mem2-13

மறந்துபோ என் மனமே(2) – 13:

“தெரியாம சிரிச்சது போதும். இந்தப்பக்கம் திரும்பு” என அவளை  கிண்டல் செய்ய…

“நான் ஒன்னும் சிரிக்கல. இன்னும் கோபமாதான் இருக்கேன். அப்படி என்ன சிரிச்சு சிரிச்சு பேசினா உன்கிட்ட… அந்த சாய்ரா…” என கோபமாக இருப்பதுபோல் முகம் வைத்துக்கொண்டு கேட்டாள் புன்னகையுடன்.

“ப்ரியா பத்தி தான். அவளுக்கு marriage fix ஆகிருக்காம். அதுவும் இந்தியால. அதப்பத்தி தான் சொல்லிட்டு இருந்தா” என முடிப்பதற்குள்…

“வாவ். இந்தியா… என்ன வீட்ல சின்ன பொண்ணா இருக்கப்ப கூட்டிட்டு போனாங்க. பொள்ளாச்சிக்கு” என்றாள் முகத்தில் மலர்ச்சியுடன்.

சிறிதுநேரத்தில் அவள் விளையாடும் டென்னிஸ் கிளப் சென்று சிறிது நேரம் செலவழித்துவிட்டு வீடு திரும்பினர்.

——-

“க்ரிஷ் இன்னிக்கி முக்கியமான எபிசோட். நான் பாத்தே ஆகணும் ரிமோட் குடு” என சீரியஸ்’ஸாக அவனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.

“தள்ளி போ சுஷி. இன்னும் முப்பது நிமிஷம் critical match. தொல்ல பண்ணாம போய் லேப்டாப்’ல ஸ்ட்ரீம் பண்ணிக்கோ” என்று அவளிடம் இருந்து ரிமோட்டை மறைத்து வைத்துக்கொண்டான்.

அவன் மேல் பாய்ந்து “நீ போய் லேப்டாப்’ல பாரு. எனக்கு பெரிய ஸ்க்ரீன்ல பாக்கணும்” என அவனிடம் இருந்து பறித்த ரிமோட்டில் சேனல் மாற்றினாள். உடனே அவளிடம் இருந்து பிடுங்க முயன்றான் க்ரிஷ்.

இருவரிடையே சண்டை வலுவானது ரிமோட்டை யார் தன்வசப்படுத்திக்கொள்வது என்று. ‘சுஷி’ ‘க்ரிஷ்’ என்று இருவரும் கூச்சலிட்டு அடித்துக்கொண்டனர்.

“Excuse me” என்று திறந்திருந்த கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்த ப்ரியா இருவரும் அடித்துக்கொள்வதை ஒரு நொடி அதிர்ந்து பார்க்க, அவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியே பார்த்த இருவரும் சட்டென விலகி…

“ஹே ப்ரியா கெட் இன்” சுஷி, கிரிஷை பார்த்து முறைத்தவண்ணம் அழைத்தாள்.

“ஸாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கறேன். நான் அப்புறம் வரவா?” என்று தயங்கி வாசலில் நின்றவளை… “Oh nothing like that. ரிமோட்க்கு தான் சண்டை . உள்ள வா” என்று சுஷி மறுபடியும் அழைக்க “வாங்க…” என்றான் க்ரிஷ் சோபாவை காட்டி.

அவள் உள்ளே வந்து உட்கார, சுஷியும் க்ரிஷும் முறைத்துக்கொண்டு அவளுடன் உட்கார்ந்தனர்.

“எனக்கு கல்யாணம் fix பண்ணிருக்காங்க. விஜய் தான். உங்களுக்கு தெரிமே Sue” என்றாள் சுஷியை பார்த்து.

“Oh yeah தெரியும் கங்ராட்ஸ் ப்ரியா” என்றாள் சுஷி.

பின் ப்ரியா… “மதுரைல கல்யாணம். Two months vacation’ல போறேன். உங்களால வர முடிமான்னு தெரில… பட் ஒரு குட்டி ட்ரிப் இந்தியாக்கு போடுங்களேன்” என்றாள்.

“இந்தியா ட்ரிப்பா… முடிமான்னு தெரில. பட் அர் விஷஸ் ஆர் ஆல்வேஸ் தேர் ஃபோர் யு (But our wishes are always there for you)” என்ற சுஷி “அஞ்சு நிமிஷம்… நான் போய் coffee போடறேன் நீங்க பேசிட்டு இருங்க” என்று எழ “இருக்கட்டும் Sue. பரவால” என்றாள் ப்ரியா.

“பயப்படாதீங்க… அவ காஃபி நல்லா போடுவா” என்று க்ரிஷ் கிண்டல் செய்ய அவனைப் பார்த்து முறைத்து…

“ஒரு ஃபைவ் மினிட்ஸ். போட்டுடறேன்” என்று கிட்சனுள் சென்றவள் கண்கள் டிவி’யை பார்த்தது. அதில் அவள் மாற்றிய சேனலில் அவள் பார்க்கும் சீரிஸ் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்த்தவண்ணம் காஃபி போட ஆரம்பித்தாள்.

‘அவள் மட்டும் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறாள்’ என்பதை பார்த்த க்ரிஷ்… சட்டென ஆஃப் செய்து சுஷியை பார்த்து நகைத்துவிட்டு ப்ரியா பக்கம் திரும்பினான்.

அவனை கறுவி விட்டு காஃபி போடுவதில் மூழ்கினாள்.

“கங்ராட்ஸ் ப்ரியா. விஜய் என்ன பண்ராரு?” க்ரிஷ் கேட்க… “அவரும் எங்க ஆஃபீஸ் தான். பை த வெ இது லவ் கம் அரேன்ஜீட் மேரேஜ்” என்றாள் நாணத்துடன். “தட்ஸ் கிரேட்” புன்னகைத்தான் க்ரிஷ்.

பின் ப்ரியா மெதுவாக… “ரொம்ப திருப்தியா இருக்கு… Sue’வ இப்படி பாக்க. அவங்க கண்ணுலயே சந்தோஷம் தெரியுது. இங்க வந்ததுலயிருந்து  இப்படி பாத்ததே இல்ல அவங்கள… டிஃபரென்ட்’டா தெரியுறாங்க. மஸ்ட் பி பிகாஸ் ஆஃப் யு” என்றாள்.

பதிலுக்கு க்ரிஷ் புன்னகைத்தான். அதற்குள் சுஷி அங்கே வர… மூவரும் காஃபி குடித்தனர்.

“முடிஞ்சா ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும். நீங்க இங்கதானே brought up” என்றவளை சுஷி ‘எப்படி தெரியும்’ என்பதைப் போல் பார்க்க… “க்ரிஷ் சொன்னாரு…” என்று விளக்கமளித்தாள்.

“உங்களுக்கும் இந்தியா வந்த மாதிரி இருக்கும். ட்ரை பண்ணுங்க. நான் கிளம்பறேன்” என கிளம்பி சென்றாள் ப்ரியா.

“நீ அவகிட்ட எவ்ளோ பேசியிருக்க. Brought up வரைக்கும்” என்று கதவை இப்போது தாளிட்டு உள்ளே வந்தாள்.

“சும்மா அவளை ட்ரை பண்ணலாம்ன்னு நெனச்சேன். பட் அவளுக்கு பாய் ஃபிரின்ட் இருக்கான்னு சொன்னவுடனே ப்ச்…” என சோகமாக இருப்பதுபோல் சைகை செய்தான்.

“போதும் உன் ஃபீலிங்ஸ்” என்று அவன் பக்கத்தில் இருந்த ரிமோட் எடுத்து டிவி ஆன் செய்தாள்.

“சரி உன்கிட்ட கேக்கணும்ன்னு இருந்தேன். உன் விரல் கட் ஆன அன்னைக்கு, அவ உனக்கு ஹெல்ப் பண்ண வந்தா…  நீ அவ வேணும்ன்னு போக சொன்னயே… ஏன்” என்று கேட்டுக்கொண்டே, ரிமோட்டை அவளிடம் இருந்து பறிக்க முயன்றான்.

அதை காலடியில் மறைத்து வைத்துக்கொண்டு “எனக்கு அவள பாத்தா ஒரே கடுப்பா இருக்கும். எப்பவும் அந்த விஜய் கூடவே சுத்திட்டுருப்பா. ஹாப்பியா இருப்பா. என் லைஃப் தான் உனக்கே தெரிமே. அப்போ தான் எல்லாம் முடிஞ்ச இங்க வந்தேன்”

அவள் முகத்தில் பழையதை நினைத்து சோகம் தெரிகிறதா என க்ரிஷ் பார்க்க, அவளோ முகத்தை சுளித்துக்கொண்டு அந்த எண்ணம் எதுவும் இல்லாது போல்…

“என்னோட சந்தோஷமில்லாத வாழ்க்கைய நினச்சு எனக்கு ஒரே கடுப்பா இருந்துச்சு அவளை பாக்கறப்பெல்லாம். அதுனால அவளை பிடிக்காமலே போச்சு. அது தான் வேற ஒன்னும் இல்ல… இப்போ அவளை face பண்ண ப்ராப்லமே இல்ல எனக்கு” என்றாள் தெளிவாக.

“ஹ்ம்ம். அப்போ இப்ப ஹாப்பியா இருக்க… அப்படிதானே” என அவன் கேட்க “அது உன் கைல தான் இருக்கு க்ரிஷ்” அந்த பதிலை எதிர்பார்க்காத க்ரிஷ் அவளை புருவங்கள் சுருங்க பார்க்க…

“நீ என்கிட்ட ரிமோட் கேக்காம இருக்கணும். அப்போ தான் ஹாப்பியா இருப்பேன்” என்று பற்களை காட்டி சிரித்தவளைப் பார்த்து….

“அப்போ நீ ஹாப்பியா இருக்கவே வேணாம்” என்று மறுபடியும் ரிமோட்டுக்காக சண்டை போட ஆரம்பித்தனர்.

—–

இரண்டு நாட்கள் சட்டென நகர… அவன் Peoria செல்ல ஆயத்தமானான்.

“நானும் வரனே ஏர்போர்ட்’கு” சுஷி கிளம்பிக்கொண்டிருந்த க்ரிஷிடம் கேட்க…

“ஒன்னும் வேணாம். ரெஸ்ட் எடு சுஷி. எனக்காக சீக்கிரம் எழுந்திருச்சுட்ட. நல்லா தூங்கு. புரியுதா” என்று சொல்லிக்கொண்டே புறப்பட… அவள் முகம் வாடிப்போனது.

“லூசு” என அவள் தலையில் குட்டியவன், அவளை தோளோடு அணைத்துக்கொண்டு…

“நீ தனியா திரும்பி வர போர் அடிக்கும். அதுக்கு தான் சொன்னேன். நேத்து ரொம்ப நேரம் நைட் பேசிட்டே இருந்துட்டோம். சோ நீ தூங்கற இப்போ. ஹ்ம்ம்?” குனிந்து அவள் முகம் பார்த்து கேட்க… அவளும் தலையசைத்தாள்.

———

“பாரு” என்று கதவை திறந்த பார்வதியை கட்டிக்கொண்டான் க்ரிஷ்.

“வாடா என் மகனே. இந்த வாரமாவது வரணும்ன்னு தோணுச்சே. தடி மாடு ரெண்டு வாரமா ஷேவ் பண்ணவே இல்லையா” என்றவர் அவனை மேலும் கீழும் பார்த்தார்.

“என்ன பாக்கற பாரு?” க்ரிஷ் கேட்க… “ஏதோ வித்தியாசம் தெரியுது. என்னனு யோசிக்கிறேன்” என்றார் மறுபடியும் அவனைப் பார்த்து.

அன்று சுஷியை பார்த்தபோது ப்ரியா சொன்னது நினைவிற்கு வர ‘என்கிட்டயும் வித்தியாசம் தெரியுதா’ என்று மனதில் நினைத்து வியந்து… “என்ன தெரியுது?” என கைகள் விரித்து அவன் அம்மாவிடம் கேட்க… 

“ஹ்ம்ம் கண்டுபிடிக்கறேன். நீ போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா. டிஃபன் எடுத்துவெக்கறேன்” என்று அவனை கிளப்பிவிட… “அப்பா எங்க பாரு” என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான்.

“ஏதோ இன்னிக்கி ஆடிட் இருக்குன்னு ஆஃபீஸ்’கு போய்ட்டாருடா. மதியம் வந்துருவாரு” என்றவர் கிட்சனுள் செல்ல… அவன், அவனறைக்கு சென்றான்.

உள்ளே வந்த அடுத்த நிமிடம் சுஷிக்கு கால் செய்தான். 

“ஹே க்ரிஷ். ரீச் ஆய்ட்டயா?” என மலர்ச்சியுடன் அவள் கேட்க… “ஆமா இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். Peoria வந்தவுடனே கூப்பிடலாம்ன்னு நெனஞ்சேன். தூங்கிட்டு இருப்பயோனு கூப்பிடல. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா”

“ஹீஹீஹீ நான் தூங்கலாம் இல்ல க்ரிஷ். சும்மா ஏதோ நோண்டிட்டு இருக்கேன்”

“அப்போ தூங்கவே இல்லையா. இடியட். பிரேக் ஃபாஸ்ட் சாப்டயா?” க்ரிஷ் கேட்கும்போது பார்வதி… அவனை அழைத்துக்கொண்டே வந்தார்.

“பாரு ஒரு 2 மினிட்ஸ் வரேன் நானு” க்ரிஷ் சொன்னவுடன், அவனைப் பார்த்து முறைத்து “எப்பவும் போனும் கையுமாவே இரு. சரி சீக்கிரம் வா. தோசைய சூடா சாப்பிடு” சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

“போய் சாப்பிடு க்ரிஷ். ஆண்ட்டி வெயிட் பண்றாங்கல்ல. அவங்க  கூட டைம் ஸ்பென்ட் பண்ணு”

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல. சொல்லு சாப்பிட்டயா?” மறுபடியும் அவன் அதையே கேட்க… “ஹ்ம்ம் சாப்பிட்டேன்” என்றாள் சட்டென.

அவள் பேச்சில் நம்பிக்கை இல்லாமல் “என்ன சாப்பிட?” அடுத்த கேள்வி கேட்க “அது… பிரட் சாப்பிட்டேன்” என்றாள்.

“ஏன் சுஷி பொய் சொல்ற? நேத்தே அது காலி ஆயிடுச்சு. வாங்கணும்ன்னு சொன்னேன்” என்று அவன் கோபப்பட, நாவை கடித்தவள்…

“ஐயோ ஆளவிடு. நான் போய் சாப்பிடறேன் நீயும் சாப்பிடு. எவ்ளோ நேரம் ஆண்ட்டி வெயிட் பண்ணுவாங்க. போ நானும் போறேன்”

“சாப்பிட்டு கால் பண்ணணும் புரிதா” என்றான் க்ரிஷ்.

“ஹ்ம்ம் ஒகே நீ போய் சாப்பிடு” என்று சொல்லிவிட்டு கட் செய்தாள் சுஷி.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் கழித்து மறுபடியும் அழைத்தான் க்ரிஷ். அவள் எடுக்க… “சாப்பிட்டயா?” அதயே கேட்டான்.

“ஹ்ம்ம் முடிஞ்சது. ஆஃபீஸ்’ல emergency issue’னு சொன்னாங்க… சோ ஆஃபீஸ் வந்துட்டேன். நானே திரும்ப கால் பண்ணவா க்ரிஷ்?” 

“எதுக்கு சாட்டர்டே ஆஃபீஸ்’லாம் போற சுஷி? ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே. இதுவே பழக்கமாயிடும்” என்று கடிந்தவனை… “இல்லடா முக்கியமான வேல. சரி நான் கொஞ்சம் ஒர்க் பண்ண வேண்டியதிருக்கு” அவள் முடிப்பதற்குள்…

“எனக்கு செம்ம கோபம் வருது” அவன் அவள் மேல் பாய… “எதுக்கு கோபப்படற க்ரிஷ்? வேலைன்னு தானே வந்தேன். You engage yourself there. நான் வேல முடிச்சுட்டு கால் பண்றேன்” என்று சொல்லிவிட்டு போன் வைத்துவிட்டாள்.

‘என்ன சாட்டர்டே வேல. நான் அங்க இருந்திருந்தா அனுப்பியிருக்கவே மாட்டேன். ரெஸ்ட் வேண்டாமா? நைட்டும் சரியா தூங்கல. ச்ச’ என்று புலம்பினான் க்ரிஷ்.

—-

“க்ரிஷ் திங்கள் காலைல தானே போற. நாளைக்கி ஈவினிங் நம்ம நந்தினி ப்ரோக்ராம் ப்ளூமிங்டன்’ல (Bloomington) இருக்குடா. அவளோட ஃபிர்ஸ்ட் சோலோ ப்ரோக்ராம். போயிட்டு வந்துடலாம்” என்றார் பார்வதி மதிய உணவு உண்ணும் போது.

சட்டென நிமிர்ந்த க்ரிஷ்… “நாளைக்கி ஈவினிங் ஆஹ்? இல்ல பாரு நான் ஈவினிங்’கே கிளம்பறேன். Monday காலைல போனா ஒரே நெருக்கடியா இருக்கும்” என்றான் சுஷியை மனதில் நினைத்து.

“என்னடா இன்னிக்கி தான் வந்த… நாளைக்கே கிளம்பறேன்னு சொல்ற. ஏன் விக்ரம்… நீங்க அந்த விக்டர்’ட்ட பேசக்கூடாதா? இவன் Philly போயே ஆகணுமா?” என்று கணவனிடம் பார்வதி கேட்க… அதை எதிர்பார்காத க்ரிஷிக்கு புரை ஏறியது.

அவன் தான் Philly செல்லவில்லையே. அவன் இருப்பது ஜெர்ஸி என்று விக்டருக்கு தெரியும்.

க்ரிஷ் தலையை தட்டி…  தண்ணீர் கொடுத்தார் பார்வதி.

‘அச்சச்சோ நான் பொய் சொல்லிட்டு ஜெர்ஸில இருக்கேன்னு தெரிஞ்சா பாரு தாண்டவம் ஆடுவாளே. எப்படி சொல்றது’ என யோசிக்கும்போது…

“அவன் என்ன இன்னும் சின்ன பிள்ளையா? அவன் டீச்சர்’ட்ட கம்ப்லைன் பண்ற மாதிரி இருக்கும். Let him decide what to do. நீ சும்மா இரு பாரு” என்றார் விக்ரம்.

“தேங்க்ஸ் டாடி” என்று வாய் முழுக்க சிரிப்புடன் உண்டுமுடித்தான்.

மாலை நேரம் ஆனது. வீட்டிலே இருந்தாலும், எல்லா comfortness இருந்தாலும், அம்மாவுடனும் அப்பாவுடனும், நல்ல சாப்பாட்டுடனும், நேரத்தை கழித்தாலும், ஏதோ ஒன்றை மிஸ் செய்வதாக உணர்ந்தான்.

அவனுக்கும் சுஷிக்கும் நெருங்கிய நண்பன் கௌஷல் ஏதோ வேலையாக சிகாகோவில் இருந்து Peoria வந்திருக்க… க்ரிஷை சந்தித்தான். அவனின் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை க்ரிஷிடம்.

‘மதியம் கூப்பிட்டேன் எடுக்கல. ஒழுங்கா சாப்பிட்டாளான்னு தெரில. அப்படி என்ன இன்னிக்கி வேல? ஏதாவது பிரச்சனையான்னு தெரிலையே’ அவன் நினைக்க… மறுபடியும் போன் செய்தான்.

அவளிடம் இருந்து மெசேஜ் வந்தது…

“Krish, Shall I call you by 9.00PM? Will talk after dinner. You must be free by then”

அதற்கு அவன்… “Idiot, I’m free even now. Why aren’t you answering my call?”

அவளிடம் இருந்து பதில் வரவில்லை. அதற்கு மேல் அவன் மனம் அவளையே சுற்றிக்கொண்டிருந்தது.