MEM2-1

மறந்துபோ என் மனமே(2) – அத்தியாயம் 1:

“க்ரிஷ் எல்லாம் எடுத்து வெச்சுட்டயா. முக்கியமா அந்த ஃபூட் பேக் (food pack) எல்லாம்” என்று பார்வதி கேட்டுக்கொண்டே க்ரிஷ் அறைக்குள் வந்தார்.

“அதெல்லாம் வேணாம் பாரு. நான் தான் டூ வீக்ஸ் ஒன்ஸ் வரேன்னு சொல்றேன்ல. இங்க இருக்க Philly’கு போறேன். அதுக்கு இவளோ சீன்லாம் வேணாம் பாரு” என்று க்ரிஷ் சொல்ல, மகனின் தலையைச் செல்லமாக தட்டினார் பார்வதி.

ஃபிளடெல்ஃபியா (Philadelphia – Philly) என்பது இலினாய் (Illinois) போல அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணம்.

“சரி இந்த வாட்டி பேக் பண்ணிட்டேன் எடுத்துட்டுப் போ. அந்த Airbnb ரூம் எப்படி இருக்குமோ தெரில. தனியா வீடு எடுத்துக்கோனாலும் கேக்கப்போறதில்ல” என்று பார்வதி புலம்ப ஆரம்பிக்க…

“பாரு ப்ளீஸ். நான் உங்ககிட்ட முன்னமே சொன்னமாதிரி நான் என்னோட ஏர்னிங்’ல சமாளிக்கணும்ன்னு பாக்கறேன். ப்ளீஸ்” என்று சொல்லும்போது அங்கே வந்த விக்ரம் பார்வதியிடம்…

“பாரு லீவ் ஹிம். அவனுக்கு தெரியும் என்ன செய்யணும்னு” என்று சொல்ல “தேங்க் யூ பா. நான் கிளம்பறேன். அம்மா… ஐ வில் பீ ஒகே. உனக்கு வேணும்னா நான் அடுத்தவாரம் வரேன். இப்போ சிரி”

அவன் அம்மாவின் கன்னத்தைக் கிள்ளி “லவ் யூ மா. வரேன் பா. நான் ராம் Nandy’ட்ட சொல்லிட்டு அப்படியே கிளம்பறேன்” என்று புறப்பட்டான் க்ரிஷ்.

ராம் வீட்டிற்குச் சென்ற க்ரிஷ் சிறிதுநேரம் பேசிவிட்டு “Nandy டான்ஸ் டான்ஸ்னு ராம மறந்துடாத. பாவம்” என கிண்டல் செய்ய “நல்லா சொல்லுடா. இப்போல்லாம் என்ன மறந்துட்டாங்க மேடம்” ராமும் க்ரிஷுடன் சேர்ந்துகொண்டான்.

“நீங்க ரெண்டு பேரும் சேந்து என் கால வார ஆரம்பிச்சுட்டீங்க. க்ரிஷ் நீங்க கிளம்புங்க flight’கு நேரமாகல” என்று சிரித்துக்கொண்டே நந்தினி சொல்ல…

மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய க்ரிஷ் சிறிது நேரத்தில் ஏர்போர்ட் சென்றடைந்தான்.

‘நான் எதுக்காகப் போறேன்னு அம்மாக்கிட்ட கூட சொல்லல. அம்மா, அப்பா இன்னும் ஆஃபீஸ்ல என்ன போக சொல்லிருக்காங்கனு நினைச்சுட்டு இருக்காங்க. பட் இது நானா வேணும்னு கேட்டுப் போற அஃபீஷியல் ட்ரிப்’

அவன் மனதுக்குள் நினைக்கும்போது… நினைவுகள் அப்படியே பல வருடங்கள் முன் சென்றது…

“க்ரிஷ் க்ரிஷ் என்ன அந்த மார்க் ரொம்ப தப்பா பேசறான். நான் விளையாட போனா திஸ் ப்ளேஸ் இஸ் ஃபோர் அமெரிக்கன்ஸ். கோ பேக் டு யுவர் கண்ட்ரி’னு (This place is for Americans. Go back to your country) சொல்லி என்ன தள்ளிவிட்டுட்டான்” அழுதுகொண்டே அந்த சிறுமி க்ரிஷிடம் வந்தாள்.

க்ரிஷ் அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அந்தக் கம்யூனிட்டி பார்க்குக்கு சென்றான்.

“நீ விளையாடு. அவனை நான் பாத்துக்கறேன்” என்று அவளின் பக்கத்தில் நிற்க அங்கே மூர்க்கத்துடன் வந்தான் மார்க்.

அவன் கிரிஷைத் தள்ளிவிட்டு அந்தச் சிறுமியிடம் சென்று அவளையும் கீழே தள்ளினான்.

“ஆஹ் க்ரிஷ்” என்று அவளும் கீழே விழ, க்ரிஷ் எழுந்து மார்க்கின் மூக்கில் ஒரே ஒரு பஞ்ச். மார்க் கீழே விழுந்தான்.

அவளின் கைகளில் இருந்த சிராய்ப்புகளைத் தட்டிக்கொண்டு “சூப்பர் க்ரிஷ்” என்று எழுந்தாள் அந்த சிறுமி.

“சுஷி ஆர் யு ஒகே?” என்றான் அவள் கைகளில் இருந்த காயத்தைப் பார்த்து.

“This is the final boarding call for passenger Krish Vikraman booked on flight AA1247 to Newark. Please proceed to Terminal 3 Gate H16 immediately” என்ற அழைப்பு கேட்டு நிகழ்வுக்கு வந்தான் க்ரிஷ்.

கேட் H16 நோக்கிச் சென்று கொண்டிருந்தவன் மனதில் அவனுடைய குழந்தைப் பருவம் நினைவிற்கு வர சிறிய புன்னைகையுடன்…

‘ஆமா, மத்த எல்லாருக்கும் ஷி இஸ் Sue. ஆனா எனக்கு எப்பவுமே சுஷி. அவளைப் பார்க்கத்தான் இந்தப் பர்சனல் அண்ட் அஃபீஷியல் ட்ரிப் to Jersey. Philly’கு இல்ல’ என்று நினைத்துச் சிரித்துக்கொண்டே பயணத்தை ஆரம்பித்த்தான்.

********

விமானம் பறப்பதற்குத் தயாராக “Ladies and gentlemen, we are ready for take-off and we ask that you please fasten your seatbelts. Please turn off all personal electronic devices, including laptops and cell phones” என்ற அறிவிப்பு வந்தது.

க்ரிஷ் மனதில் சுஷியின் நினைவுகள் வந்தவண்ணம் இருந்தது.

‘மார்க் அடுச்சதுக்கு அவங்க வீட்ல கூட ப்ரோப்லம் பண்ணல ஆனா சுஷி அம்மா, பாரு கிட்ட வந்து நான் இந்தவயசுலயே ஒரு ரவுடி மாதிரி நடந்துக்கறேன்னு கம்பளைண்ட் பண்ணாங்க’

‘பாருக்கு என்ன பத்தி தெரியும். தேவையில்லாம வம்புக்குப் போகமாட்டேன்னு. அதுனால பெருசா எடுத்துக்கல’

‘வி போத் ஹாட் எ கிரேட் சைல்ட்ஹூட் (We both had a great childhood). ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல். நிறைய ஆட்டம் பாட்டம். நிறைய பிக்னிக்ஸ், டூர்ஸ். எனக்கு அவ தான் பெஸ்ட் ஃபிரண்ட் அவளுக்கு நான். என்னப்பத்தி என்னைவிட அவளுக்கு நிறைய தெரியும்’

‘நான் எவ்வளவு வேணா சீண்டுவேன்… ஆனா அவளுக்கு ஒன்னுன்னா நான் தான் மொதல்ல நிப்பேன். நாங்க சேர்ந்து சுத்தாத இடம் இல்ல’

‘ரெண்டு பேரும் ஒளிவு மறைவு இல்லாம எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்போம் எல்லாமே நல்லா போயிட்டு இருந்துச்சு’

‘பட் அந்த ஒரு ப்ராப்லம்’ என்று நினைக்கும் போது “Sir would you like to have some drink (சர் உங்களுக்கு குடிக்க ஏதாவது வேணுமா)?” என்று ஏர் ஹோஸ்டஸ் கேட்க நினைவிற்கு வந்தவன் “நோ தேங்க்ஸ்” என்றான்.

விமானத்தில் அவன் பக்கத்தில் இருந்த சிறுவனும் சிறுமியும் கேம் விளையாடுவதைப் பார்த்தவன் அவளும் அவனும் அடித்துக்கொண்டு வீடியோ கேம் விளையாடியதெல்லாம் நினைவிற்கு வந்து அப்படியே கண்ணுறங்க… சிறிது நேர விமானப் பயணத்துக்குப் பின் நெவார்க் வந்தடைந்தான்.

நெவார்க் – அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் அமைந்திருக்கும் நகரம். நியூயார்க் நகரத்திற்கு மிக அருகாமையில் உள்ள ஒரு இடம். கதையின் முக்கால் பாகம் நெவார்க்/ நியூயார்க்’கை சுற்றியே நகரும்.

தேவைக்கேற்ப ஆங்கில சம்பாஷணைகளைத் தமிழில்… ஆங்காங்கே சில ஆங்கில உரையாடல்களுடன்.

க்ரிஷ் நெவார்க் பயணத்தைத் திட்டமிடும்போதே, அவள் ‘எங்கு தங்கியிருக்கிறாள்’ என்று எல்லாம் விசாரித்து… அதே அபார்ட்மெண்டில், அவள் தங்கி இருக்கும் அதே தளத்தில், ஷேரிங் டைப் வீடு மட்டுமே இருந்ததால் அதை புக் செய்திருந்தான்.

அவனின் வீட்டிற்கு வந்தவன் அவ்வப்போது வெளியே வந்து அவளின் வீட்டின் மேல் ஒரு பார்வை வைத்துக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். வீடு பூட்டியே இருந்தது.

லிஃப்ட் பக்கத்தில் உள்ள வீடு என்பதால், அது வரும்போதெல்லாம் வெளியே சென்று ஆவலாக பார்த்தான் அவளாக இருக்குமோ என்று.

இரவு பத்துமணிக்கு, லிஃப்ட் சத்தம் கேட்டு கதவைத் திறக்கும் முன் அவனின் வீட்டைக் கடந்து, தள்ளாடிக்கொண்டே சுஷீலா, அவள் வீட்டின் கதவைத் திறந்து கொண்டிருந்தாள்.

உதவி செய்யவேண்டும் என்று அவன் மனம் துடித்தாலும், ‘இப்போ போய்ப் பேசின நல்லா இருக்காது. நாளைக்கி பேசலாம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு விடியலுக்காகக் காத்திருந்து உறங்கினான்.

காலை விடிந்தது கூடத் தெரியாமல் நன்றாக உறங்கிக்கொண்டிருக்க, போன் சத்தம் கேட்டு எழுந்தவன் மணி மணியைப் பார்த்தான்.

அது ஏழு எனக் காட்ட, போன் எடுத்துப் பேசினான்.

“குட் மார்னிங் பாரு… ரொம்ப டைம் ஆச்சு… நாளைல இருந்து கால் மீ அட் சிக்ஸ்” கொஞ்ச நேரம் பார்வதியுடன் பேசிவிட்டு போன் வைத்தவன், அவசர அவசரமாகப் புறப்பட்டான்.

சீக்கிரமாகக் கதவைப் பூட்டிவிட்டு கிழே செல்லவிருக்கும் லிஃப்டை ஓடிச்சென்று நிறுத்தி உள்ளே ஏறிக்கொண்டான்.

அவனுக்காக லிஃப்ட்டை நிறுத்தி வைத்த பெண்மணியிடம் நன்றி கூறிவிட்டு திரும்பியவன் கண்களில் அவள் முகம். மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள் அருகில் எதையும் பார்க்காமல்.

அவன் “சுஷி” என்றழைக்க… அவனைத் திரும்பிப்பார்த்துத் திகைத்தாள் சுஷீலா.