MEM217

மறந்துபோ என் மனமே(2) – 17:

‘அவங்க பேசின விஷயத்தை எப்படி இவன்கிட்ட சொல்றது. ஐயோ மாட்டிகிட்டோமா…’ மனதில் நினைத்த சுஷி, சற்று தயங்கி பின்… “சும்மா… பேசினோம்… நீ நேத்து எனக்கு மருந்து கேட்டுருப்ப… போல… எப்படி இருக்கேன்னு கேட்டாங்க” திக்கித் திணறி சமாளித்தாள்.

சந்தேகப்பார்வையுடன் “ஓ ஒகே” என்று சொன்னாலும் மனதில் ‘ஏதோ மறைக்கறயா சுஷி’ என்றே தோன்றியது.

“நீ எப்போ ஸ்டீவ்’வ பார்த்த க்ரிஷ்? அவன் நேத்து தானே அவன் அம்மாவை பாத்துட்டு வந்தான்”

“நாங்க ரெண்டு வாரமா பேசி டச்’ல தான் இருக்கோம் சுஷி. சரத் பத்தி அவனுக்கு தானே தெரியும்” என்றான்.

“ஹ்ம்ம்” என்ற சுஷி திரும்பி அவன் முகம் பாராமல்… “அவன் ஏதாச்சும் உங்கிட்ட சொன்னானா?” அவனைக் கேட்க

“நிறைய சொன்னானே… நீ எதை சொல்ற?” க்ரிஷ் சொன்னவுடன், சட்டென திரும்பி அவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் புன்னகை.

மறுபடியும் அவன் முகம் பாராமல் திரும்பிக்கொண்டு “அவன்கிட்டயே கேட்டுருக்கலாம். இவன் கிட்ட கேட்டேன் பாரு என்ன சொல்லணும்”  என மெல்லிய குரலில் தலையில் அடித்துக்கொண்டு முணுமுணுத்த சுஷி, க்ரிஷ் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து…

“எனக்கு கொஞ்சம் டையர்ட்’டா… இருக்கு… நான் ரெஸ்ட் எடுத்துக்கறேன்” என செல்லும்போது, ஏதோ நினைவிற்கு வர… “க்ரிஷ்… நாளைக்கி எனக்கு நியூயார்க்ல கொஞ்சம் வேல இருக்கு. லீவு எடுக்கறயா?”

“முடியாது” என்று சொன்னவனை… அவள் சட்டென பார்க்க, “அப்படின்னு சொன்னா விடவா போற. போலாம்” என்றான் நமட்டு சிரிப்புடன்.

“ஒன்னும் தேவ இல்ல” சொல்லவிட்டு படுக்க என சென்றவேளை பார்த்து சிரித்த க்ரிஷ் “இப்போ நல்லா ரெஸ்ட் எடு. நாளைக்கு போலாம்” என்றான் அவளும் புன்னகைத்தாள்.

——-

மறுநாள் மதியம் இருவரும் தயாராகி, நியூயோர்க்’கிற்கு புறப்பட்டனர்.

“எதுக்கு போறோம்னு சொல்லவே மாட்டேங்கற சுஷி…” அவன் கேட்டுக்கொண்டே இருக்க… அவள் காரை எடுத்தாள்.

‘விடமாட்டான் போலயே’ என நினைத்து… “எனக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கு, அதுக்கு தான்” என்றாள் ஏதோ வாயில் வந்ததை.

“என்னது இன்டெர்வியூவா??? என்ன திடீர்னு?” என்று குழப்பமானான். “சும்மா தான் அட்டென்ட் பண்றேன் …வேற ஒன்னும் இல்ல” என்றாள் மழுப்பலாக.

‘ஒருவேள நாளைக்கி என்ன நாள்னு தெரிஞ்சு, எனக்கு சர்ப்ரைஸ் குடிக்க ஏதாச்சும் பண்றாளா? அதுக்கு எதுக்கு இன்னிக்கே போனும். ஒன்னும் புரிலயே’ என குழப்பத்தில் இருந்தான் க்ரிஷ்.

சுஷி மனதில் பார்வதி பேசியதும் ஸ்டீவுடன் பேசியதும் நினைவிற்கு வந்தது. அன்று அவள் ஸ்டீவ் வந்துருத்தத்தை தெரிந்துகொண்டு அவனைப் பார்க்க சென்றாள்.

இருவரும் சிறிதுநேரம் பேசிய பின், ஸ்டீவ் அவளிடம் “சுஷி உன்ன இப்படி பார்க்க ரொம்ப நிம்மதியா இருக்கு. இது எல்லாத்துக்கும் க்ரிஷ் தானே காரணம்…” என்று கேட்க…

அவள் சிரித்துக்கொண்டே… “சந்தேகமே வேணாம் அவன் தான்” என்றாள்.

“நீங்க ரெண்டு பேரும் இவளோ கிளோஸ்’ஸா இருக்கீங்க. என்ன ரீசன்’னால பிரிஞ்சீங்கனு தெரில. But I feel you both are meant for each other” என்றவுடன்…

“ஸ்டீவ் இது ஃப்ரஸ்ட்டைம் இல்ல நான் இதுபோல கேட்கறது. நிறைய பேர் சொல்லிட்டாங்க. அதுபோல ஒரு எண்ணம் இதுவரை எங்களுக்கு வந்ததில்லை… அப்படியே வந்தாலும் அவனுக்கு நான் எப்படி சரியான பார்ட்னர்’ரா இருக்கமுடியும்?” என தயங்கி…

“அவனுக்கு நல்ல நல்ல பொண்ணுங்க கியூ’ல நிப்பாங்க. I don’t deseve him” சொன்ன சுஷி சற்று நிறுத்தி…

“என்கிட்ட பேசின மாதிரி தயவுசெஞ்சு க்ரிஷ் கிட்ட பேசவேணாம். நம்ம பேசினதையும் சொல்ல வேணாம். அவன் தெரிஞ்சுட்டு என்கூட பேசாம இருந்துட்டான்னா சத்தியமா என்னால தாங்கிக்க முடியாது…” சுஷி கண்ணில் சிறுதுளி கண்ணீர் வர…

அந்த நினைவலைகளில் இருந்து அவளை நிகழ்விற்கு கொண்டுவந்தது க்ரிஷின் குரல்.

“என்ன சுஷி வேற எதோ உலகத்துல இருக்க??? கூட வரச்சொன்னது இப்படி உம்முனு வர்றதுக்குத்தானா?” என்றான் சலிப்புடன்…

“ஸாரி ஸாரி” என்ற சுஷி அவனுடன் சகஜமாக பேசிக்கொண்டே இருக்க…  சில நேர பயணத்திற்குப் பின் அவள் காரை ஒரு இடத்தில் ஸ்லோ செய்ய… வெளியே பார்த்தவன் மனது தடுமாற்றத்துடன் படபடத்தது.

“இங்க எதுக்கு வந்துருக்கோம்?” அவளிடம் சற்று இறுக்கமான முகத்துடன் கேட்டான்.

“சொல்றேன்…” அவள் காரை பார்க்கிங்’கிற்கு ஓட்டிச்செல்ல முற்படும்போது… “நோ சுஷி நான் கோபப்பட வேணாம்னு பாக்கறேன். ப்ளீஸ். இதெல்லாம் வேணாம்னு தான் நான் இருக்கேன்” சற்று அழுத்தமாக சொல்ல…

“இப்போ நம்ம எதுக்கு போறோம்னு நான் சொல்லவே இல்லையே க்ரிஷ்…” என்று அவனைப் பார்க்காமல் பார்க்கிங்’கிற்கு சென்றாள்.

அவன் மிகவும் இறுக்கத்துடன் தெரிந்தான். அதை புரிந்துகொண்ட சுஷி… “க்ரிஷ் இது நாலு வருஷத்துக்கு முன்னாடியே நடந்துருக்க வேண்டியது. பட் இப்போ தான் அதுக்கான சான்ஸ் கிடைச்சிருக்கு. ப்ளீஸ் கோபப்படாத” என்று சொல்லிக்கொண்டே அவனை இறங்கச் சொன்னாள்.

“நீ என்ன சொன்னாலும் I can’t take this. You are forcing me” கோபத்துடன் காரிலிருந்து இறங்கினான். அவன் கோபம் முகத்தில் நன்றாக பிரதிபலித்தது.

அவள் அதை பொருட்படுத்தாமல், அவனை அழைத்துக்கொண்டு, அந்த ஸ்டேடியம் உள் நுழைந்தாள் அங்கிருந்த காவலாளியிடம் ஏதோ ஒன்றை காண்பித்து.

அங்கு அப்போதுதான் புட்பால் மேட்ச் முடிவுபெற்றிருந்தது. அதைப் பார்த்து பெரு மூச்சு விட்டான் க்ரிஷ்.

அவளின் ‘ஹலோ’ சத்தத்தில் திரும்பி அவளைப் பார்க்க அவள் போனில் …

“ஹே எங்க இருக்கீங்க… நான் இப்போ தான் உள்ள வரோம்… கேட் 4… ஒகே… கேட்டுட்டு வந்துடறோம்” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

“சுஷி என்ன நடக்குது? எனக்கு ஒன்னுமே புரியல… மேட்ச் முடிஞ்சது. நம்ம எங்க போறோம் இப்போ?” என்று கேட்டவனை பார்த்து புன்னகையுடன்….

“மேட்ச் முடிஞ்சிருச்சுன உடனே அந்நியனா இருந்த க்ரிஷ் அம்பி ஆயிட்டான் போல…” புன்னகையுடன் முறைத்தாள்.

“இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் தான் க்ரிஷ்” சொல்லிக்கொண்டே அவனை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு ஒரு புட்பால் அணி கூடியிருந்தது. அங்கிருந்த வீரர்கள் விளையாட்டு உடுப்பில் இருந்து ஃபார்மல்ஸ்’க்கு (formals) மாறியிருந்தனர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

இவர்கள் வருவதை பார்த்த அங்கிருந்த ஒருவன் “ஹே க்ரிஷ்” என வரவேற்க…

“சார்லி…” க்ரிஷ் ஆச்சர்யத்துடன் வந்தவனிடம் பேச முற்படும்போது அங்கே சற்று வயதுமிக்கவர்… “வெல்கம் மை பாய்” என சொல்லிக்கொண்டே வந்தார்.

“கோச்” என்றான் விழிகள் அகல.

இருவருடனும் க்ரிஷ் மிக சகஜமாக பேசிக்கொண்டிருக்க, மற்ற வீரர்கள் கேள்வியுடன் பார்த்தனர். சுஷி அவன் முகத்தில் தெரிந்த ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் புன்னகையுடன்.

அப்போது திடீரென அங்கிருந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் “ஹூஹூ” என்று கத்தினார். க்ரிஷ் திரும்பிப் பார்த்தான் யார்வந்தது என்று.

அந்த அறைக்குள் இரண்டு வயது மிகுந்த மனிதர்கள் வர, அதைப் பார்த்த க்ரிஷ் கண்களில் இன்ப அதிர்ச்சி.

“Pelé” ஆச்சர்யத்தில் விழிகள் விரிய பார்த்தவனுக்கு, அவர் அருகில் வந்த மரடோனா தெரியவேயில்லை.

க்ரிஷ் Pelé’ வின் தீவிர ரசிகன். அவரைப் பார்த்த அடுத்த நொடி அவன் கண்கள் சுஷியிடம் சென்றது. அவள் புன்னகையுடன் அவனை பார்த்தாள்.

அந்த ஜாம்பவான்கள் வருவதைப் பார்த்த சார்லஸ் மற்றும் கோச் இருவரும், க்ரிஷிடம் பொறுத்திருக்க சொல்லிவிட்டு சென்றனர்.

க்ரிஷிற்கு ஆச்சர்யம் தாளாமல் நிற்க, Pelé மற்றும் Maradona மற்ற வீரர்களுடன் பேசிக்கொண்டே வந்தனர்.

கோச், க்ரிஷ் தள்ளி நிற்பதைப் பார்த்து அவனை இழுத்து Pelé’வின் பக்கத்தில் நிறுத்தினார்.

அந்த ஒரு நொடி க்ரிஷ்ஷின் உடல் சிலிர்க்க, கோச் Pelé’விடம் “இவன் உங்களோட தீவிர ரசிகன் க்ரிஷ்” என ஆங்கிலத்தில் சொல்ல, அவரை விட சற்று உயரமாக இருந்த க்ரிஷியை தோளில் தட்டிக்கொடுத்து மேலும் கீழும் பார்த்தார்.

அவன் வீரர்களுக்கான உடுப்பில் இல்லாமல் சாதாரணமாக இருப்பதை கேள்வியாக பார்த்தார்.

அதை புரிந்துகொண்ட கோச் “இந்த டீம்’ல இருந்திருக்கவேண்டியது. Best bet for forward. உங்களோட ஸ்டைல் ஃபோலோவ் பண்ணுவான்”

“இலினாய் ஜூனியர்ஸ் லெவல் வின் பண்ணி நேரடியா சிகாகோ அணிக்காக NFL விளையாட தேர்வானான். கிளப்’ல சேர சொல்லி இன்வைட் கூட வந்தது. ஆனா ஹெல்த் ரீசன்ஸ்’னால ப்ரோஸீட் பண்ண முடில அவனால” என முடித்தார்.

அந்த இடத்தில் க்ரிஷிற்கு ‘என்ன பேசுவது’ என்று தெரியாமல் கைகளை கட்டிக்கொண்டு அவர் அருகே பவ்யமாக நின்றுகொண்டிருந்தான். அவன் முகத்தில் தெரிந்த அந்த பூரிப்பை, சற்று தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் சுஷி.

கோச் பேசியதைக் கேட்ட Pelé, “ஜான் இவ்ளோ பெரிய செர்டிபிகேட் கொடுக்கறாருன்னா, நீ கண்டிப்பா திறமையான ஃபிளேயரா இருந்திருப்ப… சிகாகோ கிளப் மிஸ்ட் யு. But all the best young chap” என்று மறுபடியும் தோள்களை தட்டிக்கொடுத்தார்.

“Im honored to have been invited here sir (இங்கு அழைக்கப்பட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன்)” என்றான் சந்தோஷத்தின் மிகுதியில்.

அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, அருகே இருந்த மற்ற வீரர்களுடன் பேசிக்கொண்டே அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

க்ரிஷ் அவரையே பார்க்க, “கம் லெட்ஸ் டேக் எ ஸ்னாப் (Come lets take a snap)” என Pelé சொன்னவுடன், பறந்து அவர் அருகே செல்லும்போது… சுஷியின் நினைவு வர, “one second sir” சொல்லிவிட்டு அவளை தன்னருகே இழுத்தவன் Pelé உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

——

இரவு நேரம் எட்டிப்பார்த்தது.

ஸ்டேடியம் அருகே இருந்த ஒரு பார்க்’கிற்கு வந்தனர் சுஷியும் க்ரிஷும். சிறுபிள்ளை பார்க்காதை பார்த்த சந்தோஷத்தில் துள்ளிகுதிப்பதுபோல் உணர்ந்தான் க்ரிஷ்.

“சுஷி……” என அவளை தூக்கி “உனக்கு தெரியாது நான் எவ்ளோ ஹாப்பி’யா இருக்கேன்னு. Pelé… வாவ்… என்கிட்டே பேசினாரு. என்ன தட்டிக்குடுத்தாரு. இன்னும் கனவு மாதிரியே இருக்கே” சொல்லிக்கொண்டே சுற்றியவனை “இறக்கி விடுடா இடியட்… இப்போ தான் சாப்பிட்டேன். வாந்தி வந்துடும்” என்றாள்.

அவளை இறக்கி விட்டவன் கைகளை விரித்துக்கொண்டு… “நான் இன்னிக்கி எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு வார்த்தைல சொல்ல முடியாது. என்னோட பல வருஷ கனவா இருந்துச்சு” என்றவனை பார்த்து புன்னைகைத்தாள் சுஷி.

அவள் அருகில் வந்தவன் “நீ இன்னும் ஞாபகம் வெச்சுருக்கயா சுஷி இதெல்லாம்…” என கேட்க, அங்கிருந்த ஒரு சேரில் உட்கார்ந்து, அவனையும் இழுத்து அவள் அருகே உட்காரவைத்தாள்.

பின், “உன் ரூம் full ஆஹ் அவர் போட்டோதானே இருக்கும். எப்படி மறக்க முடியும்? சார்ல்ஸ் என்னோட facebook ஃபிரன்ட். அவன் லாஸ்ட் வீக் ஸ்டேட்டஸ் போட்டுருந்தான். Peru flooding fundraiser மேட்ச் நடக்கபோகுது”

“NFL சாம்பியன்ஸ் vs Best XI டீம். இந்த தடவ நம்ம சிகாகோ வின் பண்ணதால அவங்க அடப்போறதாவும், Pelé , Maradona அத தலைமை தாங்க போராதாவும் இருந்துச்சு”

“சரி அவனுக்கு என்ன ஞாபகம் இருக்கானு பாக்கலாம்னு பேசினேன். அவன் மறக்கல. முக்கியமா உன்ன… நீங்க ரெண்டு பேரும் தான செலக்ட் ஆனீங்க ஜூனியர்ஸ் லெவல்ல இருந்து சிகாகோ கிளப்’க்கு”

“அவன்கிட்ட கேட்டேன் Pelé பார்க்க சான்ஸ் கிடைக்குமான்னு. அப்போ தான் அவன் சொன்னான்… கோச்’கே உன்ன நல்லா தெரியும்னு. அவ்ளோதான். வந்தாச்சு.” என்றாள் புருவத்தை உயர்த்தி சிரித்தவண்ணம் .

‘எப்படி ஆரம்பிப்பது’ என்று தயங்கி அவளைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்து “நான் புட்பால் மறந்து பல வருஷமாச்சு சுஷி…” என்றான்.

“நானே கேட்கணும்னு இருந்தேன். ஹார்வர்ட் போனதால கிளப்’ல ஜாயின் பண்ணலயா?” சுஷி கேட்க “அதுவும் ஒரு ரீசன்” என்றான் வெறுமையுடன்.

“அன்னிக்கி நீ சொன்னயே… புட்பால் விளையாண்டா என் ஞாபகம் வரும்னு. என்ன நான் உனக்கு cheer பண்ணது ஞாபகம் வருமா?” சிரிப்புடன் சுஷி கேட்க… அவள் பக்கம் திரும்பிய க்ரிஷ், வெற்றுப்புன்னகை உதிர்த்து மறுபடியும் திரும்பிக்கொண்டான்.

சிறிது நேர மௌனத்திற்குப் பின் வானத்தைப்பார்த்து… “நீ ஏன் ஞாபகம் வருவனு உனக்கு தெரியாதா சுஷி? நான் விளையாண்ட லாஸ்ட் மேட்ச் St Louis’ல. எனக்கு அடி பட்டு, நிறைய பிளட் லாஸ் (blood loss)” என்றவன் அவள் பக்கம் திரும்பி “இப்போக்கூட உனக்கு புரியல” என்றான். கிட்டத்தட்ட கண்கள் கலங்கி இருந்தது

அவள் எதுவும் பேசாமல் தலை குனிய… இருவரின் நினைவுகளும் பின் நோக்கி சென்றது. 

க்ரிஷும் சுசியும் இன்டெர் ஸ்டேட் லெவல் கோப்பைக்காக St Louis சென்றிருந்தபோது, க்ரிஷுக்கு மேட்ச் முடியும் தருணம்… அடிபட்டு அவனின் ஒரு கால் உடைந்தது. நல்ல ஆழமான அடி.

மிகுந்த ரத்தம் வெளியேறியதால் உடனடி சிகிச்சை தேவைப்பட்டது. அவனுக்குத் தேவையான பி-ve பிளட் குரூப் கைவசம் இல்லாததால் சிரமமாகிப்போக, பார்வதியும் விக்ரமும் அவசரமாக புறப்பட்டனர் பார்வதியின் பிளட் குரூப் பி-ve என்பதால்.

ஆனால் யாரும் எதிர்ப்பார்த்திடாத நேரம் சுஷி அவனுக்கு தேவையான ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தாள்.

இருவரும் ஒரே ரத்த வகை அதுவும் அரிதானது. அதை முன்பு இருவரும் பெருமையாக கூறிக்கொள்வார்கள். ஆனால் அது சரியான நேரத்தில் பயன்பட்டது.

அவள் ரத்தம் கொடுத்த அடுத்த ஒரு வாரத்தில் அனீமிக் (இரத்த சோகை) ஆக, அவளை அட்மிட் செய்திருந்தனர். அதற்குக் காரணம் அவள் தந்த ரத்தம் மட்டும் இல்லை.

அவன், அவளை விட்டு ஹார்வர்ட் செல்லப்போகிறான் என்ற விஷயம் தெரிந்ததிலிருந்து, சரியாக உணவு எடுத்துக்கொள்ளாததால் ஏற்பட்ட மன உளைச்சலும் கூட.

அந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்த க்ரிஷ் “என்னால தானே உனக்கு அப்போ முடியாம போச்சு. Physically and Mentally. அதுக்கப்புறம் புட்பால் மேல இருந்த இன்ட்ரெஸ்ட் போய்டுச்சு” என்றான் இறுகிய முகத்துடன்.

இருவரிடையில் மௌனம் நிறைந்திருக்க… “பாரு சொன்னது சரி தான் சுஷி. உன்ன தவிர யாரால என்ன புரிஞ்சுக்க முடியும்…” என்றான் திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்து.