MEM25

மறந்துபோ என் மனமே(2) – அத்தியாயம் 5:

சமையலறையில் பிரிட்ஜ்’யின் கிழே ஒரு க்ளாஸ் உடைந்திருக்க, அதை எடுக்க சுஷி முற்படும் போது அது கிழித்து விரலில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

இருவரும் பதறிக்கொண்டு உள்ளே வர “என்ன சுஷி இது?” க்ரிஷ் அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றான் சோபாவிற்கு.

“இருங்க நான் போய் பேன்டேஜ் எடுத்துட்டு வரேன்” ப்ரியா அவசரமாக அவளின் வீட்டிற்குச் சென்றாள்.

“என்ன பண்ணிவெச்சுருக்க சுஷி… எவ்ளோ ரத்தம் வருது பாரு. ரூம்ல தூங்குவன்னு விட்டுட்டு வந்தேன்” மனம் பொறுக்காமல் அவள் கையை மேல் தூக்கியவாறு வைத்துக் கேட்க…

“எனக்கு கொஞ்சம் ட்ரிங்க் பண்ணணும் னு இருந்துச்சு” வார்த்தைகள் தெளிவில்லாமல் வந்தது.

பின் சன்னமான குரலில் “க்ரிஷ் எனக்கு சின்ன ஹெல்ப் பண்ணு. ஆஸ்க் ப்ரியா டு லீவ். ஐ ஃபீல் எம்பாரஸ்ட் சீயிங் ஹர் (Ask Priya to leave. I feel embarrassed seeing her)” என்றவுடன்…

‘எதுக்கு அப்படி ஃபீல் பண்ணணும் ’ என நினைத்தாலும்… அவளை சமாதானப்படுத்த சரி என்றான்.

ப்ரியா சரியாக அந்த நேரம் வர, அவளிடம் பேன்டேஜ் வாங்கி சுஷிக்கு போட்டுவிட்டான்.

“தேங்க்ஸ் ப்ரியா. ரொம்ப டைம் ஆச்சு… நீங்க கிளம்புங்க நான் பாத்துக்கறேன்”

“இருக்கட்டும் க்ரிஷ். அந்த க்ளாஸ் பீஸஸ்’ஸ க்ளீன் பண்ணிடறேன்” என்று திரும்பி கிட்சனுக்கு செல்ல…

“தட்ஸ் ஒகே நான் பாத்துக்கறேன். உங்களுக்கு எதுக்கு கஷ்டம்” என்றான் சற்று அழுத்தமாக.

“சரி” என ப்ரியா வெளியேற, அவன் கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தான்.

“எனக்கு கொஞ்சம் ட்ரிங்க் பண்ணணும் . இப்போ…” என்றாள் சுஷி மறுபடியும். “போதும் சுஷி நிறைய குடிச்சாச்சு இன்னிக்கி. இது போதும் ப்ளீஸ்” என்று அவன் மறுக்க “கொஞ்சம்” என கெஞ்சினாள்.

அதற்குமேல் மறுக்க முடியாமல் சமையலறை சென்று அங்குள்ள கண்ணாடி துகள் மேல் கால் வைக்காமல் பிரிட்ஜ்’ல் இருந்து எடுத்துக்கொண்டு வந்து தந்தான்.

அதைக் குடித்தவள் அப்படியே சோபா’வில் சாய்ந்தாள். அவள் அப்படியே கண்ணுறங்க, அவளை அங்கேயே படுக்க வைத்துப் போற்றிவிட்டான்.

சமையலறையில் சிதறிக் கிடந்த கண்ணாடித் துகள்களைச் சுத்தம் செய்துவிட்டு மற்றொரு சோபாவில் அமர்ந்தான்.

‘இவளை எப்படி தனியா விட்டுட்டுப் போறது. இந்த ஸ்டீவ் என்ன செய்வான்? இவ கேக்கறப்பலாம் கொடுப்பானா’

‘இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு சுஷி… நான் தான் உனக்கு இத ஸ்டார்ட் பண்ணி வெச்சேன். நம்ம வீட்டுக்கு தெரியாம pub போனோம்’ மனது மறுபடியும் பரமானது.

‘பட் அப்போ தெரில நீ இதுக்கு அடிக்ட் ஆவன்னு. எப்படியாவது உன்ன டாக்டர்’ட்ட கூட்டிட்டு போகணும். இது இப்படியே போனா என்ன ஆகறது…’ என யோசனையுடன் இருந்தவன் கண்கள் தூக்கத்தைத் தழுவ…அங்கேயே உறங்கினான்.

 காலையில் நடமாடும் அரவம் கேட்டு எழ… ‘எப்படி சோபாவில் படுத்தோம்’ என்று யோசித்துக்கொண்டே சுஷி சமையலறையில் இருப்பதைப் பார்த்தான்.

அவள் புன்னகைத்துக்கொண்டே “குட் மார்னிங் க்ரிஷ்” என்றவுடன் “மார்னிங் சுஷி. நான் எப்படி இங்க படுத்தேனே தெரில. நீ எப்போ எழுந்திருச்ச” என கேட்டுக்கொண்டே எழுந்தான்.

“நான் சீக்கிரம் எந்திரிச்சிடுவேன் க்ரிஷ். உன்னப் பாத்தேன் நீ உக்காந்துட்டே தூங்கின அதான்”

“அப்புறம் நைட்…” சற்று நிறுத்தி, “நைட் ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன் போல… கைல காயம்… டஸ்பின்’ல க்ளாஸ் பீஸ். ஸாரி க்ரிஷ்” என்றாள் சற்று வருத்தத்துடன்.

“என்கிட்ட எதுக்கு ஸாரி’லாம் சுஷி. நேத்து தண்ணி குடிக்கப் போனப்ப கீழ போட்டுட்ட போல. வேற ஒன்னும் இல்ல”

‘நல்லா சமாளிக்கற க்ரிஷ்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு “காபி” அவள் கேட்க “இப்போ வேணாம் சுஷி. ரொம்ப டைம் ஆயிடுச்சு நான் ஆஃபீஸ் கிளம்பறேன். என்ன ஆஃபீஸ்ல ட்ரோப் பண்ணிடறயா? ஆஃபீஸ் கார் வரவேண்டாம்ன்னு சொல்லிட்டேன்… ஐ வில் கெட் ரெண்டட் கார் டுடே ஈவினிங் (I will get a rented car today evening)” என்றான்.

அவள் சரி என்றதும் அவளிடம் சொல்லிக்கொண்டு அவனின் வீட்டிற்குச் சென்றவன் அவசரமாகப் புறப்பட்டான்.

சிறிது நேரத்தில் அவளின் வீட்டிற்குள் வர முற்படும் போது… சுஷி யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.

“அவன் என்னோட ஃபிரன்ட். நான் பொய் சொல்லல்ல. நான் தான் அவனை இன்னிக்கி ட்ரோப் பண்றேன்னு சொன்னேன்” என்று ஆங்கிலத்தில் சொல்லும்போது க்ரிஷ் வீட்டினுள் நுழைந்தான்.

அங்கே சுஷி ஸ்டீவுடன் வாக்குவாதம் செய்துகொண்டிடுந்தாள்.

க்ரிஷை அங்கே பார்த்தவுடன் சுஷிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவனையும் ஸ்டீவயும் மாறி மாறிப் பார்த்தாள்.

அவளின் நிலைமையைப் புரிந்துகொண்டு… “சுஷி எனக்கு கொஞ்சம் வர்க் இருக்கு. இப்போ வர முடியாது. அத சொல்ல தான் வந்தேன். நீ கிளம்பு” என்று சொல்லிவிட்டு உடனே வெளியேறினான்.

க்ரிஷ் தயாராக வந்ததையும்… அவளின் நிலையை கருத்தில் கொண்டு சென்றதையும் உணர்ந்து, ஸ்டீவை ஒரு முறை முறைத்துவிட்டு “லெட்ஸ் கோ” என விறுவிறுவென அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

அவனும் அவளும் வீட்டைப் பூட்டிக்கொண்டு புறப்பட, க்ரிஷ் வீட்டின் கதவு திறந்து இருப்பதைப் பார்த்த சுஷி, உள்ளே எட்டிப்பார்த்தாள்.

அவன் சோபாவில் சற்றுக் கோபமாக அமர்திருப்பதைப் பார்த்து “ஸாரி க்ரிஷ். கண்டிப்பா ஈவினிங் மீட் பண்ணலாம்” என தலையாட்ட…

அவள் எட்டிப்பார்த்து அவசரமாகச் சொன்ன விதம் புன்னகையைத் தர “டேக் கேர்” என்றான் க்ரிஷ் புன்னகையுடன்.

அவளும் ஸ்டீவும் செல்வதைப் பார்த்துகொண்டிந்த கிரிஷைப் பார்த்து… முறைத்துக்கொண்டே சென்றான் ஸ்டீவ்.

——-

சிறிது நேரத்தில் ஆஃபீஸ் சென்றடைந்த க்ரிஷ், காலை இடைவெளியின் போது ப்ரியாவிற்கு போன் செய்தான்.

“ப்ரியா…… ஐம் குட்……. ஆர் யு ஃபிரீ?…… கேன் வி மீட் ஃபார் எ கப் அஃப் காஃபி?… தேங்க்ஸ்… எஸ், Gregorys Coffee…Bye” என்று போனை வைத்தான்.

சிறிதுநேரத்தில் அவர்கள் இருவரும் அந்த காஃபி ஷாப்’புக்கு வந்தனர்.

“ஹாய் க்ரிஷ். சொல்லுங்க…” ப்ரியா ஆரம்பிக்க “எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் வேணும் ப்ரியா”

‘சொல்லுங்க’ என்பதுபோல் பார்க்க “எனக்கு ஸ்டீவ் மீட் பண்ணணும் . ஏதாவது ஆப்ஷன் இருக்கா?” கேள்வியுடன் அவளைப் பார்க்க… “ஸ்டீவ்’வா. அவங்க வேற டிபார்ட்மென்ட்… என்னனு சொல்லிக் கூப்பிடுவேன்?” என்று யோசித்தாள்.

பின், “நீங்க ஏன் சுஷீலா’ட்டயே கேட்கக் கூடாது? அவங்க உங்க ஃப்ரென்ட் தானே” என்று பதில் கேள்வி கேட்க “அவ தப்பா எடுத்துட்டானா என்ன செய்றதுனு தான் யோசிக்கிறேன்” என்றான்.

“ஹ்ம்ம். வேணும்னா ஒன்னு பண்ணலாம். என்னோட ஃப்ரென்ட் கிட்ட சொல்லி ‘அவன் எங்க ப்ரேக்குக்கு போவான்’னு பாத்து சொல்லச்சொல்றேன். நீங்க நேராவே அவன்கிட்ட பேசுங்களேன்?”

“அது நல்ல ஐடியா. எங்க போறான்னு மட்டும் சொல்லுங்க. நாளைக்கே பாக்கறேன்” மனதில் ‘அவனை ஒரு வழி செய்துவிட வேண்டும்’ என நினைத்துக்கொண்டு. இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு புறப்பட்டனர்.

அன்றைய தினம் அவனுக்கு வேலை மற்றும் மீட்டிங் அதிகமாகவே இருந்ததால் மாலை ‘அவள் சந்திக்கலாம்’ என்று சொன்னதை மறந்து வேலையில் மூழ்கியிருந்தான்.

மாலை எட்டிப்பார்க்க, சுஷி அவனை அழைத்தாள் அவனுடைய எண்ணிற்கு. மீட்டிங்கில் இருந்ததால், ‘திரும்ப அழைக்கிறேன்’ என மெசேஜ் செய்தான் க்ரிஷ்.

‘ஒகே நான் வீடு திரும்ப நேரம் ஆகும். நாளை சந்திப்போம்’ என்று பதில் அனுப்பியிருந்தாள். அவன் மீட்டிங்கில் இருந்ததால் அப்போது அதைப் படிக்க முடியாமல் போனது.

வேலை முடிந்து அதைப் பார்த்தவன் ‘ச்ச இன்னிக்கி எப்படியாவது அவளை ஈவினிங் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும்னு நினைச்சேன். இந்த மீட்டிங் ஸ்பாயில் பண்ணிடுச்சு’ என அவனையே திட்டிக்கொண்டான்.

வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற க்ரிஷ், அவள் வீட்டின் கதவு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டு அவன் வீட்டிற்குச் சென்றான்.

‘இன்னைக்குன்னு பாத்துதான் இந்த மீட்டிங் வைக்கணுமா? அவளே ஈவினிங் மீட் பண்ணலாம்னு சொன்னா. அது பத்தாதுன்னு கால் வேற பண்ணா. இப்போ கூப்பிட்டா நாட் ரீச்சபல். இனி என்ன வேல இருந்தாலும் ஈவினிங் மேல பாக்கக்கூடாது” என்று அவளுக்காகக் காத்திருந்தான்.

இரவு நேரம் ஆனபோது, அவளும் ஸ்டீவும் வந்தார்கள். அவள் மயக்கமாக இருப்பது போல இருந்தது. எப்பொழுதும் போல் ஸ்டீவ் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கொண்டிருந்தான்

‘அவள் வீட்டிற்குப் போகலாமா வேண்டாமா’ என யோசித்தான் க்ரிஷ். அடுத்த நொடி அவள் வீட்டின் கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து ஸ்டீவ் கதவைத் திறக்க “நான் சுஷி… சுஷீலாவ பார்க்கணும் “ என்றான் ஆங்கிலத்தில், உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டு.

உள்ளே சுஷி சோபாவில் சாய்ந்திருந்தாள். “நீங்க யாரு?” ஸ்டீவ் கதவை முழுதாகத் திறக்காமல் கேட்க “ நான் அவளோட ஃபிரன்ட்” என்றான் பதிலுக்கு.

“உன்ன நம்பமுடில. நீ இங்க இருந்து கிளம்பு. எதா இருந்தாலும் நாளைக்கி பாத்துப்போம்” என்றான் ‘வெளியே செல்’ என்பது போல் தலையசைத்து.

ஸ்டீவின் செயல் க்ரிஷிற்குக் கோபத்தைத் தர, “அத நீ சொல்லவேண்டாம்” திமிறி கதவைத் திறந்து… “சுஷி சுஷி…” என்றான் அவளைப்பார்த்து.

சத்தம் கேட்டு மெதுவாகக் கண் திறந்தாள்.

பின் மயக்கத்துடன் கதவருகே வந்தவளிடம், “சுஷி. இவன் என்ன உள்ள விடமாட்டேங்கறான்” திமிறிக்கொண்டு சொல்ல… “நீ கிளம்பு க்ரிஷ். நாளைக்கி பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றாள் தள்ளாடிக்கொண்டு.

அவள் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல், அதிர்ந்த க்ரிஷ்… வெளிறிய முகத்துடன் அந்த இடத்தை விட்டு சென்றான்.