MIRUTHNAIN KAVITHAI IVAL 1

cover page-8173282a

மிருதனின் கவிதை இவள்

1

ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள்  உட்பட, சீருடையை அணிந்திருந்த   இருபது வேலையாட்கள் தங்களின் கரங்களில் வித விதமான இதுவரை யாரும் பார்த்திராத வாசனை மலர்களுடன்  மேகவர்ஷினியை  வரவேற்க , மேகாவோ மணப்பெண்ணுக்குரிய எந்த  ஆசையும்,எதிர்பார்ப்பும் சிறிதுமின்றி…. ஏதோ அரக்கனின் கோட்டைக்குள்  நுழையப் போவது போன்று அச்சத்துடன்  காரில் இருந்து இறங்கிய  மறுநொடி , அவளது  இதயம் ஒரு நொடி  துடிப்பதை மறந்து அப்படியே நின்று விட்டது .

ஏற்கனவே அரண்மனை போல  பறந்து விரிந்து  அவனை போலவே  கம்பீரமாக உயர்ந்து நிற்கும்  அக்னியின் இல்லம் இப்பொழுது ஜோர் பாக் எரியவையே திரும்பி பார்க்க வைத்தது .

முன்பே விலையுயர்ந்த கிரிஸ்டல்களால் ஆனா அலங்கார தோரணங்கள் மற்றும்  பல வண்ண விளக்குகள் என அலங்கார வேலைப்பாடுகள்  மேகாவின்  மனதை கொஞ்சம் கொஞ்சமாக  தின்று கொண்டிருக்க  … இதில் அவள்  எடுத்த வைக்கும் ஒவ்வொரு அடிக்கும்  வித விதமான வண்ணத்தில்    வான வேடிக்கைகள்   வானத்தில் இருந்து அவளை வரவேற்க,   வெடிகளின் முழக்கத்தில் தன் தேகம் அதிர காதை பொத்திக்கொண்டாள் .

பிறகு மேகா தனது காலனியை கழற்றிவிட்டு  வீட்டிற்குள் நுழைந்தது  முதல் அவள்   இப்பொழுது நிற்கும் அறை முழுவதும் நடைபாதைப் போல வெள்ளை ரோஜா இதழ்கள் சீராக தூவப்பட்டிருக்க , அதில் முற்களும்  மறைந்திருந்தன !

தன் பொற்பாதங்களைக் கொண்டு மெதுவாக நடந்து வரும் பொழுது    முற்களின்  வன்மையை   தன் பாதத்தில் உணர்ந்த மேகாவின்  மனதிற்கு  இதுவரை   புரியாத பல சூழ்ச்சிகளும் , அக்னியின் அழகான  புன்னகைக்கு பின்னால் ஒளிந்திருந்த கபட நாடகமும் தெளிவாய்  புரிய  ..அவளது விழிகள் வலியால்   கண்ணீரை சிந்த ,

” மேம் பியூட்டிஷன்  வந்திருக்காங்க உங்களை அலங்காரம் பண்ணனும்  ”  – பணிப்பெண்ணின் அழைப்பில் விழித்திருந்தவளுக்கு  அக்னி தன்னை கண்காணிப்பது போன்ற பிரம்மை ,’ அக்னி …அவன் என் பக்கத்துல  இருக்கான், நான் அழுறதை பார்த்து ரசிச்சிட்டு இருக்கான்  ‘ உள் மனம் நெருடியது ….  முகம் பேயறைந்தது  போல இருக்க சுத்தி சுத்தி பார்த்தாள்.

ஆனால் அவன் இல்லை பணிப்பெண் தான் கைகளை பிசைந்தபடி நின்றுகொண்டிருந்தாள் .

” மேம் மேக்கப் பண்ணனும் ” மீண்டும் கூறினாள் .

” எனக்கு வேண்டாம் “

“சார் சொல்லிருக்காங்க இப்பவே அஞ்சு நிமிஷம் முடிஞ்சிருச்சு ” இயலாமையோடு கூறினாள் .

அதே இயலாமையோடு  பதுமை போல கண்ணாடியின் முன்பு மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மேகா .

குளிரூட்டப்பட்டிருந்த  அறையில்  ஏசியின் குளுமையை தாண்டி  அவள் அங்கத்தில் வியர்வை முத்துகள் , அலங்காரம் செய்யும் பெண் துடைக்க  துடைக்க  சுரந்து கொண்டே இருந்தது .

அடிவயிற்றில் இருந்து உருண்டு வந்த பயப்பந்து தொண்டைக்குள் சூழ் கொள்ள … பயத்திலும் கவலையிலும்  இதயம் பதைபதைத்தது .

” மேம் ” மெல்ல தான்  அந்த பெண் அழைத்தாள் .

“ஹாங்  ” மேகாவுக்கு தான் பயத்தில் உதடுகள் துடித்தது .

” முடிச்சிட்டேன் … வேற எதுவும் பண்ணனுமா மேம் “

” இல்லை வேண்டாம் ” சிரமப்பட்டு பேசினாள் …. அவள் மேகாவிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் .

மேகாவின் அழகு  ! அவள் கொண்ட பயம் ! அவளது பதட்டம் !அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி  ! அவளின் அழுகை ! என அவளது ஒவ்வொரு உணர்ச்சிகளையும்  தனது அறையின் பால்கனியில் இருந்துகொண்டு    மடிக்கணினியில்  மூலமாக பார்த்து   ரசித்து கொண்டிருந்தான்,  நடக்கும் இந்த நாடகத்தின்  நிஜ ஆட்டக்காரன் அக்னி தீரன் .

பின்பு அங்கே வந்த பணிப்பெண் அவள் கையில் பால் சொம்பை  கொடுக்க அதை வாங்க தயங்கிய மேகா ,

” இதையெல்லாம் கண்டிப்பா வேணுமா ?” வேறு வழியில்லாமல் கேட்டே விட்டாள் .

பணிப்பெண்ணோ பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து நிற்க . அதை வாங்கிக்கொண்ட மேகா திருதிருவென விழிக்க ,

“மேம் சார் ரூம்க்கு நான் கூட்டிட்டு போறேன் வாங்க ” என்றாள் மெல்லிய குரலில் .

” இல்லை நான் அப்புறம் போய்கிறேனே ” என்றாள் அதை விட மெல்லிய  குரலில்…   மீண்டும் அதே மௌனம் . தன்னுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள இங்கே ஒருவரும்  இல்லை என்பதை உணர்ந்துகொண்ட  மேகாவின் விழிகள் கலங்க வழிந்த கண்ணீரை துடைத்தவள் , பிறகு பணிப்பெண் முன்னே செல்ல தன் வலுவிழந்த கால்கள் பின்னிக்கொள்ள தான் பின்னே சென்றாள்.

” மேம் இந்த ரூம் தான் ” என மேகாவை அக்னியின்  அறை  வாசலில் விட்ட  பணிப்பெண் நிமிர்ந்து பார்க்காமல் அங்கிருந்து சென்று விட … மூடியிருந்த கதவின்  அருகே  நின்றவளுக்கு தான் ஒரே படபடப்பு …. வெளியே வந்து குதித்துவிடும் வேகத்தில் இதயம் துடிக்க … நீண்ட பெருமூச்சை  வெளியிட்டபடி கதவை தட்டினாள் … உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை ஆனால் கதவு திறந்துகொள்ள … ‘திறக்காமலே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே  ‘ என்று எண்ணியபடி உள்ளே நுழைந்தவள் ,  நிமிர்ந்து பார்த்தாள்!

முகம் தெரியும் பால் வெள்ளை நிறமும், வெண் பளிங்கு நிறமும் கொண்ட உயர் கிரானைட் கற்களால் பார்த்து, பார்த்து செதுக்கிய அந்த அறையின்   உள்ளே முழங்கிய மெல்லிய இசை அவளை வரவேற்க … மேகா அப்பொழுது  இருந்த சூழ்நிலையில்  மெல்லிய காதல் இசை கூட அவளுக்கு காதை தகிக்கும்  நெருப்பாய் சுட்டது .

அவளுடைய கண்கள் மீண்டும் ஒருமுறை அறையை வட்டமடித்தது.

வெள்ளை  நிற படுக்கைவிரிப்பில் இரத்த நிற ரோஜா இதழ்கள்  கட்டிலில் மலர்ந்து தன் வாசனையை  பரப்பிக்கொண்டிருக்க தலையணைகளோ இதய வடிவ சாடின் துணியில் பளபளத்தன.

அறை முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்திருக்க…திறந்திருந்த ஜன்னலின் வழியாக உள்ளே நுழைந்த காற்று சாமரம் வீசி அந்த நறுமணத்தை இன்னும்  பரப்ப…முட்டாளாக  தன்னை உணர்ந்தாள் மேகா.

காதலுக்கு சின்னம் ரோஜா…அதிலும் இரத்த சிவப்பு நிற ரோஜாவை இது போன்ற தருணத்தில் பார்க்கும் எந்த பெண்ணுக்கும் சிறு பூரிப்பாவது ஏற்படும் ஆனால் மேகவோ போர்க்களத்தின் பீதியில் கைகளை பிசைந்தபடி  நின்றுகொண்டிருந்தாள்   .

” இதெல்லாம் எப்படி ? ரிது  என்னை வேண்டாம்ன்னு சொல்லுவான்னு அக்னிக்கு எப்படி தெரியும் என் கல்யாணம் நிற்க போகுதுன்னு அக்னிக்கு எப்படி தெரியும் ? எல்லாமே ப்ரீப்ளண்ட் … எவ்வளவு பெரிய ஏமாற்றம் ? சொன்னனே  அப்பா ” கண்கள்  கசிந்தது .

‘ பீ பிரிப்பர் ஃபார் எவ்ரிதிங் ‘- ‘எல்லாத்துக்கும் தயாரா இரு’ மூன்றாவது முடிச்சு போடும் பொழுது அக்னி தீரன் சொல்லிய வார்த்தைகள் மேகாவின் காதில் வந்து  மீண்டும் மீண்டும் மோதி அவளுக்குள் புயலை கிளப்பியது .

கொஞ்சமும் பிடிக்காத  அக்னி தீரனுடன்  நடந்த  திடீர் திருமணம்  அதிர்ச்சி என்றால் இப்பொழுது அவள் பார்க்கும் அனைத்தும்  பேர் அதிர்ச்சி  .

வாசலில் தொங்கிய தோரணங்கள் தொடர்ந்து , வான வேடிக்கைகள், படுக்கை அறையில்  இருந்த அலங்காரங்கள்  என அனைத்துமே முன் ஏற்பாடா  ? அக்னியின் சூழ்ச்சி கண்முன்னே காட்சி படமாய் ஓட … மனம் வலித்தது !உடல் நடுங்கியது! விழிகளை  மூடிக்கொண்டாள் ! பூகம்பம் போல மனம் அதிர்ந்து கொண்டிருந்தது .

அக்னி  தன் குடும்பத்தாரிடம் இதுவரை போட்ட நல்லவன் வேஷம் ! துன்பம் வரும்போதெல்லாம் கைம்மாறு எதிர் பார்க்காமல் உதவியது  ! என அத்தனை நினைவுகளும் அவளை புரட்டி போட்டன .ரத்தம் அழுத்தம் எகிறியது .

” இல்லை நோ  மேகா !எப்படி அவனை சமாளிக்க போற ?அவன் கிட்ட பேசணும் ! அவனை எங்க ?” கண்களை உருட்டி தேடினாள் .

” நான் இங்க இருக்கும் பொழுது நீ யாரை தேடுற ?”சூடான ஏதோ ஒன்று அவளது காது மடலை உரசியது ….  அதே குரல் !அவனது குரல் !அவனே தான் !மூளை எச்சரிக்க  சட்டென்று மேகாவின் வதனத்தில் கலவரம் சூழ்ந்தது .

சின்ன தீண்டல் தான் ஆனால்   திரும்பி பார்க்காமலே  அவனை உணர்ந்தவள்  பயத்தில் நடுங்கியபடி  நின்றாள் .

அப்பொழுது     சூடு பறக்க  முத்தம் ஒன்றை  மேகாவின்  கழுத்து வளைவில்   பதித்தான்  அக்னி தீரன்  .  அவ்வளவு தான் அவளது இதயம் ‘டமார் டமார்’ என்று  வேகமாக  அடித்துக்கொள்ள சட்டென்று  திரும்பி பார்த்தாள்…  தன் கண்முன்னே மேலாடை இன்றி வெறும் ட்ரக்பண்ட் மற்றும் அணிந்து மிகவும்  நெருக்கமாக  அவளுடன் நின்றிருந்தான்  அக்னி  தீரன் .

பயத்தில் அனிச்சையாக  அவளது கால்கள் பின்னால் சென்று சுவற்றில்  சாய்ந்து நிற்க …   கடைக்கண்ணால் அவளைப் பார்த்து விட்டு  சிகரெட்டை புகைத்தபடி    ராட்சச  படுகையில் கைகள் இரண்டையும் தலைக்கு கொடுத்து …  அவள் பார்க்க தன் கால்களை நீட்டி  அமர்ந்தான் அக்னி .

அந்த அறை முழுவதும் அவன் மட்டுமே நிறைந்திருப்பதாக  உணர்ந்தவள் அவன் முன்பு தன்னை சிறு துரும்பாக உணர்ந்தாள் .அவனுடைய வெப்ப பார்வை அவளுக்குள் துளையிட்டு ஆள் மனதுக்குள் ஊடுருவியது . உடம்பெல்லாம் சில்லிட்டுப்போக , தேகம் கூசியது .

தளிர் விரல்கள் நடுங்க  …. பால் சொம்பை இறுக்கமாக பிடித்துகொண்டாள் … நேரம் ஆக ஆக  சொம்பில் இருந்த பால் தளும்ப ஆரம்பிக்க  . அவனை பார்ப்பதை தவிர்த்தவள் தன் பார்வையை  தாழ்த்திக்கொண்டாள் .

” பதற்றமா  இருக்கா ?”- நஞ்சை(புகையை )இழுத்து வெளியிட்டபடி  வினவினான் . அவனது பார்வை அவளை ஆழ துளைத்தது .

“நோ …இல்லை ” முடிந்தளவு  தன்னை இயல்பாக கட்டிக்கொண்டாள் .

” நீ என்னை வெறுக்குற ரைட்  ” அவளது நடுங்கும் கரங்களை பார்த்தபடி கேட்டான் .

”  இல்லை …நோ …நான் யாரையும் வெறுக்க மாட்டேன் ” தடுமாற்றத்துடன் தான் கூறினாள் ..ஆனாலும் ஒருவழியாக சமாளித்துவிட்டாள் .

” ஓ …அப்போ ஏன் இந்த நடுக்கம் ?” விழிகளை விரித்து வினவினான் .

“அது …அதுவந்து .. அது   நீங்கன்னா எனக்கு பயம் ” சொல்லிவிட்டாள் அப்படியாவது  இரக்கப்பட்டு விட்டுவிடமாட்டானா என்று !

” பயம் … என்னை பார்த்தா …?” வியப்புடன் கேட்டவன் , பின்பு வாய்விட்டு சிரித்தான்  !அடிவயிற்றை பிடித்து   சிரித்தான் !அசுரன் போல சிரித்தான் ! எவ்வளவு சிரித்தாலும் அதே அரக்கனின்  முகம் தான் ! எந்த மாற்றமும் இல்லை என்றது அவளது மனம்  … மூச்சை அடைத்து நின்றாள் .

” ரியலி …பயமா….?” போலியான ஆச்சரியத்துடன் கேட்டான் .

” கொஞ்சமா தான் ” உளறிக்கொட்டினாள் .

” கொஞ்சமா ம்ம்ம் ” என்றவன் மேகாவை ஆழமாக பார்த்தான் ! பார்த்துக்கொண்டே இருந்தான் .

“என்கிட்ட ஏதோ கேட்கணுன்னு நினைக்கிற சும்மா கேளு ” என்றான் .
அவளுக்கு அவனிடம்  கேட்க ஏகப்பட்ட கேள்வி இருக்கின்றது ஆனால் என்னவென்று கேட்பது சொந்த தந்தையையே  தன்னை புரிந்து கொள்ளவில்லையே ! இவனிடம் போய் பணம் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதே ! இனி என்ன செய்ய …. ? பிறகு அந்த ரிதுராஜ் ! கல்யாணத்தன்று வரை காதல் மொழி பேசிவிட்டு திடிரென்று மணமேடையில் வைத்து தன்னை வேண்டாம் என்று சென்று விட்டானே ! எத்தனை பெரிய துரோகம் ! தனக்காக இருக்க வேண்டிய யாரும் தன்னுடன் இல்லாத பொழுது இவனிடம் கேட்டு என்ன பயன் என்றது மனம் ?ஆனாலும்  அவனிடம்  பேசி தான் ஆக வேண்டும் .அது எப்படி  ?

அவனை பார்த்தாலே  தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு வெளி வர மறுக்கும்  வார்த்தைகள் ! பற்றா குறைக்கு  தன்னை விடாது துரத்தும் அவனது  பார்வை! என தன்  நிலையை கண்டு நொடிந்து கொண்டவள் ,வேதனையுடன் மீண்டும் கீழே குனிந்து கொண்டாள்.

” நான்னா பயம் …!  அப்போ அவன்  மேல ரொம்ப இஷ்டம் போல …  இந்த நேரம் அவனை ரொம்ப  மிஸ் பண்ணுவல… இப்போ கூட என் இடத்துல அவனை நினைச்சு பார்ப்பல ” வலிக்க வலிக்க அவளை அடித்தான் தன் வார்த்தை என்னும் கூர் வாளால் . அவளது கண்களை கண்ணீர் திரையிட்டது .

“என்ன பதில் இல்லையா ? அவன் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுவ ? என்கிட்ட பம்மி போய் நிக்கிற ” கேலியாக கேட்டான் .

”  அது  ரித்து  …. ” அவள் சொல்லி முடிக்கும் முன்பே  தன் புருவம் உயர்த்தி  குறுக்கிட்டவன் , ” ஓ ரித்து ! செல்ல பேரு …ஹான்  வேற எப்படியெல்லாம் கூப்பிட்டுக்குவீங்க  டார்லிங் , ஹனி , பேபி ம்ம்ம் சும்மா சொல்லு  என் பொண்டாட்டி எவ்வளவு ரொமண்ட்டிக்குன்னு தெரிஞ்சிக்கிறேன் ”  அறைக்குள் இருந்த குளிர்சாதனப்பெட்டியை  திறந்து சிவப்பு நிற திரிவதை க்ளாசில் ஊற்றி  குடித்தபடி கேட்டான் .

சைக்கோ கிறுக்கனிடம்  மாட்டிக்கொண்ட உணர்வில் விக்கித்து நின்றவள் ,”  ரிதுராஜ்  அப்பா பார்த்த பையன் அவ்வளவு தான் ”  சிக்கல் விழுந்த நூல் போல திக்கி திணறி கூறி முடித்தாள்.

” ம்ம்ம் அது  சரி … இன்னொரு கேள்வி கேட்டேன் பதில் இல்லையே ” எதை கேட்கிறான் என்பதை உணர்ந்தவளுக்கு பகிரென்று இருந்தது .

” இங்க வா … ” ஒற்றை விரலை காட்டி அருகில் அழைத்தான் . தயங்கியபடி அவன் அருகில் வந்தாள் .

” இன்னும் பக்கத்துல வரலாம் ” திரவத்தை பருகியபடி கூறினான் .

வேறுவழியின்று அவனுக்கு மிக அருகில் வந்து நின்றாள் …உடனே அவளை நெருங்கியவன் அவள் காதில் ஏதோ கூற மேகாவின் முகம் கோபத்தில் ஜிவ்வென்று சிவந்துவிட ,” நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை ” தன் உதடுகள் துடிக்க கூறினாள் .

” ஹான் ….அன்னைக்கு அந்த பார்ட்டி  ஹால்ல போலீஸ் மட்டும் வராட்டா  அவன் உன்னை கிஸ் பண்ணிருப்பான்ல ” – ரெண்டு பாட்டிலை முடித்திருந்தவன்   மூன்றாவது பாட்டிலை திறந்தபடி கேட்டான் …திரவம் உள்ளே இறங்க இறங்க அவன் பார்வையும் அவன் கேள்வியும் அவளை அச்சுறுத்தியது  .

” போலீஸ் வராட்டாலும்  நான் தடுத்திருப்பேன் ”  கண்களை பார்த்து திடமாக கூறியவளுக்கு அப்பொழுது தான் ஒன்று புரிந்தது,  ‘ அன்னைக்கு பார்ட்டி ஹால்ல இவரும் இருந்தாரா …. ?இத்தனை நாளா என்னை கண்காணிச்சிட்டே  இருந்தாரா ?’ அவளுக்கு தலை சுற்றாத குறை தான் . அவளது பார்வை மாற்றத்திற்கான காரணத்தை அறிந்த அக்னி  கோணலாக சிரித்து ,

” என்னை புடிக்குமா ?” தனது அடர்ந்த நீண்ட புருவத்தை  உயர்த்தி கேட்டான் .

‘ சுத்தமா புடிக்காது ‘ என சொல்லத்தான் ஆசை இனி சொல்லி என்ன பயன் , ” ம்ம்ம் “தலையசைத்தாள் .

“ரித்து கூட இருக்கும் பொழுது உன் முகத்துல தெரியிற சந்தோசம் இப்போ இல்லையே ?”- வேண்டுமென்றே ‘ரிதுவுக்கு ‘ அழுத்தம் கொடுத்து கேட்டான்  . அவளது கீழுதடு பற்களுக்குள் சிக்கிக்கொள்ள பொங்கி வரும் கேவலை அடக்கிக்கொண்டு நின்றாள் .    உள்ளே சென்று கொண்டிருக்கும் திரவம்  கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குள் எரியும் தீயின் வேகத்தை கூட்டியது .

” ம்ம்ம் சரி வந்து ஒரு முத்தம் குடு …. உனக்கு என்னை எவ்வளவு புடிக்கும்ன்னு நானும் தெரிஞ்சிக்கிறேன் “நக்கலாக கேட்டான் …. மேகாவுக்கு அடிவயிறு  கலங்கியது .

” ப்ளீஸ் ” கெஞ்சினாள் ! குரல்  காற்றில் கரைந்தது .

“புடிச்சிருக்கு தானே ?”

” ம்ம் …புடி ….ம் ” வார்த்தையே வரவில்லை .

“புடிக்குமா இல்லையா ” மிதக்கும் விழிகள் மிரட்டியது .

” புடிக்கும் ” மேகாவின்  குரல் உடைந்தது!

” அப்போ வா வந்து உன் காதலை காட்டு …தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கேன் “அவனது பார்வை மாற்றமும்  அவனது பேச்சும்  அவளுக்குள் கிலியை  உண்டாக்க … விழிகளில் இருந்து கண்ணீர் கோடிட்டது.

“ப்ளீஸ் “கெஞ்சினாள் !

“லுக் மேகா ஒன்னு நான் கேட்டதை நீ குடு ! இல்லை எனக்கு என்ன வேணுமோ அதை நானே எடுத்துக்குறேன் ” என்றான் அக்னி தீரன் ! மிரண்டு விழித்தாள் மேகவர்ஷினி !

-தொடரும்