MEM2-18

மறந்துபோ என் மனமே(2) – 18:

இருவரிடையில் மௌனம் நிறைந்திருக்க… “பாரு சொன்னது சரி தான் சுஷி. உன்ன தவிர யாரால என்ன புரிஞ்சுக்க முடியும்”

அவனிடமிருந்து வந்த வார்த்தைகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள் சுஷி.

“உன்கிட்ட அம்மா என்ன பேசினாங்கனு தெரியல. ஆனா என்கிட்ட நிறைய பேசினாங்க. அத திரும்ப திரும்ப யோசிச்சு பாக்கறப்ப தான் அதுல இருக்கற நிறைய விஷயம் புரியுது”

“லைஃப்ல ரொம்ப முக்கியம்… நம்மள அப்படியே ஏத்துக்கற ஒரு பார்ட்னர் அமையறது. நீயும் நானும் ஒன்னா இருக்கப்ப, நாம நாமாவே இருக்கோம். We care for each other. We are affectionate towards each other”

அவன் பேசிக்கொண்டிருக்கும் போது மழை திடீரென வர ஆரம்பிக்க… நேரம் போவதைக் கூட மறந்து இருவரும் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்து… அவசரமாக காரில் ஏறினார்.

“நான் ஓட்டறேன்” என அவன் காரை எடுத்தான்.

அவள் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருக்க, அவள் பக்கம் திரும்பிய க்ரிஷ் அவள் முகத்தை அராய்ந்தான், ‘அவள் என்ன உணர்கிறாள்’ என்பதைப் பார்க்க.

அவள் எந்த உணர்வையும் காட்டாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள்.

வெகு நேரத்து மௌனத்தை கலைத்தான் க்ரிஷ்.

“நீயும் ஸ்டீவும் பேசியத அவன் என்கிட்ட சொன்னான்” க்ரிஷ் சொன்னதைக் கேட்டு சட்டென திரும்பி அவனைப்பார்த்தாள் சுஷி.

“எந்த காரணத்துக்காகவும்… யார் என்ன சொன்னாலும்… ஏன், நீயே சொன்னாலும் உன்ன விட்டுட்டோ, உன்கூட பேசாமலோ இருக்க மாட்டேன். அப்போ சின்ன வயசு. மைண்ட் டைவர்ட் பண்ண நிறைய விஷயம் இருந்துச்சு. பேசாம இருந்துட்டேன். ஆனா இப்போ am matured enough”

க்ரிஷ் கண்கள் வழியாக அவனுடைய மனதை உணர முடிந்தது சுஷியால்.

சிறிய புன்னகையை உதிர்த்து, ஜன்னல் பக்கம் திரும்பி மழையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கும் யோசிக்க நேரம் வேண்டும் என்று உணர்ந்த க்ரிஷ் அதற்கு மேல் எதுவும் பேசாமல் காரை செலுத்தினான்.

இரவு வீட்டுக்குத் திரும்ப, பெரிதாக எதுவும் பேசாமல் படுக்க சென்றனர்.

——

“க்ரிஷ் யாரோ பெல் அடிச்சாங்க… கொஞ்சம் வாயேன் பாக்கலாம்” சுஷி அவனை எழுப்ப… “இந்த நேரத்துல யாரு” என கேட்டுக்கொண்டே எழுந்தான்.

அவன் எழுந்து ஹாலுக்கு வர அங்கே பால்கனியில் விளக்கு எரிவதை பார்த்துக்கொண்டே கதவைத் திறந்தான்.

அங்கே யாருமில்லை என்றதும்… “கனவு ஏதாச்சும் கண்டையா சுஷி? யாருமில்லையே… ஏன் பால்கனி லைட் எறிஞ்சுட்டே இருக்கு” அவன் விளக்கை அணைக்க முற்பட, அவள் பால்கனி கதவைத் திறந்தாள்.

அவன் அவளைப் பார்க்க, அவள் அங்கிருந்த டேபிள் அதன் மேல் இருந்த ஒரு சின்ன கேக்’கை கண்களால் காட்டினாள்.

நேற்று அவன் பேசியபின், அவள் எதுவும் பேசாததால் ‘தான் பேசியது சரியா தவரா’ என்ற எண்ணத்தில் உழன்றவன், அவனுடைய பிறந்தநாளை மறந்து போனான்.

 “நானே மறந்துட்டேன் நேத்து நடந்த விஷயங்கள்னால சுஷி” புன்னகையுடன் அவன் சொல்லும்போது அவள் மணி பார்க்க, அதுவும் பன்னிரெண்டை காட்டியது.

அவனருகே சென்று அவனைக் கட்டிக்கொண்டு… “ஹாப்பி பர்த்டே க்ரிஷ்” என்றாள் எப்போதும் சொல்வதுபோல்.

 ஆனால் அந்த அணைப்பில், அவனுக்குள் ஒரு சின்ன மாற்றத்தை உணர்ந்தான் க்ரிஷ். அதை வெளிகாட்டிக்கொள்ளாமல்… “தேங்க்ஸ் சுஷி” புன்னகையுடன் சொல்ல, அவனை தள்ளியவாறே கேக் அருகில் அழைத்துச்சென்றாள்.

அந்த சின்ன சதுர வடிவிலான கேக்’கை பார்த்தவனுக்கு, மனதில் ஒரு மின்னல் வந்துசென்றது. சட்டென சுஷியை பார்க்க அவள் சிரித்துக்கொண்டே கண்களால் கேக்’கை மறுபடியும் காட்டினாள்.

அந்த கேக் இரண்டு ஃபிளேவர் கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்த ரெட் வெல்வெட் ஒரு புறமும், அவளுக்குப் பிடித்த சாக்லேட் மறுபுறமும். இப்படி பிறந்தநாள் கொண்டாடுவதே அவர்கள் வழக்கம். 

இதழோரத்தில் புன்னகையுடன், அவன் கேக்’கை வெட்டினான். சாக்லேட் பக்கத்தை அவளுக்கு கொடுக்க, அவனுக்கு பிடித்த ரெட் வெல்வெட் அவனுக்கு கொடுத்தாள்.

சரியாக அந்த நேரம் சுஷியின் போனுக்கு வீடியோ கால் வர, அவனிடம் நீட்டினாள். அது பார்வதி விக்ரமிடம் இருந்து.

இருவருடன் பேசிய பின், சுஷி அவன் பின்னிருந்து வந்து அவனிடம் ஒரு கிஃப்ட்டை நீட்டினாள். அதை பார்த்தவன் கண்கள் விரிந்தன.

“இதெதுக்கு இப்போ” அவன் சத்தமாக சிரிக்க… “கிஃபிட் குடுத்த சிரிப்பயா? சிரிக்காத ஸ்டுபிட்” என்று அவள் கொடுக்க இருந்த கிடாரால் அவனை அடித்தாள்.

“ஆஹ் வலிக்குது” என்று சிரித்துக்கொண்டே அதை வாங்கிக்கொண்டான். “நான் இதெல்லாம் ப்லே பண்ணி பல வருஷமாச்சே” அவன் சொல்ல… “அதுனால தான் நான் உனக்கு கடைசியா கிபிட் பண்ண கிடார் கூட sale’க்கு போட்டுடயா?” இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்டாள்.

“யாரு… அந்த பாரு போட்டு குடுத்துட்டாளா. ஆமா… அது இருந்தா திரும்ப உன் ஞாபகம் வரும்னு பண்ணிட்டேன்” என்றான் புன்னகையுடன்.

“அதுனால தான் அதையே திரும்ப குடுத்துருக்கேன். இப்போ தான் நான் உன்கூடவே இருக்கேனே…” மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.

“விட்டதிலிருந்து ஸ்டார்ட் பண்ணப்போறோம் ஹ்ம்ம்?” அவனும் புன்னகையுடன் கிடாரின் ஸ்ட்ரிங்ஸ்’ஸை இயக்கினான் சின்னதாக.

அது கோர்வையாக வராததால்… “Its been years. I lost touch Sushi. கனெக்ட் ஆக மாட்டேங்குது” என்றான் முயற்சி செய்தவாறே.

அவன் அருகில் அமர்ந்த சுஷி… அவன் தோளின் மேல் சாய்ந்து கொண்டு, “பரவால்ல. பொறுமையா ட்ரை பண்ணு” என்றுவிட்டு, கொஞ்சம் தயக்கத்துடன்…

“அப்புறம்… நீ நேத்து பேசினதுக்கு நான் எதுவும் சொல்லல. என்ன சொல்றதுனு தெரில க்ரிஷ். நீ சொன்னமாதிரி நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. நீ என்மேல எவ்ளோ கேரிங்’கா இருக்க. பட் நான் உனக்கு…” என்று இழுக்க…

கிடாரில் கோர்வையான இசை வெளிப்பட்டது. அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவன் மெல்லியதாக இசைத்தான்.

புன்னகையுடன் அவளைப்பார்த்த க்ரிஷ், “சுஷி… நீ என்ன நினைக்கறனு புரியுது. எனக்கும் அது தோணாம இல்ல. நாம இப்படியே இருப்போம். நமக்குள்ள நம்ம ஃபிரண்ட்ஸ் அப்படிங்கற ஃபீல் தாண்டி… இந்த ரிலேஷன்ஷிப் எடுத்துட்டு போக முடியுமானு பாக்கலாம்” அவள் தயங்கியதை அவன் சொல்லி முடித்தான்.

“ஹ்ம்ம். அதுதான் க்ரிஷ். ரெண்டு பேரும் இன்னும் ஃபிரண்ட்ஸ் அப்படிங்கற zone’ல இருக்கோம். நம்ம கமிட் ஆகணும்னு நினைக்கற ரிலேஷன்ஷிப் is different. Why don’t we travel to India and spend sometime there? நமக்கும் ஒரு சேன்ஜா இருக்குமே”

அவள் சொன்னதைக்கேட்டு புருவத்தை உயர்த்தி சிரித்த க்ரிஷ்… “Sounds like a plan போலாமே” என்றான்.

அந்த சமயம் மழையும் வர… அவள் குதூகலமாக மழையில் நனைந்தாள். அவளுக்கு பிடித்த Whitney Houston பாடலை கிடாரில் வாசித்தான்.

அவன் வாசித்த போதிலும் மனதில்… “ஏன் அவ என்ன கட்டிடப்ப எனக்கு ஏதோ மாதிரி ஃபீல் ஆச்சு… அப்போ ஒருவேளை நான்…” என்று யோசனையில் இருந்தவனை, “க்ரிஷ்… கூப்பிடறேன்ல வா” என்று அவள் கத்தியது தன்னிலைக்கு கொண்டுவந்தது.

“இல்ல சுஷி. நான் இங்கயே இருக்கேன்” அவன் சொல்ல சொல்ல வலுக்கட்டாயமாக அவனை இழுத்துச்சென்றாள்.

இப்போது இருவரும் மழையில் நனைய… “வாவ். சூப்பர்ல க்ரிஷ். எவ்ளோ நாள் ஆச்சு இப்படி மழைல ஃபுல்’லா நனைஞ்சு” என்று மழை தண்ணீருடன் விளையாடியவளை ரசித்துக்கொண்டிருந்தான்.

“உன்கூட நான் எப்பவுமே இப்படியே சந்தோஷமா இருக்கணும் சுஷி இருக்க முடியுமா?” அவளை பார்த்து கேட்க…

அதை எதிர்பார்க்காத சுஷி, முகத்தில் கொட்டும் மழையை துடைத்துக்கொண்டு புருவங்களை சுருக்கி அவனை பார்த்தாள்… அவன் அவளருகில் வந்தான்.

அவள் பின் தள்ளி செல்ல, பால்கனி ரைலிங் தடுத்தால் அப்படியே நின்றாள். அருகில் வந்த க்ரிஷ், அவள் கன்னங்களை பூப்போல ஏந்தினான்.

அவன் அவளையே பார்க்க, பதில் பேசாமல் நின்றாள்.

அவள் முகத்தின் அருகில், அவன் முகத்தை எடுத்துச்செல்ல, அவள் கண்கள் விரிந்தன. அவன் கண்களை மூடிக்கொண்டு, அவள் நெற்றில் முத்தமிட செல்லும்போது…

“டேய் க்ரிஷ்… எவ்ளோ வாட்டி எழுப்பறது. இன்னிக்காச்சும் சீக்கிரம் எந்திரி” என்று சுஷியின் சத்தம் கேட்க… கஷ்டப்பட்டு மூடி இருந்த கண்களை திறந்தான்.

அவள், அவனை எழுப்பிக்கொண்டிருப்பதை பார்த்து விருட்டென எழுந்தான். அவன் கண்டது கனவு என்று புரியும்போது, அந்தக் கனவு கண் முன்னே வர, சுஷியிடம் இருந்து சட்டென விலகினான்.

“என்ன ஆச்சு லூசு உனக்கு? எந்திரி ஃபிரஸ்ட். போ ஃபிரெஷ் ஆயிட்டு வா” என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.

“என்ன ஆச்சு இப்போ? நைட் கேக் வெட்டினது, கிடார் எல்லாம் கனவா இல்ல நடந்துச்சா? நான் சுஷிட்ட என்ன செய்ய இருந்தேன்… நல்லவேளை கனவா போச்சு… இல்லாட்டி தப்பால எடுத்துருப்பா. ச்ச” என்று தன்னையே திட்டுக்கொண்டான்.

இன்னமும் எது கனவு எது நடந்தது என்ற குழப்பத்துடன் முகப்புக்கு வந்தான். சோபா மேல் கிடார் இருந்ததைப் பார்த்து ‘அப்போ அதெல்லாம் கனவு இல்ல உஃப்ப்ப்’ மனதில் நிம்மதியடைந்தது.

“நைட் எப்போ தூங்கினோம் சுஷி? ப்ளாண்ட் அவுட் ஆனா மாதிரி இருக்கு” ‘என்ன நடந்தது’ என்று தெரிந்துகொள்ள அவன் கேட்க….

“நம்ம பேசிட்டு நான் கொஞ்ச நேரம் மழைல நனைஞ்சேன் அப்புறம் போய் தூங்கிட்டோம் ஏன் கேக்கற?”

“ஆஹ் ஒண்ணுமில்ல” என்று அமைதியாகிவிட்டான். ஆக அவனும் மழையில் நனைந்தது, அவளை ரசித்தது, பின் அவளை நெருங்கியது அனைத்தும் கனவே என்று புரிய கொஞ்சம் நிம்மதியானான்.

அவன் இங்கு வந்த சில நாட்களில் அவளுடன் துணிக்கடைக்கு சென்றபோது எடுத்த, ராயல் ப்ளூ ஷர்ட் அணிந்துக்கொண்டான். அவள் தயாராகி வருவதற்குக் காத்திருக்க, அவள் அழைக்கும் சத்தம் கேட்டு அவள் அறைக்குள் சென்றான்.

“வாவ் சூப்பர்’ரா இருக்கு க்ரிஷ். எனக்கு இந்த ஹூக் (hook) போட முடியல. கொஞ்சம் போட்டுவிடறயா” என்றாள் கண்ணாடி முன் நின்று அதன் வழியே அவனைப்பார்த்து.

அவன் அவளுக்கு செலக்ட் செய்துகொடுத்த ஆலிவ் கிறீன் கவுன் போட முயற்சி செய்துகொண்டிருந்தாள்.

அவளுக்கு அவன் பலமுறை முன்பு உதவி செய்திருக்கிறான். ஆனால் இப்போது… அவன் மனதில் ஏற்பட்ட மாற்றம், அந்த கனவு… ஏதோ தடையாக இருக்க, தயங்கி தயங்கி நின்றான்.

“டைம் ஆச்சு க்ரிஷ். சீக்கிரம்” அவள் சொல்ல, அருகில் சென்றவன்… பெறும் சிரத்தை எடுத்து அவள் மேல் பட்டும் படமால் போட்டுவிட்டு விட்டான் அந்த லோ பேக்கில் (low back) இருந்த ஹூக்கை  .

அவள் மெஸ்ஸி பன்(messy bun) ஹேர் ஸ்டைலில் இருக்க, அந்த சிறிய ரோமங்கள் அவள் அடி தலையில் இருந்தது அவன் கண்களில் பட, அதைப் பார்த்து புன்னகைத்து, கையை எடுத்துச்செல்லும் போது…

அவன் ‘அந்த முடியை இழுக்க வருகிறான்’  என்பதை கண்ணாடி வழியாகப் பார்த்து புரிந்துகொண்ட சுஷி “டேய் க்ரிஷ் வேணாம். கஷ்டப்பட்டு சீவியிருக்கேன். தல கலஞ்சுடும்” என சொல்லிக்கொண்டே திரும்பிய தருணம்…

அவன் மேல் மோதியும் மோதாமல் நிற்க, அவளை மிக அருகில் பார்த்த க்ரிஷ் ஒரு க்ஷணம் தடுமாறினான்.

சட்டென தன்னிலைக்கு வந்த க்ரிஷ், “ஆல்ரெடி கலஞ்ச மாதிரி தான் இருக்கு. இதுக்கு இவ்ளோ சீனா” என்று சொல்லிவிட்டு திரும்பி…. “உஃப்ப்ப்” என்று சத்தமில்லாமல் பெருமூச்சு விட்டபடி அறையில் இருந்து வெளியேறினான்.

முகப்புக்கு வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன்… “ஐயோ இனி சுஷியோட நாட் சோ க்ளோஸ். நான் ஏன் இப்படி ஆனேன்” என்று தலையில் அடித்துக்கொண்டான்.

சுஷி தயாராகி வெளியே வர, அந்த பளீரென சிரித்த முகத்தை பார்த்த க்ரிஷ் மறுபடியும் ஒரு நொடி தன்னிலை மறக்க… அவள் “கிளம்பலாமா?” என்று கேட்ட சத்தத்தில் “ஹ்ம்ம்” என்று விறுவிறுவென புறப்பட்டான்.