Lovely Lavi – Episode 26

 

 

அத்தியாயம் – 26

லவி அவள் வாகனத்தை வேகமாக செலுத்த, ஹரி அவன் பைக்கை காட்டுத்தனமாகச் செலுத்திக் கொண்டு அவளை பின் தொடர்ந்தான்.  நித்திலா யாதவின் முகத்தை மீண்டும் மீண்டும் திரும்பி பார்க்க, “என்ன பாக்குற?” என்று யாதவ் நித்திலாவிடம் கேட்க, “இல்லை… லவி வேகமாக ஓட்டுவா. உங்களால் அந்த அளவுக்கு வேகமா ஓட்ட முடியுமான்னு யோசிச்சேன்?” என்று நித்திலா தயக்கத்தோடும், சற்று பயத்தோடும் கூற, “நக்கல்?” என்று யாதவ் தன் கவனத்தய் சாலையில் வைத்தபடி கேட்க, மறுப்பாகத் தலை அசைத்து, “உண்மையா தான்…” என்று இழுத்தாள் நித்திலா.

யாதவ் வேகமாகக் காரை செலுத்த, அவன் கார் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் வழுக்கிச் சென்று ஹரியின் பைக்கை தாண்டி சென்றது.

நித்திலா, கண்ணாடி வழியாக ஹரியின் பைக்கை பார்க்க, ஒரு திருப்பத்தில் கார் திரும்ப அதன் பின் நித்திலாவால் ஹரியின் பைக்கை பார்க்க முடியவில்லை.

வேகமாக சென்ற யாதவின் கார் லவியின் காரை நெருங்க, லவி வீட்டை அடையும் வரை பின் தொடர்ந்து லவி வீட்டுக்குள் செல்வதை உறுதி செய்து கொண்டு யாதவும், நித்திலாவும் அவர்கள் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.

லவி தலை பாரம் காரணமாக, அவள் அறைக்குள் சென்று விட, சங்கர் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தான்.

நேரம் ஆகிவிடவே, அனைவரும் உறங்கிவிட, வேலைக்காரர்கள் கதவைத் திறக்க சங்கர் அமைதியாக லவிக்கும் அவனுக்குமான அறைக்குள் நுழைந்து கொண்டான்.

லவி தலை வலியோடு அவள் அறையில் குறுக்கே நெடுக்கே நடக்க, சங்கர் தள்ளாடியபடி நடந்து வர, “குடிச்சிருக்கியா?” என்று தன் கண்களை சுருக்கி கேட்டாள் லவி.

சங்கர் பதில் கூறாமல் மௌனம் காக்க, “கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. குடிச்சிருக்கியா?” என்று காட்டு கத்தலாகக் கேட்டாள் லவி.

சங்கர் தன் தலையை மேலும் கீழும் அசைக்க, “உன்னை போய் யோக்கியன்னு எங்க அப்பா என்னைக் கட்டி கொடுத்தாரு பாரு. அவரை சொல்லணும்.குடிகாரன்.” என்று லவி முணுமுணுக்க, “ம்.. ச்…” என்று சலிப்பாகக் கூறினான் சங்கர்.

“ஆம்பிளைன்னு வீரத்தைக் காண்பிக்க, உன்னால குடிக்க முடியும். வேற என்ன செய்ய முடியும். உன்னால் இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியுதா? ஆம்பிளைன்னு தனியா போக வேண்டியது தானே? நீ எல்லா…” என்று லவி தன் பற்களைக் கடிக்க, “கதவு திறந்திருக்கு அங்கிள்க்கு தெரிஞ்சா என்ன ஆகுமுன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் அமைதியா இரு.” என்று போதையில் முணுமுணுத்தான் சங்கர்.

“அட… ஆம்பிளைன்னு சொன்ன உடன் வீரம் வந்திருச்சாக்கும்? இவ்வுளவு பேசுற? கதவை சாத்திட்டா மட்டும் என்ன பண்ணுவ?” என்று வீம்பாகக் கதவை தாழிட்டு அவன் முன் நிற்க, சங்கர் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

“என்ன அப்படியே பம்முற? வீட்டை விட்டுப் போன நீ ஏன் திரும்பி வந்த?” என்று லவி கேள்வியாக நிறுத்த, சங்கர் அவள் கேள்விக்குப் பதில் சொல்ல விருப்பமில்லாமல் மௌனம் காக்க, லவி அவன் அருகே சென்று அவன் சட்டையை அரை மயக்கத்தில் கொத்தாகப் பிடித்து எழுப்பி, அவன் அடிக்க கை ஒங்க, சங்கர் லவியின் சங்கு கழுத்தைப் பிடித்து சுவரோடு சாய்த்தான்.

சிறிதும் பயமின்றி லவி திமிர, அத்தனை அருகில் லவியை சங்கர் முதன் முறையாகப் பார்க்க… அந்த மயக்கத்திலும், போதையிலும் லவியின் குணம், கோபம் இவை அனைத்தையும் தாண்டி அவள் அழகு மேலோங்கி தெரிய சங்கரின் பார்வை மாறியது.

சங்கரின் பார்வை மாற்றத்தைக் கண்டுகொண்ட லவியின் மனதில் முதல் முறையாக அச்சம் தோன்றியது. அவள் அச்சத்தை லவியின் கண்கள் வெளிப்படுத்த, முதல் முறையாக லவியின் கண்கள் வெளிப்படுத்திய அச்சம் சங்கரின் மனதில் இரக்கத்திற்கு பதிலாக, காலையிலிருந்து பட்ட அவமானத்தின் வலியாக மெல்லிய புன்முறுவல் பூத்தது.

லவி தன்னை சாமளித்துக் கொண்டு, “சங்கர்… நீ நினைக்கிறது சரி இல்லை.” என்று லவி அவனை எச்சரிக்க, லவியின் தடுமாற்றம் சங்கரை ரசிக்க வைத்தது. போதை தந்த தைரியமா? இல்லை போதை தைரியத்தைத் தரும் என்ற எண்ணமா  என்று சங்கருக்கும் தெரியவில்லை. யாருக்கும் புரிவதில்லை.

ஆனால், சங்கர் அவளை விட்டு விலகவில்லை.

“ஏன் சரி இல்லை?” என்று மெல்லிய புன்னகையோடு, புருவம் உயர்த்தி வினவ, “என்ன தைரியமா?” என்று கோபமாகக் கேட்டு லவி அவன் கைகளை தட்டி விட்டாள்.

‘லவி சற்று பொறுமையாகப் பேசி இருந்தால்… சூழ்நிலை மாறி இருக்குமோ?’ என்று விதி எண்ணியது.

லவியின் கைகளை அழுத்தமாகப் பிடித்து, அவள் கழுத்தில் அசைந்தாடிய தாலியைக் கையில் எடுத்து, “நான் நினைப்பதில் என்ன தப்பு?” என்று சங்கர் கேட்க, “லூசா நீ… தாலி கட்டிட்டா போதுமா?” என்று லவி மேலும் மேலும் சங்கரைத் தரை குறைவாகப் பேச, அவள் பேச்சை தன் சொல்லால் அடக்க முடியாமல், சங்கர் தன் செயலால் அடக்க… அரை மயக்கத்தில் சங்கரிடம் போராட முடியாமல் லவி துவண்டு விழுந்தாள்.

பொறுமை இழந்து பெண் அங்கே தோற்க, ஒழுக்க நெறி தவறி மதுவால் மதுவிடமே தோற்று நின்றான் அந்த உத்தமன்.

 

மறுநாள் காலையில் எழுந்தமர்ந்து, தன் தலை கோதி தான் செய்த தவற்றை தன்னாலே ஒத்துக் கொள்ள முடியாமல் கண்ணீர் உகுத்தான் சங்கர்.

‘அவ இன்னைக்கி தான் இப்படி பேசுறாளா? எத்தனை முறை இப்படி பேசிருக்கா அவளைப் பத்தி உனக்குத் தெரியாதா? ஒரு பெண்ணை அவள் சம்மதம் இல்லமால்….’ என்றெண்ணி அவன் தலையில் அடித்துக் கொண்டு அழ, அவனை மேலும் உலுக்கியது லவியின் சொற்கள்.

லவி தூக்கத்தில் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

“டேய்… எனக்கு கல்யாணம் பிடிக்காது. அது தான் உன்னைக் கல்யாணம் செய்யவும் பிடிக்கலை. ஆனால் நீ நல்லவன்னு நினச்சனே. உன் கூட இருக்கும் பொது ஒரு பாதுகாப்பிருக்கும்னு நினைச்சி தானே கல்யாணம் நடந்தாலும் பரவாலைன்னு அமைதியா இருந்தேன். நீயும்… நீயும்…” என்று லவி அவள் வார்த்தைகளை முடிக்காமல் திரும்பிப் படுக்க, குளியலறைக்குள் சென்று தன் முகத்தில் அடித்துக் கொண்டு கதறினான் சங்கர்.

‘ஐயோ…’ என்று சொல்லைத் தவிர, சங்கருக்கு வேறு வார்த்தை வர வில்லை. ‘இதற்கு நான் என்ன பிராயச்சித்தம் செய்வேன்?’ என்ற கேள்வியே சங்கரை ஆட்டி படைக்க, அவன் தன் முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்தான்.

லவி ருத்ரதாண்டவம் ஆடிவிடுவாள் என்றிறந்தே சங்கர் வெளியே வர, சங்கரின் எண்ணத்தைச் சிறிதும் பொய்ப்பிக்காமல் லவி கண்களில் சிவப்பேற அவனை பார்த்த்தாள்.

சங்கர் தன் தலையைக் குனிந்து கொள்ள, அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “அயோக்கிய ராஸ்கல். தலையை குனிஞ்சி… குனிஞ்சி… நல்லவன் வேஷம் போட்டு… என் வாழ்க்கையை கெடுத்துட்டியே பாவி.” என்று லவி சத்தம் செய்ய, சங்கர் மௌனம் காத்தான்.

‘சாரி…’ என்ற சொல் கூட, சங்கரின் வாயிலிருந்து வரவில்லை. ‘கேட்டென்ன பயன்.’ என்ற எண்ணத்தோடு மௌனம் காத்தான் சங்கர்.

லவி வெறி அடங்காமல் அவனை அடித்து  கதவைத் திறந்து அறையிலிருந்து வெளியே தள்ள, சங்கர் லவியை எதிர்க்காமல் வெளிய விழுந்து தடுமாறி எழுந்து  நின்றான்.

இந்த காட்சியை பார்த்த லவியின் தந்தை சங்கரிடம் கை எடுத்துக் கும்பிட்டு,  “பெண்ணை தைரியமாக வளர்க்கலாம். ஆனால் இப்படி இல்லை. என்னை மன்னிச்சிரு சங்கர். என்னை மன்னிச்சிரு. நான் உன்னை நல்ல படியா வாழவைக்கணுமுன்னு நினச்சேன். ஆனால், நானே உன் வாழ்க்கையை அழிச்சிட்டேன். நான் உனக்கு கெடுதல் பண்ணிட்டேன்”  என்று கூறி, சங்கரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.

இதை எதிர்பார்க்காத சங்கர் அதிர்ச்சியோடு கீழே குனிய,  “அப்பா….” என்று  அலறினாள் லவி.

“அப்பா… என் மேல் மட்டும் தப்பில்லை அப்பா. அப்பா நடந்தது என்னனு தெரியாம…” என்று லவி கதற, லவியின் கதறலைக் கேட்க லவியின் தந்தை நடராஜ் மீண்டும் எழவில்லை.

பெண்ணை சரியாக வளர்க்கவில்லை என்றால் பெற்றவரின் நிலை தலை குனிவு தான் என்று  தலையைத் தரையில் பதித்த படி உயிரை விட்டு உலகத்திற்கு காட்டிவிட்டார் நடராஜ்.  “அப்பா… அப்பா…” என்று லவியின் கதறல் கோபமாக அன்று ஒலிக்க,

இன்று மருத்துவமனையில், “அப்பா… அப்பா… அப்பா… அப்பா…அப்பா… அப்பா…” என்ற லவியின் கதறல் ஏக்கமாக ஒலிக்க, சங்கர் அவளைக் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!