MA – 5

MA – 5

அத்தியாயம் – 5

காலையில் கிழக்கே உதித்த சூரியன் மேற்கு நோக்கி பயணத்தைத் தொடக்கி வெகுநேரம் சென்ற பின்னரே கண்விழித்த முகிலனின் பார்வை அந்த அறையைச் சுற்றி வந்தது. ஏனோ என்றும் இல்லாத தனிமை தன்னை சூழ்ந்திருப்பது போல உணர்ந்தவன் அந்த நினைவை ஒதுக்கிவிட்டு எழுந்து குளியலறைக்குள் புகுந்தான்.

அவன் ஆபீஸ் செல்லத் தயாராகிக் கீழே வந்து பார்க்க மேகாவை காணாமல் கையிலிருந்த கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். மதியம் ஒரு மணியைக் கடந்து கொண்டிருக்க, “மேகா சாப்பிட வரவில்லையா..” என்று வேலைக்காரப் பெண்ணிடம் கேட்டான்.

“இன்னும் அந்தப் பொண்ணு ரூமைவிட்டே வெளியே வரவில்லை தம்பி..” என்றதும் அவனின் பார்வை மாடியிலிருந்த அவளின் அறையைத் தொட்டு மீண்டது.

“சரி வந்த சாப்பிட சொல்லுங்க..” என்று தோளைக் குலுக்கிவிட்டு ஆபீஸ் கிளம்பிச் செல்ல அவனின் செயலைக் கவனித்த வேலைக்கார அம்மாதான், ‘இந்தப் பிள்ளைகள் இப்படி இருந்தா என்னதான் நடக்குமோ..’ என்று மனதிற்குள் புலம்பியவண்ணம் வேலையைக் கவனித்தார்.

தன்னறையில் காலையிலிருந்து தனிமையில் அமர்ந்திருந்த மேகாவின் கண்கள் தானாகவே கலங்கிக் கொண்டிருந்தது. அவளின் கையில் தாய் – தந்தையின் புகைப்படம் இருக்கவே அதைப் பார்த்து அழுதவளின் கண்ணீர் அந்தப் பிரேமில் பட்டுத் தெரித்தது.

அன்று அவர்களின் நினைவுநாள்! அவர்களை அவள் இழந்து முழுதாகப் பதினைந்து வருடம் சென்றபின்னரும் அந்த தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தவித்தது பேதை மனம்.

அந்தநேரம் அவளின் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது முகிலனின் முகம். சிலநொடியில் அவளின் சிந்தனைகள் அவனின் பக்கம் சாய்ந்தது. அவனின் தோளில் சாய்ந்து ஆறுதல் தேட அவளின் மனம் நினைக்கவே அவனின் வரவிற்காகக் காத்திருந்தாள்.

கடைசியில், ‘அதெல்லாம் நான் எதிர்ப்பார்க்கவே கூடாது’ என்று நினைத்தவண்ணம் ஏம்மாற்றத்தில் உறங்கிவிட்டாள் மேகா.

நேரம் செல்வதை தெரியாமல் அன்று முழுவதும் வேலையில் கண்ணாக இருந்தான். அவன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு நிமிரும்போது நேரம் பத்து மணியைக் கடந்திருந்தது.

இரவுவேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய முகிலன் காரை எடுக்கச் செல்ல, “ஸார்..” என்ற அழைப்புடன் அவனின் அருகே வந்தான் சுரேஷ்.

“உனக்கு ஏதாவது பிரச்சனையா?” என்று காரில் சாய்ந்து நின்று ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்த வண்ணம் கேட்டான் முகிலன்.

“ஸார் தினமும் குடிச்சிட்டு வீட்டிற்கு போகாதீங்க ஸார். பாவம் மேடம் மனசு வருத்தபடும் இல்ல..” என்ற சுரேஷ் அக்கறையுடன் சொல்ல முகிலனுக்கோ சிரிப்புதான் வந்தது.

மேகாவின் குணம் என்னவென்று அவனுக்குத் தெரியும் என்பதால் அவனுக்கு வந்த கேலி சிரிப்பு இதுவென்று சொன்னால் எதிரே நிற்பவன் இவனை நம்புவானா?

“ஏன் சுரேஷ் இப்படி சொல்றீங்க..” என்று ஆழமூச்செடுத்து ஊதியவனின் சிகரெட் வாடையில் சுரேஷ் கொஞ்சம் நடந்து நிற்க, “ஸாரி..” என்று சிகரெட்டை காலில்போட்டு மிதித்தான்..

“ம்ம் இப்போ சொல்லுங்க சுரேஷ்..” என்றான் முகிலன் மீண்டும் காரில் சாய்ந்து நின்றவண்ணம்.

“மேடம் வீட்டில் இருக்கும்போது நீங்க வேறொரு பெண்ணைத் தேடி போவது சரியில்ல சார்..” என்றவன் சொல்லக் கன்னத்தில் கை வைத்தபடி சுவாரசியமாகக் கதைக் கேட்டான் கார்முகிலன்.

“என்ன சுரேஷ் என்னைத் திருத்தணும் என்ற முடிவில் இருக்கீங்க போல..” என்றான் அவன் கேலியாகவே.

“ஒவ்வொருத்தரும் வேலை முடிந்து வீட்டிற்கு உடனே போவது அங்கே ஒருத்தி நமக்காகக் காத்துகிட்டு இருப்பா என்ற ஒரு எண்ணம்தான் சார்..” என்றான் அவன் இயல்பாகவே.

அவனின் பேச்சில் நெற்றியைச் சுருக்கி யோசித்தவனுக்கு சுரேஷ் சொல்வது அனைத்தும் புதிதாகவே இருந்தது.

அப்பொழுது தான் அவனின் மனதில் அந்தக் கேள்வி எழுந்ததும் அதற்காக விடையும் நொடியில் அவனுக்கு நொடியில் புரிய, “சரிங்க ஸார்.. நான் வீட்டிற்கே போறேன் சார்..” என்று கேலியாகக் கூறிவிட்டு காரை எடுத்தான் கார்முகிலன்.

அவனின் பாஸ் நல்ல வழிக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் அவன் வீடு நோக்கிக் கிளம்பினான் சுரேஷ். நேராக பாருக்குச் சென்று நன்றாகக் குடித்துவிட்டு இரவு வெகுநேரம் சென்று வீடு திரும்பினான்.

அவன் நேராக அறைக்குச் செல்ல சுரேஷ் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, ‘இவ என்னோட மனைவி என்பதை நான் எப்படி மறந்தேன்..’ என்று அவளின் அறைக்குள் நுழைந்தவனின் பார்வை அவளைத் தழுவியது.

இதுநாள் வரை மேகாவை அவன் கூர்ந்து கவனித்ததில்லை என்று அவனின் பார்வையே சொன்னது. விடிவிளக்கின் ஒளியில் எழில் ஓவியமாக படுக்கையில் படுத்திருந்தவளைப் பார்த்து அவன் அடித்திருந்த போதையை இன்னும் அதிகரிக்க தள்ளாடியபடி அவளின் அருகே சென்று அமர்ந்தான். பிங்க் நிற சேலையில் படுத்திருந்த மேகா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அவளின் அழகு முகத்தைத் தன்னை மறந்து சிலநொடி ரசித்தவன், “நிஜமாவே அழகிதாண்டி நீ..” என்று மனைவின் முகம் நோக்கிக் குனிந்தான்.

அவனின் மீது வீசிய சாராயவாடை அவளின் மூக்கைத் துளைக்க பட்டென்று கண்திறந்து பார்த்த மேகா மிரண்டு விழித்தாள்.

அவனின் முகம் மிக அருகில் தெரியவே தன்னுடைய பலத்தைத் திரட்டி, “என்ன பண்ண போறீங்க..” அவனை தள்ளிவிட்டுப் பட்டென்று எழுந்து அமர, படுக்கையில் விழுந்தவனின் பார்வை அவளைத் தழுவியது.

அவனின் பார்வை தன்னை விழுங்குவதைக் கண்டு, “இங்க எதுக்கு வந்தீங்க..” என்றவள் முகத்தைத் திருப்பவே,

“நான் எதுக்கு வருவேன்னு உனக்குத் தெரியாதா வர்ஷா..” என்று அவளின் கையைப்பிடித்து இழுத்தான் கார்முகிலன்.  அவன் இழுத்த வேகத்தில் மார்பில் சென்று விழுந்தவளை இறுக அணைத்து அவளின் இதழில் முதல் முத்திரை பதித்தவனின் மார்பில் குத்தினாள்.

அவன் தன்னுடைய மனதின் சோகத்தைகேட்டு தனக்கு ஆறுதல் சொல்வான் என்று அவள் காத்திருந்த நேரம் எல்லாம் கண்முன்னே வந்து செல்ல, ‘இவங்க எல்லாம் எப்படி இப்படி நடந்துக்கறாங்க..’ என்று புரியாமல் அவனின் பிடியிலிருந்து விலக நினைத்தாள். ஆனால் அவனின் பிடி உடும்பு பிடியாக இருந்தது.

அவனிடமிருந்து தப்பிக்க வழி இல்லாமல் திமிறியவளை இறுக அணைத்தவன், “ஏய் வர்ஷா நான் யாரோ இல்ல. உன்னோட புருஷன். உன்னோட கழுத்தில் தொங்குது பாரு தாலி..” என்றவன் அவளை விலக விடாமல் தன் தேடலைத் தொடர்ந்தான்.

அத்தனை போதையில் வந்த முகிலன் அவளை எழுப்பி ஒரு வார்த்தை, ‘ஏன் ஒரு மாதிரியாக இருக்கிற..’ என்று கேட்டிருந்தால் அனைத்தையும் அவனிடம் கொட்டிவிட்டு அவனின் தோளில் சாய்ந்து ஆறுதல் தேடியிருப்பாள்.

முகிலனோ புருஷன் என்ற உரிமையில் அவளின் மனம் அறியாமல் அவளிடம் தன்னுடைய உரிமையை நிலைநாட்ட நினைத்ததில் அவளின் மனதில் காயம் ஏற்பட காரணமாக அமைத்தது. இந்தக் காயத்தின் விளைவு?

அந்த நேரத்தில் அவனின் ‘வர்ஷா’ என்ற அழைப்பைக் கூடக் கவனிக்க மறந்தாள். அவனின் குரலில் இருப்பது என்ன போதையா? ஆசையா? தேவையா? காதலா என்று புரிந்து கொள்ள முடியாமல் அவளின் கண்களில் கண்ணீர் வழிய படுக்கையில் விழிமூடியவளின் உள்ளம் சுக்குநூறாக உடைந்து சிதறியது.

அவன் சாதாரணமாகக் கூறிய வார்த்தைகள் அவளின் மனதில் ஈட்டியாகப் பாய்ந்தது. இதுவரை உரிமை இல்லாத பொருள்போல அந்த வீட்டில் இருந்தவளிடம் அவன் உரிமையோடு சொல்லும் முதல் வார்த்தை. ஆனால் அதுவும் அவன் காதலாகச் சொல்லியிருந்தால் ஏற்றுக்கொண்டு இருந்திருப்பாளோ என்னவோ?

அவனோ வார்த்தைகளை உரிமையோடு சொல்கிறேன் என்ற எண்ணத்தில் அவளைக் காயப்படுத்தியதை உணராமல் இருக்க, “ஏன் என்னோட வாழ்க்கையில் வர எல்லோருமே சுயநலவாதியாக இருக்கீங்க..” என்று கண்களில் கண்ணீர் வழிய கேட்டாள் மேகா.

இருட்டில் நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தவன் அவ்வளவு போதையிலும், “ஏய் லூசு மாதிரி பேசாமல் கொஞ்ச நேரமாவது அமைதியா இருடி..” என்றவன் மீண்டும் தன் தேடலையே தொடர்ந்தான்.

காதல் என்ற பெயரில் விலை பேசிய அவனுக்கும், இன்று புருஷன் என்ற உரிமையில் தொடும் இவனுக்கும் இடையே எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்பதை அவளின் மனம் தெளிவாகக் கூறியது.

அவளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் நிலையில் அவன் இல்லை போல. அவன் பிடிவாதமாக அவளிடமிருந்து தன்னுடைய தேவையை முடித்துவிட்டு, “லவ் யூ பேபி..” என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தான்.

இதுநாள் வரை நடப்பது அனைத்தும் தலைவிதி என்று இருந்த மேகாவால் இன்று நடந்ததை கணவன் – மனைவி உறவு என்று ஏற்றுகொள்ள முடியவில்லை.

அதுவும் இறுதியாக அவன் சொன்ன ‘லவ் யூ பேபி..’ அந்த வார்த்தையை அவன் இதுநாள்வரை எத்தனை பெயரிடம் சொல்லியிருப்பான் என்று நினைக்கும் பொழுது, அந்த உறவு உள்ளுக்குள் கசந்து போனது. அவளே இந்த வீட்டிற்கு வந்த நாளில் பலமுறை அவன் நடவடிக்கைகளை கவனித்ததுண்டு.

அப்படி அவன் ஆயிரம் பெண்களிடம் சொன்னதும் அத்தோடு சேர்ந்து அவனின் சில நடவடிக்கைகளும் அவளின் மனகண்ணில் வந்து போனது. அப்பொழுதெல்லாம் கூட உறவு என்ற பெயரில் இவன் நம்மை காயப்படுத்தி பார்க்கவில்லையே என்ற நிம்மதியில் ஒதுங்கி நின்றவளால் இன்று அது முடியாமல் போனது.

அவன் அவளைவிட்டு திருப்தியுடன் விலக, “எனக்கு என்ன ரெட்?” கேள்வியுடன் நிமிர்ந்தவளின் பார்வை அவனைக் குத்திக்கிழித்தது.

அவளின் வார்த்தைகள் சவுக்கடியாக அவனின் நெஞ்சில் விழுகவே முதல் முறையாக இதயம் இருக்கும் இடத்தில் வலியை உணர்ந்தான் முகிலன்.

“நீ என்ன கேட்கிற..” என்று புரியாமல் கேட்டான்.

“எனக்கு என்ன ரெட் கொடுப்பீங்கன்னு கேட்டேன்..” என்றாள் மேகா கசந்த புன்னகையுடன்.

அவளின் வார்த்தைகளில் தீ பட்டதுபோலப் பட்டென்று விலகிய முகிலன்,  “நீ என் பொண்டாட்டி தானே..” என்றான்.

“அதெல்லாம் இந்த ரூமிற்கு வெளியே உங்களோட அந்தஸ்து கௌரவத்தைக் காப்பாற்ற எனக்கு எல்லோரும் சேர்ந்து கொடுத்த பட்டம்..” என்றவள் அவள் ஏளனமாக.

அவளாக இப்படிப் பேசவேண்டும் என்று நினைக்கவில்லை. அவளின் காயம்பட்ட மனம் அவளை இப்படி பேச வைக்கிறது.

“இப்போ நமக்கு நடந்தது..” என்ற முகிலனால் அதற்குமேல் பேச முடியாமல் முதல் முறையாக ஒரு பெண்ணின் முன்னே தடுமாறினான்

“தினமும் ஒரு பொண்ணுகூட போயிட்டு வரும் உங்களுக்கா தெரியாதா நமக்குள் நடந்தது என்னன்னு. இன்னைக்கு உங்களுக்கு யாரும் கிடைக்கல. நீங்க உங்க தேவையைத் தீர்த்துக்கொள்ள என்கிட்ட வந்தீங்க. நானும் உங்களோட தேவையை நிவர்த்தி செய்தேன். இந்த ரூமிற்குள் நமக்குள் நடந்த விஷயம் அவ்வளவுதான்..” என்றவள் கூந்தலை தூக்கி கொண்டை போட்டுவிட்டு குளிக்கத் துணியெடுத்து கொண்டு குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் கொடுத்த விளக்கத்தில் பித்துப்பிடித்தார் போல அமர்ந்தவனின் உள்ளத்தில் புயல் வீசியது முதல் முறையாக. அவள் கேட்ட வார்த்தை அவனின் உள்ளத்தைக் குத்திக்கிழிக்க கரங்களில் முகம் புதைத்துப் படுக்கையில் அமர்ந்திருந்தான்.

அவள் குளித்துவிட்டு வேறொரு உடையுடன் வெளியே வந்தவள், “என்ன சாரே போக மனசே வரல போல. சரி பேச்சு சுவாரசியத்தில் எனக்குக் கொடுக்க வேண்டிய விலையை மறந்திவிட போறீங்க. அதை போகும்போது இங்கே இதுக்கு அடியில் வெச்சிட்டு போங்க..” என்று தலையணை காட்டிவிட்டு போய்ப் பெட்டில் படுத்த மேகா சிலநொடியில் தூங்கிப் போனாள்.

அவள் உறங்குவதை பார்த்தபடி அமைந்திருந்த முகிலன் முதல் முறையாகத் தன்னுடைய தவறை உணர்ந்தான். அவன் இதுவரை செய்த அனைத்தும்  தவறென்று செய்யும்போது கூட உணராமல் இருந்தான்.

ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறவே அவளின் ‘விலை’ என்ற வார்த்தை கேட்டதும் உள்ளம் பதறியது. அந்தக் கேள்வி ஒன்றே அவனின் நெஞ்சத்தை வெட்டிக் கூறுபோட இதயத்தில் வலியும் அதிகரித்தது.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்திட சூரிய வெளிச்சம் அறை முழுவதும் பரவியது. அவளின் முகத்தில் சுளீர் அடித்த வெயிலின் தாக்கத்தில் கண்விழித்துப் பார்த்தாள்.

அந்த அறை முழுவதிலும் பார்வையைச் சுழற்றிய மேகாவின் மனதில் நேற்றைய நிகழ்வுகள் அவளின் கண்களில் படமாக விரிந்தது. அவர்களுக்குள் நடந்த கூடலை அவளால் இயல்பாக ஏற்க முடியவில்லை.

வாழ்க்கையில் ஏமாற்றத்தை மட்டுமே பார்த்துப் பார்த்து காயம்பட்ட மனதில் அவனும் கல்லை விட்டெறிய அவளின் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

அவன் அந்த அறையில் இல்லை என்ற பொழுதிலும் அவனின் நினைவுகள் மாயவலைகள் அவளைக் கட்டி வைத்திருப்பது போல உணர்ந்தளுக்கு அந்த அறையில் மூச்சு முட்டியது. அது ஏனென்று அவளுக்கே தெரியவில்லை.

இரவு ஈரத்தலையுடன் தூங்கியதால் தலைவலி வின் வின் என்று தெறிக்க மெல்ல எழுந்து அமர்ந்த மேகாவின் கண்கள் லேசாகக் கலங்கியதோ?  திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பு அவளுக்கென்று ஒரு மனம் இருக்கும் என்று இங்கே யாருமே நினைப்பதில்லை.

அவரவர் தேவைகளுக்கும் தகுதிகளுக்கும் தகுந்தார்போல் அவளை ஒரு பொருளாக நினைத்துப் பயன்படுத்துவிட்டு உதறும் பொழுதெல்லாம் அவளின் மனம் என்ற கண்ணாடி சில்லு சில்லாக உடைந்து சிதறுகிறது.

கண்ணாடியில் முகம் பார்த்தால் அது நம் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கும். அதே போலதான் திருமண வாழ்க்கையும். மனைவியின் மனமறிந்து கணவன் செயல்படும்போது அவளும் அவனுக்காக மாறுவாள்.

அதே நேரத்தில் உறவுகளைக் கையாளும்பொழுது கண்ணாடி பாத்திரத்தை விடக் கவனமாக கையாள வேண்டும். கண்ணாடி கூடக் கீழே விழுந்ததால் தான் உடையும். இங்கே உறவுகளோ நாம் பேசும் வார்த்தையிலேயே உடைந்துவிடும்.

“நான் யாரோட வாழ்க்கையிலும் தலையிடாமல் தான் இருக்கேன். ஆன எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது..” என்று தனியாகப் புலம்பிய மேகாவின் உள்ளம் வலித்தது.

அவள் ஆசைபட்ட ஒரு விஷயம் கிடைக்காமல் போனது அது அவளின் தவறில்லை. தன் விருப்பம் நிறைவேற வழியில்லை என்று உணர்ந்து அண்ணன் கைக் காட்டிய ஒருவனுக்கு கழுத்தை நீட்டினாள் அது அவளின் தலைவிதி.

அதை மாற்ற யாராலும் முடியாது என்று அவளுக்கே தெரியும். அப்பொழுது கூட நிம்மதியாக இந்த வீட்டில் வலம் வந்தாள் மேகா.

இன்றோ கணவன் என்று சொல்லி இதுநாள் வரை தன்னை நெருங்காதவன் நேற்று அவனின் தேவைக்கு நாடியதாகவே நினைத்த மேகா ஒரு விசயத்தைக் கவனிக்க மறந்தாள்.

இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த நாளில் இருந்தே அவனின் மனம் தன்பக்கம் சாய தொடங்கியதை உணராமல் அவனின் மீது பழியைத் தூக்கிப் போட்டாள்.

error: Content is protected !!