நிலமைனா அப்போ எனக்கு இப்படித்தான் பண்ணுவீங்களா?” வருத்தமாக அவரைப் பார்க்க

“என்னடா? நீயும் எனக்கு பொண்ணுதானே. உன்னை மட்டும் என்னால….முடியுமா என்ன?…அதான் வைஷு இருக்காளே”

“வேண்டாம். நீங்க எனக்கு டெலிவரி பாக்க மாடீங்கன்னா அப்போ எனக்கு பாப்பா வேண்டாம்!” என்றவள் கோவமாக நிரஞ்சனிடம்

“டேய் எனக்கு வேண்டாம்டா…இப்போ கேட்டேன்ல அதை எச்ச தொட்டு அழிச்சுடு” கடுகடுத்தாள்

மனைவியின் தந்திரத்தைப் புரிந்துகொண்டவன், “சரி பேபி, அம்மாக்கு விருப்பம் இல்ல. விடு எனக்கு நீ பேபி உனக்கு நான் பேபி. வாப்போவோம்….ஹ்ம்ம்” பெருமூச்சை விட்டவன், நந்தனாவின் கையை பற்றி அழைத்துச் செல்ல

“டேய் போதும்டா உங்க டிராமா…” புன்னகைத்தார் மைதிலி

நிரஞ்சன் நந்தனா ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, திரும்பிப்பார்க்க

“நானும் நம்பிருப்பேன் நீங்க உடனே சமாதானம் ஆகாம இருந்திருந்தா. இதுவரை ஒரு தரமாவது இப்படி உடனே சமாதானம் ஆனீங்களா? இல்ல!

உன் பொண்டாட்டி சொன்னத உடனே கேட்டிருப்பியா? இல்ல!

எப்போ அவளுக்கு ஓகே சொன்னியோ அப்போவே புரிஞ்சுக்கிட்டேன். லவ் பன்றேன்னு எல்லாரையும் ஏமாத்தின ரௌடி தானே நீங்க ரெண்டு பேரும்?” இருவரையும் பார்த்துச் சிரித்தவாறு, கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர்.

“சரி சொல்லிடு உன் நாத்தனார்கிட்ட நானே பிரசவம் பாக்குறேன்னு. ஆனா உன் வாக்குறுதியை காப்பாத்தணும் சொல்லிட்டேன்” மருமகளை எச்சரித்தார்

“என்ன வாக்கு?” நந்தனா விழிக்க

“உனக்கு நான் பிரசவம் பாக்கணும்னா அதுக்கு முதல்ல நீங்க…ம்ம்ம் ஒடுங்க நேரமாச்சு” இறைவரையும் அனுப்பிவைத்தார் மைதிலி

***

24 வருடங்களுக்குப் பிறகு,

“டேய் இப்போ என்னடா சொல்ல வர?” மகன் நரேந்திரனை முறைத்துக்கொண்டிருந்தாள் நந்தனா

“பாரு பேபி எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் நான் இன்னும் நிறையக் கனவெல்லாம் வச்சிருக்கேன்”

அவள் கன்னத்தைப் பற்றிக் கொஞ்சிக்கொண்டிருந்தான், நிரஞ்சன் நந்தனா தம்பதியின் ஒரே சீமந்த புத்திரன் நரேந்திரன்.

“பேபி கிபின்னே பல்லை ஒடைச்சுடுவேன் படவா, அவ எனக்கு மட்டும் தான் பேபி” பின்னிலிருந்து குரல் கொடுத்தபடி வந்த நிரஞ்சன், நந்தனாவிடம், ‘என்ன’ ஜாடையில் கேட்க

“அந்த எருமைக்கு கல்யாணம் வேண்டாமாம், சாதிக்கோனுமாம்!” முறைத்துக்கொண்டு நின்றாள் நிருபமா, நிவேதா ஸ்ரீராம் தம்பதியின் இரண்டாவது மகள்.

“ஏனாம்? என்னடா கேடு? உன்னையே சுத்தி சுத்தி வராளே பொண்ணு…யாரது…சாருலதா? சாருமதி? சகுந்தலா? பானுமதி?” பெயரை மறந்திருந்த நிரஞ்சன் குழம்ப

“ஏன் மாமா பாகுபாலின்னு சொல்லவேண்டியது தானே?” நிருபமா நிரஞ்சனை கிண்டல் செய்ய

நந்தனாவோ, “நீ வேற ஏன் டி அவர் அசலே குழப்பவாதி” கணவனைக் கிண்டல் செய்தவள், மகனிடம்,
“டேய் உனக்கு சம்மதம்னா சொல்லு அந்த பொண்ணையே பேசி முடிப்போம்”

“இல்லமா முடியாது என்னை நம்பி இருக்க பொண்ணை நான் ஏமாத்த மாட்டேன்” அவன் சொல்லவும் அதிர்ந்த நந்தனா,

“லவ்வு ? அதுவும் நீ?” நந்தனா நம்பவில்லை

நரேந்திரனோ, “அது…நான்…நாங்க….”

நிரஞ்சன் கண்டுபுடன், “என்ன உளர்றே ?” என்று கேட்கவும், நடுங்கிய நரேந்திரன்,

“பா! நானும் நிருவும் காதலிக்கிறோம்! அவளைத் தான் கட்டிப்பேன். அவ படிப்பு முடியட்டுமேன்னு காத்திருக்கேன்” திக்கித்திணறினான்

“ஐயோ எப்…” அலறிய நிரூபமாவின் கையை அழுத்திப் பிடித்து நிறுத்தினான் நரேந்திரன்.

“ம்ம் ஆமா…நரேன் சொல்றமாதிரி தான் பண்றோம்” நிருபமா திணற

“என்ன பண்றீங்க?” நந்தனா அவளை முறைக்க

“அதான்…அந்த…” அத்தையின் முறைப்பில் நடுங்கிய நிருபமா திணற

நிரஞ்சன் கிண்டலாய் “சட்டியும் பானையும் தானே?”என்று கேட்க, என்னவென்று கூடக் கவனிக்காமல் பிள்ளைகள் இருவரும் ஆமாம் என்று தலையை ஆட்டிவிட்டு பின்பு கேலியை உணர்ந்து ‘ங்கே’ என்று விழிக்க

நிரஞ்சனும் நந்தாவும் சிரித்துவிட

நிரஞ்சனோ, “கண்லப்படாம ஓடிடுங்க…நிக்கதே… ம்ம்… எட்றா அந்த கம்பை…” என்று விரட்ட

“நீ வா பேபி” நிரூபமாவின் கையை பற்றிக்கொண்டு ஓடியே விட்டான் நரேந்திரன்.

நந்தனாவை கட்டிக்கொண்டவன் “வாலு வாலு சரியான வாலு உண்ணாட்டுமே !” புன்னகைக்க,

“உங்க பிள்ளைல அதான்… எனக்கு என்னமோ வரலாறு ரிப்பீட் ஆகப்போகுதுன்னு தோணுது…” நிரஞ்சனின் கன்னத்தைத்தட்டி அவள் சொல்ல

“என்ன?” புருவம் உயர்த்தினான்

“அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்துருக்கான். ஏண்டா உங்க குடும்பத்துல டைலாக் கூடவா மாத்த மாடீங்களா?”

“நான் புழுகவேதான் பேபி நானே உனக்கு கெடச்சுருக்கேன்!” சட்டைக்காரரைத் தூக்கிவிட்டு பெருமை பேசினான்.

“உங்க விதி நான்தான்னு எழுதி இருக்கு சார். அதான்” நந்தனா நிரஞ்சனை கொஞ்சியபடி அவன் மார்பில் சாய்ந்துகொண்டு,

“தேங்க்ஸ் ரஞ்சன். உங்க ஒரு பொய் என் வாழ்க்கையே அர்த்தமுள்ளதா ஆக்கிடுச்சு. லவ் யு டா” கண்கள் கலங்க

“லவ் யு பேபி!” மனைவியை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் நிரஞ்சன்.

வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரை ஒன்றிணைத்து, அவர்கள் வாழ்க்கையை வசந்தமாக மாற்றி இருந்தது… எண்ணற்ற உயிர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் காதலெனும் மேஜிக்!