MIRUTHNAIN KAVITHAI IVAL 14.2

cover page-a53158c3

MIRUTHNAIN KAVITHAI IVAL 14.2

மிருதனின் கவிதை இவள் 14.2

 ” எல்லாம் ஓகே தானே ?வேற எதுவும் இல்லையே ?எதுவா இருந்தாலும் சொல்லு ” என்றான் ரிதுராஜ் அவளது கரங்களை   பிடித்தபடி .

அதுவரை கண்மூடி இருந்துவிட்டு , அப்பொழுது பார்த்து   விழி திறந்த தீரனின் கண்களில்  மீண்டும் இந்த காட்சி பட்டுவிட , ” —– ” எதையோ சொல்லி பற்களை நறநறத்த தீரனின் ,  உள்ளங்கை  அவனது விரல் நகங்கள்  அழுத்தியதில்  ரத்தம் கசிய ஆரம்பிக்க  , இருந்தும் தன்  கைவிரல்களை இன்னும் அழுத்தமாக மடக்கியவன்   வலிக்க வலிக்க இறுக்கமாக இறுக்கி  பிடித்தபடி நின்றிருந்தான் .

 ” எல்லாம் ஓகே தான்,  நல்லா இருக்கேன் ” என்ற மேகாவின் பார்வை மீண்டும் தீரனின் விழிகளிடம் சரணடைந்தது . மன்னிக்க வேண்டி யாசித்தது. தன்னை விட்டுவிடும் படி கெஞ்சியது.

தீ தெறிக்கும் கண்கள் , கனலை கக்கும் விழிகள் , உக்கிர பார்வை ,  எரிக்கும் கண்கள் என இப்படி ஏகப்பட்ட வரிகளை கதை புத்தகங்ளில்  படித்து சிலிர்த்திருந்த மேகா  , இன்று தான் அதை நேரில் கண்டாள் . பலமுறை  தீரனின் தகிக்கும் விழிகளை கண்ட மேகாவுக்கு இன்று அவன் பார்வையில் தெரிந்த உக்கிரம் மிகவும் புதிது .

~~~~~~

அன்று மேகாவிடம் தன் விருப்பத்தை கூறி விட்டு வீட்டிற்கு வந்த அக்னியால்  ஏனோ நிதானமாகவே  இருக்க முடியவில்லை  . மேகாவின் கண்ணீரில் நனைந்த பரிதாபமான முகம்  வந்து வந்து அவனை இம்சித்தது  .

 பயப்படுகிறாள் ! அதுவும் , அவனை கண்டாலே அவள் கண்களில் இலவசமாக  வந்து ஒட்டிக்கொள்ளும் அந்த பயம்  !  ஏனோ  தீரனுக்கு   பிடிக்கவில்லை  .

அவள்  விழிகளில்  தெரிந்த  அதே  கலவரத்தை   பலமுறை  மற்றவர்களிடம்  பார்த்து  ரசித்திருக்கின்றான் .

” மிஸ்டர் அக்னி தீரன்  உங்க பேரை கேட்டாலே  பயமா  இருக்கு  ”  இதை  பல  பேர்  தன் காதுபட கூறி  கேட்டுருக்கிறான் .  ஏன்  சமயங்களில்  அஷோக்கே   நேரடியாக  கூறியிருக்கிறான் . உள்ளுக்குள்  ரசிப்பான் ! முகத்தில் ஒரு கர்வ புன்னகை தோன்றும் ! பெருமையுடன்  மீசையின் நுனியை முறுக்கிக்கொள்வான் .  அப்பொழுதெல்லாம் உள்ளுக்குள்   எதையோ  சாதித்துவிட்டதாய்  உணர்பவன்  . இன்று   ஏனோ அதை  வெறுத்தான்   .

“ஏன் வரு ? ஏன் இவ்வளவு பயப்படுற ?என் அன்பு ஏன் உனக்கு புரியல? என்னை புடிக்கும்ன்னு ஒரு வார்த்தை கூட ஏன் சொல்லலை ?நீ  இதுவரை காட்டிய அன்பு,  கரிசனம் எப்பொழுதும் வேண்டும் எனக்கு மட்டுமே வேண்டும்ன்னு,  நான் ஆசைப்படுறது தவறா  என்ன ?தள்ளி தள்ளி போற “என்று வாய்விட்டே கூறியவனுக்கு  முசுமுசுவென்று கோபம் வந்தது .

“நான் வேண்டாமா ?” என்று கேட்டேன் .

” ‘ யார் சொன்னது அப்படி ? நீங்க எனக்கு வேணுடும் ‘ என்றல்லவா அவள் சொல்லிருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு  வேண்டாம் ! என்கிறாளே”

“எல்லாம் நான் கொடுத்த இடம் , இருக்கு டி உனக்கு , நான் வேண்டாம் என்றால் ?வேறு யார் வேணுடுமாம் ? ” பற்களை கடித்தான் .

” ஏன் வேண்டாம்ன்னு கேட்டா,  அப்பாக்கு புடிக்காதாம் ,யாருக்கு வேண்டும் அவர் சம்மதம்  “என்றான் நக்கலாக .

” யாரவது நம்ம கல்யாணத்தை  தடுக்க  முயற்சி பண்ணினா அவங்களை முடிச்சிடுவேன்னு   சொல்லிட்டேன் . அதுக்கு அந்த நடுங்கு நடுங்குறா “

” நான் தான் கோபமா இருக்கேன்னு தெரியுதுல , அதென்ன ‘ எனக்கு புடிக்கலைன்னா?’ன்னு ஒரு கேள்வி , எவ்வளவு துணிச்சல் இருக்கணும் ?”

” புடிக்கலைன்னு சொல்லிருவ  நீ ” முகத்தை அழுத்தமாக துடைத்தான் .

“அவ்வளவு சொல்றேன் , அழுறாளே தவிர புடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை  சொல்லவில்லையே ” முகம் ஏமாற்றத்தில் சிவந்தது .

“தீரன் உன்னை எனக்கு புடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா  வாயில இருந்து முத்து விழுந்திருமோ ?”

” தள்ளி தள்ளி போறா ,அதான் திட்ட வேண்டியதா போச்சு “

” கத்திட்டு வந்தாச்சு  ,அப்பவும் நிம்மதி இல்லை.  ச்ச என்ன இம்சை டா இது , இவளை ” என்று கண்களை மூடி திறந்தவன்,  இப்பொழுது தன் முரட்டு கரத்தை பார்த்தான் ! அவளது கரத்தின் மென்மையை  உணர்ந்தான் !

” அவ்வளவு அழுத்தி புடிச்சிருக்க கூடாது,  எப்படி தாங்குனா ?  மணிக்கட்டு அப்படியே சிவந்து போச்சு,  வரு….” என்று கத்தியபடி  கழுத்தை தேய்த்தவனுக்கு ,  இந்த முறை தன் மீதே கோபம் வர , வழமை போல தனது தற்காலிக ஆறாவது விரலை தேடி பிடித்து,  தன் இதழில் வைத்தான் .

அந்நேரம் ,” குட் ஈவினிங் அக்னி ”  என உற்சாகமாக அக்னியின் தோள்களை தட்டி,   கழுத்தை இறுக்கிய தன்  டையை தளர்த்தியபடி  சூழல் நாற்காலியில்  வந்து அமர்ந்தான் அஷோக் .

” ஈவினிங் அஷோக் ” என்றான் அக்னி உற்சாகம் இல்லா குரலில்.

” அப்புறம் அக்னி ” என்று ஆரம்பித்த அஷோக்கிடம் ,

” ட்ரின்க் பண்ண போறேன் உனக்கு ” என கேட்டான்  சிவப்பு நிற திரவத்தை க்ளாசில் சரித்தபடி,

”  மேக் இட் டூ ” என்ற அஷோக் முன்முறுவலுடன்  தலை சாய்த்து அமர்ந்திருக்க  , அவன் அருகே வந்த அக்னி ,

” ஏன் டா அப்படி பாக்குற? ” சிறு கோபத்துடன் கிளாஸை அவனிடம் நீட்டினான் .

” கொஞ்ச நாளைக்கு முன்னாடி இருந்த தீரன்,  எங்கன்னு தேடுறேன் அக்னி ” கிளாஸை வாங்கி பருகியபடி கேலி குரலில் கூறினான் அஷோக் .

” கிடைச்சானா ” ஒருவார்த்தை சொல்லும் பொழுதே ஒரு க்ளாசில் உள்ள மொத்த திரவமும்  தீரனின்  வயிற்றை நிரப்பியது .

” எங்க கிடைச்சான்  ” அதே கேலியுடன் அஷோக் உதட்டை பிதுக்கினான் .

” நீ நல்லா தேடு டா கிடைப்பான் ” என்றான் தீரன் மூன்றாவது கிளாஸை வாயில் சரித்தபடி .

” அவன் மானஸ்தன் இனி  கிடைப்பான்னு தோணல அக்னி ” என அடக்கப்பட்ட சிரிப்புடன் அஷோக் சொல்ல ,”  அடீங்கு ” என அக்னி கையில் இருந்த காலி கிளாஸை தூக்கி அஷோக் மீது எறிய, அதை லாவகமாக கேட்ச் பிடித்த அஷோக் ,

” சரி தரமான சம்பவம் ஒன்னு பண்ணிருக்க அதை நீயே சொல்லிரு ” என்று கூற ,

” தெரிஞ்சிகிட்டே கேட்குற மாதிரி இருக்கே ” அஷோக்கை பார்த்தபடி வினவினான் தீரன் .

” தெரியும்  தான் “என்று இழுத்தான் அஷோக்.

” உன் ஆளு , அந்த ரிப்போர்ட்டர் சொன்னாளா ” என்றான் தீரன் .

‘ எங்க சொன்னா ,கேவலமா கிழிச்சா’ என மனதிற்குள் புலம்பியவன் ,” சொன்னா சொன்னா ” என்றான் .

“அப்போ ஏன் டா மறுபடியும் கேட்குற? ” என்றான் எரிச்சலுடன் .

” நீ சொல்ற மாதிரி வராதுல “மென்னைகையுடன் கூறினான் அஷோக் .

” ம்ம்ம் ” என்ற தீரன் ,  தான்  ப்ரோபஸ் என்னும் பெயரில் செய்த சாகசங்களை கூற ,

” இப்படியாடா ப்ரோபோஸ் பண்ணுவ? “என்ன தான் இஷிதா கூறினாலும், அக்னி தன் வாயாலே கூறியதும் அஷோக்கிற்கே  அதிர்ச்சி ஏற்பட சட்டென்று கேட்டுவிட்டான் .

” எனக்கு என்ன தோணுச்சோ அதை சொன்னேன் ” என்றான் இலகுவாக தன் தோள்களை குலுக்கியபடி .

” கொஞ்சம் சாஃப்ட்டா  பேசிருக்கலாமே “என்றான் அஷோக் .

” இதான் நான் !எனக்கு நடிக்கெல்லாம் வராது ! அவ மூலமா எனக்குள்ள ஏற்படுற பீலிங்ஸை  நான் அவ கிட்ட தான சொல்ல முடியும்  ” என்ற தீரன் அஷோக்கிடம் ,”வரு  என்னை  புடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லலை  டா ” வலியுடன் கூறினான்.

” அதுக்காக புடிக்கலைன்னும் சொல்லலை தானே பாஸிட்டிவா பாரு டா ” என்றான் அஷோக் . நண்பன் கவலை கொள்வதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை .

” பயப்படுறாளே டா ” தீரனின் குரலில் உற்ச்சாகத்துக்கு பயங்கர பஞ்சமாக இருந்தது .

“உங்களோட முதல் சந்திப்பே, சண்டை,  துப்பாக்கி , ரத்தம்ன்னு ஒரே ரணகளமா தான் ஆரம்பிச்சிது , ஸோ மேகாக்கு பயம் இருக்க  தானே செய்யும் “மேகாவின் நிலையை எடுத்து கூறினான் அஷோக்.

அஷோக் கூறியதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அக்னி , தன் முகத்தை அழுந்த துடைத்து அவன் முகம் பார்த்து,

” நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் அஷோக் “என்றான்.

” சொல்லு அக்னி ” சிவப்பு திரிவதை அருந்தியபடியே கேட்டான் அஷோக் .

” நம்ம பைனான்ஸ் பிஸ்னஸை லீகளைஸ் பண்ணலாம்னு இருக்கேன் , புதுசா  இம்போர்ட் எஸ்ப்போர்ட் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு தோணுது ,  என் கடந்த காலத்தை மாற்ற முடியாது , ஆனா இனி மேகா கூட நான் வாழப்போற  , ஒவ்வொரு நொடியையும்  சந்தோஷமா வாழணும்ன்னு  நினைக்கிறேன். எல்லாமே அவ விருப்பப்படி இருக்கணும்னு அஷோக் .  நீ என்ன சொல்ற ?”  என விழிகள் போதையில் மிதந்தாலும் நிதானமாக
 அஷோக்கின் முகத்தை பார்த்துக்கொண்டே  கேட்டான் தீரன் .

” நீ என்ன பண்ணினாலும் அது நம்ம நல்லதுக்காக  தான் இருக்கும் . ஸோ நீ என்கிட்ட கேட்டவே வேண்டாம் அக்னி , தீரன் எவ்வழியோ இந்த மித்ரனும் அவ்வழியே  ” என அஷோக் சிரிக்க , தீரனும் சிரித்தான் .

அப்பொழுது மாடி அறையில் இருந்து பொருட்கள் உடையும் சத்தம் கேட்க , சட்டென்று இறுக்கமான மித்ரன் கோபமாக எழுந்து நிற்க அவனை தடுத்த தீரன் ,

” பொறுமையா இரு , நேத்ராக்கு  கொஞ்சம் டைம் குடு ” என்றான் .

” எவ்ளோ டா கொடுக்குறது கிட்டத்தட்ட வருஷம் ஆக போகுது  டா , நம்மளை நம்பவே மாட்டாளா டா ” மித்ரன் விரக்தியாக வந்து அமர்ந்தான் குரலில் உயிர்ப்பில்லை . தீரனுக்கும் மித்ரனை பார்க்க கஷ்ட்டமாக தான்  இருந்தது .

தங்கையை குறித்த கவலையில் சில நேரம் அமைதியாக இருந்த  அஷோக் , சில நிமிடங்கள் கழித்து  தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தீரனிடம் ,

” அப்போ சீக்கிரமா  நாம கனடா போக வேண்டியிருக்கும்ன்னு  சொல்லு”என கூறினான் .

” மே பீ நாளைக்கு ஈவெனிங்கே கூட கிளம்ப வேண்டியிருக்கும்  “என்ற தீரன் ,

“எப்படியும்   இந்த ட்ரிப் போய்ட்டு வர ரெண்டுல இருந்து மூணு வாரம்  வர ஆகலாம் டா , அதுவரை வரு வை பார்க்க முடியாது ,அது தான் உறுத்தலா இருக்கு . அங்க எப்படியும் பிசியா இருப்போம் ஃபோனும் பேசுறதுக்கு கஷ்டம் தான் . நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் டா அவளை ”  என்றவன்  வேகமாக அங்கிருந்து கிளம்ப ,

” இந்த நேரத்துல  எங்க போற அக்னி ” என்று அஷோக் வினவினான் .

” வருவ  பார்க்க போறேன்  ” என்று திரும்பி பார்க்காமலே சொல்ல ,

” டேய் நில்லு டா ” என்ற அஷோக்கின் குரல் அக்னியின் செவியில் விழுவதற்குள்  அக்னி காரில் ஏறியிருந்தான் .

ரிதுராஜ் மூலமாக கனகராஜ் கூறிய கண்டிஷனை கேட்டதும் தமையனை தாறுமாறாய் திட்டி அனுப்பிவிட்டு தந்தை மீது அதீத கோபத்தில் இருந்த இஷிதா, மேகாவிடம் இருந்து அழைப்பு வந்ததும் அவளையும் திட்ட ஆரம்பித்தவள் , மேகாவின் அழுகுரல் கேட்டதும் பதறியே விட்டாள் .

பின்பு ஒருவழியாக மேகா வீட்டில் இருப்பதை அறிந்துகொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தவள் மேகாவை தேற்ற கடும் பாடு பட்டுப்போனாள் .
ஏற்கனவே தந்தை மேல் கடும் கோபத்தில் இருந்த இஷிதாவுக்கு . விருப்பம் இல்லாத மேகாவை வற்புறுத்தும் தீரன் மேல் கடும் ஆத்திரம் வந்தது .

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!