MIRUTHNAIN KAVITHAI IVAL 11

cover page-1f9cbbb4

மிருதனின் கவிதை இவள் 11

அக்னி தீரனுக்கு உறக்கமின்மை ஒன்றும் புதிதல்லவே , இரவெல்லாம் வர்ஷினியின் நினைப்பிலே இருந்தவன் ,அதிகாலை  எழும் பொழுது  ஒருவித தெளிந்த மனநிலையில் தன் காலை பணிகளை முடித்துவிட்டு ட்ராக் சூட்டுடன் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்தான் .

விழித்திருப்பது அவனுக்கு பழக்கமான ஒன்று என்பதால் சிவந்த கண்களை தாண்டி  அவனிடம்  வேறு எந்த மாற்றமும் இல்லை , சொல்லப்போனால் என்றைக்கும்  விட இன்று கொஞ்சம் அதிகமாகவே புத்துணர்ச்சியுடன்  காணப்பட்டான் .

அதே புத்துணர்ச்சியுடன் ஹார்ட் ஜிம்மில் ஈடுபட்டவன் ஒருமணிநேரம் அதில் செலவு  செய்து  விட்டு ,

” இன்னைக்கு என்ன என்ன ப்ரோக்ரம் இருக்கு அஷோக் ?” என்று கேட்டபடி பாக்சிங் ரிங்கிற்குள் நுழைந்தான் தீரன் .

” மார்னிங் டென் ஓ க்ளாக் மிஸ்ரா கம்பெனி  கூட மீட்டிங் இருக்கு ” என ஆரம்பித்து  வார்ம் அப் செய்துகொண்டே ரிங்கிற்குள் பாய்ந்து இறங்கினான் அஷோக். இருவரும் நண்பர்கள் என்பதை   தாண்டி  வழமை போல தாறுமாறாய் மோதி கொண்டனர் . பயிற்சி தான் என்றாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பலம் கொண்டு மோதினர்.

பயிற்சி செய்து கொண்டே  ,” அக்னி நம்மளுடைய காண்ட்ராக்ட் மூணும் கைவிட்டு போச்சு ,அந்த பாஸ்கர் நினைத்ததை செஞ்சுட்டான் டா” சீற்றத்துடன்  தீரனின் தலைக்கு குறிவைத்தான் அஷோக் மித்ரன் .

” ஆஹாங் ” என்ற தீரன் தன் இடுப்பையும், தோள்பட்டையையும் லேசாக திருப்பி நொடிப்பொழுதில் அஷோக்கின் தாக்குதலில் இருந்து தப்பித்து ,

” எவ்வளவு நஷ்டம் ?” என்று கேட்டான் .

” நூறு சி “ஒரு கையால் தீரனின் முகத்தை குறிவைத்தபடி கூறிய அஷோக்கின் முகம் இறுகியது .

“ம்ம் ” தன்  மூக்கில் வழிந்த ரத்தத்தை சிறு புன்னகையுடன் துடைத்தபடி , அஷோக்கின் எதிர் தாக்குதல்களை எளிதாக சமாளித்தான் தீரன் .

“அக்னி , அவனை நாம செஞ்சிருக்கணும் ,  விட்டதுக்கு என்ன பண்ணி வச்சிருக்கான் பார்த்தியா  ? உன்னை அட்டாக் பண்ணின அன்னைக்கே  அவனை முடிச்சிருக்கணும்  அக்னி , நாம ஒதுங்கி போனாலும் இவனுங்க விட மாட்டானுங்க “என்றான் அஷோக் ,தீரனின் விலாவை குறிவைத்தபடி .

அஷோக்கின் தாக்குதலில் இருந்து லாவகமாக நகர்ந்த தீரன் ” ம்ம்ம் செஞ்சிடலாம் ” என்றவன் தன் குதிகாலால் அஷோக்கின் முகத்தை நேரடியாக தாக்கி அவனை கீழே வீழ்த்தி நாக் அவுட் செய்து ,

” மிஸ்ரா கம்பெனி மீட்டிங்கை கன்சல் பண்ணிரு அஷோக் “என சாதாரணமாக கூறினான் .

“வாட் இப்போ தான் 1oo சி லாஸ் ஆகியிருக்கு,  இந்த மீட்டிங் கன்சல் பண்ணினா இன்னும் லாஸ் ஆகும் “கோபமாக வினவிய அஷோக்கை பார்த்து சிரித்த அக்னி , அஷோக்கின் கரம் பிடித்து தூக்கி அவன் எழுந்து நிற்க உதவி செய்து ,

” சீக்கிரமா ரெடியாகு நாம வெளிய போகணும் ” என்றவன், முறைக்கும் தன் நண்பனின் கன்னத்தை தட்டிவிட்டு  ,

” உனக்கு இன்னும் ப்ராக்டிஸ் வேணும் ” என புன்முறுவலுடன் ஒருவித உற்சாகமான மனநிலையுடன்  வெளியேறினான் .  அஷோக்கிற்கு அக்னியின் இந்த அலட்சியப்போக்கான நடவடிக்கை கண்டு கோபமாக  வந்தது .

*****************************************************************************

உயர செல்லவிருந்த மின்தூக்கியில் வெள்ளை நிற மேல் அங்கியை அணிந்தபடி   ஓடிவந்து ஏறினாள் மேகா ,உள்ளே நின்றிருந்த ரிதுராஜை பார்த்து புன்னகைத்தவள் ,

” குட் மார்னிங் சார்  ” என்க ,தன்னவளின் வாயில் இருந்து  வந்த  ‘ சார் ‘ என்ற விழிப்பு  மனதிற்குள் பிடித்தம் இல்லை என்ற போதிலும்,   காலையிலே தனது காதல் தேவதையின் தரிசனம் கிடைத்ததை தன் பாக்கியமாக எண்ணி  , அவள் சார் என்று அழைத்ததினால் ஏற்பட்ட சோகத்தை  புறந்தள்ளியவன் சந்தோஷப்புன்னகையுடன் ,

” குட் மார்னிங் மேகா ” என்றவன் ,

” சிக்ஸ்த் ஃப்ளோர் தானே ” என்று அவளிடம்  கேட்டபடி ஆறாவது எண்ணை அழுத்திவிட்டு  அவளை பார்க்க  . அவளோ ‘ நான் எந்த ஃப்ளோர் போகணும்ன்னு இவருக்கு எப்படி தெரியும் ?’ என மேகா ரிதுராஜை கேள்வியா பார்க்க ,

‘ உன்னை பத்தி எல்லாமே தெரியும் மேகா ஆனா உனக்கு தான் என் பார்வைக்கான அர்த்தம் கூட தெரிய மாட்டேங்குது ‘ என மனதிற்குள் எண்ணியவன் அவளிடம் ,

“இங்க ஆறு மாசமா MD யா இருக்கேன் மேகா ,  டுயூட்டி டாக்டர்ஸ் ரூம் எந்த ஃப்ளோர்ல இருக்குன்னு கூட தெரியாம இருந்தா  சமுதாயம் என்னை கழுவி ஊத்தாது “என சிரிப்புடன் அவள் கேட்காமலே பதில் கூறினான் .

“சாரி சார் ” தெரிந்த நபர் , தன் தோழியின் தமையன் , என்பதாற்காக லேசாக புன்னகைத்துவிட்டு  கைகளை குறுக்கே கட்டியபடி நின்ற மேகாக்கு ரிதுராஜின் இந்த அவதாரம் மிகவும் புதிது .

அவன் இவளிடம் இவ்வளவு இயல்பாக பேசியதெல்லாம்  கிடையாது , என்ன தான் தோழியின் தமையனாக இருந்தாலும் , ஒரே இடத்தில் இருவரும் வேலை பார்த்தாலும் , முதலாளி தொழிலாளிக்கிடையில்  என்ன பழக்கம்  இருக்குமோ அந்தளவுக்கு தான் இவர்களின் பழக்கம் இருந்தது .

அவள் அமைதியாக கைகளை கட்டிக்கொண்டு நின்றிருக்க , அவன் அவளையே விழுங்குவதை போல பார்த்துக்கொண்டிருந்தான் .சுமார் மூன்று  மாதங்களாக  உள்ளுக்குள் தேக்கிவைத்த காதல்  அவன் கண்களில்  வழிந்தது .

அவனது தந்தை கனகராஜ் தான் இந்த மருத்துவமனையின் டீன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி , ரிதுராஜ் வெளிநாட்டில் MBA படித்துவிட்டு கடந்த ஆறு மாதமாக  மருத்துவமனையை  தந்தையுடன்  இணைத்து நிர்வகித்து வருகிறான் .

வெளிநாட்டில் இருந்து இங்கே வந்தவனுக்கு மேகாவை பார்த்த கணமே  ஒருவித ஈர்ப்பு ,அதுவே நாளடைவில்  காதலாக மாற , இன்று எப்படியாவது தன் மனதில் உள்ள காதலை அவளிடம் கூறிவிட வேண்டும் என்று மிகவும்  உறுதியாக இருக்கிறான் .

அன்று இரவு கூட தன்  காதலை சொல்ல தான்,  மேகாவை தன் தங்கையின் மூலமாக அழைத்து வர சொல்லிருந்தவனுக்கு , திடிரென்று  ஏர்போர்ட்டில் முக்கியமான நபரை சந்திக்க  வேண்டியிருந்ததால்  தான் ,  அவனால் நேரத்திற்கு வர முடியாமல் போனது . ஆக இனியும் காத்திருக்க விருப்பம் இல்லாதவன் இன்று எப்படியாவது மேகாவிடம்  தன் காதலை சொல்லும் தருணம் எதிர்பார்த்து  காத்திருக்கிறான் .

‘என்ன இது நம்ம பக்கம் பார்க்கவே மாட்டிக்கிறா ?’ என்று எண்ணியவன் ,

” உங்களுக்கு உங்க வேலைய ரொம்ப புடிக்குமோ ?” பேச்சு கொடுத்தான் .

அவனது இந்த திடீர் கேள்வியில் திடிக்கிட்டு அவன் பக்கம் திரும்பியவள் ,

“ம்ம் ஆமா ” என்று சிறு யோசனையாக ,

” ஏன் அப்படி கேட்டிங்க?” என்றாள் மேகா .

“நான் பார்த்து இங்க ரொம்ப சின்சியரா இருக்கிறது நீங்க தான் .  பல நாள் வீட்டுக்கு கூட போகாம ஹாஸ்ப்பிட்டல்யே ஸ்டே பண்ணிருக்கீங்க , அதுவும் பேஷண்ட்ஸ் குழந்தைங்களா இருந்தா , ரொம்பவே கேர் எடுத்துகிறீங்க “புன்னகையுடன் கூறினான் .

” ம்ம்  ” மெலிதாய் புன்னகைத்தாள் . அவன் அடுத்து பேசுவதற்குள் மின்தூக்கி அவள் செல்ல வேண்டிய தளத்திற்கு வந்து நிற்க அவள் வெளியேறவும் ,’என்ன அதுக்குள்ள வந்திருச்சு ?’என மனதில் கடிந்துகொண்டவன் வேகமாக அவனும் வெளியேறி அவளுடன் இணைந்து நடந்தான் .

” ரொம்ப படிப்பாளியோ ?” அவளை விட மனமில்லாமல் பேச்சை வளர்த்தான் .

” ஏன் கேட்க்குறீங்க ?” அவனை விட்டு இரெண்டு அடி தள்ளி நின்று  கைகளை குறுக்கே கட்டியபடி அவனை வெறித்தாள்  .

” Mbbs எல்லாம் படிச்சிருக்கீங்களே அதான் கேட்டேன் “

” ஓ ” அதற்கு மேல் அவள் பேச வில்லை .

” நான் உங்கள மாதிரி பெரிய படிப்பாளி எல்லாம் கிடையாது , அப்பா சொன்னாரு செஞ்சேன் ” புன்னகையோடு கூறினான் .

” ஓ ” அவளிடம் இருந்து ஒரு வார்த்தை பதில் , சிரிக்கணுமே என்பதால் நாகரீகத்திற்காக  சிக்கனமான புன்னகை ,மட்டுமே வர .

அவனுக்கு தான் சங்கடமாகிப்போனது ,’ என்ன இவள் இப்படி இருக்கிறாள் ?காசு கொடுத்தா கூட பேச மாட்டா போல,  இவளை எப்படி தான் கரெக்ட் பண்றது ?’ தனக்குள்ளே புலம்பினான் .

” அது   அன்னைக்கு என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்கன்னு இஷு சொன்னா , நாங்களும் வந்தோம் , ஆனா பார்க்க முடியல,  என்கிட்ட என்ன பேசணும் அண்ணா ?” சொன்னாளே ஒரு வார்த்தை ‘அண்ணா ‘ என்று ! ரிதுராஜிற்கு ஹார்ட் அட்டாக் வரவில்லை அவ்வளவு  தான் ,நெற்றியை நீவியபடி நின்றவன் ,’ டேய் இதுக்கு மேல,  நீ கொஞ்சம் லேட் பண்ணினாலும்,  அவ குழந்தைங்க  உன்னை மாமான்னு கூப்பிட போறது உறுதி ‘ என்று எண்ணிய ரிதுராஜ் , தாங்கள் நிற்கும் இடத்தை கொஞ்சம் தன் பார்வையாலே அலசினான் , காரிடார் . செவிலியர்களும்,   மருத்துவர்களும்  அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள் என்பதை கருத்தில்  கொண்டவன் , தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு ,

” பேசணும் மேகா ,உனக்கு பத்து நிமிஷம் டைம், ஹாஸ்பிடல் பின்னாடி இருக்கிற பார்க்கிற்கு வா , வெயிட் பண்றேன் ” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட , மேகா புரியாமல் விழித்தாள்  .

##################################################

அக்னி தீரனும் , அஷோக் மித்ரனும் தங்கள் வீட்டின் கீழ் தளத்தின் வரவேற்பறையை  நெருங்கிய நேரம் ,  கையில் துப்பாக்கியுடன் சீருடை அணிந்திருந்த  காவலாளிகள்   ஓடி வந்து காரின் கதவை திறந்துவிட,  அவர்கள் காரில் ஏறியதும் கதவை சாற்றிவிட்டு ஒருவன் மட்டும் காருக்கு முன்னால் வந்து ஏறிக்கொள்ள , அவர்கள் காருக்கு பின்னால் ஒரு காரில் இவர்களது பாதுகாவலர்களும் உடன் வந்தார்கள்.

காவலாளி தீரனை பார்த்து ,” சார் ..” என்று இழுக்கவும் , காரணம் உணர்ந்த  அக்னி ,

,” ஹோட்டல் ஆல்பா போ ” என்று கூறிவிட்டு தன் தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடி  அமர்ந்திருக்க  , அஷோக்கோ  அக்னி  நிதானமாய்  இருப்பதை கண்டு   ஒன்று புரியாமல்  கோபத்தில் அமர்ந்திருந்தான் .

###################################

மெல்லிய காற்றில் அசைந்தாடிய அவளது கூந்தல் அவனது முகத்தில் பட்டு உரசவுக்கும் மேனி  சிலிர்த்தவன்! தன் விழிகளை அழுத்தமாக  மூடி திறந்து மூச்சை நன்கு இழுத்து வெளியிட்டு ,’இனியும் காலம் தாழ்த்தாதே ரித்து சொல்லிவிடு  ‘ என அவனது காதல் கொண்ட மனசு அவனுக்கு தைரியம் கொடுக்க , சுற்றும் முற்றும் அனைத்தையும் மறந்தவன் ,  தன் காதலை சொல்ல ஆயத்தமானான்  .

”  என்ன பேசணும் அன் …” அவள் சொல்லிமுடிப்பதற்குள் ,” ஐ லவ் யு மேகா ” என்றான் ரிதுராஜ் அழுத்தமாக .

” வாட் ?” அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது .ரிதுராஜிடம் இருந்து இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத மேகா, ஒன்றும்  புரியாமல் திரு திருவென முழித்தாள் .  என்ன பேசுவதென்று  அவளுக்கும்  தெரியவில்லை  அடுத்து என்ன செய்ய வேண்டும்  என்று அவனுக்கும் தெரியவில்லை .

அங்கு அதற்கு மேல் நிற்காமல்  மேகா  வேகமாக நடந்தாள். அவள் அடிந்திருந்தாலோ  திட்டியிருந்தால் கூட அவனுக்கு ஒன்றும் தோன்றியிருக்காது ஆனால் அவள் பதில் பேசாமல் போவது தான் மிகவும் கஷ்டமாக இருந்தது .

பார்க்கில் பொது மக்கள் நிறைந்திருக்க  அவள் பின்னாலே ஓடி செல்ல சங்கடப்பட்டவன்  , அப்படியே அங்கிருந்த கல் மேசையில் தோய்ந்து அமர்ந்தான் .

##########################################

அரை மணிநேர பயணம்  அமைதியாக  கழிய ,அக்னியோ மேகாவை பற்றிய நினைப்பிலே கண்மூடி அமர்ந்திருந்தவன் இதழில்,   கண்டறிய முடியா சிறு புன்னகை  எட்டி பார்த்தது .

சில மணித்துளிகளுக்கு பிறகு , அக்னியின் ஜாக்குவார் தரையில்  வழுக்கிக்கொண்டு அந்த பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியின் வாசலுக்கு  முன்பு வந்து நிற்க ,

” முக்கியமான காண்ட்ராக்ட்டை கன்செல் பண்ணிட்டு , இங்க கூட்டிட்டு வந்திருக்கான் ” என்று முணுமுணுத்தபடி காரில் இருந்து இறங்கிய அஷோக் , உள்ளே சென்று பார்த்த பொழுது தான் அனைத்தையும் புரிந்து கொண்டு ,

” அதானே தீரன்னா என்ன சும்மாவா ” என நண்பனை பெருமையுடன் பார்க்க ,

” உள்ளவாடா ” என சிறுபுன்னகையுடன்  அஷோக்கை அழைத்த தீரன்,  நண்பனுடன் உள்ளே நுழைந்தான் .

அந்த ஹோட்டலில் உள்ள விசாலமான கான்பரன்ஸ் அறையின்  கதவை காவலாளி பவ்வியமாக  திறந்து விட , அக்னி தீரன் கம்பீரமாக உள்ளே நுழைய அவனை தெடர்ந்து அஷோக் மித்ரனும் தலை நிமிர்ந்து நுழைந்தான் .

அங்கே  தீரன் வருவதற்கு முன்பே அவனுக்காக வந்து காத்திருந்த இத்தாலி முதலீட்டார்களை கண்டு அவன் முகம் பிரகாசமானது . அவர்களோடு  உரையாடி கொண்டிருந்த கிரண் பாஸ்கரை கண்டு அவன் இதழ்  இகழ்ச்சியில்  விரிந்து கொண்டன .

அக்னி தீரனை இங்கே சற்றும் எதிர் பார்த்திராத கிரண் பாஸ்கரின் முகம் ஒரு நொடி திகைப்பை காட்டி, பின்பு இயல்பை அடைந்தது . அவன் வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும்  முகத்தில் இருந்த, பாறையை ஒத்த   இறுக்கம் அவனது  கோபத்தை தெளிவாய் காட்ட , அதை ரசித்தபடி வந்த தீரன்,” சாரி ஜென்டில்மென் ,வெயிட் பண்ண வச்சிட்டேன் ” என்றபடி இத்தாலியர்களிடம் சென்று கை குலுக்க,

“இட்ஸ் ஓகே தீரன்,  உங்க ப்ரோபோசல்க்காக எவ்வளவு நேரம் வேணும்ன்னாலும் வெயிட் பண்ணலாம் “என ஆங்கிலத்தில் கூறியவர்கள் அவனை கட்டி  அணைத்து வரவேற்றனர் . பின்பு பாஸ்கரிடம் திரும்பிய தீரன் ,

“ஹெலோ பாஸ்கர் ” கபடமாய் புன்னகைத்து அவன் கரம் பிடித்து  குலுக்கினான் .

வெளிநாட்டவன் முன்பு எதையும் காட்ட முடியாததால் நாகரிகம்  கருதி  ,

” ஹெலோ தீரன் ” என கைபிடித்து குலுக்கினான்  பாஸ்கர் .

தீரனின் பார்வையில் இருந்த நக்கல் அப்பட்டமாக தெரிய,பாஸ்கர் அவனை எரித்துவிடும் அளவுக்கு முறைக்க , அவனோ நல்லபிள்ளையாக இத்தாலியாளர்களிடம்  தொழில் பற்றி ஆங்கிலம் மற்றும் அவர்கள் தாய் மொழி கலந்து  உரையாடினான் .

அவன் பேச பேச இத்தாலியர்களின் முகத்தில் தெரிந்த பிரகாசமே,   இந்த டீலை ஏற்கனவே தீரன் குறிவைத்துவிட்டான் .இனி இந்த ப்ராஜெக்ட் தனக்கில்லை . என்று பாஸ்கருக்கு நன்றாக புரிந்து விட்டது. ஆனாலும் புன்னகைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் பாஸ்கரால் ஒன்றும் செய்ய முடியவில்லை .

” என்ன பாஸ்கர் ரொம்ப அதிர்ச்சியா இருக்கீங்க போல ? இவன் தான் அடிபட்டு கிடந்தானே , இது எப்படி இவனுக்கு தெரியும் ? நாம தான் இதை ரகசியமா வச்சிருந்தோமேன்னு ஆச்சரியமா இருக்கா? “

தீரன் பேச பேச பாஸ்கருக்கு ரத்தம் அழுத்தம் எகிறியது , அவனது அலட்சிய பார்வை,  நக்கல் பேச்சில் பாஸ்கர் தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான் .

” ஏண்டா உனக்கு மட்டும் தான் ஸ்பை இருப்பாங்களா ?ஏன் எனக்கு இருக்க மாட்டாங்க? ” என்று தீரன் புன்னகைக்கவும் , பாஸ்கரின் முகம் கறுத்து போனது ,அக்கினியின் கபடச் சிரிப்பை பார்க்க பார்க்க அவனை இதே இடத்திலே ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற வெறி பாஸ்கருக்கு வந்தது . அங்கிருந்து எழுந்து செல்லவும் முடியவில்லை காரணம் , அடுத்தடுத்து இதே இத்தாலியர்களிடம் டீல் பேச வேண்டிய நிலை வரலாம் , வெளிநாட்டவனை பகைக்கவும் முடியாது  , ஆக நெருப்பின் மேல் நிற்பது போல நின்று கொண்டிருந்தான் பாஸ்கர் .

தனக்கு வரவேண்டிய டீலை தன் முன்னே தட்டி பிரித்த அக்னியை கண்டு மனதிற்குள் பொருமினான் . ‘ எவ்வளவு அடித்தாலும் அதே கம்பீரத்தோடு எழுந்து நிற்கிறானே ‘கை முஷ்டி இறுகியது  .

பிஸ்னஸ் உலகில் இது பெரிய தொல்லை ஜென்ம பகையாளியாக இருந்தாலும் , ஆயிரம் முறை  வேண்டும் என்றால் முதுகில் குத்தலாம்  ஆனால் வெளியில்,  நேருக்கு நேர் சந்தித்தால் முகத்தில் புன்னகை  மாறாமல் நட்பு பாராட்ட வேண்டும் , அதை தான் இப்பொழுது பாஸ்கரும் செய்து கொண்டிருக்கின்றான் .

இத்தாலி ப்ராஜெக்டில் வெற்றிகரமாக  கையொப்பந்தம்  செய்து முடித்துவிட்டு அவர்களை அஷோக்குடன் அனுப்பி வைத்த தீரன் , பாஸ்கரிடம் திரும்பி ,

“என்ன பாஸ்கர் இப்போ புரிஞ்சிருக்குமே,  நீ எனக்கு ஒரு மடங்கு வலிக்க வச்சா நான் பல மடங்கு திருப்பி உனக்கு வலிக்க வைப்பேன்னு , நீ எனக்கு நூறு கோடி லாஸ் பண்ண வச்ச , இப்போ பாரு உனக்கு ஆயிரம் கோடி லாஸ் ” என்றவனை கண்டு பாஸ்கரின் கோபம் பன்மடங்கானது .

“ஏய் பாஸ்கர் அப்புறம்,  நீ உன் இஷ்டத்துக்கு  எனக்கு ஸ்கெட்ச் போடுறேன்னு ஒருவாரம் யோசிச்சு,   ஒரு மொக்கை பிளானோட வந்து நிற்காத,  சரியா. ஒழுங்கா விட்டத எப்படி புடிக்கலாம்ன்னு யோசி , உன் கூட சண்டை போடுற மூடெல்லாம் எனக்கில்லை , ஆக்சுவலா  உன் கதையை முடிக்கணும்ன்னு தான் நினைச்சேன் , ஆனா ஒரு என்டெர்டெய்ன்மெண்ட்  இல்லாம போய்டுமே , அதான் உனக்கு உயிர் பிச்சை போடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் , போ  வாழ்ந்துட்டு போ “என தீரன் கையசைக்க , ” உனக்கு இருக்கு டா “என்று  வெறியோடு கத்திய பாஸ்கர் அங்கிருந்து வெளியேறினான் .

அப்பொழுது அங்கே வந்த அஷோக் கோபமாக வீர நடையிட்டு செல்லும் பாஸ்கரை பார்த்து புன்னகைத்தபடி அக்னியிடம் வந்து ,

” அக்னி நீ யாருன்னு காட்டிட்ட டா , அந்த பாஸ்கர் மூஞ்ச பார்க்க சகிக்கல  ” என்றவன் அக்னியை கட்டி அணைத்துக்கொண்டான் .

” ம்ம்  ” தீரன் புன்னகையுடன் நின்றிருந்தான் ஆனால் ஒரு வார்த்தை பேச வில்லை . அவனை ஆராய்ந்த அஷோக் ,

” ஆனா இந்த தீரன் புதுசா இருக்கே, பாருடா சிரிப்பெல்லாம் வருது  ” என அஷோக் தீரனின் முகத்தை பார்த்தபடி கேட்க , தன் மீசையின் நுனியை மேல் நோக்கி இழுத்து விட்டபடி புன்னகைத்த அக்னி ,” சிரிக்கிறதுக்கும் காரணம் வேணும்ல ” என்றான் .

” ம்ம்ம் பாருடா இப்படியெல்லாம் கூட சாருக்கு பேச தெரியுமா? “நண்பனை சீண்டினான் .பதிலுக்கு  அழகாய் சிரித்தான்  .

” பாருடா மாறும்படியும் சிரிக்கிற ம்ம்ம் ” இருவரும் துன்பம் , வலி,  வேதனை,  தாங்கள் யார்? என்பதை மறந்து  ,  இப்பொழுது சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போல  பேசி சிரித்துக்கொண்டனர் .

” சரி இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் என்னவோ “புருவம் உயர்த்தினான் அஷோக் 

“மேகாவ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் அஷோக் ” சொல்லும் பொழுதே மணக்கோலத்தில்  மேகா  கண்முன்னே வந்து போனாள் .

” அப்படி போடு , சரியான முடிவு டா , மேகா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.  நான் இப்போவே சொல்லிட்டேன் , நான் என் தங்கச்சி மேகா பக்கம் தான் ” அஷோக் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி .

” ம்ம் ” ம்ம் கொட்டி சிரித்தான்! ஏனோ தீரனால் இது போன்ற சீண்டல் பேச்சுகளுக்கெல்லாம் பதில் பேச முடிவதில்லை , சொல்லப்போனால் தெரியவில்லை . அஷோக்கும் தீரனின் கூட்டாளி தான் ,இருந்தும் இருவருக்கும் இடையே மனிதர்களிடம் பழகும் விஷயங்களில் பெரிய வேற்றுமை   எப்பொழுதுமே  உண்டு .  என்ன தான் துப்பாக்கி பிடித்தாலும் மற்றவர்களிடம் பழகும் விஷயங்களில் அஷோக்கிடம் எப்பொழுதும் சிறு மென்மை இருக்கும் , மேலும் தங்கையோடு வளர்ந்தவன் என்பதால் அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் .

ஆனால் தீரனின் வாழ்க்கை பாதையே வேறாயிற்றே , பள்ளி பருவம் ஆரம்பித்து அவன் ஓடிய ஓட்டமும் , அவன் அடைந்த துன்பமும்,  துரோகமும் அஷோக் தன் வாழ்க்கையில் சந்தித்தது கிடையாதே !

பன்னிரண்டு வயதில் கத்தி !

சீர்திருத்த பள்ளியில் வனவாசம் ! தடம்மாறிய வாழ்க்கை !

விளைவு கல்லூரிக்கு போக வேண்டிய வயதில் பணத்தை நோக்கி செல்ல, பெண்களும் , காதலும் தீரனுக்கு வெகு தூரமாகி போக, இதனாலே அனைவரிடமும் முரட்டு தனமாகவே நடப்பவன் ,  அஷோக்கை தவிர யாரையுமே நம்பாமல் எப்பொழுதும் இறுக்கமான பாறை போல இருப்பவன் , மேகாவின் வருகைக்கு பிறகு.  இதுநாள் வரை இருந்த இறுக்கத்தை மொத்தமாக தூக்கி போட்டு, ‘ இவனுக்கு சிரிக்கவும் தெரியுமா ?’ என்று அஷோக்கே ஆச்சரியம் கொள்ளும் அளவிற்கு மேகாவுக்காக சிரிக்கிறான். 

” சரி மேகாகிட்ட சொல்லிட்டியா  ?”

” இதோ இப்போ நேரா அவளை பார்க்க தான் போறேன் , ஷாக் ஆகிடுவாள்ல” விடலை பையன் போல பூரித்தான் . ” வீட்டோட இன்டீரியர் டிசைன்ஸ் எல்லாம் அவளுக்கு புடிச்ச மாதிரி மாத்தணும் ” தீரனின் குரலில் ஆர்வம் ததும்பியது .

ஆனால்  ஏனோ ஆஷாக்கால் அக்னிக்காக முழுவதும் மகிழ முடியவில்லை,    மனதின் ஓரம் மேகா தீரனை நேசிப்பாளா ? என ஒரு வித நெருடல் துளிர்க்க, நண்பனை பார்த்தான் , அது செய்ய வேண்டும் இது செய்ய வேண்டும்  என முகத்தில் சிரிப்பு மாறாமல் பேசிக்கொண்டே இருந்தான் , அக்னியின் பள்ளி  பருவத்தில்   தொலைந்து போன சிரிப்பை  இன்று தான் அஷோக் பார்க்கிறான் . கண்டதையும் பேசி நண்பனின் சந்தோஷத்தை கெடுக்க விரும்பாத அஷோக் என்ன ஆனாலும் மேகாவை அக்னியுடன் சேர்த்து வைத்தே ஆக வேண்டும் என்று உறுதி கொண்டான் .

தொடரும்