MIRUTHNAIN KAVITHAI IVAL 14.3

cover page-21fe53c9

மிருதனின் கவிதை இவள் 14.3

ஏற்கனவே தந்தை மேல் கடும் கோபத்தில் இருந்த இஷிதாவுக்கு , விருப்பம் இல்லாத மேகாவை வற்புறுத்தும் தீரன் மேல் கடும் ஆத்திரம் வந்தது . அந்த ஆத்திரம் மொத்தமும் மித்ரன் மீது திரும்ப,  சற்றும் யோசிக்காமல் அலைபேசியை எடுத்தவள் அவன் , ஏன் ? என்ன ? என்று கேட்கும் முன்பே பொரிந்து தள்ளினாள் . போதும் போதும் என பொறுத்து பார்த்த மித்ரனின் பொறுமையும் சில நிமிடங்களில் காற்றில் பறக்க ,

” போதும்  இஷிதா,  மேகாக்கு அக்னிக்கிட்ட பிரச்சனைன்னா அதை மேகா சொல்லட்டும் . நீ  அவங்க விஷயத்துல  தலையிடாத .  நீ  என்ன சொன்னாலும்  சரி  ,நான் அக்னி பக்கம் தான் . நீ தேவை இல்லாம உள்ள வராத  , அவங்க கல்யாணத்தை யார் நினைச்சாலும் தடுக்க முடியாது தடுக்கவும் விட மாட்டேன் ” என்றவன் அவளிடம் இருந்து பதில் வரும் முன்பே அழைப்பை வைத்திருந்தான் .

ஆக தந்தை மற்றும் தீரன் இருந்த பெயர் பட்டியலில் இப்பொழுது மித்ரனும் இணைந்து கொள்ள இஷிதாவின் ஆத்திரமும் கோபமும் பல மடங்கு அதிகமானது .

என்ன செய்வது ? என பலவிதமாய் சிந்தித்தாள் .

போலீசிற்கு போகலாம் என்றால் பத்தில் எட்டு பேர் அவனது ஆட்கள்  . ஆக அவனை எதிர்த்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது . அவனுடன்  சண்டையிட்டால் தோல்வி தான் மிஞ்சும்   என்று எண்ணியவளுக்கு  தன் இயலாமை மீது கோபம் தான் வந்தது .

ஆக எப்படி தான் மேகாவை அக்னியிடம் இருந்து காப்பாற்றுவது ?என மேலும் மேலும் பல விதமாக சிந்தித்தவளின் மனதிற்குள் தோன்றியது எல்லாம் ஒரே ஒரு எண்ணம்  தான் , அது ரிதுராஜுடன் மேகாவின்  திருமணம் .

ரிதுராஜ் நல்லவன் தான் ஆனால் எதற்கெடுத்தாலும் தந்தை தந்தை என்று இருக்கிறானே ? ஏனோ தமையன் மீது சிறிய மனக்குறை  தோன்றியது .

போதாக்குறைக்கு  இந்த திருமணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தந்தை மீது வெறுப்பு இன்னும் அதிகரித்தது .

அந்த சொத்து தனக்கு எவ்வளவு முக்கியம் என தெரிந்தும்  தந்தை கூறியதற்கு தலையாட்டிவிட்டு தன்னிடம் வந்து கெஞ்சிய தமையன் மீது பயங்கர ஆத்திரம் வந்தது .

ஆனால் மேகா ? அவளை எப்படி இந்த ஆழியில் இருந்து மீட்பது , சரி மேகாவிற்காக தந்தையிடம் பேசலாம் என்றாலும் ? அதற்கான விலை மிகவும் பெரியதே ? அதெல்லாம் வெறும் சொத்துக்கள் அல்லவே அது அனைத்தும் அவளது தாயின் ஆசைகளும் , இறுதி நினைவுகளும் ஆயிற்றே .அதனால் தானே எத்தனையோ இன்னல்கள் வந்தும் , இன்னும் அவள் அதை விற்காமல் வைத்திருக்கிறாள் .

சரி போனால் போகட்டும் தன் தாயுடன் கழித்த இனிமையான தருணங்களை  சுமந்தும்  கொண்டே வாழ்நாளை  கடத்திவிடலாம் என்றாலும் ? அவளது தந்தை அதற்கெல்லாம் தகுதி உடையவரா என்ன ? இல்லையே! அவர் செய்த துரோகத்தை அவளால் எப்படி மறக்க முடியும்?  மன்னித்து அனைத்தையும்  எப்படி தூக்கி கொடுக்க முடியும் ?

தன் பள்ளிக்காலத்தில் இருந்து ஹாஸ்டலிலே தங்கி படித்த ரித்து ராஜிற்கு வேண்டுமானால் , படுக்கையில் கடந்த தாயின் மரணம் பெரிய பாதிப்பை கொடுக்காமல் இருந்திருக்கலாம் .அவனும் தந்தை செய்ததை மன்னித்து அனைத்தையும்  கொடுத்து   ,அவரை ஏற்றுக்கொண்டிருக்கலாம் .ஆனால்,  அவளால் முடியவே முடியாதே ! தாய் பட்ட துன்பங்களையும்  , வடித்த கண்ணீரையும் அருகே இருந்து பார்த்தவளாயிற்றே  .

கனகராஜை மன்னிப்பது என்பது பல ஜென்மங்கள் கடந்தாலும் இஷிதாவால் முடியாத காரியம் . ஆனால் மேகா ?சிறு வயது தோழி தான் ?இருந்தாலும் நட்பு நட்பு தானே. மேகாவின் தந்தை பணிமாற்றம் பெற்று சென்னை சென்ற பிறகு அலைபேசி மற்றும் முகநூல் முலமாக  எப்பொழுதாவது பேசியதோடு சரி பெரிய போக்குவரத்து இல்லை தான் !ஆனால், 

இஷிதா தன்  தாயை இழந்து , தந்தையை பிரிந்து , காதலை துறந்து தனிமையில் இறுக்கமாக இருந்த நேரம்  சென்னையில் இருந்து இங்கே தனக்கு    துணையாய் வந்த ஒரே ஜீவன் ஆயிற்றே . அவள் இன்று இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது உதவாவிட்டால் தோழி என்று தான் இருந்து எதற்கு ? என வெகுவாய்  யோசித்தபடி  அப்படியே மெத்தையில் சரிந்த இஷித்தாவால்  நிலையான ஒரு முடிவை எடுக்க முடியவில்லை .

அப்பொழுது பார்த்து வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சலிப்பாக தன் அறையை விட்டு வந்த இஷிதா கதவை திறந்தது தான் தாமதம் ” வரு ” என மேகாவின் பெயரை ஏலம்விட்டபடி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் தீரன் .

” மேகா தூங்கிட்டு இருக்கா ,இப்போ பார்க்க முடியாது ,போங்க மிஸ்டர் அக்னி ” என்று இஷிதா கூறவும் , அவளை பார்த்து   திரும்பினான் . ஒரே பார்வை தான் பார்த்தான் அதற்கே இஷிதா ரெண்டடி பின்னால் சென்று நிற்க

அவனது கனீர் குரல் , அழுதழுதே  உறங்கிக்கொண்டிருந்த  மேகாவின் காதில் விழுந்ததோ என்னவோ  , ஆழமான உரக்கத்திலே ” எதுவும் பண்ணிராதீங்க ” என  அலறியபடி அரண்டு முழித்தாள் மேகா .அவள் அலறும்  குரல் கேட்டதும் தான் தாமதம் , இரண்டு எட்டில் அவளது அறைக்குள் நுழைந்தான் அக்னி .

ஏற்கனவே பதற்றத்தில் இருந்த மேகா அவனை கண்டதும் பயத்தின் உச்சத்தை தொட்டுவிட ,அவளது மருண்ட விழியில் தெரிந்த பயம் கண்டு வேதனை கொண்டவன்  ,” வரு ” என அழைக்க ,

” ப்ளீஸ் மிஸ்டர் அக்னி அவளை டிஸ்டர்ப் பண்ணாம, வெளிய போங்க , இனிமே இங்க  வராதீங்க, எந்த உரிமையில்ல அவளுடைய ரூம்குள்ள போறீங்க  ” என இஷிதா கூறவும் தாமாதம் , அக்னிக்கு எங்கு இருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை .

“என் வரு கிட்ட நான் பேசிட்டு இருக்கேன் , நீ யாரு நடுவுல ?உனக்கு  எவ்வளவு தைரியம் இருக்கனும் ?” இஷிதாவின் முகம் பார்த்து திரும்பி  நின்றவன்  பிஸ்டலை அவளது நெற்றியில் வைத்து அழுத்தியபடி அவளது விழிகளை பார்த்து உறுமினான் .  அவ்வளவு  தான் பயத்தில் இஷிதாவின் முகம் வெளிறி போக  அச்சத்தில் அப்படியே உறைந்து நிற்க  , படுக்கையில் இருந்து பதறி எழுந்த மேகா அக்னியை  நெருங்கி ,

” ப்ளீஸ் அவளை விட்ருங்க தீரன்  “என    கத்தி கதற ஆவேசமாக மேகாவை பார்த்த தீரன் அவளது கரத்தை இறுக்கமாக  பிடித்து ” அப்போ உன் ஃப்ரண்ட நமக்குள்ள வரவேண்டாம்ன்னு சொல்லு ” என கண்கள் சிவக்க  காட்டுத்தனமாக  கத்தினான் .

“தீரன் ப்ளீஸ் ” மேகாவின் உடல் சோர்வுற்றிருக்க  அவனிடம் போராட தெம்பு இல்லாமல்  கெஞ்சினாள் .

அப்பொழுது தான் தன் கரத்திற்குள் சிறைப்பட்டிருக்கும்  அவளது மென் கரம் வலியில் மெல்ல நடுங்குவதை உணர்ந்தவன்,  எரிச்சலுடன் அவளது கரத்தை விடுவிக்க , மேகா கண்கள் சொருக அவன் மீதே சரிந்து விழுந்தாள்.

மேகாவின்  தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு  ” வரு வரு கண்ணை திற”அந்த நிலையிலும் கட்டளையிட்டான் ,அவளிடமே இருந்து எந்த அசைவும் இல்லை .

“ஏய் என்ன  பார்த்துட்டு இருக்க ? போய் தண்ணி  கொண்டு வா ” தாறுமாறாய் இஷிதாவிடம் கத்தியவன் மேகாவிடம் திரும்பி மீண்டும் ,  “வரு என்னை பாரு ” என  கன்னத்தை தட்டியபடி  அழைத்தான். சில  நொடிகள்  இஷிதாவையும் அவனை தவிக்கவைத்துவிட்டு மெல்ல கண்முழித்தவள் தீரனை கண்டதும் சட்டென்று விலகி அருகில் இருந்த இஷிதாவின் கரத்தை பிடிக்க ,அவன் நெஞ்சுக்குழிகுள் வலித்தது .

எதை சொன்னாலும் துப்பாக்கியை நீட்டும் அக்னியை எப்படி  சமாளிப்பது ? என இஷிதாவுக்கும் புரியவில்லை . அறையில் கனத்த மௌனம் பரவியது . மூச்சு வாங்க மேகா இஷிதாவை பார்த்து கொண்டிருந்தாள் .

 நேரம் கடந்தது , அவன்  அவளை ஆழ்ந்து பார்த்தான் ,அவளது விழிகளை பார்த்தான் , அதில் இருந்து வழியும்  கண்ணீரை பார்த்தான் , அவள் பார்வையில் தெரிந்த பயத்தை பார்த்தான் !

‘இதற்கு காரணம் நீ தான் ‘ என அது  அவனை குற்றம் சுமத்தியது .கண்களை அழுத்தமாக மூடி திறந்தான் , பின்கழுத்தை தேய்த்தான் , தலையை அழுந்த கோதி பார்த்தான் ஒன்றும் வேலைக்காகவில்லை . கைகள் தானாக பாக்கெட்டை தடவியது . நச்சு குழலை கையில் எடுத்தவனுக்கு ஏனோ மேகாக்கு பிடிக்காததை அவள்  முன்பே செய்ய  மனம்  விரும்பால் போக , எடுத்ததை கசக்கி கீழே  போட்டவன் . அவளது அச்சம் நிறைந்த விழிகளை பார்த்து ,

” என்னை அப்படி பார்க்காத வரு “என்றவனுக்கு  அவளது பயந்த பார்வை உச்சக்கட்ட  கோபத்தை ஏற்படுத்த ,” என் உணர்வுகள் உனக்கு புரியவே இல்லையாடி ” என ஆக்ரோஷமாக கத்தினான் .

“ஆ ” காதை மூடி அழுதாள் .

“அக்னி ப்ளீஸ் கொஞ்ச, நேரம் வெளிய போங்க  ப்ளீஸ் ” இஷிதா தன்மையாக கெஞ்சினாள் .

இருவரையும் தன் விழிகள் இடுங்க பார்த்தவன் மேகாவின் மணிக்கட்டை  பார்த்தான் இவனது ஐவிரலின் தடம் பதிந்திருக்க  ரத்தமென  சிவந்திருந்தது .

” மிஸ்டர் அக்னி ப்ளீஸ் , ரொம்ப பயப்படுறா கொஞ்சம் நேரம் வெளிய போங்க ” மீண்டும் இஷிதா கூறினாள் .  அக்னிக்கு கோபமாக வந்தது இருந்தும் அடக்கிக்கொண்டவன்  மேகாவை மேலும்  காயப்படுத்திவிட கூடாது என்பதால் கதவை வேகமாக திறந்து , திறந்த வேகத்தில் அடித்து சாற்றிவிட்டு  ஸோஃபாவில்  வந்து கண்மூடி  அமர்ந்திருந்தான் .

” நீ அப்பவே சொன்ன நான் தான கேட்கல , எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம் . உனக்கு ஏதாவது ஆகிருந்தா நான் என்ன பண்ணிருப்பேன் ?வீட்ல யாருக்கும் ஏதாவது ஆகிருமோன்னு  ரொம்பவே பயமா இருக்கு இஷு ” என தேம்பி தேம்பி அழும் மேகாவை எப்படி தேற்றுவது  என தெரியாமல் மிகவும் குழம்பி போய் இருந்தாள் இஷிதா.

” யாருக்காவது ஏதாவது ஆகிருமோன்னு பயந்து பயந்து வாழுறதுக்கு , செத்து போயிறலாம்ன்னு தோணுது ” என மேகா சொல்லி முடிக்கவில்லை இஷிதா மேகாவை அறைந்திருந்தாள் .

” லூசாடி நீ எந்த தப்பும் பண்ணாம நீ ஏன் டி சாகனும் . பிரச்சனைய  ஃபேஸ்  பண்ண கத்துக்கோ ” என்று கத்தியவளுக்கு அத்தனை ஆத்திரம் அக்னி மீது வந்தது .

” என்ன பண்றது டி அவர் என்னை விட மாட்டார் ” என்று மேகா கூறவும் ,

“அதென்ன அவர் ?’அவன்’ போதும் “என்ற இஷிதா ,சில நொடிகள் சிந்தித்து மேகாவிடம் ,” என் அண்ணன் பத்தி என்ன நினைக்கிற “என கேட்டாள் .

” அவர் உன் அண்ணன் அதை தாண்டி எனக்கு எந்த பீலிங்க்ஸும் இல்லை . நான் சம்டைம்ஸ் பேசும் பொழுது கூட அண்ணான்னு  அட்ரஸ்  பண்ணிருக்கேன் “

” ப்ச் அதெல்லாம் பிரச்சனை இல்லை , பெர்சனால உனக்கு புடிச்சிருக்கான்னு கேட்குறேன் “

” எனக்கு யார் மேலையும் அப்படி தோணலை இஷு , அப்பா  விருப்பம் தான் என் விருப்பம் என்பதுல ரொம்பவே ஸ்ட்ராங்கா  இருக்கேன் “

“அங்கிளுக்கு ஓகேன்னா உனக்கு ஓகே வா “

“அப்பா சொன்னா சரி தான் , அதெல்லாம் ஏன் இப்போ கேட்குற “

” சொல்றேன் ” என்ற இஷிதா ,” அக்னி மேல உனக்கு ஏதாவது பீலிங் இருக்கா ? ” மேகாவின் விழிகளை பார்த்தபடியே கேட்டாள்  இஷிதா,  அதிர்ந்து பார்த்தாள் மேகா ,

“நோ இல்லை ஏன் அப்படி கேட்ட ” 

” தெரிஞ்சிக்க தான் கேட்குறேன் “

” பீலிங் இருந்தா நான் ஏன் அழ போறேன் , அவர் மேல பயத்தை தாண்டி வேற எதுவும் இல்லை . ஆனா அவரை பார்க்கும் பொழுது பாவமா இருக்கு, நான் சொன்னேன்ல ஒருநாள் ரொம்ப திட்டிட்டேனு , அவர் கூட எதுவும் பேசாம சைலெண்டா போய்ட்டாருனு , அந்த இன்சிடெண்ட்க்கு  அப்புறம் இருந்து அவர் மேல ஒரு சாஃப்ட்  கார்னர் ஏன்னு தெரியல  “தன் மனதில் உள்ளதை அப்படியே கூறினாள்.

” மேகா முதல்ல அவன் மேல உள்ள  சாஃப்ட்  பீலிங்ஸ் எல்லாத்தையும்  தூக்கி போடு , அவன் உனக்கு பாவம் பார்காதப்போ ,  நீ மட்டும் ஏன் பார்த்துட்டு இருக்க ?”

” சாரி இனிமே பார்க்கல டி “என்ற மேகாவுக்கு குரல் உள்ளே சென்றது 

” மேகா இதுல இருந்து வெளிய வரணும்ன்னா ஒரே வழி தான் இருக்கு “

” என்ன  வழி? ” ஆர்வத்துடன் கேட்டாள் .

” கொஞ்ச நாளைக்கு அவன் என்ன சொன்னாலும் சம்மதமா தலையை ஆட்டு”

” ஏய் அது தப்பு இஷு என்னால அப்படி பண்ண முடியாது “

” அப்போ அவனை கல்யாணம் பண்ணிக்கிறியா ?”

” ஐயோ முடியாது “

” அப்போ இதை விட்டா வேற வழியில்லை . மேகா இப்போதைக்கு நீ மட்டும் சரி சொல்லலைன்னா,  அவன் தினமும்   உன் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்ணுவான் . சோ இப்போதைக்கு  ஓகே சொல்லி வை . அப்போ தான் அவனும் அடங்குவான் நமக்கும் டென்ஷன் இல்லாம யோசிக்க முடியும் “

” இஷு  என் மனசுக்கு சரியா வரும் தோன்ற வில்லை டி ,அவன் கெட்டவனாவே  இருந்தாலும் ,அவன் உணர்வுகளோடு  விளையாடுறது  சரி கிடையாது “மேகா மறுத்தாள்.

“அவன் உன் உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்குறானா ?இல்லைல !அப்போ நீ மட்டும்  ஏன் அவனை பத்தி கவலை படுற ?இதுல இருந்து வெளிய வர வழியே இல்ல மேகா , ஜஸ்ட் அவன் என்ன சொன்னாலும்  தலையை மட்டும் ஆட்டி வை,  மற்ற விஷயங்களை  நான் பார்த்துகிறேன் , நீ நான் சொன்னதை மட்டும் பண்ணு ” என இஷிதா சொல்லி முடிக்கவும்  , கதவை திறந்து கொண்டு தீரன் நுழைந்தான்.

சில நிமிடங்கள்  தன் கண்களை மூடி அமர்ந்திருந்த  தீரனால் அதற்கு  மேல் மேகாவை  பார்க்காமல் இருக்க முடியாது போக ,  மீண்டும் அவளிடமே  வந்தான் .  அவனை கண்டதும் மேகா இஷிதாவின் கரங்களை இறுக்கமாக பற்றிக்கொள்ள , இருவரையும்  பார்த்து தீவிரமாய் முறைத்தவன் ,

“என்  வரு கூட தனியா பேசணும் ” என இஷிதாவை பார்த்து கூறவும்  இஷிதா எழுந்து கொள்ள,  மேகாவோ கண்களாலே அவளை இருக்க சொல்லி கரங்களை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொள்ள , அதை தன் விழிகள் இடுங்க பார்த்தவன் ,

” கிளம்பு ” என உரக்க  கத்த , மேகா தானாக தன் கைகளை விலகிக்கொள்ள , அழுது கொண்டிருக்கும் மேகாவை பார்த்தபடியே அறையை விட்டு  வெளியேறினாள் இஷிதா .

இஷிதா சென்றதும்  மேகாவின் அருகில் வந்து அமர்ந்த அக்னி ,

” வரு என்னை பாரு ” என்றான் . அவனது கணீர்   குரலில் மெலிதாய் மென்மை  படர்ந்திருக்க , அவளும் நிமிர்ந்து பார்த்தாள் .

அவளது மருண்ட விழிகளை தனது மிதக்கும் விழிகளுடன் கலக்க விட்டவன் ,

“என்  கண்ணை பாரு ! பார்த்துட்டே இரு!  நான் சொல்லி புரியாத என் உணர்வுகள்   எல்லாம்  என் கண்ணை பார்த்தா உனக்கு புரியும்! புரிஞ்சிக்கோ வரு , நான் மனுஷனா மாறணும்னு ஆசைப்படுறேன் ,என்னை மிருகமா மாற்றிவிடாத ” என்றவனின் பார்வை அவளது சிவந்திருந்த மணிக்கட்டின்  மீது விழ அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை  .   சில நொடிகள் அவள் அருகிலே  அவள் முகம்  பார்த்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தவன் சிறு செருமலுடன் ,

” இந்த கண்ணீர் , இந்த காயம் ” என மேகாவின்  கண்களில் இருந்து விழ ஆயத்தமாக   இருந்த கண்ணீரை சுட்டிக்காட்டியவன் , அவளது சிவந்திருந்த  மணிக்கட்டை காட்டி ,” இனிமே வர கூடாதுன்னு நான் ஆசை படுறேன் மேகா , கல்யாணம் பண்ணிக்குவோம்  டா , நல்லா பார்த்துக்குவேன்  ,என்னை நம்பி வா , கடைசி வர கைவிட மாட்டேன் ” சொல்லும் பொழுதே அக்னியின் குரல் கரகரத்தது. அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள் . அவளது அமைதி அவனது பொறுமையை மிகவும் சோதித்தது ,

” உன் பிரச்சனை தான்   என்ன வரு ?  நீ யாரையும் விரும்பலைன்னு   எனக்கு தெரியும் , அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இவ்வளவு யோசிக்கிற ? ” என்றான் .

“—————” அவனிடம் பேசவே ஐயம் கொண்ட மேகா அமைதியாக இருந்தாள் .

“பதில் சொல்லி தொலை டி “திடிரென்று ஆக்ரோஷமாக கத்தியவன் , அவள் பயப்படுவதை பார்த்து தன் கண்களை மூடி திறந்து   ,

” நீ எனக்கானவ மேகா ,என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு , உனக்கு என்னை புடிக்கும்  ” என்று நிதானமாய் ஆரம்பித்தவன் ,” புடிக்கணும் , புடிச்சே ஆகணும். உனக்கு நாளைக்கு மார்னிங் வர டைம்  சரி சொன்னா !உன் குடும்பம் முன்னாடி நம்ம கல்யாணம் , இல்லைன்னு சொன்னா?நான் சொல்ல மாட்டேன் செய்வேன் . உன் அப்பா , உன் அம்மா,  உன் தம்பி , தங்கச்சுனு  உன்னை சார்ந்த யாரையும்   சும்மா விட மாட்டேன் ” குரலில் செய்தே தீருவேன் என்கிற தீவிரம்  தெரிய  பேச முடியாமல் விக்கித்து நின்றாள் .

“ஏன்  டி என்னை புடிக்கலை ? படுத்துற வரு நீ , இப்போ நீ அழுது அழுது என்னை மிருகமா மாத்திட்டு இருக்க ” தாறுமாறாய் கத்தியவனின்  கரத்தில் அகப்பட்ட பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்தது .

” இவ்வளவு சொல்றேன் என் மனசு உனக்கு புரியலையா “

“———————— ” கண்ணீர் மௌனம்

” இஷிதா , அதான்  உன் ஃப்ரண்ட் , அவ என்னை பத்தி உங்கிட்ட ஏதோ சொல்லிருக்கா , அதான் நீ இப்படி இருக்க , அவளை  ஏதாவது ” என ஆக்ரோஷமா திரும்பியவனை ,

“தீரன் ப்ளீஸ் ” என தடுத்தவள் ,” அவ எதுவும் சொல்லலை  “என்றாள் .

“அப்போ வேற என்ன ?ஏன் என் மேல இவ்வளவு வெறுப்பு ?”

” ம்ஹூம் ” இடவலமாக  தன் தலையை அசைத்தாள் .

” என்னை வெறுக்கலையா ” அவளது  முகத்தை ஆராய்ந்தபடி வினவினான்  

” ம்ஹூம் ” தலையை மட்டும் அசைத்தாள் . அவன் முகத்தில் மெல்லிய பூரிப்பு,  கழுத்தை தேய்த்தவன் ,

” என்னை புடிக்குமா வரு ?” ஆர்வத்துடன் கேட்டான் .

” —— “தலையை மட்டும் அசைத்தாள் , பயத்தில் கைகள் தானாக நடுங்கியது . ஏனோ அவன் முகம் பார்க்க தைரியம் இல்லை குனிந்து கொண்டாள் .   அவனோ குனிந்திருந்த அவள் முகத்தை பார்த்தான்  , அவள் உணர்வுகளை அறிந்துகொள்ளும் ஆவலில் . எதுவும் பிடிபடவில்லை .

” என்னை கல்யாணம் பண்ணிக்குவியா மேகா ? ” விழிகளில் ஆசை பொங்கி வழிந்தது .

இவளுக்கோ மூச்சு முட்டிக்கொண்டு வந்தது . திருமணம் விடயத்தில் பொய் சொல்ல மனம் ஒத்துக்கவில்லை அப்படியே சிலை போல நின்றாள்  .

அவன் ஏமாற்றத்துடன் அவளை நோக்கினான் . தலை கவிழ்ந்தபடி  நின்றாள் .

“என்ன பாரு வரு ” மெதுவாக அழைத்தான் . நிமிரவில்லை .

” பாரு ” கொஞ்சம் கடுமையாக அழைத்தான் . அப்படியே நின்றாள் .

” பாரு ” ஓங்கி ஒலித்த  குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் .

” என்னை கல்யாணம் பண்ணிக்குவியா மேகா “முகம் பாறையாக இறுகி இருக்க , அவன் பார்த்த உஷ்ண பார்வையிலே ,அரண்டவள் தன் மனசாட்சியை கொன்று விட்டு தலையசைத்தாள் .

அக்னி தீரனின் கண்கள் பிரகாசமானது , முகத்தில் புன்னகை விரிந்தது  .ஏறிய போதை ஒரே ஒரு தலையசைப்பில் இறங்கியது .மேகாவின் கரங்களை மெதுவாக பற்றி மெத்தையில் அமரவைத்தவன் அவள் அருகிலே அமர்ந்து அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்  . உள்ளே ஏதேதோ உணர்வுகள்  பாலை நிலத்தில் பெய்யும்  திடீர் அடைமழை போல் , பல நாள் தாகத்தில்  கிடந்தவனுக்கு  கிடைத்த  பொங்கி வரும் அமிர்த ஊற்று போல்  ஆனந்தத்தில்  அவன் மனம் கூத்தாடியது .

அவளது கரங்களை மெல்ல தன் கரங்களுக்குள் பொத்தி வைத்து கொண்டவன் ,

” பயப்படாத  நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன் ” என்று கூறி  அவளது காயத்தை மெதுவாய் நீவ , தன் கரங்களுக்குள்  இருந்த மேகாவின் கரம் நடுங்குவதை உணர்ந்தவன்,   அவளது சங்கடத்தை  உணர்ந்து தானாக அவளது கரத்தை விடுவித்து   கண்ணியத்துடன் அவளை விட்டு  விலகியே அமர்ந்தவன் ,

” உன் அன்பு மட்டும் எனக்கு போதும் வரு,  நான் உனக்கு உண்மையா இருப்பேன். நீயும் எனக்கு உண்மையா இரு. என்கிட்ட நீ உரிமையா  பழகலாம்  .

பயப்பட தேவை இல்லை சரியா . என்னைக்கும் என்  நம்பிக்கையை மட்டும் உடைச்சிறாத . அது மட்டும் என்னால தாங்க முடியாது , மற்றபடி  நீ நீயா இருக்கலாம் ,    நாம சந்தோஷமா இருக்கலாம் .

கொஞ்சம் வேலை இருக்கு அநேகமா  நாளைக்கு  ஈவினிங் கனடா கிளம்பிருவேன்  வர ரெண்டு இல்லை மூணு வாரம் ஆகும் .டைம் கிடைக்கும் பொழுது நானே கூப்பிடுறேன்,  வேலை முடிஞ்சி வந்ததும் நானே உன் வீட்ல பேசுறேன் சரியா ” மிகவும் மென்மையாக  பேசினான் . காதல் அவனை  பேச வைத்தது . என்ன அவளால் தான் பதில் பேச முடியவில்லை  . குற்ற உணர்வு அவளை அமைதி ஆக்கியது.

” சரி இப்போ நல்லா இருக்கல்ல “

“ம்ம்ம் “

” மயங்கி விழுந்திட்டியா , ரொம்பவே பயந்துட்டேன் , ஹாஸ்ப்பிட்டல் ஏதும்  போகணுமா? “

” ம்ஹூம் ” மறுப்பாக தலையை மட்டும் அசைத்தாள் .

“சரி நீ ரெஸ்ட் எடு , நான் கிளம்புறேன் ” என்றவன் அவள் படுத்ததும் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு , சில நிமிடங்கள் நின்று அவளது முகத்தை பார்த்த பிறகே அறையை விட்டு வெளியே வந்தான் .

வாசலிலே கைகளை பிசைந்தபடி நின்றிருந்த இஷிதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசல் வரை சென்று திரும்பிய  தீரன்   ,

” எங்களுக்கு நடுவுல நீ வர்றது இதுவே கடைசியா இருக்கட்டும்  ” என்று எச்சரிக்கை விடுத்தவன் ,அவளை அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்த சென்றான் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

“நிஜமாவா சொல்ற ” அஷோக் நம்பாது மீண்டும் மீண்டும் நண்பனை கேட்டான் .

” எத்தனை தடவ கேட்ப , அவளுக்கும் என்னை புடிச்சிருக்கு டா , ஆனா என் மேல நிறைய பயம் இருக்கு , அதான் ஒரு தயக்கத்தோடவே இருக்கா, போக போக எல்லாம் சரியாகிரும் அஷோக் . அவளுக்கு என்னை புடிக்கலையேன்னு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு , இப்போ தான் மனசு லேசா இருக்கு ” என்ற நண்பனை அணைத்து  வாழ்த்து சொன்ன அஷோகால் ஏனோ மேகா சம்மதம் சொன்னதை  முழுமையாக நம்ப முடியவில்லை . இருந்தும்  தன் சந்தேகத்தை அக்னியிடம் கூறி அவன் சந்தோஷத்தை  கலைக்க விரும்பாதவன் , அமைதியாக இருந்தான் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சுத்தமாக சவரன் செய்யப்பட்ட அவனது இயற்கையிலே பொலிவான கன்னங்கள், தன் இதயத்தை கொள்ளை கொண்ட பெண்ணையே சீக்கிரம் மணக்க போகிறோம் என்கின்ற பூரிப்பில் புதுவித தேஜஸுடன் இன்று மேலும் அழகு கூடியிருக்க, ஆணழகனாய் மேகா முன்பு நின்றிருந்தான் ரிதுராஜ்.
“என்னை லவ் பண்ண ரெடியாயிட்டீங்களா ?”கண்களில் குறும்புடன் கேட்டான்.

” —” உதட்டிற்கு வலிக்காமல் புன்னகைத்த மேகவால் ஏனோ முழு மனதுடன் சிரிக்க முடியவில்லை .

” உனக்கு என்னை பிடிச்சிருக்கா மேகா ?”

” அப்பாக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே “

“ப்ச் அப்பா ஓகே  ஆகிடுவாரு , பட் எனக்கு உன் சம்மதம்  வேணும் “எதிர்பார்ப்புடன் கேட்டான் .

” பொறுமையா பேசுறீங்க ,  எல்லார்கிட்டையும்  தன்மையா பழகுறீங்க , என் முடிவை மதிச்சு  என் அப்பாகிட்ட வந்து பேசிருக்கீங்க . உங்கள வேண்டாம்ன்னு சொல்ல  பெரிய ரீஸன் ஏதும் இல்லை “ரித்துராஜ் மீது தனக்கு தோன்றிய அபிப்பிராயத்தை கூறினாள் .

” அப்போ புடிச்சிருக்கு “கண்சிமிட்டி கேட்டான் .

” ஆ …” அவள் ஆரம்பிக்கும் பொழுதே ‘ அப்போ என்கிட்ட சொன்னது என்னாச்சு ?எத்தனை பேரை தான் புடிச்சிருக்குன்னு  சொல்லுவ வரு ?’ என  அக்னி கத்துவது போன்ற பிரம்மை அவள் முன்பு தோன்றி மறைய . அதிர்ச்சியில் வியர்வை சுரக்க நின்றவளை புருவம் சுருக்கி பார்த்த ரிதுராஜ் ,

“என்னாச்சு ஏன் சட்டுன்னு ஒரு மாதிரி ஆகிட்ட ” என கேட்டான் .

” ஒன்னும் இல்லை லேசா தலைவலிக்குது ” என சமாளித்தாள் . ஆனால் அவளுக்கு அக்னியை எண்ணி குற்ற உணர்ச்சியாக இருந்தது .

” ஹாஸ்ப்பிட்டல் போகணுமா ? “

“வேண்டாம் சின்ன தலைவலி தான்  ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் ” என்றாள் .

” சரி வா ரொம்ப வலிக்குது போல ,உன் முகமே ஒரு மாதிரி இருக்கு ” என்றவன் மேகாவுடன்  வீட்டிற்குள் நுழைந்தான் .

அவர்கள் வருவதை கண்ட குடும்பத்தினர்  மேகாவிடம் விருப்பத்தை கேட்க ,”அப்பாக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் ” என்றவள் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு  தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

மேகா அவ்வாறு கூறியதும் அவளது தந்தை கோபாலகிருஷ்ணனின்  முகத்தில் அப்படி ஒரு பெருமிதம் ,

” நான் சொன்னேன்ல என் சொல்லுக்கு என் பொண்ணு மறுபேச்சு  பேச மாட்டான்னு  ” மகிழ்ச்சியோடு  மனைவியை பார்த்தவர் கனகராஜிடம்  கூற  .

‘ எனக்கும் வாச்சிருக்கே ‘ என மனதிற்குள் தன் புத்திரர்களை திட்டியவர் , கோபால கிருஷ்ணனிடம்,

” அப்போ உங்க முடிவை சொல்லுங்க ” என்றார் .

அப்பொழுது,” பொண்ணு ரொம்ப அழகா இருக்கா ராஜ் , நம்ம ரிதுக்கு ஏத்த பொண்ணு தான்  ” என மெல்ல யாருக்கும் கேட்காமல்  வீனா,  கணவன்  கனகராஜின் காதில் கிசுகிசுக்க , மனைவியை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தவர் ,” ஆமா வீனா ” என்றார் . ஆனால் இப்பொழுதும் மகன் மீது கனகராஜிற்கு கோபமாக வந்தது ,

” இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா ” என மனதிற்குள் திட்டிக்கொண்டார் .

கனகராஜ் இப்படி யோசித்து கொண்டிருக்க கோபாலகிருஷ்ணனோ  ,” தெரிந்த குடும்பம்  தான் ஆனாலும் ரொம்ப பெரிய இடமா இருக்கே ? சரியா வருமா ” என்று யோசித்தவர் மனைவியிடம் தனிமையில் பேசிவிட்டு வருவதாக கூறி ராதிகாவை தனியாக அழைத்து தன் மனத்தில் உள்ளதை கூறினார் .

அவரோ ” நாம ஒன்னும் தேடி போலயே அவங்களே வந்திருக்காங்க  அப்போ ஏன் கவலைப்படுறீங்க ” என்றார் .

“திடீர்ன்னு ஃபோன் பண்ணினாங்க , அப்புறம் வீட்டுக்கு வந்தாங்க  , நாளைக்கு   என்கேஜ்மென்ட்  ஒருவாரத்துல கல்யாணம்ன்னு  சொல்றாங்க எப்படி டி , எவ்வளவு வேலை இருக்கு ” என்றவருக்கு  ஏனோ கனகராஜ் மீது பெரிய அபிப்ராயம் இல்லை .

” நம்மகிட்ட தான் பணம்  இருக்குல்ல அப்புறம் என்ன ? எல்லாம் பண்ணிரலாம்  நல்ல சம்பந்தம் , தெரிஞ்ச குடும்பம் விசாரிக்க கூட வேண்டாம்” என்ற ராதிகாவுக்கு வாசல் தேடி வந்த நல்ல வரனை விட விருப்பம் இல்லை . ஆனால் கோபாலகிருஷ்ணனுக்கு  தான் கொஞ்சம் நெருடலாவே இருந்தது .

“ஒருவாரத்துல   எல்லாரையும் எப்படி இனவேட்  பண்றது ” நெற்றியை  நீவினார் .

” ஆமா அப்படியே கூப்பிட்டதும் நம்ம சொந்தகாரங்க பறந்து வந்துருவாங்க , உங்க வீட்லயும் நம்மளை தலை முழுகியாச்சு  , எங்க வீட்லயும்  தலை முழுகியாச்சு , உங்களுக்கு ஆபிஸ்ல  பத்து  ஃப்ரண்ட்ஸ் எனக்கு ம்யூசிக் ஸ்கூல்ல  பத்து ஃப்ரண்ட்ஸ் , அவங்களுக்கு ஃபோன்ல சொன்னாலே வந்துருவாங்க ” என்று சலித்து கொண்ட ராதிகாவுக்கு  நெஞ்சோரத்தில் சொந்தங்களை எண்ணி மிகவும் வலித்தது .

” அதுக்காக பத்திரிகை வைக்காம எப்படி? நல்லாவே வாழமாட்டேன்னு  எல்லாரும் சபீச்சாங்க , பாருங்க என் மூத்த பொண்ணு டாக்டர்  அவளுக்கு  கல்யாணம் வச்சிருக்கேன்னு தலை நிமிர்ந்து சொல்ல வேண்டாம் ” என்றவர் ,

” மேகா , மயூரி , விக்ரம் இவங்க மூணு பேரோட  கல்யாணமும்  தான் என் வாழ்க்கையோட லட்சியம் அதை சீரும்  சிறப்புமா பண்ணனும் இப்படி அவசர அவசரமா பண்ண எனக்கு விருப்பம் இல்லை டி . அப்புறம் அவ்வளவு பெரிய மண்டபம்  எதுக்கு டி மண்டபம் சிம்பிளா அரேஞ் பண்ணிட்டு சாப்பாடு  திருப்தியா  பண்ணலாமே , எனக்கு இந்த பஃபே ஸிஸ்டெம்ல  பெரிய உடன்பாடு  இல்லை   ராதிகா “

” கிருஷ்ணா  அவங்க மாப்பிளை  வீடு,   அவங்க சொல்றதை கேட்டு நாம  அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகணும்   “

” அதுக்கு நாம ஒன்னும் அடிமை இல்லை “

” என்னாச்சு கிருஷ்ணா ஏன் இவ்வளவு வாக்குவாதம் பண்றீங்க “

” ஒரு அப்பாவா யோசிக்கிறேன் டி தப்பா “

”  இதை ஒரு  முப்பது வருஷத்துக்கு  முன்னாடி யோசிச்சிருந்தா  இன்னும் நல்லா இருந்திருக்கும் ” என்ற மனைவியை பார்த்து முறைத்தவர் ,

” அப்போ ஒரு காதலனா யோசிச்சேன்  , என் சந்தோஷத்துக்கு  முன்னாடி உன் குடும்பத்தோட கஷ்டம் புரியல,  இப்போ அப்பாவா யோசிக்கிறேன் பயமா இருக்கு “

“என்ன பயம் ?”

“மேகா என்னை நம்புறா , என் அப்பா முடிவு தான் என் முடிவுன்னு சொல்றா,  அப்போ நான் சரியான முடிவு எடுக்கணும்ல அந்த பயம் தான் “

“ரிதுராஜ் நல்ல அன்பான பொறுமையான பையனா தெரியுறான் பா “

” ம்ம் ஆனா சூட்டிப்பா இல்லையே , அப்பா  கண்ணசைச்சா  அப்படியே  ஆஃப் ஆகிடுறான் .  “

” இதெல்லாம் எப்போ பார்த்தீங்க “

” பார்த்தேன் பார்த்தேன் “

” ஏங்க அப்பா பேச்சு கேட்டா ஒரு தப்பா? “

” தப்பில்லை தான் , ஆனா எல்லாத்துக்கும் கேட்டுட்டு இருந்தா நல்லா இருக்காது ,  நான் என் அப்பா பேச்சை கேட்ருந்தா நீயும் நானும் இப்படி உட்கார்ந்து பேசிட்டு இருக்க மாட்டோம் ” என்றவர் ,” எல்லாம் ஓகே டி  ஆனா ஒருவரத்துல கல்யாணம் தான் யோசிக்க வைக்குது “

” பணம் கையில இருக்கும் பொழுது என்ன யோசனை , சமாளிச்சிறலாம்  கிருஷ்ணா , அவ ஜாதகத்துல பிரச்சனை இருக்கு பா சீக்கிரமா பண்ணறது  நல்லது  தெரிஞ்ச பையன்  தெரிஞ்ச குடும்பம் எல்லாத்துக்கும் மேல இஷிதா இருக்கா பார்த்துக்குவா பா  ” என்று ராதிகா  எடுத்து கூற

மனைவியுடன் கலந்தாலோசித்துவிட்டு  வெளிய வந்த கோபால கிருஷ்ணனிடம் இஷிதா  ,

” என்ன அங்கிள் ?என்ன முடிவு பண்ணிருக்கீங்க? ” என கேட்டாள் . அப்பொழுது அவளை பார்த்து முறைத்த கனகராஜ்  ,கோபால கிருஷ்ணனிடம்  ,

” சொல்லுங்க சார் உங்களுக்கு எல்லாம் ஓகே தான் ” என கேட்க வேண்டுமே  என கேட்டார் .

” எல்லாம் ஓகே ஒருவாரத்துல கல்யாணம் தான் யோசனையா  இருக்கு சார் “

” அதை ஏன் அங்கிள் யோசிக்கிறீங்க  , எல்லாம் அப்பா பார்த்துக்குவாரு , அவருக்கு நிறைய இன்ப்ளூயன்ஸ் இருக்கு,    நீங்க சரின் னு மட்டும் சொல்லுங்க, கண்மூடி திறக்குறதுக்குள்ள வேலையை முடிச்சிடுவாரு என்ன அப்பா ? ” என்ற இஷிதாவை பார்த்து கனகராஜுக்கு பற்றி கொண்டு வர சிரித்தபடி மறைத்தவர் ,

” அதான் என் பொண்ணே சொல்லிட்டாளே சரி சொல்லுங்க கோபால கிருஷ்ணன் “என கனகராஜ் கூற , கோபால கிருஷ்ணனும்   சரி என்பதாய் தலையசைத்தார் . அவர் சம்மதம் தெரிவித்ததும் அனைவரும் மகிழ்கியுடன்  இனிப்பை பரிமாறிக்கொள்ள  , இஷிதா ரிதுராஜுக்கு இனிப்பை ஊட்டிவிட்டு வாழ்த்துகள் கூறி மேகாவை காண அவளது அறைக்குள் நுழைந்தாள்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

” பயந்துட்டே இருக்காத டி எல்லாம் நல்ல படியா முடியும் ” என்று கூறி இஷிதா மேகாவுக்கு வாழ்த்துக்கள் கூறி இனிப்பை கொடுக்க ஏனோ அக்னியின் நினைவுகள் அவளை மிகவும் அச்சுறுத்தியது .

அப்பொழுது இஷிதா மேகாவிடம் ,” எல்லாம் நல்ல போய்ட்டு இருக்கும் பொழுது நீ ஏன் டல்லா இருக்க? “

” அக்னிக்கிட்ட உண்மைய சொல்லிறலாம்ன்னு தோணுது டி .”

” கஷ்டப்பட்டு என் அப்பால தொடங்கி ,  உன் அப்பா வர எல்லாரையும்  சம்மதிக்க வச்சிருக்கேன்,  நீயே கெடுத்து விட்டுறாத ” இஷிதாவுக்கு மேகா மீது  கோபமாக வந்தது .

” அட்லீஸ்ட் ரிதுராஜ்கிட்டையாவது  அக்னி பத்தி சொல்லிரவா “குற்ற உணர்வு அவளை கொத்தி தின்றது . 

” மேகா கடைசியா சொல்றேன்,  அக்னிக்கிட்ட இருந்து நீ தப்பிக்கணும்ன்னா உன் கல்யாணம் முடியிறவரைக்கும்  கொஞ்சம் அமைதியா இரு , ரிதுராஜ் கிட்ட நான் பேசிக்கிறேன் ப்ளீஸ் ,  ” என இஷிதா முடிவாக கூற ,

” நீ என்ன சொன்னாலும் சரி,  இந்த குற்ற உணர்வு நான் சாகுற  வரைக்கும் என்னை விட்டு போகாது டி,  தீரன் நம்புறார் டி , எனக்கே என்னை பார்க்க  அசிங்கமா இருக்கு டி , ரிதுராஜ்க்கு தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பாருன்னு இருக்கு” என்றவள் தலை மீது கைவைத்து கொண்டு சோர்ந்து அமர , அவளை மேலும் கலவரப்படுத்த  அவளது அலைபேசி ஒலித்தது , திரையில் வெளிநாட்டு எண் விழவும் மேகாவுக்கு கண்கள் குளமாகியது .

” எடுத்து பேசு டி “

” ரிதுராஜ் கூட நாளைக்கு என்கேஜ்மென்ட் அக்னி கூட பேசுனா நல்லா இருக்காது .என் கரக்ட்டரையே  டீகிரேட் பண்ணற மாதிரி ஃபீல் ஆகுது ” கண்ணீர் வழிந்தது .

” உன் மனசுல கள்ளம் இல்லை தானே “

” ஆமா “

” அப்புறம் என்னடி ?அக்னி புரிஞ்சிகிட்டா நாமே ஏன் இப்படி எல்லாம் பண்ண போறோம் ? ஸோ எதை பற்றியும்  யோசிக்காத , அட்டென்ட் பண்ணு ,   நல்ல இருக்கியா ? சாப்பிட்டியான்னு ?ரெண்டு கேள்வி கேட்பான்,  நீ ஆமா இல்லைன்னு ஒரு வார்த்தையிலே பதில்  சொல்ல போற , அட்டென்ட் பண்ணு,  நீ எடுக்காட்டா அவன் அடிச்சிட்டே இருப்பான் ” என்று இஷிதா அலைபேசியை  கொடுக்க , கைகள் நடுங்க அலைபேசியை எடுத்தவள் வழக்கம் போல அமைதியாக இருக்க அக்னி தான் ,

” ஹாய் வரு எப்படி இருக்க? “என ஆரம்பித்தான்  தொடர் மீட்டிங் மற்றும் அவ்வளவு வேலை பளுவிலும் உற்சாகமாக  பேசினான் .

” ம்ம் “என்றாள் .

” வாய்ஸ் சரி இல்லையே ஆர் யு ஓகே ” தொலைவில் இருந்தே கண்டறிந்து  விட்டான் .

” ஐயம் ஓகே ” பயத்தில் நெஞ்சே அடைத்தது .

” ஏதாவது பிரச்சனையா  மேகா “

” இல்லை “

” என்கிட்ட ஏதாவது சொல்லனுமா வரு “

“அது இல்லை தீரன் “இஷிதா முறைப்பதை பார்த்து அதோடு நிறுத்திவிட்டாள்.

“சரி கொஞ்சம் வொர்க் இருக்கு , நான் கிளம்புறேன் பேசணும்ன்னா  மெசேஜ் பண்ணு நான் கால் பண்றேன்  “என்றவனுக்கு மேகாவின் குரல் ஏனோ நெருடலை கொடுத்தது .

@@@@@@@@@@@@@@@@

” ரிலாக்ஸ்சா இரு , ஏதும்ன்னா கூப்பிடு , இப்போ  நான் அவங்க கூட கிளம்புறேன் ” என்ற இஷிதா மேகவிடம் விடைபெற்றுக்கொண்டு தன் குடும்பத்தினருடன் அவர்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்க்கு சென்றாள்.

அக்னியோட கவனத்தை திசை திருப்பிவிட்டால் , மேகாவை இதில் இருந்து காபாற்றிவிடலாம் என்று நினைத்த இஷிதா . அக்னிக்கு இந்த விடயம் தெரிய வரும் பொழுது அவனுடை எதிர்வினை மேகாவை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என்பதை யோசிக்க தவறிவிட்டாள் . ஆக இஷிதாவின் கணிப்பும் , அசாத்திய நம்பிக்கையும் இந்த இடத்தில் தவறி போக ,  எந்த தோழியின் வாழ்க்கையில் தென்றல் வீச வேண்டும்  என இவ்வளவு செய்தாளோ அதே தோழியின் வாழ்க்கையில் புயல் வீசவும் அவளே காரணமாகிப்போனாள்.

######################################

ரிஸார்ட்டிற்கு வந்ததும் இஷிதாவை தனியாக அழைத்த கனகராஜ் ,

” உன் இஷ்டத்துக்கு அங்க வச்சி பேசிட்டு இருக்க , கல்யாணத்துக்கு ஏன் இவ்வளவு அவசரம் . எப்படி எல்லாரையும் நேர்ல போய் இன் வேட் பண்றது “என்றார் .

” யாரையும் நேர்ல போய் இன்வேட் பண்ண வேண்டாம் , ஃபோன்ல கூப்பிடுங்க போதும் , எப்படி கூப்பிட்டாலும்சித்தி,  மாமா எல்லாரும் வந்துருவாங்க அது போதும் . ரிசெப்ஷனுக்கு எல்லாரையும் கூப்பிடலாம் ” என்றவள் அங்கிருந்து கிளம்ப ,

“நாளைக்கு என்கேஜ்மென்ட் முடிஞ்சதும் பாதி பேப்பர்ஸ்ல கையெழுத்து போடுவேன்னு சொல்லிருக்க ” என்றவரை கடுமையாக முறைத்தவள் .

” எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு ” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

” என்ன அக்னி மேகா ஏதும் சொன்னாளா ?” கையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு வினவினான் அஷோக்..

” இல்லை ” என்ற தீரனின் முகம் இறுகி இருந்தது .

“சென்னையில இருக்கிறதையாவது சொன்னாளா ?”

” இல்லை”

” இப்போவாச்சு என்னை நம்புறியா ?”

” இப்பவும் வரு மேல எனக்கு சந்தேகம் வரல அஷோக் , அவ குரல் ரொம்பவே டல்லா இருந்துச்சு , வீட்ல எல்லாரும் வற்புறுத்துவாங்களா இருக்கும் , என்கிட்ட சொல்ல பயந்துட்டு அமைதியா இருக்கா “

” ம்ம் அப்படியும் இருக்கலாம் ” என அஷோக் கூறவும்  அஷோக்கின் அலைபேசி உறும எடுத்து பார்த்தவன் ,” கால் ஃப்ரம் இந்தியா  , கனகராஜ்  தான் கூப்பிடுறான் ” என்றதுமே அக்னியின் முகம் விகாரமாய் மாறியது .

” எடுத்து பேசு ” என்ற அக்னி  ஸ்பீக்கர் வழியாக கனகராஜின் குரலை கேட்டபடி  சூழல் நாற்காலியில் தலை சாய்த்து  அமர்ந்திருந்தான் .

” அஷோக் ஜி , அக்னி சாருக்கு கால் பண்ணினேன்  ரீச் ஆகால ” என்றார் பணிவாக .

”  ஒர்க் விஷயமா வெளியூர்ல இருக்கோம் சொல்லுங்க “

“சார் கிட்ட பேச முடியுமா ?” அக்னி முடியாது என கண்ணசைக்கவும்,

” இல்லை கனகராஜ் , என்கிட்ட சொல்லுங்க நான் கன்வே பண்ணிர்றேன் ” என்றான் அஷோக் .

” பையனுக்கு வர்ற வெள்ளிக்கிழமை   கல்யாணம் வச்சிருக்கேன்,  பொண்ணு கூட உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு தான்  மேகவர்ஷினி ,  நாளைக்கு ஈவினிங் என் பையன் ரிதுராஜ்க்கும்  மேகாக்கும்  ” அவர் சொல்லி முடிக்கவில்லை  அஷோக்கின் அலைபேசி தரையில் விழுந்து நொறுங்கி இருந்தது .மேகாவின் பெயரோடு இன்னொரு ஆடவனின் பெயரையும் சொல்லும் பொழுதே அவன் உள்ளம் கொதிக்க , அலைபேசியை விட்டு விளாசி இருந்தான் .

” இப்போ என்ன சொல்ற அக்னி ?” என பற்களை கடித்தபடி அஷோக் கேட்க ,” ஷி வில் பீ வெயிட்டிங் ஃபார் மீ ” ‘அவ எனக்காக காத்துகிட்டு இருப்பா’ என்று நண்பன் முன்பு மேகாவை விட்டுக்கொடுக்காத தீரன்,

‘ என்னை ஏமாத்திராத  வரு ‘ என  அந்த நொடி தொடங்கி மனதிற்குள் மந்திரம் போல சொல்ல ஆரம்பித்தவன் .மறுநாள் மண்டபத்தில் ரிதுராஜ் மேகாவின் கரம் பிடித்து மோதிரம் அணிவித்ததும் மனதளவில் தீரன் காயப்பட , மேகா அதை சிறு புன்னகையுடன் பார்த்து ரசித்ததும் மொத்தமாக  மறித்து போனவனுக்குள் இருந்த மிருகம் விழித்து கொள்ள,  கண்கள் பளபளக்க ,வெறி பிடித்த மிருகம் போல பார்வையாலே மேகாவை திணறடித்து கொண்டிருந்தான் .

தொடரும்