megathootham 10

megathootham 10

                                                   
மேகதூதம் 10

 

 “வாட்? புருஷனா?” அஞ்சலி அதிர்ந்தாள்.

அவளின் அதிர்ச்சிக்குக் காரணம்
ரிஷிக்குப் புரியவில்லை. அவளை விளங்காமல் பார்க்க
,

“என்ன? இன்னும் என்னவெல்லாம்
கதை கட்டலான்னு யோசிக்கறீங்களா
? என்னை
வேண்டான்னு ரிஜெக்ட் பண்றதுக்கு உங்களுக்கு மட்டும் எங்கிருந்து ரீசன் கெடைக்குது
ரிஷி. உங்க மனசுல நீங்க என்ன தான் நெனச்சுட்டு இருக்கீங்க
?
அவள் பேசிக்கொண்டே போக
,

“வ்வோ… வெய்ட்…” கண்ணை
இருக்கமூடிக்கொண்டு அவளின் வார்த்தைகளுக்கு அணை போட்டான்.

அஞ்சலி மூச்சு வாங்க
நின்றிருந்தாள்.

“அப்போ… உள்ள இருக்கறது உன்
ஹஸ்பன்ட் இல்லையா
?” நிறுத்தி
நிதானமாக தெளிவாக அவளிடம் கேட்டான்.

“புல் ஷிட்… எவனும் என்
புருஷன் இல்ல… ஐ அம் நாட் மேரீட்..” கைகளைக் கட்டிக் கொண்டு அவனைக் காணப் பிடிக்காமல்
எங்கோ பார்த்த படி கடித்த பற்களுக்கு இடையில் வார்த்தைகளைத் துப்பினாள்.

ரிஷிக்கு அவன் காதுகளை நம்ப
முடியவில்லை. கேட்டது உண்மையா பொய்யா என்று புரியாமல் , வந்த சிரிப்பை அடக்கவும்
இயலாமல் மெல்ல அவள் முன் சென்றான்.

சற்று தைரியமாகவே அவளது
தோள்களைப் பற்றி…

“சே இட் அகைன்…” அவனது
கவர்ச்சிப் புன்னகையுடன் அவள் முன் நிற்க
,

“என்ன சொல்லணும்..” கோவம்
அடங்காமல் கேட்டாள் அஞ்சலி.

“உனக்கு..இன்னும் கல்யாணம்
ஆகலன்னு” அவள் கண்களை உரிமையோடு கண்டான்.

“விளையாடறீங்களா… ரிஷி.. திஸ்
இஸ் டூ மச்..” அவனது கைகளை தன் மீதிருந்து விலக்கினாள்.

“ஹே.. சொல்லு டி.. ஒரு தடவ
சொல்லு..” மீண்டும் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு கேட்க
,

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..
ஆகல..ஆகல…போதுமா
?” அவன் காதில்
இறங்கிக் கத்தினாள்.

“ஹா ஹா….” என வாய்விட்டுச்
சிரித்தவன்
, அவளைத் தூக்கிச்
சுற்றினான்.

“ரிஷி… ப்ளீஸ்..விடுங்க..என்ன
இது… ப்ளீஸ்” அவள் அவனை விட்டு விலகமுடியாமல் திணற
,

பல முறை தன் மகிழ்ச்சியில்
அவளைச் சுற்றிய பிறகே இறக்கி விட்டான்.

அஞ்சலிக்கு இன்னும் கோபம்
குறைந்த பாடில்லை.

அவனது நடவடிக்கை அவளுக்குப்
பிடிக்கவில்லை.

மூச்சு வாங்க அவள் எதிரே
நின்றவன்
, அஞ்சலியின் பின்னால் வந்தவனைப் பார்த்து
மீண்டும் குழம்பினான்.

“அப்போ இவன்….?” பின்னால்
வந்த ராஜைக் கை காட்டியவன் , அவனது கை கோர்த்து வந்த ரம்யாவைப் பார்த்து புருவம்
உயற்றினான்.

“ரம்யா…நீ எப்படி…அப்போ இது?” அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இருந்தாலும் அஞ்சலிக்கு
திருமணம் ஆகவில்லை என்பதே அவனுக்குப் பெரிய நிம்மதியை அளித்தது.

“ரிஷி… இவர் பேர் ராஜ்.
என்னோட வுட்பி.” ரம்யா முடிப்பதற்குள்
,

“ஊஃப்….” என தன் தலையை இரு
கையாலும் கோதி தலையில் இருந்த பாரத்தை இறக்கியது போல நிம்மதிப் பெருமூச்சு
விட்டான் ரிஷி.

“ தேர் இஸ் சம் கண்பியூஷன்.
ப்ளீஸ்..நீங்க ரெண்டு பேரும் பொறுமையா உட்காந்து பேசுங்க. அப்போ தெளிவாயிடுவீங்க..”
ரம்யா இருவருக்கும் பொதுவாகச் சொல்ல
,

“எஸ்.. பேசியே ஆகணும். வா
அஞ்சு..” ரிஷி அழைக்க
,

“முடியாது. ஒரு வுமனைசரா
மாறிட்ட உங்க கூட பேச எனக்கு எதுவும் இல்ல. நான் எங்கயும் வரல. நீங்க போங்க.”
இரண்டடி தள்ளி நின்றாள் அஞ்சலி.

அவள் கூறிய வார்த்தை அவனுக்குச்
சிரிப்பையே வரவைத்தது.

“லெட் மீ எக்ஸ்ப்ளைன் அஞ்சு..”
அவளது கையைப் பிடிக்க
,

“நோ.. “ என விலகினாள்.

“யம்மா தாயே… அதெல்லாம்
நடிப்பு போதுமா. நம்புமா..” கையை தலைக்கு மேல் வைத்து வணங்க
,

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரிஷி இப்படி சகஜமாகவும் ஜாலியாகவும் பேசுவதைக் கண்ட அஞ்சலிக்கு அவனை ரசிக்காமல்
இருக்க முடியவில்லை.

ஒரு
காலத்தில் அவனது நக்கல் பேச்சும் கேலி கிண்டல் அதே சமயம் அவனிடம் இருந்த ஒரு
திமிர் இவை அனைத்தும் தான் அவளை அவனிடம் சாய்த்தது.

இன்று
அவர்களுக்குள் யாரோ மூட்டி விட்ட பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று தான்
யோசிக்க வேண்டும். நான் ஏன் ரிஷியின் மீது கோபம் கொண்டேன்.

இல்லை.
இது கோபம் இல்லை. என்னுடையவன் என்னை எம்மாற்றுவதாக நினைத்து அவனையே அவன் ஏமாற்றிக்
கொண்டிருந்திருக்கிறான்.

அதுவும்
நான்கு வருடமாக. இனி நிச்சயம் அந்த சதிக்குள் இருந்து அவனை வெளியே கொண்டுவருவேன்.

அவன்
இன்னும் அப்படியே நிற்பதைக் கண்டு இதழை சுழித்துச் சிரிப்பை அடக்க
, அதை அவனும் கண்டுகொண்டான்.

உடனே
அவள் பதிலுக்காகக் காத்திருக்காமல்
,

“ரம்யா, நான் என்னோட வீட்டுக்கு இன்னிக்கு அஞ்சலிய
கூட்டிட்டு போறேன். நீங்க வீட்டுக்கு போங்க
, நானே நாளைக்கு அவள கொண்டு வந்து விடறேன்.” என அவனே முடிவைக் கூறினான்.

“அது…
நீங்க அவள தனியா
?” ரம்யா இழுக்க,

“நீ
உன் உட்பி யோட ஸ்டே பன்னிருகரப்ப
, நான் என் உட்பி
யோட
,…நோ நோ.. அவ உட்பி இல்ல, என் பொண்டாட்டி… அவ என் கூட இருக்கறதுல உனக்கு
என்ன
?” ரம்யா ராஜுடன் வரும் போதே
மூவரும் ஒன்றாகத் தான் இருப்பார்கள் என கணித்துவிட்டான்.

“பொண்டாட்டியா…!”
ரம்யா ராஜ் இருவரும் அஞ்சலியைப் பார்க்க
,

“இல்லன்னு
சொல்லு பார்ப்போம்..” ரிஷி தைரியமாக வாய் விட
,

பல்லைக்
கடித்துக் கொண்டு முறைத்தாள்.


எப்படி என்ன ன்னு நான் சொல்ல ரெடி தான். உனக்கு ஓகே வா அஞ்சலி
?” ஒற்றைப் புருவத்தை ஏற்றி அவளைப் பார்த்து
கண்ணடிக்க,

அதற்கு
மேல் பொறுமையை இழந்தாள் அஞ்சலி.

“ரம்யா..நீ
வீட்டுக்கு போ.” என்று கூறி மறைமுகமாக அவனோடு செல்வதாக ஒத்துக் கொண்டாள்.

 அஞ்சலிக்கும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவனை
சந்திக்கும் வாய்ப்பு
, அதுவும் மதியம் போல இல்லாமல்
இப்போது சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த தன்னவனை
, வசீகரிக்கும் அவன் சிரிப்பை அதற்குள் விட்டுப் பிரிய மனமில்லை.

“சி யூ”
ரிஷி கூறிவிட்டு , அஞ்சலிக்காக தந்து காரின் கதவைத் திறந்துவிட்டான்.

எதுவும்
பேசாமல் ஏறிக்கொண்டாள் அஞ்சலி.

அவர்கள்
செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு , ரம்யா புன்னகை செய்தாள்.

“ரம்யா
என்ன இது.” ராஜ் கேட்க
,

“ரிஷி
ஜென்டில்மேன் ராஜ். ரம்யா எங்க போணுமா அங்க தான் போயிருக்கா… கவலை இல்ல. வாங்க
போலாம்.” இருவரும்கிளம்பினர்.

அஞ்சலி
, காரில் அவன் அருகில் அமர்ந்து செல்வது இதுவே முதல் முறை. ஆனால் பல தடவை அவளை
பைக்கில் அமர்த்தி ஊர் சுற்றி இருக்கிறான்.

“அஞ்சு..”
கார் சீராகப் போய்க் கொண்டிருக்க அவளை மெல்ல அழைத்து அங்கிருந்த மௌனத்தைக்
கலைத்தான்.

அவள்
திரும்பிப் பார்க்க
,

“சாரி
டா…வெரி சாரி..” கண்களால் யாசித்தான்.

அவள்
எதுவும் சொல்லாமல் மீண்டும் ஜன்னலை வெறிக்க
, அவளது கையை எடுத்து தன் கையோடு பிணைத்து காரின் கியரில் வைத்துக் கொண்டு
வண்டியை ஓட்டினான்.

பத்து
நிமிடத்தில் அவனுடைய வீட்டின் முன் வந்து நின்றது.

அவனே
இறங்கி அவளின் பக்கக் கதவைத் திறந்து விட
, அஞ்சலி இறங்கி வந்தாள்.

அழகான
இடம். சுற்றி வீடுகள் இருந்தாலும் இவன் வீடு ஒரு தனித் தீவு போல இருந்தது. முன்னே செடிகளின்
அணிவகுப்பை அடுத்து நடுவில் அவன் வீடு.

 

“வெல்கம்
டு அவர் ஹோம்..” இடை வரை குனிந்து வரவேற்றான்.

அவள்
மறுத்தாலும் பிடிவாதமாக தன் கைக்குள் அவளது கையைக் கோர்த்துக் கொண்டு உள்ளே
அழைத்துச் சென்றான்.

தனியொருவானாக
இருந்தாலும் வீட்டை நேர்த்தியாக வைத்திருந்தான்.

சுற்றிச்
சுற்றி அவள் தேட
,

“என்ன
பாக்கற.? நான் தனியா தான் இருக்கேன். நாலு வருஷமா… இன்னும் கரெக்டா சொல்லணும்
னா… நாலு வருஷம் அஞ்சு மாசம் இருபது நாள். நாம கடசியா சந்திச்சு இத்தனை நாள்
ஆகுது.”

இதற்கு
காரணம் யார் என்ற கேள்வி மீண்டும் அவள் மனதை அறிக்க
,

“என்ன
அஞ்சு பேச மாட்டேங்கற… ப்ளீஸ். மதியம் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது.
உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு நெனச்சு
, அந்த கோவத்துல தான் அப்டி நடந்துகிட்டேன்.

அதுக்கு
என்ன பனிஷ்மென்ட் வேணாலும் குடு. ஆனா இப்படி பேசாம இருக்காத டி. எதுவா இருந்தாலும்
நாம பேசி தீத்துக்கலாம்.” அவளது முகத்தை இரு கைகளிலும் ஏந்தி நின்றான்.

“உங்க
கூட பப்புக்கு வந்த பொண்ணு கூட எத்தனை நாளா பழக்கம்
? அவ மட்டும் இல்ல, இந்த நாலு வருஷம் அஞ்சு மாசம்
இருபது நாளா எத்தனை பொண்ணுங்க இருக்காங்க உங்க லைஃப்ல? உங்கள நல்லா சாடிஸ்ஃபை
பண்ணாங்கன்னு சொன்னீங்களே மதியம் … இப்போ அவங்கள எல்லாம் விட்டுட்டு எதுக்கு
என்னை கூட்டிட்டு வந்தீங்க?

தினம்
தினம் மன்மதனா இருக்கற உங்களுக்கு இப்போ என்கிட்ட என்ன இருக்கு பேச
?” மதியம் அவன் பேசியதைக் குத்திக் காட்டினாலும், அவள் பேச்சில் வெளிப்பட்ட பொறாமையை அவன் உணர்ந்து
கொண்டான்.

“ஹா
ஹா…” ஏனோ அவளின் கோபத்தை ரசிக்கவே செய்தான்.

“அஞ்சு..
யூ ஆர் கியூட்.. நீ கோபப்படும் போது கூட..” கையில் ஏந்தி இருந்த அவள் முகத்தில்
தன் நெற்றியோடு அவள் நெற்றியை முட்டினான்.

“உன்னோட
கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்றேன். அதுக்கு முன்னாடி.. காஃபி குடிக்கலாமா
?” அவன் கேட்டதும்,

“காஃபி?!”
அவனை சந்தேகமாகப் பார்க்க
,

“ஆமா, காஃபி .. நீ என் பக்கத்துல இருக்கறப்ப தான
குடிப்பேன்னு சொன்னேன். நாம ஒன்னா சேந்து குடிச்ச கடைசி காஃபிக்கு அப்பறம் இப்போ
தான் குடிக்க போறேன். இனிக்கு தூங்காம உன்கூட பேசிட்டு இருக்கணும். அதுக்காகத்
தான்.” பேசிக்கொண்டே அவனது சிறிய ஓபன் கிச்சனுக்குள் சென்றான்.

“இத்தனை
நாளா காஃபி குடிக்கலைனா , அப்பறம் காஃபி பவுடர் மட்டும் எப்படி வெச்சிருக்கீங்க
?” மீண்டும் சந்தேகமாகக் கேட்க,

“ உன்
ஞாபகம் வரப்பலாம் எடுத்து பாத்துக்க.. அந்த ஸ்மெல் மட்டும் போதும் ..உன்கூட
இருக்கற மாதிரி பீல் பண்ணிப்பேன்” அப்போது வருத்தப்பட்டதையும் இப்போது
மகிழ்ச்சியாகக் கூறினான்.

சுடச்
சுட காபியைக் கலந்து அதை அழகிய கருப்புநிற செராமிக் கப்பில் ஊற்றி எடுத்து
வந்தான்.

அவன்
கூறியதில் அவளுக்குச் சிறிதும் ஐயமில்லை. அவன் செய்யக் கூடியவன் தான்.

எதுவும்
பேசாமல் காபியை எடுத்துக் கொண்டாள்.

ஒரு
சிப் அருந்தியதும் அவன் அந்தக் காபியின் ருசியையும் அஞ்சுவின் பழைய நினைவுகளையும்
ஒரு சேர உள்ளிழுத்துக் கொண்டான்.

“மிஸ்டர்
மன்மதன் இப்போ சொல்லலாமா
?” அஞ்சலி கேட்க,

காபியைக்
குடித்து முடித்தவன் , ஒரே இழுப்பில் அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டான்.

“விடுங்க
ரிஷி.. பதில் சொல்லுங்க முதல்ல..” அவள் திமிறி அவனிடமிருந்து மீள நினைக்க
,

“இப்படி
சொன்னா தான் எனக்கு வசதி.” அவளது இடையோடு வளைத்து கைகளை இறுக்கிக் கொண்டு
அஞ்சலியில் கழுத்தில் தன் முகத்தை சாய்த்துக் கொண்டான்.

“ப்ச்ச்…
விடுங்க….” அவள் விலக நினைக்க
,

“அஞ்சு
ப்ளீஸ்…” குரல் கம்மியது அவனுக்கு.

அதில்
என்ன உணர்ந்தாளோ.. அதன் பிறகு அவனைத் தடுக்கவில்லை. அவளுக்கும் அது தேவையாகவே
இருந்தது.

சிறிது
நேரம் அங்கே அமைதி நிலவியது. ரிஷியின் கண்களிலிருந்து மிதமான சூட்டில் கண்ணீர்
வழிந்து அஞ்சலியின் கழுத்தை நனைத்தது.

அதை
உணர்ந்து பதறி அவன் புறம் திரும்பியவள் ,”ரிஷி” என அழுகையைக் கண்டு கலங்கினாள்.

“ஐ அம்
சாரி டி. உன்னை இத்தனை நாள் தவிக்க விட்டதுக்கு. என்னை மன்னிப்பியா
அஞ்சு..ப்ளீஸ்.. உனக்கு கல்யாணம் ஆகப் போகுதுன்னு தெரிஞ்ச பிறகு…என்னால எதுவும்
செய்யமுடியல. அதுவும் அன்னிக்கு நீ அப்படி பேசினதுக்கு அப்பறம் உன் சிச்சுவேஷன்
புரிஞ்சுக்காம…அப்படியே நான் விட்டிருக்கக் கூடாது.” குழந்தை போல் அவள் மேல்
சாய்ந்து கொள்ள..

“ரிஷி..என்ன
இது கொழந்த மாதிரி.”அவன் கண்ணீரைத் துடைத்தவள் ,

“இப்போ
நான் சொல்றது தான் உண்மை. நீங்க சொல்றது எதுவுமே எனக்கு புரியல ரிஷி. நான் உங்களை
கடைசியா பாத்தது பேசினது எல்லாமே அன்னிக்கு ஏர்போர்ட்ல தான். அதுக்கப்றம் உங்கள
பத்தி எதுவுமே எனக்குத் தெரியாது.

உங்கள
நான் வேண்டான்னு சொன்னேன்னு சொல்றீங்க
?
அதெல்லாம் எப்போ நடந்தது? மதியம் நீங்க சொன்னதுலேந்து ஏதோ குழப்பம்
நடந்திருக்குன்னு புரியுது.

ஆனா
என்னன்னு எனக்குத் தெரியல.. நீங்க இப்படி மாற நான் காரணமா
?” அஞ்சலி கூறியதைக் கேட்டு ரிஷிக்கு தங்கள் வாழ்வில் சூழ்ச்சி செய்ய யாருக்கு
தைரியம் உண்டு என்று எண்ணினான்.

“அஞ்சலி, நீ என்ன சொல்ற? நீ என் கிட்ட போன் ல பேசலையா?

“இல்லவே
இல்ல ரிஷி. இதை தான் நான் சொல்லவந்தேன் ஆனா அதுக்குள்ள நீங்க கோப பட்டு
போயிட்டீங்க. என்ன நடந்தது, இப்போ சொல்லுங்க
?

“மொதல்ல
நான் உன்னை விட்டுட்டு ஏன் போன்னேனு சொல்றேன். அப்புறம் என்னை நீ என்னை ஜட்ஜ்
பண்ணு அஞ்சு.”

அன்று
ஏர்போர்ட்டில் அவன் சென்றதிலிருந்து அவனது தாய் அஞ்சலியைத் தன்னிடம் பேச வைத்தது
வரை அனைத்தையும் ஒன்றி விடாமல் அவளிடம் கூறி முடித்தான்.

“அப்போ
அன்னிக்கு என்கிட்டே பேசினது யாரு.. உன்னோட குரல் தான் அஞ்சு அது. இல்லனா நான்
எப்படி நம்புவேன்.” சொல்லி முடிக்கும் வரை அவளை இறக்கி விடவில்லை.

“எனக்கு
ரெண்டு நாள்ல நெறைய ராங் கால்ஸ் வந்துச்சு ரிஷி. அதுனால தான் நம்பர்
மாத்தவேண்டியதா போச்சு. ஆனா அந்த பழைய நம்பர நான் ஆஃப் செஞ்சு தான் வெச்சிருந்தேன்.
புது நம்பர ஆபிஸ் யூஸ்க்கு வெச்சிருந்தாலும் அந்த பழைய நம்பர நான் ஒரு ரெண்டு
வாரம் கழிச்சு ஆண் பண்ணினேன்.

உங்க
கிட்டேந்து கால் வருமான்னு வெய்ட் பண்ணேன். ஒரு வருஷம் எதுவும் வரல.அதுக்கு
அப்பறமும் வரல.

ஆரம்பத்துல
நீங்க ரெண்டு தடவ கால் பண்ணப்ப எடுக்காம போனது என்னோட துருதஷ்டம் தான்னு
நெனைக்கறேன். நீங்க புது நம்பர் லேந்து பண்ணுவீங்கன்னு நான் அன்னிக்கு இருந்த
டென்ஷன்ல எதிர்பார்கல. நாம பிரியணும்னு விதி நெனச்சிருக்கும் போது நாம என்ன
பண்ணமுடியும். ஆனா உங்ககிட்ட பேசினது யாருன்னு தெரியனும்.கண்டுபிடிப்போம் ரிஷி.”
அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு நம்பிக்கை அளித்தால்.

பிறகு
மீண்டும் நினைவு வந்தவளாக
, “இதெல்லாம் சரி, அதுக்கு அப்புறம் கனடா வந்து சார் மன்மதனான கதை என்ன?” அவனை விலக்கி நிறுத்திக் கேட்க,

“சத்தியமா
எந்தப் பொண்ணையும் நான் நெருங்கக் கூட விடல டி. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு
நெனச்சிருந்த டைம்ல தான் இன்னிக்கு அவன் யாரு..ஆங்..அந்த ராஜ் ..அவன் கூட பாத்தப்ப
, அவன் தான் உன் புருஷன்னு தப்பா நெனச்சுட்டேன்.

எனக்கு
சொந்தமான உன்னை வேற ஒருத்தன் கூட பாத்தா எனக்கு எரியாதா
? அதான் உன்னையும் காயபடுத்தனும்னு நெனச்சு அப்படி கதை விட்டேன். சாரி டி.”

“நிச்சயமா
வலிச்சுது ரிஷி. இந்த கூத்து எதுவுமே தெரியாத எனக்கு எப்படி இருக்கும்னு இப்போ
நெனச்சு பாருங்க.”

“அத
நெனச்சு தான் மா இப்போ வருத்தப் படறேன். வெறி சாரி. நீ என்ன தண்டனை வேணாலும் குடு.
நான் ஏத்துக்கறேன். ஆனா என் பக்கத்துலையே இருந்து தண்டனை குடு
, இனிமேலும் உன்னைப் பிரிஞ்சு என்னால ஒரு நொடி கூட
இருக்க முடியாது. நாளைக்கே நீ இங்க ஷிஃப்ட் ஆயிடு. அந்த ராஜ் இருக்கற இடத்துல இருப்ப
, இங்க இருக்க மாட்டியா.. லெட் தெம் ஹேவ் ப்ரைவசி..நாமும் இங்க தனியா இத்தனை நாள் பிரிவை ஈடுகட்டனும் .சரியா?” அவளது கன்னத்தில் ஒற்றை விரலால் கோலம்போட்டுக்
கொண்டே கேட்டான்.

ம்ம்ம்… என்ன ஈடுகட்டனும்”
நக்கலாகக் கேட்க
,

“எல்லாம்
தான்.. அது சரி நீ வந்து எத்தனை நாள் ஆச்சு
?

“ரெண்டு
நாள். இன்னிக்கு தான் ஆபீஸ் போனேன்.”

“அதான
பாத்தேன். இங்கயே இருந்து என் கண்ணுல படாமலா…”

“ஆமா
ஆமா… ஒரு பொண்ணு கூட இந்த மன்மதன் கிட்டேந்து தப்பிக்க முடியாதோ.” அவன் மடியில்
இருந்து எழுந்து கொண்டாள்.

“ஹே..வார்றியா..உன்ன..”அவனும்
எழுந்து அவள் பின்னால் நடந்தான்.

அவனது
வீட்டை அவள் சுற்றிப் பார்த்தாள்.

மிகவும்
அழகாக வைத்திருந்தான். அவனது படுக்கை அறைக்குச் சென்றாள். அங்கிருந்த கடிகாரத்தில்
நேரத்தைக் கவனிக்க
, நான்கு மணி ஆகப் போவதாகக்
காட்டியது.

“நாலு
மணி ஆயிடுச்சா
? டைம் போனதே தெரியல..” ஆச்சரியப்
பட்டாள்.

“நீ
என்கூட இருந்தா இப்படி ஒவ்வொரு நாளும் சுகமா கழியும் பொண்டாட்டி…” பின்னிருந்து
வந்து அவள் இடையோடு அணைத்துக் கொண்டான்.

“தேங்க்ஸ்”
என்றாள்.

“எதுக்கு?

“என்
ரிஷியாவே இப்போ வரை இருக்கறதுக்கு” திரும்பி அவனை அனைத்துக் கொண்டாள்.

“அஞ்சு..”

“ம்ம்”

“தூங்கலாமா?” மெதுவாக அவள் காதுகளில் கிசுகிசுத்தான்.

“என்ன…”அவள்
விலக

“ஐ
மீன் ஸ்லீபிங்..தூக்கம் வருது டி. ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா தூங்கனும் போல
இருக்கு. மனசு இப்போ தான் லேசா இருக்கு. உன்னை கட்டிக்கிட்டு ஜஸ்ட் தூங்கறேன்.”
அவள் மேலேயே தூங்க ஆரம்பித்தான்.

அவள்
பதிலுக்காக காத்திருக்காமல் அவளை மெத்தையில் தள்ளி அந்த குளிருக்கு இதமாக
அணைத்துக் கொண்டே உறங்கினான்.

அவளும்
அவனுக்குள் அடங்கி நீண்ட நாள் தூங்காமல் இருந்ததற்கும் சேர்த்து நிம்மதியாக
உறங்கினாள்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!